Wednesday, June 30, 2010

இவ‌ங்க‌ ஆன் டியூட்டில‌ இருக்காங்க‌ளாம்..

system design and technical architecting is in process

பக்கத்து சீட்ல உள்ளவன் வர்றதுக்கு முன்னாடி நாம‌ தூங்கிடனும்.. அப்புறம் அவன் குறட்டை சத்தம் நம்ம தூக்கத்தை கெடுத்துடும்......கொர்ர்ர்ர்ர்ர்



Its Perfect Day Dreaming

கையை ம‌ட‌க்கி செய‌ர்ல‌ உக்காந்து, விட்ட‌த்தை பார்த்து தூங்குற‌து என்னா சுக‌ம்....



Re--Thinking

போன் கால் வ‌ருதானு தான் பார்த்திட்டுதான் இருக்கேன்... தூங்கினாலும் க‌ட‌மையில் க‌ரெக்டா இருப்போம்..



When The Batch test going on… :

"சுறா" ப‌ட‌ம் நான் பாக்க‌ மாட்டேன்!!!..நான் பாக்க‌ மாட்டேன்!!! என்று எவ்வ‌ள‌வோ க‌த்தினேன்.. யாரும் கேக்க‌ல‌... இப்ப‌ பாரு த‌லையை தூக்கி மானிட்ட‌ரை பார்க்க‌ முடிய‌லை...சொன்னா யாரு கேக்கிறா..



In Process Of Refreshment and Change:

வீட்டுக்கு போகும் போது எழுப்பி விட‌ சொன்னேன்... அவ‌ பாட்டுக்கு வீட்டுக்கு போயிடுவாளா..இல்ல‌ ந‌ம்ம‌ளை எழுப்பி கூட்டிட்டு போவாளா..



PRODUCTION Productive Support:

இவ்வ‌ள‌வு அழ‌க‌ உக்காந்து பேசுற‌துக்கு வ‌ச‌தியா ஜ‌ன்ன‌ல் போட்ட‌ அந்த‌ கொத்த‌னாருக்கு தான் ந‌ன்றி சொல்ல‌னும்..... ஜ‌ன்ன‌ல் கேப்புல‌ நூல் உடுற‌து இது தானா?...



AND LAST BUT NOT THE LEAST THE MOST HIPED ON CALL SUPPORT

"

"

"

"

"

"


சூவை க‌ழ‌ட்டிட்டு வ‌ந்தே ஓகே.... அப்ப‌டியே அந்த‌ சாக்ஸையும் க‌ழ‌ட்டிட்டு வாடா... உன‌க்கு புண்ணிய‌மா போகும்....



குறிப்பு: இந்த‌ போட்டோக்க‌ள் அனைத்தும் என‌க்கு மெயிலில் வ‌ந்த‌து...
.

.

.

Monday, June 28, 2010

பழ‌ங்க‌ள்_என‌க்கு தெரிந்த‌ சில‌ வ‌கைக‌ள்

ச‌வுதி அரேபியாவில் பேரிச்சை ம‌ர‌ங்க‌ள் அதிக‌ம். ஒருமுறை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இந்த‌ பேரிச்சை ம‌ர‌ங்க‌ளை ப‌ற்றி பேசி கொண்டிருக்கும் போது ந‌ம‌து ஊரில் உள்ள‌ ப‌னை ம‌ர‌த்தை ப‌ற்றிய‌ பேச்சு வ‌ந்த‌து. அப்போது நான் ப‌னை ம‌ர‌த்தில் இர‌ண்டு வ‌கைக‌ள் உண்டு. ஒரு வ‌கை பூ தான் பூக்கும் அதில் நொங்கு கிடைப்ப‌து இல்லை என்றும், ம‌ற்றொரு வ‌கையில் தான் நொங்கு கிடைக்கும் என்று சொன்னேன்.

என்னுட‌ன் இருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளில் சில‌ருக்கு இந்த‌ இர‌ண்டு வ‌கைக‌ளை ப‌ற்றி தெரிந்திருக்க‌ வில்லை. அதில் ஒருவ‌ர் க‌ண்ணால் பார்த்தால் தான் ந‌ம்புவேன் என்று அட‌ம் பிடித்தார். அவ‌ங்க‌ளை எல்லாம் ஒரு வ‌ழியாக‌ ச‌மாதான‌ ப‌டுத்துவ‌த‌ற்குள் போதும் போதும் என்று ஆகி விட்ட‌து.. இந்த‌ ப‌னை ம‌ர‌ம் ஒன்றிலேயே இவ்வ‌ள‌வு குழ‌ப்ப‌மா? அப்ப‌டியானால் என‌க்கு தெரிந்த‌ சில‌ ம‌ர‌ங்க‌ளில் உள்ள‌ வ‌கைக‌ளை சொன்னால்? உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்கிறேன். உங்க‌ளுக்கும் ஏதாவ‌து தெரிந்தால் பின்னூட்ட‌த்தில் சொல்லுங்க‌ள்.

பலாப்ப‌ழ‌ம் அனைவ‌ரும் அறிந்த‌தே... அதில் என‌க்கு இர‌ண்டு வ‌கைக‌ள் தெரியும். எங்க‌ள் ஊரில் ப‌லாப்ப‌ழ‌த்தை வ‌ழ‌க்கு சொல்லாக‌ ச‌க்கை என்று அழைப்ப‌து உண்டு.

1)வ‌ருக்கை ச‌க்கை(ப‌லாப்ப‌ழ‌ம்)
2)கூழ‌ன் ச‌க்கை(ப‌லாப்ப‌ழ‌ம்)

இதில் முத‌ல் வ‌கையை ம‌ட்டும் தான் ந‌க‌ர‌ங்க‌ளில் நான் பார்த்து இருக்கிறேன். இந்த‌ வ‌கையில் உள்ள‌ சுளைக‌ளை தான் த‌னியாக‌ எடுத்து பாக்க‌ட்டுக‌ளில் அடைத்து விற்கிறார்க‌ள். இத‌ன் சுளைக‌ள் கொஞ்ச‌ம் அட‌த்தியாக‌ இருக்கும்.

இர‌ண்டாவ‌து வ‌கை ப‌லாப்ப‌ழ‌த்தை எங்க‌ள் ஊரை த‌விர‌ எங்கும் பார்த்து இல்லை. இந்த‌ பலாப்ப‌ழ‌ம் ப‌ழுத்து விட்டால் நாம் ந‌ம‌து கைக‌ளின் ப‌ல‌த்தால் இதை பிள‌க்க‌ முடியும். ஆனால் முத‌ல் வ‌கையை எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ ப‌ழுத்தாலும் கைக‌ளினால் பிள‌க்க‌ முடியாது. ரெம்ப‌ க‌டின‌மாக‌ இருக்கும். க‌த்தியால் தான் வெட்ட‌ முடியும்.



ப‌ழுத்த‌ கூழ‌ன் ச‌க்கையின் சுளையை வ‌ருக்கை ச‌க்கையின் சுளையை போல் த‌னியாக‌ எடுக்க‌ முடியாது. கூழ‌ன் ச‌க்கையின் சுளைக‌ள் ப‌குதி திட‌ நிலையில் இருக்கும். இதை நீங்க‌ள் கையில் எடுத்து வாயில் வைத்தால் நூல் போல் இழுக்கும். இத‌ன் சுவை முத‌ல் வ‌கையை விட‌ தித்திப்பாக‌ இருக்கும். ப‌ல் இல்லாத‌ முத‌ய‌வ‌ர்க‌ள் இந்த‌ வ‌கையை தான் விரும்பி சாப்பிடுவார்க‌ள்.

இந்த‌ ப‌லாப்ப‌ழ‌த்தின் ம‌ண‌ம் அதிக‌ வாச‌னை திற‌ன் கொண்ட‌து. ந‌ம‌து வீட்டின் ப‌க்க‌த்தில் உள்ள‌ நான்காவ‌து வீட்டில் பலாப்ப‌ழ‌ம் வெட்டினால் கூட‌ ந‌ம‌து வீட்டில் அத‌ன் வாச‌னை தெரிவித்து விடும். என‌வே ப‌க்க‌த்து வீட்டு கார‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல் இதை சாப்பிட‌ முடியாது.

இதே ப‌லாப்ப‌ழ‌த்தின் வேறு சில‌ ர‌க‌ங்க‌ளும் நான் பார்த்திருக்கிறேன். அயினி ச‌க்கை என்று அழைக்க‌ப்ப‌டும். இது ப‌லாப்ப‌ழ‌த்தை போல் இருக்கும். ஆனால் அள‌வு மிக‌ சிறிய‌தாக‌ இருக்கும். இது சிறிது புளிப்பு சுவையுடைய‌து. இந்த‌ ம‌ர‌ம் பெரும்பாலும் வீடுக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டும். எங்க‌ள் ஊரில் இந்த‌ ம‌ர‌த்தின் க‌த‌வு ம‌ற்றும் ஜ‌ன்ன‌ல்க‌ளுக்கு த‌னி ம‌வுசு உண்டு.

க‌றி ச‌க்கை என்று அழைக்க‌ப்ப‌டும் ஒரு ர‌க‌த்தையும் பார்த்து இருக்கிறேன். இதுவும் பார்ப‌த‌ற்கு ப‌லாப்ப‌ழ‌த்தை போல், ஆனால் சிறிய‌ அள‌வில் இருக்கும். இதை ச‌மைய‌ல் ப‌ண்ண‌ ப‌ய‌ன்ப‌டுத்துவார்க‌ள்.

சீத்தாப்ப‌ழ‌ம் இதிலும் இர‌ண்டு வ‌கைக‌ள் உள்ள‌து. பாஞ்சி ப‌ழ‌ம் என்று எங்க‌ள் ஊரில் அழைக்க‌ ப‌டும். ஒரு வ‌கை இனிப்பு சுவை உடைய‌து. இது தான் அதிக‌மாக‌ ந‌க‌ர‌ங்க‌ளில் பார்க்க‌ முடிகிற‌து. இது மாவு போன்று சுவைப்ப‌த‌ற்கு தித்திப்பாக‌ இருக்கும்.



இர‌ண்டாவ‌து வ‌கை புளிப்பு சுவையுடைய‌து. இத‌ன் மேல் தோலில் முட்க‌ள் காண‌ப்ப‌டும். இது இனிப்பு சீத்தாப்ப‌ழ‌த்தை விட‌ சிறிது பெரிதாக‌ இருக்கும்.



குறிப்பு: மேலே சொன்ன‌ வ‌கைக‌ள் தெரியாது என்றால் அடுத்த‌ மாத‌ம் குழித்துறையில் ந‌டைபெறும் "வாவுப‌லி ச‌ந்தை"யில் க‌ல‌ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். நான் கூறிய‌தை விட‌ அதிக‌மான‌ வ‌கைக‌ளை பார்க்க‌ முடியும். முடிந்தால் அதை ப‌ற்றி அடுத்த‌ மாத‌ம் ஒரு இடுகை போடுகிறேன்.

.

.

Wednesday, June 23, 2010

ஏமாற்ற‌மும் தோல்வியும்_அனுப‌விக்க‌னும்

என‌க்கு இப்போதும் ந‌ன்றாக‌ ஞாப‌க‌ம் இருக்கிற‌து. அம்மாவின் கையை பிடித்து கொண்டு கோவிலுக்கு போய் வ‌ரும் வ‌ழியில் பார்க்கும் பொருட்க‌ளின் மேல் எல்லாம் ஆசை வ‌ரும். அதை அம்மாவிட‌ம் சொல்லுவேன். அவ‌ர்க‌ளின் ப‌தில் நான் கேட்க்கும் பொருட்க‌ளின் விலையை பொறுத்து மாறுப‌டும். சிறிய‌ பொருளாக‌ இருந்தால் அடுத்த‌ மாத‌ம் "நீ முத‌ல் ராங்க் வாங்கு, உன‌க்கு வாங்கி த‌ருகிறேன்" என்பார்.

அதுவே கொஞ்ச‌ம் பெரிய‌ பொருளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளின் ப‌தில் பெரும்பாலும் இப்ப‌டி தான் இருக்கும் "அப்பா வ‌ந்த‌வுட‌ன் வாங்கி த‌ர‌ சொல்லுவேன்" அல்ல‌து "அப்பாவிட‌ம் வெளி நாட்டில் இருந்து வாங்கி வ‌ர‌ சொல்லுகிறேன்" என்ப‌தாக‌ தான் இருக்கும்.

அதிலும் சாப்பிடும் பொருளாக‌ இருந்தால் சொல்ல‌வே வேண்டாம். "நான் வீட்டில் செய்து த‌ருகிறேன்" அல்ல‌து "அது ந‌ல்ல‌ பொருள் அல்ல‌, சாப்பிட்டால் வ‌யிறு வ‌லிக்கும்" என்ற‌ ப‌தில்க‌ள் தான் அதிக‌மாக‌ இருக்கும்.

இப்ப‌டிதான் எழுதுவ‌த‌ற்கு பென்சில் வாங்குவ‌தில் இருந்து துணி வாங்குவ‌து வ‌ரைக்கும் ஏமாற்ற‌ம் தான் இருக்கும். எதுவும் கேட்ட‌வுட‌ன் கிடைத்து விடாது. ஒவ்வொரு ஏமாற்ற‌த்திற்கும் அம்மா ஒவ்வொரு கார‌ண‌ங்க‌ளை சொல்லி என்னிட‌ம் ச‌மாளிப்பார்க‌ள். ஆனால் நான் கேட்ட‌ பொருளை உட‌ன‌டியாக‌ வாங்கி கொடுத்து விடாவிட்டாலும் நான் எதிர்பார்க்காத‌ நேர‌த்தில் வாங்கி த‌ந்து விடுவார்க‌ள்.

இவ்வாறு ஏமாற்ற‌ம் என்ப‌து ச‌ம‌கால‌ அள‌வில் எல்லோருக்கும் நிக‌ழ்ந்த‌ ஒன்றாக‌வே இருக்கும். இவ்வாறு சின்ன‌ சின்ன‌ விச‌ய‌ங்க‌ளில் கிடைக்கும் ஏமாற்ற‌ங்க‌ள் ந‌ம‌க்கு வாழ்க்கையின் பின்னாளில் ஏற்ப‌ட‌ போகும் எதிர்பாராத‌ ஏமாற்ற‌ங்க‌ளை தாங்குவ‌த‌ற்கு வ‌ழி வ‌குக்கிற‌து.

குழ‌ந்தை ப‌ருவ‌ம் முடித்து, இள‌வ‌ய‌தை தொட்டுவிட்டால் ப‌ல‌ தோல்விக‌ளையும், ஏமாற்ற‌ங்க‌ளையும் நாம் தாங்கி கொள்ள‌ த‌யாராக‌ இருக்க‌ வேண்டும். வீட்டை விட்டு வெளியுல‌க‌ம் வ‌ந்து விட்டால் ந‌ம்மை துர‌த்தும் பிர‌ச்ச‌னைக‌ளில் இந்த‌ தோல்விக‌ளும், ஏமாற்ற‌ங்க‌ளும் சேர்ந்து விடுகிற‌து. நான் இதுவ‌ரை தோல்வியே ச‌ந்தித்த‌து இல்லை, ஏமாற்றாமா? அப்ப‌டி என்றால் என்னா? என்று எவ‌ராலும் கூற‌ இய‌லாது. ஏதாவ‌து ஒரு வ‌ழியில் ந‌ம்மை இவை ஆட்கொண்டுவிடுகின்ற‌ன‌.



சிறிய‌ வ‌ய‌தில் பெற்றோர்க‌ளிட‌ம் இருந்து கிடைக்கும் சின்ன‌ சின்ன‌ ஏமாற்ற‌ங்க‌ள், ந‌ம்முடைய‌ ம‌ன‌தில் ஒரு ப‌க்குவ‌த்தை கொடுக்கின்ற‌து. இந்த‌ அனுப‌வ‌ம் ந‌ம‌க்கு பிற்கால‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் சில‌ ஏமாற்ற‌ங்க‌ள் ம‌ற்றும் தோல்வியில் இருந்து மீள்வ‌த‌ற்கு வ‌ழி செய்கின்ற‌து. என‌வே ஏமாற்ற‌மே வேண்டாம் என்றோ?... தோல்வியே என‌க்கு தேவையில்லை என்றோ?.. சொல்லிவிட‌ முடியாது. இவைக‌ளை அடுத்த‌ வெற்றிக்கான‌ அனுப‌வ‌ பாட‌மாக‌ எடுத்து கொள்ள‌ வேண்டும்.

ஆனால் இப்போது வ‌ள‌ரும் குழ‌ந்தைக‌ள் இந்த‌ தோல்விக‌ளையும், ஏமாற்ற‌ங்க‌ளையும் க‌ட‌ந்து தான் வ‌ருகிறார்க‌ளா?... அவ‌ர்க‌ளுக்கு இவைக‌ளை தாங்கும்‌ ம‌ன‌ப‌க்குவ‌ம் இருக்கிற‌தா?. என்ற‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் இப்போது ந‌ட‌க்கும் குழ‌ந்தைக‌ளுக்கான‌ தொலைகாட்சி நிக‌ழ்ச்சிக‌ளை பார்த்தாலே உங்க‌ளுக்கு தெரிந்து விடும்... எப்ப‌டி வ‌ள‌ர்கிறார்க‌ள்?... வ‌ள‌ர்க்க‌ப்ப‌டுகிறார்க‌ள்? என்று.

இர‌ண்டு பால‌ரும் சேர்ந்து ப‌டிக்கும் மேல்நிலைப்ப‌ள்ளி அது. அதில் ஒன்ப‌தாம் வ‌குப்பு ப‌டிக்கும் மாண‌வ‌ன் ஒருவ‌ன் எட்டாம் வ‌குப்பு ப‌டிக்கும் மாண‌விக்கு காத‌ல் க‌டித‌ம் கொடுக்கிறான். அந்த‌ மாண‌வி அழுது கொண்டே அந்த‌ க‌டித‌த்தை த‌ன‌து வ‌குப்பாசிரிய‌ரிட‌ம் கொடுக்கிறாள். அதை வாங்கி ப‌டித்த‌ வ‌குப்பாசிரிய‌ர் அந்த‌ மாண‌வ‌னை அழைத்து திட்டிவிட்டு "வீட்டிற்கு சென்று உன‌து பெற்றோரை கூட்டி வா" என்று சொல்லி வெளியில் அனுப்பி விடுகிறார்.

வெளியில் வ‌ந்த‌ மாண‌வ‌ன் வீட்டிற்கு செல்ல‌வில்லை. ப‌ள்ளிக்கு ப‌க்க‌த்தில் உள்ள‌ ரெயில்வே த‌ண்ட‌வாள‌த்தில் த‌லையை வைத்து ப‌டுத்துவிட்டான். ம‌றுநாள் செய்திய‌றிந்து அனைவ‌ரும் விக்கித்து போனார்க‌ள். யார் மீது குற்ற‌ம்?... ஒரு சிறிய‌ த‌வ‌றை தாங்குவ‌த‌ற்கு கூட‌ அவ‌னுடைய‌ ம‌ன‌ம் ப‌க்குவ‌ ப‌ட‌வில்லை. எவ்வ‌ள‌வு கோழைத்த‌ன‌மான‌ முடிவு. அதுவும் இந்த‌ சிறிய‌ வ‌ய‌தில்...இது வேறு எங்கோ ந‌ட‌ந்த‌ க‌தைய‌ல்ல‌. என‌து ஊரில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்.

.

.

.

Sunday, June 20, 2010

வெளிநாடு வாழ்க்கையில்...

ந‌ம‌து த‌மிழ் நாட்டின் தென் மாவாட்ட‌ங்க‌ளில் உள்ள‌ பெரும்பாலான‌ தொழிலாள‌ர்க‌ள் தான் வ‌ளைகுடா நாடுக‌ளில் க‌ட்டிட‌ வேலைக‌ளில் இருக்கிறார்க‌ள். அதிலும் குறிப்பாக‌ எங்க‌ள் ஊரில் உள்ள‌வ‌ர்க‌ளை அதிக‌மாக‌ பார்க்க‌ முடியும். இவ்வாறு க‌ட்டிட‌ வேலைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ள், குடும்ப‌ த‌லைவ‌ர்க‌ளாக‌ தான் இருப்பார்க‌ள். குடும்ப‌த்தின் குழ‌ந்தைக‌ளின் வ‌ருங்கால‌த்தை ம‌ன‌தில் கொண்டு உழைக்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள்.



வ‌ளைகுடா நாடுக‌ளில் இவ‌ர்க‌ள் வாழும் சூழ‌ல் ரெம்ப‌ கொடுமையான ஒன்று. த‌ங்கியிருக்கும் ரூம்க‌ளில் இவ‌ர்க‌ளுக்கு சொந்த‌ம் என்று சொல்லும் இட‌ம் ஒரு க‌ட்டில் போடுவ‌த‌ற்கான‌ இட‌ம் தான். அந்த‌ க‌ட்டிலில் தான் இவ‌ர்க‌ளின் வாழ்க்கையே முடிகிற‌து. அந்த‌ க‌ட்டிலின் த‌லை ப‌குதியில் ஒரு சிறிய‌ ஷெல்ப் இருக்கிற‌து. அதில் அவ‌ருக்கு தேவையான‌ சில‌ அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌. அத்துட‌ன் ஒரு தொலைகாட்சி பெட்டியும் இருக்கிற‌து.

த‌ங்க‌ளுடைய‌ ஆடைக‌ள் அனைத்தும் க‌ட்டிலின் அடியில் அட்டை பெட்டியில் வைத்து கொள்கிறார்க‌ள். த‌னியாக‌ த‌ட்டு, ட‌ம்ள‌ர், போன்ற‌ பொருட்க‌ளும் இருக்கின்ற‌ன். இதே போல் ஐந்துக்கும் மேற்ப‌ட்ட‌ ப‌டுக்கைக‌ள் ஒவ்வொரு அறையிலும் காணப்ப‌டுகின்ற‌ன‌. ப‌க்க‌த்தில் ஒரு ச‌மைய‌ல் அறையும் இருக்கின்ற‌து.

அவ‌ர‌வ‌ர் க‌ம்பெனிக‌ளை பொறுத்து வேலை நேர‌ம் இருக்கிற‌து. குறைந்த‌து ப‌த்தில் இருந்து ப‌னிரெண்டு ம‌ணி நேர‌ம் வேலை செய்கிறார்க‌ள். மாலையில் தான் த‌ங்க‌ளுடைய‌ அறைக‌ளுக்கு வ‌ருகிறார்க‌ள். வ‌ந்த‌வுட‌ன் குளித்துவிட்டு த‌ங்க‌ளுடைய‌ ச‌மைய‌ல் வேலைக‌ளை பார்கிறார்க‌ள். சில‌ அறைக‌ளில் த‌ங்கியிருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் ஒன்றாக‌ சேர்ந்து ச‌மைய‌ல் செய்கிறார்க‌ள். சில‌ அறைக‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌னி த‌னியாக‌ ச‌மைய‌ல் செய்து த‌ங்க‌ளில் ஷெல்பில் வைத்து கொள்கிறார்க‌ள்.

ச‌மைய‌ல் வேலைக‌ள் முடிந்த‌வுட‌ன் த‌ங்க‌ளின் க‌ட்டிலில் உள்ள‌ தொலைகாட்சியில் அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்ற‌வாறு நிக‌ழ்ச்சிக‌ளை பார்கின்ற‌ன‌ர். பார்த்து முடித்துவிட்டு அப்ப‌டியே அந்த‌ க‌ட்டிலில் ப‌டுத்து தூங்கி விடுகின்ற‌ன‌ர்.

வார‌த்தின் ஏழு நாட்க‌ளில் ஆறு நாட்க‌ள் இப்ப‌டி தான் போகின்ற‌து. வெள்ளி கிழ‌மை விடுமுறை நாளாக‌ இருந்தாலும் சில‌ர் அன்றும் வேலைக்கு சென்று விடுகிறார்க‌ள். சில‌ர் த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள‌ அல்ல‌து உற‌வின‌ர்க‌ளின் அறைக‌ளுக்கு சென்று அவ‌ர்க‌ளுட‌ன் உற‌வாடி அன்றைய‌ பொழுதை க‌ழிக்கிறார்க‌ள். இவ்வாறு தான் பெரும்பாலான‌ குடும்ப‌ த‌லைவ‌ர்க‌ளின் வாழ்க்கை க‌ழிகின்ற‌து.

இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை த‌ங்க‌ளுடைய‌ சொந்த‌ ஊர்க‌ளுக்கு செல்கிறார்க‌ள். தான் வெளிநாட்டில் ப‌டும் க‌ஷ்ட‌ங்க‌ளை த‌ன‌து ம‌னைவியிட‌மும், குழ‌ந்தைக‌ளிட‌மும் ம‌றைக்கிறார்க‌ள். இத‌னால் குழ‌ந்தைக‌ளுக்கு அப்பாவின் மேல் எந்த‌வித‌ ஈடுபாடும் இருப்ப‌து இல்லை. ப‌ண‌ தேவைக‌ளுக்கு ம‌ட்டும் அப்பாவை நாடுகின்ற‌ன‌ர்.

அப்பாவின் க‌ண்டிப்புக‌ள் இல்லாத‌தால் இவ‌ர்க‌ள் வாழ்க்கையில் ஏதாவ‌து ஒரு வ‌ழியில் திசை மாறி விடுகிறார்க‌ள். எங்க‌ள் ஊரில் இது போல் நிறைய‌ பேரை பார்க்க‌ முடியும். த‌ன‌து இள‌மைக‌ளை வெளி நாட்டில் தொலைத்து விட்டு, இனிமேல் குழ‌ந்தைக‌ள் தான் உல‌க‌ம் என்று வ‌ரும் த‌ந்தைக‌ளுக்கு பெருத்த‌ ஏமாற்ற‌ங்க‌ளே!!

உங்க‌ள் உழைப்புக‌ளை குழ‌ந்தைக‌ளுக்கு எடுத்து சொல்லுங்க‌ள். ப‌ண‌த்தின் ம‌திப்பை அவ‌ர்க‌ளுக்கும் தெரிய‌ ப‌டுத்துங்க‌ள். கால‌ம் க‌ட‌ந்த‌ அறிவுரைக‌ளும், ப‌டிப்பினைக‌ளும் குப்பைக‌ளில் தான். விழித்து கொள்ளுங்க‌ள்!!!!

ச‌மீப‌த்தில் நான் ப‌ண‌ம் அனுப்புவ‌த‌ற்கு வ‌ங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவ‌ர் த‌ன‌து ப‌ண‌த்தை இர‌ண்டு வ‌ங்கி க‌ண‌க்குக‌ளுக்கு அனுப்பி கொண்டிருந்தார். நான் அவ‌ரிட‌ம் "ஏன் இர‌ண்டு வ‌ங்கி க‌ண‌க்குக்கு அனுப்புகிறீர்க‌ள் ? ஒன்றில் அனுப்பினால் உங்க‌ளுக்கு ச‌ர்வீஸ் சார்ஜ் குறையுமே என்று கேட்டேன் " அத‌ற்கு அவ‌ர் " ஒன்று என்னுடைய‌ ம‌னைவியின் வ‌ங்கி க‌ண‌க்கு, ம‌ற்றொன்று என்னுடைய‌ ம‌க‌னுடைய‌து, ம‌க‌ன் க‌ல்லூரியில் ப‌டிக்கிறான். அம்மாவிட‌ம் ப‌ண‌ம் கேட்டால் அவ‌ன் அம்மா ஏன்? ஏத‌ற்கு என்று கேட்ப‌தால், இர‌ண்டு பேருக்கும் அடிக்க‌டி த‌க‌றாறு வ‌ருகின்ற‌து என்று என்னிட‌ம் புல‌ம்பினான். அத‌னால் தான் இர‌ண்டு பேருக்கும் த‌னித‌னியாக‌ போடுகிறேன்" என்றார்.

அவ‌ருக்கு என்ன‌ சொல்வ‌து என்று என‌க்கு தெரிய‌வில்லை.

.

.

Sunday, June 13, 2010

ப‌ள்ளி வாழ்க்கை_அனுதாப‌மா? ஏக்க‌மா?

பள்ளியில் வகுப்பு முடிப்பதற்கு சரியாக பத்து நிமிடம் இருப்பதற்கு முன்பு எல்லா புத்தகங்களையும் எடுத்து அடுக்கி விடுவேன். பள்ளியிலேயே சத்துணவில் சாப்பிடுவதால் என்னிடம் ஒரு வட்ட சில்வர் தட்டு இருக்கும். மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி ஈரத்துடன் துணி பையில் வைத்தால், பையில் இருக்கும் புத்தகங்கள் நனைந்து விடும் என்பதால் அதை உலருவதற்காக வெளியில் வைத்திருப்பேன்.

நான் இருக்கும் வகுப்பறையின் ஜன்னல் வழியாக பார்த்தால் வட்ட வடிவமாக வெண்கல தட்டு தொங்கவிடப்பட்டிருப்பது தெரியும். அதன் பக்கத்தில் ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இறுதி பாடவேளையின் கடைசி நேரத்தில் அந்த சுத்தியலையே பார்த்து கொண்டு இருப்பேன். எனது பக்கத்தில் இருக்கும் ஷெர்லின் கொஞ்சம் வசதியானவன். அவனுடைய அப்பா வெளி நாட்டில் வேலை செய்வதால், அவனுக்கு அவனுடைய அப்பா எண்களை காட்டும் கைகடிகாரம் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார்.

எங்கள் வகுப்பிலேயே கைகடிகாரம் கட்டி வரும் மாணவன் அவன் ஒருவன் தான். அதுவும் அவன் என் பக்கத்தில் இருப்பதால் எனக்கு வசதியும் கூட. நான்கு ம‌ணிக்கு ஐந்து நிமிட‌ம் இருக்கும் போதே வெளியில் இருக்கும் ம‌ணியின் ப‌க்க‌த்தில் இருக்கும் சுத்திய‌லின் கைப்பிடியை பார்த்து கொண்டே இருப்பேன். அத‌ன் அருகில் ஒரு கை வ‌ருவ‌து ம‌ட்டும் தெரிந்தால் போதும் என்னுடைய‌ புத்த‌க‌ப்பை எப்ப‌டி என‌து தோளில் போகும் என்ப‌து என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்.

இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மாக‌ கிள‌ம்புவ‌த‌ற்கு கார‌ண‌ம் ப‌ள்ளியில் நுழைவு வாயிலை தாண்டுவ‌த‌ற்கு தான். அந்த‌ நுழைவு வாயிலில் ஒரே நேர‌த்தில் மூன்று அல்ல‌து நான்கு பேர்தான் செல்ல‌ முடியும். கொஞ்ச‌ம் தாம‌தித்தாலும் மாண‌வ‌ர்க‌ளின் கூட்ட‌ம் அதிக‌மாகிவிடும். அத‌ன்பிற‌கு ப‌த்தில் இருந்து ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் காத்து இருந்து தான் செல்ல‌ முடியும்.

ப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்துவிட்டால் அவ்வ‌ள‌வு ச‌ந்தோச‌மாக‌ இருக்கும். அடுத்த‌ ஐந்து நிமிட‌த்தில் வீட்டில் இருப்பேன். சாத‌ர‌ண‌மாக‌ என் ப‌ள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்ல‌ ப‌த்தில் இருந்து ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் ஆகும். காலையில் ப‌ள்ளிக்கு வ‌ரும் போது நான் கூட‌ இந்த‌ நேர‌த்தை எடுத்து கொள்வேன். ஆனால் மாலையில் ஐந்து நிமிட‌ங்க‌ள் தான். வாச‌லில் வ‌ரும் போதே "அம்மா சாப்பாடு ரெடியா?" என்று கேட்டு கொண்டுதான் வீட்டிற்குள் நுழைவேன். அம்மாவும் மீன் குழ‌ம்பு வைத்து சாப்பாடு ரெடியாக‌ வைத்து இருப்பார். ம‌திய‌ம் ப‌ள்ளியில் ச‌த்துண‌வில் சாப்பிடுவ‌தால் மாலையில் இந்த‌ சாப்பாடு தேவையான‌ ஒன்றாக‌வே இருக்கும்.

சாப்பாடு முடித்து விட்டு வீட்டிற்கு வெளியில் வ‌ந்து விட்டால் அந்தி மாலை இருட்டும் வ‌ரை வீட்டிற்குள் திரும்ப‌ வ‌ருவ‌து இல்லை. எங்க‌ள் அப்பாவின் கூட‌ பிற‌ந்த‌வ‌ர்க‌ள் ஆறு பேர் உண்டு. அனைவ‌ரும் எங்க‌ள் வீட்டின் ப‌க்க‌த்தில் தான் இருந்தார்க‌ள். அனைவ‌ரின் வீடுக‌ளும் வ‌ரிசையாக‌ இருக்கும். அனைவ‌ரின் வீட்டிலும் என்னை போல் சிறுவ‌ர் பாட்டாள‌ம் உண்டு.

எங்க‌ள் குடும்ப‌ம் நெல் விவ‌சாய‌த்தை மைய‌மாக‌ கொண்ட‌து. நெற்ப‌யிரை அறுவ‌டை செய்வ‌த‌ற்கு பெரிய‌ இட‌ம் தேவைப்ப‌டும். அந்த‌ இட‌த்தை கிராம‌த்தில் "க‌ள‌ம்" என்று அழைப்பார்க‌ள். அந்த‌ க‌ள‌த்தை அறுவ‌டை கால‌த்தில் உப‌யோக‌ப்ப‌டுத்துவார்க‌ள். ம‌ற்ற‌ நேர‌த்தில் அந்த‌ இட‌ம் எங்க‌ளுடைய‌ விளையாட்டு க‌ள‌மாக‌ இருக்கும். கோலி குண்டு, சிங்காம்பிள்(கிட்டிபிள்), ப‌ந்து எறித‌ல், பாண்டி, நாடு பிடித்த‌ல் போன்ற‌ விளையாட்டுக‌ள் பிர‌தான‌மாக‌ இட‌ம்பெறும்.

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-

ப‌ள்ளி விடுவ‌த‌ற்கு ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் இருப்ப‌த‌ற்கு முன்பாக‌வே என்னுடைய‌ அண்ணி ப‌ள்ளியின் வாச‌லில் காவ‌ல் நின்றார்க‌ள். ப‌ள்ளியில் நான்கு ம‌ணிக்கு ம‌ணி அடிக்கின்ற‌து. ஒரு சின்ன‌ ஆர‌வார‌மும் கேட்க‌வில்லை, எந்த‌ மாண‌வ‌ர்க‌ளும் வெளியில் வ‌ர‌வும் இல்லை. நான் என் அண்ணியிட‌ம் "வ‌குப்பு முடிந்து விட்ட‌த‌ல்லாவா?" என்று கேட்டேன். அவ‌ரும் "ஆம்" என்று என‌க்கு ப‌தில‌ளித்தார். சிறிது நேர‌த்தில் வ‌ரிசையாக‌ கைதிக‌ள் வ‌ருவ‌து போல் ஒவ்வொரு மாண‌வ‌னாக‌ வ‌ந்து கொண்டிருந்தார்க‌ள்.

வ‌ந்த‌ எந்த‌ ஒரு மாண‌வ‌னின் முக‌த்திலும் வீட்டிற்கு போகிறோம் என்ற‌ ச‌ந்தோச‌த்தை பார்க்க‌ முடிய‌வில்லை. பிரிக்கேஜியில் இருந்து மாண‌வ‌ர்க‌ள் வ‌ரிசையாய் வ‌ர‌ ஆர‌ம்பித்து நான்காம் வ‌குப்பு வ‌ருவ‌த‌ற்கு இருப‌து நிமிட‌ங்க‌ள் ஆகிவிட்ட‌து. அர‌விந்த் ப‌டிப்ப‌து ஐந்தாம் வ‌குப்பு. அவ‌ன் வ‌ரிசையில் தூர‌த்தில் நிற்ப‌தை அண்ணி பார்த்து விட்டார். க‌ண்க‌ளாலேயே அவ‌னை மிர‌ட்டினார். "சீக்கிர‌ம் வா" என்று.

வாச‌லில் அர‌விந்த் வ‌ந்த‌வுட‌ன் கையை பிடித்து கொண்டு "உன‌க்கு ந‌ட‌க்க தெரியாதா?" உன்னுடைய‌ வ‌குப்பு ப‌டிக்கும் சுரேஷ் முத‌ல் ஆளாய் வ‌ந்துவிட்டான். "வா!!! சீக்கிர‌ம் வ‌ந்து வ‌ண்டியில் ஏறு" என்று மிர‌ட்டினார். வ‌ண்டியில் அண்ணியும், அர‌விந்தும் ஏறிய‌வுட‌ன் நான் வ‌ண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு செலுத்தினேன். அடுத்த‌ ஐந்தாவ‌து நிமிட‌த்தில் வீட்டில் நாங்க‌ள். ப‌ள்ளி முடிந்து நான் ஓடி வ‌ந்த‌ தொலைவைதான் நாங்க‌ள் மூன்று பேரும் வ‌ண்டியில் வ‌ந்தோம்.



வீட்டிற்கு வ‌ந்த‌தும் அர‌விந்திற்கு சாப்பாடு வ‌லுக‌ட்டாய‌மாக‌ கொடுக்க‌ ப‌டுகிற‌து. காலையில் ப‌ள்ளிக்கு போகும் போதே அவ‌னுடைய‌ புத்த‌க‌ மூட்டையை விட‌ பெரிதாக‌, சாப்பாடு மூட்டை ஒன்று கொடுத்து அனுப்ப‌ ப‌டுகிற‌து. அதில் ம‌திய‌ம் சாப்பாடு, ம‌ற்றும் ஒரு பாட்டிலில் பால், ஒரு ப‌ழ‌ம் ம‌ற்றும் ஒரு பாக்கெட் பிஸ்க‌ட் போன்ற‌வை. இத்த‌னையும் சாப்பிட்டால் மாலையில் ப‌சி எப்ப‌டி எடுக்கும்?. சாப்பாடு முடிந்த‌வுட‌ன் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ துணி மாற்ற‌ ப‌டுகிற‌து.

கையில் ம‌ற்றொரு புத்த‌க‌ பையுட‌ன் வ‌ண்டியில் ஏறினான். இப்போது அவ‌ன் போகும் இட‌ம் ஹிந்தி வ‌குப்பிற்கு. நான் அவ‌னை வ‌ண்டியில் கொண்டு விட்டு விட்டு வீட்டிற்கு வ‌ந்தேன். ச‌ரியாக‌ ஒரு மணி நேர‌ம் க‌ழித்து அவ‌னை திரும்ப‌ அழைத்து கொண்டு ஒரு க‌ம்யூட்ட‌ர் கிளாசில் விட்டேன். அங்கு அவ‌னுக்கு ஒரு ம‌ணி நேர‌ம் வ‌குப்பாம். இது முடிந்த‌வுட‌ன் அர‌விந்த் வீட்டிற்கு வ‌ருவ‌து கிடையாது. எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டில் குடியிருக்கும் அவ‌னுடைய‌ மிஸ்ஸிட‌ம் டியுச‌ன் வ‌குப்பு ஒரு ம‌ணி நேர‌ம்.

எல்லா வ‌குப்பையும் முடித்துவிட்டு அர‌விந்த் வீட்டிற்கு வ‌ருவ‌து ஒன்ப‌து ம‌ணி.

அர‌விந்தை பார்க்கும் போது என‌து ம‌ன‌திற்குள் ஒரு நெருட‌ல் வ‌ராம‌ல் இல்லை. அந்த‌ நெருட‌ல் அனுதாப‌மா? ஏக்க‌மா?


தொட‌ரும்........

.


.
Related Posts with Thumbnails