"குடி குடியைக் கெடுக்கும்" "மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு" போன்ற வாசகங்களை தாங்கி தான் இன்றைய மது பட்டில்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆனால் இந்த வாசகங்களை உள்வாங்கி தான் நம்முடைய மக்கள் அனைவரும் குடிக்கிறார்களா?. என்னை நானே கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
முன்பெல்லாம் ஊர்களில் வியாபாரம் செய்யப்படும் சாராயம், கள் போன்றவைகள் ஊருக்கு வெளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மறைமுகமாக நடக்கும். அந்த இடங்களுக்கு சென்று வருபவர்களும் ஏதோ செய்ய கூடாத குற்றத்தை செய்து விட்டதாக தலை கவிழ்ந்து வருவார்கள். இவைகளை விற்பனை செய்பவர்களும் சமூக விரோதிகளாக தான் பார்க்கப்பட்டார்கள். கேன்களில் அடைக்கப்பட்ட சாராயத்தை சிறிய கண்ணாடி கிளாஸ்களில் அளந்து வியாபாரம் செய்வார்கள். இத்தகைய வியாபாரங்கள் நடக்கும் இடங்களில் பெரும்பாலும் குடிப்பவரும், விற்பனை செய்பவரை தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள். ஒருவர் குடித்து விட்டு வந்த பிறகு தான் அடுத்தவர் செல்வார். பெரும்பாலும் கூட்டம் சேர்க்க விட மாட்டார்கள். ஒரு நாள் விற்ற இடத்தில் மறுநாள் விற்க மாட்டார்கள். காரணம் போலீஸ் ரெய்டு. இங்கு நான் போலீஸ் ரெய்டு என்றவுடன் சாராய வியாபாரியை பிடித்து கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிடுவார்கள் அதற்கு பயந்து தான் இடங்களை மாற்றுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. மாமூல் கொடுக்க வேண்டும் என்று தான் இடத்தை மாற்றுவார்கள். எந்தெந்த இடங்களில் எப்போது வியாபாரம் நடக்கும் என்பது குடிமகன்களில் காதுகளுக்கு தானாக சென்றுவிடும்.
ஊர்களில் இவ்வாறு விற்கப்படும் சாராய வியாபாரம் பெரும்பாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் புளங்காத இடங்களில் தான் நடக்கும். காலப்போக்கில் இந்த இந்த வியாபாரமும் பரிணாம வளர்ச்சி பெற்றது. சந்து பொந்துகளில் விற்கப்பட்டவைகள் எல்லாம் கள்ளுக்கடை, சாராயக்கடை என்று உருமாறி, நாவீன விருச்சத்தில் ஒயின்ஷாப்புகளாகவும், பார்களாகவும் ஜொலித்து, இப்போது அரசே எடுத்து நடத்தும் டாஸ்மாக்காக உயர்ந்து நிற்கின்றது. ஊரில் உழைத்து வாழ விருப்பம் இல்லாமல், பிறர் குடியை கெடுத்து வாழ நினைப்பவர்கள தான் இந்த சாராய வியாபாரம் செய்தார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை அடுத்தவனிடம் சுரண்டிய பணமாக தான் சமூக மக்கள் பார்த்தார்கள். ஆனால் இன்றைய நவநாகரீக உலகில் டாஸ்மாக் மூலம் வரும் பணத்தில் தான் "மக்களுக்கு பட்ஜெட்டே போடுகிறோம்" என்று வெட்கம் இல்லாமல் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.
இந்த சாராயம், கள்ளு போன்றவைகள் ஊருக்கு வெளியில் ஒதுக்கு புறங்களில் விற்கப்படும் போது இவைகளால் சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறைவாக தான் இருந்தது. ஆனால் இவை பார்களாக உருமாறிய பின்புதான் பல பிரச்சனைகளுக்கு அடிகோலியது. குடித்தவன் சும்மா இருந்தாலும் அவனுடைய வாய் சும்மா இருக்காது. போதை தலைக்கேறிய பிறகுதான் சிலருக்கு ஞானமே பிறக்கும். இந்த ஞானத்தால் அடுத்தவன் வாயை கிளறி, அது வாய் சண்டை ஆகி, வாய் சண்டை இரு குடும்ப சண்டையாகி, குடும்ப சண்டை இரு கோஷ்டி சண்டையாகி, கோஷ்டி சண்டை பெரிய ஊர்கலவரமாக வெடித்திருக்கிறது என்பது நிதர்சனம். இன்றைக்கும் பல டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் ஒரே வண்டியில் வந்திறங்கி ஒரு பாட்டில் வாங்கி, ஒரே கிளாஸில் குடிக்க ஆரம்பித்த இருவரும், சிறிது நேரத்தில் போதை தலைக்கேறி; வசவு வார்த்தைகளில் ஆரம்பித்து, கட்டிப்பிடித்து சண்டையிடும் நிலைமைக்கு மாறியிருப்பார்கள். பிறகு அங்குள்ள பார் ஊழியர்கள் தான் ஒருவனை முன்புற வாசல் வழியாகவும், அடுத்தவனை பின்புறவாசல் வழியாகவும் ஆட்டோவில் ஏற்றிவிடுவதை நாளும் பார்க்கலாம்.
எனது ஊர் வில்லுக்குறியில் ஒயின்ஷாப் என்பது கிடையாது. அதற்கு காரணம் இங்கு தொண்ணூறுகளில் நடந்த கலவரங்கள். அந்த கலவரங்களில் ஒருவரின் உயிர் மற்றும் ஒருவரின் கை பறி போனது. இந்த கலவரங்கள் தோன்ற இங்கிருந்த மதுக்கடைகளும் ஒரு காரணம் என்று ரெக்கார்டு பதிவாகி போனது. அதனால் தான் இதுவரையிலும் இங்கு எவராலும் டாஸ்மாக் கொண்டுவர முடியவில்லை.(இதனால் இங்கு இருப்பவர்கள் ரெம்ப நல்லவர்கள் என்று எண்ண வேண்டாம், பக்கத்துல அந்த பக்கம் நுள்ளிவிளை, இந்த பக்கம் குமாரகோவில், எட்டி போனால் சுங்காங்கடை என மூன்று பக்கம் தண்ணியால்(டாஸ்மாக்) சூழப்பட்ட தீபகற்பம் தான் வில்லுக்குறி).
இப்போது அரசால் நடத்தப்படும் பல டாஸ்மாக் கடைகள், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலும், பெண்கள் அதிகமாக புளங்கும் கோவில்களின் பக்கத்திலும் பார்க்க முடிகிறது. மக்களும் எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல் இவைகளை கடந்து செல்கிறார்கள்(கடந்து செல்ல பழக்கப்படுத்திவிட்டார்கள்). சினிமாவும், ஊடகங்களும் மக்களை இவற்றில் இருந்து எளிதாக விலகி செல்ல பல யுத்திகளை கையாளுகின்றன. சினிமாவில் குடிகார ஹீரோக்கள், குடித்துவிட்டு அவர்கள் செய்யும் கூத்துகளை ரசிக்கும் ஹீரோயின்கள் என்று இவர்கள் அமைக்கும் காட்சிகளை வைத்தே சொல்லிவிடலாம் எத்தகைய கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கிறார்கள் என்று.
பதின்ம வயதை கடந்த மாணவர்கள் பெரும்பாலானவர்கள் குடிப்பதற்க்கும், புகைப்பதற்கும் அடிமையாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இது தீய பழக்கமாக தெரியவில்லை, மாறாக கொண்டாட்டமாக இருக்கிறது. தண்ணியடிப்பதையும், புகைப்பதையும் இவர்கள் ஒரு தகுதியாக வளர்த்தெடுக்கிறார்கள். இத்தைகைய தகுதியை வளர்த்தெடுக்காதவர்கள் இன்றைய நாகரீக கலாச்சாரத்தில் கோவணம் கட்டியவனாக தான் பார்க்கப்படுகிறார்கள்.
"குடி குடியைக் கெடுக்கும்" "குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு" என்ற வாசகங்கள் ஆட்டோக்களிலும், சினிமா டைட்டில்களிலும் சென்றடைந்த அளவு, இன்றைய இளையத்தலைமுறையை சென்றடையவில்லை, அதுவரையிலும் தில்ஷன் போன்ற மொட்டுகளின் உயிர்களும், பல மனைவிகளின் கண்ணீர்களும் இந்த பூமியில் சிந்தப்படும் என்பது திண்ணம்.
குறிப்பு: பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடைசி பதிவு எழுதி ஒரு மாததிற்கு மேல் ஆகிவிட்டது. இந்தநாட்களில் என்னிடம் தொடர்புகொண்டு விசாரித்தநட்புகள் அனைவருக்கும் நன்றி. சவூதி வந்து என்னை நிலைப்படுத்திக் கொள்ளஇவ்வளவு நாட்கள் எடுத்துவிட்டது. இனி தொடந்து எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எப்படி என்று பார்ப்போம்!!!!.

.
.