Showing posts with label மேன்ப‌வ‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்சி. Show all posts
Showing posts with label மேன்ப‌வ‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்சி. Show all posts

Thursday, March 25, 2010

மேன்ப‌வ‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்சி_இண்ட‌ர்வியூ

காலை வேளை, கடிகாரத்தின் சிறிய முள் எட்டு என்று காட்டியது. அருள் அவசரம், அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான். தம்பி அந்த அட்ரஸ் எல்லாம் எடுத்து விட்டாயா? என்ற அக்காவின் குரலைக் கேட்டவுடன், ஞாபகம் வந்தவனாக நேற்று தினத்தந்தி நாளிதழில் வேலை வாய்பிற்கான பக்கத்தில் பார்த்த முகவரிகளை குறித்து வைத்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான். முதலில் எங்கு செல்வது என்ற எண்ணத்துடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். இப்போது எந்த தொழிற்சாலைகளும் நேரிடையாக ஆட்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்றும், ஏதாவது மேன்பவர் கன்சல்டன்சி(Manpower consultancy) மூலம் தான் எடுக்கிறார்கள் என்று அவனது மாமா சொன்னதை அப்படியே அசை போட்ட வண்ணம் பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். அவன் குறித்து வைத்திருந்த முகவரிகளில் ஒரு மேன்பவர் கன்சல்டன்சியின்(manpower consultancy) முகவரியும் இருந்தது. எனவே மடித்து வைத்த காகிதத்தை எடுத்து அந்த மேன்பவர் கன்சல்டன்சியின் முகவரியை பார்த்தான், அதில் "அம்பத்தூர் பாடி" என்று எழுத பட்டிருந்தது. அந்த நேரம் பேருந்து வரும் சத்தம் கேட்கவே, நிமிர்ந்து பேருந்தின் வழிதடத்தை பார்த்தான். அதில் "அம்பத்தூர் எஸ்டேட்" என்று எழுத பட்டிருந்தது. பேருந்தில் கூட்டம் ஜெக ஜோதியாய் இருந்தது. அடித்து பிடித்து ஒரு வழியாக பேருந்தில் ஏறிவிட்டான். பேருந்தில் நடத்தினரிடம் "அம்பத்தூர் பாடி" என்று பயணச்சீட்டு வங்கிக் கொண்டான். பேருந்தில் பக்கத்தில் நின்றவரும் "அம்பத்தூர் பாடி" என்று பயணச்சீட்டு வாங்கவே, அவரிடம் அந்த மேன்பவர் கன்சல்டன்சியின் முகவரியை சொல்லி அடையாளம் கேட்டான். அவர் சிரித்து கொண்டே என்ன வேலைக்காக போகிறீர்களா? என்று கேட்டார். ஆம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். பஸ் ஸ்டாப்புல இறங்கி கொஞ்சம் தூரம் போனீங்கனா ஒரு மார்கெட் வரும் அதற்கு ஆப்போசிட்டுல ஒரு பெரிய போர்டு மாட்டி இருக்கும், என்று அடையாளம் சொன்னார்.



ச‌ரியாக‌ காலை 9.10 க்கு எல்லாம் க‌ன்ச‌ல்ட‌ன்சி அலுவ‌ல‌க‌த்தை அடைந்தான் அருள். அலுவ‌ல‌க‌ம் முத‌ல் மாடியில் இருந்த‌து. இவ‌னுக்கு முன்பாக‌வே ப‌த்து பேர் அங்கு வ‌ந்திருந்தார்க‌ள். வ‌ர‌வேற்ப‌றையில் ஒரு பெண்ம‌ணி இருந்தார்க‌ள். அவ‌ரிட‌ம் சென்று அருள் விசாரித்தான். அத‌ற்கு ச‌ற்று அம‌ருங்க‌ள், சார் உள்ளே இண்ட‌ர்வியூ ப‌ண்ணிக்கிட்டு இருக்கார். சார் வ‌ர‌ சொன்ன‌தும் உள்ளே போங்க‌ள் என்று ப‌க்க‌த்தில் இருந்த‌ மேல் க‌ண்ணாடி மாட்டிய‌ க‌த‌வை காட்டினார். க‌ண்ணாடி வ‌ழியே இருவ‌ர் பேசிக் கொண்டிருப்ப‌து அருளுக்கு தெரிந்த‌து. அருள் ப‌க்க‌த்தில் இருந்த‌ இருக்கையில் அம‌ர்ந்தான். வ‌ரிசையாக‌ ஒவ்வொருத்த‌ரும் உள்ளே சென்று சிறிது நேர‌த்தில் ஒரு விண்ண‌ப்ப‌ ப‌டிவ‌த்துட‌ன் வெளியே வ‌ந்த‌ன‌ர். வ‌ந்த‌வ‌ர்க‌ள் அந்த‌ ப‌டிவ‌த்தை பூர்த்தி செய்து அதை அந்த‌ வ‌ர‌வேற்ப‌றையில் இருந்த‌ பெண்ம‌ணியிட‌ம் கொடுத்து விட்டு, கையில் இருந்து ப‌ண‌மும் கொடுத்து ஒரு ர‌சீது வாங்கிக் கொண்டார்க‌ள். அத‌னுட‌ன் சேர்த்து அந்த‌ பெண்ம‌ணி சில‌ உறையிட‌ப்ப‌ட்ட‌ க‌டித‌ங்க‌ளையும் கொடுத்தார். இவை அனைத்தும் அருளின் க‌ண்முன்னே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. ம‌ணித்துளிக‌ள் க‌ட‌ந்தோடின‌, இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஆயிற்று. அருளின் முன் இருந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் சென்று வ‌ந்தாயிற்று. அடுத்த‌து அருள் தான். அத‌ற்குள் அருளை அடுத்து இன்னும் ப‌த்து பேர் வ‌ந்து சேர்ந்திருந்தார்க‌ள். அழைப்பு வ‌ர‌வே உள்ளே சென்றான் அருள். உள்ளே சென்ற‌தும் க‌த‌வு தானே மூடிய‌து. வாங்க‌ உட்காருங்க‌ள். என் பெய‌ர் க‌ன‌க‌ராஜ், உங்க‌ள் பெய‌ர்? என்று நிறுத்தினார் உள்ளே இருந்த‌வ‌ர். நான் அருள் சார். இந்தாருங்க‌ள் என்னுடைய‌ ப‌யோடேட்டா. என்று அவ‌ரிட‌ம் தான் கொண்டு வ‌ந்த‌ பைலை நீட்டினான் அருள். அதை வ‌ங்கி பார்த்து கொண்டே, சொல்லுங்க‌ அருள் உங்க‌ளை ப‌ற்றி என்று சொல்லிக் கொண்டு அருளுடைய‌ ப‌யோடேட்டாவை புர‌ட்ட‌ தொட‌ங்கினார் க‌ன‌க‌ராஜ். நான் வ‌ந்து... மெக்கானிக்க‌ல் இஞ்சினிய‌ர் என்று ஆர‌ம்பித்து ஒரு பெரிய‌ க‌தையை பாதி ஆங்கில‌மும், தமிழும் சேர்த்து ஒரு வ‌ழியாய் சொல்லி முடித்தான் அருள். சோ.. நீங்க‌ ஒரு மெக்கானிக்க‌ல் இஞ்சினிய‌ர் அப்ப‌டிதானே..என்று கேட்ட‌தில் இருந்தே, அது ஒரு வார்த்தையை தான் அவ‌ர் காதில் வாங்கி இருக்கிறார் என்று அருள் ஓர‌ள‌வு புரிந்து கொண்டான். ஆமா சார். போன மாத‌ம் தான் ப‌டிப்பை முடித்தேன், சென்னையும் என‌க்கு புதிது. என்று ப‌தில‌ளித்தான் அருள். ஓகே அருள் ஒண்ணும் பிர‌ச்ச‌னை இல்லை. உங்க‌ளுக்கு வேலை வாங்கி த‌ர‌ வேண்டிய‌து என்னுடைய‌ பொறுப்பு, இப்போது மெக்கானிக்க‌ல் பீல்டில் சி.என்.சி(CNC)ந‌ல்லா இருக்கு, அதைப் ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரியுமா?.

காலேஜில‌ ஒரு செம‌ஸ்ட‌ர்ல‌ ப‌டிச்சி இருக்கேன்.

ஓ வெரிகுட். நானும் அதைப் ப‌ற்றி ஒரு டிரெயினிங் வ‌குப்பு ந‌ட‌த்திக் கொண்டு இருக்கிறேன். நீங்க‌ளும் அதில் கொஞ்ச‌ம் டிரெயினிங் எடுத்திட்டா போதும். வெளியே இந்த‌ கோர்ஸ் ப‌டிக்க‌ நான்காயிர‌ம் முத‌ல் ஐயாயிர‌ம் வ‌ரை சார்ஜ் ப‌ண்ணுறாங்க‌. நான் மூவாயிர‌ம் தான் வாங்குறேன். ச‌ரி, முத‌லில் உங்க‌ளுக்கு ஒரு வேலைக்கு நான் ஏற்பாடு ப‌ண்ணுறேன். அப்புற‌ம் பார்ட் டைம்ல‌ இந்த‌ கோர்ஸை தொட‌ருங்க‌ள்.

க‌ண்டிப்பா சார், என‌க்கும் அந்த‌ கோர்ஸ் ப‌டிக்க‌ணும் என்று ஆர்வ‌ம் இருந்த‌து.

ஓ! அப்ப‌டியா. ரெம்ப‌ ந‌ல்ல‌து. ச‌ரி, நான் வேலையைப் ப‌ற்றி உங்க‌ளுக்கு சொல்லி விடுகிறேன். அதாவ‌து எங்க‌ கிட்ட‌ பெரிய் க‌ம்பெனிக‌ள் வேலைக்கு ஆட்க‌ள் வேண்டி சொல்லி வ‌ச்சிருக்காங்க‌. அவ‌ங்க‌ளுக்கு எங்க‌ க‌ன்ச‌ல்ட‌ன்சி மூல‌மா நாங்க‌ள் ஆட்க‌ளை அனுப்பி வைக்கிறோம். அவ‌ங்க‌ளும் இண்ட‌ர்வியூ ப‌ண்ணி அவ‌ங்க‌ளுக்கு தேவை என்றால் எடுத்துக் கொகிறார்க‌ள். அதுபோல‌ உங்க‌ளுக்கும் நான் ஒரு சில‌ க‌ம்பெனிக‌ளின் அட்ர‌ஸ் த‌ருகிறேன். நீங்க‌ அவ‌ங்க‌ளை போய் பாருங்க‌. க‌ண்டிப்பா உங்க‌ளுக்கு வேலை கிடைக்கும். ஏன்னா! நான் என்னுடைய‌ லெட்ட‌ர் பேடில் உங்க‌ளை சிபாரிசு ப‌ண்ணி எழுதி இருப்பேன்.

அப்ப‌டியா? ரெம்ப‌ ந‌ன்றி சார்.

உங்க‌ளுக்கு அட்ர‌ஸ் த‌ருவ‌த‌ற்கு நீங்க‌ முத‌லில் எங்க‌ ஆபிஸில் உங்க‌ளுடைய‌ புரோபைலை ரெஜிஸ்ட‌ர் ப‌ண்ண‌ வேண்டும். அதுக்கு அப்ளிக்கேச‌ன் க‌ட்ட‌ண‌ம் 150. இந்தாங‌க் அப்ளிக்கேச‌ன் பார்ம். இதுல‌ உங்க‌ளுடைய‌ ப‌யோடேட்டாவை அப்டேட் ப‌ண்ணி, பார்மையும் அதுக்கான‌ கட்ட‌ண‌த்தையும் முன்னாடி ஆபிஸில் க‌ட்டிருங்க‌. அப்புற‌ம் எந்த‌ க‌ம்பெனியில் நீங்க‌ள் வேலைக்கு சேர்ந்தாலும் அந்த‌ க‌ம்பெனியில் வாங்கும் முத‌ல் மாத‌ ச‌ம்ப‌ள‌த்தில் பாதி எங்க‌ளுக்கு கொடுத்து விட‌ வேண்டும்.

வேலையை ப‌ற்றி விப‌ர‌ம் எல்லாம் நீங்க‌ சொல்லுவீங்க‌ளா?. என்ன‌ வேலை?. ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு சார் கொடுப்பாங்க‌?..

உங்க‌ளுக்கு இது தான் முத‌ல் வேலை. என‌வே நீங்க‌ என்னுடைய‌ சி.என்.சி(CNC Programming Courses) கோர்ஸ்ல‌ ஜாயின் ப‌ண்ணிருங்க‌. சி.என்.சி மெஷின் ஆப்ப‌ரேட்ட‌ர்(CNC Machine Operator) என்று உங்க‌ளுக்கு நான் புரோபைலை அப்டேட் ப‌ண்ணி த‌ருகிறேன்.

.......x........x........x........x.........x.........x.........x........x.......x...

அடுத்த‌ நாள் காலை, அம்ப‌த்தூர் எஸ்டேட்.
வினாய‌கா மேனுபாச்ச‌ரிங் க‌ம்பெனி.

சார் என் பெய‌ர் அருள், ஏபிசி க‌ன்ச‌ல்ட‌ன்சி மூல‌மா வ‌ருகிறேன். சி.என்.சி மெஷின் ஆப்ப‌ரேட்ட‌ர் (CNC Machine Operator) வேலை காலியா இருக்கிற‌தா சொன்னார்.

வாங்க‌ த‌ம்பி இன்னைக்கு உங்க‌ளை அவ‌ன் அனுப்பி இருக்கானா?.. அவ‌னுக்கு வேற‌ வேலையா இல்லையா? ஆமா ச‌ரி தான் அவ‌னுக்கு தான் இந்த‌ பொழ‌ப்ப‌ விட்டா வேற என்ன‌ தெரியும். த‌ம்பி இப்ப‌ என்னிட‌ம் சி.என்.சி மெஷினே இல்லை. நான் விற்று ஒரு மாத‌ கால‌ம் ஆகுது. உங்க‌ளை சேர்த்து நான்கு பேர் வ‌ந்துத்துட்டு போய்ட்டாங்க‌.. சாரி த‌ம்பி வேற‌ க‌ம்பெனி பாருங்க‌.

.......x........x........x........x.........x.........x.........x........x.......x...

ம‌திய‌ம், அம்ப‌த்தூர் எஸ்டேட்.
வெஸ்ட‌ன் பிரைவேட் லிமிட்

குட் ஆப்ட‌ர்நூன் சார். நான் ஏபிசி க‌ன்ச‌ல்ட‌ன்சி சொல்லி வ‌ருகிறேன். இங்க‌ சி.என்.சி ஆப்ப‌ரேட்ட‌ர் வேலை இருக்கிற‌தா சொன்னாங்க‌..

வெரி குட் ஆப்ட‌ர்நூன். குடுங்க‌ உங்க‌ ப‌யோடேட்டாவை.. ம்ம் ந‌ல்லா ப‌ண்ணியிருக்கிங்க‌.. சி.என்.சியில் உங்க‌ளுக்கு முன் அனுப‌வ‌ம் இருக்கா? புரோகிராம் ப‌ண்ண‌ தெரியுமா?

அனுப‌வ‌ம் இல்லை சார். ஆனா புரோகிராம் ப‌டிச்சிருக்கிறேன். ஆப்ப‌ரேட்ட‌ரா முத‌லில் வேலை கொடுத்திங்க‌னா.. அப்ப‌டியே புரோகிராம் க‌த்துக்குவேன்..

நல்லா பேசுறீங்க‌... ஆனா ஒரு சின்ன‌ சிக்க‌ல். நாங்க‌ள் இப்ப‌ தான் மெஷின் ஆர்ட‌ர் ப‌ண்ணி இருக்கோம். அடித்த‌ மாச‌ம் தான் வ‌ரும். உங்க‌ ப‌யோடேட்டாவை கொடுத்துட்டு போங்க‌.. கண்டிப்பா மெஷின் வ‌ந்த‌வுட‌ன் கால் பண்ணுறோம்.

.......x........x........x........x.........x.........x.........x........x.......x...

இர‌ண்டாவ‌து நாள் காலை, கிண்டி
அபூர்வா இஞ்சினிய‌ரிங்

ம‌க‌ன்: என்ன‌ க‌ன‌க‌ராஜ் அனுப்பி விட்டானா? பாருங்க‌ அப்பா, காலையிலே அனுப்பி விட்டுட்டான்.

ம‌க‌ன்: உன் பெய‌ர் என்ன‌ சொன்ன‌?

அருள் சார்.

அப்பா: ஓ நீ கிறிஸ்டினா?

ஆமா சார்.

ம‌க‌ன்: நீ ச‌ர்ச்க்கு எல்லாம் போவியா?

ஊர்ல‌ இருக்கும் போது போவேன் சார். சென்னை வ‌ந்த‌ பிற‌கு போற‌து இல்லை.

அப்பா: உங்க‌ அப்பா ச‌ர்ச்சுக்கு போவாறா?

ஆமா சார் அவ‌ரும் போவார்.

ம‌க‌ன்: இதுக்கு முன்னாடி எங்கயாவ‌து வேலை பார்த்து இருக்கிறாயா?

இல்ல‌ சார். இந்த‌ வ‌ருட‌ம் தான் ப‌டிப்பை முடித்தேன்.

அப்பா: இப்ப‌ ஒண்ணும் இங்க‌ வேலை காலி இல்லை. என்னிட‌ம் எட்டு மெஷின் இருக்கிற‌து, எல்லாவ‌ற்றிலும் ஆட்க‌ள் இருக்கிறார்க‌ள். இனி அடுத்த‌ மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கும் போது தான் ஒவ்வொருத்த‌னாக கிளாம்புவான். அதுனால் நீ இப்ப‌ போயிட்டு அடுத்த‌ மாத‌ம் வ‌ந்து பாரு..காலியா இருந்தா எடுத்துக்கிறோம்..

.......x........x........x........x.........x.........x.........x........x.......x...

இர‌ண்டாவ‌து நாள் ம‌திய‌ம், கிண்டி
ஜி.கே. எண்ட‌ர்பிரைச‌ஸ்

வாப்பா!.. இந்த‌ சோபாயில் உட்கார்‌, சொல்லுப்பா..‌‌

சார் என் பெய‌ர் அருள். நான் ஏபிசி க‌ன்ச‌ல்ட‌ன்சி மிஸ்ட‌ர் க‌ன‌க‌ராஜ் சொல்லி வ‌ந்து இருக்கேன். இங்க‌ சி.என்.சி மெஷின் ஆப்ப‌ரேட்ட‌ர் வேலை காலியா இருக்கு என்று சொன்னாரு. அந்த‌ வேலைக்கு தான் வ‌ந்து இருக்கேன்...... இது தான் ‌சார் என்னுடைய ப‌யோடேட்டா.

ஹ‌..ஹா..ஹா.. ந‌ல்லா இருக்குப்பா? என்னிட‌ம் சி.என்.சி மெஷினே இல்லை. அவ‌ன் இல்லாத மெஷினுக்கு ஆள் அனுப்புறானா? ந‌ல்லா இருக்கு.

எவ்வ‌ள‌வு கொடுத்து ஏமாந்தே?

ரெஜிஸ்ட‌ர் ப‌ண்ண‌ 150 ரூபாய் கொடுத்தேன் சார். அப்புற‌ம் இந்த‌ வேலை கிடைத்தால் பாதி ச‌ம்ப‌ள‌ம் அவ‌ருக்கு கொடுக்க‌ வேண்டும்.

இது ந‌ல்லா இருக்கு..எவ‌னுடைய‌ ச‌ம்ப‌ள‌த்தை யாருக்கு கொடுக்கிற‌து.ம்ம்ம்ம்ம்... சி.என்.சி புரோகிராம் ப‌டிச்சி இருக்கியா?

இல்ல‌ சார், இனி மேல் தான் ப‌டிக்க‌ வேண்டும்.

அப்ப‌ எதுக்குப்பா நீ சி.என்.சி வேலை தேடுகிறாய்.

இல்ல‌ சார் அவ‌ருதான் சொன்னாரு.. சி.என்.சி பீல்டு நல்லா இருக்கு என்று.

அவ‌ன் பிழைக்க‌ தெரிந்த‌வ‌ன். உன்னோட‌ ப‌யோடேட்டாவை பார்த்தேன். ந‌ல்ல‌ மார்க் வாங்கி இருக்கிறாய். இப்ப‌ என்னுடைய‌ க‌ம்பெனியில் ஒரு வேலை காலி இருக்கு. உன‌க்கு விருப்ப‌ம் இருந்தால் இப்ப‌வே நீ ஜாயின் பாண்ண‌லாம்.

அப்ப‌டியா சார்? என்ன‌ வேலை சார்.

நீ நினைப்ப‌தைப் போல் சி.என்.சி மெஷின் ஆப்ப‌ரேட்ட‌ர் வேலை இல்லை. சாதரான‌ டிரில்லிங் மெஷின் ஆப்ப‌ரேட்ட‌ர். மாத‌ம் ஆயிர‌ம் ரூபாய் ச‌ம்ப‌ள‌ம், அது ம‌ட்டும் அல்லாம‌ல் ஓவ‌ர் டைம் வேற‌ இருக்கும். இத‌ர‌ ச‌லுகைக‌ளும் கிடைக்கும்.

சார் நான் ப‌ஸ்ட் கிளாஸ் வித் ஹான‌ர்ஸ் வாங்கி இருக்கேன். அந்த‌ ச‌ர்டிபிக்கேட் கூட‌ அட்டாச் ப‌ண்ணி இருக்கேன், ச‌ம்ப‌ள‌ம் ரெம்ப‌ க‌ம்மியா இருக்கு சார். நான் வேற ப‌ல்ல‌வ‌ர‌த்தில் இருந்து வ‌ர‌வேண்டும். கொஞ்ச‌ம் பார்த்து சம்ப‌ள‌ம் பிக்ஸ் ப‌ண்ணுங்க‌ சார்.

ம்ம்ம்..பார்த்தேன் பார்த்தேன்.. ந‌ல்லா பேசுறா.. ச‌ரி நூறு ரூபாய் அதிக‌ம் போட்டு ஆயிர‌த்து நூறு என்று பிக்ஸ் செய்யிறேன். எப்ப‌ வ‌ந்து ஜாயின் பாண்ணுவாய்.

நாளைக்கே வ‌ந்து வேலையில் சேர்ந்து விடுகிறேன் சார்..

குட்.... அப்புற‌ம் உன‌க்கு வேலை கிடைத்த‌ விச‌ய‌த்தை அந்த‌ க‌ன்ச‌ல்ட‌ன்சிக்கு சொல்ல‌ வேண்டாம். அவ‌னுக்கு ப‌ண‌மும் கொடுக்க‌ வேண்டாம். அப்ப‌டி ஏதாவ‌து பிர‌ச்ச‌னை ப‌ண்ணினால் என்னிட‌ம் சொல்லு.

ரெம்ப‌ ந‌ன்றி சார்..

நாளை வ‌ரும் போது மெஷினில் வேலை செய்யும் போது போட‌ வேற‌ துணி ஒன்று கொண்டு வா? இல்லை என்றால் புது துணி அனைத்தும் ஆயில் ஆகி விடும்.

க‌ண்டிப்பா சார்..ரெம்ப‌ ந‌ன்றி சார்.

.......x........x........x........x.........x.........x.........x........x.......x...

காலேஜ் ப‌டிக்கும் போது லேப் பிர‌ட்டிக்க‌ல் கிளாசில் போட்ட‌ காக்கி துணியை, காலேஜின் க‌டைசி நாளில் காலில் மிதித்து விளையாடிய‌ போது, அதை பார்த்த‌ துறை த‌லைவ‌ர் "அதை எல்லாம் ப‌த்திர‌மா எடுத்து வையுங்க‌ள் ஒரு நாள் உங்க‌ளுக்கு தேவைப்ப‌டும்" என்று கூறிய‌தை நினைத்துக் கொண்டு ந‌டையை க‌ட்டினான் அருள்.
Related Posts with Thumbnails