இது எல்லாம் எப்படி பண்ணுறீங்க?, பார்க்க கொஞ்சம் பிரமிப்பா தான் இருக்கு.
மேஜிக்_ஆஹா!
ஆஹா!..இப்படித்தான் பண்ணுறீங்களா? இது தெரியாம மூணு நாலு வாட்டி திரும்ப, திரும்ப பார்த்துட்டேன்ப்பா..
மேஜிக்_இப்படிதானா?
என்னப்பா இது ரெண்டு துண்டா வெட்டி பசையை போட்டு ஓட்டுறாரு..இது எப்படி பண்ணினாருனு யாருக்காவது தெரிஞ்சா நமக்கும் ஒரு மெயில் போட்டு வையுங்க..
மேஜிக்_அதிசயம்!
இதுக்கு தான், இந்த பசங்க சகவாசம் வேண்டாம் என்று சொன்னேன்... இப்ப பாரு கவுத்துட்டானுங்க.. அதை அப்படியே விட்டானுங்களா?
கவுத்துட்டானுங்க!
Sunday, March 28, 2010
Thursday, March 25, 2010
மேன்பவர் கன்சல்டன்சி_இண்டர்வியூ
காலை வேளை, கடிகாரத்தின் சிறிய முள் எட்டு என்று காட்டியது. அருள் அவசரம், அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான். தம்பி அந்த அட்ரஸ் எல்லாம் எடுத்து விட்டாயா? என்ற அக்காவின் குரலைக் கேட்டவுடன், ஞாபகம் வந்தவனாக நேற்று தினத்தந்தி நாளிதழில் வேலை வாய்பிற்கான பக்கத்தில் பார்த்த முகவரிகளை குறித்து வைத்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான். முதலில் எங்கு செல்வது என்ற எண்ணத்துடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். இப்போது எந்த தொழிற்சாலைகளும் நேரிடையாக ஆட்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்றும், ஏதாவது மேன்பவர் கன்சல்டன்சி(Manpower consultancy) மூலம் தான் எடுக்கிறார்கள் என்று அவனது மாமா சொன்னதை அப்படியே அசை போட்ட வண்ணம் பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். அவன் குறித்து வைத்திருந்த முகவரிகளில் ஒரு மேன்பவர் கன்சல்டன்சியின்(manpower consultancy) முகவரியும் இருந்தது. எனவே மடித்து வைத்த காகிதத்தை எடுத்து அந்த மேன்பவர் கன்சல்டன்சியின் முகவரியை பார்த்தான், அதில் "அம்பத்தூர் பாடி" என்று எழுத பட்டிருந்தது. அந்த நேரம் பேருந்து வரும் சத்தம் கேட்கவே, நிமிர்ந்து பேருந்தின் வழிதடத்தை பார்த்தான். அதில் "அம்பத்தூர் எஸ்டேட்" என்று எழுத பட்டிருந்தது. பேருந்தில் கூட்டம் ஜெக ஜோதியாய் இருந்தது. அடித்து பிடித்து ஒரு வழியாக பேருந்தில் ஏறிவிட்டான். பேருந்தில் நடத்தினரிடம் "அம்பத்தூர் பாடி" என்று பயணச்சீட்டு வங்கிக் கொண்டான். பேருந்தில் பக்கத்தில் நின்றவரும் "அம்பத்தூர் பாடி" என்று பயணச்சீட்டு வாங்கவே, அவரிடம் அந்த மேன்பவர் கன்சல்டன்சியின் முகவரியை சொல்லி அடையாளம் கேட்டான். அவர் சிரித்து கொண்டே என்ன வேலைக்காக போகிறீர்களா? என்று கேட்டார். ஆம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். பஸ் ஸ்டாப்புல இறங்கி கொஞ்சம் தூரம் போனீங்கனா ஒரு மார்கெட் வரும் அதற்கு ஆப்போசிட்டுல ஒரு பெரிய போர்டு மாட்டி இருக்கும், என்று அடையாளம் சொன்னார்.

சரியாக காலை 9.10 க்கு எல்லாம் கன்சல்டன்சி அலுவலகத்தை அடைந்தான் அருள். அலுவலகம் முதல் மாடியில் இருந்தது. இவனுக்கு முன்பாகவே பத்து பேர் அங்கு வந்திருந்தார்கள். வரவேற்பறையில் ஒரு பெண்மணி இருந்தார்கள். அவரிடம் சென்று அருள் விசாரித்தான். அதற்கு சற்று அமருங்கள், சார் உள்ளே இண்டர்வியூ பண்ணிக்கிட்டு இருக்கார். சார் வர சொன்னதும் உள்ளே போங்கள் என்று பக்கத்தில் இருந்த மேல் கண்ணாடி மாட்டிய கதவை காட்டினார். கண்ணாடி வழியே இருவர் பேசிக் கொண்டிருப்பது அருளுக்கு தெரிந்தது. அருள் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். வரிசையாக ஒவ்வொருத்தரும் உள்ளே சென்று சிறிது நேரத்தில் ஒரு விண்ணப்ப படிவத்துடன் வெளியே வந்தனர். வந்தவர்கள் அந்த படிவத்தை பூர்த்தி செய்து அதை அந்த வரவேற்பறையில் இருந்த பெண்மணியிடம் கொடுத்து விட்டு, கையில் இருந்து பணமும் கொடுத்து ஒரு ரசீது வாங்கிக் கொண்டார்கள். அதனுடன் சேர்த்து அந்த பெண்மணி சில உறையிடப்பட்ட கடிதங்களையும் கொடுத்தார். இவை அனைத்தும் அருளின் கண்முன்னே நடந்து கொண்டிருந்தது. மணித்துளிகள் கடந்தோடின, இரண்டு மணி நேரம் ஆயிற்று. அருளின் முன் இருந்தவர்கள் அனைவரும் சென்று வந்தாயிற்று. அடுத்தது அருள் தான். அதற்குள் அருளை அடுத்து இன்னும் பத்து பேர் வந்து சேர்ந்திருந்தார்கள். அழைப்பு வரவே உள்ளே சென்றான் அருள். உள்ளே சென்றதும் கதவு தானே மூடியது. வாங்க உட்காருங்கள். என் பெயர் கனகராஜ், உங்கள் பெயர்? என்று நிறுத்தினார் உள்ளே இருந்தவர். நான் அருள் சார். இந்தாருங்கள் என்னுடைய பயோடேட்டா. என்று அவரிடம் தான் கொண்டு வந்த பைலை நீட்டினான் அருள். அதை வங்கி பார்த்து கொண்டே, சொல்லுங்க அருள் உங்களை பற்றி என்று சொல்லிக் கொண்டு அருளுடைய பயோடேட்டாவை புரட்ட தொடங்கினார் கனகராஜ். நான் வந்து... மெக்கானிக்கல் இஞ்சினியர் என்று ஆரம்பித்து ஒரு பெரிய கதையை பாதி ஆங்கிலமும், தமிழும் சேர்த்து ஒரு வழியாய் சொல்லி முடித்தான் அருள். சோ.. நீங்க ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் அப்படிதானே..என்று கேட்டதில் இருந்தே, அது ஒரு வார்த்தையை தான் அவர் காதில் வாங்கி இருக்கிறார் என்று அருள் ஓரளவு புரிந்து கொண்டான். ஆமா சார். போன மாதம் தான் படிப்பை முடித்தேன், சென்னையும் எனக்கு புதிது. என்று பதிலளித்தான் அருள். ஓகே அருள் ஒண்ணும் பிரச்சனை இல்லை. உங்களுக்கு வேலை வாங்கி தர வேண்டியது என்னுடைய பொறுப்பு, இப்போது மெக்கானிக்கல் பீல்டில் சி.என்.சி(CNC)நல்லா இருக்கு, அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?.
காலேஜில ஒரு செமஸ்டர்ல படிச்சி இருக்கேன்.
ஓ வெரிகுட். நானும் அதைப் பற்றி ஒரு டிரெயினிங் வகுப்பு நடத்திக் கொண்டு இருக்கிறேன். நீங்களும் அதில் கொஞ்சம் டிரெயினிங் எடுத்திட்டா போதும். வெளியே இந்த கோர்ஸ் படிக்க நான்காயிரம் முதல் ஐயாயிரம் வரை சார்ஜ் பண்ணுறாங்க. நான் மூவாயிரம் தான் வாங்குறேன். சரி, முதலில் உங்களுக்கு ஒரு வேலைக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன். அப்புறம் பார்ட் டைம்ல இந்த கோர்ஸை தொடருங்கள்.
கண்டிப்பா சார், எனக்கும் அந்த கோர்ஸ் படிக்கணும் என்று ஆர்வம் இருந்தது.
ஓ! அப்படியா. ரெம்ப நல்லது. சரி, நான் வேலையைப் பற்றி உங்களுக்கு சொல்லி விடுகிறேன். அதாவது எங்க கிட்ட பெரிய் கம்பெனிகள் வேலைக்கு ஆட்கள் வேண்டி சொல்லி வச்சிருக்காங்க. அவங்களுக்கு எங்க கன்சல்டன்சி மூலமா நாங்கள் ஆட்களை அனுப்பி வைக்கிறோம். அவங்களும் இண்டர்வியூ பண்ணி அவங்களுக்கு தேவை என்றால் எடுத்துக் கொகிறார்கள். அதுபோல உங்களுக்கும் நான் ஒரு சில கம்பெனிகளின் அட்ரஸ் தருகிறேன். நீங்க அவங்களை போய் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும். ஏன்னா! நான் என்னுடைய லெட்டர் பேடில் உங்களை சிபாரிசு பண்ணி எழுதி இருப்பேன்.
அப்படியா? ரெம்ப நன்றி சார்.
உங்களுக்கு அட்ரஸ் தருவதற்கு நீங்க முதலில் எங்க ஆபிஸில் உங்களுடைய புரோபைலை ரெஜிஸ்டர் பண்ண வேண்டும். அதுக்கு அப்ளிக்கேசன் கட்டணம் 150. இந்தாஙக் அப்ளிக்கேசன் பார்ம். இதுல உங்களுடைய பயோடேட்டாவை அப்டேட் பண்ணி, பார்மையும் அதுக்கான கட்டணத்தையும் முன்னாடி ஆபிஸில் கட்டிருங்க. அப்புறம் எந்த கம்பெனியில் நீங்கள் வேலைக்கு சேர்ந்தாலும் அந்த கம்பெனியில் வாங்கும் முதல் மாத சம்பளத்தில் பாதி எங்களுக்கு கொடுத்து விட வேண்டும்.
வேலையை பற்றி விபரம் எல்லாம் நீங்க சொல்லுவீங்களா?. என்ன வேலை?. சம்பளம் எவ்வளவு சார் கொடுப்பாங்க?..
உங்களுக்கு இது தான் முதல் வேலை. எனவே நீங்க என்னுடைய சி.என்.சி(CNC Programming Courses) கோர்ஸ்ல ஜாயின் பண்ணிருங்க. சி.என்.சி மெஷின் ஆப்பரேட்டர்(CNC Machine Operator) என்று உங்களுக்கு நான் புரோபைலை அப்டேட் பண்ணி தருகிறேன்.
.......x........x........x........x.........x.........x.........x........x.......x...
அடுத்த நாள் காலை, அம்பத்தூர் எஸ்டேட்.
வினாயகா மேனுபாச்சரிங் கம்பெனி.
சார் என் பெயர் அருள், ஏபிசி கன்சல்டன்சி மூலமா வருகிறேன். சி.என்.சி மெஷின் ஆப்பரேட்டர் (CNC Machine Operator) வேலை காலியா இருக்கிறதா சொன்னார்.
வாங்க தம்பி இன்னைக்கு உங்களை அவன் அனுப்பி இருக்கானா?.. அவனுக்கு வேற வேலையா இல்லையா? ஆமா சரி தான் அவனுக்கு தான் இந்த பொழப்ப விட்டா வேற என்ன தெரியும். தம்பி இப்ப என்னிடம் சி.என்.சி மெஷினே இல்லை. நான் விற்று ஒரு மாத காலம் ஆகுது. உங்களை சேர்த்து நான்கு பேர் வந்துத்துட்டு போய்ட்டாங்க.. சாரி தம்பி வேற கம்பெனி பாருங்க.

மதியம், அம்பத்தூர் எஸ்டேட்.
வெஸ்டன் பிரைவேட் லிமிட்
குட் ஆப்டர்நூன் சார். நான் ஏபிசி கன்சல்டன்சி சொல்லி வருகிறேன். இங்க சி.என்.சி ஆப்பரேட்டர் வேலை இருக்கிறதா சொன்னாங்க..
வெரி குட் ஆப்டர்நூன். குடுங்க உங்க பயோடேட்டாவை.. ம்ம் நல்லா பண்ணியிருக்கிங்க.. சி.என்.சியில் உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா? புரோகிராம் பண்ண தெரியுமா?
அனுபவம் இல்லை சார். ஆனா புரோகிராம் படிச்சிருக்கிறேன். ஆப்பரேட்டரா முதலில் வேலை கொடுத்திங்கனா.. அப்படியே புரோகிராம் கத்துக்குவேன்..
நல்லா பேசுறீங்க... ஆனா ஒரு சின்ன சிக்கல். நாங்கள் இப்ப தான் மெஷின் ஆர்டர் பண்ணி இருக்கோம். அடித்த மாசம் தான் வரும். உங்க பயோடேட்டாவை கொடுத்துட்டு போங்க.. கண்டிப்பா மெஷின் வந்தவுடன் கால் பண்ணுறோம்.

இரண்டாவது நாள் காலை, கிண்டி
அபூர்வா இஞ்சினியரிங்
மகன்: என்ன கனகராஜ் அனுப்பி விட்டானா? பாருங்க அப்பா, காலையிலே அனுப்பி விட்டுட்டான்.
மகன்: உன் பெயர் என்ன சொன்ன?
அருள் சார்.
அப்பா: ஓ நீ கிறிஸ்டினா?
ஆமா சார்.
மகன்: நீ சர்ச்க்கு எல்லாம் போவியா?
ஊர்ல இருக்கும் போது போவேன் சார். சென்னை வந்த பிறகு போறது இல்லை.
அப்பா: உங்க அப்பா சர்ச்சுக்கு போவாறா?
ஆமா சார் அவரும் போவார்.
மகன்: இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பார்த்து இருக்கிறாயா?
இல்ல சார். இந்த வருடம் தான் படிப்பை முடித்தேன்.
அப்பா: இப்ப ஒண்ணும் இங்க வேலை காலி இல்லை. என்னிடம் எட்டு மெஷின் இருக்கிறது, எல்லாவற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள். இனி அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கும் போது தான் ஒவ்வொருத்தனாக கிளாம்புவான். அதுனால் நீ இப்ப போயிட்டு அடுத்த மாதம் வந்து பாரு..காலியா இருந்தா எடுத்துக்கிறோம்..

இரண்டாவது நாள் மதியம், கிண்டி
ஜி.கே. எண்டர்பிரைசஸ்
வாப்பா!.. இந்த சோபாயில் உட்கார், சொல்லுப்பா..
சார் என் பெயர் அருள். நான் ஏபிசி கன்சல்டன்சி மிஸ்டர் கனகராஜ் சொல்லி வந்து இருக்கேன். இங்க சி.என்.சி மெஷின் ஆப்பரேட்டர் வேலை காலியா இருக்கு என்று சொன்னாரு. அந்த வேலைக்கு தான் வந்து இருக்கேன்...... இது தான் சார் என்னுடைய பயோடேட்டா.
ஹ..ஹா..ஹா.. நல்லா இருக்குப்பா? என்னிடம் சி.என்.சி மெஷினே இல்லை. அவன் இல்லாத மெஷினுக்கு ஆள் அனுப்புறானா? நல்லா இருக்கு.
எவ்வளவு கொடுத்து ஏமாந்தே?
ரெஜிஸ்டர் பண்ண 150 ரூபாய் கொடுத்தேன் சார். அப்புறம் இந்த வேலை கிடைத்தால் பாதி சம்பளம் அவருக்கு கொடுக்க வேண்டும்.
இது நல்லா இருக்கு..எவனுடைய சம்பளத்தை யாருக்கு கொடுக்கிறது.ம்ம்ம்ம்ம்... சி.என்.சி புரோகிராம் படிச்சி இருக்கியா?
இல்ல சார், இனி மேல் தான் படிக்க வேண்டும்.
அப்ப எதுக்குப்பா நீ சி.என்.சி வேலை தேடுகிறாய்.
இல்ல சார் அவருதான் சொன்னாரு.. சி.என்.சி பீல்டு நல்லா இருக்கு என்று.
அவன் பிழைக்க தெரிந்தவன். உன்னோட பயோடேட்டாவை பார்த்தேன். நல்ல மார்க் வாங்கி இருக்கிறாய். இப்ப என்னுடைய கம்பெனியில் ஒரு வேலை காலி இருக்கு. உனக்கு விருப்பம் இருந்தால் இப்பவே நீ ஜாயின் பாண்ணலாம்.
அப்படியா சார்? என்ன வேலை சார்.
நீ நினைப்பதைப் போல் சி.என்.சி மெஷின் ஆப்பரேட்டர் வேலை இல்லை. சாதரான டிரில்லிங் மெஷின் ஆப்பரேட்டர். மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம், அது மட்டும் அல்லாமல் ஓவர் டைம் வேற இருக்கும். இதர சலுகைகளும் கிடைக்கும்.
சார் நான் பஸ்ட் கிளாஸ் வித் ஹானர்ஸ் வாங்கி இருக்கேன். அந்த சர்டிபிக்கேட் கூட அட்டாச் பண்ணி இருக்கேன், சம்பளம் ரெம்ப கம்மியா இருக்கு சார். நான் வேற பல்லவரத்தில் இருந்து வரவேண்டும். கொஞ்சம் பார்த்து சம்பளம் பிக்ஸ் பண்ணுங்க சார்.
ம்ம்ம்..பார்த்தேன் பார்த்தேன்.. நல்லா பேசுறா.. சரி நூறு ரூபாய் அதிகம் போட்டு ஆயிரத்து நூறு என்று பிக்ஸ் செய்யிறேன். எப்ப வந்து ஜாயின் பாண்ணுவாய்.
நாளைக்கே வந்து வேலையில் சேர்ந்து விடுகிறேன் சார்..
குட்.... அப்புறம் உனக்கு வேலை கிடைத்த விசயத்தை அந்த கன்சல்டன்சிக்கு சொல்ல வேண்டாம். அவனுக்கு பணமும் கொடுக்க வேண்டாம். அப்படி ஏதாவது பிரச்சனை பண்ணினால் என்னிடம் சொல்லு.
ரெம்ப நன்றி சார்..
நாளை வரும் போது மெஷினில் வேலை செய்யும் போது போட வேற துணி ஒன்று கொண்டு வா? இல்லை என்றால் புது துணி அனைத்தும் ஆயில் ஆகி விடும்.
கண்டிப்பா சார்..ரெம்ப நன்றி சார்.

காலேஜ் படிக்கும் போது லேப் பிரட்டிக்கல் கிளாசில் போட்ட காக்கி துணியை, காலேஜின் கடைசி நாளில் காலில் மிதித்து விளையாடிய போது, அதை பார்த்த துறை தலைவர் "அதை எல்லாம் பத்திரமா எடுத்து வையுங்கள் ஒரு நாள் உங்களுக்கு தேவைப்படும்" என்று கூறியதை நினைத்துக் கொண்டு நடையை கட்டினான் அருள்.

Posted by
நாடோடி
at
4:05 AM
17
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
அனுபவம்,
இண்டர்வியூ,
மேன்பவர் கன்சல்டன்சி
Saturday, March 20, 2010
அழகு, அச்சம், அறிவுரை_வீடியோ
அழகு
நம்மாளுங்க நாலுபேரை மேடையில் ஆட சொன்னால் நாலுபேரும் நாற்பது விதமா ஆடுவங்க..ஆனா இங்க..
அச்சம்
பயம் என்றால் இதனிடம் தான் கற்று கொள்ள வேண்டும்... யப்பா!!!! துணிவில்லதவர்கள் பார்க்க வேண்டாம்..
அறிவுரை
அறிவுரையை யாரிடம் இருந்து கற்று கொண்டால் என்ன?... ஆனா இது எல்லாம் ரெம்ப ஓவரு..

3:04 PM
14
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
வீடியோ
Tuesday, March 16, 2010
குழந்தைகளுக்காக_என்னால் முடிந்தது
இப்போது கடைகளில் அதிகமாக விற்பனையாகும் குழந்தைகளுக்கான பொருட்களில், தோள்களில் குழந்தைகளை லாவகமாக மாட்டும் பெல்ட்கள் அடங்கிய தோள் பைகள்(Baby Carry Sling) மற்றும் குழந்தைகளை உட்கார வைத்து கைகளால் தள்ளிக் கொண்டு போகும் சிறியதள்ளு வண்டி(Baby Stroller) போன்றவை மிக முக்கியமானவை.

நகரங்களில் மாலையில் சாலையின் இரு பக்கங்களிலும் இந்த வண்டிகளில் குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு போகும் தாய்மார்கள் அதிகம். அந்த வண்டியில் குழந்தையானது கொலுவில் வைக்கப்பட்ட பொம்மை போல் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதைச் சுற்றி கயறுகளால் கட்டியது போல் பெல்ட்டுகள் மாட்டப்பட்டு இருக்கும். அந்த தள்ளுவண்டியும் பூ, பலூன், மணி போன்ற விளையாட்டு பொருட்கள் ஏதாவது ஒன்று கட்டபட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். எனக்கு அந்த குழந்தையை பார்க்கும் போது பரிதாபமாக தான் தோன்றும். காரணம் அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பை பார்க்கமுடியாது. மாறாக திருவிழாக் கூட்டதில் வழி தெரியாமல் தத்தளிக்கும் குழந்தைப் போல் அதன் கண்கள் மிரளும். வழியில் வருவோரையும், போவோரையும் ஒரு பயம் கலந்த பார்வையுடன் தான் பார்க்கும். அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் சர்வசாதரணமாக அந்த குழந்தையின் தாய் அந்த வண்டியை தள்ளிக்கொண்டு போவார். நமது சாலைகளை சொல்ல வேண்டியது இல்லை, அந்தஅளவு பளபளப்பாக இருக்கும். ஒரு சிறியகல்லின் மீது அந்தவண்டி ஏறினால் போதும் மொத்தவண்டியும் அதிரும், அதனுடன் சேர்ந்து குழந்தையும் ஒரு ஆட்டம் போடும்.
இவ்வாறு குழந்தைகளை அழைத்து செல்லும் அம்மாக்களை எங்க கிளம்பிட்டீங்க? என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலைக் கேட்டால் சிரிப்பதா? அல்லது அந்த குழந்தையின் நிலையை பார்த்து வருத்தபடுவதா? என்று நமக்கே தெரியாது. தினமும் நடைப்பயிற்ச்சி செய்தால் உடம்புக்கு நல்லது என்று மருத்துவர் கூறினார், அதனால் தான் மாலையில் தினமும் இவ்வாறு குழந்தையுடன் நடக்கிறேன் என்று பதில் தருவார். அதோடு குழந்தையும் எப்போதும் வீட்டில் இருப்பதால் அதற்கும் ஒரு மாறுதலுக்காக வெளியில் அழைத்து வந்தேன் என்று சொல்வார். ரெம்ப நல்லவிசயம் தான். ஆனால் உடம்பு குறைவதற்காக நடக்கிறோம் என்றால் குழந்தையை தூக்கி கொண்டு நடந்தால் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே உடம்பு குறையும். அது மட்டும் அல்லாது அந்த குழந்தையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் இயற்கையை ரசிக்கும். நடைப்பயிற்ச்சி மேற்கொள்ளும் போது நமது உடலின் எடையை கால்கள் தாங்க வேண்டும். ஆனால் இவர்கள் குழந்தையை தாங்கும் வண்டியின் மீது முழு எடையையும் கொடுத்து விட்டு, அந்த வண்டியின் சொல்படி நடப்பார்கள். அதற்கு நடைப்பயிற்ச்சி என்று ஒரு பெயரும் வைத்து விடுவார்கள்.

நாம் வெளியில் நடந்து போகும்போது ஏதாவது ஒன்றின் மேல் தடுக்கினாலோ! அல்லது ஒரு பயங்கர சத்தத்தினால் தடுமாறினாலோ, நாம் எப்படி பக்கத்தில் உள்ளவர்களின் துணையை நாடுகிறோம் அல்லது அவர்களை கட்டிபிடித்து கொள்கிறோம், அதேப்போல் தான் குழந்தைகளும். எந்த வித ஆபத்து வந்தாலும் நாம் ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் அது சிரித்துக் கொண்டே இருக்கும். ஒரு அதிர்வோ, அல்லது சத்தமோ கேட்டால் அம்மாவை இறுக கட்டி, முகத்தை மார்பில் புதைத்து கொள்ளும். பின்பு சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு வந்து விடும். இது குழந்தைகளின் இயல்பு.
எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது, எனது அம்மா என்னை தோளில் தூக்கி சுமந்த நாட்கள். என்னை அவ்வாறு தூக்கி செல்லும் போது அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டது கூட எனக்கு மறக்கவில்லை. அவ்வாறு எழு, எட்டு வயது இருக்கும் போது கூட என்னை எனது அம்மா வெளியில் செல்லும் போது தூக்கி கொண்டு தான் போவார்கள். இத்தனைக்கும் நான் எங்கள் வீட்டில் தனியாக பிறந்து வளர்ந்தவன் கிடையாது. எனக்கு ஒரு அக்காவும், ஒரு அண்ணனும் உண்டு. இது எனது வீட்டில் நடக்கும் அதிசயம் என்று நான் சொல்ல வரவில்லை. பெரும்பாலான கிராமத்து நன்பர்கள் அனுபவித்த ஒன்றாக தான் இருக்கும். ஆனால் ஒரு குழந்தை வைத்திருக்கும் இப்போதைய தாய்மார்களோ, அந்த குழந்தையை சுமக்க தள்ளுவண்டி வைத்திருப்பது தான் பரிதாபம்.

எங்கள் உறவுக்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் மது அருந்தினால் அமைதியாக வந்து தூங்குவது கிடையாது. வழியில் வருவோர் மற்றும் போவோரை கெட்டவார்த்தைகள் சொல்லி வம்புசண்டைக்கு இழுப்பது தான் அவருடைய வழக்கம். ஆனால் அவரும் ஒருவரின் குரலைக் கேட்டால் பெட்டி பாம்பாக அட்ங்கி போய், அமைதியாக வீட்டிற்குள் தூங்க சென்று விடுவார். அது யாருடைய குரல் என்றால் அவரை சிறு வயதில் தூக்கி வளர்த்த அவருடைய அக்காவின் குரல் தான். அந்த அளவுக்கு அவரின் மேல் மதிப்பு வைத்திருந்தார் எனது உறவுக்காரர். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நம் மீது சிறுவயதில் ஒருவர் காட்டும் அக்கறை வாழும் நாள் முழுவதும் நமக்கு மறப்பதில்லை. அந்த ஒருவரின் மீது மதிப்பும், மரியாதையும் கூடுகிறது என்பதே உண்மை.
ஒரு நாள் நான் இருசக்கர வாகனத்தில் அம்பத்தூர் பாடியில் இருந்து மணலி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது வண்டிக்கு முன்னால் ஒரு தம்பதிகள் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தார்கள். அப்போது எனது பார்வை அந்த குழந்தையின் மீது திரும்பியது. அந்த குழந்தை முகம் மிகுந்த இறுக்கத்துடன் அதன் பிடி தளர்ந்தது போல் எனக்கு காட்சியளித்தது. உடனே அந்த அம்மாவை பார்த்தேன். அவர்கள் ஏதோ தூக்ககலக்கத்தில் இருப்பது போல் கண்கள் சுழன்றது. ஒரு கையால் தனது கணவனின் தோளை இறுக்கியபடி இருந்தார். அந்த அம்மாவின் கவனம் சிறிதும் குழந்தையின் மீது இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. பின்னால் இருப்பவர்களில் நிலைமையை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த அம்மாவின் கணவர் வண்டியை அறுபது மைல்களுக்கு மேல் வேகமாக செலுத்தினார். ஒரு கட்டத்தில் என்னால் குழந்தையின் நிலைமையை பார்க்க முடியவில்லை. அது விழுந்து விடுவது போலவே எனக்கு தோன்றியது. அதனால் எனது வண்டியை வேகமாக செலுத்தி அவரிடம் வண்டியை நிறுத்த சைகை செய்தேன். அவரும் உடனே வண்டியை ஓரமாக நிறுத்தினார். அவரிடம் குழந்தையை பற்றி சொன்னேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே எனது மனைவி குழந்தையை மார்புடன் சேப்டி பெல்டால்(Baby Carry Sling) கட்டியுள்ளார் என்று அவர் மனைவியை சுட்டி காட்டினார். அப்போது தான் நானும் கவனித்தேன், கங்காரு தனது வயற்றில் உள்ள பையில் குழந்தையை சுமப்பது போல அந்த பெண்மணியும் தனது மார்புடன் அந்த குழந்தையை சேப்டி பெல்டால் கட்டியிருந்தார்.
எந்த ஒரு தாய்க்கும் தனது குழந்தையை தூக்கி சுமக்க வலு இல்லாமல் கடவுள் படைப்பது இல்லை. அப்படி சொல்லுவதற்கு காரணங்கள் இருந்தால், அது தாய்பால் கொடுப்பதற்கு நாம் சொல்லும் காரணங்கள் போல் தான் அமையுமே தவிர மற்றவை ஒன்றும் கிடையாது. தாவரங்களை பாருங்கள், அவைகளின் கனிகளையும், மலர்களையும் தாங்க முடியாமல் கீழே முறிந்து விழுந்து விடுவது கிடையாது.
"மனமிருந்தால் மார்க்கமுண்டு"
நான் இந்த பதிவை எழுதுவதற்கு காரணம், எனது நன்பர் ஒருவர் ஊருக்கு பார்சல் அனுப்ப வேண்டும் அதற்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் நீயும் வா? என்று என்னை அழைத்தார். சரி நன்பனின் அழைப்பை ஏற்று, என்ன பொருள் வாங்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவன் தனது மனைவி அலைபேசியில் பேசும் போது குழந்தையை வைத்து தள்ளுவதற்காக ஒரு வண்டி வாங்கி அனுப்பி வைக்க சொன்னாள், உனக்கு தான் தெரியுமே அதை பற்றியுள்ள செய்திகளை இனையதளத்தில் இருந்தால் சேகரித்து சொல்லு என்றான். எனது நன்பர் ஒன்றும் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் கோமான் கிடையாது, ஒரு சராசரி கட்டிட தொழிலாளி. அவனுடைய மனைவி குடியிருக்கும் ஊர் ஒன்றும் அடையாறு பீச்ரோடு இல்லை, நமது மாவட்டத்தில் உள்ள பதினேழு பட்டியில் அதுவும் ஒரு பட்டி. இதற்கு மேலும் நான் அவனுக்கு அந்த வண்டியை வாங்கி கொடுத்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
குறிப்பு: இவை அனைத்தும் நாகரீகம் என்ற பெயரில் நடமாடும் மாயைகள். அவைகளில் நம்மில் சில பேர்களும் அறிந்தோ, அறியாமலோ விழுந்து விடுகிறோம். எது நாகரீகம் என்பதை முழுமையாக அடையாளம் காணவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.

8:35 PM
26
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
அம்மா,
அனுபவம்,
சமுதாயம்
Friday, March 12, 2010
இரண்டு சதம் அடிப்பது உங்கள் கையில்..புதிர்
இன்று முதல் ஐபில் கிரிக்கெட் திருவிழா ஆரம்பித்துவிடும். என்னை போல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அப்படியே அந்த கொண்டாட்டத்தை பற்றி ஏதாவது எழுதலாம் என்று பார்க்கும் போது என் நண்பன் கேட்ட ஒரு புதிர் தான் ஞாபகம் வருகிறது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆட்டம் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது. ஆட்டத்தில் கடைசி ஓவரில் இறுதி மூன்று பந்துகள் தான் மீதம் உள்ளது. இரண்டு பக்கங்களில் நிற்கும் பேட்ஸ்மேன்களும் 94 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற இன்னும் ஏழு ரன்கள் தான் தேவை. ஆறு ரன்கள் அடித்தால் டிரா.

ஆட்ட முடிவில் எதிரெதிர் பக்கம் உள்ள இரண்டு பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்கிறார்கள். அணி வெற்றி பெறவும் செய்கிறது. நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் கடைசி மூன்று பந்துகள் தான் உள்ளது. இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதை நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் கூறும் பதில்கள் அனைத்தும் கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
குறிப்பு: என்னால் இந்த புதிருக்கு இரண்டு வழிகளில் விடையளிக்க முடியும். வேறு ஏதாவது புது வழிகளை யாராவது சொல்கிறார்களா என்று பின்னூட்டத்தில் பார்ப்போம்.

1:33 AM
32
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
கிரிக்கெட்,
புதிர்
Wednesday, March 10, 2010
எக்ஸலில்(MSEXCEL) விலுக்கப்(VLOOKUP) மற்றும் ஹெச்லுக்கப்(HLOOKUP)
தொழில் நுட்பபதிவு ஒன்றை நானும் எழுதுகிறேன். அதனால் தமிழில் எல்லா வார்த்தைகளும் அமையும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆனால் முடிந்தவரை முயற்ச்சி செய்கிறேன்.
எக்ஸலில்(MSEXCEL) விலுக்கப்(VLOOKUP) மற்றும் ஹெச்லுக்கப்(HLOOKUP) என்ற இரண்டு பார்முலாக்கள் உள்ளன. இவை இரண்டும் எக்ஸல் பயன் படுத்துபவர்களுக்கு வரபிரசாதம் என்று நான் சொல்வேன். அதை எப்படி பயன்படுத்தி கொள்வது என்பதை எனக்கு தெரிந்த முறையில் விளக்குகிறேன்.
பார்முலா விளக்கம்:
இரண்டு தனித்தனி பைல்களில் உள்ள அட்டவணைகளின் விபரங்களை ஒப்பீடு செய்வதற்கு இந்த இரண்டு பார்முலாக்களும் பயன்படுகின்றன.
விலுக்கப்(VLOOKUP)-VERTICAL LOOKUP
ஹெச்லுக்கப்(HLOOKUP)-HORIZONTAL LOOKUP
இந்த பார்முலாக்களை இரண்டு விதமாக உபயோகப் படுத்தமுடியும். ஒரு அட்டவணையில் உள்ள விபரங்கள் மறு அட்டவணையில் உள்ளதா? என்று அறிவதற்கும், முதல் அட்டவணையின் தொடர்புடைய விபரம் இரண்டவது அட்டவணையில் இருந்தால் அந்த விபரங்களை முதல் அட்டவணைக்கும கொண்டு செல்லவும் இந்த பார்முலாக்கள் பயன்படுகின்றன.
உதாரணத்துடன் விளக்கம்:
இரண்டு அட்டவணைகள் தனித்தனி பைல்களாக கொடுக்கபட்டிருக்கின்றது என்று வைத்து கொள்வோம். அதில் ஒரு அட்டவணையில் 20 மாணவர்களின் பெயர்களும், அவர்களின் கடந்த ஆண்டு மதிப்பெண்களும் கொடுக்கபட்டுள்ளது. மற்றும் ஒரு பைலில் உள்ள அட்டவணையில் அதே மாணவர்களின் பெயரும், இந்த ஆண்டு மதிப்பெண்களும் கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால் இரண்டவது பைலில் 20 மாணவர்களின் பெயர்களுக்கு பதிலாக 15 மாணவர்கள் பெயர்கள் தான் உள்ளன எனவும் வைத்துக் கொள்வோம். இப்போது இதில் இருந்து நமக்கு வேண்டிய தகவல்கள் கீழ்கண்டவை என்று வைத்து கொள்வோம் (படங்களை பெரிதாக்கி தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.)

1) இரண்டாவது அட்டவணையில் உள்ள 15 மாணவர்களின் மதிப்பெண்களும் முதல் அட்டவணைக்கு கொண்டு போகவேண்டும்.
2) இரண்டாவது அட்டவணையில் விடுபட்டு போன அந்த 5 மாணவர்களின் பெயர்களையும் கண்டு பிடிக்க வேண்டும்.
மேற்கண்ட கதைக்கு அருமையாக பதில் தருவான் விலுக்கப்(VLOOKUP). எப்படி என்பதை கீழே விளக்குகிறேன்.
நமக்கு எந்த காளத்தில்(COLUMN) விபரம் வேண்டுமோ, அந்த காளத்தில் அம்புக்குறியை(CURSOR) வைத்துக் கொள்ள வேண்டும். எக்ஸல்(EXCEL) பக்கத்தில் பார்முலா பாரை (FORMULA BAR) அனைவரும் அறிந்ததே. அதில் சென்று விலுக்கப் என்ற பார்முலாவை அழுத்தினால் கீழ்கண்ட தகவல் பெட்டி(MESSAGE BOX) வரும். அந்த தகவல் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்டங்களில் சரியான தகவல்களை நிரப்பினால் நமக்கு தேவையான விபரங்கள் கிடைக்கும்.

Lookup_Value - அதாவது எதை மூலகாரணியாக (REFERENCE) வைத்து நாம் ஒப்பீடு செய்கிறோமோ அந்த செல்லின்(CELL) தகவல். மேற்கண்ட அட்டவணையில் நாம் பெயரைக் கொண்டு தான் ஒப்பீடு செய்கிறோம். எனவே முதல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்லின் தகவலை தரவேண்டும். அதில் "B2" என்ற செல்லை கிளிக் செய்தால் போதும்.
Table_Array - இதில் மேற்கண்ட கட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவலை எந்த அட்டவணையில் உள்ள செல்களில் தேட வேண்டும் என்ற தகவலும் மற்றும் எந்த செல்களில் உள்ள விபரங்கள் நமக்கு வேண்டும் என்ற தகவலும் கொடுக்க வேண்டும். அதாவது "B2" செல்லில் உள்ள "Ravi" என்ற மாணவரின் பெயரை அடுத்த அட்டவணையில் உள்ள "B" காளம்(COLUMN) முழுவதும் உள்ள பெயர்களில் தேடவேண்டும். மற்றும் "C2" செல்லில் உள்ள மாணவரின் மதிப்பெண்களை முதல் அட்டவணைக்கு கொண்டுவர வேண்டும். எனவே இந்த கட்டத்தில் இரண்டாவது அட்டவணை சென்று அதில் உள்ள "B" காளம் மற்றும் "C" காளம் முழுவதும் ஒரே கிளிக்(CLICK)-இல் செலக்ட்(SELECT) செய்ய வேண்டும்.
Col_index_num - இதில் எந்த காளத்தில் உள்ள தகவல் நமக்கு கிடைக்கவேண்டுமோ, அந்த காளம் நம்முடைய மூலக்காரணியின்(REFERENCE) காளத்தில் இருந்து எத்தனையாவது காளத்தில் உள்ளது என்பதின் எண்ணிக்கை. அதாவது நமக்கு அட்டவணையில் பெயர் உள்ள "B" காளம் மூலக்காரணி காளம். நமக்கு தகவல் எடுக்க வேண்டிய காளம் "C". எனவே "B" காளத்தில் இருந்து "C" காளத்தை கணக்கிட்டால் 2 வரும். எனவே 2 என்று இதில் நிரப்ப வேண்டும். ஒருவேளை நமக்கு "D" காளத்தில் உள்ள தகவல் தேவைப்பட்டால் 3 என்று எழுத வேண்டும். ஆனால் மேலே உள்ள கட்டத்தில் செலக்ட் செய்யும் போது "D" காளத்தையும் சேர்த்து செலக்ட்(SELECT) செய்யவேண்டும்.
Range_lookup - இதில் இரண்டு தகவல்கள் தான் கொடுக்க முடியும்.
1) மேற்கூறிய தகவல்களை கொண்டு முழுமையான ஒப்பீடு (Exact Match) செய்து தீர்வு வேண்டும் என்றால் "false" என்று நிரப்ப வேண்டும்
2) மேற்கூறிய தகவல்களை கொண்டு ஓரளவு ஒப்பீடு (Approximate Match) செய்து தீர்வு வேண்டும் என்றால் "true" என்று நிரப்ப வேண்டும்
பெரும்பாலும் "false" என்பதையே டைப் செய்யுங்கள். அல்லது "0" என்று டைப் செய்யுங்கள் இதுவும் "false" என்ற அர்த்ததையே தரும்.
மேற்கண்ட நான்கு தகவல்களையும் கொடுத்து விட்டு "OK" என்ற பட்டனை அழுத்தியவுடன் நமக்கு தேவையான தகவல் அந்த செல்லில் பார்முலாவாக தெரியும். அந்த பார்முலாவை அப்படியே காப்பி(COPY) பண்ணி கீழே உள்ள செல்களில் போட வேண்டியது தான். அதை பார்முலாவில் இருந்து வேல்யுவாக(VALUE) மாற்றி விட்டால் நமக்கு தேவையான விபரம் ரெடி.

கதைக்கான தகவல்கள்:
1) ஒவ்வொரு பெயர்களுக்கு நேராக அவர்களின் கடந்த ஆண்டு மதிப்பெண்கள் வந்துவிட்டது.
2) படத்தில் #N/A என்று தெரிவிக்கப்படும் பெயர்கள் இரண்டாவது அட்டவணையில் காணாமல் போனவர்கள்.
இதேப்போல் வெவ்வேறு பைல்களில் உள்ள விபரங்களையும் நமக்கு தேவையான பைல்களுக்கு கொண்டு வர முடியும். நீங்கள் கவனிக்க வேண்டியது இரண்டாவது கட்டம் மற்றும் முன்றாவது கட்டத்தில் நிரப்ப வேண்டிய தகவல்களை தான்.
கீழ்கண்டவற்றை நீங்கள் முடிவு செய்து விட்டால் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.
1) எதை முலக்கரணியாக(REFERENCE) எடுக்க போகிறீர்கள்?
2) எந்த பைல் மற்றும் எந்த காளத்தில் உள்ள உள்ள தகவலை கொண்டு வரவேண்டும் அல்லது ஒப்பீடு செய்யவேண்டும்?
3)முக்கியமாக எந்த காளத்தில் உள்ள தகவலை நாம் விரும்புகின்ற பைல்-க்கு கொண்டு வரவேண்டும்?
சில அடிப்படை விசயங்கள்:
இரண்டு அட்டவணைகளை ஒப்பிடும் போது முலக்காரணியாக(REFERENCE FIELD) வைத்திருக்கும் தகவல் ஆனது இரண்டு பைல்களிலும் ஒரே பார்மட்டில் இருக்க வேண்டும். அதாவது ஒன்று "General" என்றால் அடுத்த பைலின் பார்மட்டும் "General" இல் தான் இருக்க வேண்டும். அல்லது "Text" என்றால் இரண்டும் "Text" தான் இருக்க வேண்டும். ஒன்று "General" என்றும் மற்றொன்று "Text" இல் இருக்க கூடாது.
பார்முலாவில் இருந்து வேல்யுவாக மாற்ற தெரியாதவர்கள், கீழ்கண்டவாறு மாற்றலாம்.
பார்முலாவை காப்பி செய்து விட்டு ரைட்(RIGHT CLICK) கிளிக் செய்து பேஸ்ட் ஸ்பெசல்(PASTE SPECIAL) என்ற கட்டளையை(COMMENT) கிளிக் செய்தால் அதில் கீழ்கண்ட தகவல் பெட்டி வரும். அதில் வேல்யு என்பதை தேர்வு செய்து " " வை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பார்முலா மாறி வேல்யு ஆக காட்சி தரும்.
Copy – Right click – Select ”Paste special” then click “value”
SHORT CUT KEY:
CTRL “C” - ALT, E, S – ALT, V - ENTER

நான் மேலே விவரித்திருப்பது விலுக்கப்பின் விரிவாக்கம் தான். ஹெச்லுக்கப் பற்றி சொல்லவில்லை. ஆனால் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்தால் அதன் விளக்கம் தேவை இருக்காது.
விலுக்கப்(VLOOKUP) இது நீள(VERTICAL) வாக்கில் உள்ள பைல்களில் உபயேகப்படுத்த முடியும். அதாவது அட்டவனையில் உள்ள தகவல் அனைத்தும் நீள(VERTICAL TABLE) வாக்கில் இருக்கும்.
ஹெச்லுக்கப்(HLOOKUP) இது குறுக்கு(HORIZONTAL) வாக்கில் உள்ள பைல்களில் உபயேகப்படுத்த முடியும். அதாவது அட்டவனையில் உள்ள தகவல்(HORIZONTAL TABLE) அனைத்தும் குறுக்கு வாக்கில் இருக்கும்.
குறிப்பு: இதில் பெரிய ராக்கெட் விடுகிற காரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அதை எழுத்து வடிவமாக கொண்டு வந்து விளக்குவதற்கு இவ்வளவு நீளமாக பதிவு ஆகிவிட்டது. அது என்னுடைய எழுத்தின் தவறா? அல்லது எனது புரிதலின் தவறா? என்று நீங்கள் தான் கூற வேண்டும். இதில் நான் எக்ஸல் தெரிந்த அனைவருக்கும் இந்த பார்முலா உபயோக பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விரிவாக எழுதி உள்ளேன். ஏற்கனவே தெரிந்தவர்களுக்கும் என்னால் சில தகவல்களை தர முடியும். SHORT CUT, ERROR போன்ற தகவல்கள். அதில் ஏதேனும் விளக்கங்கள் வேண்டுமானால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்க முயலுவேன். தமிழில் அனைத்து வார்த்தைகளையும் எழுதவில்லை என்று நினைக்க வேண்டாம்..கண்டிப்பாக வரும் பதிவுகளில் களைய முயலுவேன். என்னுடைய நோக்கம் தமிழிலும் எழுத வேண்டும், அனைவரும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்பதே...

7:38 PM
17
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, March 4, 2010
புதிர் விளையாட்டு_குடும்பத்தை காப்பாற்றுங்கள்.
இது ஒரு விளையாட்டு புதிர். இந்த GAME லிங்கை அழுத்தி பார்த்தால் ஒரு வலைத்தளம் வரும். அதில் இந்த விளையாட்டின் பக்கத்தை இணைத்துள்ளேன். அந்த வலைத்தளம் எனது நண்பருடையது. என்னுடைய பிளாக்கில் இந்த SWF பார்மெட்(Format) பைலை என்னால் இணைக்க முடியவில்லை. எனவே தான் எனது நண்பரின் இணைய தளத்தில் இணைக்க வேண்டியதாற்று. தெரிந்தவர்கள் யாரவது பின்னுட்டத்தில் சொன்னால் ரெம்ப மகிழ்ச்சியடைவேன்.
இந்த விளையாட்டின் விதிமுறையை சொல்லிவிடுகிறேன்.
1)இந்த குடும்பத்தை இவர்கள் நிற்கும் பக்கத்தில் இருந்து மறுபக்கம் அழைத்து செல்ல வேண்டும்
2)அரிக்கேன் விளக்கு ரெம்ப முக்கியம். இரவு நேரம் எனவே விளக்கு இல்லாமல் பாதையை கடக்க முடியாது.
3)ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டும் தான் பாதையை கடக்க முடியும்.
4)ஒவ்வொருவரும் பாதையை கடக்க முறையே கீழ்கண்ட நேரத்தை எடுத்து கொள்கிறார்கள்.
வலமிருந்து இடம் அவர்களை A, B, C, D, E, F என்று வைத்து கொள்வோம்.
A - 1 நிமிடம்
B - 3 நிமிடம்
C - 6 நிமிடம்
D - 8 நிமிடம்
E - 12 நிமிடம்
5)இரண்டு பேர் பாதையை கடக்கும் போது, கடக்க அதிக நேரம் எடுத்து கொள்பவரின் நிமிடம் விளையாட்டின் நேரமாக எடுத்து கொள்ளப்படும்.(அதாவது மெதுவாக நடப்பவரின் நேரம்)
6)இது தான் முக்கியமானது. விளக்கு 30 நிமிடம் தான் எரியும். அதன் பிறகு அணைந்து விடும். விளக்கு அணைந்து விட்டால் பாதையை கடக்க முடியாது. எனவே 30 நிமிடத்துக்குள் அனைவரும் பாதையை கடக்க வேண்டும்.
இது விதிமுறையில் கிடையாது. ஆனால் சிறு தகவலுக்காக தருகிறேன். பாதையை கடந்த இருவரில் ஒருவர் தான் விளக்கை எடுத்து சென்று மறுபக்கம் உள்ளவர்களை கூட்டி வரவேண்டும்.
உங்களுடய பதில்களை பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்..பதிலை சரியாக சொல்பவர்களுக்கு நாஞ்சிலானந்தாவின் தரிசனத்துக்கு இலவச டிக்கெட் அனுப்பபடும்.
விளையாட்டின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக சரியான பதில் பின்னூட்டங்களை உடனடியாக பிரசுரிக்க மாட்டேன்.

9:49 PM
20
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
புதிர்,
விளையாட்டு
Wednesday, March 3, 2010
என்றும் நினைப்போம்_தொடர்பதிவு
நான்கு பதிவுகள் கூட ஒழுங்கா எழுதலை அதுக்குள்ள தொடர்பதிவா? என்று நீங்கள் கேட்கனும் என்று நினத்தால் என்னுடைய பின்னுட்டத்தில் அப்படியே கேட்டு விட்டு சிநேகிதன் அக்பரின் பதிவிலும் கேட்டு விடுங்கள் அவர் தான் என்னை அழைத்தது.
கண்டிப்பா நீங்களும் எழுத வேண்டும் என்று நம்ம அக்பர் விரும்பி அழைத்ததால் பதின்ம கால நினைவுகளை நானும் தொடர வேண்டியதாயிற்று.. நான் இந்த பதிவுலகத்தில் கத்துகுட்டிதான் ஏதேனும் தவறுகள் இருந்தால் பின்னுட்டத்தில் கூறுங்கள்..கண்டிப்பாக வருத்தபட மாட்டேன் மகிழ்ச்சியடைவேன்.

எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் எனக்கு மேனிலை வகுப்பில் கணித பாடம் எடுத்த ஆசிரியர். அவர்கள் புத்தகத்தை கொண்டு பாடம் நடத்துவது இல்லை. அப்படியே கரும்பலகையில் இருப்பதை பார்த்து எழுதுவது போல் முழு கணக்கையும் எழுதி விட்டு தான் திரும்புவார். அந்த அளவு திறமை கொண்டவர். அவர்களுடைய வகுப்பிற்கு எவரும் புத்தகம் கொண்டு போககூடாது. அப்படி தவறி யாரவது கொண்டு வந்து அதைப் பார்த்தால் அவ்வளவு தான். அன்று அவனுக்கு அந்தவகுப்பு நேரம் முழுவதும் அர்சனை தான். அனைத்து ஆசிரியர்களை விடவும் அந்த வருடத்தின் பாடத்தை முதலில் முடிப்பவர் இவராகதான் இருப்பார். இவருடைய வாயில் இருந்து வரும் பொன்மொழிகள் நான் படிக்கும் போது ரெம்ப பிரபலம். அவைகளில் சில உங்கள் பார்வைக்கு..
* நீந்தாத மாட்டை தண்ணி கொண்டு போகும்.
* இது இல்ல பிள்ளே வாழ்க்கை..புறக்க கிடக்குது புரட்டாசி.
* பல்லை ரெம்ப காட்டாதே..அப்புறம் ஊரே உன்னை பார்த்து ஒரு நாள் பல்லை காட்டிடும்.
அதன் முழுமையான அர்த்தம் அப்போது எங்களுக்கு புரியவில்லை..இப்போது தான் அதன் முழுமையான் அர்த்தம் புரிகின்றது..
நான் உள்ளுரிலேயே பள்ளி படித்ததால், பெரும்பாலான் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் சரி, கூட படிக்கும் மாணவர்களும் சரி, ஏதொ ஒரு வகையில் தெரிந்தவர்களாக தான் இருப்பார்கள். அதற்காக ஏதோ ஐம்பது பேர் படிக்கும் பள்ளி என்று நினைத்து விட வேண்டாம். ஒவ்வொரு வகுப்பிலும் ஐம்பதில் இருந்து அறுபது மாணவ, மாணவிகள். வகுப்பின் பிரிவுகள் "A" முதல் "F" வரை உண்டு. ஏதொ கொஞ்சம் படிப்பேன். மற்றும் பள்ளியில் நடக்கும் சில போட்டிகளிலும் கலந்து கொள்வேன், பரிசும் வாங்குவேன். எனவே எல்லாருக்கும் என்னுடைய முகம் தெரிந்ததாகவே இருக்கும். பள்ளியில் படிக்கும் போது ஒரு ரவுடியாக வலம் வருவேன். எப்போதும் என்னை சுற்றி நான்கு பேர் இருப்பார்கள். அதுவும் அந்த நான்கு பேரும் வகுப்பில் கடைசி இருக்கையில் இருப்பவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் வகுப்பில் நான் மட்டும் இரண்டாவது இருக்கையில் இருப்பேன். படிப்பதிலும் மாணவர்களில் நான் தான் முதலாவதாக இருப்பேன். ஆனால் வகுப்பில் முதல் மாணவனாக இருக்க மாட்டேன். காரணம் எனக்கு மேல் படிக்கும் இரண்டு மாணவிகள் உண்டு. நமக்கு தான் பொண்ணுங்க கூட போட்டி(நம்மால நினைச்சாலும் முடியாது அதை எப்பிடி சமளிக்கிறது..இப்படிதான்) போட பிடிக்காதா அதுனால விட்டு கொடுத்துடுவேன்.
சொந்த ஊரில் படிப்பதில் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.. நம்மை பற்றிய தகவல்கள் உடனடியாக நமது வீட்டிற்கு தெரியவரும். அதன் கொடுமை தான் பெரிய கொடுமை. நான் முட்டு சந்தில் ஒரத்தில் அதுக்கு போறதில் இருந்து மேடையில் பரிசு வாங்கியது வரை நான் வீட்டில் சொல்லுவதற்கு முன் யாரவது ஒருவர் சொல்லி இருப்பார். அப்படியே தப்பி தவறி வகுப்பறைக்குள் நடக்கும் விசயமாவது வீட்டிற்கு போகாமல் இருக்கும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது. ஏன்னென்றால் என்னுடன் படிக்கும் ஒரு மாணவியின் அம்மாவும், எனது அம்மாவும் பள்ளி தோழிகளாம். நான் பள்ளியில் செய்யும் வேலையை எல்லாம் ஒன்னு விடாம அம்மாகிட்ட சொல்லுறது தான் அந்த பெண்ணின் பொழுதுபோக்கு என்று நினைக்கிறேன். அதோட அம்மா அதை கேட்டு விட்டு அப்படியே விட மாட்டார்கள். ஞாயிறு வரை காத்திருப்பார்கள். காரணம் அன்றி என்னுடைய அம்மா சர்ச்க்கு(Church) வழிபாட்டிற்கு(Mass) தவறாமல் வருவார்கள். அந்த வ்ழிபாட்டிற்கு அந்த மாணவியின் அம்மாவும் வருவார்கள். வழிபாடு முடிந்து என்னுடைய அம்மா வரும் வரை காத்திருந்து என்னை பற்றிய தகவல் அனைத்தையும் சொல்லி விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். என்ன பொழப்புடா? சாமி....சரி பள்ளியில் தான் இந்த பிரச்சனை என்றால் கல்லூரியிலும் இது தொடர்ந்தது. நான் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் தெரிந்தவன் எவனாவது ஒருவன் இருப்பான். ஒரு வேளை நான் கல்லூரி நிறுத்ததில் இறங்க வில்லை என்றால் கூட மாலையில் நான் வீடு வருவதற்குள் அந்த விசயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்து இருக்கும். என்ன கொடுமையடா? சாமி...
இன்னும் ஒரு விசயம், அனைவருக்கும் இதுவும் நடந்து இருக்கும். முதல் முறை மீசையை சவரன் செய்தது. நான் அப்போது பனிரென்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். நம்ம தான் எப்போதும் நான்கு பேருடன் ரவுடிபோல் வலம் வருவதால் ஒரு பெண்ணும் திரும்பி கூட பார்க்காது. ஒரு நாள் காலையில் குளிப்பதற்கு கிளம்புவதற்கு முன் அப்பாவில் குரல் கேட்டு என்ன? என்று அப்பா முன் போய் நின்றேன். அப்பா சவரம் செய்து முடித்திருந்தார். அவர் கையில் புது பிளேடு மாட்ட பட்டு ரேசர் இருந்தது. அவர் என்னிடம் உனக்கு இப்ப தான் மீசை வளர ஆரம்பித்திருக்கிறது. எனவே அதை சவரம் செய்தால் தான் விரைவாக வளரும் என்று சொல்லி விட்டு கையில் ரேசரை கொடுத்தார். பெரிய மீசையின் மீது இருந்த மோகத்தால் கையில் வாங்கி சவரன் செய்து விட்டேன். குளித்து முடித்து பள்ளிக்கு கிளம்பும் போதே அம்மா மற்றும் அக்கா முகத்தில் தெரிந்த சிரிப்பே காட்டி கொடுத்து விட்டது, இன்று பள்ளியின் காமெடி பீஸ் நாம தான் என்று. பள்ளிக்கு போகும் வழியில் ஆரம்பித்தது என்னை பார்த்து சிரிக்க. எந்த பெண் எல்லாம் என்னை பார்த்தால் ஒதுங்கி போகுமோ அவர்கள் கூட என்னை பார்த்து சிரிக்கும் படியாகி விட்டது. சரி பெண்கள் தான் அப்படி என்றால் நம்ம ஆளுங்க சொல்லவே வேண்டாம். மொத்ததில் அன்று முழுவதும் மெகா காமெடி பீஸ் ஆகி போனேன். அதை இப்போது நினைத்தாலும் .....அய்யோ..அய்யோ.. போங்கள்..
நான் பள்ளி படிக்கும் போது எங்கள் வீட்டில் ஒரு உத்தரவு உண்டு. அதாவது பள்ளி விடுமுறை நாட்களில் வெளியில் விளையாடசெல்லவேண்டும் என்றால் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடிக்கவேண்டும். எங்கள் வீட்டில் இருந்து நான்கு மைல் தூரத்தில் எங்களுக்கு ஒரு தென்னந்தோட்டம் இருந்தது. அதில் நூறுக்கும் அதிகமான தென்னை மரங்கள் புதிதாக வைக்கப் பட்டிருந்தன. பெரும்பாலும் அவைகளை பராமரிப்பது தான் எங்களுக்கு கொடுக்கப்படும் வேலையாக இருக்கும். அதில் பங்கு பெறுவது நானும் எனது அண்ணனும். அப்பா தான் எங்களுக்கு சொல்லி தருவார். அந்த தோட்டத்தின் அருகில் ஒரு குளமும் உண்டு. அதில் தான் நாங்கள் குளிப்பது. அந்த தோட்டத்தில் களைகள் வளர்ந்திருந்தால் அவைகளை வெட்டுவது, அவைகளுக்கு உரம் இடுவது மற்றும் ஒவ்வொரு சிறிய தென்னை மரங்களுக்கு இடையில் மிகுந்த இடைவெளி இருக்கும், அந்த இடைவெளிகளில் வாழை மரங்களும் நட்டு பராமரிப்பது போன்ற வேலைகள். தென்னை மரங்கள் வளர வளர அவைகளின் அடிப்பகுதியில் மண் இடுவது வழக்கம். பக்கத்தில் உள்ள குளத்தில் நீர் வற்றினால் அதில் இருந்து மண் எடுத்து மரங்களுக்கு போடுவது போன்ற வேலைகளும் இருக்கும். இந்த வேலைகளை முடித்தால் தான் விளையாட செல்லமுடியும். பொதுவாக தென்னை மரங்கள் நடப்பட்ட நாட்களில் இருந்து ஐந்து வருடம் கழித்து தான் அதில் இருந்து தேங்காய்களை பார்க்கமுடியும். எங்களுடைய தோட்டம் நாங்கள் செய்த உழைப்பின் காரணமாக நான்கு வருடம் ஆறு மாதத்திலேயே தேங்காய் கொடுக்க ஆரம்பித்தது. எங்கள் அனைவருக்கும் ரெம்ப மகிழ்ச்சி. ஆனால் அது ரெம்ப காலம் நீடிக்கவில்லை. அடுத்த வருடமே எனது அக்காவிற்கு திருமணம் நிச்சயம் ஆனது. மற்றும் அப்பா செய்த வியாபாரமும் சிறிது நஷ்டத்தை சந்தித்தது. அதனால் கொஞ்சம் கடனும் ஏற்பட்டது. இதற்கு எல்லாம் தீர்வாய் அந்த தென்னந்தோப்பை விற்க வேண்டியதாயிற்று. எவ்வளவோ முயற்ச்சி செய்தும் எங்கள் அப்பாவால் அந்த சூழ்நிலையை மாற்ற முடியவில்லை. எங்களுடையது எங்களுடையது என்று போட்டி போட்டு நானும் எனது அண்ணனும் உழைத்தோம். அந்த உழைப்பு இன்னொருவருக்கு பயன்படுகிறது. எங்கள் கையை விட்டு அந்த தோட்டம் போன தினம் எனக்கு மறக்கமுடியாத ஒன்று. எனக்கு மட்டும அல்ல, எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தான். அது நாள் முதல் இன்றுவரை எங்கள் வீட்டில் உள்ள எவரும் அந்த தோட்டத்திற்கு அருகில் குளத்திற்கு கூட குளிக்கபோவது இல்லை. அதற்கு தேவையும் இல்லாமல் போனது.
யாரையும் தொடர்பதிவுக்கு அழைக்கும் தகுதி எனக்கு இன்னும் வர வில்லை என்று பெருமையுடன் கூறிவிட்டு இத்துடன் முடித்து கொள்கிறேன்..அப்படியே தொடரனும் என்று யாரவது நினைத்தால் .....அப்படி எல்லாம் நினைக்க கூடாது(நான் என்னை சொன்னேன்)

12:33 AM
12
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
அனுபவம்,
தொடர்பதிவு
Subscribe to:
Posts (Atom)