இதை எல்லாம் கேட்டும் கேட்காததுப் போல அன்றைய செய்தித்தாளில் முழ்கி இருந்தார் நடராஜன். மணி ஒன்பது ஆகுது இன்னும் நீங்க பேப்பர் படிச்சு முடிக்கலை. ஏழு மணியில் இருந்து ஆரம்பித்தது அப்படி என்னத்த தான் படிப்பீங்களோ! இன்னும் முடிந்த பாடில்லை. கல்யாணம் முடிந்த அன்றைக்கே அத்தை சொன்னாங்க என் பையன் படிப்புல கொஞ்சம் மக்கு என்று. நான் என்னவோ பள்ளியில் படிக்கும் படிப்பு என்று தப்பு கணக்கு போட்டு விட்டேன் என்று கூறி சிரித்தாள். இதை கேட்ட நடராஜன் செய்தித்தாளில் இருந்த பார்வையை எடுத்து விட்டு நிமிர்ந்து விசாலாட்சியைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்து விட்டு திரும்ப குனிந்து படிக்க தொடங்கினார். விசாலாட்சி தரையை துடப்பத்தால் சுத்தம் செய்தவாறே, உங்க பொண்ணு இன்னும் துங்கிட்டுதான் இருக்காள், இன்னைக்கு லீவு என்று தான் பேரு மணி ஒன்பது ஆகுது இன்னும் படுக்கையை விட்டு எழுந்திரிக்கவில்லை. அம்மா ஒருத்தி வாரத்தின் ஐந்து நாளும் காலையிலே எழுந்து சாப்பாடுக் கட்டி வேலைக்கு அனுப்பு விடுகிறாளே, இந்த லீவு நாளிலாவது சீக்கிரமாய் எழுந்து அம்மாவுக்கு வேலையில் கூட மாட உதவி செய்வோம், என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அவளுக்கு எப்படி இருக்கும் உங்க இரண்டு பேருக்கும் தான் வேலைக்காரி ஒருத்தி நான் வந்து கிடைச்சிருக்கேன் இல்ல. என்று சொல்லிக் கொண்டே அடுத்த வேலையை பார்க்க போனாள் விசாலாட்சி.
அம்மாவின் பேச்சுகளை எல்லாம் கட்டிலில் கண் மூடிப் படுத்தவாறே காதில் வாங்கிக் கொண்டு அரைகுறையாக மூடி இருந்த போர்வையை இழுத்து தலை வரை மூடினாள் காவ்யா.
நடராஜன், விசாலாட்சி தம்பதிகளுக்கு திருமணம் ஆகிப் ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்தவள் காவ்யா. அதனால் இருவராலும் செல்லமாய் வளர்க்கப்பட்டாள். நடராஜன் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தான் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்று வீட்டில் இருக்கிறார். காவ்யா கணினிப் படிப்பில் பட்டம் பெற்று கடந்த வருடம் தான் ஒரு தகவல் தொழிற்நுட்ப அலுவலகத்தில் பணியில் சேர்ந்து இருந்தாள். விசாலாட்சியும் டிகிரி முடித்தவர் தான். காவ்யா பிறப்பதற்கு முன் அவரும் ஒரு தனியார் பள்ளியில் வேலைப் பார்த்து வந்தார். காவ்யா பிறந்த பின்பு வேலையை விட்டு விட்டு, வீட்டு வேலைகளில் மூழ்கிப்போனாள். இவர்களின் வீடு அமைந்திருப்பது பல்லாவரத்தில் ஆனால் காவ்யா வேலை செய்யும் அலுவலகம் அமைந்திருப்பது மவுண்ட் ரோட்டில். தினமும் வாகனப்பயணம் மட்டும் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அலுவலக நேரத்திலும் கணிப்பொறியை முறைத்துக் கொண்டு இருப்பதால் கண்களில் ஏற்படும் உளைச்சல் மற்றும் புது புராஜெட்கள் இப்போது அதிகமாக் இருப்பதால் தினமும் அதற்க்கான நகல்களை வீட்டில் எடுத்து வந்து படிக்க வேண்டி இருந்தது. இவை எல்லாம் சேர்ந்து காவ்யாவை வாரத்தின் கடைசி இரண்டு லீவு நாட்களை எதிர்பார்க்க வைத்துவிடுகிறது.
அன்றும் அப்படித்தான் மனதில் தூக்கம் அகன்று விட்டாலும் காண்களை விட்டு அகல மறுத்தது. அப்படியே அம்மாவின் வார்த்தைகளை உள்வாங்கி படுத்து இருந்தாள். அம்மாவின் அர்ச்சனைகள் காவ்யாவிற்கு இன்று புதிதல்ல. ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் நடப்பது தான். ஆனால் அன்று என்னவோ அம்மாவின் வர்த்தைகள் அனைத்தும் திரும்ப திரும்ப அவள் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. நாளை கண்டிப்பாக சீக்கிரமாய் எழுந்து அம்மா கோவிலுக்கு சென்று வருவதற்குள் எல்லா வேலையையும் முடித்து விட வேண்டும் என்று மனதில் எண்ணியவாறு படுக்கையை விட்டு எழுந்து நடக்கலானாள்.
மறுநாள் காலை இனிதே பொழுது புலர்ந்தது. விசாலாட்சி தினமும் காலையில் வீட்டிற்கு அடுத்த தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த பின்பு தான் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிப்பாள். அன்றும் வழ்க்கம் போல் கோவிலுக்கு கிளம்பினாள். நடராஜனும் தினமும் காலையில் சிறிது தூரம் வாக்கிங் செல்வது வழக்கம். அவரும் கிளம்பிவிட்டார். காவ்யா இரவு மாற்றியமைத்திருந்த அலாரம் செல் போனில் சிணுங்கியது. தூக்கத்தை விட்டு எழுந்து சமையல் அறைக்கு வந்தாள். குப்பையாக கிடந்த பாத்திரங்களை சுத்தம் செய்து அடுக்கினாள். பின்பு வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தம் செய்து ஆங்காங்கே சிதறி கிடந்த பொருட்களை அதனதன் இடங்களில் அடுக்கி வைத்து விட்டு வாசலில் சென்று கேட்டில் தொங்க விடப்பட்டிருந்த பையில் இருந்த பால் பாக்கெட்டையும் வீசி எறிய பட்டிருந்த நாளிதழையும் எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தாள். நாளிதழை அப்பா அமரும் சாய் நாற்காலியில் வைத்து விட்டு சமையலறை சென்று பால் பாக்கெட்டை உடைத்து காப்பி போட்டாள். அதற்குள் வாக்கிங் சென்று இருந்த நடரஜனும் வந்து இருந்தார். வீட்டில் காவ்யா செய்து இருந்த வேலைகளைப் பார்த்து விட்டு மனதிற்குள் சிரித்து விட்டு நாளிதழை படிக்க அமர்ந்தார். சமையல் அறையில் இருந்து வந்த காவ்யா "வாங்க அப்பா காப்பி குடியுங்கள் என்று தட்டை நீட்டினாள்". எப்போதும் அவர் முகத்தில் உள்ள புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு திரும்பவும் நாளிதழில் மூழ்கினார்.
சற்று நேரத்தில் கோவிலுக்கு சென்றிருந்த விசாலாட்சி வீட்டிற்குள் நுழைந்தார். வீடு சுத்தம் செய்து இருப்பதையும் வீட்டுக் காரரின் ஒரு கையில் காப்பியையும் பார்த்து விட்டு சமையலறைக்கு சென்றார். அங்கு காவ்யா இரண்டு கப்பில் காப்பி ஊற்றிக் கொண்டிருந்தாள். இதை பார்த்தவுடன் விசாலாட்சி காவ்யாவின் கைகளைப் பிடித்து இன்னைக்கு ஒரு நாள் தான் உனக்கு லீவு அப்படி இருக்கும் போது இவ்வளவு சீக்கிரமாய் எதுக்குமா நீ எழுந்து இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டும். கண்ணை பாரு அப்படியே தூக்க கலக்கம் தெரிகிறது என்று கூறி கன்னத்தை தடவி உச்சிமுகர்ந்தாள். நான் ஒருத்தி எதுக்குமா இருக்கிறேன். எல்லா வேலையும் அம்மா நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போம்மா போய் தூங்கு என்றாள். காவ்யா அம்மாவை ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். தாய் மற்றும் மகளுக்குள் நடந்த எல்லா விசயங்களையும் நாளிதழை பார்த்துக் கொண்டே நடராஜன் கேட்டுகொண்டு மனதில் சிரித்தார்.

20 comments:
ஹஹஹஹ... நல்லாருக்கு...
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப நிகழ்வுகளைக் கண்முன் நிறுத்திய எழுத்து. நல்ல நடை. அருமை
நல்லாயிருக்கு நாடோடி, ஆனா காவ்யா வேலை செய்தது விசாலாட்சி புலம்பியதற்கு மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) அல்லது அடுத்த சனிக்கிழமை என்று வைத்திருந்தால் இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்.
புலம்பிய சில மணி நேரத்திற்குப் பிறகு அப்படிச் சொன்னது நெருடலாய் இருக்கு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Sentiment touch.
Thaimaiyin thai pasathai solla vaarthai illai...
அன்புக்கு உதாரணம் தாயை தவிர வேறு யார்.
அன்னையர் தினத்துக்கு ஏற்ற அருமையான கதை. நல்ல எழுத்து நடையும் கூட.
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@அண்ணாமலையான்
கருத்துக்கு மிக்க நன்றி
@நாஞ்சில் பிரதாப்
என்ன தல..சிரிப்புல உள்குத்து இருக்கா..
@வானம்பாடிகள்
முதல் முறையா வந்திருக்கீங்க..ரெம்ப நன்றி..நேரம் கிடைக்கும் போது வந்து போங்க..
@பாஸ்டன் ஸ்ரீராம்
வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி..கண்டிப்பாக அடுத்த முறை விரிவாக எழுதுகிறேன்.
@Evans
Thats true
@தமிழ் உதயம்
உண்மை தான்..வருகைக்கும் கருத்துக்கு நன்றி
@Chitra
வாங்க மேடம்...கருத்துக்கு மிக்க நன்றி
@ராமலக்ஷ்மி
வாழ்த்துக்கு நன்றி...அடிக்கடி வந்து போங்க..
என்னத்தல நீங்க சொன்னதை என் பதிவுல போட்டேன்னு கோபமா இருக்கீங்களோ? சும்மா தமாசுக்குத்தான் போட்டேன்... இது அவருக்கு தெரிஞசாலும் அவரு ஒண்ணும் கோச்சுக்கமாட்டாரு... தப்பா எடுத்துக்காதீங்கன்ன
அதெல்லாம் ஒண்ணும் இல்ல தல நம்ம மக்கள் வந்து கும்மி அடிச்சப்புறம் வரலாம் என்று நினைத்தேன்..அவங்க கும்மிய பார்த்துட்டு நம்ம அதுக்கு பதில் சொல்லலாம் என்று இருந்தேன்.
அருமையான நிகழ்ச்சி.உன்மைவும் கூட.
’’’நாள் தான் உனக்கு லீவு அப்படி இருக்கும் போது இவ்வளவு சீக்கிரமாய் எதுக்குமா நீ எழுந்து இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டும். கண்ணை பாரு அப்படியே தூக்க கலக்கம் தெரிகிறது என்று கூறி கன்னத்தை தடவி உச்சிமுகர்ந்தாள். நான் ஒருத்தி எதுக்குமா இருக்கிறேன். எல்லா வேலையும் அம்மா நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போம்மா போய் தூங்கு என்றாள்.’’
இது பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான்.
hi naadodi
i hav read ur AMMA topics.
do u know?who am i?if u can find me?
hi journel,
again deepa.ur writing method is very nice.i think everyone expressed abt tis.actually one minute i went inside my mother.because my mother like this type of chracter...nice memmeries.thank u.
grow up every day.wish u all the best.
nalla irukku. kathai alla anaivar veetilum natakkum nijam.
நல்லாயிருக்கு!!!
@malar
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@Madurai Saravanan
கருத்துக்கு மிக்க நன்றி..அடிக்கடி வந்து போங்க..
@ gulf-tamilan
வாங்க..
படிக்கும்போதே என் அம்மாவை பற்றிய ஞாபகம் வந்தது.
நல்ல பதிவு
தொடருங்கள்
vதாயினும் சாலப்பரிந்து....நெகிழச் செய்த பதிவு.
நேரில் நின்று...
பேசும் தெய்வம்..
பெற்ற தாயன்றி வேறாரு...!
அப்படி சொல்லாதாம்மா போற இடத்துல் உன்னை தான் பொண்ணை நல்லா வளர்க்க இல்லை என்று சொல்லுவாங்க.........
Post a Comment