நான் முந்திய இடுகையில் எழுதிய அதிமேதாவிகளும், கெட்ட வார்த்தையால் வாந்தியெடுப்பவர்களும் குடியிருக்கும் கோவில் தமிழ் வலைப்பதிவாளர் குழுமம் என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்..
இதை நீ எப்படி சொல்லாம், உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என "பராசக்தி" பட வக்கீல் கேள்விகள் நிறைய இருக்கும்...
"அதில் நானும் பாதிக்கப்பட்டேன், நேரடியாக தாக்க பட்டேன்" என "பராசக்தி" சிவாஜி வசனம் போல் நானும் பதில் சொல்லுகிறேன்..
இதோ கேளுங்கள் என் கதையை,
பதிவுலகில் கடந்த ஒரு மாதமாக சாந்தி என்ற பெண் பதிவரின் பிரச்சனை எல்லாயிடங்களிலும் எழுதப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..
இந்த பதிவரின் பிரச்சனைக்கு மூலக்காரணம் இந்த தமிழ் பிளாக்கர் போரம் தான். அதில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்ததால் அங்கு நடந்த சில பிரச்சனைகள் எனக்கு தெரியும்...
இந்த பிரச்சனை பற்றி வினவில் ஒரு கட்டுரை வருகிறது. அதை நானும் போய் படிக்கிறேன். அதில் ஒரு பின்னூட்டமும் போடுகிறேன். காரணம் வலைப்பதிவர் போரத்தில் பதிவர் சாந்தி அவர்கள் இருந்த போது அவர்களை "அக்கா" என்று அழைத்தவர்களில் நானும் ஒருவன்..
வினவில் நான் போட்ட பின்னூட்டம் எவரையும் குறிப்பிட்டு போடவில்லை, என்னை நானே பழித்துக் கொண்டேன்..
இரண்டாவது இதே பிரச்சனை பற்றி
முகிலன் அவர்கள் ஒரு பதிவு எழுதுகிறார், அந்த பதிவில் நான் சில பின்னூட்டங்கள் போடுகிறேன். இதில் நான் முகிலனிடம் சில கேள்விகள் வைக்கிறேன். அவரை தரக்குறைவாக அதில் ஒரு வார்த்தை கூட நான் உபயோகப் படுத்தவில்லை. அதில் சில கேள்விகளுக்கு பதில் சொன்னார், சில கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை, உடனே நானும் அவரிடம் நன்றி சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்.. அவரும் அந்த பதிவில் அதன் பிறகு வேறு எந்த கேள்வியும் எனக்கு வைக்கவில்லை, நானும் அதை மறந்துவிட்டேன்..
உண்மையில் என்னுடைய பதிவை படிப்பவர்களுக்கு தெரியும், நான் இதுவைரையில் எந்தவொரு விவாதங்களிலும் கலந்து கொள்வதும் கிடையாது, எவருடைய தளத்திலும் கும்மி அடிப்பதும் கிடையாது...
அப்படியிருக்கும் போது முகிலனிடம் மட்டும் நான் விவாதம் செய்தமைக்கு காரணம், என்னுடைய சில பதிவுகளில் அவரும் வந்து விவாதம் செய்திருக்கிறார், நானும் அவருடைய விவாதங்களுக்கு பதிலும் சொல்லியிருக்கிறேன். அந்த உரிமையில் தான் அவரிடம் சென்று அன்றைக்கு கேள்விகள் வைத்தேன். இல்லையென்றால் கண்டிப்பாக அவரிடம் நான் கேள்விகள் வைத்திருக்க மாட்டேன்.
பதிவர் சாந்தி அவர்களின் பிரச்சனை முகிலன் மட்டும் சம்பந்த பட்டது அல்ல, அது இரும்புத்திரை அரவிந்த், மற்றும் பதிவர் மதார் அவர்களும் சம்பந்த பட்டது என்பதும் எனக்கு தெரியும், ஆனால் அரவிந்த் மற்றும் மதார் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள், அவர்களுடைய தளத்தில் நான் சென்று ஒரு பின்னூட்டம் போட்டது கூட கிடையாது, அவர்களும் என்னுடைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டது கிடையாது... எனவே அவர்களை பற்றிய புரிதல் எனக்கு இல்லாததால் எந்தவொரு இடத்திலும் இவர்களை பற்றி நான் பேசியது கிடையாது..
இது இப்படி இருக்க, முகிலன் பதிவு எழுதி ஒரு வாரங்கள் கழித்து தமிழ் வலைப்பதிவர் போரத்தில் திடிரென ஒரு பஸ்ஸின் முகவரியை பகிருகிறார். அந்த முகவரியை சென்று பார்த்தால் நான் ஒரு மாததிற்கு முன்பு எழுதிய காமெடி பதிவில் ஒரு அடைப்பு குறியில் எழுதிய வாசகத்தை மட்டும் எடுத்து போட்டுவிட்டு
http://www.google.com/buzz"இது ஆணாதிக்கமாக தெரியவில்லையா" என்று கேள்வி வைக்கிறார்..
இதை பார்த்த பின்புதான் எனக்கு தெரிந்தது உண்மையில் முகிலன் என் மீது வன்மம் வைத்திருக்கிறார் என்று, காரணம் மேலே சொல்லப்பட்ட பதிவை நான் எழுதிய நாளில் வந்து என்னுடைய பேச்சிலர் வாழ்க்கையை நினைவு படுத்தி விட்டீர்கள் என்று சொல்லிவிட்டு போனவர் அப்படியே இரண்டு வாரங்களில் மாறிப்போனார்..
அந்த பஸ்ஸின் லிங்க் போரத்தில் போடப்படவுடன் அதற்கும் சில அதிமேதாவிகள் வந்து கும்மி அடிக்கிறார்கள். நான் கடைசியில் சிரித்துவிட்டு வந்தேன்..
இந்த கும்மி நடக்கும் போது தான் சிரிப்பு போலிஸ் (ரமேஷ்) போரத்தில் ஒரு இழையை ஆரம்பித்து "போரமா?.. போர் நடக்கிற இடமா?.." என்று ஒரு கேள்வி வைத்து சில கருத்துக்களை வைக்கிறார்.. ஆனால் அந்த கருத்துகளும் அதிமேதாவிகளால் எள்ளி நகையாடப்படுகின்றது.. அதை அவருடைய பதிவில் பார்த்தால் உங்களுக்கு புரியும்..
இது இப்படி இருக்க..
இரண்டு நாட்கள் முன்னால் முகிலன் பஸ்ஸில் இருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து வந்து போரத்தில் ஒரு புது இழையை தொடங்குகிறார். அதுவும் என்னுடைய பெயர் போட்டு ஒரு கேள்வியும் வைக்கிறார். அந்த ஸ்கிரீன் ஷாட் பதிவர் சாந்தியின் பஸ் முகவரியுடையது. அதில் தலையும் வாலும் புரியாமல் சில வாசகங்கள் இருக்கிறது.. அதை பற்றி நான் கருத்து சொல்ல வேண்டுமாம்? என்னவொரு கொடுமை?.. உலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் என்னிடம் கருத்து கேட்பார்கள் போல் இருக்கிறது...
ஒரு பிரச்சனையை பற்றி கேள்வி கேட்டால் அந்த பிரச்சனைக்கு பதில் சொல்லாமல், வேறோரு பிரச்சனையை காட்டி அதற்கு ஏன் நீ கேள்வி கேட்கவில்லையென்று என்னிடம் கேட்கிறார்கள்?.. என்ன பதில் சொல்வது?.. (கேள்வி கேட்பதற்கு கூட உரிமை கிடையாது, அதுவும் மேதாவிகள் தான் முடிவு செய்வார்களாம்.. என்ன கொடுமை சார் இது..)
பரவாயில்லை..
முகிலனின் கேள்விக்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
இரும்புத்திரை அரவிந்த் தங்கிலிஷ் என்ற வாளால் சுழற்றுகிறார்... (வாந்தியெடுக்கிறார்)
அவை உங்கள் பார்வைக்கு,
From: aravind
Date: 2010/10/11
ayya sombu thooki stephen
ellorum pesi thaane ellaam seireenga appuram enna.ini engayaavathu ponnunu vantha sombu thooki raasa appuram irukku
unnai pathi evandaa eluthinaan paadu..
vaa unakku venumnaa vanthu kuni
ini engayaavathu pesu pinja seruppaalaye unnai adikkirendaa paadu
en naan address thanthaa en veettukku vanthu sombu thookuviyaadaa badu
endaa unakkum oru thadavai sonna puriyaathaa.address thaa.neengalum aal vaichu thaane kosham poduveenga.athe paaniyil un sombai naan udaikiren.ithaiyum anga poi solli alu.
saridaa sombu thooki..ini engavaathu pombalaikku aatharavaa pesathe.nee pathilukku ethai ethirpaakkuranu theriyala(இந்த வார்த்தைகளை தமிழ்ப்படுத்த கூட எனக்கு விருப்பம் இல்லை, அவ்வளவு வக்கிரங்களும், ஆபாசமும் இருக்கிறது, படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்)
அரவிந்த் சுழற்றிய வாளில் வழியும் குருதியை ரசிக்கிறார்,
சொல்லத் துடிக்குது மனசு மதார்.. அவை உங்கள் பார்வைக்கு,
மதார் பட்டாணி to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)
@முகிலன் ,
அவர் பேசட்டும் விடுங்க என்னால பேச முடியல .இவ்ளோ கீழ்த்தரமா பேசிட்டு . தப்பா பேசினதுக்கு எங்கே ஆதாரம் என்று கேட்டாங்களே இதுக்கு மேல தப்பா எங்கேயும் பேச முடியும் ? வாள் சுழற்ற அடித்தளம் அமைத்த
முகிலன் இப்போது மன்னிப்பு கேட்டு சுபம் போடுகிறார்..
அதுவும் உங்கள் பார்வைக்கு,
Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)
Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அதே தான் மணிஜி. இந்த இழையை ஆரம்பித்ததற்காக நான் குழும உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மாடரேட்டர் இத்திரியை நீக்கிவிட்டால் மகிழ்வேன்.
என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,
Dhinesh Kumararaman(முகிலன்) சொல்ல மறந்திட்டேன் இவ்வாறு ஒருவர் வாந்தியெடுத்து கொண்டிருக்கும் போது முகிலன் கண்டிக்கிறார், அதை சொல்லாமல் விட்டுவிட்டால் சாமி குத்தம் ஆகிடும்.
அதுவும் உங்கள் பார்வைக்கு,
Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)
Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அரவிந்த், ப்ளீஸ், தகாத வார்த்தைகள் இங்கே வேண்டாம். உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகள் நம் கோபத்தில் உள்ள நியாயத்தை மறைத்துவிடும். இவ்வளவு அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி என்னை ஒருவர் திட்டுகிறார், போரத்தில் இருக்கும் எவர் ஒருவரும் அரவிந்தை தடுத்து நிறுத்தவில்லை..
இந்த பிரச்சனையில் மனமுடைந்த நான் என்னுடைய தரப்பு நியாயங்களை(யாருக்கு வேணும்?..) எழுதி போரத்தில் புது இழையில் போடுகிறேன், தீர்வு சொல்லுங்கள் என்று..
இந்த இழையிலும் எவர் ஒருவரும் அரவிந்துக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்யவில்லை, மாறாக சில மேதாவிகள் மீண்டும் வாந்தியெடுத்தார்கள், சில அதிமேதாவிகள் மறப்போம், மன்னிப்போம் என்றார்கள், அதைவிட சில மெகா மேதாவிகள் கெட்ட வார்த்தையை கண்டுபிடித்தவனை தான் கண்டிக்க வேண்டும் என்று சொன்னார்கள்... என்னவொரு நியாமான வார்த்தைகள்... காரணம் நமக்கு ஆதரவாக பேசத்தான் குழுக்கள் கிடையாதே?..
மேலே சொல்லப்பட்ட இரண்டு இழையின் முழுவிபரங்களையும் என்னுடைய பஸ் முகவரியில் ஏற்றியுள்ளேன், விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்..
http://www.google.com/profiles/101916289514179757488#buzzமேலே நடந்த விவாதத்தில் எனது மனசாட்சி கேட்ட சில கேள்விகள்..
1) நான் யாருக்கு பின்னூட்டம் போட வேண்டும் என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்?..
2) எந்தெந்த விவாதங்களுக்கும், பதிவுகளுக்கும் நான் கருத்து சொல்ல வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? ..
3) உலகில் நடக்கும் பிரச்சனை எல்லாவற்றிற்கும் நான் கருத்து சொல்ல வேண்டும் என தீர்மானிக்க நீங்கள் யார்?
4) ஒரு பதிவில் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அதை உங்களுக்கு சாதகமான இடங்களில் கொண்டு போய் விவாதிப்பதின் மர்மம் என்ன?..
5) இந்த பிரச்சனையில் எனக்கும் முகிலனுக்கும் தான் விவாதம், ஆனால் சம்பந்தம் இல்லாம் ஆஜராக கெட்ட வார்த்தையால் வாந்தியெடுப்பதன் நோக்கம் என்ன?..
6) உண்மையில் விவாதம் செய்ய விருப்பம் இருந்தால் தாரளமாக நாகரீகமாக வைக்கலாமே!!.. அதை விட்டுவிட்டு அசிங்கமாக பேசுவதன் நோக்கம் என்ன?.. ஒருவேளை நானும் தவறாக பேசிவிட்டால் அதை வைத்து கம்பு சுத்தலாம் என்பதுதான் உங்கள் நோக்கமா?..
இப்போது நீங்கள் என்னுடைய முந்தைய பதிவை படித்தீர்கள் என்றால் ஒவ்வொரு வார்த்தைக்கும் விடை கிடைக்கும்..
1) இந்த பிரச்சனையை இங்கு எழுதுவதற்கு காரணம், தமிழ் வலைப்பதிவர் போரத்தில் என்ன ந்டக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் தான்..
2) குழு அரசியல் எந்த அளவு பதிவுலகத்தில் வேருன்றி இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும் என்பதும்..
3) புதிதாக வருபவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு மன உளைச்சல் அடையக் கூடாது என்பதும்..
4) இந்த பதிவை எழுதுவதற்கு காரணம் உங்களிடம் சொல்லி அனுதாபம் வாங்க வேண்டும் என்று துளியும் எனக்கு விருப்பம் கிடையாது. எனது நட்புகள் சிலர் இதை நீங்கள் வெளியில் சொன்னால் தான் மேலும் எவரும் இது போல் பிரச்சனையில் மாட்டாமல் இருப்பார்கள் என்று கேட்டதாலும்..
குறிப்பு: இணைய உலகில் என்னைப் போல உலகம் சுற்றும் தமிழர்களுக்கு சொந்த நாட்டின் நினைவோடு இளைப்பாறுதல் என்பது மகிழ்ச்சியான விசயம். இது எனக்கு மட்டுமல்ல ஊரில் இருக்கும் என் குடும்பத்தாருக்கும் கூட ஒரு இனிய இணைப்பாக விளங்குகிறது. ஆனால் இத்தனை நாட்கள் பதிவுலகில் மென்மையான சுபாவத்தோடு மரியாதையோடும் செயல்படும் என்னை தமிழ் வலைப்பதிவாளர் குழுமத்தில் இருக்கும் சில கடிநாய்கள் கடித்து குதறியிருக்கின்றன.
நாட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் அதில் நான் தலையிடவேண்டுமென்று விரும்பினால் தலையிடுகிறேன். அதுதான் இந்த அநாகரீக மனிதர்களுக்கு பிடிக்கவில்லை. இணையம் என்பது நிழல் உலகம் என்பதால் கணிப்பொறியின் முன் ஊளையிடுகிறார்கள். இதுவே எங்கள் கிராமத்து பக்கம் நடந்திருந்தால் நடப்பது வேறு. இந்த கோழைகள் எவரும் நேரில் பேசுவதற்கு வரமாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆயினும் இவர்களை உரிய நேரத்தில் உரிய முறையில் என்றாவது ஒரு நாள் நேரில் எதிர்கொள்வேன்.
என்னை தாகாத வார்த்தைகளால் குழுமத்தில் அரவிந்தும் அவரது அடிப்பொடிகளும் கடித்த போது ஓரிருவரைத் தவிர எவரும் அதை கண்டிக்க வரவில்லை. எனவே கடித்தவர்களை விட அதை வேடிக்கை பார்த்து இரசிக்கும் அநாகரிகத்தையும் குழுமத்தில் கண்டேன். இத்தகையவர்களுடன் இவ்வளவு நாட்கள் நானும் குழுமத்தில் இருந்தேன் எனபதை நினைத்து பார்த்தால் குற்ற உணர்வாக இருக்கிறது.
கொள்கைக்காக ஒரு குழுவில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் என் குழுவைச் சேர்ந்தவனை நீ ஆதரிக்க வில்லை என்று இவர்கள் என்னைக் குறிவைக்கிறார்கள். இதையே தொடர்ந்து பதிவுகளாலும், விவாதங்களாலும் செய்து வருகிறார்கள். இந்த மன விகாரம் படைத்தவர்களை எழுதியே பேசியோ விவாதித்தோ திருத்த முடியாது என்பது எனது அனுபவம். என்ன செய்யலாம் என்பதை நண்பர்களிடம் கேட்கிறேன்.
இந்த விசயகங்களினால் நான் வருந்தினேன். ஆனால் அஞ்சவில்லை. கீ போர்டில் எழுதவதைத்தாண்டி வேறு ஒன்றும் உடனடியாக செய்ய முடியவில்லை என்ற கவலை எனக்கு உண்டு. இந்த சாக்கடை அனுபவத்திலிருந்து இந்த சாக்கடையை எழுத்துக்களால் உற்பத்தி செய்யும் மனித விலங்குகளை நாம் என்றைக்கு வெளியேற்றுகிறோமோ அன்றுதான் இணையம் உற்சாகமானதாக இருக்குமென்று தோன்றுகிறது. அந்த சுத்தப்படுத்தும் வேலையை நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து செய்வேன்.
ஏற்கனவே தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உள்ள கொடுமைகள் தாங்காமல் வெளியேறியவர்களும் அவர்களின் பதிவுகளும்.
1)
கே.ஆர்.பி.செந்தில் அண்ணன்2)
சிரிப்பு போலிஸ் ரமேஷ்நானும் இன்றில் இருந்து தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் இருந்து விலவி விட்டேன், அதன் மாடரேட்டர் கேபிள் சங்கர் அவர்களுக்கு மெயில் அனுப்பி விட்டேன்.. தயவு செய்து என்னை நீக்கி விடுங்கள் என்று இதன் மூலமும் தெரிவித்து கொள்கிறேன்.