எந்தவிதமான வேலையாக இருந்தாலும் அந்த வேலைக்கான இண்டர்வியூக்கு செல்ல நாம் நம்முடைய பயோடேட்டாவை ரெடி செய்வது மிக முக்கியமாகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் நம்முடைய பயோடேட்டாவை பார்த்து தான் நம்மை இண்டர்வியூக்கு அழைக்கலாமா?.. வேண்டாமா?.. என்று முடிவு செய்கிறார்கள். எனவே நல்ல வேலைகள் கிடைப்பதில் இந்த பயோடேட்டாவின் பங்கு மிக முக்கியமாகிறது.

கையினால் டைப் செய்து பேப்பரில் பிரிண்ட் போட்ட பயோடேட்டாவிற்கு பதில் வாயினால் பேசி வீடியோவாக தொகுக்கும் தொழில் நுட்ப முறைகள் அறிமுகம் ஆகிவிட்டன. இந்த வகையான வீடியோ பயோடேட்டாக்கள் வீடியோரெஸ்யூம்(Video Resume) என்று அழைக்கப்படுகிறது. இவை மேலை நாடுகளில் பிரபலம் என்றாலும், நமது இந்தியாவில் இப்போது தான் அறிமுகமாகிறது.
C2C Online Video Resume
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்களும் உங்களுடைய பயோடேட்டவை வீடியோவாக பதிவு செய்யலாம். இவர்கள் தான் இந்தியாவில் முதன் முதலில் இந்த ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம் தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். C2C (Candidate to Client)
பெரும்பாலும் பயோடேட்டா தயார் பண்ணும் போது இண்டர்நெட்டில் இருந்து கிடைக்கும் சாம்பிள் பயோட்டேட்டாவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பண்ணிவிடுகிறோம். இவ்வாறு தயார் செய்த பயோடேட்டாவை கொண்டு இண்டர்வியூ சென்றால், கண்டிப்பாக இண்டர்வியூ நடத்துபவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழிக்கத்தான் செய்வோம். இந்த வீடியோ ரெஸ்யூம் மூலம் இதை கண்டிப்பாக தவிர்க்க முடியும். நாம் வீடியோவில் பேசிப் பதிவு செய்ததை பற்றி தான் கேட்பார்கள். நாமும் எந்தவிதமான டென்சனும் இல்லாமல் இண்டர்வியூவில் பங்கேற்க முடியும். இதில் பதிவேற்றி வைத்த நம்முடைய வீடியோ ரெஸ்யூமின் லிங்கை எவருக்கு வேண்டுமானாலும் மெயிலின் மூலம் அனுப்பி வைக்க முடியும். எல்லோராலும் ஓபன் செய்து பார்க்க முடியும். வீடியோ ரெஸ்யூமில் புதிதாக அப்டேட் செய்யவோ அல்லது திருத்தம் செய்யவோ எளிதாக முடியும்..
காலம் பொன் போன்றது. காலையில் இருந்து மாலை வரை இண்டர்வியூ நடத்தும் ஆபிசில் காவல் இருந்து கடைசியில் இண்டர்வியூ நடத்தும் அறைக்குள் நுழைந்தால் பயோடேட்டாவில் உள்ள விசயங்களையே திரும்ப கேட்டுவிட்டு வீட்டிற்கு லெட்டர் அனுப்புகிறோம் என்று கூலாக சொல்வார்கள். இப்படிப்பட்ட டெம்பளேட் நேர்முகத் தேர்வுகளை இந்த வீடியோ ரெஸ்யூம் மூலம் முற்றிலும் தவிர்க்க முடியும்.
இண்டர்வியூ நடத்தும் கம்பெனிகளுக்கும், ஆட்களை தேர்வு செய்ய இந்த வீடியோ ரெஸ்யூம் முறையானது ரெம்ப உதவியாக இருக்கும். ஆட்களை தேர்வு செய்வதற்கு என்று தனியாக அறைகள் ஒதுக்கி அவர்களில் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து பேசி அவர்களின் திறைமையை பரிசீலிக்க வேண்டியது இல்லை. இதனால் கம்பெனிகளுக்கு கணிசமான பணமும், நேர விரயமும் மிச்சமாகிறது.
சி2சி ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம்(C2C Online Video Resume) நடத்தும் இவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக மேன்பவர் கன்சல்டன்சி நடத்தி பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். மேலும் ஹெச் ஆர்(HR) தொடர்பான பல டிரெயினிங்க் கோர்ஸ்களும் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு சென்னை மற்றும் துபாயில் ஆபிஸ் இருக்கின்றது
இந்த வீடியோ ரெஸ்யூம் ஆன்லைன் முறையானது வேலை தேடுபவர்களையும்(Candidate), வேலை கொடுப்பவர்களையும்(Client) அடுத்த கட்டத்திற்கு(Next Level) அழைத்து சென்றிருக்கிறது என்பது திண்ணம். விரைவில் இவர்கள் வீடியோ விவாகா சர்வீஸும் கொண்டுவரயிருக்கிறார்கள்..
.
.
.
6 comments:
present steban
Hello Mr.Nadodi. Resume is not ரெஸ்யும் ,அது ரெசுமே . ரெசுமே என்பது CV என்று மற்றொரு அர்த்தமும் உண்டு. ரெஸ்யும் என்றால் ஆரம்பித்தல் என்று பொருள். Dear Nadodi please refer dictionary before writing English words in your blog.
நல்ல விசயமாக இருக்கிறது ஸ்டீபன்.
உபயோகமான பகிர்வு நன்றி
@r.v.saravanan said...
//present steban//
வாங்க சரவணன், எப்படி இருக்கீங்க..:-)
@Thulasi said...
//Hello Mr.Nadodi. Resume is not ரெஸ்யும் ,அது ரெசுமே . ரெசுமே என்பது CV என்று மற்றொரு அர்த்தமும் உண்டு. ரெஸ்யும் என்றால் ஆரம்பித்தல் என்று பொருள். Dear Nadodi please refer dictionary before writing English words in your blog//
கருத்துக்கு ரெம்ப நன்றி துளசி மேடம்..
அடுத்த முறை திருத்தி கொள்கிறேன்....
@சிநேகிதன் அக்பர் said...
//நல்ல விசயமாக இருக்கிறது ஸ்டீபன். //
வாங்க அக்பர்.. நல்லா இருக்கீங்களா?... மெயில் அனுப்புறேன்..
@jothi said...
//உபயோகமான பகிர்வு நன்றி //
கருத்துக்கு ரெம்ப நன்றிங்க..
சகோ நலமா?நீங்க ஊருக்கு போய்விட்டு எப்ப பதிவு எழுத ஆரம்பிச்சீங்க,சும்மா வந்து பார்ப்போம்னு வந்தால் அசத்தலான இடுகை.மிக்க மகிழ்ச்சி.
Post a Comment