
இவ்வாறு சென்று வரும் பெண்களை கேலி செய்வதும், கிண்டல் பண்ணுவதும் தான் இவர்களுக்கு பொழுதுப்போக்கு. அந்த கூட்டத்தில் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள அவர்கள் ஒவ்வொருவரும் செய்யும் செயலும் ரெம்ப வேடிக்கையாக இருக்கும். பெரும்பாலும் அவர்கள் அந்த வழியாக வரும் பெண்கள் அணிந்து வரும் ஆடைகளின் வண்ணங்களைப் பற்றிய சினிமா பாடல்களையோ அல்லது அவர்களின் பெயர்களைப் பற்றி வரும் பாடல்களையோ பாடி கிண்டல் செய்வார்கள். பாடலின் வரிகள் எல்லாம் புதுப் புது சொற்கள் சேர்த்து தனி மெட்டு அமைத்து பாடுவார்கள். அவர்களின் பாடல்கள் இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் பழையப் பாடல்களை ரீமேக், ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலைச் செய்வதை விட அழகாக இருக்கும். பாடலைக் கேட்டாலே சிரிப்பு தான் வரும். அப்படிதான் ஒரு நாள் மாலை நேரம் அனைவரும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அவ்வாறே நானும் வீட்டிற்கு போகும் வழியில் அந்த மூன்று வழித் தெருவில் கண்ட காட்சி. நாய் ஒன்று பழைய எலும்பு துண்டு ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு அந்த மதில் சுவரில் உள்ள இளைஞர்களைத் தாண்டி ஓடியது. இதைக் கவனித்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் இருந்து தீடிரென ஒருவன் மட்டும் எழுந்து அனைவரும் கேட்க்கும் படியாக சத்தமாக அந்த நாயை காட்டி இந்த நாய் தான் "தாய் வீடு" படத்தில் ரஜினியுடன் நடித்த நாய் அடுத்ததாக கமலுடன் நடிக்க ஒத்திகை பார்கின்றது என்று கூறியது தான் தாமதம். அந்த வழியாக சென்று வந்த எல்லோர் முகத்திலும் சிரிப்பு தாங்க முடியவில்லை. அன்று அந்த கூட்டத்தில் அவன் தான் ஹீரோ. அந்த வழியாக சென்று வந்த பெண்களும் அவனை கவனிக்க தவறவில்லை. இப்படி தினமும் எதாவது வேடிக்கை செய்வதையே வாடிக்கையாகக் கொண்டு இருப்பார்கள். அந்த வழியாக வரும் பெரியவர்களும் இவர்களை கண்டுக் கொள்வதும் இல்லை. அப்படி வாய் தவறி அவர்கள் எதாவது சொன்னால் அவர்களையும் இவர்கள் விடுவதில்லை கலாட்டா செய்து விடுவார்கள். இதைப் பயன்படுத்தி அந்த வழியாக வரும் பெண்களிடம் இவர்கள் எல்லை மீறுவது இல்லை. கண்ணியமாகவே நடந்து கொள்வர்.
தீடிரென ஒரு நாள் பார்த்தால் அந்த மதில் சுவர் காலியாக இருக்கும். கண்டிப்பாக அன்று சுபமுகூர்த்த நாளாக இருக்கும். ஊரில் உள்ள எதாவது ஒரு வீட்டில் திருமணம் நடக்கும். அந்த மதில் சுவர் இளைஞர்கள் அனைவரும் அன்று அந்த வீட்டில் ஆஜராகி இருப்பார்கள். வாழைமரத் தோரணம் கட்டுவதில் இருந்து சாப்பாடுப் பந்தி பரிமாறுவது வரை அவர்களே ஆளுக்கொரு வேலை என்று பிரித்துக் கொண்டு அழகாக செய்து முடிப்பார்கள். இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் என்னவென்றால் இவர்கள் காலையும் மாலையும் ஒற்றை மதில் மேல் இருந்து கிண்டல் செய்த பெண்களில் ஒருவர் தான் கண்டிப்பாக மணமேடையில் இருப்பார்.
15 comments:
இது எல்லாம் என் வாழ்வில் நடந்து இருக்குது நண்பரே... அப்படியே எழுதியிருக்கறீங்க...
@sangkavi
மலரும் நினைவுகள் நண்பரே.......
அவர்களின் பாடல்கள் இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் பழையப் பாடல்களை ரீமேக், ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலைச் செய்வதை விட அழகாக இருக்கும். .............ha, ha, ha,.....கலக்கிட்டீங்க.....!
@Chitra..
வாங்க மேடம்.....பின்னுட்டத்திற்கு நன்றி
நல்ல பகிர்வு எனது வலைதளத்திற்கு
உங்களை வரவேற்கிறேன் http://vittalankavithaigal.blogspot.com/
என்னுடைய வலைத் தளத்திற்கு வந்தமைக்கு நன்றி...உங்கள் வலைத்தளத்தில் பாலோவரகவும் ஆகிவிட்டேன்.
நல்ல பகிர்வு
ஸ்டீபன் சார் நல்லா எழுதியிருக்கீங்க . அந்த நாள் ஞாபகம் வந்ததே ....
@Starjan
சார் எல்லாம் அப்பிடியே தூக்கி குப்பையில் போடுங்கள். வந்து கலாச்சிட்டு போங்க நண்பரே...கருத்துக்கு மிக்க நன்றி.
கடைசி வரியைப் படித்ததும் இதிலொரு அழகிய சிறு கதை வெளிப்பட்டது. ரசித்தேன்.
last line may be a poem but nice experience. then just for joke u are one among them?
@K.B.JANARTHANAN
கருத்துக்கு ரெம்ப நன்றி..
@angel
பார்க்கும் பாக்கியம் மட்டும் கிடைத்தது...
ஆரம்பத்துல படிக்கும்போது குட்டிசுவத்துல இருந்து நாசமா போன பசங்களை பத்தி சொல்லுறீங்களோன்னு நினைச்சேன்... ஆனா இங்க விசயமே வேற... ரசிக்கும்படி இருந்தது.
உண்மையைச்சொல்லுங்க அந்தக்கூட்டத்துல நீங்களும் ஒருத்தர்தானே... நம்ம கிட்ட என்னத்தல மறைச்சுகிட்டு...
//குப்பையில் போடுங்கள். வந்து கலாச்சிட்டு போங்க நண்பரே.//
வேண்டாம் தல வாயைவுட்ராதீங்க...அப்புறம் பீல் பண்ணுவிங்க... அதுவும் இங்க ஏன்ஜல்னு ஒரு குட்டிபொண்ணுகிட்ட ரொம்ப ஜாககிரரையா இருங்க.. இல்லன்னா டோட்டல் டேமேஜ் ஆயிருவீங்க... என்னா அடி.. ஏன்ஜல் கூட நம்ம ஊருதான், நாகர்கோவில்.
Machi namma oru ulla kadantha kalatha ninachaley super a irukuthu... Thanks for your nice writting...........
அதுதான் இளைஞர்களின் நட்பு - பண்பு - உதவி செய்வது அவர்கள் கூடப் பிறந்த குணம் -
Post a Comment