Wednesday, April 28, 2010

பொரித்த‌ மீன்_ச‌வூதி அரேபிய‌ன் ஸ்டைல்

அசைவ‌ம் சாப்பிடுப‌வ‌ர்க‌ளில் மீன் உண‌வு என்றால் பிடிக்காத‌வ‌ர்க‌ள் எவ‌ரும் இருக்க‌ மாட்டார்க‌ள். நானும் அப்ப‌டித்தான். ஆனால் ஒரு சின்ன‌ க‌ண்டிச‌ன் அது வீட்டில் த‌யாரித்த‌தாக‌ இருக்க‌ வேண்டும். ஓட்டலில் மீன் சாப்பாடு என்றால் நான் சாப்பிடுவ‌து இல்லை. அது என்ன‌வோ என‌க்கு பிடிப்ப‌து இல்லை. நாம‌ தான் வீட்டை விட்டு வேலைக்கு என்று வெளியில் வ‌ந்து கிட்ட‌திட்ட‌ ஏழு ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன. ப‌ல‌ ஊர்க‌ளுக்கும் நாடோடியாய் சுற்றியாச்சி. மீன் உண‌வு என்ப‌து என‌க்கு ம‌ற‌ந்த‌ ஒன்றாக‌வே ஆகி விட்ட‌து. இத்த‌னைக்கும் நான் க‌ன்னியாகும‌ரியில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன். அங்குள்ள‌வ‌ர்க‌ளுக்கு மீன் தான் பிர‌தான‌ உண‌வு. எங்க‌ள் வீட்டில் இன்றைக்கும் இருப‌து ரூபாய்க்கு மீன் வாங்கினால் நான்கு பேர் இர‌ண்டு நேர‌ம் தாராள‌மாக‌ சாப்பிடும் அள‌வு கிடைக்கும்.

ச‌ரி ந‌ம்ம‌ இப்ப‌ க‌தைக்கு வ‌ருவோம். க‌ட‌ந்த‌ ஆறு மாத‌ங்க‌ளாய் நான் ச‌வூதி அரேபியாவில் இருக்கிறேன். நாங்க‌ ரூம்லேயே ச‌மைய‌ல் செய்து சாப்பிடுவோம். என்றாவ‌து ச‌மைய‌ல் போர் அடிச்சுதுனா வெளியில் சென்று சாப்பிடுவோம். இப்ப‌டியே ந‌ம்ம‌ பொள‌ப்பு போய்கிட்டு இருக்கும் போது ஆபிசுல‌ ந‌ம்ம‌ கூட‌ வேலை பாக்குற‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எங்க‌ள் ரூம்முக்கு வ‌ந்தார். அவ‌ரிட‌ம் பேசிகிட்டு இருக்கும் போது மீன் சாப்பாட்டை ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து. அவ‌ரு உட‌னே எங்க‌ளிட‌ம், "நாம‌ இருக்கிற‌ இந்த‌ ஏரியா மீன் சாப்பாட்டிற்கு ரெம்ப‌ பேம‌ஸ்" உங்க‌ளுக்கு தெரியுமா? என்றார்.

நான் அவ‌ரிட‌ம் அப்ப‌டி என்ன‌ ஸ்பெச‌ல் நாங்க‌ள் கேள்வி ப‌ட‌வில்லை என்று சொன்னேன், அப்ப‌ இன்னைக்கு நைட்டு நாம‌ எல்லோரும் மீன் சாப்பிட‌ போகிறோம் என்று அந்த‌ ந‌ண்ப‌ர் கூறினார். ச‌ரி போக‌லாம் என்று சொல்லி விட்டு, அவ‌ரிட‌ம் எப்ப‌டி பிரிப்பேர் ப‌ண்ணுவார்க‌ள் என்று கேட்டேன். வெறும் உப்புதான் போடுவார்க‌ள் வேற‌ எதுவுமே இருக்காது அப்ப‌டியே ப்ரை ப‌ண்ணி த‌ருவார்க‌ள் என்று சொன்னார்.

என‌க்கு அடி வ‌யிறு க‌ல‌ங்க‌ தொட‌ங்கிடுச்சு, ஆஹா வ‌ச‌மா மாட்டிடோம்டா இன்னைக்கு நைட்டு நாம‌ கொலை ப‌ட்டினிதான் என்று. நான் வெளியில் மீன் அதிக‌மாக‌ சாப்பிடாத‌ற்கு கார‌ண‌ம் அத‌ன் பிரிப்ப‌ரேச‌ன் தான், மசாலா எல்லாம் ச‌ரியாக‌ சேர்க்க‌வில்லை என்றாலோ, அல்ல‌து ச‌ரியாக‌ மீனை கிளீன் செய்ய‌வில்லை என்றாலோ, அல்லது மீன் அழுகிவிட்டாலோ அதை எவ‌ரும் சாப்பிட‌ முடியாது. இப்ப‌டி ப‌ல‌ லோக்க‌ள் இருப்ப‌தினால் தான் மீனை அந்த‌ அள‌வு விரும்பி வெளியில் சாப்பிடுவ‌து இல்லை.

வாங்கி த‌ருகிறேன் என்று சொல்லுகிற‌ ந‌ண்ப‌ரிட‌ம் நாங்க‌ள் சாப்பிட‌ வ‌ர‌வில்லை என்று சொல்ல‌ முடியுமா?.. ச‌ரி ச‌மாளிப்போம் என்று ம‌ன‌தில் நினைத்துக் கொண்டு என்னை போல‌வே முழித்து கொண்டிருந்த‌ ந‌ம்ம‌ ரூம் மேட்கிட்ட‌ போய் சைல‌ண்டா "மீன் சாப்பிடுவ‌து போல் சாப்பிட்டு விட்டு அவ‌ரை கொண்டு போய் ரூம்ல‌ விட்டுவிட்டு நாம‌ த‌னியா போய் ந‌ம்ம‌ ம‌லையாளி சேட்டா க‌டையில் புரோட்டா சாப்பிட்டு விட‌லாம்" என்று கூறினேன். ஆஹா அருமையான‌ யோச‌னை என்று அவ‌ரும் த‌லையை ஆட்டினார்.

க‌டைக்கும் போயாச்சி. க‌டைக்கார‌ர் ந‌ம்ம‌ ந‌ண்ப‌ருக்கு பிரெண்டு போல‌.. இவ‌ரை பார்த்த‌வுட‌ன் அவ‌ன் சிரிச்சிட்டே இர‌ண்டு பெரிய‌ முழு மீனை எடுத்துக் கொண்டு வ‌ந்தான். நான் அவ‌ரிட‌ம் என்ன‌ இது இவ்வ‌ள‌வு பெரிய‌ மீனை நாம‌ சாப்பிட‌ முடியுமா? என்று கேட்டேன். கொஞ்ச‌ம் பொறுமையா இருங்க‌ நாம‌ சாப்பிட‌ தானே போகிறோம் என்று ப‌தில் சொன்னார்.

அவ‌ன் எங்க‌ள் க‌ண் முன்னாடியே அழ‌காக‌ கிளீன் செய்து உப்பை ம‌ட்டுமே த‌ட‌வி கொதிக்கும் எண்ணையில் தூக்கி போட்டான். ம‌சாலா என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

நானும் ரூம் மேட்டும் எதையோ வெறிப்ப‌து போல் நின்று கொண்டிருந்தோம். சிறிது நேர‌த்தில் மீனை எண்ணையில் இருந்து எடுத்து ஒரு பெரிய‌ த‌ட்டில் க‌ப்சா ரைசை வைத்து அத‌ன் மேல் இந்த‌ இர‌ண்டு மீனையும் வைத்து எங்க‌ளிட‌ம் கொண்டு த‌ந்தான்.

அப்ப‌டியே சாப்பிட‌ அம‌ர்ந்தோம். எங்க‌ளை அழைத்து சென்ற‌ ந‌ண்ப‌ர் சாப்பிடுங்க‌ என்று மீனை காட்டினார். ச‌ரி என்ற‌ முடிவுட‌ன் மீனை சாப்பிட‌ ஆர‌ம்பித்தோம். ஆர‌ம்பித்த‌து தான் தெரியும்.. அத‌ன் பிற‌கு ஒருவ‌ரும் வாயே தொற‌க்க‌வில்லை. அந்த‌ புல் பிளேட்டும் காலி ப‌ண்ணிட்டுதான் எழுந்தோம். உண்மையில் அவ்வ‌ள‌வு ருசி... அழைத்து சென்ற‌ ந‌ண்ப‌ர் எங்க‌ளை பார்த்து சிரித்து கொண்டே எப்ப‌டி இருந்த‌து என்று கேட்டார். அடுத்த‌து எப்ப நாம‌ வ‌றோம் என்று கேட்டோம்.

அப்புற‌ம் அடிக்க‌டி அங்கு வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌மாயிட்டு.... உண்மையில் சுத்த‌மாக‌ ம‌சாலா எதுவும் இல்லாம‌ல் மீன் சாப்பிடுவ‌து த‌னி ருசிதான். நேற்று போய் சாப்பிட்ட‌ போது எடுத்த‌ போட்டோ‌க்க‌ள்‌ தான் கீழே உள்ள‌வை...

இப்ப தாங்க‌ க‌ட‌லில் இருந்து பிடிச்சிட்டு வ‌ந்த‌து..... அப்ப‌டினு சொல்ல‌ மாட்டேன்... இன்னைக்கு இது மூணுதான் மாட்டுச்சுநீங்க‌ இருக்கிற‌ அவ‌ச‌ர‌த்தா பார்த்தா அப்ப‌டியே போட்டு ப்ரை ப‌ண்ண‌ வேண்டிய‌து தான்..
அண்ணே அந்த வால் ப‌குதியில் நீங்க‌ கிளீன் ப‌ண்ண‌லை..... விடுங்க‌ தம்பி அடுத்த‌ முறை கிளீன் ப‌ண்ணிறேன்..த‌ண்ணியை இப்ப‌டி செல‌வு ப‌ண்ணி கிளீன் ப‌ண்ணுறீங்க‌..... உண்மையில் த‌ண்ணி வைச்சுதான் கிளீன் ப‌ண்ணுறீங்க‌ளா... இல்லா பெட்ரோலா? ஏன்னா உங்க‌ ஊர்ல‌ த‌ண்ணியை விட‌ பெட்ரோல் தான் விலை க‌ம்மியா இருக்கு....
ஏண்ணே உப்பு போடுற‌துனால‌ இதை க‌ருவாடுனு சொல்லா மாட்டாங்க‌ இல்லா. ஏன்னா நான் மீனுன்னு சொல்லுவேன்.... எல்லாரும் ந‌ம்ப‌னும்...அண்ணே எங்க‌ ஊர்ல‌ உள்ள‌ அந்நிய‌ன் ப‌ட‌த்துல‌ கூட‌ இது போல தான் ஒரு சட்டில‌ போட்டு வில்ல‌னை ஹீரோ பொரிப்பாரு.... நீங்க‌ மீனை பொரிக்கிறீங்க‌...எப்ப‌டி அண்ணே உப்பு பாப்பீங்க‌.... அப்ப‌டியே கிள்ளி வாயில‌ போட்டு பாருங்க‌.... நாக்கு வெந்தா நான் பொறுப்பில்லை...ஆஹா அடுகிட்டாங்க‌ ...... இனி பேச்சு கிடையாது வீச்சு தான்..... இதை எத்த‌னை பேர் சாப்பிட்டோம் என்று க‌ரெக்டா சொன்னால் பிஷ்ப்பிரை ப‌ற்றிய‌ முழு நீள‌ வீடியோ ப‌ட‌ம் மெயிலில் அனுப்பி வைக்க‌ப்ப‌டும்....
ஒரு விள‌ம்ப‌ர‌ம்..... இது நான் தானுங்கோ.....
குறிப்பு: மீனின் உண்மையான் டேஸ்டை இதில் தான் பார்க்க‌ முடிந்த‌து. கார‌ண‌ம் ந‌ம‌து ஊர்க‌ளில் மசாலா சேர்ப்ப‌தால் அத‌ன் டேஸ்ட் மாறி விடுகிற‌து. பொரித்து முடித்த‌ பின்பு சிறிது பெப்ப‌ர் சேர்கிறார்க‌ள். அவ்வ‌ள‌வுதான். நான் இருக்கும் இட‌த்தில் தான் செங்க‌ட‌ல்(RedSea) இருக்கின்ற‌து. மேலே பார்த்த‌ மீன்க‌ள் கூட‌ அதில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌து தான். ச‌வுதியை த‌விர‌ வேறு இங்கும் இந்த‌ மாதிரி மீன் பிரிப்ப‌ரேச‌ன் இல்லை என்று சொல்லுகிறார்க‌ள்.
.
.
.

Tuesday, April 27, 2010

ஐந்துத‌லை பாம்பு_புகைப்ப‌ட‌ம்

ந‌ம்ம‌ ஊர் திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ர் ராம‌ நார‌ய‌ண‌ன் சாரோட‌ ப‌ட‌த்துல‌ தான் இந்த‌ மாதிரி பாம்புக‌ளை கிராபிக்ஸில் பார்த்து இருக்கிறேன்.. இப்ப‌ அவ‌ரும் அந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளை எடுக்கிற‌து இல்லை. க‌ர்நாட‌கா மாநில‌த்தில் ம‌ங்க‌ளூருக்கு அருகில் Kukke Subramanya Swamy கோவிலில் அருகே க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த‌ அரிய‌ வ‌கை ஐந்து த‌லை பாம்பு.

குறிப்பு: நான் போய் போட்டோ புடிக்க‌லைய்யா?.... ஒரு 2 செக‌ண்டு அதிக‌மா ப‌ட‌த்தில் கூட‌ என்னால் இந்த‌ பாம்பை பார்க்க‌ முடிய‌வில்லை.. ந‌ம‌க்கு அம்புட்டு ப‌ய‌ம்... யாரோ ஒருவ‌ர் எடுத்து ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் என்னுடைய‌ மெயிலுக்கு பார்வ‌ர்டு ப‌ண்ணியிருந்தான்..
''
'

Sunday, April 25, 2010

ஆர‌ம்ப‌ம்_க‌விதைக‌டைக்க‌ண் பார்வை

எதையும் தாங்கும் இத‌ய‌ம்

என‌க்கு என்று நினைத்திருந்தேன்!

அவ‌ள் க‌டைக்க‌ண் பார்வை

என்னை தீண்டும் முன்புவ‌ரை...
கால்சென்ட‌ர் வேலை

ம‌தி(யின்)முக‌ம் என்று அன்றே

உருவ‌க‌ப்ப‌டுத்தினான். எவ்வ‌ள‌வு உண்மை

என்ன‌வ‌ளை பார்ப்ப‌து இர‌வினில் தான்.

கால்சென்ட‌ரில் வேலை.
செ(சொ)ல்லா காத‌ல்

தொலைத்த‌ பொருள் தெரியும்

தொலைத்த‌ இட‌ம் தெரியும்

திரும்ப‌பெறும் எண்ண‌மும் இல்லை

தொலைத்த‌வ‌ளிட‌ம் அதைப்ப‌ற்றி

சொல்லும் தைரிய‌மும் இல்லை.


குறிப்பு: க‌விதை லேபிள் ம‌ட்டும் ரெம்ப‌ நாளா சும்மா இருக்குக்குனு எங்க‌ அப்பாத்தா வ‌ந்து க‌ன‌வுல‌ நேத்து சொல்லுச்சு... அதையும் புல் பண்ணிட‌லாமுனுதான்..... பிடிக்க‌லைனா சொல்லிடுங்க‌ இதோட‌ நிறித்திறுவோம்..... (ய‌ப்பா லேபிள் பில் ப‌ண்ணியாச்சி)...................
.....

Tuesday, April 20, 2010

நான் பார்த்த‌ ஹீரோவிற்கு_ராய‌ல் ச‌ல்யூட்

அம்ப‌த்தூர் ரெயில்வே‌ ஸ்டேச‌னில் இருந்து அம்ப‌த்தூர் க‌ன‌ரா பேங்க் ப‌ஸ் ஸ்டாப் செல்லும் வ‌ழியில் ஒரு ஒயின் ஷாப் உள்ள‌து. ப‌ஸ் ஸ்டாப் ம‌ற்றும் ரெயில்வே ஸ்டேச‌னில் உள்ள‌ கூட்ட‌த்தை விட‌ அந்த‌ ஒயின் ஷாப்பில் தான் அதிக‌ கூட்ட‌த்தை பார்க்க‌ முடியும். அதுவும் ச‌னிக்கிழ‌மை என்றால் சொல்ல‌வே வேண்டாம் திருவிழா கூட்டம் தான்.

அன்று ச‌னிக்கிழ‌மை, நான் ரெயில்வே ஸ்டேச‌ன் ப‌க்க‌த்தில் இருந்த‌ முருக‌ன் தியேட்ட‌ரில் மேட்னி ஷோ பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வ‌ழியில் உள்ள‌ அந்த‌ ஒயின் ஷாப் ப‌க்க‌த்தில் ஒரு பெரிய‌ கும்ப‌ல் நின்று கொண்டிருத்த‌து. அந்த‌ கும்ப‌லின் ந‌டுவில் ஒருவ‌ர் நின்று கொண்டு அசிங்க‌மான‌ வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். சென்னைக்கு வ‌ந்த‌ புதிதில் ச‌ண்டை போடும் இட‌ங்க‌ளில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் வார்த்தைக‌ள் என‌க்கு புரிவ‌தே இல்லை. அப்போது நான் நினைத்து கொள்வேன் இவ‌ர்க‌ளை எல்லாம் கூட்டி கொண்டு போய் ந‌ம்ம‌ ஊரு பொன்னுதாயிகிட்ட‌ டியூச‌ன் வைக்க‌ வேண்டும் என்று. ஏன்னா எங்க‌ ஊரு பொன்னுதாயி அந்த‌ அள‌வு பேம‌ஸ். கெட்ட‌வார்த்தைக‌ள் என்றால் அவ‌ர்க‌ளிட‌ம் தான் க‌த்து கொள்ள‌ வேண்டும். ஒருவ‌ருட‌ன் ச‌ண்டை என்றால் அவ‌ருடைய‌ பாட்டாவில் ஆர‌ம்பித்து அவ‌ருக்கு பிற‌க்க‌ போகும் குழ‌ந்தை வ‌ரை இழுத்து விடுவார். கெட்ட‌வார்த்தைக‌ள் ஒவ்வொன்றும் சுருதி சுத்த‌மாக‌ கணீர் என்று காதில் விழும். ச‌ரி ந‌ம்ம‌ க‌தைக்கு வ‌ருவோம்.

கூட்ட‌ம் முழுவ‌தும் க‌த்துப‌வ‌ரின் வாயையே பார்த்து கொண்டு இருந்த‌ன‌ர். ரெம்ப‌ அசிங்க‌மாக‌ பேசிக் கொண்டிருத்தார். அம்ப‌த்தூரில் ரெயில் மூல‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்து வேலைக்கு செல்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ வ‌ழியாக‌த்தான் வீடு திரும்ப‌ முடியும். அதும‌ட்டும‌ல்லாது வேலை முடித்து வீட்டிற்கு செல்ப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ச‌தியாக அந்த‌ சாலையின் ஓர‌ங்க‌ளில் ப‌ழ‌ங்க‌ள் ம‌ற்றும் காய்க‌றிக‌ள் விற்பார்க‌ள். என‌வே அந்த‌ சாலை எப்போதும் பிஸியாக‌ இருக்கும். அது மாலை நேர‌ம் ஆகையால் நிறைய‌ பெண்க‌ள் வேலை முடித்து திரும்பி கொண்டிருந்தார்க‌ள். க‌த்துப‌வ‌ர் அதையெல்லாம் க‌ண்டு கொள்ள‌வே இல்லை. நேர‌ம் ஆக ஆக இவ‌ருடைய‌ க‌த்தும் வேக‌ம் அதிக‌மாகி கொண்டிருந்த‌து.

நான் அந்த‌ கூட்ட‌த்தை க‌ட‌ந்து சிற‌து தூர‌ம் ந‌ட‌ந்து ப‌க்க‌த்தில் இருந்த‌ ஹோட்ட‌லின் வாச‌லில் நின்றேன். அந்த‌ ஹோட்ட‌லில் தான் நான் தின‌மும் சாப்பிடுவேன். அதில் வேலை பார்த்த‌ ஒருவ‌ர் என‌க்கு ந‌ல்ல‌ அறிமுக‌ம், அவ‌ர் அப்போது தான் அந்த‌ கூட்ட‌த்தில் இருந்து வெளியில் வ‌ந்தார். அவ‌ரிட‌ம் என்ன‌ பிர‌ச்ச‌னை என‌ தெரிந்து கொள்ள‌லாம் என்று அவ‌ரிட‌ம் புன்னைகித்தேன். அவ‌ரும் என்ன‌ த‌ம்பி ஆபிஸ் லீவா? என்று கேட்டு கொண்டு அருகில் வ‌ந்தார். ஆமா.. என்று சொல்லி விட்டு என்ன‌ பிர‌ச்ச‌னை என்று கேட்டேன்.

அதுவா..த‌ம்பி... அவ‌ன் இந்த‌ ஏரியாவிலே உள்ள‌ ர‌வுடி கும்ப‌லை சேர்ந்த‌வ‌ன். ஏப்பாவாது தான் இங்கு வ‌ருவான். அந்த‌ ஒயின் ஷாப்புக்கு சென்று ஒரு குவாட்ட‌ருக்கான‌ ரூபாயை கொடுத்து விட்டு இர‌ண்டு குவாட்ட‌ர் கேட்பான். அப்ப‌டி கொடுக்காவிட்டால் இப்ப‌டித்தான் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவான். இது இவ‌னுக்கு வாடிக்கை த‌ம்பி என்று கேஷுவ‌லாக‌ கூறினார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்த‌ கூட்ட‌த்தை திரும்ப‌வும் ஒருமுறை பார்த்துவிட்டு அவ‌ரிட‌ம் கேட்டேன், " போலீஸுக்கு போண் ப‌ண்ண‌ வேண்டிய‌து தானே" என்று கேட்டேன். நீங்க‌ வேற‌ போலீஸுக்கு இவ‌ன் எல்லாம் ப‌ய‌ப்ப‌ட‌மாட்டான், அப்ப‌டியே வ‌ந்தாலும் பண‌த்தை வாங்கி கொண்டு விட்டு விடுவார்க‌ள் என்று சொல்லி வாய் மூடுவ‌த‌ற்க்குள் போலீஸ் ஜீப் ஒன்று அந்த‌ சாலையில் வ‌ந்த‌து.போலீஸ் வ‌ண்டியை பார்த்த‌வுட‌ன் கும்ப‌லாக‌ நின்ற‌வ‌ர்க‌ள் அப்ப‌டியே ந‌ழுவ‌ தொட‌ங்கினார்க‌ள். ஆனால் க‌த்தி கொண்டிருந்த ஆசாமி எங்கும் ந‌க‌ராம‌ல் அப்ப‌டியே நின்றான். ‌என் ப‌க்க‌த்தில் நின்ற‌ ஹோட்ட‌ல் ஊழிய‌ர் என்னிட‌ம்.. பாருங்க‌ த‌ம்பி போலீஸ் வ‌ருகிற‌து, அவ‌ன் எப்ப‌டி நிக்கிறான் என்று. போலீஸும் க‌ண்டுக்காம‌ போயிடுவானுங்க‌, வேணுண்ணா பாருங்க‌ அந்த‌ போலீஸ் வ‌ண்டி நிக்காம‌ல் செல்லும் என்று என்னிட‌ம் பெட் க‌ட்டாத‌ குறையாக‌ சொன்னார். ஆனால் அவ‌ர் சொன்ன‌துக்கு எதிர்மாறாக‌ ந‌ட‌ந்த‌து. போலீஸ் வ‌ண்டி நேராக‌ க‌த்தி கொண்டிருந்த‌வ‌னின் முன்னால் வ‌ந்து நின்ற‌து. நான் இப்போது அருகில் இருந்த‌ ஹோட்ட‌ல் ஊழிய‌ரை பார்த்தேன். அவ‌ர் நான் என்ன‌ கேட்க‌ போகிறேன் என்ப‌தை அறிந்த‌வ‌ராக‌, இல்ல‌ த‌ம்பி காசு ஏதாவ‌து வாங்கிட்டு போவானுங்க‌, வேணுண்ணா பாருங்க‌ அந்த‌ ச‌ந்துல‌ கூட்டி போய் காசு வாங்குவானுங்க‌ என்றார்.

வ‌ந்த‌ போலீஸ் வ‌ண்டியில் இருந்து மூன்று பேர் இற‌ங்கினார்க‌ள், அவ‌ர்க‌ளில் இர‌ண்டு பேர் தொப்பையுட‌ன் கொஞ்ச‌ம் வ‌யதான‌ தோற்ற‌த்துட‌ன் இருந்தார்க‌ள், இன்னும் ஒருவ‌ர் இள‌ம் வ‌ய‌தின‌ரா இருந்‌தார். அந்த‌ இள‌ம் வ‌ய‌து போலீஸ் கார‌ரை‌ பார்த்த‌வுட‌ன் என் ப‌க்க‌த்தில் இருந்த‌வ‌ர் என்னிட‌ம் "இந்த‌ போலீஸ் கார‌ பைய‌னை நான் இதுவ‌ரை பார்த்த‌து இல்லை புதுசா இருக்கிறான்" என்று அவ‌ர் சொல்லுவ‌த‌ற்குள் வ‌ண்டியில் இருந்து இற‌ங்கிய‌ அந்த‌ இள‌ம் வ‌ய‌து போலீஸ்கார‌ர், க‌த்தி கொண்டிருந்த‌ ஆசாமியின் க‌ன்ன‌த்தில் "பளார்" என்று ஒன்று வைத்துவிட்டு, வ‌ண்டியில் ஏத்துய்யா!!!!! என்று ப‌க்க‌த்தில் நின்ன‌ போலீஸ் கார‌ர்க‌ளுக்கு க‌ட்ட‌ளையிட்டார். இதை ச‌ற்றும் எதிர்பார்க்காத‌ ஆசாமி பிடிக்க‌ வ‌ந்த‌ இர‌ண்டு போலீஸ் கார‌ர்க‌ளின் கைக‌ளையும் த‌ட்டிவிட்டு ஓட்ட‌ம் எடுத்தான். சாலையில் வ‌ருவோர்க‌ளும் போவோர்க‌ளும் ஒரு நிமிட‌ம் அப்ப‌டியே அச‌ந்து ஓடுப‌வ‌னையே பார்த்தார்க‌ள்.

ஆசாமியை பிடிக்க‌ வ‌ந்த‌ அந்த‌ இர‌ண்டு போலீஸ்கார‌ர்க‌ளுக்கும் என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் முழித்த‌ன‌ர். க‌ண்டிப்பாக‌ இவ‌ர்க‌ள் விர‌ட்டி சென்றால் பிடிக்க‌ முடியாது, கார‌ண‌ம் அவ‌ர்க‌ளின் முதுமையும், தொப்பையும். முழித்த‌ இருவ‌ரையும் அந்த‌ இள‌வ‌ய‌து போலீஸ்கார‌ர் ஒரு முறை முறைத்துவிட்டு காலில் இருந்த‌ ஷுவை க‌ழ‌ற்றிவிட்டு துர‌த்தினார் பாருங்க‌ள்.. உண்மையில் என்ன‌ சொல்வ‌து என்று தெரிய‌வில்லை. அந்த‌ அள‌வு மின்ன‌ல் வேக‌த்தில் ஓடினார். போலீஸ்கார‌ர் துர‌த்துவ‌தை பார்த்த‌ ஆசாமி ப‌க்க‌த்தில் இருந்த‌ ச‌ந்துக்குள் நுழைந்து ஓடினான். நான் உட்ப‌ட் சுற்றி நின்ற‌ அனைவ‌ரும் அந்த‌ ச‌ந்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தோம். உண்மையில் ப‌ட‌த்தில் ந‌ட‌ப்ப‌து போல் என‌க்கு தோன்றிய‌து.

இது ந‌ட‌ந்து ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து, அந்த‌ ஆசாமியின் கால‌ர் ச‌ட்டையை பிடித்து கொண்டு போலீஸ்கார‌ர் வ‌ந்து கொண்டிருந்தார். இதை பார்த்து கொண்டிருந்த‌ அனைவ‌ருக்கும் ஆச்ச‌ரிய‌ம். ஜீப் ப‌க்க‌த்தில் கொண்டு வ‌ந்து அவ‌னை நிறுத்திவிட்டு இப்ப‌ ஓடுடா!!! பார்ப்போம் என்று சொல்லி கொண்டு காலில் இருந்து க‌ழ‌ட்டிய‌ ஷுவை மாட்டினார் அந்த‌ இள‌ம்வ‌ய‌து போலீஸ்கார‌ர். இவ்வ‌ள‌வு நேர‌மும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த‌ வ‌ய‌தான‌ போலீஸ் கார‌ர் "ப‌ளார்" என்று ஒன்று கொடுத்து வ‌ண்டியில் த‌ள்ளினார் அந்த‌ ஆசாமியை.. வ‌ண்டியில் ஏறிய‌ அந்த‌ ஆசாமியின் நிலைமையை நினைத்துக்கொண்டு நான் வீட்டை பார்த்து ந‌ட‌ந்தேன்.

குறிப்பு: ந‌க‌ர‌ங்க‌ளில் உள்ள‌ ச‌ந்துக‌ளில் அறிமுக‌ம் இல்லாம‌ல் ஒருவ‌னை துர‌த்தி பிடிப்ப‌து என்ப‌து மிக‌ க‌டின‌மான‌ காரிய‌ம். அன்று அந்த‌ போலீஸ்கார‌ர் அந்த‌ ஆசாமியை துர‌த்தி பிடிக்காவிட்டால், பார்த்து கொண்டிருந்த‌ அனைவ‌ருக்கும் ஒரு கேலி பொருளாக‌ மாறியிருப்பார் என்ப‌து ம‌ட்டும் உண்மை. க‌ண்டிப்பாக‌ என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ அந்த‌ நிக‌ழ்ச்சியை பார்த்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் அந்த‌ போலீஸ்கார‌ர் அன்று ஹீரோவாக‌த் தான் தெரிந்தார். இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்து தான் அறிந்தேன் அவ‌ர் அந்த‌ ஏரியாவிற்கு வ‌ந்த‌ புது உத‌வி ஆய்வாள‌ர் என்று..

Sunday, April 18, 2010

சிரிக்க‌ ம‌ட்டும்_போஸ்டர்

அர‌பு நாடுக‌ளில் மொத்த‌மாக‌ கோலா விற்ப‌னை த‌டைசெய்ய‌ப்ப‌ட்டு திருப்பி அனுப்ப‌ப்ப‌ட்ட‌து. அதனால் கோலா க‌ம்பெனியின் மார்கெட்டிங் மேனேஜ‌ர் ரெம்ப‌ வ‌ருத்த‌மாக‌ இருந்தார். அவ‌ரிட‌ம் ரிப்போட்ட‌ர் ஒருவ‌ர் எதனால் த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌து என்று விசாரிக்கிறார்.

ரிப்போட்ட‌ர்: உங்க‌ளால் ஏன் அர‌பு நாடுக‌ளில் வியாப‌ர‌த்தில் வெற்றி பெற‌முடிய‌வில்லை.

மேனேஜ‌ர்: எல்லாம் ஒரு போஸ்ட‌ரால் வ‌ந்த‌து.

ரிப்போட்ட‌ர்: போஸ்ட‌ரா? கொஞ்ச‌ம் புரியும்ப‌டி சொல்லுங்க‌ள்..

மேனேஜ‌ர்: அர‌பு நாடுக‌ளில் ந‌ல்ல‌ முறையில் மார்கெட்டிங் செய்ய‌ வேண்டும் என்று நினைத்தேன். ந‌ல்ல‌ முறையில் விள‌ம்ப‌ர‌ம் செய்தால் இங்கு ந‌ன்றாக‌ வியபார‌ம் ந‌ட‌க்கும் என‌ அங்குள்ள‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூறினார். விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ என‌க்கு அர‌பிக் தெரியாது. என‌வே நான் சொல்ல‌ வேண்டிய‌ விச‌ய‌த்தை கீழே உள்ள‌ மூன்று போஸ்ட‌ர் மூல‌ம் தெரிவித்தேன்.முத‌ல் போஸ்ட‌ர்: ஒருவ‌ன் சூடான‌ ம‌ண‌லில் ரெம்ப‌ தூர‌ம் ந‌ட‌ந்து வ‌ந்த‌தால் க‌ளைப்ப‌டைந்து சோர்வாக‌ ப‌டுத்து இருக்கிறான்

இர‌ண்டாவ‌து போஸ்ட‌ர்: அவ‌ன் எங்க‌ள‌து கோலாவை குடிக்கிறான்

மூன்றாவ‌து போஸ்டர்: இப்போது அந்த‌ ம‌னித‌ன் புத்துண‌ர்ச்சியுட‌ன் வேக‌மாக‌ ஓட‌ தொட‌ங்குகிறான்.

மேனேஜ‌ர்: இதுதான் என்னுடைய‌ விள‌ம்ப‌ர‌ போஸ்ட‌ர். இதை ந‌க‌ர‌த்தின் எல்லா இட‌ங்க‌ளிலும் வைக்க‌ சொன்னேன்.

ரிப்போட்ட‌ர்: ஆஹா! அருமையான‌ போஸ்டர்.. வியாபார‌ம் ந‌ல்ல‌ போய் இருக்க‌ணுமே!!

மேனேஜ‌ர்: நானும் அப்ப‌டிதான் நினைச்சேன்....ஆனா அர‌பிக‌ள்‌ அந்த‌ போஸ்ட‌ரை இட‌மிருந்து வ‌ல‌மாக‌ ப‌டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌.. வ‌ல‌மிருந்து இட‌மாக‌ ப‌டிச்சிட்டாங்க‌.........

Tuesday, April 13, 2010

வெளிநாடு வாழ்க்கை_கால‌த்தின் க‌ட்டாய‌ம்

ஹ‌லோ சுசிலா!... நான் தான் மாத‌வ‌ன் பேசுறேன்..

சொல்லுங்க‌...எப்ப‌டி இருக்கீங்க‌?...ஊருக்கு எப்போது வ‌ருகிறீர்க‌ள்.. இன்றைக்கு சொல்லுகிறேன் என்று சொன்னீர்க‌ளே!!..

நான் ந‌ல்லா இருக்கிறேன்.. நீ எப்ப‌டி இருக்கிறாய்? ராஜு எப்ப‌டி இருக்கிறான்?

நான் ந‌ல்ல‌ இருக்கேன். ராஜு ந‌ல்லா இருக்கான்.. இப்ப‌ தான் தூங்க‌ போனான்..

அப்ப‌டியா!... ச‌ரி ச‌ரி அவ‌னை எழுப்ப‌ வேண்டாம். நான் அவ‌னிட‌ம் அப்புற‌ம் பேசுறேன்.. போன‌வாட்டி போன் ப‌ண்ணும் போது உட‌ம்பு ச‌ரியில்லை என்று சொன்னாயே.. இப்போது எப்ப‌டி இருக்கிற‌து... ம‌ருந்தெல்லாம் க‌ரெக்டா சாப்பிடுகிறாயா?

இப்போது கொஞ்ச‌ம் பர‌வாயில்லை. ம‌ருந்து சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறேன்.. ராஜு தான் எப்போதும் உங்க‌ள் நினைவாக‌ இருக்கிறான்.

ம‌ருந்தெல்லாம் க‌ரெக்டா சாப்பிட்டு விடு... என‌க்கும் உங்க‌ளுடைய‌ நினைவுக‌ள் தான்..

ஆமா நீங்க‌ எப்ப‌ வ‌ருகிறீர்க‌ள் என்று சொல்ல‌வே இல்லையே!!!..

க‌ண்டிப்பாக‌ அடுத்த‌ மாத‌ம் வ‌ந்துவிடுகிறேன்... ஒரு ந‌ல்ல‌ விச‌ய‌ம் உன‌க்கு சொல்கிறேன்...

ந‌ல்ல‌ விச‌ய‌மா? அப்ப‌டினா வேலையை ரிசைன் ப‌ண்ணிட்டீங்க‌ளா?

ஆமா சுசிலா உன்னுடைய‌ ஆசைப்ப‌டி நான் இந்த‌ மாத‌ம் இறுதியில் வேலையை ரிசைன் ப‌ண்ண‌ போகிறேன். இத்துட‌ன் துபாயிக்கு டாட்டா சொல்லிவிட்டு ஊருக்கு வ‌ந்து விட‌ போகிறேன்.

கேட்க‌வே ரெம்ப‌ ச‌ந்தோச‌மா இருக்குங்க‌...க‌ண்டிப்பா ந‌ட‌க்கும் இல்லையா?..ஏன்னா?

க‌ண்டிப்பா ந‌ட‌க்கும் சுசிலா!... ஏனென்றால் இந்த‌ முறை நான் ந‌ல்ல‌ முறையில் பிளான் ப‌ண்ணியிருக்கிறேன்.

அப்ப‌டியா!!!.... இதை கேட்டா ராஜு ரெம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌டுவான். அவ‌ன் தான் உங்க‌ளை எப்பொழுதும் கேட்டு கொண்டே இருக்கிறான்..

நான் வேலையை விட்டு விட்டு வ‌ருவ‌து அவ‌னுக்காக‌ தான். அவ‌னுக்கும் விப‌ர‌ம் தெரிகின்ற‌ வ‌ய‌து ஆகி விட்ட‌து. அவ‌னுக்கு ந‌ல்ல‌து எது? கெட்ட‌து எது? என்பதை தெளிவுப்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட‌மை ந‌ம்முடைய‌து.

ஆமாங்க‌... ரெண்டு நாள் முன்னாடி கூட‌ ப‌டிக்காம‌ டீவி பார்த்து கொண்டு இருந்தான். நான் உட‌னே அவ‌னிட‌ம், "டேய் போய் ஒழுங்கா ப‌டிடா!!! இல்லை என்றால் அப்பாவிட‌ம் சொல்வேன்" என்றேன். அத‌ற்கு அவ‌ன், "அப்பா தான் இங்கே இல்லையே, நீ எப்ப‌டி சொல்வாய்" என்று என்னிட‌ம் கேள்வி கேட்கிறான்.

ஆமா அவ‌னும் என்ன‌ செய்வான்!.. என்னிட‌ம் பேசும் போதெல்லாம் அப்பா எப்ப‌ வ‌ருவீர்க‌ள்? என்று தான் கேட்கிறான்...

ஆமா!! ஊருக்கு வ‌ந்துட்டு திரும்ப‌ ம‌ன‌சு மாறிவிட‌ மாட்டீங்க‌ளே!... போனா வாட்டி நீங்க‌ள் ஊருக்கு வ‌ரும் போது கூட‌ இப்ப‌டிதான் சொன்னீங்க‌... திரும்ப‌ மூன்று மாதம் லீவு முடிந்த‌வுட‌ன், இங்கு சும்மா இருப்ப‌து என‌க்கு பிடிக்க‌வில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டீர்க‌ள்.

இல்ல‌ சுசிலா.. இந்த‌‌ முறை அப்ப‌டி எதுவும் ந‌ட‌க்காது. க‌ர‌ண‌ம் நான் ஊருக்கு வ‌ந்து பிஸின‌ஸ் ப‌ண்ண‌லாம் என்று பிளான் ப‌ண்ணிவிட்டேன். உன‌க்கு தான் தெரியுமே.. இவ்வ‌ள‌வு நாட்க‌ள் ச‌ம்பாதித்த‌ ப‌ண‌த்தில் ஐந்து ல‌ட்ச‌ம் ரூபாய் சேவிங் ப‌ண்ணி என‌து வ‌ங்கி க‌ண‌க்கில் இருக்கின்ற‌து.

ஆம‌ங்க‌.... தெரியும் அதை வைத்து என்ன‌ ப‌ண்ண‌ போறீங்க‌?

ஊருக்கு வ‌ந்து திரும்ப‌வும் வேலைக்காக‌ யாரிட‌மும் போய் நிற்க‌ என‌க்கு பிடிக்க‌வில்லை. என‌வே த‌னியாக‌ ஒரு லேத் ப‌ட்ட‌றை நானே ஆர‌ம்பிக்க‌ போகிறேன். என்னால் முடிந்த‌தை நானே செய்கிறேன். முடிந்தால் யாருக்காவ‌து வேலை நானே கொடுக்கிறேன்.

இப்ப‌ தாங்க‌ நான் ரெம்ப‌‌ ச‌ந்தோச‌மாக‌ இருக்கிறேன்.. கேட்க‌வே ந‌ல்லா இருக்கு... இன்றில் இருந்து நான் நீங்க‌ள் வ‌ரும் நாட்க‌ளை எண்ண‌ தொட‌ங்குகிறேன்.

ஹா..ஹா..எண்ண‌ தொட‌ங்கிவிடு.. அப்ப‌டியே அப்பாவிட‌மும், அம்மாவிட‌மும் சொல்லி விடு.. நான் அடுத்த‌ வாரம் போன் ப‌ண்ணும் போது அவ‌ர்க‌ளிட‌ம் பேசுகிறேன்.

ச‌ரிங்க‌..அப்ப‌டியே சொல்லிவிடுகிறேன்.

ச‌ரிப்பா ரெம்ப‌ நேர‌ம் பேசிவிட்டோம், அப்புற‌ம் நான் கால் ப‌ண்ணுறேன்..

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x

ஹ‌லோ.. மாத‌வா!! நான் பேசுற‌து கேட்குதா..

கேட்குது அப்பா!.. சொல்லுங்க‌ எப்ப‌டி இருக்கீங்க‌?.. அம்மா எப்ப‌டி இருக்காங்க‌?..

நான் ந‌ல்லா இருக்கேன்ப்பா, அம்மாவும் ந‌ல்லா இருக்கிறாள்.. ஆனா...

என்ன‌ப்பா? என்ன ஆச்சி ... உங்க‌ளுடைய‌ குர‌ல் ச‌ரியில்லையே... என்ன‌ப்பா பிர‌ச்ச‌னை?

அதுவ‌ந்து....... உன்னுடைய‌ த‌ங்க‌ச்சி செல்வி பொண்ணு மீனா இல்லா....

ஆமாப்பா ... மீனாவுக்கு என்ன‌ ஆச்சு..

அவ‌ளுக்கு க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாய் உட‌ம்பு ச‌ரியில்லை.. எப்போதும் த‌லைவ‌லி என்று சொல்வாள். ந‌ம்ம‌ ப‌க்க‌த்துல‌ உள்ள‌ டாக்ட‌ரிட‌ம் காட்டி ம‌ருந்து வாங்கினோம்.. அப்ப‌டியும் ச‌ரியாக‌வில்லை..பின்பு ட‌வுனில் உள்ள‌ ஆஸ்ப‌த்திரியில் காட்டினோம். அவ‌ர்க‌ள் த‌லையை ஸ்கேன் ப‌ண்ண‌ வேண்டும் என்று சொன்னார்க‌ள். இர‌ண்டு நாட்க‌ள் முன்புதான் ஸ்கேன் ப‌ண்ணினார்க‌ள். அதில் அவ‌ளுக்கு மூளையில் ஒரு க‌ட்டி இருக்கின்ற‌து. அதை உட‌ன‌டியாக‌ ஆப‌ரேச‌ன் செய்து அக‌ற்ற‌ வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆப‌த்து வ‌ரும் என்று சொல்கிறார்க‌ள்.. மாத‌வா...

அப்ப‌டியா......என்னிட‌ம் ஏன் இதுவ‌ரை சொல்ல‌வில்லை. த‌ங்க‌ச்சியிட‌ம் ஒரு வார‌ம் முன்பு கூட‌ நான் பேசினேன். அவ‌ளும் இதை ப‌ற்றி சொல்ல‌வே இல்லை..

நீ இதை அறிந்தால் வ‌ருத்த‌ ப‌டுவாய் என்று தான் அவ‌ள் உன்னிட‌ம் சொல்ல‌வில்லை.

ச‌ரி அப்பா ... ஆப‌ரேச‌னுக்கு ஆக‌ வேண்டிய‌ வேலையை பார்க்க‌ வேண்டிய‌து தானே.. எவ்வ‌ள‌வு செலவு ஆகும் என்று டாக்ட‌ர் சொல்லுகிறார்.

ஐந்து ல‌ட்ச‌த்துக்கு மேல் ஆகுமாம்.. என்ன‌ நோய் என்று க‌ண்டு பிடிப்ப‌த‌ற்கே.. உன் த‌ங்க‌ச்சியிட‌ம் இருந்த‌ ப‌ண‌ம் எல்லாம் காலியாகி விட்ட‌து மாத‌வா.. அவ‌ள் நேற்றில் இருந்து அழுது கொண்டே இருக்கிறாள்..

செல்வியிட‌ம் நான் பேசுகிறேன்.. எத‌ற்க்கும் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம் என்று சொல்லுங்க‌ள்.. ஆப‌ரேச‌னுக்கு வேண்டிய‌ வேலைக‌ளை பார்க்க‌ சொல்லுங்க‌ள். சுசிலாவிட‌ம் இருந்து நான் சொன்ன‌தாக‌ ப‌ண‌ம் வாங்கி கொள்ளுங்க‌ள்.. அப்ப‌டியே நான் ஊருக்கு எப்போது வ‌ருவேன் என்ப‌தை பின்பு சொல்லுவ‌தாக‌ சொல்லுங்க‌ள்..

ச‌ரி மாத‌வா.. அப்ப‌டியே செய்துவிடுகிறேன்....

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x

மாத‌வ‌ன் த‌ன்னுடைய‌ டேபிளில் பிரிண்டு போட்டு கையெழுத்திட்ட‌‌ ரிசைன் லெட்ட‌ரை எடுத்து கிழித்து ப‌க்க‌த்தில் இருந்த‌ குப்பை தொட்டியில் போட்டு விட்டு மொபைல் போனை ஆன் செய்து த‌ன‌து த‌ங்கையின் எண்ணுக்கு ட‌ய‌ல் செய்தான்.

Sunday, April 11, 2010

சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்_உங்க‌ள் பார்வைக்கு

எப்பொழுதும் பார்க்க‌முடியாத‌, ஆழ‌கான‌, ஆச்ச‌ரியாமான‌ ம‌ற்றும் சிரிக்க‌ வைக்கும், சிந்திக்க‌ வைக்கும் சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்..Tuesday, April 6, 2010

மைக்ரோசாப்ட் எக்ஸ‌ல்(Microsoft Excel) ப‌ய‌ன்பாடு_ அசாப் யுட்டிலிட்டிஸ்(ASAP Utilities)

மைக்ரோசாப்ட் எக்ஸ‌ல்(Microsoft Excel) ப‌க்க‌ம் உப‌யோக‌ப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளுக்கு உத‌விக‌ர‌மாக‌ இருப்ப‌து மேக்ரோ கோடுக‌ள்(Macro Code). இந்த‌ மேக்ரோ கோடுக‌ளை அனைவ‌ராலும் எழுதிவிட‌ முடியாது. விசுவ‌ல் பேசிக்(Visual Basic) தெரிந்த‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே எழுத‌ முடியும். எக்ஸ‌ல் உப‌யோக‌ப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் விசுவ‌ல் பேசிக் தெரிந்திருக்க‌ வேண்டும் என்ற‌ அவ‌சிய‌ம் இல்லை. அப்ப‌டியானால் எப்ப‌டி மேக்ரோ கோடுக‌ளை உப‌யோக‌ ப‌டுத்துவ‌து என்று கேட்ப‌வ‌ர்க‌ளுக்காக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌து தான் அசாப் யுட்டிலிட்டிஸ்(ASAP Utilities). இந்த‌ மின்பொருளை த‌ர‌விற‌க்க‌ம் செய்து ந‌ம‌து க‌ணிப்பொறியில் இணைப்ப‌த‌ன் மூல‌ம் நாம் இதில் உள்ள‌ மேக்ரோ கோடுக‌ளை உப‌யோக‌ப் ப‌டுத்த‌ முடியும்.

ASAP Utilities - என்று டைப் செய்து குகூள் தேட‌ல் ப‌க்க‌த்தில் போட்டு தேடினால் ப‌ல‌ வ‌லைப்ப‌க்க‌த்தில் இது கிடைக்கின்ற‌து. சில‌ வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளில் இது இல‌வ‌ச‌மாக‌வும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌முடியும். நானும் ஒரு வ‌லைப்ப‌க்க‌த்தை இணைத்துள்ளேன். இங்கே சொடுக்கி விருப்ப‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌லாம்.

இதை த‌ர‌விற‌க்க‌ம் செய்து உங்க‌ள் க‌ணினியில் இணைத்துவிட்டு மைக்ரோசாப்ட் எக்ஸ‌ல் பைலை திற‌ந்து பார்த்தால் கீழ்க‌ண்ட‌ ப‌ட‌த்தில் காட்டிய‌ப‌டி ASAP Utilities – ஐகான்(Icon) ஆன‌து Help – ஐகானை(Icon) அடுத்து தெரியும்.
ASAP Utilities - ஐகானை கிளிக் செய்தால் கீழே ப‌ட‌த்தில் காட்டிய‌ப‌டி இருப‌துக்கும் அதிக‌மான‌ முத‌ன்மை க‌ட்ட‌ளைக‌ள்(Main commands) தெரியும். அந்த‌ க‌ட்ட‌ளைக‌ளை மீண்டும் சொடுக்கினால் பிரிவு க‌ட்ட‌ளைக‌ளாக‌(Sub commands) பிரியும். அந்த‌ க‌ட்ட‌ளைக‌ளில் எது ந‌ம‌க்கு தேவையோ அந்த‌ க‌ட்ட‌ளைக‌ளை அழுத்தி உப‌யோக‌ப்ப‌டுத்த‌ முடியும்.இதில் நூற்று ஐம்ப‌திற்கும் அதிக‌மான‌ க‌ட்ட‌ளைக‌ள்(Sub commands) உள்ள‌ன‌. இவை அனைத்தும் மேக்ரோகோடுக‌ளால் எழுத‌ப்ப‌ட்ட‌வை. எக்ஸ‌ல் பார்முலாக்க‌ளைக்(Excle Formula) கொண்டு செய்யும் வேலைக‌ளை இவைக‌ளைக் கொண்டு விரைவாக‌ முடிக்க‌ முடியும்.

உதார‌ண‌மாக‌ இர‌ண்டு காள‌ங்க‌ளில்(Column) உள்ள‌ விப‌ர‌ங்க‌ளை ஒன்றாக‌ இணைக்க‌வேண்டும் என்றால் நாம் உட‌னே Concatenate - பார்முலாவை(Formula) உப‌யோக‌ப்ப‌டுத்தி விப‌ர‌ங்க‌ளை பெறுவோம். இந்த‌ பார்முலாவை உப‌யோக‌ப்ப‌டுத்தும் போது நாம் ப‌ல‌ சிக்க‌ல்க‌ளை எதிர்கொள்ள‌வேண்டும். முத‌லில் பார்முலைவை த‌வ‌றில்லாம‌ல் டைப் செய்ய‌ வேண்டும். பின்பு அதை காப்பி செய்து பார்முலாவில் இருந்து வேல்யூவாக‌(Value) மாற்ற‌ வேன்டும், இப்படி ப‌ல‌ வேலைக‌ள் செய்ய‌வேண்டும். அத‌ற்கு ப‌திலாக‌ ASAP Utilities - யில் எளிதாக‌ செய்து முடிக்க‌லாம். முத‌லில் எந்த‌ காள‌ங்க‌ளில் உள்ள‌ விப‌ர‌ங்க‌ளை பிணைக்க‌(Concatanate) வேண்டுமே அந்த‌ இர‌ண்டு காள‌ங்க‌ளை செல‌க்ட்(Select) செய்து கொள்ள‌ வேண்டும். பின்பு ASAP Utilities - ஐகானை கிளிக் செய்து Columns & Rows - என்ற‌ முத‌ன்மை க‌ட்ட‌ளையில் உள்ள‌ Merge column Data(Join Cells)....என்ற‌ பிரிவு க‌ட்ட‌ளையை கிளிக் செய்தால் ப‌ட‌த்தில் காட்டிய‌ ப‌டி மெசேஜ் பாக்ஸ்(Message Box) ஓப‌ன் ஆகும். அதில் Value - என்ற‌ க‌ட்ட‌த்தில் இர‌ண்டு காள‌த்தில் உள்ள‌ உள்ள‌ விப‌ர‌ங்க‌ளை இணைக்க‌ , அந்த‌ விப‌ர‌ங்க‌ளுக்கு இடையில் ஏதாவ‌து குறியீடு அல்ல‌து ஏதாவ‌து வார்த்தைக‌ள் சேர்க்க‌ வேண்டும் என்றால் அதில் டைப் செய்து " OK "அழுத்தினால் இணைக்க‌ப்ப‌ட்ட‌ விப‌ர‌ம் ரெடி.

கீழ்க‌ண்ட‌ ப‌ட‌ங்க‌ளில் சில‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை த‌னித்த‌னியாக‌ பிரித்து நான்கு காள‌ங்க‌ளில் போட்டு அவ‌ற்றை எவ்வாறு பிணைப்ப‌து என்ப‌தை விள‌க்கியுள்ளேன். “A” - காள‌த்தில் வெப் லிங்க்(Web Link) கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. “B” - காள‌த்தில் வ‌லைத்த‌ள‌த்தின் பெய‌ர்கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. “C” - காள‌த்தில் " Blog spot" என்ற‌ வார்த்தை கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. “D” - காள‌த்தில் "Com" என்று கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இப்போது இந்த‌ நான்கு காள‌த்தில் உள்ள‌ விப‌ர‌ங்க‌ளை பிணைத்தால் தான் வ‌லைத்த‌ள‌த்தின் முக‌வ‌ரி கிடைக்கும். அவைக‌ளை பிணைக்கும் போது "." என்ற‌ குறியீடு இடையில் இட‌ வேண்டும். என‌வே முத‌லில் நான்கு காள‌த்தையும் செல‌க்ட்(Select) செய்ய‌ வேண்டும். பின்பு ப‌ட‌த்தில் காட்டிய‌ ப‌டி ASAP Utilities - கிளிக் செய்தால் Message Box - வ‌ரும். அதில் "Value" என்ற‌ இட‌த்தில் "." என்ற‌ குறியீட்டை டைப் செய்து "OK" கிளிக் செய்தால் “A” - காளத்தில் ந‌ம‌க்கு தேவையான‌ வ‌லைத்த‌ள‌த்தின் முழு முக‌வ‌ரி கிடைக்கும். க‌டைசியாக‌ கிடைக்கும் முழு முக‌வ‌ரியான‌து முன்ன‌மே அந்த‌ Message Box - ல் தெரிவ‌து இன்னும் ஒரு கூடுத‌ல் சிற‌ப்பு.

ஒரு போல்ட‌ரில்(Folder) நூறுக்கும் மேற்ப‌ட்ட‌ பைல்க‌ள் இருக்கின்ற‌து. அந்த‌ பைல்க‌ளின் பெய‌ர்க‌ள் ந‌ம‌க்கு வேண்டும் என்றால் நாம் ஒவ்வொன்றாக‌ காப்பி செய்ய‌ தேவை இல்லை. அப்ப‌டியே காப்பி செய்தாலும் எடுத்துக்கொள்ளும் நேர‌ம் அதிக‌ம். அத‌ற்கு சுல‌ப‌மாக‌ ASAP Utilities - கொண்டு முடிக்க‌ முடியும்.

முத‌லில் எந்த‌ எக்ஸ‌ல் பைலில் அத‌ன் பெய‌ர்க‌ள் வேன்டுமோ அந்த‌ பைலில் உள்ள‌ ASAP Utilities - ஐகானை கிளிக் செய்ய‌ வேன்டும். பின்பு "Import" என்ற‌ முத‌ன்மை க‌ட்ட‌ளையில் உள்ள‌ "Create a list of filenames and properties in a folder" என்ற‌ பிரிவு க‌ட்ட‌ளையை அழுத்தினால் ஒரு க‌ட்ட‌ளை பெட்டி(Massage Box) வ‌ரும். அதில் "Folder" என்ற‌ க‌ட்ட‌த்தின் ப‌க்க‌த்தில் போல்ட‌ர் ப‌ட‌மிட்ட‌ ஒரு ஐகான் இருக்கும். அதை சொடுகினால் எந்த‌ ப‌க்க‌த்தில் அந்த‌ ந‌ம‌க்கு தேவையான‌ போல்ட‌ர் சேமித்து வைத்துள்ளோமோ. அந்த‌ ப‌க்க‌த்திற்கு செல்ல‌க்கூடிய‌ பாத்(Bath) தெரியும். "D-Drive" வில் சேமித்து வைத்தால் அதை சொடுக்கி கொள்ள‌ வேண்டும். பின்பு " OK" வை அழுத்தினால் அந்த‌ போல்ட‌ரில் உள்ள‌ பைல்க‌ளின் பெய‌ர்க‌ள் ம‌ட்டும் அல்லாது அத‌ன் ஹைப‌ர்லிங்க்(Hyperlink) ம‌ற்றும் அந்த‌ பைலின் அள‌வு(Size, GB, MB, KB) போன்ற‌ விப‌ர‌ங்க‌ளும் ந‌ம‌க்கு கூடுத‌லாக‌ கிடைக்கும்.ASAP Utilities - உள்ள‌ க‌ட்ட‌ளைக‌ளில் உதார‌ண‌த்திற்கு நான் மேலே இர‌ண்டு க‌ட்ட‌ளைக‌ளை ம‌ட்டும் விள‌க்கியுள்ளேன். இதேப்போல் நூற்றி ஐம்ப‌திற்கும் அதிக‌மான‌ க‌ட்ட‌ளைக‌ள் இதில் உள்ள‌ன‌. இதில் உத‌வி ப‌க்க‌மும் உள்ள‌து. அதில் சென்று ப‌டித்து புரிந்து கொள்ள முடியும். இதை அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தில் தான் இர‌ண்டு க‌ட்ட‌ளைக‌ளை ப‌ற்றி விரிவாக‌ எழுதியுள்ளேன். இதில் ஏதேனும் த‌க‌வ‌ல்க‌ள், ச‌ந்தேக‌ங்க‌ள் இருந்தால் பின்னூட்ட‌த்தில் தெரிய‌ப்ப‌டுத்த‌வும். க‌ண்டிப்பாக‌ என்னால் முடிந்த‌ அள‌வு தீர்க்க‌ முய‌ல்வேன்.

குறிப்பு: இதை ந‌ம‌து க‌ணினியில் இணைப்ப‌த‌ன் மூல‌ம் எக்ஸ‌லில் உள்ள‌ ப‌ல‌ க‌ஷ்ட‌மான‌ வேலைக‌ளை சுல‌ப‌மாக‌ செய்து முடிக்க‌ முடியும். ஒரு த‌ட‌வை நீங்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்தி பார்த்தால் க‌ண்டிப்பாக‌ இது இல்லாம‌ல் எக்ஸ‌லில் வேலை செய்ய‌மாட்டீர்க‌ள். அந்த‌ அள‌வு இது உங்க‌ளுக்கு உப‌யோக‌மாக‌ இருக்கும் என்ப‌து திண்ண‌ம்.

Sunday, April 4, 2010

சிரிக்க‌ ம‌ட்டும்_வீடியோ

மாத்தி யோசிக்க‌லைனா இப்ப‌டிதான்..

ஆஹா!!! நீங்க‌ இப்ப‌ ம‌ட்டும் தான் இப்ப‌டியா? இல்லை எப்ப‌வுமே இப்ப‌டிதானா?.. ரெம்ப‌ டென்ச‌ன் ஆனா இப்ப‌டிதான் ஆகும்... கூல்.......

டென்ச‌ன் பார்ட்டி

மாத்தி யோசி_அது இதுதானா?

ஆஹா!... தோல்வி பார்த்து துவ‌ண்டு போக‌ கூடாது, வெற்றிகான‌ அடுத்த‌ வ‌ழியை தேட‌வேண்டும் என்று டீச்ச‌ர் சொன்ன‌தை பைய‌ன் எப்ப‌டி டிர‌ய‌ல் பார்க்கிறான் ப‌ருங்க‌... டேய் உன‌க்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருக்கு...

மாத்தி யோசி

குறிப்பு: வீடியோ பைல்க‌ள் அதிக‌மாக‌ என‌து வ‌லைத்த‌ள‌த்தில் இணைப்ப‌தால் வ‌லைத்த‌ள‌த்தின் ப‌க்க‌ம் ஓப‌ன் ஆக அதிக‌ நேர‌ம் எடுத்துக் கொள்கிற‌து. க‌டைசி வீடியோ ப‌திவில் பின்னுட்ட‌ம் போட்ட‌வ‌ர்க‌ள் இதை தெரிவித்த‌ன‌ர். என‌வே அன்புட‌ன் ம‌லிக்கா அவ‌ர்க‌ளின் ஆலோச‌னைப்ப‌டி வீடியோ பைல்க‌ளை என‌து ம‌ற்றொரு த‌ள‌த்தில் இணைத்துவிட்டு லிங்க் ம‌ட்டும் இங்கு கொடுத்துள்ளேன். இந்த‌ ஆலோச‌னை கொடுத்த‌ அன்புட‌ன் மலிக்கா அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

Thursday, April 1, 2010

ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம்?_க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ள்

நான் சிறுவ‌னாக‌ இருக்கும் போது, எங்க‌ளுடைய‌ வீடு இருக்கும் இட‌த்தைப் ப‌ற்றிய‌ பேச்சு வ‌ரும்போது அப்பா சொல்லும் வார்த்தை நாம் வீடு க‌ட்டியிருக்கும் இட‌மெல்லாம் நான் சிறுவ‌னாக‌ இருந்த‌ போது ஒரே காடாக‌ இருந்த‌து. அப்போது எல்லாம் இந்த‌ இட‌ங்க‌ளுக்கு த‌னியாக‌ வ‌ர‌முடியாது, ஒரே இருட்டாக‌ இருக்கும், ஆட்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் என்ப‌து பார்ப்ப‌து அரிது என்று சொல்வார். அதை கேட்கும் போது என‌து ம‌ன‌தில் ஆயிர‌ம் கேள்விக‌ள் ஓடும். அது எப்ப‌டி இருப‌து ஆண்டு கால‌ இடைவெளியில் இவ்வ‌ள‌வு மாற்ற‌ங்க‌ள் வ‌ந்த‌து, அட‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ள் இருந்த‌ இட‌ங்க‌ளா இன்று அடையாள‌ம் தெரியாத‌ அள‌வுக்கு மாறிவிட்ட‌ன‌, எப்ப‌டி இது ந‌ட‌ந்திருக்க‌ கூடும் என்று அடுக்க‌டுக்கான‌ கேள்விக‌ள். இந்த‌ கேள்விக‌ள் அனைத்திற்கும் பிற்கால‌ங்க‌ளில் என் க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ள் ப‌தில் த‌ந்த‌ன‌.

என‌து க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ளை விவ‌ரிக்க‌ நாம் ஒரு ப‌தினைந்து வ‌ருட‌ம் பின்னோக்கி செல்ல‌ வேண்டியுள்ள‌து.

என‌து வீட்டில் இருந்து சிறிது தூர‌ம் ந‌ட‌ந்தால் ஒரு தேசிய‌ நெடுஞ்சாலை வ‌ரும். அதுதான் நாக‌ர்கோவிலுக்கும் திருவ‌ன‌ந்த‌புர‌த்திற்க்கும் இடைப்ப‌ட்ட‌ சாலை. அந்த‌ சாலையை க‌ட‌ந்து ந‌ட‌ந்தால் ஒரு வாய்கால் வ‌ரும். அந்த‌ வாய்கால் அருகில் நின்று பார்த்தால் க‌ண்ணுக்கு எட்டிய‌ தூர‌ம் அவ்வ‌ள‌வும் வ‌ய‌ல்வெளிக‌ளாக‌ தெரியும். காலைவேளையில் சென்று பார்த்தோம் ஆனால் அத‌ன் அழ‌கே த‌னிதான்!. வானின் நீல‌நிற‌த்தில் இருந்து அப்ப‌டியே ப‌ச்சை க‌ம்ப‌ள‌ம் விரித்த‌து போலும், அந்த‌ க‌ம்ப‌ள‌த்தில் ஆங்காங்கே அழ‌கிய‌ வேலைப்பாடுக‌ள் செய்த‌து போல் ஓவ்வொரு வய‌ல்வெளிக‌ளுக்கு இடையில் உள்ள‌ வ‌ர‌ப்புக‌ள் காட்சிய‌ளிக்கும். அந்த‌ வ‌ர‌ப்புக‌ளில் க‌ளை எடுப்ப‌த‌ற்காக‌வும் சென்று வ‌ரும் பெண்க‌ளின் வ‌ரிசைக‌ளும், ஆங்காங்கே ந‌ட‌ப்ப‌ட்ட‌ கொம்புக‌ளில் மேல் அம‌ர்ந்திருக்கும் வெள்ளை கொக்குக‌ளின் அழ‌கும் ர‌சிக்க‌ க‌ண்க‌ள் ஆயிர‌ம் வேண்டும்.ஒரு முறை நெற்ப‌யிர் செய்வ‌த்ற்கு நான்கு மாத‌கால‌ம் ஆகும். வ‌ருட‌த்திற்கு இர‌ண்டு த‌டைவை எங்க‌ள் ஊரில் நெற்ப‌யிர் செய்வார்க‌ள். மீத‌முள்ள‌ நான்கு மாத‌த்தில் மாற்று ப‌யிர்க‌ளாகிய‌ ப‌ருப்பு வ‌கைக‌ள் ப‌யிரிட‌ப்ப‌டும். இதுதான் சுழ‌ல் முறையில் தொட‌ர்ந்து கொண்டிருந்த‌து. இப்ப‌டியே எத்த‌னை நாள் தான் கோவ‌ண‌‌ம் க‌ட்டிகிட்டு மாட்டை க‌ட்டி உழுதுகொண்டு இருப்ப‌து என்று ஒரு புண்ணிய‌வான் யோசித்தான், எப்ப‌டியாவ‌து ப‌க்க‌த்து ஊர்ல‌ இருந்து ஒரு சொக்கா வாங்கி மாட்டிட‌னும் என்று நினைத்தான். அந்த‌ வ‌ருட‌ம் அனைவ‌ரும் கோவ‌ண‌ம் க‌ட்டிக்கொண்டு நெல் நாற்று ந‌டும் போது, ந‌ம்ம‌ புண்ணிய‌வான் ம‌ட்டும் சொக்கா மாட்டிட்டு வாழைக்க‌ன்று ந‌ட்டு கொண்டிருந்தான். அவ‌னை அனைவ‌ரும் அதிச‌ய‌மாக‌ பார்த்த‌ன‌ர். வ‌ருட‌த்தின் அறுவ‌டை முடிந்த‌து. அனைவ‌ரும் நெற்ப‌யிர் செய்து சாம்பாதித்த‌ ப‌ண‌த்தை விட‌, வாழைப்ப‌யிர் செய்த‌ ந‌ம்ம‌ புண்ணிய‌வான் அதிக‌ம் லாப‌ம் ஈட்டினான். கார‌ண‌ம் அந்த‌ வ‌ருட‌த்தில் அவ‌ன் ம‌ட்டுமே வாழைப்ப‌யிர் செய்தான். இதைப் பார்த்த‌ ந‌ம்ம‌ கோவ‌ண‌ம் க‌ட்டிய‌ ஆட்க‌ள‌ எல்லோருக்கும் சொக்கா‌ மீது ஆசை வ‌ந்துவிட்ட‌து. அத‌ன் ப‌ய‌னாக‌ அடுத்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் அந்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள் அனைத்தும் வாழைத்தோட்ட‌ங்க‌ளாக‌ காட்சிய‌ளித்த‌து. வ‌ய‌ல்வெளிக‌ள் இருந்த‌ சுவ‌டுக‌ளே ம‌றைந்து போன‌து.

இப்ப‌ ந‌ம்ம‌ ஊர்ல‌ எல்லோரும் சொக்கா மாட்டிகிட்டு வாழைத்தோட்ட‌ங்க‌ளை வ‌ல‌ம் வ‌ந்தார்க‌ள். என்ன‌டா இது ந‌ம‌க்கு வ‌ந்த‌ சோத‌னை!.. நாம‌ தான் முத‌ல்ல‌ சொக்கா மாட்ட‌ ஆர‌ம்பித்தோம் அதுக்குள்ள‌ அவ்வ‌ள‌வு ப‌ய‌புள்ளைக‌ளும் சொக்கா மாட்டிட்டு ந‌ம்ம‌ முன்னாடியே சுத்திகிட்டு திரியுது. இது ச‌ரிப்ப‌டாது. நாம‌ ப‌க்க‌த்து ஊர்ல‌ இருந்து எப்ப‌டியாவ‌து பேண்டு ச‌ட்டை வாங்கிட‌ வேண்டிய‌து தான் என்று நினைத்தான் புண்ணிய‌வான். அனைவ‌ரும் அந்த‌ வ‌ருட‌ம் வாழைக்க‌ன்று ந‌ட்டு கொண்டிருக்கும் போது, ந‌ம்ம‌ புண்ணிய‌வான் வேளாண்மைத் துறை அதிகாரியின் உத‌வியுட‌ன் தென்னை ம‌ர‌க்க‌ன்றுக‌ள் ந‌ட்டு கொண்டிருந்தான். வேளாண்மைத்துறை அதிகாரி ஒரு பெரிய‌ புத்த‌க‌த்தை கையில் வைத்துக் கொண்டு ஓவ்வொரு ம‌ர‌த்திற்கும் மூன்று மீட்ட‌ர் இடைவெளி வேண்டும், ஆழ‌மான‌ ப‌ள்ள‌ம் தோண்ட‌வேண்டும் என்று பேண்டு, ச‌ட்டை மாட்டிய‌ ந‌ம்ம‌ புண்ணிய‌வானுக்கு வ‌குப்பு எடுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த‌ ந‌ம்ம‌ ம‌க்க‌ள் சும்மா இருப்பார்க‌ளா? நாம‌ளும் எப்ப‌ தான் பேண்டு, ச‌ட்டை மாட்டுவ‌து என்று யோசிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள், அடுத்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளின் ந‌ம்ம‌ புண்ணிய‌வானின் த‌யவால் அனைவ‌ரும் சொக்காவை தூக்கி போட்டு விட்டு, பேண்டு, ச‌ட்டை மாட்டி தென்ன‌ங்க‌ன்று ந‌ட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். இப்போது வாழைத்தோட்ட‌ம் இருந்த‌ சுவ‌டுக‌ள் இல்லாம‌ல் அழிந்து போயின‌.இப்ப‌டித்தான் நம்ம‌ ஆளுங்க‌ கோவ‌ண‌த்துல‌ இருந்து பேண்டு, ச‌ட்டைக்கு மாறினாங்க‌, இல்லை.. இல்லை.. வ‌ய‌ல்வெளிக‌ளில் இருந்து தென்ன‌த்தோட்ட‌த்திற்கு மாறினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் நான் ஊரில் சென்று பார்த்த‌ போதுதான் அப்பா சொன்ன‌து எவ்வ‌ள‌வு உண்மை என்று தெரிய‌வ‌ந்த‌து. ப‌ச்சை ப‌சேல் என்று காட்சிய‌ளித்த‌ அந்த‌ இட‌ங்க‌ள் எல்லாம் இன்று எப்ப‌டி மாறிவிட்ட‌து என்று.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

ஹ‌லோ!..ஹ‌லோ! நான் தான் ம‌ச்சி, மைக்கேல் பேசுறேன்.

ஆம் ம‌ச்சி, சொல்லு எப்ப‌டி இருக்க‌, எப்ப‌ அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வ‌ர்ற‌?

ம‌ச்சி அமெரிக்க‌ வாழ்க்கை போர் அடிச்சாச்சி, அப்ப‌டியே ஊர்ல‌ வ‌ந்து செட்டில் ஆகிவிடால‌ம் என்று இருக்கிறேன்.

ப‌ர‌வாயில்லையே ம‌ச்சி, ரெம்ப‌ ச‌ந்தோச‌ம், எப்ப‌ ஊருக்கு வ‌ருகிறாய்?

இப்ப‌தான் ஆபிஸ்ல‌ சொல்லி இருக்கேன், அடுத்த‌ ஒரு மாச‌த்தில‌ எல்லாம் செட்டில் ஆகி விடும்.

ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் ம‌ச்சி, அப்புற‌ம் ஊருக்கு வ‌ந்து என்ன‌ ப‌ண்ணுற‌தா உத்தேச‌ம்?

அது பிளான் ப‌ண்ணாம‌ இருப்பேனா ம‌ச்சி. அதான் போன‌வாட்டி நான் லீவுக்கு வ‌ந்த‌ப்ப‌ நாம‌ எல்லாம் போய் என்னுடைய‌தோட்ட‌த்தில் இள‌நீர் வெட்டி சாப்பிட்டோம் இல்ல‌யா?

ஆமா! அந்த‌ மெயின்ரோட்டின் ப‌க்க‌த்துல‌ உள்ள‌ உன்னுடைய‌ பெரிய‌ தென்ன‌ந்தோப்பு, என‌க்கு தெரியும் சொல்லு, அதுல‌ என்ன‌ ப‌ண்ண‌ போற?

அப்பாகிட்ட கேட்டேன் என‌க்கு பெட்ரோல் ப‌ங்க் வைக்க‌ ஒரு நாலு ஏக்க‌ர் இட‌ம் வேண்டும் என்று. அவ‌ரு தான் சொன்னாரு “ந‌ம்ம‌ தென்ன‌ந்தோப்பு இப்ப‌ காய் எதுவும் ச‌ரியா வைக்க‌லை” என‌வே அதை எல்லாம் முறித்து விட்டு அந்த இட‌த்தில் நீ பெட்ரோல் ப‌ங்க் க‌ட்டிக்க‌ என்று சொல்லிவிட்டார்.

அப்ப‌டியா ம‌ச்சி, ரெம்ப‌ ச‌ந்தோச‌ம், நீ ஊருக்கு வருவ‌த‌ற்கு முன்னாடி என‌க்கு போன் ப‌ண்ணு.. ஓ.கே.வா?

ஓகே ம‌ச்சி. பாய் ம‌ச்சி.

ஆஹா.....இப்ப‌ ச‌ரிதான் ந‌ம்ம‌ புண்ணிய‌வான் கோட்டு, சூட்டு மாட்ட‌ ஆசைப‌டுகிறார். அப்ப‌டியானால் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ந‌ம்ம‌ ம‌க்க‌ள் எல்லாம் கோட்டு, சூட்டு மாட்டி விடுவார்க‌ள். அப்ப‌டியே என‌து ம‌க‌னுக்கு க‌தைச் சொல்லும் கால‌ம் வெகுதொலைவில் இல்லை. ஏனென்றால் மைக்கேல் தென்ன‌ந்தோப்பு ப‌க்க‌த்துல‌ என‌க்கும் ஒரு ஏக்க‌ர் இருக்குதுல்ல‌..நாங்க‌ளும் க‌ட்டுவோம் இல்ல..

அந்த‌ ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம் என் க‌ண்க‌ளில் தெரிகின்ற‌து....... ஆஹா என்ன‌ வ‌ரிக‌ள். அவ‌ர் என்ன‌ நினைத்து பாடினாரோ?
Related Posts with Thumbnails