Thursday, October 14, 2010

த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌ம்_த‌னிம‌னித‌த் தாக்குத‌ல்.

நான் முந்திய‌ இடுகையில் எழுதிய‌ அதிமேதாவிக‌ளும், கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுப்ப‌வ‌ர்க‌ளும் குடியிருக்கும் கோவில் த‌மிழ் வ‌லைப்ப‌திவாள‌ர் குழும‌ம் என்ப‌தை மிகுந்த‌ வ‌ருத்த‌துட‌ன் தெரிவித்து கொள்கிறேன்..

இதை நீ எப்ப‌டி சொல்லாம், உன‌க்கும் அத‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் என‌ "ப‌ராச‌க்தி" ப‌ட‌ வ‌க்கீல் கேள்விக‌ள் நிறைய‌ இருக்கும்...

"அதில் நானும் பாதிக்க‌ப்ப‌ட்டேன், நேர‌டியாக‌ தாக்க‌ ப‌ட்டேன்" என‌ "ப‌ராச‌க்தி" சிவாஜி வ‌ச‌ன‌ம் போல் நானும் ப‌தில் சொல்லுகிறேன்..

இதோ கேளுங்க‌ள் என் க‌தையை,

ப‌திவுல‌கில் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக‌ சாந்தி என்ற‌ பெண் ப‌திவ‌ரின் பிர‌ச்ச‌னை எல்லாயிட‌ங்க‌ளிலும் எழுத‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே..

இந்த‌ ப‌திவ‌ரின் பிர‌ச்ச‌னைக்கு மூல‌க்கார‌ண‌ம் இந்த‌ த‌மிழ் பிளாக்க‌ர் போர‌ம் தான். அதில் நானும் ஒரு பார்வையாள‌னாக‌ இருந்த‌தால் அங்கு ந‌ட‌ந்த‌ சில‌ பிர‌ச்ச‌னைக‌ள் என‌க்கு தெரியும்...

இந்த‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி வின‌வில் ஒரு க‌ட்டுரை வ‌ருகிற‌து. அதை நானும் போய் ப‌டிக்கிறேன். அதில் ஒரு பின்னூட்ட‌மும் போடுகிறேன். கார‌ண‌ம் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ள் இருந்த‌ போது அவ‌ர்க‌ளை "அக்கா" என்று அழைத்த‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்..

வின‌வில் நான் போட்ட‌ பின்னூட்ட‌ம் எவ‌ரையும் குறிப்பிட்டு போட‌வில்லை, என்னை நானே ப‌ழித்துக் கொண்டேன்..

இர‌ண்டாவ‌து இதே பிர‌ச்ச‌னை ப‌ற்றி முகில‌ன் அவ‌ர்க‌ள் ஒரு ப‌திவு எழுதுகிறார், அந்த‌ ப‌திவில் நான் சில‌ பின்னூட்ட‌ங்க‌ள் போடுகிறேன். இதில் நான் முகில‌னிட‌ம் சில‌ கேள்விக‌ள் வைக்கிறேன். அவ‌ரை த‌ர‌க்குறைவாக‌ அதில் ஒரு வார்த்தை கூட‌ நான் உப‌யோக‌ப் ப‌டுத்த‌வில்லை. அதில் சில‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொன்னார், சில‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌வில்லை, உட‌னே நானும் அவ‌ரிட‌ம் ந‌ன்றி சொல்லிவிட்டு வ‌ந்துவிடுகிறேன்.. அவ‌ரும் அந்த‌ ப‌திவில் அத‌ன் பிற‌கு வேறு எந்த‌ கேள்வியும் என‌க்கு வைக்க‌வில்லை, நானும் அதை ம‌ற‌ந்துவிட்டேன்..

உண்மையில் என்னுடைய‌ ப‌திவை ப‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், நான் இதுவைரையில் எந்த‌வொரு விவாத‌ங்க‌ளிலும் க‌ல‌ந்து கொள்வ‌தும் கிடையாது, எவ‌ருடைய‌ த‌ள‌த்திலும் கும்மி அடிப்ப‌தும் கிடையாது...

அப்ப‌டியிருக்கும் போது முகில‌னிட‌ம் ம‌ட்டும் நான் விவாத‌ம் செய்த‌மைக்கு கார‌ண‌ம், என்னுடைய‌ சில‌ ப‌திவுக‌ளில் அவ‌ரும் வ‌ந்து விவாத‌ம் செய்திருக்கிறார், நானும் அவ‌ருடைய‌ விவாத‌ங்க‌ளுக்கு ப‌திலும் சொல்லியிருக்கிறேன். அந்த‌ உரிமையில் தான் அவ‌ரிட‌ம் சென்று அன்றைக்கு கேள்விக‌ள் வைத்தேன். இல்லையென்றால் க‌ண்டிப்பாக‌ அவ‌ரிட‌ம் நான் கேள்விக‌ள் வைத்திருக்க‌ மாட்டேன்.


ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை முகில‌ன் ம‌ட்டும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து அல்ல‌, அது இரும்புத்திரை அர‌விந்த், ம‌ற்றும் ப‌திவ‌ர் ம‌தார் அவ‌ர்க‌ளும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து என்ப‌தும் என‌க்கு தெரியும், ஆனால் அர‌விந்த் ம‌ற்றும் ம‌தார் என‌க்கு அறிமுக‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுடைய‌ த‌ள‌த்தில் நான் சென்று ஒரு பின்னூட்ட‌ம் போட்ட‌து கூட‌ கிடையாது, அவ‌ர்க‌ளும் என்னுடைய‌ ப‌திவிற்கு பின்னூட்ட‌ம் போட்ட‌து கிடையாது... என‌வே அவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ புரித‌ல் என‌க்கு இல்லாத‌தால் எந்த‌வொரு இட‌த்திலும் இவ‌ர்க‌ளை ப‌ற்றி நான் பேசிய‌து கிடையாது..

இது இப்ப‌டி இருக்க‌, முகில‌ன் ப‌திவு எழுதி ஒரு வார‌ங்க‌ள் க‌ழித்து த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் திடிரென‌ ஒரு ப‌ஸ்ஸின் முக‌வ‌ரியை ப‌கிருகிறார். அந்த‌ முக‌வ‌ரியை சென்று பார்த்தால் நான் ஒரு மாத‌திற்கு முன்பு எழுதிய‌ காமெடி ப‌திவில் ஒரு அடைப்பு குறியில் எழுதிய‌ வாச‌க‌த்தை ம‌ட்டும் எடுத்து போட்டுவிட்டு

http://www.google.com/buzz

"இது ஆணாதிக்க‌மாக‌ தெரிய‌வில்லையா" என்று கேள்வி வைக்கிறார்..

இதை பார்த்த‌ பின்புதான் என‌க்கு தெரிந்த‌து உண்மையில் முகில‌ன் என் மீது வ‌ன்ம‌ம் வைத்திருக்கிறார் என்று, கார‌ண‌ம் மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌திவை நான் எழுதிய‌ நாளில் வ‌ந்து என்னுடைய‌ பேச்சில‌ர் வாழ்க்கையை நினைவு ப‌டுத்தி விட்டீர்க‌ள் என்று சொல்லிவிட்டு போன‌வ‌ர் அப்ப‌டியே இர‌ண்டு வார‌ங்க‌ளில் மாறிப்போனார்..

அந்த‌ ப‌ஸ்ஸின் லிங்க் போர‌த்தில் போட‌ப்ப‌ட‌வுட‌ன் அத‌ற்கும் சில‌ அதிமேதாவிக‌ள் வ‌ந்து கும்மி அடிக்கிறார்க‌ள். நான் க‌டைசியில் சிரித்துவிட்டு வ‌ந்தேன்..

இந்த‌ கும்மி ந‌ட‌க்கும் போது தான் சிரிப்பு போலிஸ் (ர‌மேஷ்) போர‌த்தில் ஒரு இழையை ஆர‌ம்பித்து "போர‌மா?.. போர் ந‌ட‌க்கிற‌ இட‌மா?.." என்று ஒரு கேள்வி வைத்து சில‌ க‌ருத்துக்க‌ளை வைக்கிறார்.. ஆனால் அந்த‌ க‌ருத்துக‌ளும் அதிமேதாவிக‌ளால் எள்ளி ந‌கையாட‌ப்ப‌டுகின்ற‌து.. அதை அவ‌ருடைய‌ ப‌திவில் பார்த்தால் உங்க‌ளுக்கு புரியும்..

இது இப்ப‌டி இருக்க‌..

இர‌ண்டு நாட்க‌ள் முன்னால் முகில‌ன் ப‌ஸ்ஸில் இருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து வ‌ந்து போர‌த்தில் ஒரு புது இழையை தொட‌ங்குகிறார். அதுவும் என்னுடைய‌ பெய‌ர் போட்டு ஒரு கேள்வியும் வைக்கிறார். அந்த‌ ஸ்கிரீன் ஷாட் ப‌திவ‌ர் சாந்தியின் ப‌ஸ் முக‌வ‌ரியுடைய‌து. அதில் த‌லையும் வாலும் புரியாம‌ல் சில‌ வாச‌க‌ங்க‌ள் இருக்கிற‌து.. அதை ப‌ற்றி நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டுமாம்? என்ன‌வொரு கொடுமை?.. உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு எல்லாம் என்னிட‌ம் க‌ருத்து கேட்பார்க‌ள் போல் இருக்கிற‌து...

ஒரு பிர‌ச்ச‌னையை ப‌ற்றி கேள்வி கேட்டால் அந்த‌ பிர‌ச்ச‌னைக்கு ப‌தில் சொல்லாம‌ல், வேறோரு பிர‌ச்ச‌னையை காட்டி அத‌ற்கு ஏன் நீ கேள்வி கேட்க‌வில்லையென்று என்னிட‌ம் கேட்கிறார்க‌ள்?.. என்ன‌ ப‌தில் சொல்வ‌து?.. (கேள்வி கேட்ப‌த‌ற்கு கூட‌ உரிமை கிடையாது, அதுவும் மேதாவிக‌ள் தான் முடிவு செய்வார்க‌ளாம்.. என்ன‌ கொடுமை சார் இது..)

ப‌ர‌வாயில்லை..

முகில‌னின் கேள்விக்கு நான் ப‌தில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இரும்புத்திரை அர‌விந்த் த‌ங்கிலிஷ் என்ற‌ வாளால் சுழ‌ற்றுகிறார்... (வாந்தியெடுக்கிறார்)

அவை உங்க‌ள் பார்வைக்கு,

From: aravind

Date: 2010/10/11


ayya sombu thooki stephen

ellorum pesi thaane ellaam seireenga appuram enna.ini engayaavathu ponnunu vantha sombu thooki raasa appuram irukku

unnai pathi evandaa eluthinaan paadu..

vaa unakku venumnaa vanthu kuni

ini engayaavathu pesu pinja seruppaalaye unnai adikkirendaa paadu


en naan address thanthaa en veettukku vanthu sombu thookuviyaadaa badu

endaa unakkum oru thadavai sonna puriyaathaa.address thaa.neengalum aal vaichu thaane kosham poduveenga.athe paaniyil un sombai naan udaikiren.ithaiyum anga poi solli alu.


saridaa sombu thooki..ini engavaathu pombalaikku aatharavaa pesathe.nee pathilukku ethai ethirpaakkuranu theriyala


(இந்த‌ வார்த்தைக‌ளை த‌மிழ்ப்ப‌டுத்த‌ கூட‌ என‌க்கு விருப்ப‌ம் இல்லை, அவ்வ‌ள‌வு வ‌க்கிர‌ங்க‌ளும், ஆபாச‌மும் இருக்கிற‌து, ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌லாம்)


அர‌விந்த் சுழ‌ற்றிய‌ வாளில் வ‌ழியும் குருதியை ர‌சிக்கிறார், சொல்ல‌த் துடிக்குது ம‌ன‌சு ம‌தார்..

அவை உங்க‌ள் பார்வைக்கு,

மதார் பட்டாணி to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


@முகிலன் ,

அவர் பேசட்டும் விடுங்க என்னால பேச முடியல .இவ்ளோ கீழ்த்தரமா பேசிட்டு . தப்பா பேசினதுக்கு எங்கே ஆதாரம் என்று கேட்டாங்களே இதுக்கு மேல தப்பா எங்கேயும் பேச முடியும் ?


வாள் சுழ‌ற்ற‌ அடித்த‌ள‌ம் அமைத்த‌ முகில‌ன் இப்போது ம‌ன்னிப்பு கேட்டு சுப‌ம் போடுகிறார்..

அதுவும் உங்க‌ள் பார்வைக்கு,

Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அதே தான் மணிஜி. இந்த இழையை ஆரம்பித்ததற்காக நான் குழும உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மாடரேட்டர் இத்திரியை நீக்கிவிட்டால் மகிழ்வேன்.



என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,
Dhinesh Kumararaman(முகிலன்)


சொல்ல‌ ம‌ற‌ந்திட்டேன் இவ்வாறு ஒருவ‌ர் வாந்தியெடுத்து கொண்டிருக்கும் போது முகில‌ன் க‌ண்டிக்கிறார், அதை சொல்லாம‌ல் விட்டுவிட்டால் சாமி குத்த‌ம் ஆகிடும்.

அதுவும் உங்க‌ள் பார்வைக்கு,

Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அரவிந்த், ப்ளீஸ், தகாத வார்த்தைகள் இங்கே வேண்டாம். உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகள் நம் கோபத்தில் உள்ள நியாயத்தை மறைத்துவிடும்.


இவ்வ‌ள‌வு அசிங்க‌மான‌ வார்த்தைக‌ளை உப‌யோக‌ப்ப‌டுத்தி என்னை ஒருவ‌ர் திட்டுகிறார், போர‌த்தில் இருக்கும் எவ‌ர் ஒருவ‌ரும் அர‌விந்தை த‌டுத்து நிறுத்த‌வில்லை..

இந்த‌ பிர‌ச்ச‌னையில் ம‌ன‌முடைந்த‌ நான் என்னுடைய‌ த‌ர‌ப்பு நியாய‌ங்க‌ளை(யாருக்கு வேணும்?..) எழுதி போர‌த்தில் புது இழையில் போடுகிறேன், தீர்வு சொல்லுங்க‌ள் என்று..

இந்த‌ இழையிலும் எவ‌ர் ஒருவ‌ரும் அர‌விந்துக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ங்க‌ளை ப‌திவு செய்ய‌வில்லை, மாறாக‌ சில‌ மேதாவிக‌ள் மீண்டும் வாந்தியெடுத்தார்க‌ள், சில‌ அதிமேதாவிக‌ள் ம‌ற‌ப்போம், ம‌ன்னிப்போம் என்றார்க‌ள், அதைவிட‌ சில‌ மெகா மேதாவிக‌ள் கெட்ட‌ வார்த்தையை க‌ண்டுபிடித்த‌வ‌னை தான் க‌ண்டிக்க‌ வேண்டும் என்று சொன்னார்க‌ள்... என்ன‌வொரு நியாமான‌ வார்த்தைக‌ள்... கார‌ண‌ம் ந‌ம‌க்கு ஆத‌ர‌வாக‌ பேச‌த்தான் குழுக்க‌ள் கிடையாதே?..

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ இர‌ண்டு இழையின் முழுவிப‌ர‌ங்க‌ளையும் என்னுடைய‌ ப‌ஸ் முக‌வ‌ரியில் ஏற்றியுள்ளேன், விருப்ப‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் பார்க்க‌லாம்..

http://www.google.com/profiles/101916289514179757488#buzz

மேலே ந‌ட‌ந்த‌ விவாத‌த்தில் என‌து ம‌ன‌சாட்சி கேட்ட‌ சில‌ கேள்விக‌ள்..

1) நான் யாருக்கு பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும் என்ப‌தை யார் முடிவு செய்ய‌ வேண்டும்?..

2) எந்தெந்த‌ விவாத‌ங்க‌ளுக்கும், ப‌திவுக‌ளுக்கும் நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டும் என்ப‌தை யார் முடிவு செய்வ‌து? ..

3) உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னை எல்லாவ‌ற்றிற்கும் நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டும் என‌ தீர்மானிக்க‌ நீங்க‌ள் யார்?

4) ஒரு ப‌திவில் வைத்த‌ கேள்விகளுக்கு ப‌தில் சொல்லாம‌ல், அதை உங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ இட‌ங்க‌ளில் கொண்டு போய் விவாதிப்ப‌தின் ம‌ர்ம‌ம் என்ன‌?..

5) இந்த‌ பிர‌ச்ச‌னையில் என‌க்கும் முகில‌னுக்கும் தான் விவாத‌ம், ஆனால் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம் ஆஜ‌ராக‌ கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுப்ப‌த‌ன் நோக்க‌ம் என்ன‌?..

6) உண்மையில் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இருந்தால் தார‌ள‌மாக‌ நாக‌ரீக‌மாக‌ வைக்க‌லாமே!!.. அதை விட்டுவிட்டு அசிங்க‌மாக‌ பேசுவ‌த‌ன் நோக்க‌ம் என்ன‌?.. ஒருவேளை நானும் த‌வ‌றாக‌ பேசிவிட்டால் அதை வைத்து க‌ம்பு சுத்த‌லாம் என்ப‌துதான் உங்க‌ள் நோக்க‌மா?..

இப்போது நீங்க‌ள் என்னுடைய‌ முந்தைய‌ ப‌திவை ப‌டித்தீர்க‌ள் என்றால் ஒவ்வொரு வார்த்தைக்கும் விடை கிடைக்கும்..

1) இந்த‌ பிர‌ச்ச‌னையை இங்கு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம், த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் என்ன‌ ந்ட‌க்கிற‌து என்ப‌தை அனைவ‌ரும் அறிந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌தும் தான்..

2) குழு அர‌சிய‌ல் எந்த‌ அள‌வு ப‌திவுல‌க‌த்தில் வேருன்றி இருக்கிற‌து என்ப‌தை சொல்ல‌ வேண்டும் என்ப‌தும்..

3) புதிதாக‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இதுபோன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளில் மாட்டிக்கொண்டு ம‌ன‌ உளை‌ச்ச‌ல் அடைய‌க் கூடாது என்ப‌தும்..

4) இந்த‌ ப‌திவை எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம் உங்க‌ளிட‌ம் சொல்லி அனுதாப‌ம் வாங்க‌ வேண்டும் என்று துளியும் என‌க்கு விருப்ப‌ம் கிடையாது. என‌து ந‌ட்புக‌ள் சில‌ர் இதை நீங்க‌ள் வெளியில் சொன்னால் தான் மேலும் எவ‌ரும் இது போல் பிர‌ச்ச‌னையில் மாட்டாம‌ல் இருப்பார்க‌ள் என்று கேட்ட‌தாலும்..

குறிப்பு: இணைய உலகில் என்னைப் போல உலகம் சுற்றும் தமிழர்களுக்கு சொந்த நாட்டின் நினைவோடு இளைப்பாறுதல் என்பது மகிழ்ச்சியான விசயம். இது எனக்கு மட்டுமல்ல ஊரில் இருக்கும் என் குடும்பத்தாருக்கும் கூட ஒரு இனிய இணைப்பாக விளங்குகிறது. ஆனால் இத்தனை நாட்கள் பதிவுலகில் மென்மையான சுபாவத்தோடு மரியாதையோடும் செயல்படும் என்னை தமிழ் வலைப்பதிவாளர் குழுமத்தில் இருக்கும் சில கடிநாய்கள் கடித்து குதறியிருக்கின்றன.

நாட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் அதில் நான் தலையிடவேண்டுமென்று விரும்பினால் தலையிடுகிறேன். அதுதான் இந்த அநாகரீக மனிதர்களுக்கு பிடிக்கவில்லை. இணையம் என்பது நிழல் உலகம் என்பதால் க‌ணிப்பொறியின் முன் ஊளையிடுகிறார்கள். இதுவே எங்கள் கிராமத்து பக்கம் நடந்திருந்தால் நடப்பது வேறு. இந்த கோழைகள் எவரும் நேரில் பேசுவதற்கு வரமாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆயினும் இவர்களை உரிய நேரத்தில் உரிய முறையில் என்றாவது ஒரு நாள் நேரில் எதிர்கொள்வேன்.

என்னை தாகாத வார்த்தைகளால் குழுமத்தில் அரவிந்தும் அவரது அடிப்பொடிகளும் கடித்த போது ஓரிருவரைத் தவிர எவரும் அதை கண்டிக்க வரவில்லை. எனவே கடித்தவர்களை விட அதை வேடிக்கை பார்த்து இரசிக்கும் அநாகரிகத்தையும் குழுமத்தில் கண்டேன். இத்தகையவர்களுடன் இவ்வளவு நாட்கள் நானும் குழும‌த்தில் இருந்தேன் எனபதை நினைத்து பார்த்தால் குற்ற உணர்வாக இருக்கிறது.

கொள்கைக்காக ஒரு குழுவில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் என் குழுவைச் சேர்ந்தவனை நீ ஆதரிக்க வில்லை என்று இவர்கள் என்னைக் குறிவைக்கிறார்கள். இதையே தொடர்ந்து பதிவுகளாலும், விவாதங்களாலும் செய்து வருகிறார்கள். இந்த மன விகாரம் படைத்தவர்களை எழுதியே பேசியோ விவாதித்தோ திருத்த முடியாது என்பது எனது அனுபவம். என்ன செய்யலாம் என்பதை நண்பர்களிடம் கேட்கிறேன்.

இந்த விசயகங்களினால் நான் வருந்தினேன். ஆனால் அஞ்சவில்லை. கீ போர்டில் எழுதவதைத்தாண்டி வேறு ஒன்றும் உடனடியாக செய்ய முடியவில்லை என்ற க‌வ‌லை என‌க்கு உண்டு. இந்த சாக்கடை அனுபவத்திலிருந்து இந்த சாக்கடையை எழுத்துக்களால் உற்பத்தி செய்யும் மனித விலங்குகளை நாம் என்றைக்கு வெளியேற்றுகிறோமோ அன்றுதான் இணையம் உற்சாகமானதாக இருக்குமென்று தோன்றுகிறது. அந்த சுத்தப்படுத்தும் வேலையை நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து செய்வேன்.


ஏற்க‌ன‌வே த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் உள்ள‌ கொடுமைக‌ள் தாங்காம‌ல் வெளியேறிய‌வ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ளும்.

1) கே.ஆர்.பி.செந்தில் அண்ண‌ன்

2) சிரிப்பு போலிஸ் ர‌மேஷ்

நானும் இன்றில் இருந்து த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் இருந்து வில‌வி விட்டேன், அத‌ன் மாட‌ரேட்ட‌ர் கேபிள் ச‌ங்க‌ர் அவ‌ர்க‌ளுக்கு மெயில் அனுப்பி விட்டேன்.. த‌ய‌வு செய்து என்னை நீக்கி விடுங்க‌ள் என்று இத‌ன் மூல‌மும் தெரிவித்து கொள்கிறேன்.

42 comments:

Ahamed irshad said...

இவ்ளோ விஷயம் நடந்திருக்கா..ம் கதை,கவிதை,கட்டுரை எழுதினா மட்டும் போதும்னு நெனச்சேன் .. ஆனாலும் இந்த அளவு கீழ்த்தரமான வார்த்தைகளை அரவிந்த் யூஸ் பண்ணியிருக்க கூடாது. நல்ல வேலை குழுமங்களில் பங்கேற்காதது எவ்ளோ நல்லது ன்னு இப்போ புரிஞ்சிருச்சி..இருக்கிற பிரச்சினையே சமாளிக்க முடியல..

புது பதிவர்கள் வருக வருக..

சந்தனமுல்லை said...

மகா கேவலமாக இருக்கிறது!
எப்படி இந்த குழுமத்திலெல்லாம் போய் சேருகிறீர்கள்?

தங்களது மன உளைச்சலை புரிந்துக்கொள்ள முடிகிறது.
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாட இனி நிம்மதியாக இருக்கலாம் நண்பா. செந்தில் அண்ணா அப்பவே சொன்னாரு. யார் கேட்டா?

உண்மைத்தமிழன் said...

[[நானும் இன்றில் இருந்து த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் இருந்து விலகிவிட்டேன்]]]

இந்தப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு.. அடுத்து பொழைப்பைப் பாருங்க..!

ஜானகிராமன் said...

குழுமத்தின் ஆக்கப்பூர்வ பங்களிப்பாளர்களில் ஒருவரை இழந்தது ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஸ்டீபன். சரி, சக பதிவரின் மனதைக் கீறி வரும் வேதனையைத் தான் அவர்கள் வெற்றி என்று நினைத்தால் ஆர்பரித்துக் கொண்டாடி மகிழட்டும்.

வினவு said...

நேற்றைய பதிவிலிருந்து என்ன விசயமென்று புரியவில்லை. இன்று எல்லாம் புரிகிறது.இதை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நீங்கள் வருந்த வேண்டாம்.

சாந்தி எழுதிய கட்டுரை வினவில் வந்து அதற்கு நீங்கள் பின்னூட்டம் போட்டதுதான் இவர்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. ஆனால் வினவில் வாலாட்ட முடியாத இந்த ஜென்மங்கள் அப்பாவியான உங்களை அவர்களது சித்திரவதைக்கூடத்தில் வைத்து கடித்திருக்கிறார்கள்.

நல்லது யார் கடித்த்து என்பதை அடையாளம் காட்டிவிட்டீர்கள்.உரிய நேரத்தில், இடத்தில் இந்த பிரச்சினைக்கு முடிவு காணும் உங்களுக்கு வினவு என்றும் தோள் கொடுக்கும்.

Radhakrishnan said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்காகத்தான் இந்த குழுமத்தில் நான் இணைவது இல்லை என முன்னரே முடிவு எடுத்துவிட்டேன் போல.

ஒரு அமைப்பு ஒன்று தொடங்கும் போது அதன் நோக்கம் தெரியாமல் இணைந்துவிட்டு பின்னர் இப்படி வருந்துவது அழகல்ல.

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கண்ட கதை.

indiblogger போல வர நினைத்தார்கள்! நோக்கம் இல்லாமல் எதுவும் ஒழுங்காக நடைபெறுவதில்லை.


சின்ன சின்ன சச்சரவுகள் பெரிய பிரச்சினைக்கு அடிகோல். மாற்றம் நிகழட்டும்.

பலருடைய உண்மை முகம் தெரிய வருகிறது. நன்றி நாடோடி.

சைவகொத்துப்பரோட்டா said...

வந்தேன் ஸ்டீபன்.

நாடோடி said...

@அஹமது இர்ஷாத் said...
//இவ்ளோ விஷயம் நடந்திருக்கா..ம் கதை,கவிதை,கட்டுரை எழுதினா மட்டும் போதும்னு நெனச்சேன் .. ஆனாலும் இந்த அளவு கீழ்த்தரமான வார்த்தைகளை அரவிந்த் யூஸ் பண்ணியிருக்க கூடாது. நல்ல வேலை குழுமங்களில் பங்கேற்காதது எவ்ளோ நல்லது ன்னு இப்போ புரிஞ்சிருச்சி..இருக்கிற பிரச்சினையே சமாளிக்க முடியல..

புது பதிவர்கள் வருக வருக.. //

வாங்க‌ இர்ஷாத்... இவ‌ர்க‌ளுக்கு பேச்சில் நாகாரீக‌ம் என்ப‌து கொஞ்ச‌மும் இல்லை.. ஆனால் அநாக‌ரீக‌மாக‌ வ‌ந்தியெடுக்க‌ வேண்டுமான‌ல் ரெடியா இருப்பாங்க‌.. க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@சந்தனமுல்லை said...
//மகா கேவலமாக இருக்கிறது!
எப்படி இந்த குழுமத்திலெல்லாம் போய் சேருகிறீர்கள்?

தங்களது மன உளைச்சலை புரிந்துக்கொள்ள முடிகிறது.
எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன். //

வாங்க‌ ச‌ந்த‌ன‌முல்லை..என்ன‌ செய்வ‌து தொட‌க்க‌த்தில் ந‌ல்ல‌வைக‌ளை எதிர்பார்த்து போய் சேர்ந்த‌து..

உங்க‌ள் க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றிங்க‌..

Anonymous said...

//எனவே கடித்தவர்களை விட அதை வேடிக்கை பார்த்து இரசிக்கும் அநாகரிகத்தையும் குழுமத்தில் கண்டேன்.//



We knew them very well.. Spoilers of the society..

My strong condemnation against such evil favoritism .

They will all be gone forever soon.. One by one started showing their real colour..

My heart goes out to you Nadodi...


I appreciate you brought this out boldly...

Srini said...

குழுமம் ஆரம்பிக்கும்போதே தெரியும் இவங்க இலட்சணம் ...

நல்லது வெளியேரினது

Prathap Kumar S. said...

படித்த மிருகங்கள் இவர்கள்.இவ்வளவு அநாகரிகமாக திட்டியிருக்கிறார் அரவிந்த். உள்ளூர் இருந்து திட்ட தைரியம் இல்லாத கோழை எங்கோ மூலையில் இருந்து வாந்தி எடுக்கிறார். திரும்ப திட்டத்தெரியாதுன்னு நினைச்சானுங்களா இல்லை இவனுக்கு மட்டும்தான் வாந்தி எடுக்கத்தெரியும்னா நினைச்சானா?

அசிங்கம்புடிச்ச குழுத்துல இருந்த வெளியேறுங்க ஸ்டீபன். சாக்கடை மேல கல் எறியாதீங்க.

ரங்கா said...

அநியாத்துக்கு மட்டுமே கொக்கரிக்கும் கூட்டம் அது...

நிறைய பார்த்தாச்சு .. இது மூன்றாவது தடவை னு நினைக்கிரேன்.

Anonymous said...

நிறைய காமெடி செய்தாங்க .

வடகரை வேலன் கூட தட்டி கேட்க முடியாமல் போனார் ..

காமெடி பீசுங்க ஸ்டீபன்.

Selvanza said...

I strongly condemn these abuses in public.

Why dont you take action with the help of bloggers against this criminal..

Prathap Kumar S. said...

இதெல்லாம் கேபிளாருக்கு கண்ணுலயே படாது. அசிங்கப்புடிச்ச தமிழ்பதிவர் குழுமத்தை துவக்கியதின் நோக்கமே இப்படி அசிங்கங்களை வாந்தி எடுப்பதற்குதானோ?

Unknown said...

இனி இதைப்பற்றி பேச வேண்டாம் ஸ்டீபன்.. முகம் தெரியாத முன் அறிமுகமற்ற நபர்களிடம் நட்பு வைத்துக்கொண்டால் இத்தகைய நிலைதான் ஏற்படும் ... அரவிந்த் உங்களை திட்டியதை நான் கண்டிக்கிறேன்.. மோசமான வார்த்தைகள் அது.. பொது வெளியில் அநாகரிகமாக பேசுவது தவறு..

Anonymous said...

Every man has his breaking point and you were brought upto this ..

Sorry blog-mate

Anonymous said...

மாப்பு போன பதிவுல கேட்டதுதான்..

அந்த பயலோட அட்ரஸ் எங்கன்னு சொல்ல சொல்லு..

இருக்கு மவனே ஒருநாள் ..விடபோறது இல்ல

ஜெயந்த் கிருஷ்ணா said...

இது போன்ற செயல்களை பார்க்கும் போது மிகவும் பயமாக உள்ளது...

செல்வநாயகி said...

Good to come out of places like that, keep writing.

vanathy said...

பொழுது போக்காக தானே வலைப்பக்கம் வருகிறோம், கமன்ட் சொல்கிறோம். இதில் வீணாக சண்டை, பிரச்சினைகள் ஏன் வளர்க்க வேண்டும்? நான் நீங்கள் குறிப்பிட்ட சண்டைகள் எதையும் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.
ஸ்டீபன், போகட்டும் விட்டு விடுங்கள்.

Anonymous said...

Why cant you report this email to Cybercrime police?

ஜெய்லானி said...

@@@vanathy said...

பொழுது போக்காக தானே வலைப்பக்கம் வருகிறோம், கமன்ட் சொல்கிறோம். இதில் வீணாக சண்டை, பிரச்சினைகள் ஏன் வளர்க்க வேண்டும்? நான் நீங்கள் குறிப்பிட்ட சண்டைகள் எதையும் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.
ஸ்டீபன், போகட்டும் விட்டு விடுங்கள். //


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

வெண்ணிற இரவுகள்....! said...

மிகவும் மோசமான வார்த்தைகள் , தவறுகள் யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் .
அப்புறம் எதற்கு குழுமம் கும்மி அடிக்கவா

Anonymous said...

Dear Nadodi.. Listen..

Its quite simple...

Immediately contact Malaysian Emabbasy and report them...

Let me tell you the next step later-

Lawyer.. ( will be anonymous for a while )

மாதவராஜ் said...

இவ்வளவு வன்மமும், வக்கிரங்களும் கொண்டவர்களும் இங்கே இருக்கிறார்கள் என அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள், ஸ்டீபன்!

இவைகளையும், இவர்களையும் உங்கள் நினைவுகளில் இருந்து அப்புறப்படுத்தி, தொடர்ந்து பயணியுங்கள்.

Unknown said...

நடந்த, நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. என்னை மாதிரி ஆட்கள் அடிக்கடி சார்ஜ் ஏற்றிக் கொள்வது, பதிவுகளைப் படித்துதான். இந்த மாதிரி நிகழ்வுகள், தனி மனித போற்றுதல்கள்/தூற்றுதல்கள், சார்ஜை ட்ரெய்ன் செய்துவிடுகின்றன.

வேண்டாதவைகளைப் புறக்கணித்துவிட்டு, தொடருங்கள். வாழ்த்துக்கள்!

அம்பிகா said...

\\மாதவராஜ் said...
இவ்வளவு வன்மமும், வக்கிரங்களும் கொண்டவர்களும் இங்கே இருக்கிறார்கள் என அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள், ஸ்டீபன்!

இவைகளையும், இவர்களையும் உங்கள் நினைவுகளில் இருந்து அப்புறப்படுத்தி, தொடர்ந்து பயணியுங்கள்.\\

எம் அப்துல் காதர் said...

@!@ ஜெய்லானி said...
@@@ vanathy said...

//பொழுது போக்காக தானே வலைப்பக்கம் வருகிறோம், கமன்ட் சொல்கிறோம். இதில் வீணாக சண்டை, பிரச்சினைகள் ஏன் வளர்க்க வேண்டும்? நான் நீங்கள் குறிப்பிட்ட சண்டைகள் எதையும் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.
ஸ்டீபன், போகட்டும் விட்டு விடுங்கள். //


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Mugundan | முகுந்தன் said...

ஸ்டிபன்,

இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம்.
தமிழ் வலைப்பதிவர்களுக்கு இது புதுசும் அல்ல.

பழசை மறந்து புத்துணர்ச்சியுடன் புதிதாய்
எழுதுங்கள்.

Anisha Yunus said...

நாம் எல்லாருமே ஒரு காலத்தில் கவலைகளை மறக்கவும், பொழுது போகவும்தான் இத்தகைய வலை சமாச்சாரங்களில் இறங்கியிருப்போம். இது போன்ற பிரச்சினைகள் எல்லா இடத்திலும் இருப்பதுதானுங்ணா..னீங்க பெரியவங்க...சொல்லி தெரியவேண்டியதில்லை. இருந்தாலும் மறந்து மன்னிச்சு விட்டுடுங்க. நாம் செய்யற எவ்வளவோ தப்புக்களை இறைவன் மன்னிச்சு, அதன் பின்னரும் நம்ம இறைஞ்சுதல்களை அங்கீகரிப்பதில்லையா? நமக்கு உணவும் உறைவிடமும் தருவதில்லையா? நாமும் பிற மனிதர்களை இப்படியே மறப்பதும், மன்னிபதும்தான் சிறந்தது. ஃப்ரீயா விடுங்ணா!!

வால்பையன் said...

இப்போ தான் வெளியே வந்திங்களா!?

Asiya Omar said...

:( எங்கே பார்த்தாலும் இப்படி ஏதாவது பிரச்சனை.கொஞ்சம் ப்ரேக் எடுத்து விட்டு மனம் சமாதானமானவுடன் எழுத வாருங்கள் சகோ.ஸ்டீபன்.

பிச்சைப்பாத்திரம் said...

அன்பு நண்பரே,

சர்ச்சையின் பின்னணி என்னவென்று தெரியாமல் அதுபற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் இளைப்பாற,நம் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளும் வரும் இணையத்தில் இப்படி பிறரைக் காயப்படுத்தி அதில் சுகம் காணும் ஆசாமிகள் சிலர் இருக்கிறார்கள். இதனால் ஏற்கெனவே இங்கு புழங்கிக் கொண்டிருப்போரும் எழுத வரலாமா என்று நினைத்துக் கொண்டிருப்போரின் மத்தியில் பெரும் அச்ச உணர்வும் தயக்கமும் உருவாகின்றன.

இந்தச் சூழ்நிலையை ஆரம்பத்திலேயே தடுக்கவும் அப்படியும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை எங்கு முறையிடுவது, எப்படி தீர்ப்பது என்கிற வழிவகைகளை பற்றி பதிவர்களே கூடி ஆலோசிக்கலாம். ஆக்கப்பூர்வமானதொரு தலைமையில் அதற்கான அமைப்பையும் உருவாக்கலாம்.

இவையெல்லாம் சாத்தியமா என்கிற தயக்கம் எனக்குள்ளே இருந்தாலும் ஊர் கூடி இழுத்தால் தேர் நகரும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் நானும் இவ்வாறானதொரு பிரச்சினையில் பாதிக்கப்பட்டதால்தான் உங்களின் வேதனையை சரியாக உணர்ந்து இங்கே பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறேன். இல்லையெனில் நானும் கூட இந்தப் பதிவை வாசிக்காமலேயே போயிருப்பேன். 'யாருக்கோ எதுவோ நிகழ்கிறது' என்கிற அலட்சிய மனப்பான்மை கூட நம்மிடமிருப்பது நல்லதல்ல என்று தோன்றுகிறது.

இந்த மனநிலையிலிருந்து உடனே வெளியே வாருங்கள். நண்பர்களுடன் உரையாடுங்கள், ஆலோசனை கேளுங்கள். வேறு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில் கவனத்தை திசைதிருப்புங்கள். இயலுமாயின் சம்பந்தப்பட்ட நபர்களிடமே தொடர்பு கொண்டு பேசிப் பாருங்கள். எல்லோரும் மனிதர்கள்தானே? நானும் அதையேதான் முயன்று கொண்டிருக்கிறேன்.

வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள ஸ்டீபன்..

மிகவும் வருத்தமாக இருக்கிறது. இத்தனை அநாகரிகமாகக்கூட நடந்துகொள்வார்களா என நினைக்கையில் பயமாகவும் இருக்கிறது. நீங்கள் தொலைபேசியில் பேசியபோதே உங்கள் வலியை உணர முடிந்தது.

நீங்கள் நன்றாக எழுதக்கூடியவர். இந்த பிரச்சனையினால் ஏற்பட்ட மன அழுத்தம் குறைந்து விரைவில் மீண்டு வர வேண்டும். வலையுலகினால் கிடைத்த அற்புதமான நட்புக்கள் நிறைய இருக்கின்றன. கவலை வேண்டாம் தம்பி.

Udayakumar Sree said...

சேம் பிளட் நண்பா!

நான் விலகி வெகு நாட்களாகிறது.

புதிய பயணம் தொடர்வோம்.

kavisiva said...

துஷ்டரைக் கண்டால் தூர விலகு! விட்டுத் தள்ளுங்க ஸ்டீபன். அவர்கள் வார்த்தை உங்களைக் காயப்படுத்தினால் அது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வெற்றி. அந்த வெற்றியை கொடுக்காதீங்க. வெறும் தூசாக எண்ணி தூக்கி எறியுங்கள். உங்களை உங்களுக்குத் தெரியும். உண்மையான நண்பர்களுக்குத் தெரியும். அது போதும். வீணர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.

r.v.saravanan said...

@!@ ஜெய்லானி said...
@@@ vanathy said...

//பொழுது போக்காக தானே வலைப்பக்கம் வருகிறோம், கமன்ட் சொல்கிறோம். இதில் வீணாக சண்டை, பிரச்சினைகள் ஏன் வளர்க்க வேண்டும்?.
ஸ்டீபன், போகட்டும் விட்டு விடுங்கள். //

repeat

அன்புடன் மலிக்கா said...

நம் எண்ணங்களை வெளிபடுத்தும் இடமாக இருக்குமென்றுவந்தால் இதற்குள் இவ்வளவு இருக்கா.

மனதை லேசாக்குங்கள் ஸ்டீபன்.
எல்லாம் நன்மையாக முடியும்..

போளூர் தயாநிதி said...

nanpare itharkellam kalanga vendam.
polurdhayanithi

Related Posts with Thumbnails