Tuesday, May 25, 2010

உல‌க‌ம் அறியா பிள்ளை

காலை நால‌ரை ம‌ணிக்கு அலார‌ம் அடித்த‌து. சித்தியும், சித்த‌ப்பாவும் த‌ன‌து ப‌டுக்கையில் இருந்து எழுந்தார்க‌ள். அலார‌த்தின் ஒலி கீச்சு குர‌லில் கோர‌மாக‌ இருந்த‌து. என‌க்கும் அத‌ற்கு மேல் தூக்க‌ம் வ‌ர‌வில்லை. காலையில் விழிப்பு முழுவ‌தும் வ‌ந்துவிட்டால் திரும்ப‌ எப்ப‌டித்தான் க‌ண்க‌ள் மூடினாலும் என‌க்கு தூக்க‌ம் வ‌ருவ‌தில்லை. நானும் ப‌டுக்கையில் இருந்து எழுந்து மாடிப்ப‌டியில் போய் உக்கார்ந்து கொண்டேன்.

என்ன ர‌வி தூக்க‌ம் வ‌ர‌லியா? "எதுக்கு இவ்வ‌ள‌வு சீக்க‌ர‌மாய் நீயும் எழுந்துவிட்டாய். நீ ப‌டுத்து தூங்கு" என்று சித்தி என்னிட‌ம் சொன்னார்க‌ள். இல்ல‌ சித்தி என‌க்கு தூக்க‌ம் அவ்வ‌ள‌வுதான். எதுக்கு சித்தி இவ்வ‌ள‌வு சீக்கிர‌மாய் எழுந்து விட்டீர்க‌ள் என்று கேட்டேன். நாங்க‌ள் இருவ‌ரும் தின‌மும் இவ்வ‌ள‌வு சீக்கிர‌மாய் எழுந்து வேலை செய்தால் தான் ஒன்ப‌து ம‌ணிக்குள்ள‌ எல்லா வேலையும் முடியும் என்று ப‌தில் சொல்லிவிட்டு கிச்ச‌னை நோக்கி ந‌ட‌ந்தார்க‌ள் சித்தி.

சித்த‌ப்பா தின்னையில் நிறுத்தி வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ சைக்கிளை எடுத்து, வெளியில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் வ‌ந்தார். சித்தி கையில் வைத்திருந்த‌ க‌யிறால் சேர்த்து க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இர‌ண்டு கேன்க‌ளை வாங்கி கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்று, நிறுத்தி வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ சைக்கிளில் உள்ள‌ கேரிய‌ரில் மாட்டிக் கொண்டு சைக்கிள் ஸ்டேண்டை த‌ட்டிவிட்டு கிள‌ம்பினார். நான் சித்தியிட‌ம் "விஜ‌யை எழுப்பி த‌ண்ணி எடுத்து வ‌ர‌ சொல்லா கூடாதா?" என்று கேட்டேன்.

நீ வேற‌ ர‌வி.. அதுவே ஒரு த‌த்தி. அது எங்க‌ போய் த‌ண்ணி எடுத்து வ‌ர போகுது‌, ஆளுதான் ப‌னைம‌ர‌ம் போல் வ‌ள‌ர்ந்து இருக்கானே த‌விர‌ செய‌லில் ஒண்ணும் இருக்காது என்று சொல்லி கொண்டே நேற்று ராத்திரி சாப்பிட்ட‌ பாத்திர‌ங்க‌ளை க‌ழுவ‌த்தொட‌ங்கினார் சித்தி.

சிறிது நேர‌த்தில் வீட்டிற்குள் வ‌ந்த‌‌ சித்த‌ப்பா அந்த‌ இர‌ண்டு கேன்க‌ளில் உள்ள‌ த‌ண்ணீரை கிச்ச‌னில் உள்ள‌ குட‌ங்க‌ளில் நிர‌ப்பினார். பின்பு சித்தி க‌ழுவி வைத்த‌ ஒரு வாய் அக‌ன்ற‌ பாத்திர‌த்தை கையில் எடுத்து அதில் செல்ப்பில் இருந்த‌ கோதுமை மாவை எடுத்து கொட்டி ச‌ப்பாத்தி மாவு பிசைய‌ தொட‌ங்கினார்.

சித்தி பாத்திர‌ங்க‌ளை எல்லாம் க‌ழுவி முடித்துவிட்டு, ரைஸ் குக்க‌ரை எடுத்து அதில் நான்கு க‌ப் அரிசி போட்டு அத‌ற்கு தேவையான‌ த‌ண்ணீரை ஊற்றி ஸ்ட‌வ்வின் ஒரு அடுப்பை ப‌ற்ற‌வைத்தார். ம‌ற்றொரு அடுப்பில் சாம்பாருக்கு தேவையான‌ ப‌ருப்பை போட்டு மூடிவைத்தார்.

சித்த‌ப்பா மாவை பிசைந்து சின்ன சின்ன‌ உருண்டையாக‌ உருட்டி வைத்துவிட்டார். கிச்ச‌னில் உள்ள‌ த‌ரையில் அழ‌காக‌ ம‌ண்டிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு பூரிக‌ட்டையால் அவ்வ‌ள‌வு உருண்டையையும் ப‌தினைந்த்து நிமிட‌த்தில் ச‌ப்பாத்தியாக‌ விரித்து ஒரு பாத்திர‌த்தில் அடுக்கி விட்டு எழுந்தார்.

சித்தி குக்க‌ரில் இருந்து விசில் ச‌த்த‌ம் வ‌ருவ‌த‌ற்குள் பெட்ரூம்க்குள் சென்று ஆங்காங்கே சித‌றி கிட‌ந்த‌ அழுக்கு துணிக‌ளை எல்லாம் எடுத்து வ‌ந்து பாத்ரூமில் உள்ள‌ ஒர் பெரிய‌ ப‌க்கெட்டில் ஏரிய‌ல் ப‌வுடைரை த‌ட்டி த‌ண்ணீர் பிடித்து அதில் எல்லா துணிக‌ளையும் ஊற‌ வைத்தார். என்னிட‌ம் வ‌ந்து "ர‌வி உன‌க்கு ஏதாவ‌து துணி துவைக்க‌ வேண்டுமா? என்று கேட்டார். இல்ல‌ சித்தி என்னுடையதை நானே துவைத்து கொள்வேன் என்றேன்.

சித்த‌ப்பா ச‌ப்பாத்தி உருட்டும் வேலையை முடித்துவிட்டு சாம்பாருக்கு தேவையான‌ காய்க‌ளை வெட்ட‌ தொட‌ங்கினார். அதையும் முடித்துவிட்டு பொரிய‌ல் ப‌ண்ணுவ‌த‌ற்கு கேர‌ட்டை எடுத்து சீவ‌ தொட‌ங்கினார்.

அடுப்பில் இருந்து விசில் ச‌த்த‌ம் வ‌ர‌வே சித்தி கிச்ச‌னில் சென்று ரைஸ்குக்க‌ரை அடுப்பில் இருந்து கீழே இற‌க்கிவிட்டு மில்க் குக்க‌ரை அடுப்பில் வைத்து பிரிஜில் இருந்து பால் பாக்க‌ட்டை எடுத்து அதை க‌த்தியால் உடைத்து குக்க‌ரில் ஊற்றினார். ம‌ணி ஆறு ஆகியிருந்த‌து. சித்த‌ப்பாவிட‌ம் சித்தி அடுப்பை பார்த்து கொள்ள‌ சொல்லிவிட்டு, மாடிப்ப‌டியின் அடியில் இருந்த‌ கோல‌மாவை ஒரு கையிலில் எடுத்து கொண்டு ம‌றுகையில் ஒரு ப‌க்கெட் த‌ண்ணியையும் கொண்டு வீட்டு வாச‌லுக்கு சென்றார்.

சித்த‌ப்பா இப்போது காய்க‌றிக‌ள் ந‌றுக்கி முடித்துவிட்டு அடுப்பில் இருந்த‌ ப‌ருப்பை இற‌க்கி அதில் காய்க‌றிக‌ள் க‌ல‌ந்து, சாம்பார்பொடியையும் சேர்த்து திரும்ப‌வும் அடுப்பில் கொதிக்க‌ வைத்தார். அத‌ற்குள் கோல‌ம் போட்டு முடித்துவிட்டு வீட்டிற்குள் வ‌ந்தார் சித்தி.

சித்தி சித்த‌ப்பாவிட‌ம்" ஏங்க‌ ப‌ச‌ங்க‌ளை போய் எழுப்புங்க‌... நீங்க‌ ச‌த்த‌ம் போட்டால் தான் எழும்புவார்க‌ள், நான் கூப்பிட்டா எழுந்திரிக்க‌ மாட்ட‌னுங்க‌" என்று சொன்னார். சித்த‌ப்பா மாடிப் ப‌டி ஏறி த‌லைமூடி ப‌டுத்திருந்த‌ மூன்று பேரை எழுப்பினார்க‌ள்.

மேலே நான் சித்தி என்று சொல்லியிருப்ப‌து என்னுடைய‌ அம்மாவின் த‌ங்கை. இவ‌ர்க‌ள் இருப்ப‌து க‌ட‌லூரில். சித்திக்கு வீட்டின் ப‌க்க‌த்தில் உள்ள‌ காண்வெண்ட் ப‌ள்ளியில் ஆசிரிய‌ர் வேலை. சித்த‌ப்பாவும் ப‌க்க‌த்து ஊரில் ஒரு ம‌ளிகை க‌டை ந‌ட‌த்தி வ‌ருகிறார். சித்திக்கு மூன்று பைய‌ன்க‌ள். மூத்த‌வ‌ன் விஜ‌ய், க‌ணிப்பொறி பிரிவில் இன்சினிய‌ரிங் முடித்துவிட்டு க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ பாண்டிச்சேரியில் உள்ள‌ ஒரு த‌னியார் க‌ம்பெனியில் வேலை பார்க்கிறான். பெரிய‌ ச‌ம்ப‌ள‌ம் எதுவும் வ‌ருவ‌து இல்லை. தின‌மும் வீட்டில் இருந்து தான் வேலைக்கு செல்வான்.

நான் அடிக்க‌டி சித்தியிட‌ம் சொல்லுவ‌து விஜ‌யை வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை தேட‌ சொல்லுங்க‌ள் என்று. ஆனால் சித்தி சொல்வ‌து " நீ வ‌ள‌ந்த‌ வித‌ம் வேறு, அவ‌னை நாங்க‌ள் வ‌ள‌ர்த்திருப்ப‌து வேறு, த‌ன்னுடைய‌ வேலைக‌ளை கூட‌ அவ‌னுக்கு செய்ய‌ தெரியாது, இவ‌ன் எப்ப‌டி வெளியில் த‌னியாக‌ இருப்பான் அது ம‌ட்டும‌ல்லாது, அவ‌னை பிரிந்து நாங்க‌ள் ஒரு நாட்க‌ள் கூட‌ த‌னியாக‌ இருந்த‌து கிடையாது" என்பார்.

இர‌ண்டாவ‌து ராபின். அவ‌ன் இந்த‌ வ‌ருட‌ம் க‌லை க‌ல்லூரியில் பி.ஏ ஆங்கில‌ இல‌க்கிய‌ம் இர‌ண்டாம் ஆண்டு ப‌டிக்கின்றான். இளைய‌வ‌ன் சிரில் பிள்ஸ் ஒன் ப‌டிக்கிறான். நான் சென்னையில் ஒரு கெமிக்க‌ல் க‌ம்பெனியில் மார்கெட்டிங்க் பிரிவில் வேலையில் இருக்கிறேன். க‌ட‌லூர் தொழிற்ப்பேட்டையில் ப‌ல‌ கெமிக்க‌ல் தொழிற்சாலைக‌ள் இருப்ப‌தால், ப‌ணியின் நிமித்த‌ம் க‌ட‌லூருக்கு வ‌ருவேன். வ‌ரும் போது ஒவ்வொரு முறையும் ஹோட்ட‌லில் தான் த‌ங்குவேன். சித்தி அடிக்க‌டி என்னிட‌ம் பேசும் போது வீட்டிற்கு அழைப்பார்க‌ள். என‌வே இந்த‌ முறை நான் வ‌ந்த‌ போது சித்தி வீட்டில் த‌ங்கினேன்.

ம‌ணி ஏழான‌து. மாடியில் இருந்து ஒவ்வொருத்த‌னாக‌ வெளியில் வ‌ந்தான்க‌ள். முத‌லில் இளைய‌வ‌ன் சிரில், ஏம்மா ம‌ணி ஏழு ஆகி போச்சா? "இன்னைக்கு ஏழு முப்ப‌துக்கு ஸ்கூல் ப‌ஸ் வ‌ந்துவிடும் நான் கிள‌ம்ப‌ வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு அரை ம‌ணி நேர‌த்தில் பாத்ரூம், காக்கா குளிய‌ல், சாப்பாடு, கிள‌ம்புத‌ல். எப்ப‌டித்தான் முடிகிற‌தோ? அவ‌ன் ரெடி. கையில் சாப்பாடு பையுட‌ன். ச‌ட்டையில் டையுட‌னும்.

மூத்த‌வ‌ன் விஜ‌ய், ஆள் பார்ப‌த‌ற்கு என்னுடைய‌ அண்ண‌ன் போல் இருப்பான், ந‌டிக‌ர் பிர‌புவின் தோற்ற‌ம், செய்கையில் ந‌டிக‌ர் உசிலைம‌ணி. அவ்வ‌ள‌வு சுறுசுறுப்பு. ராபின் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரை விட‌வும் கொஞ்ச‌ம் வித்தியாச‌ம். காலை வெயில் ம‌ண்டையில் சுர் என்று அடிக்கிற‌து. அந்த‌ நேர‌த்தில் மொட்டை மாடியில் உட‌ற்ப‌யிற்ச்சி.

சித்தி இவ‌னுங்க‌ மூன்று பேருக்கும் தேவையான‌ ம‌திய‌ சாப்பாட்டை டிப‌ன்பாக்ஸில் க‌ட்டி வைத்து விட்டு, சித்த‌ப்பாவிட‌ம் ச‌ப்பாத்தியை தோசைக‌ல்லில் சுடும் வேலையை கொடுத்துவிட்டு துணிக‌ளை துவைக்க‌ கிள‌ம்பி விட்டார்க‌ள். ஏழ‌ரை ம‌ணிக்கு துணி துவைக்க ஆர‌ம்பித்த‌து, இந்த‌ மூன்று பேரின் உள்ளாடைக‌ள் வ‌ரை சித்திதான் துவைத்தார்க‌ள். இடையிடையே ஒவ்வொருத்த‌னும் குளித்துவிட்டு தான் அணிந்திருந்த‌ துணிக‌ளை வேறு சித்தியிட‌ம் தூக்கி எறிந்து விட்டு சென்றான்க‌ள்.

ம‌ணி எட்டு முப்ப‌து ஆகியிருந்த‌து. சித்தி துணிக‌ளை எல்லாம் துவைத்து முடிந்து இப்போது குளிக்க‌ தாயார‌னார். ஒன்ப‌து ம‌ணிக்குள் ப‌ள்ளியில் இருக்க‌ வேண்டும். சித்தியின் கான்வெண்ட் ப‌ள்ளி வீட்டில் இருந்து ஐந்து நிமிட‌ ந‌டை தூர‌ம் தான். அடுத்த‌ ப‌த்து நிமிட‌ங்க‌ளில் சித்தியும் ரெடி, நின்று கொண்டே சாப்பாடு, வீட்டில் பெட்ரூமில் இருந்து பையை எடுத்து கொண்டு வெளியில் கிள‌ம்பும் போதே சேலையின் த‌ல‌ப்புக‌ளை ச‌ரிசெய்த‌ல்...அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ஓட்ட‌மும் ந‌டையும்...

மேற்க‌ண்ட‌ நிக‌ழ்ச்சி இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன்னால் நான் க‌ட‌லூர் போயிருந்த‌ போது என‌து சித்தி வீட்டில் ந‌ட‌ந்த‌ அன்றாட‌ நிக‌ழ்வுதான். ஆனால் அந்த‌ நிக‌ழ்ச்சியை இன்றைக்கு அசை போட‌ வைத்த‌த‌ற்கு கார‌ண‌ம் என‌க்கு எங்க‌ள் வீட்டில் இருந்து காலையில் வ‌ந்த‌ போன் கால் தான். போனில் அம்மாதான் பேசினார்க‌ள்.

சித்தியின் மூத்த‌ பைய‌ன், அதாங்க‌ விஜ‌ய் நேற்று காலையில் வ‌ழ‌க்க‌ம் போல் வேலைக்கு போனாவ‌ன் திரும்பி வ‌ர‌வே இல்லையாம். அவ‌னுடைய‌ ஆபிஸுக்கு போன் போட்டு கேட்டால் அவ‌ன் ஆபிஸுக்கு வ‌ரேவே இல்லை என்று சொன்னார்க‌ளாம். அவ‌னுடைய‌ ந‌ண்ப‌ன் ஒருவ‌னுக்கு போன் போட்டு கேட்டால் "விஜ‌ய் கொஞ்ச‌ம் நாட்க‌ளாய் ஒரு பெண்ணிட‌ம் பேசி கொண்டிருந்தான். இன்றைக்கு அவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து கொண்டார்க‌ள். ஆனால் எங்கு போனார்க‌ள் என்று என‌க்கு தெரியாது" என்று சொல்லியிருக்கிறான். அதைகேட்டு சித்தி ஒரு மூலையில் உக்காந்த‌வ‌ர்க‌ள் இன்னும் எழ‌வில்லையாம்.. உல‌க‌ம் அறியா பிள்ளை... த‌ன் வேலைக‌ளை செய்ய‌ தெரியா பிள்ளை...

.

.

Saturday, May 22, 2010

ஓடுங்க‌.. ஓடுங்க‌..

எப்ப‌டியோ த‌ன‌து மூத்த‌ ம‌க‌ளுக்கு க‌ல்யாண‌ம் செய்து முடித்த‌ கையோடு திருப்ப‌தி ஏழும‌லை வெங்க‌டேச‌பெருமாளை வேண்டி விட்டு வ‌ந்த‌தில் இருந்து ரெம்ப‌ ச‌ந்தோச‌மாக‌ இருந்தார் ஏகாம்ப‌ர‌ம். எப்ப‌டியும் த‌ன‌து இளைய‌ ம‌க‌னுக்கு இந்த‌ வ‌ருட‌ம் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிவிட‌ வேண்டும் என்ப‌தில் தீர்மானமாக‌ இருந்தார்.

ம‌க‌னுக்கு பொண்ணுபார்க்கும் வேலையில் தீவிர‌மாக‌ இற‌ங்கினார் ஏகாம்ப‌ர‌ம். இப்ப‌ எல்லாம் யாருங்க‌ வீட்ல‌ போய் பொண்ணை நேர்ல‌ பார்க்கிறா!!. அல்ல‌து கேட்கிறா!!.. ந‌ம்ம‌ ஊர்லேயே இதுக்குனு ஆபிஸ் வைச்சு நாலு பேர் இருக்காங்க‌. அது போதாதுனு நம்ம‌ ப‌க்க‌த்து வீட்டு ப‌ங்க‌ஜ‌ம் இல்ல‌ அவ‌ கூட‌ இப்ப இந்த‌ இந்த‌ வேலை தான் பார்கிறாளாம். போனா வார‌ம் நாம‌ ம‌ணிய‌ம்மை வீட்டு க‌ல்யாண‌த்துக்கு போயிருந்தோம் இல்லையா? அந்த‌ க‌ல்யாண‌ம் கூட‌ ப‌ங்க‌ஜ‌ம் ஏற்பாடு ப‌ண்ணிய‌து தானாம். நாம‌ளும் அவ‌கிட்ட‌ சொல்லிடுவோமா? என்று கையில் இருந்த‌ காப்பியை ஏகாம்ப‌ர‌த்திட‌ம் கொடுத்துவிட்டு ப‌திலுக்காக‌ க‌த்திருந்தாள் ம‌னைவி ல‌ட்சுமி.

நீ ச‌ரியான‌ விவ‌ஸ்தை கெட்ட‌வா.. என் பைய‌னுக்கு பொண்ணு பார்க்க‌ நான் போகாம‌ ஊர்ல‌ இருக்கிற‌வ‌னை போயா பார்க்க‌ சொல்லுறா!!.. அந்த‌ வேட்டியையும் ச‌ட்டையும் எடுத்து வைச்சுட்டு அடுப்புல‌ ஏதாவ‌து வேலை இருந்தா போய் பாரு.. இன்னைக்கு நான் ஒரு இட‌த்துக்கு பொண்ணு பார்க்க‌ போறேன் என்று ம‌னைவிக்கு க‌ட்ட‌ளையிட்டார் ஏகாம்ப‌ர‌ம்.

அன்றையில் இருந்து ம‌க‌னுக்கு பொண்ணு பார்க்க‌ ஆர‌ம்பிச்ச‌து. ஊரில் அவ‌ருக்கு தெரிந்த‌ சொந்த‌, ப‌ந்த‌ங்க‌ள் எல்லார் வீட்டிலும் உள்ள‌ பொண்ணுங்க‌ளை த‌ன்னுடைய‌ ம‌க‌னுக்கு கேட்டுவிட்டார். அனைவ‌ரும் இப்ப‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌வில்லை. என் பொண்ணு மேலே ப‌டிக்க‌ வேண்டும் என்று இருக்கிறாள் என‌வே இப்போது க‌ல்யாண‌ம் வேண்டாம் என்று சொல்கிறாள். என்ற‌ ப‌தில்க‌ள் தான் வ‌ந்த‌ன‌.

இன்னும் சில‌ இட‌ங்க‌ளில் ந‌ம்ம‌ ஏக‌ம்ப‌ர‌த்தின் முக‌த்தை பார்த்தாலே, அந்த‌ வீட்டில் உள்ள‌ பெரிவ‌ர்க‌ள் வ‌ந்து என் பொண்ணுக்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌வில்லை என்று, ஏகாம்ப‌ர‌ம் கேட்ப‌த‌ற்கு முன்னாடியே ப‌தில் சொன்னார்க‌ள்.

இப்ப‌ எல்லாம் ஏகாம்ப‌ர‌ம் ஊர் முழுவ‌தும் ரெம்ப‌ பிர‌ப‌ல‌ம். இவ‌ருடைய‌ த‌லையை பார்த்தாலே பொண்ணுங்க‌ எல்லாம் ஏதோ “பிள்ளை பிடிக்கிற‌வ‌ர்” என்ற‌ ரேஞ்சில் ஓட‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌.

இன்னும் சில‌ வீட்டில் க‌லேஜிக்கு போகும் பொண்ணுங்க‌ளிட‌ம் அம்மாக்க‌ள் எல்லாம் இந்த‌ வ‌ருச‌ம் அரிய‌ர் ஏதாவ‌து வ‌ச்சிங்க‌னா, "ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌த்தை வீட்டுக்கு வ‌ர‌ சொல்லிடுவேன்" என்று மிர‌ட்டினாங்க‌னா பார்த்துக்க‌ங்க‌..

இதுக்கெல்லாம் சோர்ந்து போற‌ ஆளு இல்ல‌..‌ ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌ம். செந்த‌கார‌ங்க‌தான் வேலைக்கு ஆக‌ல, வெளியில‌ பார்க்க‌லாம் என்று தேட‌ ஆர‌ம்பித்தார். பார்க்கிற‌ ஆளுக‌ளிட‌ம் எல்லாம் ந‌ம்ம‌ சால‌ம‌ன் பாப்பையா சொன்ன‌து போல்" ந‌ம‌க்கு ஒரு பைய‌ன் இருக்கான். வாங்க‌!!! பாருங்க‌!!! ப‌ழ‌குங்க‌!!! புடிச்சா க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்.. என்று விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ தொட‌ங்கினார்.

இப்ப‌டியே பொண்ணு தேடிட்டு இருந்த‌ ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌த்தை தெருவில் பார்த்தாலே, ஓடுங்க‌!! ஓடுங்க‌!! அவ‌ர் வ‌ந்திட்டு இருக்கார்" என்ப‌து போல் ஓட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

இப்ப‌டிதான் ஏகாம்ப‌ர‌ம் ஒரு நாள் தெருவில் போய்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய‌வ‌ரும் இள‌ம் பெண்ணும் எதிரில் வ‌ந்தார்க‌ள். பெரிய‌வ‌ருட‌ன் வ‌ரும் பொண்ணு அவ‌ருடைய‌ ம‌க‌ளாக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைத்து கொண்டு ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌ம் அந்த‌ பெரிவ‌ரிட‌ம் த‌ன்னுடைய‌ ம‌க‌னை ப‌ற்றியும், அவ‌னுக்கு பொண்ணு தேடி கொண்டிருப்ப‌தாக‌வும் சொன்னார். பொறுமையாய் எல்லா க‌தையையும் கேட்டுவிட்டு "எதுக்கு இது எல்லாம் என்னிட‌ம் சொல்லுகிறீர்க‌ள்" என்று ஏகாம்ப‌ர‌த்தை பார்த்து கேட்டார் அந்த‌ பெரிய‌வ‌ர்.

உங்க‌ பொண்ணை என் பைய‌னுக்கு கேட்க‌லாம் என்று பெரிய‌வ‌ரின் ப‌க்க‌த்தில் இருந்த‌ இள‌ம் பொண்ணை பார்த்த‌வாறு கேட்டார் ஏகாம்ப‌ர‌ம். இதை கேட்ட‌ அந்த‌ பெரிய‌வ‌ர் ஷாக்க‌டித்த‌து போல் திடுகிட்டு "யோவ் உன‌க்கு க‌ண்ணு தெரியாதா இது என்னோட‌ ரெண்டாவ‌து ச‌ம்சார‌ம்ய்யா?... என்று க‌த்தினார்.

மேலே ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை கேள்வி ப‌ட்டு ஊர்ப‌க்க‌மே எட்டி பார்க்காம‌ல் இருக்கும் ந‌ம்ம‌ ஏகாம்ப‌ர‌த்தின் ம‌க‌னை யார‌வ‌து பார்த்தா கொஞ்ச‌ம் ந‌ம்ம ஏகாம்ப‌ர‌ம் ஐயாவுக்கு த‌க‌வ‌ல் கொடுங்க‌ளேன், ப்ளீஸ்... ப்ளீஸ்... என்ன‌து அடையாள‌மா? அது இர‌ண்டு கால் இருக்குமுங்க‌, இர‌ண்டு கை கூட‌ இருக்கும் ஆமாங்க‌ க‌ரைட்டுதான்‌.. ஆனா த‌லை ஒண்ணுதான் இருக்கும்.. அவ‌ரை பார்த்தா எப்ப‌டியாவ‌து சொல்லி அனுப்புங்க‌.. என‌க்கு ந‌ம்பிக்கை இருக்கு நீங்க‌ க்ரெக்டா சொல்லிடுவீங்க‌..

குறிப்பு: மொக்கை போட்டு ரெம்ப‌ நாளாச்சி... என்னால‌ முடிஞ்ச‌து.. த‌லைப்பை பார்த்தாலே உங்க‌ளுக்கு தெரியும்... அது ந‌ம்ம‌ள‌ நோக்கி வ‌ந்திட்டு இருக்கு ஓடுங்க‌.. ஓடுங்க‌ தான்.. இதையும் மீறி வ‌ந்து ப‌டிச்சீங்க‌னா!!!! நான் பொறுப்பில்லை.

.

.

Wednesday, May 19, 2010

பாதுகாப்பு குறித்த‌ சில‌ விழிப்புண‌ர்வு ப‌ட‌ங்க‌ள்

நான் வேலைபார்க்கும் க‌ம்பெனியில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ பாதுகாப்பு குறித்த‌ சில‌ சுவ‌ரொட்டிக‌ளை பார்க்க‌ முடிந்த‌து. அதில் இருந்த‌ சில‌ சுவ‌ரொட்டிக‌ள் க‌ம்பெனியில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தெரிந்திருக்க‌ வேண்டிய‌ விழிப்புண‌ர்வுக‌ள் அல்ல‌. அனைவ‌ரும் க‌ண்டிப்பாக‌ தெரிந்து கொள்ள‌வேண்டிய‌வை. அவ‌ற்றில் சில‌ப‌ட‌ங்க‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

வீடுக‌ளில் க‌ண்டிப்பாக‌ செய்ய‌வேண்டிய ம‌ற்றும் க‌டைபிடிக்க‌வேண்டிய‌ சில‌ பாதுகாப்பு வ‌ழிமுறைக‌ள்.‌









குழ‌ந்தைக‌ளை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ தெரிந்து கொள்ள‌வேண்டிய‌ பாதுகாப்பு வ‌ழிமுறைக‌ள்.



சாலையில் வாக‌ன‌ங்க‌ளில் செல்லும் போது க‌டைபிடிக்க‌வேண்டிய‌ பாதுகாப்பு வ‌ழிமுறைக‌ள்.





எல்லா பொதுஇட‌ங்க‌ளிலும் தீய‌ணைப்பான்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருக்கும். அதை எப்ப‌டி தீயை அணைக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து என்ப‌தை ப‌ற்றிய‌ விள‌க்க‌ம்.



.

.

Saturday, May 15, 2010

எனக்கு பிடித்த 10 படங்கள் - [தொடர்பதிவு]

நான் எழுதும் இர‌ண்டாவ‌து தொட‌ர்ப‌திவு. என்னை இந்த‌ தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ Dreamer(ஹ‌ரீஸ்) அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

நான் ப‌ட‌ம் பார்க்க‌ தியோட்ட‌ருக்கு சென்றால் அந்த‌ இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌மும் என்னுடைய‌ பிர‌ச்ச‌னைக‌ளை ம‌ற‌ந்து ப‌ட‌த்தில் ஒன்றினால் நான் அதை ந‌ல்ல‌ ப‌ட‌ம் என்று கொள்வேன். அது உல‌க‌ ப‌ட‌மாக‌ இருந்தாலும் அல்ல‌து உள்ளூர் ப‌ட‌மாக‌ இருந்தாலும் ச‌ரி. இதுதான் என்னுடைய‌ அள‌வுகோல். இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌மும் என்னை ம‌ற‌ந்து ர‌சிக்கும் எல்லா ப‌ட‌ங்க‌ளும் என்னை பொறுத்த‌வ‌ரை ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளே.

இத‌ற்கு மாறாக‌ ஏண்டா? ப‌ட‌ம் பார்க்க‌ வ‌ந்தாய் என்று நெளிய‌ வைக்கும் ப‌ட‌ங்க‌ள், அது உல‌க‌ ப‌ட‌மாக‌ இருந்தாலும் ச‌ரி. என்னை பொறுத்த‌வ‌ரை கும‌ட்டும் ப‌ட‌ங்க‌ளே..

ச‌மீப‌த்தில் வ‌ந்து அதிக‌ம் பேச‌ப்ப‌ட‌த‌ பார‌திராஜாவின் பொம்ம‌லாட்ட‌ம் ம‌ற்றும் பெண் டைர‌க்ட‌ர் ஜெ.எஸ் ந‌ந்தினி அவ‌ர்க‌ளின் திரு திரு..துறு துறு.. என்ற‌ இர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் நான் ர‌சித்து பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள்..

கீழே நான் ஒவ்வொரு கால‌க‌ட்ட‌ங்க‌ளிலும் நான் ர‌சித்த‌ சில‌ ப‌ட‌ங்க‌ளை தொகுத்துள்ளேன்.

1)ஆண்பாவ‌ம்:

பாண்டிய‌ராஜ‌ன் ம‌ற்றும் பாண்டிய‌ன் ந‌டித்த‌ இந்த‌ ப‌ட‌ம் இப்போது பார்த்தாலும் சிரிப்பு தாங்க‌ முடியாது. இத‌ன் ஆர‌ம்ப‌ காட்சியே ப‌டு அம‌ர்க‌ள‌மாக‌ இருக்கும். பாண்டிய‌ ராஜ‌னும் பாண்டிய‌னும் த‌லைமுடியை பிடித்து கொண்டு ச‌ண்டை போடும் காட்சியை இவ‌ர்க‌ளுடைய‌ அப்பா வி.கே ராமாசாமி வெளியில் நின்று கொண்டு ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விள‌க்கும் காட்சியே... அனைவ‌ர் முக‌த்திலும் சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்துவிடும். இந்த‌ காமெடி கூட்ட‌ணி போத‌தென்று ஜ‌ன‌க‌ராஜ் வேறு இருப்பார். இவ‌ர் ஹேட்ட‌ல் ஆர‌ம்பிக்கும் முத‌ல் நாள் ந‌ட‌க்கும் காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான். பார்க்காத‌வ‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ பாருங்க‌ள். நூறு ச‌த‌வீத‌ம் சிரிப்புக்கு நான் உத்திர‌வாத‌ம்.

2)அஞ்ச‌லி:

இந்த‌ ப‌ட‌த்தை ப‌ற்றி நான் அதிக‌ம் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை. இதில் ஒரு குழ‌ந்தையை ப‌ற்றிய‌ அம்மாவின் த‌விப்பை ரேவ‌தி அழ‌காக‌ செய்து இருப்பார். அந்த‌ சின்ன‌ குழ‌ந்தையின்(ஷாம்லி) ந‌டிப்பும் அழ‌காக‌ இருக்கும். அந்த‌ குழ‌ந்தையின் அறிமுக‌ காட்சியையே அச‌த்தி இருப்பார் டைர‌க்ட‌ர். இந்த‌ ப‌ட‌த்தின் க‌டைசிகாட்சியில் அனைவ‌ரின் க‌ண்க‌ளும் க‌ண்டிப்பாக‌ ப‌னிக்கும். இசையும், பாட‌ல்க‌ளும் இந்த‌ ப‌ட‌த்திற்கு இன்னும் மெருகு ஊட்டியிருக்கும்.


3)குருதிப்புன‌ல்:

தீவிர‌வாத‌ம் ப‌ற்றி சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளில் இதுவும் ஒன்று. க‌ம‌ல் ம‌ற்றும் அர்ஜூன் இருவ‌ரின் க‌த‌ப்பாத்திர‌த்திற்க்கு ஏற்ற‌ ந‌டிப்பு அருமையாக‌ இருக்கும். போராளிக‌ளின் ம‌றுப‌க்க‌ம், க‌ட‌மைவீர‌ர்க‌ளின் வாழ்க்கை, அவ‌ர்க‌ளின் தியாக‌ம் என்று அனைத்தையும் விரிவ‌காக‌வும் ஆழ‌காக‌வும் சொல்லியிருக்கும் ப‌டம். இந்த‌ ப‌ட‌த்தில் குறிபிட்டு சொல்ல‌ வேண்டிய‌து நாச‌ர். போராளிக‌ளின் த‌லைவ‌ன் பாத்திர‌த்தை அழ‌காக‌ பூர்த்தி செய்திருப்பார். இந்த‌ ப‌ட‌த்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்ப‌திவு அருமையாக‌ இருக்கும்.



4)த‌ள‌ப‌தி:

நான் இந்த‌ ப‌ட‌த்தை பார்ப்ப‌த‌ற்கு முன் காட்டுகுயிலே.. பாட்டுதான் அறிமுக‌ம். கிர‌ம‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் இசைக்க‌ச்சேரி, ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி எதுவாக‌ இருந்தாலும் இந்த‌ பாட‌ல் இல்லாம‌ல் இருக்காது. அந்த‌ள‌வு இந்த‌ பாட‌ல் பிர‌ப‌ல‌ம். நானே ஒரு மேடையில் இந்த‌ பாட‌லுக்கு ஆடியிருக்கிறேன் என்றால் பாருங்க‌ள். ர‌ஜினி ம‌ற்றும் ம‌ம்முட்டியின் ந‌ட‌ப்பில் ப‌ட‌ம் அச‌த்தும். ந‌ட்பை ப‌ற்றி சொல்லியிருக்கும் இப்ப‌ட‌மும் ம‌ணிர‌த்தின‌த்தின் சூப்ப‌ர் ஹிட் வ‌ரிசையில் ஒன்று.



5)ஆன‌ந்த‌ம்:

டைர‌க்ட‌ர் லிங்குசாமியின் முத‌ல் ப‌ட‌ம். குடும்ப‌ உற‌வுக‌ளை மைய‌மாக‌ வைத்து இப்ப‌ட‌த்தை எடுத்திருப்பார். விக்கிர‌ம‌னின் ப‌ட‌ங்க‌ளின் சாய‌லில் இருந்தாலும் திரைக்க‌தை ந‌ன்றாக‌ அமைத்திருப்பார். இதில் உள்ள‌ பாட‌ல்க‌ள் அனைத்தும் அருமையாக‌ இருக்கும். இந்த‌ ப‌ட‌த்தை அடுத்து லிங்குசாமி இய‌க்கியிருப்ப‌து ர‌ன். இந்த‌ இர‌ண்டு ப‌ட‌த்திற்கும் துளியும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌ல் ப‌ட‌ங்க‌ளை இய‌க்கியிருப்ப‌து "அட‌" போட‌வைத்த‌து. குடும்ப‌த்துட‌ன் அனைவ‌ரும் எந்த‌வித‌ நெளிவுக‌ள் இல்லாம‌ல் இந்த‌ ப‌ட‌த்தை பார்க்க‌லாம்.



6)ஊமைவிழிக‌ள்:

ச‌ஸ்பென்ஸ், திரில்ல‌ர் ப‌ட‌ங்க‌ள் அதிக‌மாக‌ வ‌ராத‌ கால‌த்தில் கொஞ்ச‌ம் மிர‌ட்ட‌லாக‌ வ‌ந்திருக்கும் ப‌ட‌ம். அந்த‌ ப‌ட‌த்தில் வ‌ரும் குதிரைவ‌ண்டி ம‌ற்றும் க‌ண்க‌ளை உருட்டி கொண்டு வ‌ரும் அந்த‌ வ‌ய‌தான் மூதாட்டி என்று மிர‌ட்டியிருப்பார்க‌ள். இந்த‌ ப‌ட‌த்தில் உள்ள‌ பாட‌ல்க‌ள் அனைத்தும் அருமையாக‌ இருக்கும். "தோல்வி நிலை என‌ நினைத்தால்" என்ற‌ பாட‌லை இப்போது கேட்டாலும் ந‌ம்மை அறியாம‌ல் உட‌ம்பு சிலிர்ப‌தை காண‌லாம். இதில் விஜ‌ய‌காந்த‌ போலிஸ் ஆபிச‌ராக‌ கௌர‌வ‌ வேட‌த்தில் க‌ல‌க்கியிருப்பார்.

7)ரித‌ம்:

டைர‌க்ட‌ர் வ‌ச‌ந்தின் இந்த‌ பட‌ம் அர்ஜூன், மீனா, ர‌மேஸ் அர‌விந்த் ம‌ற்றும் ஜோதிகா ந‌டித்திருப்பார்க‌ள். ஒரு ரெயில் விப‌த்தில் ம‌னைவியை இழ‌ந்த‌ அர்ஜூன், அதே ரெயில் விப‌த்தில் க‌ண‌வ‌னை ப‌றி கொடுத்த‌ மீனா இவ‌ர்க‌ளின் வாழ்வில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அழ‌காக‌வும், இயால்பாக‌வும் காட்டியிருப்பார் டைர‌க்ட‌ர். இந்த‌ ப‌ட‌த்தில் உள்ள‌ ஐந்து பாட‌ல்க‌ளும் ப‌ஞ்ச‌பூத‌ங்க‌ளை( நீர், நில‌ம், காற்று, நெருப்பு, ஆகாய‌ம்) அடிப்ப‌டையாக‌ வைத்து எழுத‌ப்ப‌ட்டிருக்கும். ப‌ட‌ம் கொஞ்ச‌ம் மெதுவாக‌ ந‌க‌ரும்.

8)தில்லானா மோக‌னாம்பாள்:

இர‌ண்டு க‌லைஞ‌ர்க‌ளுக்கிடையில் ந‌ட‌க்கும் உண‌ர்வு போர‌ட்ட‌த்தை சொல்லும் ப‌ட‌ம். இர‌ண்டு வெவ்வேறு துறைக‌ளில் முத‌ல் இட‌த்தில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் காத‌லித்தால் அவ‌ர்க‌ளுக்கிடையில் ஏற்ப‌டும் ஈகோவால் ஏற்ப‌டும் பிர‌ச்ச‌னையை மைய‌மாக‌ வைத்து எடுத்த‌ப்ப‌ட‌ம். பிற்கால‌த்தில் இத‌ன் த‌ழுவ‌லில் வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் ஏராள‌ம். சிவாஜி பெரிய‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ஏதும் இல்லாம‌ல் க‌ண்க‌ளால் பேசி ந‌டித்த‌ப்ப‌டம். பாட‌ல்க‌ளும் அருமையாக‌ இருக்கும்.





9)அஞ்சாதே:

இந்த‌ ப‌ட‌ம் என‌க்கு ஒரு நாவ‌லை ப‌டித்துமுடித்த திருப்தியை அளித்த‌து. ந‌ரேன் ம‌ற்றும் அஜ்ம‌ல் ந‌டிப்பு பார‌ட்ட‌வேண்டிய‌து. ச‌ஸ்பென்சுட‌ன் ப‌ட‌த்தை கொண்டு சென்று அதில் ந‌ட்பையும் சொல்லி அழாகாக‌ த‌ந்திருப்பார் டைர‌க்ட‌ர் மிஷ்கின்.



10)இந்திய‌ன்:

இந்த‌ ப‌ட‌த்தை ப‌ற்றி அதிக‌ம் சொல்ல‌ தேவையில்லை. ஆனால் இந்த‌ ப‌ட‌த்தில் வ‌ரும் இந்திய‌ன் தாத்தாவின் சேவை இந்த‌ நாட்டிற்கு தேவை என்பதை ம‌ட்டும் சொல்லி கொள்கிறேன். த‌ங்க‌ம் 1500 கிலோவாம், ப‌ண‌ம் 1800 கோடியாம் .... ந‌ல்லா இருங்க‌டே ம‌க்கா!!!!!!!!

.

.


.
.


.

Tuesday, May 11, 2010

செய‌ற்கையிழை ஆடைக‌ள்_ம‌ர‌ங்க‌ளின் அழிவுக‌ள்

ம‌ர‌ங்க‌ளின் அழிப்பு ப‌ற்றியும், ம‌ழைப்பொழிவு குறைவிற்கான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ற்றியும், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் ப‌ற்றியும் ஏராள‌மான‌ க‌ட்டுரைக‌ளும், ப‌திவுக‌ளும் தின‌மும் இணைய‌ங்க‌ளில் வெளிவ‌ருகின்ற‌ன‌. அவ‌ற்றில் ப‌ல‌ தெரியாத‌ த‌க‌வ‌ல்க‌ளையும், நாம் என்ன‌ செய்ய‌வேண்டும் என்ப‌து ப‌ற்றியும் விரிவாக‌ விள‌க்கியுள்ள‌ன‌ர். இதில் என‌க்கு தெரிந்த‌ ஒரு த‌க‌வ‌லையும் உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்துகொள்கிறேன்.

ஆடைக‌ள் தயாரிக்க‌ இப்போது செய‌ற்கையிழைக‌ள் அதிக‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுங்கின்ற‌ன‌. இந்த‌ செய‌ற்கையிழைக‌ள் தயாரிக்க‌ப் பெரும்பாலும் ம‌ர‌க்கூழ்க‌ள்(Wood Pulp) தான் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப‌டுகின்ற‌ன். இப்போது செய‌ற்கையிழைக‌ளினால் த‌யாரிக்க‌ப்ப‌டும் ஆடைக‌ளை தான் நாம் அனைவ‌ரும் விரும்பி அணிகின்றோம். என‌வே செய‌ற்கையிழைக‌ளின் தேவைக‌ள் ப‌ல‌ம‌ட‌ங்கு அதிக‌மாகின்ற‌து. அத‌ற்காக‌ வெட்ட‌ப்ப‌டும் ம‌ர‌ங்க‌ளும் அதிக‌ம்.

இந்த‌ செய‌ற்கையிழைக‌ள்(Rayon or Staple Fibre) ப‌ல‌முறைக‌ளில் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவை பெரும்பாலும் பைன், புருஸ் ம‌ற்றும் ஹெம்லாக்(Pine, Spruce and Hemlock) போன்ற‌ம‌ர‌ங்க‌ளில் மூலம் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன். மூங்கிலும்(Bamboo) இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிப்பில் முக்கிய‌ப‌ங்கு வ‌கிக்கிற‌து.

இந்த‌ செய‌ற்கையிழையான‌து 1884-ஆம் ஆண்டு ஹொன்ட் ஹிலாரி டி சார்டோன‌ட்(Count Hilaire de Chardonnet) என்ற‌ பிர‌ஞ்சு நாட்டின‌ரால் நைட்ரோசெல்லுலோஸ்(Nitrocellulose) என்ற‌ வேதிய‌ல் பொருளில் இருந்து உருவாக்கினார். பின்பு பிர‌ஞ்சு அர‌சின் ப‌ண‌உத‌வியுட‌ன் உல‌கின் முத‌ல் செய‌ற்கையிழை தொழிற்கூட‌த்தையும் உருவாக்கினார். பிற்கால‌த்தில் இவ‌ர் செய‌ற்கையிழையின் த‌ந்தை(Father of Rayon) என்றைழைக்க‌ப்ப‌ட்டார்.



ஆர‌ம்ப‌த்தில் இந்த‌ செய‌ற்கையிழை உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கு அதிக‌ செல‌வு ஆன‌து. நாளைடைவில் இந்த‌ செய‌ற்கையிழை தயாரிக்கும் முறையில் ப‌ல‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட்டு செல‌வுக‌ளை குறைத்த‌ன‌ர். பெரும்பாலான‌ செய‌ற்கையிழைக‌ள் பின்வ‌ரும் மூன்று முறைக‌ளில் த‌யாரிக்க‌ ப‌டுகின்ற‌ன‌.

1)விஸ்கோஸ் ரேயான்(Viscose Rayon)

2)குப்புரோமினிய‌ம் ரேயான்(Cuprammonium Rayon)

3)ஸ்பானிபைடு செல்லுலோஸ் அசிடேட்(Saponified Cellulose Acetate)

இந்த‌ செய‌ற்கையிழைக‌ள் தாயாரிக்கும் முறை, உப‌யோக‌ப்ப‌டுத்தும் வித‌ம் ம‌ற்றும் அத‌ன் த‌ர‌த்தினை கொண்டு மூன்று வ‌கையாக‌ பிரிக்கின்ற‌ன‌ர்.

1)ஹ‌ய் வெட் மாடியூல் ரேயான்(High wet modulus rayon-HMW)

2)பாலினோஸ் ரேயான்(Polynosic Rayon)

3)ஸ்பெச‌லிட்டி ரேயான்(Specialty Rayons) இவை இன்னும் சில‌ உட்பிரிவுக‌ளாக‌ வ‌கைப்ப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன‌.

இந்த‌ செய‌ற்கையிழையால் த‌யாரிக்க‌ப்ப்டும் சில‌ பொருட்க‌ள்:

1)அணிப‌வை: பிள‌வுஸ், துணிக‌ள், ஜாக்கெட், லிங்க‌ரி, லைனின் மெட்டீரிய‌ல், ஸ்போட்ஸ் ஆடைக‌ள், சூட்ஸ், டை, வொர்கிங் கிளாத்

2)வீட்டு உப‌யோக‌ங்க‌ள்: பெட்சீட், பிளாங்க்ட், க‌ர்டெயின், டிராபெரிஸ், சீட்ஸ், ஸ்லிப்க‌வ‌ர்ஸ், டேபிள் கிளாத்

3)இண்ட‌ஸ்டிரிய‌ல் உப‌யோக‌ங்க‌ள்: சேப்டி கிளாத்க‌ள், கையுறைக‌ள், மெடிக்க‌ல் ம‌ற்றும் ச‌ர்ஜ‌ரிக்க‌ல் கிளாத்க‌ள்



இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிப்புக‌ள் க‌ட‌ந்த‌ 30 ஆண்டுக‌ளில் பெரும் மாற்ற‌த்தை கொண்டு வ‌ந்துள்ள‌து. அத‌வ‌து இவ‌ற்றின் தேவைக‌ள் ப‌ல‌ ம‌டங்கு உய‌ர்ந்துள்ள‌து. உல‌க‌ நாடுக‌ளின் செய‌ற்கையிழை தேவைக‌ளில் 90% தேவையை கீழ்க‌ண்ட‌ ப‌த்து நாடுக‌ள் த‌யாரித்து ஏற்றும‌தி செய்கின்ற‌ன‌. 1)சீனா, 2)வெஸ்ட் யூரோப், 3)இந்தியா, 4)இந்தோனேசியா, 5)யு.எஸ்.ஏ, 6)தைவான், 7)துருக்கி, 8)ஜ‌ப்பான், 9)தாய்லாந்து, 10)கொரியா.

உல‌க‌ அள‌வில் செய‌ற்கையிழை ஏற்றும‌தியில் நாம் மூன்றாவ‌து இட‌த்தில் இருக்கிறோம். உல‌க‌ நாடுக‌ளின் செய‌ற்கையிழை தேவைக‌ளில் 26% நாம் உற்ப‌த்தி செய்து ஏற்றும‌தி செய்கிறோம்.

மேலே செய‌ற்கையிழையின் தேவைக‌ளையும், அத‌ன் வ‌கைக‌ளை‌யும் பார்த்தோம். இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிக்க‌ மூல‌ப்பொருள்(Raw Material) ம‌ர‌ங்க‌ள்(wood) தான். கீழ்க‌ண்ட‌ செய்முறையை(Process Flow) நீங்க‌ள் பார்த்தால் உங்க‌ளுக்கு புரியும்.



வ‌ருட‌த்திற்கு வ‌ருட‌ம் இந்த‌ செய‌ற்கையிழையின் தேவைக‌ள் ப‌ல‌ ம‌ட‌ங்காக‌ அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. க‌ட‌ந்து ஐந்து வ‌ருட‌ங்க‌ளில் இத‌ன் தேவைக‌ள் இரும‌ட‌ங்காக‌ உய‌ர்ந்துள்ள‌து என‌ ஆய்வுக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. இவ்வாறு செய‌ற்கையிழையின் தேவைக‌ள் அதிக‌மானால் அவை த‌யாரிக்க‌ வெட்ட‌ப்ப‌டும் ம‌ர‌ங்க‌ளின் தேவையும் அதிக‌ம் ஆகும்.



ச‌மீப‌த்தில் நான் இணைய‌த்தில் பார்த்த‌ செய்தி ஜ‌ப்பானில் செய‌ற்கையிழை த‌யாரிக்க‌ ம‌ர‌ங்க‌ள் ப‌ற்ற‌க்குறை ஏற்ப‌ட்டுள்ள‌தாம். அவை வெளிநாடுக‌ளில் இருந்து மூல‌ப்பொருளான‌() ம‌ர‌ங்க‌ளை இற‌க்கும‌தி செய்கின்ற‌ன‌.

உல‌கின் செய‌ற்கையிழை த‌யாரிப்பில் முன்ன‌ணியில் இருக்கும் ஒரு நிறுவ‌ன‌ம் ஆஸ்திரியா நாட்டில் இருந்துதான் த‌ன‌க்கு தேவையான‌ ம‌ர‌ங்க‌ளில் 50% இற‌க்கும‌தி செய்கின்ற‌து.

செய‌ற்கையிழை த‌யாரிப்பில் விஸ்கோஸ் ஸ்டேபிள் பைப‌ர்(Viscose Staple Fibre-VSF) என்ற‌ பெய‌ருட‌ன் ஆதித்யா பிர்லா குருப்பின்(Aditya Birla Group) நிறுவ‌ன‌ங்க‌ள் இந்தியாவில் நாக்தா(Nagda), க‌ரிகார்(Harihar), க‌ராச்சி(Karach-Gujarat) போன்ற‌ இட‌ங்க‌ளில் உள்ள‌து. இந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு மெட்டீரிய‌ல் கேட்ட‌லாக்(Material Catalog) ப‌ண்ணும் பிர‌ஜெக்ட்டில் நானும் இருந்தேன். அப்போது அந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு தேவைதான் மூல‌ப்பொருளான‌(Raw Material) ம‌ர‌ங்க‌ளையும் கேட்ட‌லாக் ப‌ண்ணினோம். அப்போது தான் இவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு ம‌ர‌ங்க‌ளை அழிக்கிறார்க‌ள் என்று தெரிய‌ முடிந்த‌து. இந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும்பாலான‌ ம‌ர‌ங்க‌ளை இந்தோனேசியாவில் இருந்து இற‌க்கும‌தி செய்வ‌தாக‌ சொன்னார்க‌ள். அங்கு ப‌ணி புரிந்த‌ ந‌ன்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து "வெகுவிரைவில் எங்க‌ளுக்கும் ம‌ர‌ங்க‌ளின் ப‌ற்றாக்குறை வ‌ரும்" என்ப‌தாகும்.



காகித‌ங்க‌ளும் இந்த‌ ம‌ர‌கூழ்க‌ளில் இருந்துதான் த‌யாரிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் இந்த‌ காகித‌ங்க‌ள் மீண்டும் ம‌றுசுழ‌ற்ச்சிக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஆனால் இந்த‌ செய‌ற்கையிழைக‌ளால் த‌யாரிக்க‌ப்ப‌டும் ஆடைக‌ள் ம‌றுசுழ‌ற்ச்சிக்கு பாய‌ன்ப‌டுத்துவ‌து இல்லை என்ப‌தும் ஒரு க‌வ‌லையான‌ விச‌ய‌ம்.

என‌வே இந்த‌ நாக‌ரீக‌ உல‌கில் நாளொரு மேலாடையும், பொழுதொரு புத்தாடையுமாய் உடுத்துப‌வ‌ர்க‌ளே!!!.. இதையும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌த்தில் கொள்ளுங்க‌ள்.
.

.

Sunday, May 9, 2010

ர‌சிக்க‌ சில‌ வீடியோக்க‌ள்

இது ந‌ல்லா இருக்கு

குடிச்ச‌ த‌ண்ணியைவிட‌ அதிக‌மாக‌ வெளியே எடுக்கிறாரு.. வ‌ய‌த்துக்குள்ளே த‌ண்ணி டேங்க் ஏதும் வைச்சிருப்பாரோ!!!!!!... நான் ஒட்ட‌க‌ம் ப‌ற்றி கேள்வி ப‌ட்டுயிருக்கிறேன் த‌ண்ணிரை ரெம்ப‌ நாட்க‌ள் சேமித்து வைத்து கொள்ளும் என்று..

வீடியோ_1

வெளியே சொல்ல‌தீங்க‌

ரெம்ப‌ க‌வ‌ன‌மா பாருங்க‌... எப்ப‌டி எல்லாம் பிளான் ப‌ண்ணி மேஜிக் ப‌ண்ணுகிறார்க‌ள் என்று!!!!
எதை செய்தாலும் நாலு பேருக்கு தெரிய‌ப‌டாது, காட்டிக்க‌ப‌டாது.. ஆனா இங்க‌ தெரிய‌ வைச்சுட்டாங்க‌ப்பா!!!

வீடியோ_2

குறிப்பு: வீடியோ பைல்க‌ள் அதிக‌மாக‌ என‌து வ‌லைத்த‌ள‌த்தில் இணைப்ப‌தால் வ‌லைத்த‌ள‌த்தின் ப‌க்க‌ம் ஓப‌ன் ஆக அதிக‌ நேர‌ம் எடுத்துக் கொள்கிற‌து. என‌வே என‌து ம‌ற்றொரு த‌ள‌த்தில் இணைத்துவிட்டு லிங்க் ம‌ட்டும் இங்கு கொடுத்துள்ளேன்.

Tuesday, May 4, 2010

என்னுடைய‌ சென்னை ப‌ய‌ண‌ம்_2

என்னுடைய‌ சென்னை ப‌ய‌ண‌ம்_1

இத‌ன் முத‌ல் ப‌குதியை ப‌டிக்க‌விரும்புவோர் மேலே உள்ள‌ லிங்கை சொடுக்க‌வும்

க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் அத‌ற்கு மேல் பேச‌ விருப்ப‌ம் இல்லாம‌ல் தான் நான் பஸ்சை விட்டு இற‌ங்கினேனே த‌விர‌ ம‌ன‌ம் முழுவ‌தும் சூட்கேசை ப‌ற்றிதான் சிந்த‌னை செய்த‌து. கார‌ண‌ம் அதில் இருந்த‌ முக்கியாமான‌ சில‌ பொருட்க‌ள்.

நான் அப்போது சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த‌தால் சென்ட்ர‌ல் க‌வ‌ர்மென்ட் எக்ஸாம் ஒன்றும் விடுவ‌தில்லை. ரெயில்வே, நேவி, ஏர்போர்ஸ் என்று ஏதாவ‌து ஒன்று எழுதுவேன். என‌வே என்னுடைய‌ ப‌டிப்பு சான்றித‌ழ் அனைத்தும் என்னுட‌ம் அந்த‌ சூட்கேசில் தான் எப்போதும் இருக்கும். அது ம‌ட்டும‌ல்லாது நான் ஊருக்கு போன‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் என்னுடைய‌ பாஸ்போர்ட் வ‌ந்திருக்கிற‌து என்ற‌ செய்தி கேட்டுத்தான். என‌வே அந்த‌ சூட்கேசில் என்னுடைய‌ பாஸ்போர்ட்டும் இருந்த‌து. மேலும் அவ‌ச‌ர‌ தேவைக்காக‌ அந்த‌ சூட்கேசில் எப்போதும் ஒரு 500 ரூபாய் நோட்டு ஒன்றும் இருக்கும். அப்புற‌ம் என்னுடைய‌ துணிக‌ள் கொஞ்ச‌ம்.



அது எப்ப‌டிய்யா? நீ ச‌ர்டிபிக்கேட் எல்லாம் சூட்கேசில் வைத்துவிட்டு தூங்க‌லாம் என்று நீங்க‌ள் கேட்ப‌து என‌க்கு புரிகிற‌து. அத‌ற்கு கார‌ண‌ம் நான் சென்னைக்கு வ‌ருவ‌தும், ஊருக்கு போவ‌தும் ஒரு பெரிய‌ விச‌ய‌மாக‌வே என‌க்கு தெரிய‌வில்லை. கார‌ண‌ம் ச‌னிக்கிழ‌மை நினைத்தால் ஊருக்கு வ‌ண்டி ஏறுவேன், திங்க‌ள்கிழ‌மை திரும்ப‌வும் சென்னையில் இருப்பேன். என‌வே இந்த‌ ப‌ஸ் ப‌ய‌ண‌ம் என‌க்கு பெரிய‌ விச‌ய‌மாக‌ ப‌ட‌வில்லை.

ப‌ல்ல‌வ‌ர‌த்தில் ப‌ஸ்சை விட்டு இற‌ங்கிய‌தும் முன்னால் பார்த்த‌து போலிஸ் ஸ்டேச‌னைத்தான். ச‌ரி போலிஸ் ஸ்டேச‌னில் சொல்ல‌லாம் என்று ம‌ன‌திற்குள் நினைத்துவிட்டு. திரும்பி எதிர்த்த‌ சாலையில் பார்த்தேன், அங்கு அத்தான்(மாமா) காருட‌ன் நின்றார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் ந‌ட‌ந்த‌ விச‌ய‌த்தை சொன்னேன். அவ‌ங்க‌ளுக்கு ஆபிஸ் போக‌வேண்டும் என்ப‌து என‌க்கு தெரியும் என‌வே அவ‌ர்க‌ளிட‌ம் "நீங்க‌ வீட்டுக்கு போங்க‌ நான் இந்த‌‌ போலிஸ் ஸ்டேச‌னுக்கு போய்விட்டு வ‌ருகி‌றேன்" என்று சொன்னேன். அத்தானும் கிள‌ம்பி விட்டார்க‌ள்.

ஊர்ல‌ இருக்கும் போதே போலிஸ் ஸ்டேச‌ன் வாச‌லை மிதித்த‌து இல்லை. எப்ப‌டி இருக்கும் என்றும் என‌க்கு தெரியாது. ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவில் பார்த்த‌தோட‌ ச‌ரி. முத‌ல் முறையாக‌ போலிஸ் ஸ்டேச‌னுக்குள்ள‌ கால‌டி எடுத்து வைச்சாச்சி. யாரை பார்க்க‌னும், யாரிட‌ம் சொல்ல‌ வேண்டும் என்ப‌து ஒன்றும் தெரியாது. உள்ள‌ போன‌வுட‌ன் இரு வேறு திசைக‌ளில் போட‌ப்ப‌ட்ட‌ மேஜை, நாற்காலியில் இருவ‌ர் இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரிட‌ம் சென்று சூட்கேசை தொலைத்த‌ விச‌ய‌த்தை சொன்னேன்.

ப‌க்க‌த்து டேபிளில் இருந்த‌வ‌ர், உட‌னே திரும்பி என்னை பார்த்து "வாங்க‌ சார்... இப்ப‌டி உக்காருங்க‌... சூட்கேசு தானே அடுத்த‌ வ‌ண்டியில் நான் போய் எடுத்துட்டு வ‌ந்துடுறேன். நீங்க‌ இப்ப‌ போய் அந்த‌ செய‌ரில் உக்காருங்க‌" என்றார். அப்ப‌டியே ப‌க்க‌த்தில் இருந்த‌ போலிஸ்கார‌ரிட‌ம் "பாருய்யா!!!! இவ‌ரு ப‌ஸ்ல‌ தூங்குவாராம், அந்த‌ நேர‌த்துல‌ எவ‌னோ ஒருத்த‌ன் சூட்கேசை அடிச்சுட்டு போவானாம், இவ‌ரு தூக்க‌ம் முழிச்ச‌தும் வ‌ண்டியை விட்டு இற‌ங்கி முன்னாடி எந்த‌ போலிஸ் ஸ்டேச‌ன் இருக்கோ அங்க‌ வ‌ந்து க‌ம்பிளைண்ட் ப‌ண்ணுவார‌ம், நாம‌ போய் க‌ண்டுபிடிக்க‌னுமாம்" என்று ந‌க்க‌லாக‌ சிரித்தார். ஆஹா ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவில் காட்டும் போலிஸ் ஸ்டேச‌னுக்கு தான் வ‌ந்துவிட்டோம் போல. கொஞ்ச‌ம் கூட‌ இவ‌ர்க‌ள் மாற‌வே இல்லை என்று நினைத்து கொண்டு கிள‌ம்பிவிட்டேன். அவ‌ர்க‌ளும் தொல்லை முடிந்த‌து என்று க‌ண்டுக்க‌வில்லை.

இதுக்கு மேல் சூட்கேசை தேட‌ என‌க்கு விருப்ப‌மில்லை. உட‌னே வீட்டுக்கு போனை போட்டு ந‌ட‌ந்த‌ விச‌ய‌த்தை சொல்லிவிட்டு ச‌ர்ட்டிபிக்கேட்டுக்காக‌ என்னுடைய‌ க‌ல்லூரியின் பிரின்ஸ்பாலிட‌ம் பேச‌ சொன்னேன். ம‌றுநாள் அப்பாவும் க‌ல்லூரிக்கு சென்று விச‌ய‌த்தை விள‌க்கியிருக்கிறார். என்னுடைய‌ துறைத‌லைவ‌ருக்கு(HOD) என்னை ந‌ன்றாக‌ தெரியும். இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ப்ப‌த‌ற்கு இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன்புதான் சுனாமி வ‌ந்திருந்த‌து. எங்க‌ள் ஊரில் சுனாமி பாதிப்பு அதிக‌ம். அதில் ச‌ர்ட்டிபிக்கேட் தொலைத்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம், என்னுடைய‌ துறைத‌லைவ‌ர் என் அப்பாவிட‌ம் "ஒண்ணும் பிர‌ச்ச‌னையில்லை ஸ்டீபனுடைய‌ ச‌ர்டிபிக்கேட் மேட்ட‌ரையும் சுனாமி லிஸ்டில் சேர்த்து விடுகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

நான் வ‌ழ‌க்க‌ம் போல் என்னுடைய‌ ஆபிஸ் வேலைக‌ளில் பிஸியாகிவிட்டேன். ச‌ரியாக‌ இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து மூன்று நாட்க‌ள் க‌ழித்து ம‌திய‌ வேளையில் என‌து வீட்டில் இருந்து போன் வ‌ருகின்ற‌து. என்ன‌வென்று கேட்டால் கிருஷ்ண‌மூர்த்தி என்ற‌ பேர் கொண்ட‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் எங்க‌ள் வீட்டிற்கு வ‌ந்து என்னுடைய‌ ச‌ர்ட்டிபிக்கேட் ம‌ற்றும் பாஸ்போட்டை ம‌ட்டும் கொண்டு வ‌ந்து கொடுத்திருக்கிறார். அவ‌ர் ம‌துரை டிப்போவில் வேலை செய்வ‌தாக‌வும், என்னுடைய‌ சூட்கேஸ் ம‌துரை ப‌ஸ் ஸ்டாண்டில் உடைக்க‌ப்ப‌ட்டு கிட‌ந்த‌தாக‌வும் இவ‌ர் அதை எடுத்து ப‌த்திர‌ ப‌டுத்திவிட்டு, பாஸ்போட்டில் இருந்த‌ அட்ர‌ஸ் வைத்து தேடி வ‌ந்த‌தாக‌வும் கூறியிருக்கிறார். அதோடு த‌ன‌க்கு ஏதாவ‌து ப‌ண‌ம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அப்பா உட‌னே ஆயிர‌ம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். அத‌ற்கு அவ‌ர் இது போதாது சார், இன்னும் கொஞ்ச‌ம் கொடுங்க‌ என்ற‌வுட‌ன், அப்பா திரும்ப‌வும் ஒரு ஆயிர‌ம் ரூபாய் கொடுத்திருக்கிறார்க‌ள்.

அதை வாங்கிகொண்டு சும்மா போய் இருந்தால‌ ப‌ர‌வாயில்லை. என் அப்பாவிட‌ம் அந்த‌ சூட்கேசில் உள்ள‌ பொருட்க‌ள்(துணி, பேனா, கொஞ்ச‌ம் ம‌ருந்து பொருட்க‌ள்) எல்லாம் அப்ப‌டியே என்னுடைய‌ ஆபிஸ் டிப்போவில் உள்ள‌து யார‌வ‌து வ‌ந்து பெற்றுக் கொள்ளுங்க‌ள். என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்ப‌டியே ஒரு அட்ர‌ஸ்சும் எழுதி கொடுத்திருக்கிறார். என்று என்னிட‌ம் அப்பா போனில் சொன்னார். நான் உட‌னே அப்பாவிட‌ம் "என்னுடைய‌ பிரெண்டு ராஜ‌னை வ‌ர‌ சொல்லுகிறேன், அவ‌னிட‌ம் ப‌ண‌ம் கொடுத்து அனுப்புங்க‌ள்" என்று சொல்லிவிட்டு போனை க‌ட் செய்தேன்.

ம‌றுநாள் ராஜ‌ன் ம‌துரைக்கு சென்று அங்கிருந்து என‌க்கு போன் செய்தான், கிருஷ்ண‌மூர்த்தி என்ற‌ பெய‌ரில் ம‌துரை டிப்போவில் யாரும் வேலை செய்ய‌வில்லை என்றும், அவ‌ன் கொடுத்த‌ அட்ர‌ஸ் த‌வ‌று என்றும் சொன்னான்.

குறிப்பு: அப்புற‌ம் விசாரித்த‌தில் தெரிந்த‌து எங்க‌ள் வீட்டிற்கு ச‌ர்டிபிக்கேட் கொண்டு வ‌ந்த‌ அந்த‌ ஆள் தான் திருட‌னாக‌ இருக்க‌ முடியும் என்று சொன்னார்க‌ள். இது போல் ஒரு கும்ப‌லே இருக்கின்ற‌தாம். அவ‌ர்க‌ளுக்கு இது தான் தொழிலாம். "எப்ப‌டியோ த‌லைக்கு வ‌ந்த‌து த‌லைப்ப‌கையோடு போன‌து" என்றுதான் சொல்ல‌ வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு ச‌ர்டிபிக்கேட் டூப்பிளிகேட் வாங்க‌ அலைவ‌தே என‌க்கு பொழ‌ப்பா போயிருக்கும்.


.

.

Sunday, May 2, 2010

என்னுடைய‌ சென்னை ப‌ய‌ண‌ம்_1

ஒருமுறை ஊரில் இருந்து சென்னைக்கு ப‌ய‌ண‌ம். இது என‌க்கு புதிது அல்ல. ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஊரில் இருந்து சென்னைக்கு போகும் போது ஒரு அட்டைப் பெட்டியில் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌ பார்ச‌ல் இருக்கும். என‌து அக்காவுக்காக‌ எங்க‌ள் அம்மா க‌ட்டிய‌ பார்ச‌லாக‌ இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை எடுத்து செல்லும் போதெல்லாம் என‌க்கும் என‌து அம்மாவுக்கும் பிர‌ச்ச‌னை ந‌ட‌க்கும். கார‌ண‌ம் என‌க்கு ப‌ய‌ண‌த்தின் போது இது போல் பார்ச‌ல் தூக்கி சும‌ப்ப‌து சுத்த‌மாக‌ பிடிக்காது.



ஆனா அம்மா அப்ப‌டி எல்லாம் சும்மா விட்டுட‌ மாட்டாங்க‌. நீயா தூக்கி சும‌க்க‌ போற‌, ப‌ஸ்சு தானே சும‌க்க‌ போகிற‌து என்று சொல்லி எப்ப‌டியாவ‌து த‌ள்ளிவிட்டிடுவாங்க‌. நாக‌ர்கோவில் வ‌ரை பார்ச‌லை சும‌ந்து வ‌ந்து அப்பாதான் ப‌ஸ் ஏற்றிவிடுவார். அதேப் போல் சென்னை ப‌ல்ல‌வ‌ர‌ம் வ‌ந்த‌வுட‌ன் என்னுடைய‌ அத்தான்(மாமா) கார் கொண்டுவ‌ந்து ஏற்றி செல்வார். ஆக‌ நான் ஒன்றும் பார்ச‌லை சும‌ப்ப‌து இல்லை. இருந்தாலும் அம்மாவிட‌ம் நொண்ணை பேச்சுக்கு குறைவிருக்காது. அன்றைக்கும் அப்ப‌டித் தான் அப்பா என் கூட‌ நாக‌ர்கோவில் வ‌ரை வ‌ந்து, அடுத்து சென்னைக்கு கிள‌ம்பும் வ‌ண்டியில்(மாலை நான்கு ம‌ணி) பார்ச‌லை வைத்துவிட்டு என்னுட‌ன் பேசிக் கொண்டு இருந்தார். அப்பா பார்ச‌லை வைத்த‌ இட‌ம் டிரைவ‌ர் இருக்கும் சீட்டுக்கு பின்னால் கொஞ்ச‌ம் இட‌ம் காலியாக‌ இருக்கும் அந்த‌ இட‌த்தில் வைத்திருந்தார். வ‌ண்டியை செக் ப‌ண்ண‌ வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் அந்த‌ அட்டை பெட்டியை காலால் மிதித்து "இது யாருடைய‌து எடுத்து அவ‌ங்க‌ சீட்டுக்கு அடியில் வையுங்க‌" என்று க‌த்தினார்.

இதை பார்த்து கொண்டிருந்த‌ என‌க்கு கோப‌ம் த‌லைக்கு மேல் ஏறிவிட்ட‌து. "யோவ் யாரை கேட்டு பார்ச‌லில் கால் வைத்தாய்" . அதுல‌ என்ன‌ இருக்குனு உன‌க்கு தெரியுமா?. அப்ப‌டினு க‌த்திவிட்டு. வ‌ண்டியில் ஏறினேன். அவ‌ர் சும்மா இருந்திருந்தா பிர‌ச்ச‌னையில்லை. இதுல‌ வேற‌ ஆளோட‌ பார்ச‌லை வைக்க‌ வேண்டும். "நீ இதை எடுத்து உன்னுடைய‌ சீட்டுக்கு அடியில் வை" என்றார். அதெல்லாம் வைக்க‌ முடியாது. "வேற‌ ஆளுடைய‌ பொருளை வைக்க‌ நீ வேற‌ இட‌ம் பாரு" என்னுடைய‌ பார்ச‌ல் இங்க‌ தான் இருக்கும் உன்னால் முடிந்த‌தை பாரு" என்று க‌த்திவிட்டு நான் வ‌ண்டியைவிட்டு இற‌ங்கி விட்டேன்.

இங்க‌ தான் ஆர‌ம்பித்த‌து என‌க்கு ஏழ‌ரை ச‌னி. வ‌ண்டியின் ப‌க்க‌த்தில் அப்பாவிட‌ம் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த‌ வ‌ழியே அப்பாவுக்கு தெரிந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ந்தார். அவ‌ர் தான் அந்த‌ டிப்போவில் உள்ள‌ செக்கிங் இன்ஸ்பெக்ட‌ர். அவ‌ர் என்னிட‌ம் வ‌ந்து என்ன‌ த‌ம்பி சென்னைக்கா? என்று கேட்டுவிட்டு அப்பாவிட‌ம் பேசி கொண்டிருந்தார். இதை அந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் பார்த்திருக்க‌ வேண்டும். அத‌னால் நான் வ‌ண்டியில் திரும்ப‌ ஏறும் போது எதுவும் சொல்ல‌வில்லை. வ‌ண்டி நாக‌ர்கோவிலை தாண்டி ந‌க‌ர‌ தொட‌ங்கிய‌து. என‌க்கு லைட்டாக‌ த‌லைவ‌லி ஆர‌ம்பித்த‌து. க‌ண்ட‌க்ட‌ர் வ‌ந்து டிவியை ஆன் பாண்ணினார். அது ஒழுங்கா பாடாவும் இல்லை. ப‌ட‌மும் தெரிய‌வில்லை. அவ‌ரும் ச‌ளைக்காம‌ல் அதோடு போராடி கொண்டிருந்தார். கொஞ்ச‌ம் நேர‌ம் ந‌ல்லா பாடும். அப்புற‌ம் முருங்கை ம‌ர‌ம் ஏறும்.

என‌க்கு த‌லைவ‌லி வேற‌ க‌டுப்பா இருந்த‌து. என‌க்கேத்த‌து போல‌ பின்னால் இருந்து ஒருவ‌ர் எழுந்து "யோவ் க‌ண்ட‌க்ட‌ரே அந்த‌ டிவியை ஆப் ப‌ண்ணி போடுய்யா" என்று குர‌ல் கொடுத்தார். நானும் இதுதான் ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று நினைத்து கொண்டு ஆமா நிறுத்துங்க‌ என்று க‌த்தினேன். யார் சொன்ன‌து கேட்ட‌தோ இல்லையோ நான் சொன்ன‌தை ம‌ட்டும் ந‌ல்லா க‌ண்ட‌க்ட‌ர் கேட்டிருப்பார். அப்ப‌டியே வேற்றுகிர‌க‌வாசியை பார்ப்ப‌து போல‌ என்னை பார்த்துவிட்டு டிவியை ஆப் ப‌ண்ணினார்.

வ‌ண்டி வ‌ள்ளியூரை தாண்டி போய்கொண்டிருந்த‌து. என‌க்கு த‌லைவ‌லி கொஞ்ச‌ம் ஓவ‌ரா இருந்த‌து. ம‌றுநாள் என‌க்கு ஆபிஸில் முக்கிய‌மான‌ வேலை ஒன்று இருந்த‌து. இப்ப‌டி த‌லைவ‌லியுட‌ன் தூங்க‌ம‌ல் போய் சேர்ந்தால் நாளை ஆபிஸில் ஒழுங்கா வேலை பார்க்க‌ முடியாது, என‌வே திருநெல்வேலி வ‌ந்த‌வுட‌ன் த‌லைவ‌லிக்கு மாத்திரை வாங்கி போட‌ வேண்டும் என்று நினைத்தி கொண்டிருந்தேன்.

வ‌ண்டி திருநெல்வேலி ப‌ஸ் ஸ்டாண்டில் நுழைந்த‌து. வ‌ண்டி நின்ற‌வுட‌ன் ஓடிபோய் ஒரு மெடிக்க‌ல் ஷாப்பில் "த‌லைவ‌லிக்கு மாத்திரை தாங்க‌? என்று கேட்டேன். அவ‌னும் ஒரு மாத்திரை த‌ந்தான். நான் அந்த‌ மாத்திரையின் பெய‌ரையும் பார்க்க‌வில்லை. ப‌க்க‌த்தில் இருந்த‌ டீ க‌டையில் இருந்து ஒரு பால் வாங்கி மாத்திரையை வாயில் போட்டு முழுங்கினேன். அப்ப‌டியே கொஞ்ச‌ம் நேர‌ம் வெளியில் நின்று கொண்டிருந்தேன். ரெம்ப‌ சோர்வாக‌ இருந்த‌து. அத‌னால் வ‌ண்டியில் ஏறினேன்.

வ‌ண்டியில் ஏறினால் ந‌ம்ம‌ க‌ண்ட‌க்ட‌ர் முன் சீட்டில் இருந்த‌ ஒரு வ‌ய‌தான‌ பாட்டியிட‌ம் ஏதோ வாக்குவாத‌ம் செய்து கொண்டிருந்தார். சில‌ ஆட்க‌ளை பார்த்தா வ‌லிய‌ சென்று‌ பேச‌ தோணும், சில‌ரை பார்த்த‌ வ‌லிய‌ சென்று ச‌ண்டைக்கு போக‌ தோணும். என‌க்கு என்ன‌வோ அன்னைக்கு அந்த‌ ப‌ஸ் க‌ண்ட‌க்ட‌ரிட‌ன் இர‌ண்டாவ‌து தான் தோணிய‌து.

நான் அந்த‌ பாட்டியிட‌ம் என்ன‌ பிர‌ச்ச‌னை என்று கேட்டேன். அவ‌ங்க‌ " நான் என் மவ‌ வூட்டுக்கு போறேன் பிள்ளே ", என்னோட‌ பேர‌ன் தான் வ‌ந்து வ‌ண்டியேத்தி வுட்டுட்டு போனான். அவ‌ன் தான் சொன்னான் இந்த‌ சீட்டுல‌ இருக்க‌ , இப்ப‌ இந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் வ‌ந்து என்னை பின்னால‌ இருக்குற‌ சீட்டுல‌ போக‌ சொல்லுறான், என்றார். நான் அவ‌ரிட‌ம் எந்த‌ ஊருக்கு பாட்டி போறிங்க‌ என்று கேட்டேன். அந்த‌ பாட்டி ம‌துரை என்றார்க‌ள்.

நான் உட‌னே க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் ஏங்க‌ அவ‌ங்க‌ தான் ஏற்க‌ன‌வே நாக‌ர்கோவிலில் இருந்து இந்த‌ சீட்டுல‌ தானே உக்கார்ந்து வ‌ந்திருக்காங்க‌. அப்புற‌ம் ஏன் அவ‌ங்க‌ளை துர‌த்துறீங்க‌ என்று கேட்டேன். "யோவ் திருநெல்வேலியில் ரிச‌ர்வேச‌ன் டிக்கெட் வ‌ர்றாங்க‌, அவ‌ங்க‌ முன் சீட்டுக்கு முன்ப‌திவு செய்திருக்காங்க‌. அவ‌ங்க‌ளுக்கு இட‌ம் வேணும்" என்று கோப‌மாக‌ சொன்னார். அவ‌ர் சொன்ன‌து போல் இர‌ண்டு இள‌ம்பெண்க‌ள் வ‌ண்டியில் ஏறினார்க‌ள்.

நான் வ‌ந்த‌ பெண்க‌ளிட‌ம், அந்த‌ பாட்டியின் நிலைமையை சொல்லி அவ‌ங்க‌ ம‌துரையில் இற‌ங்கி விடுவார்க‌ள், அது வ‌ரைக்கும் நீங்க‌ கொஞ்ச‌ம் பின்னாடி உக்காந்துக்குங்க‌ என்று சொன்னேன். அவ‌ர்க‌ளும் ஏதோ என்னுடைய‌ பாட்டிக்கு தான் நான் வ‌க்கால‌த்து வாங்குறேன் என்று பின்னால் போய் அம‌ர்ந்து கொண்ட‌ன‌ர். நானும் அப்பாடா!!! என்று இருக்கையில் அம‌ர்ந்தேன். என்னை மொறைத்து கொண்டே அந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் வ‌ண்டியில் இருந்து இற‌ங்கி ப‌க்க‌த்தில் உள்ள‌ டீ க‌டையில் சென்று டீ குடித்தார்.

நானும் ச‌ன்ன‌ல் ஓர‌ சீட் என்ப‌தால் அவ‌ரை பார்க்க‌ வேண்டிய‌ நிலைமை. அவ‌ர் டீயுட‌ன் முறுக்கு சாப்பிடும் போதே தெரிந்த‌து என்னைத் தான் நினைத்து கொண்டு சாப்பிடுகிறார் என்று. அவ்வ‌ள‌வு ஆத‌ங்க‌மும் கோப‌மும் அவ‌ர் க‌ண்க‌ளில் தெரிந்த‌து.

என‌க்கு இப்ப‌ மாத்திரை வேலையை காட்ட‌ ஆர‌ம்பிச்சிடுச்சி. த‌லைவ‌லி குறைந்து க‌ண் சொருக‌‌ ஆர‌ம்பித்த‌து. எப்போது தூங்கினேன் என்று என‌க்கே தெரிய‌வில்லை. ந‌ல்ல‌ தூக்க‌ம் ம‌றுநாள் காலையில் ஆறு ம‌ணிக்கு ப‌ஸ் பெருங்க‌ள‌த்தூர் நெருக்கும் போது தான் முழிப்பு வ‌ந்த‌து. முழித்த‌வுட‌ன் முத‌லில் பார்த்த‌து என‌து அட்டை பெட்டியில் உள்ள‌ பார்ச‌லைத்தான். அது அப்ப‌டியே ப‌த்திர‌மாக‌ இருந்த‌து. ஆனால் என்னுடைய‌ த‌லைக்கு மேல் இருந்த‌ சூட்கேசை பார்க்க‌ வேன்டும் என்ற‌ எண்ண‌ம் தோன்றாம‌ல், என்னை நானே ச‌ந்தோச‌ப்ப‌ட்டு கொண்டேன். அப்ப‌டியே க‌ண்ட‌க்ட‌ரின் முக‌த்தை பார்த்தேன். கொர் என்று தான் இருந்த‌து. திரும்ப‌வும் தூங்காம‌ல் அப்ப‌டியே சாலையை பார்க்க‌ தொட‌ங்கினேன்.



வ‌ண்டி தாம்ப‌ர‌த்தை தாண்டிய‌து. என‌க்கு அடுத்த‌ ப‌ஸ் ஸ்டாப் ப‌ல்ல‌வ‌ர‌ம் போலிஸ் ஸ்டேச‌ன் இற‌ங்க‌ வேண்டும், கையில் இருந்த‌ மொபைலை எடுத்து அத்தானுக்கு(மாமா) போனைப் போட்டேன். அவ‌ர்க‌ள் ப‌ல்ல‌வ‌ர‌த்தில் நிற்ப‌தாக‌ சொன்னார்க‌ள். தாம்ப‌ர‌த்தில் பெருங்கூட்ட‌ம் இற‌ங்கிய‌தால் வ‌ண்டி பாதிக்கு மேல் காலியாக‌த் தான் இருந்த‌து.

வ‌ண்டியில் சீட்டில் இருந்து எழுந்து த‌லைக்கு மேல் வைத்திருந்த‌ சூட்கேசை தேடினேன். நான் வைத்திருந்த‌ இட‌ம் காலியாக‌ இருந்த‌து. அத‌ற்குள் நான் இற‌ங்க‌ வேண்டிய‌ இட‌மும் வ‌ந்த‌து. ப‌க்க‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டேன், எவ‌ரும் பார்க்க‌வில்லை, பார்க்க‌வில்லை என்ற‌ ப‌தில் தான் வ‌ந்த‌து. நான் தேடுவ‌தை பார்த்த‌வுட‌ன் அந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் என்னிட‌ம் வ‌ந்தார், என்ன‌? என்று கேட்டார், நான் அவ‌ரிட‌ம் சொன்னேன் அவ‌ரும் என‌க்கு தெரியாது என்று கையை விரித்து விட்டார். அப்ப‌த்தான் அவ‌ருடைய‌ முக‌த்தில் ஒரு ஒளிவ‌ட்ட‌ம் தெரிந்த‌து. "டேய் சின்ன‌ ஆட்ட‌மாடா போட்டே நேற்று" வைச்சானுங்க‌ இல்ல‌ இப்ப‌ ஆப்பு" என்ப‌து போல் என்னுடைய‌ முக‌த்தை பார்த்தார்.

அத‌ற்கு மேல் அந்த‌ பேருந்தில் தேட‌ என‌க்கு பிடிக்க‌வில்லை. அந்த‌ அட்டை பார்ச‌லை ம‌ட்டும் எடுத்துக் கொண்டு வ‌ண்டியை விட்டு இற‌ங்கினேன்.
(தொட‌ரும்)
.

.
Related Posts with Thumbnails