இது ஒரு விளையாட்டு புதிர். இந்த
GAME லிங்கை அழுத்தி பார்த்தால் ஒரு வலைத்தளம் வரும். அதில் இந்த விளையாட்டின் பக்கத்தை இணைத்துள்ளேன். அந்த வலைத்தளம் எனது நண்பருடையது. என்னுடைய பிளாக்கில் இந்த SWF பார்மெட்(Format) பைலை என்னால் இணைக்க முடியவில்லை. எனவே தான் எனது நண்பரின் இணைய தளத்தில் இணைக்க வேண்டியதாற்று. தெரிந்தவர்கள் யாரவது பின்னுட்டத்தில் சொன்னால் ரெம்ப மகிழ்ச்சியடைவேன்.
இந்த விளையாட்டின் விதிமுறையை சொல்லிவிடுகிறேன்.
1)இந்த குடும்பத்தை இவர்கள் நிற்கும் பக்கத்தில் இருந்து மறுபக்கம் அழைத்து செல்ல வேண்டும்
2)அரிக்கேன் விளக்கு ரெம்ப முக்கியம். இரவு நேரம் எனவே விளக்கு இல்லாமல் பாதையை கடக்க முடியாது.
3)ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டும் தான் பாதையை கடக்க முடியும்.
4)ஒவ்வொருவரும் பாதையை கடக்க முறையே கீழ்கண்ட நேரத்தை எடுத்து கொள்கிறார்கள்.
வலமிருந்து இடம் அவர்களை A, B, C, D, E, F என்று வைத்து கொள்வோம்.
A - 1 நிமிடம்
B - 3 நிமிடம்
C - 6 நிமிடம்
D - 8 நிமிடம்
E - 12 நிமிடம்
5)இரண்டு பேர் பாதையை கடக்கும் போது, கடக்க அதிக நேரம் எடுத்து கொள்பவரின் நிமிடம் விளையாட்டின் நேரமாக எடுத்து கொள்ளப்படும்.(அதாவது மெதுவாக நடப்பவரின் நேரம்)
6)இது தான் முக்கியமானது. விளக்கு 30 நிமிடம் தான் எரியும். அதன் பிறகு அணைந்து விடும். விளக்கு அணைந்து விட்டால் பாதையை கடக்க முடியாது. எனவே 30 நிமிடத்துக்குள் அனைவரும் பாதையை கடக்க வேண்டும்.
இது விதிமுறையில் கிடையாது. ஆனால் சிறு தகவலுக்காக தருகிறேன். பாதையை கடந்த இருவரில் ஒருவர் தான் விளக்கை எடுத்து சென்று மறுபக்கம் உள்ளவர்களை கூட்டி வரவேண்டும்.
உங்களுடய பதில்களை பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்..பதிலை சரியாக சொல்பவர்களுக்கு நாஞ்சிலானந்தாவின் தரிசனத்துக்கு இலவச டிக்கெட் அனுப்பபடும்.
விளையாட்டின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக சரியான பதில் பின்னூட்டங்களை உடனடியாக பிரசுரிக்க மாட்டேன்.