Tuesday, July 27, 2010

இந்த‌ பொண்ணுங்க‌ளே இப்ப‌டித்தான்!!!..

1) வாத்தியாரு போர்டுல எழுதி போடுறதுல அவரு ஸ்பீடுக்கு எழுதமுடியாமல், எல்லோரும் எழுதிட்டீங்களானு கேட்கும் போது "நான் இன்னும் முடிக்கலனு" சொல்லுறதுக்கு கூச்சபட்டு இருந்திட்டு, வாத்தியாரு அழிச்சி முடிச்சப்புறம் நம்ம கிட்ட வந்து உன் நோட்டை கொடு எழுதிட்டு தந்திடுறேனு கெஞ்சுவார்கள். சரினு நோட்டை கொடுத்துவிட்டா மறுநாளு நோட்டு தண்ணில நனைஞ்சது போல இருக்கும், என்னானு கேட்டா என் தம்பி ஒண்ணுக்கு அடிச்சிட்டானு கூலா சொல்லுவார்கள்.

2) குளிக்காம, பல்லும் தேய்க்காம புது துணியை மட்டும் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டு, நாம குளிச்சிட்டு, பல்லும் தேய்ச்சிட்டு நேற்று போட்ட டிரஸை இன்னைக்கு போட்டு வந்தத பற்றி கிண்டல் பண்ணுவார்கள். அவர்கள் மூஞ்சி கூட கழுவாமல் பவுடர் போட்டதை கண்ணுல இருக்கிற கூழை காட்டி கொடுத்திரும், அதை நாம சொன்னா மூஞ்சை தூக்கி வச்சிட்டு நாலு நாளு பேச மாட்டார்கள்!!!

3) ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போகும் போது ஏவானவது புதுசா வேற ஸ்கூல்ல படிச்ச பையன் ஒருத்தன் வந்து சேருவான். இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.

4) அப்படியே சைலண்டா நம்மள கழட்டிவிட்டுருவார்கள். இவ ஏன் நம்மள கழட்டி விட்டானு ஆரய்ச்சில இறங்கி, கொஞ்சம் படிச்சிட்டு இருந்த படிப்பையும் கோட்டை விட வச்சிருவார்கள். அப்படியே விட்டுட்டாலும் பரவாயில்லை. தீடிரெனு ஒரு நாள் வந்து எனக்கு பைசம் சைட்டைவம்(பட்டாணி) செடியின் பூ ஒண்ணு வேணுமுனு இளிச்சிட்டு வந்து நிப்பார்கள். நாமளும் காடு மேடுனு அலைஞ்சி திரிஞ்சி கொண்டு வந்து கொடுத்தா!!. மகேஷ் இரண்டு கொண்டு வந்தான், எனக்கும் ஒண்ணும் கொடுத்தான்னு வழிவார்கள்.

5) உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!



6) வாத்தியாரு கேட்ட கேள்விக்கு பதில் தெரியலனு நாம எழுந்து நிக்கும் போது, அவளிடம் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லி வாத்தியாரின் கோபத்தை கிளறி விடுவார்கள்.

7) நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன வாத்தியாரு, இன்னைக்கு மறந்து பாடம் நடத்த போனா, முத ஆளா எழுந்து சார் இன்னைக்கு பரிட்சை வைக்கிறேன்னு நேத்தைக்கு சொன்னீங்கனு எடுத்து கொடுப்பார்கள்.

8) ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநாளே பொண்ணுங்க எல்லாம் எழுதி கொண்டு வந்து அவருடைய டேபிளில் அடுக்கி விடுவார்கள். நாம இன்னும் அந்த ரெக்கார்டு நோட்டை கடையில் இருந்து வாங்கியே இருக்க மாட்டோம்.

9) காலையிலேயே இன்னைக்கு எந்த வாத்தியாரு எல்லாம் வரலேனு லிஸ்ட் எடுத்து அவருடைய பாடவேளையில் விளையாட போய்விடலாம் என்று பிளான் பண்ணி, கிரிக்கெட் விளையாட டீம் எல்லாம் பிரிச்சி வச்சிட்டு அந்த பாட வேளைக்கு காத்திருந்தா, நல்ல பிள்ளையாட்டு இந்த பொண்ணுங்க டீச்சர்ஸ் ரூம்க்கு போய் ஆணியில்லாமல் தூங்கிட்டு இருக்கும் ஏதாவது டீச்சரை கூட்டி வந்து மொக்கை போட வச்சிடுவாங்க.

10) A+B வெக்டார் இல் ஆரம்பித்து X+Y+Z-வெக்டார் வரைக்கும் ஒரு 70MM இங்கிலிஷ் படத்தை ஓட்டிட்டு நம்ம கணக்கு டீச்சர் புரிஞ்சுதானு நம்மளை பார்த்து கேக்காமல் பொண்ணுங்களை பாத்து கேக்கும் போது, பொண்ணுங்க எல்லாம் ஒண்ண சேர்ந்து ஆமா.. ஆமானு மேலும் கீழும் தலையை ஆட்டுவார்கள். அவங்களை கேட்டுட்டு இந்த பக்கம் நம்மளை பார்த்து கேக்கும் போது நம்ம மட்டும் என்னா?.. இல்லைனா தலையை ஆட்ட முடியும் நாமளும் கோயில் மாடு போல தலையை ஆட்ட வேண்டியது தான். அதுக்கு மாறா எவனாவது தலையை ஆட்டுறதை டீச்சர் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். அந்த பொண்ணுங்க எல்லாம் பாடத்தை கவனிக்க வருது, நீங்க எதுக்குடா வர்றீங்கனு ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு பயந்தே கமுக்கமா உக்கார்ந்து விடுவோம். டீச்சர் போனதும் இந்த பொண்ணுங்க கிட்ட என்ன புரிஞ்சுதுனு கேட்டா... ஒண்ணும் புரியலைனு கோரஸ் பாடும்...

அட ராமா... ராமா.. இந்த பொண்ணுங்க கூட எல்லாம் என்னை ஏண்டா படிக்க வச்ச?... (இதை க‌வுண்ட‌ம‌ணி வ‌ச‌ன‌ம் போல் ப‌டிக்க‌ வேண்டாம்..ஹி..ஹி..)

....................ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.....................

இதுக்கு செய்வினை, செய‌ப்பாட்டுவினை ஆற்றுப‌வ‌ர்க‌ள் எல்லாம் மேலே உள்ள‌ வாச‌க‌த்தை ந‌ல்லா திரும்ப‌ திரும்ப‌ ப‌டிச்சிட்டு ஆத்துமாறு கேட்டுகொள்கிறேன் :))

குறிப்பு: நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலான‌ந்தாவின் ஆசிர‌ம‌த்தில் முத‌ன்மை சிஷ்ய‌ன் ஆகுவ‌த‌ற்கு அனும‌தி வாங்கி விட்டேன். அத‌னால‌ இதுக்கு க‌மெண்ட் போடுப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டில் கிடைக்கும் ஆத‌ர‌வுக்கு(பூரிக்க‌ட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க‌ எச‌மான் குத்துங்க‌.. ஆனா ஒரு சின்ன‌ க‌ண்டிஷ‌ன் "பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..

.

.

.

Friday, July 23, 2010

சிரிக்க‌, ர‌சிக்க‌ ம‌ட்டும்

ஒரு ஆளு டாக்ட‌ரிட‌ன் போனான்;

ஆளு: டாக்ட‌ர் நான் ரெம்ப‌ நாள் வாழ‌னும் அதுக்கு நான் என்ன‌ ப‌ண்ண‌னும்?

டாக்ட‌ர்: அப்ப‌ நீங்க‌ உட‌னே க‌ல்யாண‌ம் ப‌ண்ணுங்க‌.

ஆளு: அது எப்ப‌டி என‌க்கு உத‌வியா இருக்கும் டாக்ட‌ர்?

டாக்ட‌ர்: ரெம்ப‌ நாள் வாழ‌னும் என்கிற‌ ஆசை உங்க‌ளுக்கு வ‌ர‌வே வ‌ராது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கேள்வி: வாழும் நாட்க‌ள் ஆண்க‌ளை விட‌ பெண்க‌ளுக்கு அதிக‌மாக‌ இருக்கிற‌தே எப்ப‌டி?

ப‌தில்: க‌டையில் பொருட்க‌ள் வாங்குப‌வ‌ர்க‌ளை விட‌, அத‌ற்கு ப‌ண‌ம் செலுத்துப‌வ‌ர்க‌ளுக்கு தான் ஹார்ட் அட்டாக் வ‌ரும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

முழுமைக்கும், முடிவ‌த‌ற்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

உன‌க்கு ந‌ல்ல‌ ம‌னைவி அமைந்தால் அது முழுமை, இல்லையென்றால் உன் க‌தை முடிந்துவிடும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

இர‌ண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்க‌ள்;

ஒருவ‌ன்: நான் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்னு நினைக்கிறேன் ம‌ச்சி. ஏன்னா வெளியில‌ சாப்பிடுற‌து, துணியை ச‌ல‌வை செய்யுற‌து, துணியை அய‌ன் ப‌ண்ணுற‌து, வீட்டை கிளீன் ப‌ண்ணுற‌து என்று ஒரே பிர‌ச்ச‌னையா இருக்குடா!!!!!

இன்னொருவ‌ன்: நான் டைவ‌ர்ஸ் ப‌ண்ணிக்க‌லாம்னு நினைக்கிறேன் ம‌ச்சி. ஏன்னா நீ மேல‌ சொன்ன‌ எல்லாம் என‌க்கு ட‌புளா செய்ய‌ வேண்டியிருக்குடா!!!!!

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

ஒரு ஆணின் ப‌டிநிலைக‌ள்

நிச்ச‌ய‌தார்த்த‌ம் முடிந்த‌ பின்பு: சூப்ப‌ர்மேன்

திரும‌ண‌ம் முடிந்த‌ பின்பு: ஜென்டில்மேன்

ப‌த்துவ‌ருட‌ம் க‌ழித்து: வாட்ச்மேன்

இருவ‌துவ‌ருட‌ம் க‌ழித்து: டாப‌ர்மேன்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

அப்ப‌டியே இதையும் பார்த்திட்டு போங்க‌...









குறிப்பு: இவை அனைத்தும் என்னுடைய‌ சொந்த‌ க‌ருத்துக்க‌ள் கிடையாது. ம‌ண்ட‌ப‌த்தில் யாரோ எழுதி என‌க்கு மெயில் அனுப்பிய‌வை.

.

.

.

Sunday, July 18, 2010

தாலாட்டும்(டிய‌) ப‌லாம‌ர‌ம்

அந்த‌ பெரிய‌ ப‌லாம‌ர‌ம் என‌து வீட்டின் எல்லையில் தான் இருந்த‌து. த‌டித்த‌ த‌ண்டில் கீழ்நோக்கி கிள‌ந்த‌ வேர்க‌ள் த‌ன் நீட்சியை ம‌ண்ணில் புதைத்திருந்த‌து. மேல்நோக்கி ஓங்கி வ‌ள‌ர்ந்த‌ கிளைக‌ள் நான்கு ப‌க்க‌மும் த‌ன்னுடைய‌ ஆதிக்க‌த்தை செலுத்தியிருந்த‌து. எந்த‌வொரு ப‌ருவ‌ நிலையிலும் அத‌ன் ப‌சுமை ம‌றைவ‌தில்லை.

என‌க்கு அப்போது நான்கு வ‌ய‌து. ம‌ழை "சோ" என்று கொட்டிய‌து, இடியும் மின்ன‌லும் வேறு சேர்ந்து கொண்டு ப‌ய‌முறுத்திய‌து. "உர்" என்ற‌ ச‌ப்த‌த்துட‌ன் காற்று ப‌ல‌மாக‌ அடித்த‌து. வீட்டை சுற்றிலும் இருந்த‌ ம‌ர‌ங்க‌ள் அனைத்தும் காற்றின் வேக‌த்திற்கு ஈடு கொடுத்து சுழ‌ன்று கொண்டிருந்த‌து. தீடிரென‌ "கிரீக்" என்ற‌ ஒலி காதில் ஒலித்த‌து. வீட்டின் திண்ணையில் இருந்து ம‌ழையை ர‌சித்து கொண்டிருந்த‌ அப்பா "ந‌ம‌து ப‌லாம‌ர‌த்தின் கிளையில் விரிச‌ல் ஏற்ப‌ட்டுவிட்ட‌து, முறிந்தாலும் முறிந்து விட‌லாம்" என்றார்க‌ள். என‌க்கு "திக்" என்று இருந்த‌து.

காற்றின் வேக‌ம் குறைந்து, ம‌ழை முற்றிலும் நின்ற‌ பின்பு ஓடி சென்று ப‌லாம‌ர‌த்தை பார்த்தோம். நான்கு ப‌க்க‌மும் ப‌ர‌ப்பியிருந்த‌ கிளையில் ஒரு கிளையில் விரிச‌ல் ஏற்ப‌ட்டிருந்த‌து. அப்பா உட‌ன‌டியாக‌ ம‌ர‌த்தில் ஏறி அந்த‌ விரிச‌ல் ஏற்ப‌ட்டிருந்த‌ கிளையை தேங்காய் நார் க‌யிற்றால் க‌ட்டி, ப‌க்க‌த்தில் இருந்த‌ ப‌ல‌மான‌ கிளையுட‌ன் சேர்த்து க‌ட்டினார். விரிச‌ல் நாள‌டைவில் காணாம‌ல் போன‌து. அந்த‌ ப‌லாம‌ர‌ம் என‌து தாத்தா ந‌ட்டு வைத்தது என்று அப்பா சொல்வார்க‌ள்



வ‌ருட‌த்திற்கு வ‌ருட‌ம் அந்த‌ ம‌ர‌த்தின் வ‌ள‌ர்ச்சி அபார‌மாக‌ இருந்த‌து. அத‌ன் வேர்க‌ள் ம‌ண்ணில் இருந்து வெளியில் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. சுற்றி ப‌ட‌ந்திருந்த‌ வேர்க‌ள் தான் எங்க‌ளுக்கு வ‌ண்டி, அந்த‌ வேர்க‌ளில் முத‌ன்மையாக‌ புடைத்திருந்த‌ வேர்தான் டிரைவ‌ர் உக்காரும் இட‌ம். அதில் பெரும்பாலும் நான் தான் இருப்பேன். என‌து அண்ண‌ன் தான் டிக்க‌ட் கொடுப்ப‌வ‌ர். அந்த‌ ப‌லாம‌ர‌த்தின் ப‌ழுத்த‌ இலைதான் டிக்க‌ட், வ‌ண்டியில் ஏறுப‌வ‌ர்க‌ளுக்கு அந்த‌ இலையில் குச்சியால் ஓட்டையிட்டு கொடுப்பான். வேரில் அம‌ர்ந்த‌ வாறே, டுர்..டுர்ர்ர் என்ற‌ ச‌ப்த்த‌துட‌ன் வ‌ண்டி ப‌ய‌ண‌ம் தொட‌ரும். ப‌க்க‌த்தில் உள்ள‌‌ ஊர்க‌ளில் பெய‌ரை சொல்லி ச‌ப்த‌த்தை நிறுத்துவேன். ஒவ்வொருவ‌ரும் இற‌ங்குவார்க‌ள்.

ப‌லாம‌ர‌த்தில் கிளைக‌ள் அட‌ந்து வ‌ள‌ந்திருந்த‌தால் சூரிய‌னின் க‌திர்க‌ள் முற்றிலும் மேலே விழுவ‌து இல்லை, என‌வே பொழுதோர‌மும் அத‌ன் அடியில் தான் எங்க‌ளின் பொழுது போகும். அக்கா, அண்ண‌னுட‌ன் சேர்ந்து கொண்டு கூட்டாஞ்சோறு செய்து விளையாடும் போது நான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்ப‌து இந்த‌ ப‌லாம‌ர‌த்தை தான். ம‌ண்ணில் வீடுக‌ள் க‌ட்டி, இலை த‌ழைக‌ளை ப‌றித்து வ‌ந்து ச‌மைய‌ல் செய்து விளையாடுவ‌து த‌னிசுக‌ம். மாலைநேர‌ம் ஆகிவிட்டால் கையில் புளிய‌ங்கொட்டையுட‌ன் ப‌லாம‌ர‌த்த‌டிக்கு கிள‌ம்பி விடுவோம். ஏற்க‌ன‌வே தோண்டி வைத்தியிருக்கும் பாண்டி விளையாட்டு குழியில் நிர‌ப்பி ஆட‌ துவ‌ங்கிவிடுவோம்.

ம‌ர‌த்தில் இருந்து ப‌ழுத்து விழும் இள‌ம‌ஞ்ச‌ள் இலைக‌ளை சேக‌ரித்து அவைக‌ளை வைத்து ராஜா, ராணி கீரிட‌ம் செய்வ‌து த‌னி அழ‌கு. அதில் என‌து அண்ண‌ன் கை தேர்ந்த‌வ‌ன். அந்த‌ இலையின் ஒரு முனையை ம‌ற்றொரு முனையுட‌ன் சேர்ந்து வைத்து தென்ன‌ங்குச்சியால் பிணைத்து அழ‌காக‌ கோர்த்து விடுவான். அதை த‌லையில் அணிந்து கொண்டு வ‌ல‌ம் வ‌ருவ‌தும் உண்டு. அதை நினைக்கும் போது, க‌ற்கால‌ ம‌னித‌ர்க‌ள் வாழ்க்கை தான் ஞாப‌க‌ம் வ‌ரும்.

வ‌ச‌ந்த‌ கால‌ங்க‌ள் வ‌ர‌ தொட‌ங்கிவிட்டால் அந்த‌ ம‌ர‌த்தில் காக்கையின் கூடுக‌ளை பார்க்க‌ முடியும். குறைந்த‌து இர‌ண்டு கூடுக‌ளாவ‌து இருக்கும். காலையில் எழுத‌வுட‌ன் முத‌லில் வ‌ந்து பார்ப‌து இந்த‌ காக்கையின் கூட்டை தான், சிறு குச்சிக‌ளால் க‌ட்ட‌ப‌ட்டிருக்கும் கூட்டில் உள்ள‌ முட்டைக‌ளை கீழே இருந்து பார்த்து ச‌ந்தோச‌ப்ப‌ட்டு கொள்வேன். அவைக‌ள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும் வ‌ரை அந்த‌ ம‌ர‌த்தில் எப்போதும் காக்கைக‌ளை பார்க்க‌ முடியும். முட்டையிட‌ வ‌ரும் சோம்பேறி குயிலுட‌னும் ச‌ண்டையும் ந‌ட‌க்கும். இந்த‌ காக்கைக‌ளின் பாதுகாப்பையும் மீறி எப்ப‌டியாவ‌து குயில் அந்த‌ கூடுக‌ளில் முட்டையிட்டுவிடும். அந்த‌ முட்டைக‌ள் குஞ்சு பொரித்து, சிறிது வ‌ள‌ரும் போது அது குயில் என்று தெரிந்த‌வுட‌ன், காக்கைக‌ள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை கொத்தி துர‌த்தும்.

ஓண‌ ப‌ண்டிகை கால‌ங்க‌ளில் ஊஞ்ச‌ல் க‌ட்டுவ‌து எங்க‌ள் ஊரில் வ‌ழ‌க்க‌ம். எல்லாருடைய‌ வீடுக‌ளிலும் சின்ன‌ ம‌ர‌ங்க‌ளில் தான் ஊஞ்ச‌ல் க‌ட்டியிருப்பார்க‌ள். ஆனால் எங்க‌ள் வீட்டில் ம‌ட்டும் தான் இந்த‌ பெரிய‌ ப‌லாம‌ர‌த்தின் கிளையில் பெரிய‌ வ‌டாம் க‌யிறு கொண்டு க‌ட்டி த‌ருவார்க‌ள். அதில் ஆடுவ‌த‌ற்கு என்று ப‌ல‌ அக்கா, அண்ண‌ன்க‌ள் எங்க‌ள் வீட்டிற்கு வ‌ருவார்க‌ள்.

இந்த‌ ம‌ர‌த்தில் காய்க்கும் பலாப்ப‌ழ‌மும் சுவையாக‌ இருக்கும். எங்க‌ள் ஊரில் உள்ள‌ பெரும்பாலான‌ வீடுக‌ளில் பலாம‌ர‌ங்க‌ள் இருக்கும். அத‌னால் ப‌லாப்ப‌ழ‌ம் விற்ப‌னை என்ப‌து எங்க‌ள் ஊரில் இருக்காது(இப்போது த‌லைகீழ்). எங்க‌ள் ம‌ர‌த்தில் காய்க்கும் ப‌ழ‌த்தை வெட்டி அந்த‌ ம‌ர‌த்தின் அடியிலேயே வைத்து "யாருக்கெல்லாம் வேணுமோ அவ‌ர்க‌ள் எடுத்து போங்க‌ள்" என்று எங்க‌ள் வீட்டிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ளிட‌ம் என‌து அப்பா சொல்வார்க‌ள். அவ‌ர்க‌ள் வீட்டில் ம‌ர‌ங்க‌ள் வைத்திருந்தாலும் "இந்த‌ ம‌ர‌த்தின் ப‌ழ‌ம் ந‌ல்லா இருக்கும்" என்று சொல்லிவிட்டு எடுத்து போவார்க‌ள். ஊரில் நான் இருக்கும் வ‌ரை அந்த‌ ம‌ர‌த்தின் ப‌ழ‌ங்க‌ளை விற்ற‌து கிடையாது.

இர‌ண்டு மாத‌த்திற்கு முன்பு ஊருக்கு போயிருந்த‌ போது, வீட்டின் எல்லையில் இருந்த‌ பலாம‌ர‌த்தின் இட‌த்தில் ப‌ள்ள‌ம் ம‌ட்டுமே இருந்த‌து. ம‌ர‌ம் வெட்ட‌ப‌ட்டிருந்த‌ அடையாள‌ங்க‌ள் ம‌ட்டும் தெரிந்த‌ன‌, கோப‌த்துட‌ன் வீட்டிற்குள் நுழைந்தேன். வீட்டின் ஹாலில் புதிதாக‌ செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தாலான‌ தொட்டிலில் என‌து குழ‌ந்தை அழ‌காக‌ சிரித்து கொண்டிருந்தான்.

குறிப்பு: இது என்னுடைய‌ ஐம்ப‌தாவ‌து ப‌திவு. என‌க்கு விருது கொடுத்த‌ அனைத்து ச‌கோத‌ர‌/ச‌கோத‌ரிக‌ளுக்கு என் ந‌ன்றிக‌ள். தொட‌ந்து என‌க்கு பின்னூட்ட‌ம் இட்டு உற்சாக‌ ப‌டுத்தும் அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.
.


.

.

Tuesday, July 13, 2010

உண‌ர‌ப்ப‌டாத‌ நிமிட‌ங்க‌ள்...

இந்தாப்பா!!!... உன‌க்கு 210 ரூபா சாம்ப‌ள‌ம் போட்டுருக்கேன். வெளியில‌ 225 ரூபா வ‌ரைக்கும் ச‌ம்ப‌ள‌ம் இருக்கு, ஆனா அவ‌ங்க‌ எல்லாம் உன‌க்கு ரெகுல‌ரா வேலை த‌ர‌ மாட்டாங்க‌. ஆனா எங்கிட்ட‌ அப்ப‌டியில்லை, வார‌த்தில் ஆறு நாளும் வேலையிருக்கும். ச‌ம்ப‌ள‌ம் உன‌க்கு எப்ப‌டி வேணுமோ அப்ப‌டி கொடுத்திருவேன். டெய்லி வேணுன்னாலும் ச‌ரி, வார‌த்திற்கு என்றாலும் ச‌ரி.. என்று சைடு ஸ்டாண்ட் போட்ட‌ டுவீல‌ரில் காலை த‌ரையில் ஊன்றிய‌ ப‌டி உக்கார்ந்து கொண்டு முன்னால் நின்று கொண்டிருந்த‌‌ ச‌ண்முக‌த்திட‌ம் பேசி கொண்டிருந்தார் காண்டிராக்ட‌ர் ந‌வ‌நீத‌ன்.

ஐயா!!! இந்த‌ காசை வ‌ச்சிதான் வீட்டுக்கு தேவையான‌ சாப்பாட்டு செல‌வை பாக்க‌ணும், அத‌னால‌ நீங்க‌ என‌க்கு அன்னைக்கு உள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை அன்னைக்கே கொடுத்துடுங்க‌ என்று ப‌தில‌ளித்தான் ச‌ண்முக‌ம்.

அப்ப‌டியா!!!.. இதுல‌ 200 ரூபா இருக்கு... மீத‌ம் ப‌த்து ரூபாயை நாளைக்கு சேர்த்து கொடுத்துறேன் .. என்று இர‌ண்டு நூறு ரூபா நோட்டை ச‌ண்முக‌த்திட‌ம் நீட்டினார்.

அந்த‌ நோட்டுக‌ளை கையில் வாங்கி கொண்டு, அய்யா!!! அந்த‌ ப‌த்து ரூபாயையும் சேர்த்து கொடுத்துடுங்க‌.. உங்க‌ளுக்கு இருக்கிற‌ டென்ச‌னில் நீங்க‌ நாளைக்கு இந்த‌ ப‌ண‌த்தை ம‌ற‌ந்திடுவீங்க‌... நானும் ப‌த்து ரூபாயை கேட்க‌ கூச்ச‌ ப‌ட்டு விட்டுருவேன்.. என்று கிடுக்குபிடி போட்டான் ச‌ண்முக‌ம்.

ந‌ல்லா வெவ‌ர‌மாதான் இருக்கிறா!!!!... நாளைக்கு இந்த‌ இட‌த்துக்கே வ‌ந்துரு.. இந்த‌ உன்னுடைய‌ ப‌த்து ரூபா.. என்று த‌ன் மேல் ச‌ட்டை பாக்க‌ட்டில் இருந்த‌ ப‌த்து ரூபா தாளை எடுத்து கொடுத்துவிட்டு வ‌ண்டியை ஸ்டார்ட் ப‌ண்ணினார் ந‌வ‌நீத‌ன்.

ப‌ண‌த்தை வாங்கி கொண்டு ப‌ஸ் ஸ்டாப்பை நோக்கி ந‌ட‌ந்தான் ச‌ண்முக‌ம். அந்த‌ ப‌ஸ் ஸ்டாப் வ‌ழ‌க்க‌த்தை விட‌ கூட்ட‌ம் குறைவாக‌வே இருந்த‌து. ச‌ண்முக‌மும் ஒரு ஓர‌மாக‌ நின்று கொண்டான். அரை ம‌ணி நேர‌ம் ஆயிற்று, அவ‌ன் போக‌ வேண்டிய‌ இட‌த்திற்கான‌ ப‌ஸ் இன்னும் வ‌ர‌வில்லை. க‌டுப்பாக‌ இருக்க‌வே எதிர்ப‌க்க‌த்தில் இருந்த‌ பெட்டிக்க‌டையை நோக்கி போனான்.

அந்த‌ பெட்டிக்க‌டையில் இருந்த‌ வ‌ய‌தான‌ பெரிய‌வ‌ரிட‌ம், சிக‌ரெட் ஒண்ணு கொடுங்க‌?.. என்று கேட்டான். பெரிய‌வ‌ர் க‌டையில் இருந்த‌ முழு சிக‌ரெட் பாக்கெட் ஒன்றை பிரித்து அதில் இருந்து ஒன்றை எடுத்து ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார். அதை வாங்கி கொண்டு சுவ‌ரில் மாட்டியிருந்த‌ எல‌ட்ரிக் காயிலில் ப‌த்த‌ வைத்து கொண்டு, பாக்க‌ட்டில் இருந்த‌ ஐந்து ரூபாயை எடுத்து பெரிய‌வ‌ரிட‌ம் கொடுத்தான் ச‌ண்முக‌ம்.

க‌டைக்கார‌ பெரிய‌வ‌ர் சிக‌ரெட் விலை 2.50 போக‌ ஒரு சாக்லேட்டும் 2 ரூபாயும் எடுத்து ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார். என்ன‌ பெரிசு!!!.. இப்ப‌டி வேற‌ பிசின‌ஸ் ப‌ண்ணுறியா?... தூர‌ போடுகிற‌ சாக்லெட்டை எங்கிட்டே கொடுக்கிறே!!!.. என‌க்கு வேண்டாம் என்று திருப்பி கொடுத்தான் ச‌ண்முக‌ம். இல்ல‌ த‌ம்பி!!!.. இப்ப‌ தான் என்னிட‌ம் இருந்த‌ சில்ல‌றை எல்லாம் பொறுக்கி பிஸ்க‌ட் கார‌ருக்கு கொடுத்தேன், அத‌னால‌ 50 காசு சில்ல‌றை என்னிட‌ம் இல்லை, அதுக்கு தான் த‌ம்பி நான் சாக்லெட் கொடுத்தேன் என்றார்.

அதை என்னிட‌ம் சொல்ல‌ வேண்டிய‌து தானே!!!... நான் உன‌க்கு சில்ல‌றை த‌ருகிறேன் என்று ப‌ஸ்க்கு வைத்திருந்த‌ சில்ல‌றையை எடுத்து பெரிய‌வ‌ரிட‌ம் கொடுத்து விட்டு ஐந்து ரூபாயை திரும்ப‌ வாங்கினான் ச‌ண்முக‌ம். ரோட்டில் ப‌ஸ் வ‌ருவ‌து தெரிய‌வே ப‌ஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினான்.

ப‌ஸ் ஸ்டாப்பில் வ‌ண்டி நிற்ப‌த‌ற்கு முன்ன‌ரே வ‌ண்டியில் குதித்து ஏறி, காலியாக‌ இருந்த‌ சீட்டில் உக்கார்ந்து கொண்டான். டிக்க‌ட் கொடுக்க‌ வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் "ஒரு சிம‌ண்ட் ரோடு" என்று ஐந்து ரூபாய் தாளை நீட்டினான். ஒரு டிக்க‌ட்டும் கூட‌வே ஒரு ரூபாய் நாணைய‌த்தையும் கொடுத்து விட்டு ப‌ஸ்சில் முன்னால் போனார் க‌ண்ட‌க்ட‌ர். சார்!!!!.. டிக்க‌ட் 3.50 தானே போட்டிருக்கு நீங்க‌ என்ன‌ 4 ரூபாய் எடுத்திருக்கீங்க‌ என்று க‌த்தினான் ச‌ண்முக‌ம். த‌ம்பி சில்ல‌றை இல்ல‌ப்பா!!!... வ‌ந்த‌வுட‌ன் கொடுத்திடுறேன் என்றார் க‌ண்ட‌க்ட‌ர்.

முன்னால் எல்லோருக்கும் டிக்க‌ட் கொடுத்துவிட்டு வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ரிட‌ம், சார் "50 காசு" என்றான் ச‌ண்முக‌ம். இன்னும் சில்ல‌றை வ‌ர்ல‌ த‌ம்பி..இற‌ங்கும் போது கொடுத்திடுறேன் என்றார். ச‌ண்முக‌ம் இற‌ங்குவ‌த‌ற்கு முன்னாடி ஸ்டாப் வ‌ந்த‌வுட‌னேயே எழுந்து க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் போய் நின்று கொண்டான், சார்!!!.. நான் அடுத்த‌ ஸ்டாப் இற‌ங்க‌ணும் என‌க்கு அந்த‌ 50 காசு என்றான். த‌ம்பி!!... இந்த‌ நீல‌ ச‌ட்டை த‌ம்பியும் இந்த‌ ஸ்டாப்புல‌ தான் இற‌ங்க‌ணும், அவ‌ரும் நீங்க‌ளும் பிரிச்சி எடுத்துக்குங்க‌ என்று 1 ரூபாயை ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார்.

அடுத்த‌ ப‌ஸ் ஸ்டாப்பில் இருவ‌ரும் இற‌ங்கின‌ர். நீல‌ ச‌ட்டைக்கார‌ர் ச‌ண்முக‌த்திட‌ம்; என‌க்கு அவ‌ச‌ர‌மா போக‌னும், நீங்க‌ அந்த‌ 1 ரூபாயை வ‌ச்சுக்குங்க‌ அடுத்த‌ முறை பார்க்கும் போது கொடுங்க‌ என்று சொல்லி கொண்டு விருவிரு என்று ந‌ட‌ந்தார். "போடா போ உன‌க்கு 50 காசின் அவ‌சிய‌ம் தெரிய‌ல‌, இந்த‌ 50 காசு இல்ல‌னா நாளைக்கு அந்த‌ க‌ண்ட‌க்ட‌ரு உன‌க்கு டிக்க‌ட் த‌ர‌ மாட்டான்" என்று ம‌ன‌திற்குள் நினைத்தான் ச‌ண்முக‌ம்.



ப‌ஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்ச‌ம் தூர‌த்தில் இருந்த‌ டாஸ்மாக் க‌டையை நோக்கி ந‌ட‌ந்தான் ச‌ண்முக‌ம். டாஸ்மாக் க‌டை வ‌ழ‌க்க‌த்தை விட‌ கூட்ட‌மாக‌ இருந்த‌து. ச‌ண்முக‌ம் கூட்ட‌த்தில் நுழைந்து ஒரு "ஒல்ட்ம‌ங் குவாட்ட‌ர்" என்றான். "யோவ் நாளைக்கு க‌டை திற‌க்காது, ஸ்டாக் எல்லாம் முடிஞ்சி போச்சி, இப்ப‌ வேணுன்னா ஒரு குவாட்ட‌ர் 100 ரூபா!!! இருந்த‌ கொடு இல்ல‌னா போயிட்டே இரு" என்று விர‌ட்டினான் சேல்ஸ்மேன். "இந்தாங்க‌ 100 ரூபா குவாட்ட‌ர் ஒண்ணு கொடுங்க‌" என்று 100 ரூபாய் தாளை சேல்ஸ்மேனின் கையில் திணித்தான் ச‌ண்முக‌ம்.

.

.

.

Sunday, July 11, 2010

தொட‌ர்ப‌திவு_க‌ன‌வே க‌லையாதே..

க‌ற்ப‌னை உருவ‌ம் என்ற‌வுட‌ன் என் ம‌ன‌தில் தோன்றிய‌து காமிக்ஸ் உல‌கின் அர‌ச‌ன் மாயாவியின் உருவ‌ம் தான். சின்ன‌ வ‌ய‌தில் இவ‌ரின் ர‌சிக‌ன் என்று சொல்வ‌தை விட‌ தீவிர‌ வெறிய‌ன் என்று தான் சொல்ல‌ வேண்டும். க‌தைக‌ள் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌‌ கால‌த்தில் முத‌லில் என‌க்கு அதிக‌ ஆர்வ‌த்தை ஏற்ப‌டுத்திய‌து இவ‌ரின் க‌தைக‌ள் தான். இர‌வு தூக்க‌த்தில் கூட‌ மாயாவி என்று க‌த்திய‌தாக‌ அம்மா சொல்வார்க‌ள், அந்த‌ள‌வு இவ‌ருடைய‌ க‌தைக‌ள் என்னை பாதித்திருந்த‌து.

"ஒரு நாள் உருவ‌த்தில் முக‌மூடி வீர‌ர் மாயாவியாக‌ நான் இருந்தால் எப்ப‌டியிருக்கும்" என்ப‌தை ப‌ற்றி ஒரு சின்ன‌ க‌ற்ப‌னை.



ப‌டிக்கும் ப‌ருவ‌த்தில் ஏதாவ‌து முக்கிய‌ வேலையில் நான் ஏதாவ‌து முட்டாள் த‌ன‌மாக‌ செய்துவிட்டால் என்னுடைய‌ அம்மா என்னை "ம‌ர‌ம‌ண்டை" என்று திட்டுவார்க‌ள், ஒருவேளை நான் மாயாவி உருவ‌த்தில் இருந்திருந்தால் "இரும்பும‌ண்டை" என்று திட்டியிருப்பார்க‌ளோ!!!!!!!

என்னுடைய‌ அப்பாவின் கூட‌ பிற‌ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌டும‌ண்டையில் முடிக‌ள் இருக்காது, என் அப்பா உட்ப‌ட். அவ‌ர்க‌ளை நான் சொட்டை என்று கிண்ட‌ல் செய்த‌து உண்டு, அத‌ற்கு அவ‌ர்க‌ள் "நாளை உன‌க்கும் இது போல் வ‌ரும்" என்று சொல்வார்க‌ள். நான் அவ‌ர்க‌ளிட‌ம் "ம‌யிர் போனால் ம‌ண்டை பாலிஸ்" என்று நையாண்டி செய்த‌து உண்டு. இப்போது என‌க்கும் முடிக‌ள் கொட்ட‌ தொட‌ங்கிவிட்ட‌து, அதைப‌ற்றிய‌ க‌வ‌லையும் வ‌ர‌தொட‌ங்கிவிட்ட‌து. மாயாவியை போல் த‌லை இருந்து விட்டால் இந்த‌ முடி ப‌ற்றிய‌ பிர‌ச்ச‌னையே வ‌ராது அல்ல‌வா!!!!!...

இந்த‌ பிளாக்க‌ரில் புர‌பைல் போட்டோ போடுவ‌திலும் பிர‌ச்ச‌னை வ‌ந்திருக்காது. அப்ப‌டியே ந‌ம்ம‌ க‌ம்பெனி முத்திரையை(ம‌ண்டையோடு) போட்டு விடாலாம். யாரும் வாயே தொற‌க்க‌ மாட்டார்க‌ள்.

நான் ஸ்கூல் ப‌டிக்கும் போது வீட்டில் இருத்து ம‌திய‌ சாப்பாடு எடுத்து போவேன். அதில் எங்க‌ம்மா என‌க்கு டெய்லி ஒரு அரைமுட்டை(இன்னொரு அரைமுட்டை அண்ண‌னுக்கு) வைத்து த‌ருவார்க‌ள். அந்த‌ அரைமுட்டை ம‌திய‌ வேளையில் ல‌ஞ்ச் பாக்ஸில் இருக்காது, ந‌ம்ம‌ கோவாலு ல‌வுட்டிருவான். டேய்!!!!! கோவாலு உன்னைதாண்டா தேடிகிட்டு இருக்கிறேன்... நான் மாயாவியா உருமாருகிற‌ அன்னைக்கு நீ மாட்டினா ம‌வ‌னே!!!... முத‌ல் மோதிர‌ முத்திரை உன‌க்கு தாண்டா!!!!!!

பார்க்க‌ர்ல ச‌ட்டையும், லீயில் ஜீன்ஸும், ஜாக்கில‌ ப‌னிய‌னும் வாங்க‌ வேண்டிய‌ வேலையே இல்ல‌.. டெய்லி ஒரு டிர‌ஸ் மாத்த‌னும் என்ற‌ தொல்லையும் கிடையாது(இப்ப‌ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம் ஆறு மாச‌த்துக்கு முன்னாடி போட்ட‌ ஜீன்ஸ் பேண்டை இன்னும் க‌ழ‌ட்ட‌ல‌, த‌ண்ணி பார்த்து வ‌ருச‌ க‌ண‌க்காவுது.... நோ.. நோ... நோ பேட் வேர்ட்ஸ்.. மீ.. பாவம்)

இப்ப‌ பெட்ரோல், டீச‌ல் விக்கிற‌ விலையில‌ வ‌ண்டி வாங்கி ஓட்ட‌ முடியுமா, வண்டி வேணுண்ணா வாங்கி சோக்கேஸுல் வ‌ச்சி அழ‌கு பாக்க‌லாம், ஆனா பெட்ரோல் ஊற்றி ஓட்ட‌ முடியாது. பிளைட்ல‌, கார்ல‌, ட்ரெயின்ல‌, ப‌ஸ்ல‌, டுவீல‌ர்ல‌னு எல்லாத்திலேயும் போயாச்சி ஆனா குதிரையில‌?????.... மாயாவி குதிரை மேல‌ இருந்த‌ ஆசையில‌, ஒரு த‌ட‌வ‌ அப்பாட்ட‌ "நான் குதிரையில் சவாரி செய்ய‌ன‌னு சொல்ல‌" அப்பாவும் அது ஒண்ணும் பிர‌ச்ச‌னை இல்ல‌னு சொல்லி மெரினா பீச் கூட்டிட்டு போய் க‌ழுதை மேல‌ சாரி.. குதிரை மேல‌ என்னை ஏத்தி வைச்சி குதிரையை ந‌ட‌க்க‌ வ‌ச்சாரு!!!!.கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அன்னைக்கு முடிவு ப‌ண்ணினேன் இனிமேல் ஏறினா மாயாவியின் வெள்ளை குதிரை மேல் தான் என்று..

ம‌ர‌க்கிளைக‌ளில் ப‌டுத்து உற‌ங்கி
கோழியின் கூவ‌லில் விழித்து
ப‌ற‌வைக‌ளின் ரீங்கார‌ங்க‌ளில் ம‌ன‌தை ப‌றிகொடுத்து
ம‌ர‌ங்க‌ளில் க‌னிந்த‌ ப‌ழ‌ங்க‌ளை புசித்து
காட்டு வில‌ங்குக‌ளின் மொழி பேசி
தெளிந்த‌ நீரோடையில் குளித்து..
ஒரு நாள் பொழுதாயினும் ம‌ற‌க்க‌ முடியுமா...
இய‌ற்கையோடு இய‌ந்த‌ வாழ்க்கை.

உள் ம‌ன‌தில் முக‌மூடி போட்டு கொண்டு ம‌னித‌ன் என்று சொல்லி கொண்டிருக்கும் வில‌ங்குக‌ள் வாழும் ச‌முதாய‌த்தில், வெளியில் முக‌மூடி போட்டு கொண்டு ம‌னித‌னாக‌ வாழ‌வே ஆசைப்ப‌டுகிறேன்.. க‌ன‌வே க‌லையாதே....

என‌க்கு இந்த‌ த‌லைப்பை கொடுத்து எழுத‌ தூண்டிய‌ அமைதிச்சார‌ல் ச‌கோத‌ரிக்கு மீண்டும் ஒரு ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன்... குற்ற‌ம் குறையிருப்பின் பொறுத்த‌ருள்க‌.

நான் எழுதிய‌ க‌ட‌ந்த‌ இர‌ண்டு தொட‌ர்ப‌திவிலும் யாரையும் தொட‌ர‌ அழைக்க‌வில்லை, கார‌ண‌ம் ரெம்ப‌ லேட்டா தான் என‌து கைக்கு வ‌ந்த‌து. பெரும்பாலான‌ எல்லோருமே எழுதிவிட்டார்க‌ள். இது இப்போது தான் ஆர‌ம்பித்து இருப்ப‌தால் சில‌ரை அழைக்க‌லாம் என்று இருக்கிறேன்.

ரெம்ப‌ சீரிய‌ஸா ப‌திவு எழுதுகிற‌ ந‌ம்ம‌ த‌மிழ் உத‌ய‌ம் ர‌மேஷ் சார் அவ‌ர்க‌ளை இந்த‌ தொட‌ர்ப‌திவில் அழைக்கிறேன். இந்த‌ க‌ற்ப‌னை ப‌திவிலும் என்ன‌ ப‌ண்ணுகிறார் என்று பார்ப்போம். த‌மிழ் சார் உங்க‌ த‌லைப்பு இது தான்.

ம‌க்க‌ள் செறிந்த‌ கூட்ட‌த்தில் ஒரு த‌வ‌று ந‌ட‌க்கிற‌து. அதை செய்த‌வ‌ன் நீங்க‌ள் தான் செய்தீர்க‌ள் என்று க‌த்துகிறான். அதை நீங்க‌ள் எப்ப‌டி ச‌மாளிப்பீர்க‌ள்(எந்த‌ த‌வ‌றாக‌வும் இருக்க‌லாம் நீங்க‌ளே க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள், அதேபோல் அது எந்த‌ இட‌மாக‌வும் இருக்க‌லாம் நீங்க‌ளே க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள்)

தொட‌ர்க‌தைக‌ளிலும், சிறுக‌தைக‌ளிலும் க‌ல‌க்கும் செல்ல‌ நாய்க்குட்டி அவ‌ர்க‌ளையும் இந்த‌ தொட‌ர் ப‌திவுக்கு அழைக்கிறேன். உங்க‌ளுடைய‌ த‌லைப்பு

ப‌ழைய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் ஆட்சியில் நீங்க‌ள் இருந்தால் ( நீங்க‌ள் எந்த‌ ஒரு கேர‌க்ட‌ராக‌வும் எடுத்து கொண்டு எழுத‌லாம், ம‌ன்ன‌ர‌க‌வோ, ராணியாக‌வோ, பிர‌ஜையாக‌வோ) அந்த‌ அனுப‌வ‌த்தை ப‌கிர‌வும்.

.

.

.

Thursday, July 8, 2010

தொட‌ர்ப‌திவு_ஒரு நிமிட‌ பேச்சு

இது நான் எழுதும் மூன்றாவ‌து தொட‌ர்ப‌திவு என்று நினைக்கிறேன். இந்த‌ தொட‌ர்ப‌திவை ஆர‌ம்பித்த‌ வ‌ச‌ந்த் அவ‌ர்க‌ள் க‌ற்ப‌னை ப‌ற்றிய‌ விள‌க்க‌ங்க‌ளை ப‌டிக்கும் போதே இந்த‌ தொட‌ர்ப‌திவு ப‌ற்றிய‌ ஆர்வ‌ம் இருந்த‌து. நானும் எழுத‌ வேண்டும் என‌ நினைத்தேன். இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் இந்த‌ தொட‌ர்ப‌திவு எழுதுவேன் என்று நினைக்க‌வில்லை. எப்ப‌டியோ அமைதிச்சார‌ல் அவ‌ர்க‌ளின் அழைப்பால் எழுதுகிறேன்.

இந்த‌ தொட‌ர்ப‌திவு எழுதுவ‌த‌ற்கு முன்னால் இந்த‌ ப‌திவுட‌ன் தொட‌ர்புடைய‌ ஒரு சின்ன‌ கொசுவ‌த்தி சுத்த‌லாம் (என்ன‌ கொசுவ‌த்தியா? என்று ஓட‌ வேண்டாம், ஒரு சின்ன‌ பிளாஸ்பேக்) என்று நினைக்கிறேன். நான் சின்ன‌ வ‌ய‌தில் ப‌ல‌ பேச்சுப் போட்டிக‌ளில் க‌ல‌ந்து இருக்கிறேன், ப‌ல‌வ‌ற்றில் ப‌ரிசுக‌ளும் வாங்கியிருக்கிறேன். ப‌ள்ளியில் ப‌டிக்கும் போது மாவ‌ட்ட‌ அள‌விலும் க‌ல‌ந்து இருக்கிறேன். இந்த‌ ஆர்வ‌த்தை ப‌ள்ளிப்ப‌டிப்பை முடித்த‌தோடு விட்டு விட்டேன். க‌ல்லூரியில் ப‌டிக்கும் போது எந்த‌ போட்டிக‌ளிலும் தொட‌ந்த‌து இல்லை.

ப‌ள்ளியில் இவ்வாறு ப‌ல‌ பேச்சுப் போட்டிக‌ளில் க‌ல‌ந்து கொள்வ‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம், நான் மேடையில் பேசுவேன் என்ப‌து ஆசிரிய‌ர்க‌ள் முத‌ல் மாண‌வ‌ர்க‌ள் வ‌ரை அனைவ‌ருக்கும் தெரியும். என‌வே எந்த‌வொரு போட்டி ந‌ட‌ந்தாலும் உட‌னே என்னிட‌ம் சொல்லி உசுப்பேத்தி விடுவார்க‌ள். ஆனால் என‌து ஊரில் இருந்து வெளியில் வ‌ந்து க‌ல்லூரி ப‌டித்த‌தால் என்னை ப‌ற்றி யாருக்கும் தெரிய‌ வாய்ப்பில்லாத‌தால் க‌ல்லூரியில் ந‌ட‌க்கும் எந்த‌வொரு போட்டியிலும் க‌ல‌ந்து கொள்வ‌து கிடையாது. ப‌ல‌ சுற்ற‌றைக்கைக‌ள் வ‌ரும், அந்த‌ க‌ல்லூரியில் பேச்சுப் போட்டி, இந்த‌ க‌ல்லூரியில் பேச்சுப் போட்டி என‌, நான் அமைதியாக‌ இருந்து விடுவேன்.

நான் க‌ல்லூரியில் இர‌ண்டாம் ஆண்டு இறுதியில் ப‌டிக்கும் போது, அந்த வ‌ருட‌த்திற்கான‌ ஆண்டுவிழா போட்டிக‌ள் ந‌டைபெற்று கொண்டிருந்த‌ன‌‌. க‌ல்லூரி வ‌குப்பில் என்னுட‌ன் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருப்ப‌வ‌ன் என்னிட‌ம் "நான் ந‌ம் க‌ல்லூரி ஆண்டுவிழா நிக‌ழ்ச்சியில் உள்ள பேச்சுப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ போகிறேன், ஏற்க‌ன‌வே நான் பெய‌ரும் ப‌திவு செய்துவிட்டேன், நீ என்னுட‌ன் துணைக்கு வ‌ர‌ வேண்டும்" என்று சொல்லி அழைத்தான். நானும் யோசித்தேன், என‌க்கு அடுத்த‌ பாட‌வேளை தெர்ம‌ல். ந‌ம்ம‌ ம‌ண்டைக்கு ஒரு சைக்கிளும் ஏற‌ போவ‌து இல்லை, உக்கார்ந்து தூங்கிற‌துக்கு ப‌திலா வேடிக்கை பார்க்க‌ போயிட‌லாம் என்று, அவ‌னிட‌ம் ச‌ரி, என்றேன்.

இர‌ண்டு பேரும் போட்டி ந‌ட‌க்கும் ஹாலுக்கு போனோம், அங்கு பாட்டுப் போட்டி ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. நான் ந‌ண்ப‌னிட‌ம் "என்னாடா!! பேச்சுப் போட்டி என்று சொன்னாய், பாட்டுப் போட்டி ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து" என்று கேட்டேன். அத‌ற்கு அவ‌ன் என்னிட‌ம் பாட்டு போட்டி முடிந்த‌வுட‌ன் தான் பேச்சுப் போட்டி என்றான்‌. ச‌ரி, என்ன‌ த‌லைப்பு, நீ அந்த‌ த‌லைப்புக்கு பேச‌ த‌யாராகி விட்டாயா? நீ எழுதி வைத்திருக்கும் பேப்ப‌ரை கொடு, நான் ப‌டித்து பார்க்கிறேன் என்றேன்.‌

ஹா..ஹா..ஹா என்று என்னுடைய‌ ந‌ண்ப‌ன் சிரித்தான். டேய் நீ இன்னும் ஸ்கூல் ப‌ச‌ங்க‌ லெவ‌ல்ல‌ இருந்து இன்னும் மாற‌லியா?.. இங்கு ந‌டப்ப‌து "ஒரு நிமிட‌ பேச்சு"(Just a minute speech). த‌லைப்பு எல்லாம் மேடையில் ஏறிய‌ பிற‌குதான் த‌ருவார்க‌ள். அந்த‌ த‌லைப்பில் பேச‌ வேண்டும் என்றான்.

இதுக்கு மேல‌ நான் அவ‌னிட‌ம் பேசினால் ந‌ம்ம‌ளை ரெம்ப‌ அசிங்க‌ ப‌டுத்திடுவான். அத‌னால‌ அமைதியாய் இருந்திட‌லாம் என்று இருந்துவிட்டேன். நான் ப‌ள்ளியில் க‌ல‌ந்து கொள்ளும் பேச்சுப் போட்டிக‌ளில் த‌லைப்புக‌ள் ஒரு வார‌த்திற்கு முன்பே த‌ர‌ப்ப‌டும். அந்த‌ த‌லைப்பில் எழுதுவ‌த‌ற்கு சில‌ ஆசிரிய‌ர்க‌ள் உத‌வி செய்வார்க‌ள். நான் வீட்டில் இருந்து ம‌ன‌ப்பாட‌ம் செய்து அம்மாவிட‌ம் பேசி காட்டுவேன், அத‌ன் பிற‌கு தான் மேடையில் பேசுவேன். ந‌ண்ப‌ன் சொன்ன‌ "ஒரு நிமிட‌ பேச்சு" ப‌ற்றி அப்போது தான் கேள்வி ப‌டுகிறேன், என‌வே என‌க்கு அது ஒரு ச‌வால‌க‌வே தெரிந்த‌து. அதை பார்க்க‌வும் ஆர்வ‌ம் அதிக‌ரித்த‌து.



சிறிது நேர‌த்தில் போட்டி ஆர‌ம்ப‌மாகிய‌து. ஹால் புல்லா ந‌ல்ல‌ கூட்ட‌ம் இருந்த‌து. நானும் ஒரு ஓர‌மா நின்றேன். என‌க்கு தெரிந்த‌ சில‌ வேறு டிபாட்மென்ட் ப‌ச‌ங்க‌ளும் என்னுட‌ன் வேடிக்கை பார்க்க‌ வ‌ந்து சேர்ந்தார்க‌ள். மேடையில் விரிவுரையாள‌ர் ஒருவ‌ர் தான், க‌ல‌ந்து கொள்ளும் போட்டியாள‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளையும், த‌லைப்பு கொடுக்கும் வேலையையும் ஒன்றாக‌ செய்து கொண்டிருந்தார். அந்த‌ விரிவுரையாள‌ர் ந‌ல்ல‌ காமெடியாக‌ ஒவ்வொருவ‌ரையும் அறிமுக‌ம் செய்தார். போட்டியாள‌ர்க‌ளுக்கு த‌லைப்பு கொடுத்துவிட்டு அந்த‌ த‌லைப்பு ப‌ற்றி எதிர்ம‌றையான‌ விச‌ய‌ங்க‌ளையும் சொல்லி, பேச‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளின் டிராக்கை திருப்பி விட்டு கொண்டிருந்தார்.

உதார‌ண‌மாக‌ "நான் க‌ட‌வுளை க‌ண்டால்" என்ப‌து த‌லைப்பு என்று வைத்து கொள்ளுங்க‌ள். விரிவுரையாள‌ர்.. அந்த‌ த‌லைப்பை சொல்லிவிட்டு, "இவ‌ன் என்ன‌ பெரிசா க‌ட‌வுளிட‌ம் கேட்டு விட் போகிறான், டெய்லி சைட் அடிக்க‌ பெண் வேண்டும், பார்க்கிற‌ பொண்ணுங்க‌ எல்லாம் அழ‌கா இருக்க‌ணும் இப்ப‌டி தான் அண்ண‌ன் பேசுவாரு" என்று விள‌க்க‌ம் கொடுத்து விட்டு பேச‌ சொல்வார். போட்டியாள‌ர் நல்லாவே பேச‌ வேண்டும் என்று மேடை ஏறினாலும் க‌ண்டிப்பாக‌ விரிவுரையாள‌ர் சொன்ன‌ விச‌ய‌ங்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் காதில் ஏறுமாத‌லால் அனைவ‌ரும் உள‌றி கொண்டு தான் வ‌ந்தார்க‌ள்.

எந்த‌ ஒரு போட்டியாள‌ரும் த‌லைப்புக்கு ஏற்ற‌வாறு பேச‌வில்லை. என்னை சுற்றி ஒரு கூட்ட‌ம் சேர்ந்திருந்த‌தால் நானும் மேடையில் பேசுப‌வ‌ர்க‌ளை கிண்ட‌ல் ப‌ண்ண‌ தொட‌ங்கினேன். என்னுட‌ன் சேர்ந்து கொண்டு ப‌ல‌ரும் க‌லாய்க்க‌ தொட‌ங்கினார்க‌ள். அங்கு மேடையில் ஏறிய‌ பெரும்பாலான‌ மாண‌வ‌ர்க‌ள், ப‌க்க‌த்தில் உள்ள‌ அவ‌னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளால் போட்டிக்கு பெய‌ர் கொடுக்க‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளின் பெய‌ர் மேடையில் வாசிக்க‌ ப‌ட்ட‌ பிற‌கு தான் அவ‌னுக்கே தெரியும், ந‌ம்முடைய‌ பெய‌ரும் இருக்கிற‌து என்று. மேடையில் பேசிய‌வ‌ர்க‌ள் சொத‌ப்ப‌ சொத‌ப்ப‌ நாங்க‌ள் ஒரு கூட்ட‌ம் க‌லாய்க்க‌ தொட‌ங்கினோம்.

நீ முத‌ல‌மைச்ச‌ர் ஆனால், உன் க‌ன‌வு ப‌லித்தால், நீ ப‌ட்டாம் பூச்சியாக‌ இருந்தால், உன‌க்கு இற‌க்கைக‌ள் முளைத்தால் என்று ப‌ல‌ த‌லைப்புக‌ளில் பேசினார்க‌ள். ஒவ்வொரு த‌லைப்பிற்கும் விள‌க்க‌ம் த‌ருகிறேன் என்று அந்த‌ விரிவுரையாள‌ர் மாண‌வ‌ர்க‌ளின் டிராக்கை அழ‌காக‌ மாற்றி விட்டுகொண்டிருந்தார். அத‌னால் எவ‌ராலும் பேச்சை தொட‌ர‌முடிய‌வில்லை ஒவ்வொருவ‌ரும் பேச‌ பேச‌ நாங்க‌ள் க‌லாச்சிட்டே இருந்தோம். போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வ‌ந்த‌ என்னுடைய‌ ந‌ண்ப‌ன் நாங்க‌ள் க‌லாய்ப்ப‌தை பார்த்து விட்டு, தான் போனாலும் இவ‌னுங்க‌ இப்ப‌டி தான் க‌லாய்ப்பார்க‌ள் என்று நினைத்து கொண்டு என்னிட‌ம், "இவ்வ‌ள‌வு ந‌க்க‌ல் ப‌ண்ணுகிறாயே நீ போய் மேடையில் பேச‌ வேண்டிய‌து தானே" அதுக்கு முடியாது இங்க‌ உக்காந்து நையாண்டி ப‌ன்ணுற‌து எல்லோராலும் முடியும் என்றான்.

ந‌ம‌க்கு தான் கீழ‌ விழுந்தாலும் மீசையில் ம‌ண் ஒட்ட‌வில்லை என்று சொல்வ‌து புதிதா என்ன‌?.. "டேய் சூனா பானா, நான் எல்லாம் மேடையில் ஏறினால் அப்புற‌ம் உன‌க்கு எல்லாம் பிரேஸ் கிடைக்காதுடா பிரேஸு" அந்த‌ கார‌ண‌த்தினால் தான் நான் மேடையில் ஏற‌வில்லை என்று அவ‌னிட‌ம் திரும்ப‌வும் கலாய்த்தேன். இதை கேட்ட‌வுட‌ன் கூட‌ இருத‌வ‌ர்க‌ளில் இர‌ண்டு பேர் என் ந‌ண்ப‌னுட‌ன் சேர்ந்து கொண்டு அப்ப‌டி அவ‌னுக்கு கிடைக்க‌ல‌னாலும் ப‌ர‌வாயில்லை நீ இன்னைக்கு மேடையில் பேசுகிறாய் என்று விருவிருவென்று என்னுடைய‌ பெய‌ரை அந்த‌ விரிவுரையாள‌ரிட‌ம் கொடுத்து விட்டார்க‌ள்.

என‌க்கு திக் என்று தான் இருந்த‌து. வெளியில் காட்ட‌வில்லை எப்ப‌டி ச‌மாளிப்ப‌து என்று யோசித்து கொண்டு இருந்தேன். ஓடி விட‌லாம் என்று நினைத்தால், அப்புற‌ம் காலேஜில் த‌லை காட்ட‌ முடியாது, அத்த‌னை பேரும் சேர்ந்து க‌லாய்த்து விடுவானுங்க‌. அப்ப‌தான் போட்டியை கொஞ்ச‌ம் சீரிய‌ஸா பார்க்க‌ தொட‌ங்கினேன். த‌லைப்பை அவ‌ர் சொல்லி முடித்த‌வுட‌ன் நாம் பேச‌ ஆர‌ம்பித்து விட்டால் விரிவுரையாள‌ரில் டிராக்கில் இருந்து ந‌ம்முடைய‌ டிராக்கிற்கு மாறிவிடாலாம் என்ப‌து தான் என்னுடைய‌ திட்ட‌ம். விரிவுரையாள‌ர் பேசிவிட்டால் நாம் அவ‌ருடைய‌ டிராக்கில் தான் பேச்சை ஆர‌ம்பிப்போம், அப்புற‌ம் வேலைக்கு ஆகாது.

என்னுட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌னுடைய‌ பெய‌ரும் வாசிக்க‌ ப‌ட்ட‌து, அவ‌னும் மேடை ஏறினான். அவ‌னுக்கு வ‌ந்த‌ த‌லைப்பு " என‌து பார்வையில் சுத‌ந்திர‌ இந்தியா". ந‌ல்ல‌ த‌லைப்பு தான். ஆனால் விரிவுரையாள‌ர் ந‌ம‌க்கெல்லாம் சுத‌ந்திர‌ம் கிடைக்க‌வில்லை என்றால் இவ்வாறு க‌ல்லூரிக்கு வ‌ர‌முடியுமா? பெண்க‌ளை சைட் அடிக்க‌ முடியுமா?.. இல்ல‌ க‌லேஜிக்கு க‌ட் அடிச்சிட்டு சினிமாவுக்கு தான் போக‌ முடியுமா? என்று டிராக்கை மாற்றிவிட்டார். அவ‌னும் அந்த‌ விரிவுரையாள‌ரின் டிராக்கிற்கே மாறி சொத‌ப்பி விட்டான்.

நாம‌ளும் இப்ப‌டி போனா க‌ண்டிப்பா ந‌ம்ம‌ பேசுகிற‌ டிராக்கும் மாறிவிடும் என்று நினைத்து கொண்டு மேடைக்கு அருகில் சென்று நின்று கொண்டேன். என‌க்கு முன்னால் பெய‌ர் கொடுத்த‌வ‌னிட‌ம் சென்று, நீ பேசி முடித்த‌வுட‌ன் மைக்கை த‌ய‌வுசெய்து கொண்டு போய் மைக் ஸ்ட‌ண்டில் வைத்து விடாதே, என்னுடைய‌ கையில் கொடுத்து விடு என்றேன். அவ‌னும் ச‌ரி என்றான்.

என்னுடைய‌ திட்ட‌ம் பெய‌ர் வாசித்த‌வுட‌ன் மேடையில் ஏற‌ வேண்டும், அவ‌ர் த‌லைப்பை சொன்ன‌வுட‌ன், சிறிதும் யோசிக்காம‌ல் பேச்சை ஆர‌ம்பித்து விட‌ வேண்டும் என்ப‌து தான். அத‌ன் ப‌டியே நானும் மேடையில் பேசிவிட்டேன். விரிவுரையாள‌ரை பேச‌வே விட‌வில்லை. நான் பேசி முடித்த‌வுட‌ன் அவ‌ரும் பாராட்டினார். என‌க்கு கொடுக்க‌ ப‌ட்ட‌ த‌லைப்பு "உன் க‌ன‌வு நிஜ‌மானால்"

நான் பேசிய‌ டிராக், சாதி, ம‌த‌ பேத‌ம‌ற்ற‌ ந‌ல்ல‌ ச‌முதாய‌ம் ப‌டைக்க‌ வேண்டும் என‌ பேச‌ ஆர‌ம்பித்து விட்டேன். ஒரு நிமிட‌ம் தான் பேச‌ வேண்டும் நான் தொட‌ந்து பேசிய‌தால் அவ‌ர்க‌ள் ம‌ணி ஒலித்து நிறுத்தினார்க‌ள். நான் க‌ண்டிப்பாக‌ விரிவுரையாள‌ரின் பேச்சுக்கு காத்திருந்திருந்தால் க‌ண்டிப்பாக‌ என்னுடைய‌ டிராக்கை மாற்றியிருப்பார்.

க‌டைசியில் என‌க்கு இர‌ண்டாம் ப‌ரிசு கிடைத்த‌து. இறுதியாண்டில் ப‌டிக்கும் ஒரு மாண‌வ‌னுக்கு முத‌ல் ப‌ரிசு கிடைத்த‌து. அதில் என்ன‌ ஒரு ச‌ந்தோச‌ம் என்றால் முத‌ல் ப‌ரிசு பெற்ற‌ மாண‌வ‌னும் எங்க‌ளுடைய‌ மெக்கானிக்க‌ல் டிபார்மென்ட். அப்ப‌டியானால் சொல்ல‌வா வேண்டும் எங்க‌ளுடைய‌ கொண்டாட்ட‌ங்க‌ளுக்கு. முத‌ல் ப‌ரிசு கிடைத்த‌ மாண‌வ‌ன் பேசிய‌ த‌லைப்பு "நான் காத‌லிக்கிறேன்" அவ‌ன் அன்னை தெர‌சா அவ‌ர்க‌ளை ப‌ற்றி அழ‌காக‌ பேசினான். இதுதான் நான் க‌டைசியாக‌ பேசிய‌ மேடை. அத‌ன் பிற‌கு அத‌ற்கான‌ வாய்ப்புக‌ள் இதுவ‌ரையிலும் கிடைக்க‌வில்லை.

எத‌ற்கு இந்த‌ கொசுவ‌த்தி என்று நீங்க‌ள் நினைக்க‌லாம், இந்த‌ தொட‌ர்ப‌திவுக்கும் கொசுவ‌த்திக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் என்று. ஒரு த‌லைப்பை ப‌ற்றி எழுத‌வோ!! பேச‌வோ!! வேண்டுமானால் இர‌ண்டு வித‌மாக‌ செய்ய‌ முடியும். அதில் நாம் எந்த‌ திசையில் ப‌ய‌ணிக்க‌‌ வேண்டும் என்ப‌தை நாம் முத‌லில் முடிவு செய்ய‌ வேண்டும்.

ஒரு நாளைக்கு மட்டும் நீங்கள் விரும்பிய உருவத்தை பெறலாம்ன்னு ஒரு வரம் கிடைக்குது. என்ன உருவம் எடுக்க ஆசைப்படுவீர்கள்?.. உங்கள் அனுபவம் எப்படியிருக்கும்ன்னு எழுதுங்க.

மேலே அமைதிச்சார‌ல் அவ‌ர்க‌ள் கொடுத்த‌ த‌லைப்பில் எப்ப‌டி எழுத‌ வேண்டும் என‌ யோசித்து விட்டு அடுத்த‌ ப‌திவில் வ‌ருகிறேன். நீங்க‌ளும் ஏதாவ‌து ஐடியா கொடுப்ப‌தாக‌ இருந்தால் பின்னூட்ட‌த்தில் சொல்ல‌லாம். கொடுத்த‌ ஐடியா ம‌ணிக்கு ப‌ரிசாக‌ ஒரு த‌லைப்பு கொடுத்து எழுத‌ வைக்க‌ ப‌டுவார்க‌ள் என்று சொல்லி கொல்(ள்)கிறேன்.

பார்டா!!!!!! க‌ற்ப‌னை க‌தையை ப‌டிக்க‌லாம் என்று வ‌ந்தால் உன் சொந்த‌ க‌தையை எழுதி கொல்கிறான் என்று சொன்னீர்க‌ள் ஆனால், நான் அடுத்த‌ ப‌திவில் ஒரு நாள் எடுக்க‌ போகும் உருவ‌த்தால் மாய‌மாக‌வும், இரும்பு கையாலும், முக‌மூடியாலும் தாக்க‌ ப‌டுவீர்க‌ள் என்று க‌னைக்கிறேன்... இந்த‌ வ‌ரியில் இருந்து அடுத்த‌ ப‌திவு ஆர‌ம்ப‌ம்.
.

.

.

Monday, July 5, 2010

சார்.. உங்க‌ டிக்க‌ட் கொடுங்க‌..

இர‌ண்டு மாத‌த்திற்கு முன்புதான் என‌க்கு கோட‌ம்பாக்க‌த்தில் வேலை கிடைத்த‌து. நான் த‌ங்கி இருப்ப‌து அம்ப‌த்தூரில். இந்த‌ வேலை கிடைப்ப‌த‌ற்கு முன்பு நான் அம்ப‌த்தூரில் உள்ள‌ ஒரு ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன். அந்த‌ வேலைக்காக‌ தான் அம்ப‌த்தூரில் வீடு பார்த்து த‌ங்க‌ வேண்டிய‌தாயிற்று. இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் நானும் என‌து ந‌ண்ப‌னும் ஒரே வீட்டில் தான் த‌ங்கியிருந்தோம்.

நாங்க‌ள் வாட‌கைக்கு இருந்த‌ வீட்டின் ஓன‌ர் கொஞ்ச‌ம் க‌ண்டிப்பான‌வ‌ர். முத‌லில் நாங்க‌ள் வீடு வாட‌கைக்கு கேட்ட‌ போது பேச்சில‌ர் ப‌ச‌ங்க‌ளுக்கு வீடு த‌ர‌ மாட்டேன் என்று க‌ண்டிப்பாக‌ சொன்னார். என்னுடைய‌ ந‌ண்ப‌ர் சொந்த‌மாக‌ ஒரு சிறிய‌ லேத் ப‌ட்ட‌றை அம்ப‌த்தூரில் வைத்திருந்தார். அவ‌ருக்கு அம்ப‌த்தூரில் உள்ள‌ சில‌ லோக்க‌ல் ந‌ண்ப‌ர்க‌ளை தெரியுமாத‌லால் அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ வீட்டு ஓன‌ரிட‌ம் பேசி எப்ப‌டியோ வீட்டை பிடித்து விட்டோம்.

முத‌லில் எங்க‌ளுக்கு வீடு த‌ர‌ மாட்டேன் என்று சொன்ன‌ வீட்டு ஓன‌ர் இப்போது எங்க‌ளிட‌ம் "என்னுடைய‌ இன்னொரு வீடு காலியாகிற‌து, உங்க‌ளுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் யார‌வ‌து இருந்தால் சொல்லுங்க‌ள்" என்று சொல்லும் அள‌வுக்கு ப‌ழ‌கிவிட்டோம். இந்த‌ நிலையில் தான் என‌க்கு கோட‌ம்பாக்க‌த்தில் உள்ள‌ ஒரு க‌ம்பெனியில் வேலை கிடைத்த‌து. இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் ஒரே வீட்டில் இருந்து விட்டு தீடிரென‌ வேறு இட‌த்திற்கு வீட்டை மாற்றுவ‌து என‌க்கு பிடிக்க‌வில்லை. என‌வே இங்கிருந்து கொண்டே வேலைக்கு சென்று வ‌ர‌ முடிவெடுத்தேன். அம்ப‌த்தூரில் இருந்து கோட‌ம்பாக்க‌ம் செல்வ‌து என்ப‌து அவ்வ‌ள‌வு எளிதான‌ காரிய‌ம் அல்ல‌. தின‌மும் காலையில் ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ம், மாலையில் ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ம் மொத்த‌ம் மூன்று ம‌ணி நேர‌ம் ட்ரெயின் ப‌ய‌ண‌ம்.



ட்ரெயின் ப‌ய‌ண‌மும் ஒரு சுக‌மான‌ அனுப‌வ‌ம் தான். நான் அம்ப‌த்தூரில் இருந்து ட்ரெயின் பிடித்து முத‌லில் சென்ர‌ல் ஸ்டேச‌ன். ஸ்டேச‌னில் இருந்து வெளியில் வ‌ந்து ச‌ப் வே வ‌ழியாக‌ பார்க் ஸ்டேச‌ன் போய் அதில் உள்ள‌ பிளாட்பார்ம் க‌ட‌ந்து அடுத்த‌ ட்ரெயின் பார்க் டூ கோட‌ம்பாக்க‌ம். இப்ப‌டிதான் ஒவ்வொரு நாளும் என்னுடைய‌ ட்ரெயின் ப‌ய‌ண‌ம் அமையும். அந்த‌ ப‌ய‌ண‌த்தில் என‌க்கு அறிமுக‌ம் ஆனாவ‌ன் தான் குமார். என்னுடைய‌ வ‌ய‌தை ஒத்த‌வ‌ன் தான். அவ‌னும் அம்ப‌த்தூர் ஸ்டேச‌னில் இருந்து தான் என்னுட‌ன் ட்ரெயினில் வ‌ருவான். ஆனால் அவ‌னுடைய‌ அலுவ‌ல‌க‌ம் கிண்டியில் இருந்த‌து.

நான் மாத‌ம்தோறும் த‌வ‌றாம‌ல் ட்ரெயின் பாஸ் எடுத்து விடுவேன். மாத‌த்தின் தொட‌க்க‌த்தில் ஸ்டேச‌னில் பாஸ் வாங்குவ‌த‌ற்கு கூட்ட‌மாக‌ இருக்கும் என‌வே நான் ஒவ்வொரு மாத‌மும் ப‌த்தாம் தேதி தான் ட்ரெயின் பாஸ் எடுப்பேன். என்னுட‌ன் வ‌ரும் குமார் ஒரு நாள் கூட‌ டிக்க‌ட் அல்ல‌து ட்ரெயின் பாஸ் எடுத்த‌தை நான் பார்த்த‌தே இல்லை. ஒரு நாள் அவ‌னிட‌ம் "நீ டிக்க‌ட் எடுப்ப‌து இல்லையா?" என்று கேட்டேன். அத‌ற்கு அவ‌ன் "நான் டிக்க‌ட்டும் எடுப்ப‌து இல்லை, பாஸும் வைத்து கொள்வ‌து இல்லை" என்றான். "செக்கிங் வ‌ந்தா என்ன‌ ப‌ண்ணுவே" என்று கேட்டேன். நான் இர‌ண்டு வ‌ருச‌மா இந்த‌ ஸ்டேச‌னில் இருந்து கிண்டி போய் வ‌ருகிறேன், ஒரு த‌ட‌வை கூட‌ நான் மாட்டிய‌து இல்லை, என‌க்கு தெரியும் யார் வ‌ருவார்க‌ள்?.. எப்ப‌டி வ‌ருவார்க‌ள்?.. எப்போது வ‌ருவார்க‌ள்?.. என்று முற்றும் தெரிந்த‌ ஞானி போல் பேசினான்.

நான் அவ‌னிட‌ம் ம‌வ‌னே!! "ஒரு நாள் என்னுடைய‌ க‌ண்முன் நீ மாட்ட‌தாண்ட‌ போறா" நான் சிரிக்க‌ தான் போறேன் என்று சொன்னேன். அத‌ற்கு அவ‌ன் "உன்னை போல் முட்டாள் தான் ட்ரெயினில் எல்லாம் டிக்க‌ட் எடுப்பான்" என்று வெற்றி கொடிக‌ட்டு பார்த்திப‌ன் ட‌ய‌லாக்கை பேசிவிட்டு சிரித்தான்.

அவ‌ன் மாட்டாம‌ல் இருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் ட்ரெயின் கிள‌ம்பும் போது தான் ஸ்டேச‌னுக்குள் வ‌ருவான். அதேப்போல் ஸ்டேச‌னில் இற‌ங்கினாலும் உட‌னே கூட்ட‌த்தோடு வ‌ர‌மாட்டான் எல்லோரும் சென்ற‌ பின் த‌னியாக‌ வ‌ருவான். அதும‌ட்டுமில்லாம‌ல் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் சென்று வ‌ருவ‌தால் அவ‌ன் ப‌ல‌ செக்கின்க‌ளையிம் தெரிந்து வைத்திருந்தான். அவ‌ர்க‌ளின் முக‌ங்க‌ளை ஸ்டேச‌னில் பார்த்தாலே ஏதாவ‌து ச‌ந்தில் புகுந்து விடுவான். ட்ரெயினில் இற‌ங்கும் போதும் முத‌ல் ஆளாக‌ இற‌ங்க‌ மாட்டான் க‌டைசியாக‌ தான் இற‌ங்குவான். செக்கின் யார‌வ‌து இருந்தால் அந்த‌ ஸ்டேச‌னில் இற‌ங்க‌ மாட்டான். இந்த‌ விச‌ய‌ங்க‌ள் அனைத்தும் அவ‌னுட‌ன் சென்று வ‌ருவ‌தில் நான் க‌வ‌னித்த‌வை.

இன்னைக்கு ப‌த்தாம் தேதி. என்னுடைய‌ ட்ரெயின் பாஸ் நேற்றோடு முடிந்துவிட்ட‌து. இன்னைக்கு நான் பாஸ் எடுக்க‌ வேண்டும். அம்ப‌த்தூர் ஸ்டேச‌னுக்கு, நான் எப்போதும் மெயின் வாச‌ல் வ‌ழியாக‌ வ‌ருவ‌து இல்லை. என‌து வீட்டில் இருந்து வ‌ரும் போது மெயின் வாச‌ல் கொஞ்ச‌ம் தொலைவாக‌ இருக்கும். என‌வே ப‌க்க‌த்தில் உள்ள‌ ம‌தில் சுவ‌ர் இடிந்து விழுந்த‌ பாதை வ‌ழியாக‌ ஸ்டேச‌னுக்குள் வ‌ருவேன். அந்த‌ வ‌ழியாக‌ தான் பெரும்பாலான‌ ம‌க்க‌ளும் வ‌ருவார்க‌ள். வ‌ழ‌க்க‌ம் போல் நானும் அந்த‌ பாதையில் வ‌ந்து கொண்டு இருந்தேன். பிளாட்பார்மில் கால் வைத்த‌வுட‌ன் ஒரு "கை" என்னை த‌டுத்த‌து, "சார் உங்க‌ டிக்க‌ட் கொடுங்க‌" என்று.

நான் அவ‌ரிட‌ம் "சார் நான் இப்போது தான் உள்ளே வ‌ருகிறேன். என்னுடைய‌ ட்ரெயின் பாஸ் நேற்றோடு முடிந்து விட்ட‌து, இனிதான் போய் பாஸ் எடுக்க‌ணும்" என்றேன். அவ‌ர் என்னிட‌ம் "நீங்க‌ள் இப்போது நிற்ப‌து ஸ்டேச‌ன் பிளாட்பார்ம்" ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்யும், இப்ப‌ நீங்க‌ என்னுட‌ன் வாங்க‌, என்று என்னை அழைத்து கொண்டு அவ‌ருடைய‌ அறையை நோக்கி ந‌ட‌ந்தார். நான் போகும் பிளாட்பார்ம்க்கு எதிர் ப‌க்க‌த்தில் உள்ள‌ பிளாட்பார்மில் குமார் நின்று கொண்டு என்னை பார்த்து சிரித்தான்.

.

.

.
Related Posts with Thumbnails