Monday, January 25, 2010

சவூதி அரேபியா-பெக்ரைன் இடைப்பட்ட கடல் வழிச் சாலை_பாகம்-1

நான் சவூதி அரேபியாவில் பார்த்த இடங்களில் என்னை பிரமிக்க வைத்த இடங்களில் ஒன்று கிங்க் பகாத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கடல் வழி மேம்பாலச் சாலை. இது சவூதி அரேபியா நாட்டையும் பெக்ரைன் நாட்டையும் இணைக்க கூடிய பெரிய கடல் வழி மேம்பாலம் ஆகும்.




மிக அழகாக, நேர்த்தியாக பிரமிக்கதக்கதாய் கட்டப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து சவூதி அரேபியா வருபவர்கள் பெக்ரைன் விமானத்தளத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து வழியாக பயணம் செய்ய நேர்ந்தால் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.




இந்த சாலையானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஒரு பகுதி சவூதி அரேபிய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மற்றும் ஒரு பகுதி பெக்ரைன் அரசால் பாதுகாக்கப்படுகிறது. இந்த இரண்டு எல்லைப் பகுதியும் இணையும் கடலின் மேல் பகுதியில் தனித் தனியே இரு குட்டி நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் இரண்டு மிக பிரமாண்ட கோபுரங்களையும் அமைத்துள்ளார்கள்.



இந்த சாலையானது அமைக்க 1965-ஆம் ஆண்டு இரு நாட்டு மன்னர்களால் முடிவுச் செய்யப்பட்டது. இரண்டு நாட்டு குழுக்கள் இணைந்து திட்டம் வகுத்தன. பின்பு 1968-ஆம் ஆண்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட வேலைகள் முடிக்கப்பட்டு 1986-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சவூதி மன்னர் கிங்க் பகாத் பின் அப்துல் அஸிஸ்(King Fahd bin Abdul Aziz) மற்றும் பெக்ரைன் மன்னர் ஹெச் ஹெச் சாகிப் இசா பின் சல்மான்(HH Shaikh Isa bin Salman) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்பு நாளைடைவில் இது கிங்க் பாகத் கேஸ்வே(KING FAHAD CAUSEWAY) என்று அழைக்கப்பட்டது.


இந்த பாலமானது வாகனங்கள் வருவதற்க்கும் போவதற்க்கும் தனித்தனியாக சாலைகள் அமைக்கப்பட்டு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சாலையின் அகலம் 11.6 மீட்டர். ஒவ்வொரு சாலையும் இரண்டு லேன்(Lanes) களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. ஆங்கங்கே வண்டிகளை நிறுத்துவதற்கு அவசர வண்டி நிறுத்துமிடங்களையும்(Emergency Vehicle Parking) அமைத்துள்ளனர். இந்த சாலையானது ஐந்து பாலங்களையும்(Bridges), ஏழு செயற்கை மிதவைத் தளத்தையும்(Embankments) கொண்டு அமைக்கப் ப்ட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர். இது 536 சிமென்ட் தூண்களால்(Concrete Columns) கடல் உள் இருந்து தாங்கப்படுகிறது.



இந்த சாலையனாது நான்கு ஒப்பந்தங்களாக(Contract) போடப்பட்டு கட்டி முடிக்கப் பட்டது. இந்த சாலை கட்ட அமைக்கப் பட்ட குழுவின் பரமரிப்புக்கும், நிர்வகிப்பவர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் ஆன செலவு மட்டும் 86 மில்லியன் சவூதி ரியால். முழுவதும் கட்டி முடிக்க செலவு ஆன தொகை 3,036 மில்லியன் சவூதி ரியால்(1SR=12.32 RS)


இவர்கள் சதாரணமாக 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். இந்த கடல் வழி சாலையைக் கடப்பதற்கு 15 முதல் 20 நிமிடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பயணம் செய்யும் போது இரண்டு பக்கங்களில் உள்ள இயற்கை அழகு நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.


சவூதி அரேபியாவில் மேம்பாலங்கள் கட்டுவது சதாரணமாக செய்து விடுகிறார்கள். ஏதோ சிகரெட் அட்டையில் சிறுவர்கள் வீடுகள் கட்டுவதைப் போல் சிமென்ட் பாளங்களை(CONCRETE BLOCK) கொண்டு அடுக்கி விடுகிறார்கள்.



கிங் பகாத் கேஸ்வே க்கு(KING FAHAD CAUSEWAY) நான் சென்று வந்த அனுவத்தை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்..

தொடரும்......

22 comments:

Anonymous said...

மிகவும் அருமையாக உள்ளது, பிரபிப்பாக இருக்கிறது,வானதி

gulf-tamilan said...

சவுதியில் எங்கேயிருக்கிறீர்கள்??

நாடோடி said...

@வானதி
கருத்துக்கு மிக்க நன்றி

நாடோடி said...

@gulf-tamilan
நீங்க இருக்கும் பக்கம் தான். ஜித்தா வில் உள்ள ராபிக்(Rabigh)

செ.சரவணக்குமார் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்தச் சாலையில் பலமுறை பயணம் செய்திருக்கிறேன்.

வடுவூர் குமார் said...

ஆர்ப்ப‌ரிக்காத‌ க‌ட‌ல் ம‌ற்றும் புதிய‌ தொழிற்நுட்ப‌த்தை ஏற்றுக்கொள்ளும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் உள்ள‌ நாடு என்று ப‌ல‌ பாசிட்டிவ் பாயிண்ட்க‌ள் இருப்ப‌தால் சிக‌ரெட் பெட்டி மாதிரி பால‌ம் க‌ட்ட‌முடிகிற‌து.
க‌த்திப்பாரா போன்ற‌ சென்னை மாந‌க‌ர‌ பால‌ங்க‌ள் எப்ப‌டி க‌ட்டிமுடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ என்று பார்த்தால் வ‌யிறு எரியும்.

நாகா said...

That's King Fahd Causeway.. not caseway

வரதராஜலு .பூ said...

பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது.

கிரேட் ஒர்க்

சிநேகிதன் அக்பர் said...

நானும் ஒரு முறை சென்று பார்த்துள்ளேன்.

அழகாக விவரித்துள்ளீர்கள்.

abuanu said...

மிகவும் அருமையாகவுள்ளது. தகவலுக்கு நன்றி. இத்துடன் உங்கள் அனுபவத்தையும் எழுதுங்கள்.

நாடோடி said...

@செ.சரவணக்குமார்

ஓ......நீங்களும் நம்ம ஏரியா தானா..வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

நாடோடி said...

@வடுவூர் குமார்

உண்மை தான் நண்பரே..உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

நாடோடி said...

@நாகா

தவறுக்கு வருந்துகிறேன்..திருத்திவிட்டேன்..உங்கள் கருத்துக்கு நன்றி.

நாடோடி said...

@வரதராஜலு .பூ

உண்மை தான் ...கருத்துக்கு நன்றி

நாடோடி said...

@அக்பர்

வருங்கள் நண்பரே..அரை சதம் அடித்து விட்டீர்கள்..வாழ்த்துக்கள்.

நாடோடி said...

@abuanu

கண்டிப்பா எழுதிவிட வேண்டியதுதான்..கருத்துக்கு நன்றி.

angel said...

let me try in future to have a visit

அண்ணாமலையான் said...

பிரமிப்பா இருக்கு. உங்களுக்கு நன்றி

Prathap Kumar S. said...

சாரி தல பாலோவர் ஆகாததால நீங்க போட்ட பதிவுகள் தெரியாம போச்சு... இனிமே ஒழுங்கா வந்துடறேன்.

படித்ததும் பிரம்பிக்க வைக்கிறது. இன்னும் சில படங்கள் போட்டிருக்கலாம்.
சவுதி அனுவங்கள் நிறைய எழுதுங்க, முடிந்தால் படங்களுடன்.

என் நண்பர் ஒருவர் எட்டு வருடங்கள் சவுதியில் இருந்து துபாய்க்கு வந்தார், அவர் சவுதி பற்றி கதைகதையாய் சொல்வதைகேட்கும்போது அந்தபக்கம் தலைவச்சு படுத்துறக்கூடாதுன்னு தோணும்...
உண்மையாவா?

நாடோடி said...

@angel

கண்டிப்பா முயற்ச்சி பண்ணுங்கள் பார்க்க வேண்டிய இடம்

நாடோடி said...

வாங்க அண்ணாமலையான்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்

வாங்க தல... அடுத்த பதிவுல படம் போட்டு விடுவோம்

Related Posts with Thumbnails