இன்னும் இரண்டு தினங்களில் சவுதிக்கு போக இருப்பதால், மஸ்கட்டில் ஏதாவது வாங்கலாமா?... என்று கடைக்கடையாக நேற்று சுற்றினோம், மாலையில் ஐந்து மணிக்கு ஆரம்பித்து இரவு பத்து மணி வரைக்கும் சுற்றினோம். என்னுடன் இன்னும் இரண்டு நண்பர்களும் உண்டு. அதில் ஒருவன் என்னுடைய அறைத்தோழன், சொந்த ஊர்காரன், பள்ளியில் ஒன்றாக படித்தவன், இப்போதும் என்னுடன் ஒன்றாக வேலைப்பார்ப்பவன் என்று எனக்காக பல பட்டங்களை சுமப்பவன். இன்னொருவர் என்னுடன் சவுதிக்கு வருபவர்.
ஐந்து மணி நேரம் ஜூஸ் கடையில் இருந்து ஜூவல்லரி கடை வரைக்கும் சுற்றினோம்.. ஆனா கடைசிவரை ஒரு பொருளும் வாங்கவில்லை...
ரெம்ப கடுப்பான என்னுடைய நண்பன், டேய்.. நீங்க இன்னைக்கு ஏதும் வாங்குவது போல எனக்கு தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டே, கடைசியாக நாங்க போன டிரஸ் ஷோருமில் இருந்து ஒரு டீ ஷர்ட்டும், ஜீன்ஸும் எடுத்தான். இங்கேயே இருக்க போறவன் டீ ஷர்ட்டும் ஜீன்ஸும் எடுக்கிறாம், வெளியூர் போற நாம ஏதுமே எடுக்கவில்லையா? என்று வரலாறு நம்மை தப்பா பேசிட கூடாது என்று ஆளுக்கு ஒரு கர்சீப் வங்கிட்டோம் இல்லா?... எப்புடி????????..
இப்படி ஒரு வழியா ஷாப்பிங்(கடையில் பொருள் வாங்கினா தான் ஷாப்பிங் என்று லாஜிக் எல்லாம் பேசபடாது) எல்லாம் முடிச்சிட்டு வீட்டிற்கு வந்தோம். வீட்டில் ஹாலில் அமர்ந்து எங்கள் ஆபிஸின் டிரைவர் கே டீவியில் ஒரு படம் பார்த்து கொண்டிருந்தார். அவர் பெங்களூர் காரர். தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், அரபி என்று பல பாஷை அவருக்கு தெரியும். இருபது வருடங்களாக ஓமனில் இருக்கிறார். நானும் எனது நண்பனும் தினமும் தூங்குவதற்கு முன்னால் ஒரு மணி நேரமாவது பேசிக்கொண்டே டீவி பார்ப்பது வழக்கம். அதில் பெரும்பாலும் படங்களில் இருக்கும் லாஜிக் இல்லாத மேட்டர் தான் விவாதமாக ஓடும்.
நேற்றும் வழக்கம் போல் ஹாலில் "ப" வடிவில் போட பட்டிருக்கும் ஷோபாவில் எதிர்ரெதிரில் போடப்பட்ட ஷோபாவில் நாங்கள் இருவரும் படுத்துக்கொண்டே டீவி பார்க்க தொடங்கினோம். அவர் டீவிக்கு நேர் எதிரில் போடப்பட்ட ஷோபாவில் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தார்.
முதலில் படத்தின் பெயர் எங்கள் இருவருக்கும் தெரியவில்லை, அவரிடமும் கேட்டேன், அவருக்கும் தெரியவில்லை. சரி என்று படத்தை பார்க்க ஆரம்பித்தோம்.. சத்யராஜ் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார். அவருடைய பெயர் அழகேசன் என்று அவரது பாட்டியாக நடத்திருந்த மனோரமா அழைத்ததில் இருந்து அறிந்து கொண்டோம்.
உடனே என்னுடைய நண்பன், டேய் அழகேசன் என்று ஒரு சத்யராஜ் படம் வந்ததை நான் கேள்வி பட்டிருக்கிறேன் என்று கூற, அப்படினா இந்த படம் "அழகேசன்" தான் என்று சொல்லிக்கொண்டே படத்தை பார்க்க ஆரம்பித்தோம்.. விளம்பர இடைவேளையின் போதும் அழகேசன் என்று சொல்லி படத்தின் பெயரை உறுதிப்படுத்தினர்.
சத்யராஜிக்கு மனநிலை சரியில்லாதவராக நடிப்பதற்கு அவரது உடல்கட்டு சுத்தமாக ஒத்துழைக்கவில்லை. பல வசனங்களும், காட்சிகளும் 16 வயதினிலே படத்தை கண் முன் நிறுத்தியது. நாங்கள் இருவரும் படம் பார்க்க ஆரம்பித்தில் இருந்து, ஒவ்வொரு வசனம் வரும் போதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிக்க ஆரம்பித்தோம்..
படத்தில் சத்யராஜை மனநிலை சரியில்லாதவர் என்று சொல்ல வருவார்கள், திடிரென பார்த்தால் அவர் இப்போதைய அரசியல் பற்றியெல்லாம் நன்றாக அறிவுப்பூர்வமாக பேச ஆரம்பித்துவிடுவார். பாட்டெல்லாம் கூட பாடுவார். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் நடக்கும் காமெடிகளை நாங்கள் இருவரும் பார்த்து பார்த்து சிரித்து கொண்டே இருந்தோம். எங்களுடன் ஒருவர் படம் பார்த்து கொண்டிருக்கிறாம் என்பதை நாங்கள் இருவரும் கொஞ்சமும் நினைக்கவே இல்லை.
உச்சகட்ட காமெடியாக ஒரு காட்சியில் ஹீரோயின் சத்யராஜை திருமணம் செய்து கொள்வதாக சொல்லுகிறார். உடனே கேமரா மார்டன் டிரஸ் போட்ட சத்யராஜ் மற்றும் ஹீரோயின், ஒரு நடனக்குழுவுடன் ஆட்டம் போடுவதை காண்பிக்கிறது. இந்த பாடல் ஆரம்பித்தது தான் தாமதம் நாங்கள் இருவரும் ஷோபாவில் இருந்து எழுத்து உக்கார்ந்து சிரிக்க ஆரம்பித்தோம்...
சிரித்துக்கொண்டே திரும்பி பார்த்தால் ஒருவர் கொலைவெறியோடு எங்களை பார்த்துவிட்டு புரியாத பாஷையில் எதோ சொல்லிவிட்டு சானலை மாத்திவிட்டு விர்ர்ரென்று கிளம்பினார்... நமக்கு தமிழையும், இத்துப்போன இங்கிலீஷையும் தவிர வேறு ஏதும் தெரியாதது எவ்வளவு நல்லது.. இல்லைனா?.. அவரு சொன்னது புரிந்திருக்குமே?... :)))))))))))
அந்த படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்க்கும் போதே அது மலையாள கதையாக தான் இருக்கும் என்று நினைத்தேன், அங்கு இருந்து தான் இவர்கள் லவட்டி இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்று காலையில் வந்து கூகிளை தட்டினால் அது உண்மைதான் என்றது. கருமடிகுட்டன்(Karumadikuttan) என்ற மலையாளப்படத்தின் ரிமேக் தான் இது.. இதை மலையாளத்தில் ஒருமுறை கண்டிப்பா பக்கனும்.. இவர்கள் ரிமேக் என்ற பெயரில் எவ்வளவு சொதப்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள.. :))))))
.
.
Wednesday, June 8, 2011
பொழப்பு சிரிப்பா சிரிக்குது..
Posted by
நாடோடி
at
2:28 PM
14
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
அனுபவம்,
நகைச்சுவை,
நண்பர்கள்,
மொக்கை
Subscribe to:
Posts (Atom)