"ஒரு நாள் உருவத்தில் முகமூடி வீரர் மாயாவியாக நான் இருந்தால் எப்படியிருக்கும்" என்பதை பற்றி ஒரு சின்ன கற்பனை.

படிக்கும் பருவத்தில் ஏதாவது முக்கிய வேலையில் நான் ஏதாவது முட்டாள் தனமாக செய்துவிட்டால் என்னுடைய அம்மா என்னை "மரமண்டை" என்று திட்டுவார்கள், ஒருவேளை நான் மாயாவி உருவத்தில் இருந்திருந்தால் "இரும்புமண்டை" என்று திட்டியிருப்பார்களோ!!!!!!!
என்னுடைய அப்பாவின் கூட பிறந்தவர்கள் அனைவருக்கும் நடுமண்டையில் முடிகள் இருக்காது, என் அப்பா உட்பட். அவர்களை நான் சொட்டை என்று கிண்டல் செய்தது உண்டு, அதற்கு அவர்கள் "நாளை உனக்கும் இது போல் வரும்" என்று சொல்வார்கள். நான் அவர்களிடம் "மயிர் போனால் மண்டை பாலிஸ்" என்று நையாண்டி செய்தது உண்டு. இப்போது எனக்கும் முடிகள் கொட்ட தொடங்கிவிட்டது, அதைபற்றிய கவலையும் வரதொடங்கிவிட்டது. மாயாவியை போல் தலை இருந்து விட்டால் இந்த முடி பற்றிய பிரச்சனையே வராது அல்லவா!!!!!...
இந்த பிளாக்கரில் புரபைல் போட்டோ போடுவதிலும் பிரச்சனை வந்திருக்காது. அப்படியே நம்ம கம்பெனி முத்திரையை(மண்டையோடு) போட்டு விடாலாம். யாரும் வாயே தொறக்க மாட்டார்கள்.
நான் ஸ்கூல் படிக்கும் போது வீட்டில் இருத்து மதிய சாப்பாடு எடுத்து போவேன். அதில் எங்கம்மா எனக்கு டெய்லி ஒரு அரைமுட்டை(இன்னொரு அரைமுட்டை அண்ணனுக்கு) வைத்து தருவார்கள். அந்த அரைமுட்டை மதிய வேளையில் லஞ்ச் பாக்ஸில் இருக்காது, நம்ம கோவாலு லவுட்டிருவான். டேய்!!!!! கோவாலு உன்னைதாண்டா தேடிகிட்டு இருக்கிறேன்... நான் மாயாவியா உருமாருகிற அன்னைக்கு நீ மாட்டினா மவனே!!!... முதல் மோதிர முத்திரை உனக்கு தாண்டா!!!!!!
பார்க்கர்ல சட்டையும், லீயில் ஜீன்ஸும், ஜாக்கில பனியனும் வாங்க வேண்டிய வேலையே இல்ல.. டெய்லி ஒரு டிரஸ் மாத்தனும் என்ற தொல்லையும் கிடையாது(இப்ப மட்டும் என்ன வாழுதாம் ஆறு மாசத்துக்கு முன்னாடி போட்ட ஜீன்ஸ் பேண்டை இன்னும் கழட்டல, தண்ணி பார்த்து வருச கணக்காவுது.... நோ.. நோ... நோ பேட் வேர்ட்ஸ்.. மீ.. பாவம்)
இப்ப பெட்ரோல், டீசல் விக்கிற விலையில வண்டி வாங்கி ஓட்ட முடியுமா, வண்டி வேணுண்ணா வாங்கி சோக்கேஸுல் வச்சி அழகு பாக்கலாம், ஆனா பெட்ரோல் ஊற்றி ஓட்ட முடியாது. பிளைட்ல, கார்ல, ட்ரெயின்ல, பஸ்ல, டுவீலர்லனு எல்லாத்திலேயும் போயாச்சி ஆனா குதிரையில?????.... மாயாவி குதிரை மேல இருந்த ஆசையில, ஒரு தடவ அப்பாட்ட "நான் குதிரையில் சவாரி செய்யனனு சொல்ல" அப்பாவும் அது ஒண்ணும் பிரச்சனை இல்லனு சொல்லி மெரினா பீச் கூட்டிட்டு போய் கழுதை மேல சாரி.. குதிரை மேல என்னை ஏத்தி வைச்சி குதிரையை நடக்க வச்சாரு!!!!.கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அன்னைக்கு முடிவு பண்ணினேன் இனிமேல் ஏறினா மாயாவியின் வெள்ளை குதிரை மேல் தான் என்று..
மரக்கிளைகளில் படுத்து உறங்கி
கோழியின் கூவலில் விழித்து
பறவைகளின் ரீங்காரங்களில் மனதை பறிகொடுத்து
மரங்களில் கனிந்த பழங்களை புசித்து
காட்டு விலங்குகளின் மொழி பேசி
தெளிந்த நீரோடையில் குளித்து..
ஒரு நாள் பொழுதாயினும் மறக்க முடியுமா...
இயற்கையோடு இயந்த வாழ்க்கை.
உள் மனதில் முகமூடி போட்டு கொண்டு மனிதன் என்று சொல்லி கொண்டிருக்கும் விலங்குகள் வாழும் சமுதாயத்தில், வெளியில் முகமூடி போட்டு கொண்டு மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன்.. கனவே கலையாதே....
எனக்கு இந்த தலைப்பை கொடுத்து எழுத தூண்டிய அமைதிச்சாரல் சகோதரிக்கு மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... குற்றம் குறையிருப்பின் பொறுத்தருள்க.
நான் எழுதிய கடந்த இரண்டு தொடர்பதிவிலும் யாரையும் தொடர அழைக்கவில்லை, காரணம் ரெம்ப லேட்டா தான் எனது கைக்கு வந்தது. பெரும்பாலான எல்லோருமே எழுதிவிட்டார்கள். இது இப்போது தான் ஆரம்பித்து இருப்பதால் சிலரை அழைக்கலாம் என்று இருக்கிறேன்.
ரெம்ப சீரியஸா பதிவு எழுதுகிற நம்ம தமிழ் உதயம் ரமேஷ் சார் அவர்களை இந்த தொடர்பதிவில் அழைக்கிறேன். இந்த கற்பனை பதிவிலும் என்ன பண்ணுகிறார் என்று பார்ப்போம். தமிழ் சார் உங்க தலைப்பு இது தான்.
மக்கள் செறிந்த கூட்டத்தில் ஒரு தவறு நடக்கிறது. அதை செய்தவன் நீங்கள் தான் செய்தீர்கள் என்று கத்துகிறான். அதை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்(எந்த தவறாகவும் இருக்கலாம் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள், அதேபோல் அது எந்த இடமாகவும் இருக்கலாம் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்)
தொடர்கதைகளிலும், சிறுகதைகளிலும் கலக்கும் செல்ல நாய்க்குட்டி அவர்களையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன். உங்களுடைய தலைப்பு
பழைய மன்னர்களின் ஆட்சியில் நீங்கள் இருந்தால் ( நீங்கள் எந்த ஒரு கேரக்டராகவும் எடுத்து கொண்டு எழுதலாம், மன்னரகவோ, ராணியாகவோ, பிரஜையாகவோ) அந்த அனுபவத்தை பகிரவும்.
.
.
.