நான் பெரும்பாலும் தமிழ் பதிவுகள் படிக்க வேண்டுமானால் முதலில் இணையத்தில் திறப்பது தமிழ் மணம் திரட்டியை தான். நண்பர்களுக்கும் பதிவுகள் படிப்பதற்கு பரிந்துரை செய்வது இதைத் தான். தமிழ் மணம் திரட்டியில் திறந்தவுடன் முதலில் படிப்பது மகுடத்தில் இருக்கும் பதிவையும், வாசகர் பரிந்துரை பதிவுகளையும் தான். மகுடம் ஏறும் பதிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் எனக்கும் அவ்வப்போது எழாமல் இல்லை. அதைப்பற்றிப் பல பதிவர்கள் எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் தமிழ் மணத்தில் மகுடத்தில் இருக்கும் பதிவை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பதிவுக்கு ஓட்டு அளித்திருப்பவர்களின் பெயர்களைப் பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருந்தது. நீங்களும் அந்தப் பொன்னான ஓட்டு போட்டு மகுடத்தில் ஏற்றியவர்களை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
பல பதிவர்கள் சொல்லியதை போல, எழுதியதை போல் தமிழ்மணம் ஓட்டு முறையில் மாற்றம் கொண்டு வருவது மிக முக்கியம். இல்லையென்றால் எவர் நினைத்தாலும் அவருடைய பதிவை மகுடத்தில் ஏற்றி பார்க்கலாம் அல்லது எளிதாக வாசகர் பரிந்துரையிலும் கொண்டு வரலாம்.
முன்பு தமிழ்மணம் பற்றி என்னுடைய எண்ணம் இதுவாகத் தான் இருந்தது ஒருவருக்குச் சுயமாக வலைத்தளம் இருந்து, அதில் தமிழ்மணபட்டையை நிறுவி பின்னர்த் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடம் இருந்து பாஸ்வேர்டு வந்த பின்பு தான் ஒட்டளிக்க முடியும் என்று நினைத்து வந்தேன். தமிழ்மணம் ஓட்டு பற்றிய பலருடைய பதிவுகளைப் படித்த பின்பு தான் இதில் இவ்வளவு தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் இந்தப் பதிவில் ஓட்டு அளித்திருக்கும் அனைத்து பெயர்க்ளையும் கொஞ்சம் பாருங்கள். பெயர் ஒன்றாக இருக்கிறது, இறுதியில் ஒன்று, இரண்டு என்று எண்களை மட்டும் சேர்த்து இருக்கிறார்கள்..
இனியும் தாமதிக்காமல் தமிழ்மணம் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் இதைப்போல் பல பதிவுகள் மகுடத்தில் வந்து பல்லிளிக்கும். அதையும் கொடுமை என்று படித்துத் தீர வேண்டும்...
தமிழ்மணம் என்ன செய்ய வேண்டும் என்று பல பதிவர்கள், பல பதிவுகளை எழுதியுள்ளார்கள், அவற்றில் சிறந்தவற்றைக் கருத்தில் கொண்டு உருவாகினால் நன்றாக இருக்கும். அல்லது தமிழ்மணமே ஒரு வாசகர் பரிந்துரை பக்கத்தை நிறுவி அதில் வாசகர்கள், பதிவர்கள், கருத்துரையாளர்களின் கருத்துகளைக் கேட்டு பின்பு அவற்றில் சிறந்தவற்றை எடுத்து நடைமுறைப்படுத்தலாம்.
.