Monday, October 18, 2010

என‌து அரேபிய‌ அனுப‌வ‌ம்_புன்ன‌கை

காலையில் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகம் வரும் வழியில் நம்மிடம் அறிமுகம் இல்லாத ஒருவர் மலர்ந்த புன்னகையுடம் உங்களுக்கு காலை வணக்கம் சொன்னால் எப்படி இருக்கும்?. நம்மையும் அறியாமல் ஒரு இனம்காணத புத்துணர்ச்சி பெருக்கெடுப்பதை உணர முடியும்.

நான் அரேபியா வந்த புதிதில் இங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களில் என்னை ஆச்சரிய படுத்திய ஒன்று நான் மேலே சொன்ன விசயம் தான். நம்மை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் "சலாம் மாலிக்கும்" என்று புன்னகைக்க தவறுவது இல்லை.

அறிமுகம் இல்லாத எந்த நபராக/எந்த‌ நாட்ட‌வ‌ராக‌ இருந்தாலும் அவர்கள் சலாம் மாலிக்கும் என்று கைக்குலுக்கி மகிழ்கின்றனர். அதேப் போல் கடைகள் நடத்துபவராக இருந்தாலும், கார் வாடகைக்கு ஓட்டுபவராக இருந்தாலும் அவர்களும் இந்த பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

தொலைப்பேசியில் பேசும் போதும் முதலில் சலாம் மாலிக்கும் என்று சொல்லி தான் பேச ஆராம்பிக்கிறார்கள். பதிலுக்கு நம்மிடம் இருந்து வணக்கத்தை எதிர்பார்ப்பது கிடையாது. அதன் பின் அவருடைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பெரிய‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் அல்லாது அர‌பி குழ‌ந்தைக‌ளிட‌மும் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் இருக்கின்ற‌து. சில‌ நேர‌ங்க‌ளில் எங்க‌ளை‌ அலுவ‌ல‌க‌த்திற்கு அழைத்து செல்லும் வாக‌ன‌ம் வ‌ருவ‌த‌ற்கு தாம‌த‌ம் ஆனால் நாங்க‌ள் வீட்டில் இருந்து இற‌ங்கி சாலையில் நிற்ப்போம். அப்போது ப‌ள்ளிக்கு செல்லும் அர‌பி சிறுவ‌ர்க‌ள் "ச‌லாம் மாலிக்கும்" என்று சொல்வ‌து விய‌ப்பாக‌ இருக்கும்.

இதுவே இர‌ண்டு அர‌பிக‌ள் ச‌ந்திந்திதால் அவ‌ர்க‌ளுடைய‌ ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்வ‌து இன்னும் வித்தியாச‌மாக‌ இருக்கு. ச‌லாம் மாலிக்கும் என்று சொல்லி புன்ன‌கைத்து க‌ட்டி அணைத்து ந‌ண்ப‌ரின் க‌ன்ன‌த்துட‌ன் த‌ன்னுடைய‌ க‌ன்ன‌த்தை ப‌திந்து ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்கிறார்க‌ள்.



அரேபியா வ‌ந்த‌ புதில் இவ‌ர்க‌ள் ச‌லாம் மாலிக்கும் என்று என்னிட‌ம் சொல்லும் போது நான் அவ‌ர்க‌ளை ஏதோ விசித்திர‌மாக‌ பார்த்து விட்டு சென்ற‌து உண்டு. கார‌ண‌ம் நாம் வ‌ள‌ர்ந்த‌ சூழ்நிலைக‌ள் அப்ப‌டிதான் ந‌ம்மை க‌ட்டிய‌மைத்திருக்கிற‌து. ஒருவ‌ரிட‌ம் பேசுவ‌த‌ற்கு சிரிப்ப‌த‌ற்கும் கார‌ண‌ம் தேடுகிறோம். எல்லோரையும் ந‌ம்மைப்போல‌ எண்ண‌ ம‌றுக்கின்றோம்.

இய‌ந்திர‌த்த‌ன‌மாக‌ சுழ‌ன்று கொண்டிருக்கும் ந‌ம்முடைய‌ சூழ‌லில் புன்ன‌கை என்ற‌ ஒன்றை ம‌ற‌ந்து போனோம் என்றுதான் சொல்ல‌வேண்டும். ந‌ம்மை தின‌மும் ச‌ந்திக்கின்ற‌ ம‌க்க‌ளிட‌மாவ‌து புன்ன‌கைத்து வ‌ண‌க்க‌ம் சொல்லி ந‌ம்முடைய‌ ம‌கிழ்ச்சியை ப‌கிர்ந்து கொள்கிறோமா? இது கேள்வியாக‌ தான் நிற்கின்ற‌தே த‌விர‌ என்னிட‌ம் ப‌தில் இல்லை.

யார‌ப்பா அது!!!!!!!! பின்னூட்ட‌த்தில் வ‌ந்து ஸ்மைலி போட்டுவிட்டு போவ‌து?.. ஹி..ஹி..

குறிப்பு: க‌ட‌ந்த‌ ப‌திவில் நான் எழுதிய‌ பிர‌ச்ச‌னைக்கு க‌ருத்து சொன்ன‌ அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கு என்னுடைய‌ ந‌ன்றிக‌ள். த‌னிம‌ட‌லில் தொட‌ர்பு கொண்டு என‌க்கு ஆறுத‌ல்/அறிவுரை சொன்ன‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் மிக்க‌ வ‌ந்த‌ன‌ம். இன்னும் ப‌த்து நாட்க‌ளே அரேபியாவில் இருப்பேன் என்று நினைக்கிறேன். அத‌னால் தான் இங்குள்ள‌ அனுப‌வ‌த்தை ப‌ற்றி எழுதியுள்ளேன். இன்னும் ஒரு ப‌திவு எழுத‌ முடியுமா? என்று பார்க்கிறேன்.

.

.

Thursday, October 14, 2010

த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌ம்_த‌னிம‌னித‌த் தாக்குத‌ல்.

நான் முந்திய‌ இடுகையில் எழுதிய‌ அதிமேதாவிக‌ளும், கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுப்ப‌வ‌ர்க‌ளும் குடியிருக்கும் கோவில் த‌மிழ் வ‌லைப்ப‌திவாள‌ர் குழும‌ம் என்ப‌தை மிகுந்த‌ வ‌ருத்த‌துட‌ன் தெரிவித்து கொள்கிறேன்..

இதை நீ எப்ப‌டி சொல்லாம், உன‌க்கும் அத‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் என‌ "ப‌ராச‌க்தி" ப‌ட‌ வ‌க்கீல் கேள்விக‌ள் நிறைய‌ இருக்கும்...

"அதில் நானும் பாதிக்க‌ப்ப‌ட்டேன், நேர‌டியாக‌ தாக்க‌ ப‌ட்டேன்" என‌ "ப‌ராச‌க்தி" சிவாஜி வ‌ச‌ன‌ம் போல் நானும் ப‌தில் சொல்லுகிறேன்..

இதோ கேளுங்க‌ள் என் க‌தையை,

ப‌திவுல‌கில் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக‌ சாந்தி என்ற‌ பெண் ப‌திவ‌ரின் பிர‌ச்ச‌னை எல்லாயிட‌ங்க‌ளிலும் எழுத‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே..

இந்த‌ ப‌திவ‌ரின் பிர‌ச்ச‌னைக்கு மூல‌க்கார‌ண‌ம் இந்த‌ த‌மிழ் பிளாக்க‌ர் போர‌ம் தான். அதில் நானும் ஒரு பார்வையாள‌னாக‌ இருந்த‌தால் அங்கு ந‌ட‌ந்த‌ சில‌ பிர‌ச்ச‌னைக‌ள் என‌க்கு தெரியும்...

இந்த‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி வின‌வில் ஒரு க‌ட்டுரை வ‌ருகிற‌து. அதை நானும் போய் ப‌டிக்கிறேன். அதில் ஒரு பின்னூட்ட‌மும் போடுகிறேன். கார‌ண‌ம் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ள் இருந்த‌ போது அவ‌ர்க‌ளை "அக்கா" என்று அழைத்த‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்..

வின‌வில் நான் போட்ட‌ பின்னூட்ட‌ம் எவ‌ரையும் குறிப்பிட்டு போட‌வில்லை, என்னை நானே ப‌ழித்துக் கொண்டேன்..

இர‌ண்டாவ‌து இதே பிர‌ச்ச‌னை ப‌ற்றி முகில‌ன் அவ‌ர்க‌ள் ஒரு ப‌திவு எழுதுகிறார், அந்த‌ ப‌திவில் நான் சில‌ பின்னூட்ட‌ங்க‌ள் போடுகிறேன். இதில் நான் முகில‌னிட‌ம் சில‌ கேள்விக‌ள் வைக்கிறேன். அவ‌ரை த‌ர‌க்குறைவாக‌ அதில் ஒரு வார்த்தை கூட‌ நான் உப‌யோக‌ப் ப‌டுத்த‌வில்லை. அதில் சில‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொன்னார், சில‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌வில்லை, உட‌னே நானும் அவ‌ரிட‌ம் ந‌ன்றி சொல்லிவிட்டு வ‌ந்துவிடுகிறேன்.. அவ‌ரும் அந்த‌ ப‌திவில் அத‌ன் பிற‌கு வேறு எந்த‌ கேள்வியும் என‌க்கு வைக்க‌வில்லை, நானும் அதை ம‌ற‌ந்துவிட்டேன்..

உண்மையில் என்னுடைய‌ ப‌திவை ப‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், நான் இதுவைரையில் எந்த‌வொரு விவாத‌ங்க‌ளிலும் க‌ல‌ந்து கொள்வ‌தும் கிடையாது, எவ‌ருடைய‌ த‌ள‌த்திலும் கும்மி அடிப்ப‌தும் கிடையாது...

அப்ப‌டியிருக்கும் போது முகில‌னிட‌ம் ம‌ட்டும் நான் விவாத‌ம் செய்த‌மைக்கு கார‌ண‌ம், என்னுடைய‌ சில‌ ப‌திவுக‌ளில் அவ‌ரும் வ‌ந்து விவாத‌ம் செய்திருக்கிறார், நானும் அவ‌ருடைய‌ விவாத‌ங்க‌ளுக்கு ப‌திலும் சொல்லியிருக்கிறேன். அந்த‌ உரிமையில் தான் அவ‌ரிட‌ம் சென்று அன்றைக்கு கேள்விக‌ள் வைத்தேன். இல்லையென்றால் க‌ண்டிப்பாக‌ அவ‌ரிட‌ம் நான் கேள்விக‌ள் வைத்திருக்க‌ மாட்டேன்.


ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை முகில‌ன் ம‌ட்டும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து அல்ல‌, அது இரும்புத்திரை அர‌விந்த், ம‌ற்றும் ப‌திவ‌ர் ம‌தார் அவ‌ர்க‌ளும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து என்ப‌தும் என‌க்கு தெரியும், ஆனால் அர‌விந்த் ம‌ற்றும் ம‌தார் என‌க்கு அறிமுக‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுடைய‌ த‌ள‌த்தில் நான் சென்று ஒரு பின்னூட்ட‌ம் போட்ட‌து கூட‌ கிடையாது, அவ‌ர்க‌ளும் என்னுடைய‌ ப‌திவிற்கு பின்னூட்ட‌ம் போட்ட‌து கிடையாது... என‌வே அவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ புரித‌ல் என‌க்கு இல்லாத‌தால் எந்த‌வொரு இட‌த்திலும் இவ‌ர்க‌ளை ப‌ற்றி நான் பேசிய‌து கிடையாது..

இது இப்ப‌டி இருக்க‌, முகில‌ன் ப‌திவு எழுதி ஒரு வார‌ங்க‌ள் க‌ழித்து த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் திடிரென‌ ஒரு ப‌ஸ்ஸின் முக‌வ‌ரியை ப‌கிருகிறார். அந்த‌ முக‌வ‌ரியை சென்று பார்த்தால் நான் ஒரு மாத‌திற்கு முன்பு எழுதிய‌ காமெடி ப‌திவில் ஒரு அடைப்பு குறியில் எழுதிய‌ வாச‌க‌த்தை ம‌ட்டும் எடுத்து போட்டுவிட்டு

http://www.google.com/buzz

"இது ஆணாதிக்க‌மாக‌ தெரிய‌வில்லையா" என்று கேள்வி வைக்கிறார்..

இதை பார்த்த‌ பின்புதான் என‌க்கு தெரிந்த‌து உண்மையில் முகில‌ன் என் மீது வ‌ன்ம‌ம் வைத்திருக்கிறார் என்று, கார‌ண‌ம் மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌திவை நான் எழுதிய‌ நாளில் வ‌ந்து என்னுடைய‌ பேச்சில‌ர் வாழ்க்கையை நினைவு ப‌டுத்தி விட்டீர்க‌ள் என்று சொல்லிவிட்டு போன‌வ‌ர் அப்ப‌டியே இர‌ண்டு வார‌ங்க‌ளில் மாறிப்போனார்..

அந்த‌ ப‌ஸ்ஸின் லிங்க் போர‌த்தில் போட‌ப்ப‌ட‌வுட‌ன் அத‌ற்கும் சில‌ அதிமேதாவிக‌ள் வ‌ந்து கும்மி அடிக்கிறார்க‌ள். நான் க‌டைசியில் சிரித்துவிட்டு வ‌ந்தேன்..

இந்த‌ கும்மி ந‌ட‌க்கும் போது தான் சிரிப்பு போலிஸ் (ர‌மேஷ்) போர‌த்தில் ஒரு இழையை ஆர‌ம்பித்து "போர‌மா?.. போர் ந‌ட‌க்கிற‌ இட‌மா?.." என்று ஒரு கேள்வி வைத்து சில‌ க‌ருத்துக்க‌ளை வைக்கிறார்.. ஆனால் அந்த‌ க‌ருத்துக‌ளும் அதிமேதாவிக‌ளால் எள்ளி ந‌கையாட‌ப்ப‌டுகின்ற‌து.. அதை அவ‌ருடைய‌ ப‌திவில் பார்த்தால் உங்க‌ளுக்கு புரியும்..

இது இப்ப‌டி இருக்க‌..

இர‌ண்டு நாட்க‌ள் முன்னால் முகில‌ன் ப‌ஸ்ஸில் இருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து வ‌ந்து போர‌த்தில் ஒரு புது இழையை தொட‌ங்குகிறார். அதுவும் என்னுடைய‌ பெய‌ர் போட்டு ஒரு கேள்வியும் வைக்கிறார். அந்த‌ ஸ்கிரீன் ஷாட் ப‌திவ‌ர் சாந்தியின் ப‌ஸ் முக‌வ‌ரியுடைய‌து. அதில் த‌லையும் வாலும் புரியாம‌ல் சில‌ வாச‌க‌ங்க‌ள் இருக்கிற‌து.. அதை ப‌ற்றி நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டுமாம்? என்ன‌வொரு கொடுமை?.. உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு எல்லாம் என்னிட‌ம் க‌ருத்து கேட்பார்க‌ள் போல் இருக்கிற‌து...

ஒரு பிர‌ச்ச‌னையை ப‌ற்றி கேள்வி கேட்டால் அந்த‌ பிர‌ச்ச‌னைக்கு ப‌தில் சொல்லாம‌ல், வேறோரு பிர‌ச்ச‌னையை காட்டி அத‌ற்கு ஏன் நீ கேள்வி கேட்க‌வில்லையென்று என்னிட‌ம் கேட்கிறார்க‌ள்?.. என்ன‌ ப‌தில் சொல்வ‌து?.. (கேள்வி கேட்ப‌த‌ற்கு கூட‌ உரிமை கிடையாது, அதுவும் மேதாவிக‌ள் தான் முடிவு செய்வார்க‌ளாம்.. என்ன‌ கொடுமை சார் இது..)

ப‌ர‌வாயில்லை..

முகில‌னின் கேள்விக்கு நான் ப‌தில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இரும்புத்திரை அர‌விந்த் த‌ங்கிலிஷ் என்ற‌ வாளால் சுழ‌ற்றுகிறார்... (வாந்தியெடுக்கிறார்)

அவை உங்க‌ள் பார்வைக்கு,

From: aravind

Date: 2010/10/11


ayya sombu thooki stephen

ellorum pesi thaane ellaam seireenga appuram enna.ini engayaavathu ponnunu vantha sombu thooki raasa appuram irukku

unnai pathi evandaa eluthinaan paadu..

vaa unakku venumnaa vanthu kuni

ini engayaavathu pesu pinja seruppaalaye unnai adikkirendaa paadu


en naan address thanthaa en veettukku vanthu sombu thookuviyaadaa badu

endaa unakkum oru thadavai sonna puriyaathaa.address thaa.neengalum aal vaichu thaane kosham poduveenga.athe paaniyil un sombai naan udaikiren.ithaiyum anga poi solli alu.


saridaa sombu thooki..ini engavaathu pombalaikku aatharavaa pesathe.nee pathilukku ethai ethirpaakkuranu theriyala


(இந்த‌ வார்த்தைக‌ளை த‌மிழ்ப்ப‌டுத்த‌ கூட‌ என‌க்கு விருப்ப‌ம் இல்லை, அவ்வ‌ள‌வு வ‌க்கிர‌ங்க‌ளும், ஆபாச‌மும் இருக்கிற‌து, ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌லாம்)


அர‌விந்த் சுழ‌ற்றிய‌ வாளில் வ‌ழியும் குருதியை ர‌சிக்கிறார், சொல்ல‌த் துடிக்குது ம‌ன‌சு ம‌தார்..

அவை உங்க‌ள் பார்வைக்கு,

மதார் பட்டாணி to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


@முகிலன் ,

அவர் பேசட்டும் விடுங்க என்னால பேச முடியல .இவ்ளோ கீழ்த்தரமா பேசிட்டு . தப்பா பேசினதுக்கு எங்கே ஆதாரம் என்று கேட்டாங்களே இதுக்கு மேல தப்பா எங்கேயும் பேச முடியும் ?


வாள் சுழ‌ற்ற‌ அடித்த‌ள‌ம் அமைத்த‌ முகில‌ன் இப்போது ம‌ன்னிப்பு கேட்டு சுப‌ம் போடுகிறார்..

அதுவும் உங்க‌ள் பார்வைக்கு,

Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அதே தான் மணிஜி. இந்த இழையை ஆரம்பித்ததற்காக நான் குழும உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மாடரேட்டர் இத்திரியை நீக்கிவிட்டால் மகிழ்வேன்.



என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,
Dhinesh Kumararaman(முகிலன்)


சொல்ல‌ ம‌ற‌ந்திட்டேன் இவ்வாறு ஒருவ‌ர் வாந்தியெடுத்து கொண்டிருக்கும் போது முகில‌ன் க‌ண்டிக்கிறார், அதை சொல்லாம‌ல் விட்டுவிட்டால் சாமி குத்த‌ம் ஆகிடும்.

அதுவும் உங்க‌ள் பார்வைக்கு,

Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அரவிந்த், ப்ளீஸ், தகாத வார்த்தைகள் இங்கே வேண்டாம். உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகள் நம் கோபத்தில் உள்ள நியாயத்தை மறைத்துவிடும்.


இவ்வ‌ள‌வு அசிங்க‌மான‌ வார்த்தைக‌ளை உப‌யோக‌ப்ப‌டுத்தி என்னை ஒருவ‌ர் திட்டுகிறார், போர‌த்தில் இருக்கும் எவ‌ர் ஒருவ‌ரும் அர‌விந்தை த‌டுத்து நிறுத்த‌வில்லை..

இந்த‌ பிர‌ச்ச‌னையில் ம‌ன‌முடைந்த‌ நான் என்னுடைய‌ த‌ர‌ப்பு நியாய‌ங்க‌ளை(யாருக்கு வேணும்?..) எழுதி போர‌த்தில் புது இழையில் போடுகிறேன், தீர்வு சொல்லுங்க‌ள் என்று..

இந்த‌ இழையிலும் எவ‌ர் ஒருவ‌ரும் அர‌விந்துக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ங்க‌ளை ப‌திவு செய்ய‌வில்லை, மாறாக‌ சில‌ மேதாவிக‌ள் மீண்டும் வாந்தியெடுத்தார்க‌ள், சில‌ அதிமேதாவிக‌ள் ம‌ற‌ப்போம், ம‌ன்னிப்போம் என்றார்க‌ள், அதைவிட‌ சில‌ மெகா மேதாவிக‌ள் கெட்ட‌ வார்த்தையை க‌ண்டுபிடித்த‌வ‌னை தான் க‌ண்டிக்க‌ வேண்டும் என்று சொன்னார்க‌ள்... என்ன‌வொரு நியாமான‌ வார்த்தைக‌ள்... கார‌ண‌ம் ந‌ம‌க்கு ஆத‌ர‌வாக‌ பேச‌த்தான் குழுக்க‌ள் கிடையாதே?..

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ இர‌ண்டு இழையின் முழுவிப‌ர‌ங்க‌ளையும் என்னுடைய‌ ப‌ஸ் முக‌வ‌ரியில் ஏற்றியுள்ளேன், விருப்ப‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் பார்க்க‌லாம்..

http://www.google.com/profiles/101916289514179757488#buzz

மேலே ந‌ட‌ந்த‌ விவாத‌த்தில் என‌து ம‌ன‌சாட்சி கேட்ட‌ சில‌ கேள்விக‌ள்..

1) நான் யாருக்கு பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும் என்ப‌தை யார் முடிவு செய்ய‌ வேண்டும்?..

2) எந்தெந்த‌ விவாத‌ங்க‌ளுக்கும், ப‌திவுக‌ளுக்கும் நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டும் என்ப‌தை யார் முடிவு செய்வ‌து? ..

3) உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னை எல்லாவ‌ற்றிற்கும் நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டும் என‌ தீர்மானிக்க‌ நீங்க‌ள் யார்?

4) ஒரு ப‌திவில் வைத்த‌ கேள்விகளுக்கு ப‌தில் சொல்லாம‌ல், அதை உங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ இட‌ங்க‌ளில் கொண்டு போய் விவாதிப்ப‌தின் ம‌ர்ம‌ம் என்ன‌?..

5) இந்த‌ பிர‌ச்ச‌னையில் என‌க்கும் முகில‌னுக்கும் தான் விவாத‌ம், ஆனால் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம் ஆஜ‌ராக‌ கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுப்ப‌த‌ன் நோக்க‌ம் என்ன‌?..

6) உண்மையில் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இருந்தால் தார‌ள‌மாக‌ நாக‌ரீக‌மாக‌ வைக்க‌லாமே!!.. அதை விட்டுவிட்டு அசிங்க‌மாக‌ பேசுவ‌த‌ன் நோக்க‌ம் என்ன‌?.. ஒருவேளை நானும் த‌வ‌றாக‌ பேசிவிட்டால் அதை வைத்து க‌ம்பு சுத்த‌லாம் என்ப‌துதான் உங்க‌ள் நோக்க‌மா?..

இப்போது நீங்க‌ள் என்னுடைய‌ முந்தைய‌ ப‌திவை ப‌டித்தீர்க‌ள் என்றால் ஒவ்வொரு வார்த்தைக்கும் விடை கிடைக்கும்..

1) இந்த‌ பிர‌ச்ச‌னையை இங்கு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம், த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் என்ன‌ ந்ட‌க்கிற‌து என்ப‌தை அனைவ‌ரும் அறிந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌தும் தான்..

2) குழு அர‌சிய‌ல் எந்த‌ அள‌வு ப‌திவுல‌க‌த்தில் வேருன்றி இருக்கிற‌து என்ப‌தை சொல்ல‌ வேண்டும் என்ப‌தும்..

3) புதிதாக‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இதுபோன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளில் மாட்டிக்கொண்டு ம‌ன‌ உளை‌ச்ச‌ல் அடைய‌க் கூடாது என்ப‌தும்..

4) இந்த‌ ப‌திவை எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம் உங்க‌ளிட‌ம் சொல்லி அனுதாப‌ம் வாங்க‌ வேண்டும் என்று துளியும் என‌க்கு விருப்ப‌ம் கிடையாது. என‌து ந‌ட்புக‌ள் சில‌ர் இதை நீங்க‌ள் வெளியில் சொன்னால் தான் மேலும் எவ‌ரும் இது போல் பிர‌ச்ச‌னையில் மாட்டாம‌ல் இருப்பார்க‌ள் என்று கேட்ட‌தாலும்..

குறிப்பு: இணைய உலகில் என்னைப் போல உலகம் சுற்றும் தமிழர்களுக்கு சொந்த நாட்டின் நினைவோடு இளைப்பாறுதல் என்பது மகிழ்ச்சியான விசயம். இது எனக்கு மட்டுமல்ல ஊரில் இருக்கும் என் குடும்பத்தாருக்கும் கூட ஒரு இனிய இணைப்பாக விளங்குகிறது. ஆனால் இத்தனை நாட்கள் பதிவுலகில் மென்மையான சுபாவத்தோடு மரியாதையோடும் செயல்படும் என்னை தமிழ் வலைப்பதிவாளர் குழுமத்தில் இருக்கும் சில கடிநாய்கள் கடித்து குதறியிருக்கின்றன.

நாட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் அதில் நான் தலையிடவேண்டுமென்று விரும்பினால் தலையிடுகிறேன். அதுதான் இந்த அநாகரீக மனிதர்களுக்கு பிடிக்கவில்லை. இணையம் என்பது நிழல் உலகம் என்பதால் க‌ணிப்பொறியின் முன் ஊளையிடுகிறார்கள். இதுவே எங்கள் கிராமத்து பக்கம் நடந்திருந்தால் நடப்பது வேறு. இந்த கோழைகள் எவரும் நேரில் பேசுவதற்கு வரமாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆயினும் இவர்களை உரிய நேரத்தில் உரிய முறையில் என்றாவது ஒரு நாள் நேரில் எதிர்கொள்வேன்.

என்னை தாகாத வார்த்தைகளால் குழுமத்தில் அரவிந்தும் அவரது அடிப்பொடிகளும் கடித்த போது ஓரிருவரைத் தவிர எவரும் அதை கண்டிக்க வரவில்லை. எனவே கடித்தவர்களை விட அதை வேடிக்கை பார்த்து இரசிக்கும் அநாகரிகத்தையும் குழுமத்தில் கண்டேன். இத்தகையவர்களுடன் இவ்வளவு நாட்கள் நானும் குழும‌த்தில் இருந்தேன் எனபதை நினைத்து பார்த்தால் குற்ற உணர்வாக இருக்கிறது.

கொள்கைக்காக ஒரு குழுவில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் என் குழுவைச் சேர்ந்தவனை நீ ஆதரிக்க வில்லை என்று இவர்கள் என்னைக் குறிவைக்கிறார்கள். இதையே தொடர்ந்து பதிவுகளாலும், விவாதங்களாலும் செய்து வருகிறார்கள். இந்த மன விகாரம் படைத்தவர்களை எழுதியே பேசியோ விவாதித்தோ திருத்த முடியாது என்பது எனது அனுபவம். என்ன செய்யலாம் என்பதை நண்பர்களிடம் கேட்கிறேன்.

இந்த விசயகங்களினால் நான் வருந்தினேன். ஆனால் அஞ்சவில்லை. கீ போர்டில் எழுதவதைத்தாண்டி வேறு ஒன்றும் உடனடியாக செய்ய முடியவில்லை என்ற க‌வ‌லை என‌க்கு உண்டு. இந்த சாக்கடை அனுபவத்திலிருந்து இந்த சாக்கடையை எழுத்துக்களால் உற்பத்தி செய்யும் மனித விலங்குகளை நாம் என்றைக்கு வெளியேற்றுகிறோமோ அன்றுதான் இணையம் உற்சாகமானதாக இருக்குமென்று தோன்றுகிறது. அந்த சுத்தப்படுத்தும் வேலையை நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து செய்வேன்.


ஏற்க‌ன‌வே த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் உள்ள‌ கொடுமைக‌ள் தாங்காம‌ல் வெளியேறிய‌வ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ளும்.

1) கே.ஆர்.பி.செந்தில் அண்ண‌ன்

2) சிரிப்பு போலிஸ் ர‌மேஷ்

நானும் இன்றில் இருந்து த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் இருந்து வில‌வி விட்டேன், அத‌ன் மாட‌ரேட்ட‌ர் கேபிள் ச‌ங்க‌ர் அவ‌ர்க‌ளுக்கு மெயில் அனுப்பி விட்டேன்.. த‌ய‌வு செய்து என்னை நீக்கி விடுங்க‌ள் என்று இத‌ன் மூல‌மும் தெரிவித்து கொள்கிறேன்.

Wednesday, October 13, 2010

ப‌திவுல‌கில் அதிமேதாவி ஆக‌ வேண்டுமா?..

1) ப‌திவு எழுதுப‌வ‌ர்க‌ளில் யாருக்கெல்லாம் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும், எப்ப‌டி போட‌ வேண்டும் என்ப‌தை நீங்க‌ள் தான் முடிவு செய்வீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி..

2) எப்போதும் ஒரு கூட்ட‌த்தை த‌ன்னிட‌ம் வைத்து கொண்டு, ஒவ்வொரு ப‌திவுக‌ளாக‌ சென்று கெட்ட‌ வார்த்தைக‌ளால் வாந்தியெடுக்க‌ தெரிந்தால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி..

3) அதிலும் குறிப்பாக‌ ப‌திவுக‌ளில் தான் வாந்தியெடுத்த‌து போதாது என்று, வ‌ழியில் போகிற‌வ‌னையும் பிடித்து வ‌ந்து வாந்தியெடுக்க‌ வைப்பேன் என்று சொல்வீர்க‌ளானால் நீங்க‌ள் தான் சூப்ப‌ர் அதிமேதாவி..

4) ப‌திவுக‌ளில் வாந்தியெடுப்ப‌வ‌ர்களை, ஏன் இப்ப‌டி வ‌ந்து வாந்தியெடுக்கிறாய் என்றால், உல‌கில் இதுவ‌ரை வாந்தியெடுத்த‌வ‌ர்க‌ளில் லிஸ்டை கையில் வைத்து கொண்டு இவ‌ர்க‌ளையெல்லாம் நீ கேட்க‌வில்லை, அப்ப‌டியானால் என்னை ம‌ட்டும் ஏன் கேட்கிறார் என்று கேட்பீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி..

5) உங்க‌ளின் ப‌திவில் உள்ள‌ த‌வ‌றை ஒருவ‌ர் சுட்டி காட்டுகிறார், அது ச‌ரியாக‌ ப‌டுகிற‌து. ஆனால் அதை இவ‌ன் எப்ப‌டி கேட்க‌லாம் என்று, சுட்டிக்காட்டிய‌ ந‌ப‌ரின் முந்த‌யை காமெடி ப‌திவின் ஒரு வ‌ரியை எடுத்துக் கொண்டு ப‌ஸ்ஸில் ஒட்டி ஊர் ஊராக‌ சென்று உங்க‌ளை நீங்க‌ளே அசிங்க‌ ப‌டுத்தி கொள்வீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி...

6) த‌ன்னுடைய‌ ஒரு ப‌திவில் த‌வ‌று செய்துவிட்டு, அந்த‌ த‌வ‌றை ப‌ற்றி அந்த‌ ப‌திவில் கேள்விக‌ள் வைத்தால் அத‌ற்கு ப‌தில் சொல்லாம‌ல், த‌ன்னுடைய‌ மேதாவி கும்ப‌ல் கூட்ட‌மாக‌ இருக்கும் இட‌த்தில் கூட்டி வைத்து கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுக்க‌ வைத்தால் நீங்க‌ள் தான் அதிமேதாவி..

7) குறிப்பாக‌ ந‌ன்றாக‌ ப‌திவு எழுதி கொண்டிருப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி புனைவு எழுத‌ தெரிந்திருக்க‌ வேண்டும், அந்த‌ புனைவில் த‌ன்னுடைய‌ க‌ற்ப‌னை குதிரையை ஓட‌ விட‌க்கூடாது, ப‌ற‌க்க‌விட‌ வேண்டும்.. அப்ப‌டி செய்தால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி...

8) புனைவை எழுதிவிட்டு அத‌ற்கு ச‌ரித்திர‌ கால‌த்தில் இருந்து விள‌க்க‌ம் கொடுக்க‌ தெரிந்திருக்க‌ வேண்டும். அப்ப‌டி விள‌க்க‌ம் கொடுக்க‌ உங்க‌ளுக்கு தெரியுமானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி...

9) விவாத‌ம் செய்யும் போது கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுக்க‌ உங்க‌ளுக்கு தெரிந்தால் நீங்க‌ள் அதிமேதாவி.. ஆனால் அந்த‌ கெட்ட‌ வார்த்தைக்கும், "கோப‌த்தில் பேசிவிட்டேன்" என்று விள‌க்க‌ம் கொடுக்க‌ நீங்க‌ள் த‌யாராக‌ இருந்தால் நீங்க‌ள் தான் மெகா அதிமேதாவி...(ஒரு வேளை கோப‌த்தில் சாப்பிடும் போது சோறுக்கு ப‌தில் வேறு ஏதாவ‌து சாப்பிடுவார்க‌ளோ)

10) அடுத்த‌வ‌ர்க‌ள் மீது க‌ல்லெறிந்து விளையாடுவ‌து போல், ப‌திவு எழுதி காய‌ப்ப‌டுத்துவீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அதிமேதாவி.. இப்ப‌டி க‌ல்லெறிந்து விளையாடும் கூட்ட‌திற்கு நீங்க‌ளும் சென்று ஊக்க‌ப்ப‌டுத்தினால் நீங்க‌ள் ராய‌ல் அதிமேதாவி.. இப்ப‌டி அவ‌ர்க‌ளை ஊக்க‌ ப‌டுத்தாவிட்டால் நீங்க‌ள் தான் அடிமுட்டாள் ப‌திவ‌ர்.. :)

# எல்லாம் சொல்லிவிட்டு இதை சொல்லாம‌ல் போனால் எப்ப‌டி?... வித‌வித‌மா ம‌ன்னிப்பு கேட்க‌ தெரிய‌ வேண்டும்.. அப்ப‌டி தெரிந்தா நீங்க‌ள் தான் அதிமேதாவி..

நான் அடிமுட்டாள் ப‌திவ‌ராக‌ இருக்க‌ விருப்ப‌ப‌டுகிறேன், அப்ப‌ நீங்க‌ எப்ப‌டினு சொன்னீங்க‌னாதான் தெரியும்... :))))

குறிப்பு: இத‌ற்கு செய்வினை, செய‌ப்பாட்டுவினைக‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌..

Sunday, September 26, 2010

வெளிநாடு வாழ்க்கை_மீண்டார்க‌ளா?..வீழ்ந்தார்க‌ளா?..

சௌதி அரேபியாவிற்கு கட்டடத்தொழில், தோட்ட வேலை மற்றும் கூலிவேலை என்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தை சார்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள், கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களில் இருந்து இவர்கள் மீண்டார்களா?.. இல்லை மேலும் கஷ்டத்தில் விழுந்தார்களா? என்பதை நான் பார்த்த சில சம்பவங்களை கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.

சௌதி அரேபியாவில் இருந்து இந்த வேலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் விசாக்களுக்கு சம்பளம் 600 ரியாலில் இருந்து 1200 ரியால் வரை இருக்கும் (8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை). இந்த விசாவை வாங்கிய லோக்கல் டிராவல் ஏஜன்ட்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சரியான தகவல்களை சொல்லாமல் ஒவ்வொரு விசாவையும் லட்ச ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு வாங்கும் இளைஞர்களும் வெளிநாடு மோகத்தில் கேள்விகளை ஏதும் கேட்காமல் வாங்கிவிடுகிறார்கள்.

வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களில் பெரும்பாலனர்வர்கள் ஊரில் ஊதாரித்தனமாக சுற்றுபவர்களும், ஏதாவது பிரச்சனையில் மாட்டியவர்களுமாகத் தான் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வெளிநாட்டிற்கு போனாலாவது திருந்திட மாட்டானா என்று வீட்டில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த அளவுப் பணத்தை புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். இதில் சிலருடைய அம்மா/மனைவியின் தாலி செயின்கள் கூட விற்பனை அல்லது அடகுக் கடைக்குப் போவது மறுக்க இயலாது.

இவ்வாறு சௌதி வருபவர்களுக்கு முதலில் அறிமுகம் ஆகிறவர் கபில். இவர்தான் விசாவிற்கு சொந்த காரர், வருபவர்களை ஸ்பான்சர் செய்து அழைத்திருப்பவர். இவர் லோக்கல் அரபியாக இருப்பார். இவர்கள் கம்பெனி வைத்திருப்பவர்களாகவும் இருப்பார் அல்லது வேறு கம்பெனிகளுக்கு ஆட்களை சப்ளை பண்ணுபவராகவும் இருப்பார்.

சௌதி வந்தவுடன் அனைவருடைய பாஸ்போர்ட்டும் முதலில் கபில் கைக்கு போய்விடும். பின்னர் இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளேன் என்பதை அடையாளப்படுத்த ஒரு அட்டை கொடுக்கப்படும், அதன் அரேபிய சொல் இக்காமா(IQAMA). இந்த அடையாள அட்டை இருந்தால் தான் சௌதியில் சுதந்திரமாக சுற்றமுடியும். வாகனத்தில் அல்லது வெளியில் செல்லும் போது சௌதி போலீசார் பிடித்தால் முதலில் கேட்பது இந்த இக்காமாவை தான். வங்கியில் பணம் அனுப்ப வேண்டுமானால் கூட இந்த இக்காமாவை தான் கேட்பார்கள்.

இந்த இக்காமா சௌதி அரசால் வழங்கப்படும். இதை தருவதற்கு முன்பு நம்முடைய கைரேகை முதல் ஜாதகம் வரை அனைத்தும் அரசாங்க கோப்புகளில் பதிக்கப்பட்டுவிடும். பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கொடுக்கப்பட மாட்டாது. இக்காமா ம‌ட்டும் தான் உங்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும். சில‌ க‌பில்க‌ள் இந்த‌ இக்காமாவையும் வாங்கி வைத்து கொள்வார்க‌ள்.

உங்க‌ளுடைய‌ க‌பில் சொந்த‌மாக‌ க‌ம்பெனி வைத்திருந்தால் அவ‌ருடைய‌ க‌ம்பெனியில் நீங்க‌ள் வேலை செய்வீர்க‌ள். சில‌ க‌பில்க‌ள் மேன் ப‌வ‌ர் ச‌ப்ளை ம‌ட்டும் செய்வார்க‌ள். அவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு வேறு க‌ம்பெனியில் வேலை வாங்கி த‌ருவார்க‌ள். வேலை நேர‌ம் 10-ல் இருந்து 12 ம‌ணி நேர‌ம் இருக்கும்.

த‌ங்குவ‌த‌ற்கு ரூம் உங்க‌ளுக்கு கொடுத்துவிடுவார்க‌ள். ஒரு அறையில் நான்கில் இருந்து ஐந்து பேர் இருப்பார்க‌ள். அனைவ‌ரும் ச‌மைத்து தான் சாப்பிடுவார்க‌ள்.(ச‌மைய‌ல் செல‌வு + மொபைல் செல‌வு + இத‌ர‌ செல‌வுக‌ள் எல்லாம் சுமார் 300‍-ல் இருந்து 500 ரியால் செல‌வாகும், மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌ள‌த்தில் இந்த‌த் தொகை போனால் மீத‌ம் எவ்வ‌ள‌வு வ‌ரும் என்ப‌தை ஊகித்து கொள்ளுங்க‌ள்)

வெளிநாட்டிற்கு வ‌ரும் பெரும்பாலான‌ர்வ‌ர்க‌ள் முத‌லில் கொடுக்கும் ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னுக்கு வாங்கிய‌தாக‌ தான் இருக்கும். அத‌ற்கு வ‌ட்டியை கொடுக்க‌ தான் இவ‌ர்க‌ளுடைய‌ ச‌ம்ப‌ள‌ம் இருக்கும். சில‌ர் ஓவ‌ர் டைம் போன்ற‌ வேலைக‌ள் பார்த்து ஏதும் மீத‌ம் பிடித்தால் உண்டு. சௌதியில் உள்ள‌ த‌ட்ப‌வெப்ப‌ நிலைக‌ள் அனைவ‌ரும் அறிந்த‌தே. வெயில் என்றால் ம‌ண்டைய‌ பிள‌ந்துவிடும், குளிர் என்றால் மூக்கில் ர‌த்த‌ம் வ‌ழிய‌ செய்துவிடும். இந்த‌ சூழ்நிலைக‌ள் எல்லாம் ச‌மாளிக்க‌ வேண்டும்.

இவ‌ர்க‌ளுக்கு வேலை கொடுக்கும் க‌ம்பெனியில் ச‌ரியாக‌ வேலையிருந்தால் ப‌ர‌வாயில்லை. வேலையில்லையென்றால் க‌பில் உங்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் க‌ம்பெனியில் இருந்து த‌ர‌மாட்டார். உங்க‌ளிட‌ம் "நீங்க‌ள் வெளியில் யாரிட‌மாவ‌து வேலை செய்து கொள்ளுங்க‌ள், ஆனால் என‌க்கு மாத‌ம் 200‍-ல் இருந்து 300 ரியால் கொடுத்து விட‌ வேண்டும்" என்று சொல்லுவார். வெளியில் வேலை நீங்க‌ள் தேடி கொள்ள‌ வேண்டும்.

இத‌ற்கு நீங்க‌ள் உட‌ன்ப‌டாம‌ல் என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்க‌ள் என்றால் க‌பில் ம‌றுத்துவிடுவார். டிக்க‌ட்டிற்கு நீயே ப‌ண‌ம் பார்த்து கொள். உன்னுடைய‌ பாஸ்போர்ட் என் கையில் இருக்கிற‌து, அது வேண்டுமானால் இவ்வ‌ள‌வு ப‌ண‌ம் கொடுத்துவிட்டு செல் என்று ஒரு பெரிய‌ அமௌண்டை சொல்லுவார்க‌ள்.(இத‌ற்காக‌வாவ‌து நீங்க‌ள் வேலை செய்ய‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுவீர்க‌ள்). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.

க‌ம்பெனியில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளுக்கு முத‌ல் மூன்று, நான்கு மாத‌ங்க‌ள் சொல்லிய‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்க‌ப்ப‌டும். பின்பு ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌திலும் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவார்க‌ள். ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னில் வ‌ந்த‌ ஒருவ‌னுக்கு ச‌ம்ப‌ள‌ம் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌ட‌ வில்லையென்றால் பெரிய‌ ம‌ன‌க‌ஷ்ட‌ம் வ‌ந்து சேரும். மேலும் இவ‌ர்க‌ள் த‌ங்க‌வைக்க‌ப் ப‌ட்டிருக்கும் இட‌ங்க‌ள் பெரும்பாலும் கிராம‌மாக‌த் தான் இருக்கும். க‌பிலின் உத‌வியில்லாம‌ல் இவ‌ர்க‌ள் ந‌க‌ர‌ங்க‌ளுக்கு வ‌ர‌முடியாது. என‌வே இவ‌ர்க‌ளின் க‌ஷ்ட‌ங்க‌ளையும் பிற‌ருட‌ன் ப‌கிந்து கொள்ள‌வும் முடியாது.

ச‌ரியாக‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்காம‌ல் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவ‌தால் கிடைக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் க‌பிலின் பிடியில் இருந்து இவ‌ர்க‌ள் வெளியில் சாடிவிடுவார்க‌ள். இவ‌ர்க‌ளிட‌ம் எந்த‌ பேப்ப‌ரும் இருக்காது(பாஸ்போர்ட், இக்காமா போன்ற‌வை). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.

ஒரு க‌ம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்க‌ள். ஆனால் அங்கு குறைவான‌ ச‌ம்ப‌ள‌ம் த‌ருகிறார்க‌ள், வெளியில் வேலை செய்தால் அதிக‌மாக‌ ச‌ம்பாதிக்க‌லாம் என்று ஆசைப்ப‌ட்டு வெளியில் சாடும் ஒரு கூட்ட‌மும் இருக்கிற‌து. இவ‌ர்க‌ளிட‌மும் எந்த‌வித‌ பேப்ப‌ரும் இருக்காது.



இவ்வாறு எந்த‌வித‌ பேப்ப‌ர்க‌ளும் இல்லாம‌ல் எவ்வாறு இங்கு ச‌மாளிக்கிறார்க‌ள்?. எப்ப‌டி இந்தியா வ‌ருகிறார்க‌ள் என்ப‌தை அடுத்த‌ ப‌திவுக‌ளில் எழுதுகிறேன்.

10 பேர் சௌதியில் வேலை செய்கிறார்க‌ள் என்றால் அதில் 6 பேர் நான் மேலே சொன்ன‌ மூன்று பிர‌ச்ச‌னைக‌ளில் மாட்டுப‌வ‌ர்க‌ள். அப்ப‌டியானால் எத்த‌னை ச‌த‌வீத‌ம் என்று நீங்க‌ளே க‌ண‌க்கிட்டு பாருங்க‌ள்.

-------------தொட‌ரும்--------------

குறிப்பு: இந்தியாவிற்கு வ‌ரும் கால‌ம் நெருங்கிவிட்ட‌தால் வேலை கொஞ்ச‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌து. அத‌னால் தொட‌ர்ச்சியாக‌ ப‌திவுக‌ள் எழுத‌முடிய‌வில்லை. நேர‌ம் கிடைக்கும் போது க‌ண்டிப்பாக‌ ப‌கிருவேன்.

Wednesday, September 15, 2010

பேச்சில‌ர் வாழ்க்கையும்_வாட‌கை வீடும்

பேச்சில‌ரா இருந்தா சென்னையில் வீடு வாட‌கைக்கு கிடைப்ப‌து க‌ஷ்ட‌ம் என்று சொல்வ‌து உண்டு. ஆனால் சில‌ ஹ‌வுஸ் ஓன‌ர்க‌ள் இவ‌ர்க‌ளுக்கு கொடுப்ப‌தில் ஆர்வ‌மாக‌‌ இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ள் ஆர்வ‌மாக‌ இருப்ப‌த‌ற்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு.

1) முன்பு குடியிருந்த‌வ‌ர்க‌ளின் வாட‌கையை விட‌ அதிக‌மாக‌ சொன்னால், கார‌ண‌ம் ஏதும் கேட்காம‌ல் ச‌ரி என்று த‌லையை ஆட்டுவ‌து. (ந‌ம்ம‌ளை வீடு பார்க்க‌ கூட்டி வ‌ருகிற‌வ‌ன் ஒரு ப‌ய‌ம் காட்டித்தான் கூட்டி வ‌ருவான், உல‌க‌த்துல‌ வேற‌ யாருமே பேச்சில‌ருக்கு வீடு கொடுக்க‌ மாட்டாங்க‌. இவ‌ங்க‌ ம‌ட்டும் தான் கொடுப்பாங்க‌, காசு கொஞ்ச‌ம் ஜாஸ்தியா இருக்குமுனு)

2) வ‌ட‌க்கு வாச‌ல், கிழ‌க்கு வாச‌ல் என்ற‌ முறைவாச‌ல்க‌ளுக்கு நீங்க‌ளே செய்து கொள்ளுங்க‌ள் என்று அவ‌ர்க‌ளிட‌ன் பொறுப்பை ஒப்ப‌டைத்து ப‌ண‌ம் கொடுத்து விடுவ‌து. (இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை க‌ட்டிக்கொண்டு கோல‌மா போட‌ முடியும்)

3) த‌ண்ணீர், கார்ப்ப‌ரேச‌ன், மின்சார‌ம் என்று எல்லாவ‌ற்றிற்கும் சேர்த்து ஒரு மொத்த‌ தொகையை மாத‌ம் மாத‌ம் கேட்டால் வாயை மூடிக்கொண்டு கொடுத்துவிடுவ‌து.(காலையிலே தூக்க‌ம் எழுவ‌தே லேட்டாக‌ தான் இருக்கும். அந்த‌ நேர‌ம் த‌ண்ணி வ‌ர‌வில்லை, பாத்ரூம் ச‌ரியில்லை என்று நிற்க‌முடியுமா? இது அவ‌ங்க‌ளுக்கும் தெரியும்.)

4) காலையில் குடும்ப‌த்துட‌ன் குடியிருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் எழுந்து ஆபிஸ் கிள‌ம்பிய‌ பிற‌குதான் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ப‌டுக்கையில் இருந்து எழுந்து த‌லையில் த‌ண்ணீர் தெளித்துவிட்டு ஆபிஸுக்கு ஓடுவ‌து. லீவு நாளாக‌ இருந்தால் சொல்ல‌வே வேண்டாம் இர‌வு முழுவ‌தும் டீவி/க‌ம்பியூட்ட‌ர் முன் க‌ண்விளித்துவிட்டு ப‌க‌லில் ந‌ல்லா குற‌ட்டை விட்டு தூங்குவ‌து.

5) சுவ‌ரில் ஆணி அடித்துவிடுவார்க‌ள் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை. கார‌ண‌ம் அறையில் சாமி ப‌ட‌ங்க‌ளோ அல்ல‌து அம்மா, அப்பா ப‌ட‌ங்க‌ளோ தொங்க‌விடுவ‌து இல்லை. அப்ப‌டியே ப‌ட‌ங்க‌ள் இருந்தாலும் அது ந‌டிக‌ர் அல்ல‌து ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளாக‌த் தான் இருக்கும். அவை அனைத்தும் செல்லோடேப் கொண்டுதான் ஒட்டுவோம். அத‌னால் எளிதில் அவ‌ற்றை அப்புற‌ப்ப‌டுத்த‌ முடியும்.

6) த‌ண்ணீர் செல‌வாகிடும் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை, காலையில் வீட்டை விட்டு கிள‌ம்பி போனால் இர‌வுதான் வீட்டிற்கு வ‌ருவ‌து. துணிக‌ள் துவைப்பார்க‌ளா? என்று எல்லோருக்கும் ட‌வுட் இருக்கும். இத‌ற்கென்றே நான்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி வைத்திருப்போம். மூன்று மாத‌திற்கு ஒரு த‌ட‌வை ஊருக்கு போகும் போது துவைத்தால் போதும் என்று.

7) வேலையை முடித்துவிட்டு இர‌வில் வீட்டிற்கு வ‌ந்து, போர் அடிக்குதே என்று மாடிப்ப‌க்க‌ம் போய் நின்று ஒரு த‌ம்மை போட‌லாம் என்று ப‌த்த‌வைக்கும் போதுதான் ஹ‌வுஸ் ஓன‌ர் மேலே வ‌ருவார். என்ன‌ த‌ம்பி இங்க‌ தான் இருக்கீங்க‌ளா? என்று மொக்கைப்போட‌ தொட‌ங்கிவிடுவார். அப்ப‌டியே நாம‌ளும் ந‌ம்ம‌ க‌தையை கேக்க‌ ஒருத்த‌ர் சிக்கிட்டாரு நினைச்சி மொக்கை போட‌ ஆர‌ம்பிச்சிடுவோம். அவ‌ரு ந‌ம்ம‌கிட்ட‌ க‌தை கேக்குறேன் என்கிற‌ பேர்ல‌ ஊர்ல‌ என்ன‌ ப‌யிர் விளையுது, அங்க‌ என்ன‌ ஸ்வீட் பேம‌ஸு, உங்க‌ வீட்ல‌ என்ன‌ ப‌ழ‌ம் எல்லாம் இருக்குனு வாயில‌ இருந்து புடிங்கிடுவாரு. நாம‌ளும் க‌தைதானே என்று ப‌க்க‌த்து வீட்ல‌ விளையுற‌து எல்லாம் எங்க‌ வீட்டுல‌ விளையுதுனு ஜ‌ம்ப‌ம் அடிச்சி வைப்போம். இப்ப‌டி சொல்லுற‌தால‌ அப்ப‌ ஒண்ணும் பிர‌ச்ச‌னை இருக்காது, ஆனா தீபாவ‌ளி, பொங்க‌லுனு ஊருக்கு போகும் போது வீட்டை பூட்டி சாவியை ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் கொடுக்கும் போதுதான் பிர‌ச்ச‌னையே. த‌ம்பி இங்க‌ இந்த‌ ப‌ழ‌ம் எல்லாம் யானை விலை, குதிரை விலை விக்குது ஊர்ல‌ இருந்து வ‌ரும் போது அப்ப‌டியே கொஞ்ச‌ம் எடுத்து வாங்க‌ளேன்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்

8) நாம் ரூம்ல‌ ப‌க‌ல்ல‌ இருப்ப‌தே அபூர்வ‌மா தான் இருக்கும். ஏதாவ‌து முக்கிய‌ ஆபிஸ் வேலையை முடிக்க‌லாம் என்று இருந்தால் அப்ப‌ தான் ஹ‌வுஸ் ஓன‌ர் அக்கா டீவி சீரிய‌ல் பார்க்க‌ விடாம‌ல் அட‌ம்பிடிக்கிற‌ ம‌க‌னை பார்த்து, மேல‌ மாடில‌ இருக்கிற‌ அங்கிளுக்கு ஆபிஸ் இன்னைக்கு லீவாம் நீ போய் அவ‌ரோட‌ விளையாடு என்று அனுப்பி வைப்பாங்க‌. அவ‌ங்க‌ ஜாலியா சீரிய‌ல் பார்க்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌, ஆனா பைய‌ன் ந‌ம்ம‌ளை ட‌ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடுவான்.

9) ச‌மைய‌ல் அறை ஒன்றை ம‌ற‌ந்தே இருப்பார்க‌ள். அங்கு தான் துணிக‌ள் உல‌ர்த்த‌ப்ப‌டும். அத‌னால் வீட்டில் புகை ம‌ற்றும் சுவ‌ர் அழுக்காகிவிடும் என்ற‌ பிர‌ச்ச‌னை ஹ‌வுஸ் ஓன‌ருக்கு இருக்காது. அப்ப‌டியே ச‌மைய‌ல் என்று ஆர‌ம்பித்தாலும் நாலு நாள் கூத்தாக‌ தான் இருக்கும். ஐந்தாவ‌து நாள் ஹோட்ட‌லை தான் தேடுவார்க‌ள். இந்த‌ நாலு நாளு கூத்துக்கு வாங்கிய‌ பாத்திர‌ங்க‌ள் எல்லாம் வீடு காலி ப‌ண்ணும் போது ஹ‌வுஸ் ஓன‌ருக்கு தான் சொந்த‌ம்.

10) வீட்ல‌ அது ச‌ரியில்லை, இது ச‌ரியில்லை என்ற‌ புல‌ம்ப‌ல் இல்லாம‌ல் ச‌ரியா சொன்ன‌ தேதில‌ வீட்டு வாட‌கையை கொண்டு போய் ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் சேர்த்துவிடுவ‌து.

குறிப்பு:

மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)

ஆனா இதுக்கு நேர் எதிராய் ஒரு குரூப் இருக்கும் அந்த‌ குரூப்பிட‌ம் ம‌ட்டும் வீடு வாட‌கைக்கு விட்டால் அந்த‌ ஹ‌வுஸ் ஓன‌ர் வீட்டை வித்துவிட்டே ஓடிவிடுவார். அவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னை கொடுப்பார்க‌ள். அதைப் ப‌ற்றி அடுத்த‌ப் ப‌திவில் எழுதுகிறேன்.

.


.

.

Tuesday, August 31, 2010

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி - நிறைவு

நமது சென்னையில் காக்கைகளை பார்க்க முடியவில்லை, கோவையில் நடந்த மாநாட்டிற்கு பல மரங்கள் முறிக்கப்பட்டன, சிட்டுக்குருவி என்று ஒரு இனத்தை பார்க்கவே முடியவில்லை என்று வரும் செய்திகளும் பல்லுயிர் பெருக்கத்தின் அழிவின் நீட்சியே.

பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்ததும், பல்லுயிர் பெருக்கத்தின் செறிவு மிகுந்த பகுதியாக கருதப்படுவது அமேசான் மழைக்காடுகள் தான். இந்த காடுகளின் அழிவுகள் தான் இன்று பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.

அமேசான் மழைக்காடுகள்:

தென் அமெரிக்கா கண்டத்தில் பரந்து விரிந்துள்ளது இந்த மழைக்காடுகள். மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகையானது இந்த மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் தான் அமேசான் ஆறும், அதன் துணை ஆறுகளும் ஓடி பின் கடலில் கலக்கின்றன. இதன் பரப்பளவு சுமார் 7 மில்லியன் சதுரகிலோ மீட்டர். இதில் காடுகள் மட்டும் சுமார் 5.5 மில்லியன் சதுரகிலோ மீட்டர்.



இந்த காடுகள் சுமார் ஒன்பது நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. பிரேசில் நாட்டில் தான் இந்த மழைக்காடுகளின் 60 சதவீதம் உள்ளது. இந்த காடுகளில் சுமார் 2.5 மில்லியன் பூச்சியினங்களும், பத்தாயிரத்திற்கு அதிகமான தாவரயினங்களும், ஏறத்தாழ இரண்டாயிரம் பறவை மற்றும் பாலூட்டிகளும் வகைகள் இருப்பதாக ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மழைக்காட்டில் பாயும் ஆறுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான மீன் வகைகளும் காணப்படுகின்றன.

இந்த மழைக்காடுகளில் சுமார் 75,000 வகையான மரங்களும் தாவர இனங்களும் காணப்படுகின்றன. உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் இந்த காடுகளில் உள்ள தாவரங்கள் தான் உட்கொள்ளுகின்றன. எனவே இவைகளை பாதுகாப்பது சுற்றுபுறச்சூழலுக்கு மிக இன்றியமையாதது ஆகும்.

1960 ஆம் ஆண்டுவரை இந்தக் காடுகளுக்குள் இருக்கும் வளங்களை சுரண்டாமல் இருக்க கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு சில பண்ணைகள் மற்றும் பண்ணை விவசாயம் செய்ய, என்று உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அதில் இருந்து அந்த காடுகளின் அழிவுகள் தொடங்குகிறது.



1991 முத‌ல் 2000 வ‌ரையிலான‌ ஆண்டுக‌ளில் இந்த‌ காடுக‌ளின் நில‌ப்ப‌ர‌ப்பு 415000 முத‌ல் 587000 ச‌துர‌ ப‌ர‌ப்ப‌ள‌வு அழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ ஆய்வுக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. 2000 முத‌ல் 2005 வ‌ரையிலான் இடைப்ப‌ட்ட‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ காடுக‌ளின் அழிவுக‌ள் மிக‌ப்பெரிய‌ அள‌வு என்று க‌ண‌க்கிட‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து இதுவ‌ரையிலும் அழிக்க‌ப்ப‌ட்ட‌ காடுக‌ளின் அழிவுக‌ளின் ச‌த‌வீத‌த்தை விட‌ இந்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளின் அழிவுக‌ள் 18% அதிக‌ரித்துள்ள‌து.

இதே ச‌த‌வீத‌த்தில் இந்த‌ காடுக‌ள் அழிக்க‌ப் ப‌டுமானால் இன்னும் 20 வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ ம‌ழைக் காடுக‌ளின் ப‌ர‌ப்ப‌ள‌வு 40% வ‌ரை குறையும் அபாய‌ம் உள்ள‌து. இந்த‌ காடுக‌ளின் அழிவுக‌ளால் ப‌சுமை இல்ல‌ வாயுக்க‌ள்(Green House Gases) க‌ண்டிப்பாக‌ பாதிக்க‌ப்ப‌டும். இந்த‌ ப‌சுமை இல்ல‌ வாயு பாதிப்புக‌ளின் விளைவுக‌ள் தான் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming).

இந்த‌ பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வின் வீரிய‌த்தால் வ‌ரும் 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் துருவ‌ப் ப‌குதியில் உள்ள‌ ப‌னிப்ப‌றைக‌ள் முற்றிலும் உருக‌த் தொட‌ங்கிவிடும் என்று ஆய்வாள‌ர்க‌ள் எச்ச‌ரிக்கிறார்க‌ள். இந்த‌ ப‌னிப்பாறைக‌ளின் உருகுத‌‌லில் வெளியிட‌ப்ப‌டும் மீதேன் போன்ற‌ க‌ரிய‌மில‌ வாயுக்க‌ள் மேலும் வ‌ளிம‌ண்ட‌ல‌த்தை பாதிக்கும். இப்ப‌டித்தான் ஒவ்வொரு விளைவுக‌ளும் ஒன்றுட‌ன் ஒன்றுத் ச‌ங்கிலித் தொட‌ர் போல் தொட‌ர்புடைய‌வை. என‌வே இந்த‌ விளைவுக‌ளின் கார‌ணிக‌ளை க‌ட்டுப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகிற‌து.



பாதுகாக்க‌ எடுக்க‌ப்ப‌டும் முய‌ற்ச்சிக‌ள்:

உல‌க‌ அள‌வில் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு இழ‌ப்பு ஏற்ப‌டும் இந்த‌ இருப‌தாம் நூற்றாண்டில் சூழ‌லிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள், இய‌ற்க்கை ஆய்வாள‌ர்க‌ள் ம‌ற்றும் அறிவிய‌ல் அறிஞ‌ர்க‌ள் போன்றோர் இந்த‌ப் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தைப் ப‌ற்றி ஆராய‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ர். ஜான் முய‌ர்(John Muir) என்ப‌வ‌ர் இவைக‌ளை பாதுகாப்ப‌திற்கும், அழிவின்றி பாதுகாப்ப‌திற்கும் உள்ள‌ வேறுப்பாட்டை பின்வ‌ருமாறு விள‌க்குகிறார்.

இழ‌ப்பின்றி பாதுகாப்ப‌து என்ப‌து ம‌னித‌ ஊடுருவ‌ல் அல்ல‌து உப‌யோக‌ம் இல்லாத‌ பாதுகாப்பான‌ ப‌குதிக‌ளாகும். இழ‌ப்பின்றி பாதுகாத்த‌ல் என்ற‌ வ‌ரைமுறையின் ப‌டி இய‌ற்கையான‌ வாழிட‌ங்க‌ளுட‌ன் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை நிலையாக‌ பேணுவ‌தே ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகிற‌து.

இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌துவ‌த்தைக் க‌ருத்தில் கொண்டுதான் ஐக்கிய‌ நாடுக‌ள் ஒருங்கினைப்பான‌து இந்த‌ வ‌ருட‌த்தை ப‌ல்லுயிர் பெருக்க‌தின் ஆண்டாக‌(International Year of Biodiversity) அறிவித்துள்ள‌து.

ப‌ல்லுயிர் பெருக்க‌ ஆண்டின் குறிக்கோள்க‌ள்:

1) ம‌க்க‌ளிட‌ம் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தையும், அத‌ன் முக்கிய‌துவ‌த்தை ப‌ற்றி விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்துவ‌து.

2)அந்த‌ந்த‌ நாடுக‌ளில் உள்ள‌ குழும‌ங்க‌ளில் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை பாதுகாக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌த்தை ஊக்குவிப்ப‌து.

3)ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அழிவுக‌ளை குறைக்க‌க் காணும் வ‌ழிமுறைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்துவ‌து.

4)அர‌சாங்க‌ம் ம‌ற்றும் ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் மூல‌ம் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அழிவை த‌டுக்கு முய‌ற்ச்சி எடுப்ப‌து.

5)ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு ப‌ட‌ங்க‌ள் ம‌ற்றும் வாச‌க‌ங்க‌ளை இந்த‌ 2010 ஆண்டிற்குள் ம‌க்க‌ள் ம‌த்தியில் கொண்டு சேர்ப்ப‌து.

உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ல்லுன‌ர்க‌ள் த‌ற்போது உள்ள‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் த‌ன்மைக‌ளை அறிவிய‌ல் கொண்டு கூற‌வ‌து ஹோலோசீன் இழ‌ப்பு கால‌ம்(The Holocene extinction) அல்ல‌து ஆறாவ‌து மொத்த‌ இழ‌ப்பு கால‌ம்(Sixth Mass Extinction match) என்ப‌தாகும். ப‌ல‌ தொல்பொருள் ஆர‌ச்சியாள‌ர்க‌ளின் ப‌திவேடுக‌ளின் ப‌டி இந்த‌ ஆறாவ‌து மொத்த‌ இழ‌ப்பான‌து அத‌ன் முந்திய‌ ஐந்து இழ‌ப்புக‌ளை காட்டிலும் அதிக‌ம் என்கிற‌து. இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளில் இருந்து மீள்வ‌த‌ற்கு உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ல்லுன‌ர்க‌ள் ப‌ல‌ வ‌ரைமுறைக‌ளை வ‌குத்து செய‌ல்திட்ட‌ங்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்.

நாமும் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தை உண‌ர்ந்து ப‌ல்லுயிர்க‌ளை வாழ‌வைப்போம். அவைக‌ளின் வாழ்க்கை தான் ந‌ம்முடையாக‌ வாழ்க்கையாக‌ அமையும் என்ப‌தையும் க‌ருத்தில் கொள்வோம்.

Biodiversity is life.
Biodiversity is our life.

குறிப்பு: ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றி முழுவ‌தும் எழுத‌ வேண்டுமானால் குற‌ந்த‌து இருப‌து இடுகையாவ‌து எழுத‌ வேண்டும். நான் என்னால் முடிந்த‌ அள‌வு மேலோட்ட‌மாக‌வே எழுதியுள்ளேன். இத‌ன் அவ‌சிய‌த்தின் சிறுதுளியை விதைக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தில் தான் எழுதியுள்ளேன். இத‌ன் நீட்சிக‌ளை முடிந்தால் அவ்வ‌ப்போது தொட‌ர்வேன்.

.

.

.

Monday, August 23, 2010

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி

ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையான‌து இந்த‌ வ‌ருட‌த்தை உல‌க‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் வ‌ருட‌மாக‌ அறிவித்துள்ள‌து(International Year of Biodiversity-2010). இவ்வாறு அறிவித்திருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வையும், அத‌ன் அவ‌சிய‌த்தையும் ம‌க்க‌ளிட‌ம் கொண்டுசெல்வ‌தாகும்.

Biodiversity is life.
Biodiversity is our life.




விள‌க்க‌ம்:

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌து. இந்த‌ உயிரின‌ங்க‌ளின் த‌ற்போதைய‌ நிலைக‌ளை அள‌விட‌வும், அவைக‌ளின் பெருக்க‌த்தையும் ம‌திப்பிடுகிற‌து.

எத‌ற்க்காக‌ இந்த‌ உயிரின‌ங்க‌ளை பாதுகாக்க‌ வேண்டும்?.

நாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்து தான் இருக்கின்ற‌ன‌.

இப்போது உள்ள‌ வாழ்க்கைமுறையில் நோயில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து நினைத்து பார்க்க‌ முடியாத‌ ஒன்று, இந்த‌ நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள் தான்.

இருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும் தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து.

இவ்வாறு ந‌ம‌க்கு இன்றிய‌மையாத‌ பொருட்க‌ளான‌ உண‌வு, உடை, உற‌விட‌ம் என்ற‌ கார‌ணிக‌ளுக்கு நாம் இவைக‌ளை சார்ந்தே வாழ‌ வேண்டியுள்ள‌து. இவ்வாறு ந‌ம‌க்கு எல்லாவித‌த‌திலும் தேவையாக‌ இருக்கும் இந்த‌ உயிரின‌ங்க‌ளை நாம் பாதுகாக்கிறோமா? என்ப‌து ந‌ம்மை நாம் கேட்க‌ வேண்டிய‌ கேள்வி.

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் இய‌ற்கையாக‌ க‌ண்ணுக்கு தெரியாம‌ல் ந‌டைபெறும் ப‌ல‌ ப‌ணிக‌ளை செய்கின்றது. வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் ந‌டைபெறும் வேதியிய‌ல் ம‌ற்றும் நீர் சுழ‌ற்ச்சிக‌ளை ச‌ம‌ன் ப‌டுத்துகிற‌து. நீரை தூய்மை ப‌டுத்துத‌ல்(மீன்க‌ள்) ம‌ற்றும் ம‌ண்ணில் ச‌த்துக‌ளை ம‌றுசுழ‌ற்ச்சி செய்து(ம‌ண்புழு) வ‌ள‌மான‌ நில‌த்தை கொடுக்கிற‌து. ப‌ல்வேறு ஆய்வுக‌ளின் ப‌டி இய‌ற்கையான‌ சூழ்நிலையை ந‌ம்முடைய‌ அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் அமைத்து கொள்ள‌ முடியாது என்று ஆய்வாள‌ர்க‌ள் தெரிவிக்கிறார்க‌ள்.

உதார‌ண‌மாக‌ பூக்க‌ளில் பூச்சிக‌ள் மூல‌ம் ந‌ட‌க்கும் ம‌க‌ர‌ந்த‌சேர்க்கையை ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்மால் ந‌ட‌த்த‌ முடியுமா?... (முடியும் ஆனால் இய‌ற்கையாய் ந‌டைபெறும் ஒரு செய‌லை செய்ய‌, செய‌ற்கைக்கு எவ்வ‌ள‌வு செல‌வு செய்ய‌ வேண்டிவ‌ரும்)

தொழிற்ச‌லைக‌ளுக்கு தேவையான‌ மூல‌ப்பொருட்க‌ள் பெரும்பாலும் உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளில் இருந்தே எடுக்க‌ப்ப‌டுகிற‌து. என‌வேதான் இந்த‌ உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளை அழியாம‌ல் பாதுகாப்ப‌துக்கு உல‌க‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து.

இய‌ற்கையை ர‌சிப்ப‌து என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் மிக‌ பிடித்த‌மான‌ ஒன்று. கோடைக்கால‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால் இய‌ற்கையை ர‌சிக்க‌ ம‌லைப் பிரேதேச‌ங்க‌ளுக்கு கிள‌ம்பிவிடுவோம். இய‌ற்கை அருவிக‌ளும், ப‌ற‌வைக‌ளும் எவ‌ர் க‌ண்க‌ளையும் கொள்ளை கொள்ளும். இந்த‌ இய‌ற்கைய‌ழ‌கு தான் ப‌ல‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளுக்கும், க‌விஞ‌ர்க‌ளுக்கும், ஓவிய‌ர்க‌ளுக்கும் ம‌ற்றும் க‌லைஞ‌ர்க‌ளுக்கும் ஊக்க‌மாய் அமைந்துள்ள‌து.



அழிக்கும் கார‌ணிக‌ள்:

ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை அழிக்கும் கார‌ணிக‌ளை எட்வ‌ர்ட் ஓ வில்ச‌ன் என்ற‌ ஆய்வாள‌ர் ஆங்கில‌த்தில் HIPPO (ஹிப்போ) என்று அழைக்கிறார். அதில் ஐந்து கார‌ணிக‌ளை குறிப்பிடுகிறார்.

1)வாழிட‌ம் அழித்த‌ல் (H-Habitat destruction)
2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)
3)மாசுபாடு (P-Pollution)
4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)
5)அதிக‌மான‌ அறுவ‌டை (O-Overharvesting)

1)வாழிட‌ம் அழித்த‌ல்:

இதை ப‌ற்றி அதிக‌ம் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை. ந‌ம் க‌ண்முன்னே ந‌ட‌க்கும் செய‌ல்க‌ள் தான். ப‌ல‌ விளைநில‌ங்க‌ள் க‌ட்டிட‌ங்க‌ளாக‌வும், காடுக‌ள் தொழிற்சாலைக‌ளாக‌ மாறிக்கொண்டிருக்கின்ற‌து. உயிரின‌ங்க‌ளில் வாழிட‌ங்க‌ளை அழித்து ந‌ம‌து வாழிட‌ங்க‌ளை பெருக்கி கொள்கிறோம். கி.பி 1000 முத‌ல் இன்றுவ‌ரை அழிவிற்கு உண்டான‌ தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்கின‌ங்க‌ள் ம‌னித‌ ந‌ட‌வ‌டிக்கையால் ஏற்ப‌ட்ட‌தே ஆகும்.

2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள்:

உல‌கில் ப‌ல்வேறு ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அந்த‌ சூழ‌லுக்குகேற்ப‌ கூட்ட‌மாக‌ வாழ்கின்ற‌ன‌. அவ்வாறு கூட்ட‌மாக‌ வாழ்வ‌த‌ற்கு கார‌ண‌ம் க‌ண்ட‌ங்க‌ள், க‌ட‌ல்க‌ள், ம‌லைக‌ள், ஆறுக‌ள் ஆகிய‌வ‌ற்றால் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்துவிடாம‌ல் பிரித்துவைக்க‌ப்ப‌டுவ‌தால் தான். ஆனால் த‌ற்போது ம‌னித‌ர்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போக்குவ‌ர‌த்து வ‌ச‌திக‌ளால் இவைக‌ள் த‌ங்க‌ளின் சூழ‌லில் இருந்து சுல‌ப‌மாக‌ இட‌ம்பெய‌ர்கின்ற‌ன‌. இவ்வாறு இட‌ம்பெய‌ரும் சிற்றின‌ங்க‌ள் அந்த‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ சிற்றின‌ங்க‌ளில் வ‌ள‌ர்ச்சியை அப‌க‌ரித்து த‌ன்னுடைய‌ இன‌த்தை விருத்திசெய்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டுவ‌ந்து ந‌ம‌து நாட்டில் ப‌யிரிட‌ப்ப‌டும் ப‌ழ‌ங்க‌ளை சொல்ல‌லாம்.

3)ம‌ர‌ப‌ணு மாசுபாடு:

தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்குக‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ம‌ர‌ப‌ணு சோத‌னைக‌ள் மூல‌ம் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌ங்க‌ள். இத‌னால் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌த்தின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளில் மாசுபாடு ஏற்ப‌டுகிற‌து. இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும்.

எந்த‌வொரு உயிரியிலும் வெளிப்புற‌த் தோற்ற‌த்தை ம‌ட்டும் அடிப்ப‌டையாக‌ வைத்து க‌ல‌ப்பின‌ம் செய்யாம‌ல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புற‌த் தோற்ற‌த்திலும் உள்ள‌ மாற்ற‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு ஆய்வு செய்வ‌தே சிற‌ந்த‌து.

உதார‌ண‌மாக‌ இப்போது ச‌ந்தையில் உள்ள‌ க‌த்திரிக்காவை(Genetically Modified Brinjal) சொல்ல‌லாம்.

4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு:

ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை ஆண்டுதோறும் அதிக‌ரித்து கொண்டே இருக்கிற‌து. இந்த‌ அதிக‌ப்ப‌டியான‌ வ‌ள‌ர்ச்சியும் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு த‌டையாக‌ இருக்கின்ற‌து. இந்த‌ ம‌க்க‌ள்த்தொகை பெருக்க‌த்தால் சுற்றுப்புற‌ச்சூழ‌ல் வெகுவாக‌ ப‌திக்க‌ப்ப‌டுகிற‌து அத‌னால் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் போன்ற‌ நிக‌ழ்வுக‌ளும் நிக‌ழ்கின்ற‌ன‌. ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌ த‌ள‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும் ப‌வ‌ள‌ப்பாறைக‌ள், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வுக‌ளால் இன்னும் 20 முத‌ல் 40 வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலும் அழிந்துவிடும் அபாய‌ம் உள்ள‌து.

5)அதிக‌மான‌ அறுவ‌டை:

தாவ‌ர‌ங்க‌ளில் விளையும் பொருட்க‌ளை உண‌வுக்கு என்று பொரும்ப‌குதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைக‌ளின் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குவ‌த‌ற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அதிக‌ விளைச்ச‌ல் த‌ரும் வீரிய‌ ர‌க‌ ப‌யிர்க‌ளை ப‌யிர் செய்து அதில் இய‌ற்கைக்கு மீறிய‌ அதிக‌ ம‌க‌சூலை பெறுகிறோம்.

இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் அதிக‌ம் செறிந்துள்ள‌ ப‌குதியான‌ அமோசான் ம‌ழைக்காடுக‌ள் ப‌ற்றியும், அவ‌ற்றின் அழிவுக‌ள் ப‌ற்றியும் அடுத்த‌ ப‌குதியில் எழுதுகிறேன்.


தொட‌ரும்...

குறிப்பு: ஒரு வார‌த்திற்கு முன்னால் இர‌வு ப‌தினொரு ம‌ணிய‌ள‌வில் டிவி ரிமோட்டை பொதிகை சேன‌ல் திருப்பினேன். அதில்தான் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் ப‌ற்றி டாக்ட‌ர் ஒருவ‌ர் த‌ன்னுடைய‌ க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொண்டிருந்தார். அத‌ன் தாக்க‌ம் தான் என்னை எழுத‌ தூண்டிய‌து. என்னுடைய‌ ச‌ந்தேக‌ம் எல்லாம் இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது?.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்? ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை?..

.

.

Monday, August 16, 2010

ச‌ப்பாத்தி தோசையாக‌ மாறிய‌க் க‌தை..

சென்னையில் வேலை செய்யும் போது, நாங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் நான்கு பேர் ரூம் எடுத்து த‌ங்கி இருந்தோம். அதில் ஒருவ‌ன் என்னுடைய‌ ஊர்கார‌ன் பெய‌ர் குமார், ம‌ற்ற‌ இருவ‌ரும் ஆபிசில் என்னுட‌ன் வேலை செய்ப‌வ‌ர்க‌ள். அந்த‌ ஆபிசில் வேலைக்கு சேர்ந்த‌ பின்பு என்னிட‌ம் ந‌ண்ப‌ன் ஆன‌வ‌ர்க‌ள். ஒருவ‌ன் திருநெல்வேலி பெய‌ர் கிஷோர், இன்னொருவ‌ன் திருச்சி பெய‌ர் கார்த்திக். ரூமில் நாங்க‌ள் ச‌மைய‌ல் எதுவும் செய்வ‌து கிடையாது. வெளியில் ஹோட்ட‌லில் தான் சாப்பிட்டு வ‌ந்தோம்.

ஹோட்ட‌லில் சாப்பிடுவ‌து போர் அடிக்க‌வே, அனைவ‌ரும் யோசித்து அறையில் ச‌மைப்ப‌து என்று முடிவான‌து. அத‌ற்க்கான‌ எல்லா ஏற்பாடும் செய்ய‌ ஆர‌ம்பித்தோம். ஒவ்வொருத்த‌ரும் ஊருக்கு போயிட்டு வ‌ரும் போது அவ‌ர்க‌ளால் முடிந்த‌ பொருட்க‌ளை வீட்டில் இருந்து சுட்டு வ‌ருவ‌து என்று முடிவு செய்து வேலையில் இற‌ங்கினோம்.

அடுத்த‌ ஒரு வார‌த்தில் ச‌மைய‌ல் செய்வ‌த‌ற்க்கான‌ பாத்திர‌ங்க‌ள் அனைத்தும் ரெடி. நான் ஊரில் இருந்து கேஸ் ஸ்ட‌வ் எடுத்து வ‌ந்திருந்தேன். வீட்டு ஓன‌ரிட‌ம் சொல்லி ஒரு சிலிண்ட‌ரை ஆட்டைய‌ போட்டுவிட்டோம். பொண்ணு கிடைச்சாலும் புத‌ன் கிடைக்காது, என்று அன்னைக்கே ச‌மைய‌லை ஆர‌ம்பித்துவிட்டோம். கிடைக்கிற‌ காயை வெட்டிப் போட்டு ப‌ருப்பை அவித்து கொட்டி சாம்பாருனு சொன்னேன். அரிசியை அவித்து சாத‌ம் ரெடி ப‌ண்ணி சாம்பாருட‌ன் சாப்பிட்டோம், ஹோட்ட‌ல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு செத்து போன‌ நாக்குக்கு இதுவும் வித்தியாச‌மாக‌ இருந்த‌து.

மூணு நாளு ந‌ல்லா தான் போயிட்டு இருந்த‌து. ச‌னிக்கிழ‌மை ராத்திரி எல்லோரும் ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருக்கும் போது, "ந‌ம‌க்கு சைவ‌ம் தான் ச‌மைக்க‌ வ‌ராது, ஆனா சிக்க‌ன் குழ‌ம்பு சூப்ப‌ரா செய்வேன்" என்று ந‌ம்ம‌ கார்த்திக்கு வாயை தொற‌ந்தான். நானும் நாக்கை தொங்க‌ போட்டிட்டு "அப்ப‌டியானு கேட்க‌" ப‌க்க‌த்துல‌ இருந்த‌ ம‌க்க‌ளும் அப்ப‌ நாளைக்கே செய்திட‌லானு சொல்ல‌, நானும் த‌லையாட்டினேன்.

ச‌ரி, நாளைக்கு சிக்க‌ன் செய்தா ம‌திய‌ம் தான் சாப்பிட‌ முடியும், காலையில் என்ன‌ ப‌ண்ணுற‌துனு? நான் கேட்டேன். உட‌னே ந‌ம்ம‌ கிஷோர் நானும் ர‌வுடிதானு காமிக்க‌, நான் சூப்ப‌ரா ச‌ப்பாத்தி செய்வேனு சொன்னான். என‌க்கு ச‌ந்தோச‌ம் தாங்க‌ முடிய‌லை, ந‌ம‌க்கு கிடைத்த‌ ரூம்மேட்க‌ள் ச‌மைப்ப‌தில் மிக‌வும் திற‌மைசாலிக‌ள் என்று ம‌ன‌தில் நினைத்து கொண்டேன்.

அப்ப‌ என்னென்ன‌ வேணுமோ!! இப்ப‌வே வாங்கிட‌லாம். நாளைக்கு ஞாயிறு, யாரும் க‌டையை தொற‌க்க‌ மாட்டாங்க‌ என்று சொல்லிவிட்டு க‌டைக்கு கிள‌ம்பினோம். நாளைக்கு ச‌மைக்க‌ போகிற‌ இர‌ண்டு போரும், தேவையான‌ பொருட்க‌ளை வாங்கி கொண்டிருந்த‌ன‌ர். அவைக‌ளை சும‌க்கும் பொறுப்பு எங்க‌ளுக்கு த‌ர‌ப்ப‌ட்ட‌து.

உருளை கிழ‌ங்கு, வெங்காய‌ம், த‌க்காளி, க‌றி ம‌சாலா, முட்டை, தேங்காய், ச‌ப்பாத்தி மாவு என்று அம‌ர்க்க‌ள‌ ப‌டுத்தினார்க‌ள். நாங்க‌ள் பொருட்க‌ள் வாங்கிய‌ க‌டையில் நெய் இல்லையென்று க‌டைக்கார‌ர் சொன்னார், நான் உட‌னே நெய் எதுக்கு என்று கிஷோரிட‌ம் கேட்டேன். கொஞ்ச‌ம் நெய் போட்டு சுட்டா தான் ச‌ப்பாத்தி சாப்டா வ‌ரும் என்று சொல்லிவிட்டு ப‌க்க‌த்து க‌டைக்கு ஓடினான். என‌க்கு அப்ப‌வே ச‌ப்பாத்தியின் வாச‌ம் மூக்கில் நுழைய‌ ஆர‌ம்பித்த‌து.

சிக்க‌ன் ம‌ட்டும் தான் வாங்க‌வில்லை, அதை காலையில் வாங்கி கிளீன் ப‌ண்ண‌ வேண்டிய‌ பொறுப்பு குமாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

ம‌றுநாள் காலை, எல்லாம் தூக்க‌த்தை விட்டு எழுந்த‌தே ஒன்ப‌து ம‌ணிக்கு தான். குமார் எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு சிக்க‌ன் வாங்க‌ ஓடினான். சிக்க‌ன் வாங்கி வ‌ந்த‌வ‌ன், தோலை ம‌ட்டும் உரித்து முழு கோழியாக‌ வாங்கி வ‌ந்தான். நான் அவ‌னிட‌ம் "ஏன்டா!! கோழியை வெட்டி வாங்கி வ‌ர‌வேண்டிய‌து தானே" என்றேன்.

க‌டையில‌ கூட்ட‌ம் அதிக‌ம் ம‌ச்சி, அவ‌னுங்க‌ ஒழுங்க‌ வெட்ட‌ மாட்ட‌னுங்க‌, நான் சூப்ப‌ர‌ வெட்டுவேனு பீதியை கிளாப்பினான். எல்லாம் ந‌ம்ம‌ளைவிட‌ பெரிய‌ ச‌மைய‌ல் கார‌னா இருப்பானுங்க‌ போலிருக்கு என்று நினைத்து கொண்டேன்.

ந‌ம்ம‌ கார்த்திக் வெங்காய‌ம், த‌க்காளி வெட்ட‌ தொட‌ங்கினான். நான் அவ‌னிட‌ம் ஏதாவ‌து ஹெல்ப் வேணுமானு கேட்டேன். நீ தான் மூனு நாளு சாம்பாருனு ஒண்ணு வெச்சா இல்லையா, இன்னைக்கு என் முறை, நீ ஓர‌மா போய் உக்காரு, தேவைனா கூப்பிடுறோம் என்றான்.

ந‌ம்ம‌ ச‌ப்பாத்தி சுடுற‌ கிஷோர் தான் முத‌லில் அடுப்பை ப‌ற்ற‌ வைத்தான். என்ன‌டா!! அதுக்குள்ள‌ ச‌ப்பாத்தி உருட்டிட்டானானு போய் பார்த்தால், ஒரு பெரிய‌ பாத்திர‌த்தில் த‌ண்ணியை ஊத்தி அடுப்பில் வைத்திருந்தான். எதுக்குனு கேட்டா!! வெந்நீரில் மாவு பிசைஞ்சா தான் ச‌ப்பாத்தி சூப்ப‌ரா வ‌ரும் என்றான். நோட் ப‌ண்ணுங்க‌ப்பா!!! நோட் ப‌ண்ணுங்க‌ப்பா !!

அப்ப‌டியே சிக்க‌ன் வெட்டுப‌வ‌ன் என்ன‌ செய்கிறாருனு வெளியே போய் பார்த்தால், இர‌ண்டு காலு ம‌ற்றும் இற‌க்கை ம‌ட்டும் வெட்டாம‌ல் த‌னியா வ‌ச்சிருந்தான். ஏன்டானு!!! கேட்டால்‌ இதை முழுசா போட்டா தான் க‌டிக்கிற‌துக்கு சூப்ப‌ரா இருக்குமுனு சொன்னான். அட‌ !!! அட‌ !!

த‌க்காளி, வெங்காய‌ம், உருளை கிழ‌ங்கு எல்லாம் வெட்டி த‌ட்டில் அடுக்கியிருந்த‌தே, ஒரு பைவ்ஸ்டார் ஹோட்ட‌ல் கிச்ச‌ன் ரேஞ்சுக்கு இருந்த‌து. வெட்டிய‌ சிக்க‌னை எடுத்து கொண்டு கொடுத்த‌ குமாரிட‌ம், நேற்று த‌யிர் வாங்க‌ மற‌ந்திட்டேன், நீ போய் ஒரு பாக்கெட் த‌யிர் வாங்கிட்டு வா!! த‌யிர்ல‌ சிக்க‌னை ஊற‌ வைச்சாதான் ப‌ஞ்சு போல‌ இருக்கும் என்று கார்த்திக் சொன்னான்.

ப‌சி பிடுங்கிய‌து, இவ‌னுங்க‌ வ‌ர்ண‌னையே என‌க்கு நாக்குல‌ த‌ண்ணி வ‌ர‌ வைச்சிடுச்சி, ம‌ணி வேற‌ ப‌த்து ஆகி போன‌து. ந‌ம்ம‌ ச‌ப்பாத்தி போடுற‌வ‌ன் இப்ப‌தான் ஒரு பாத்திர‌த்தில் இர‌ண்டு முட்டையை அடித்து ஊற்றி க‌ல‌க்கி கொண்டிருந்தான். எப்ப‌டியும் அரை ம‌ணி நேர‌த்திற்கு மேல் ஆகும் என்று நினைத்து கொண்டு துணி துவைக்க‌ பாத்ரூம் போனேன்.

பாத்ரூமில் இருந்த‌ என்னை, அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌த்தில் குமார் வ‌ந்து அழைத்தான். என்ன‌னு உள்ள‌ வ‌ந்து பார்த்தா, ந‌ம்ம‌ கிஷோரு வைச்சிருந்த‌ பாத்திர‌த்தில் இருந்த‌ மாவு, ச‌ப்பாத்தி மாவா இல்லாம‌ல் இட்லி மாவா ஆகி இருந்த‌து. "த‌ண்ணி பார்த்து ஊத்துடானு சொல்லிட்டு தான் இருந்தேன், அப்பிடியே க‌வுத்துட்டான் இந்த‌ குமாரு" என்றான் கிஷோர். நான் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தான் ஊத்திட்டே இருந்தேன், இவ‌ன் தான் "ஏண்டா!! குழ‌ந்தை ஒன்னுக்கு போற‌து போல் ஊத்துற‌னு" கிண்ட‌ல் அடிச்சான் அதான் க‌வுத்தேன் என்றான் குமார்.

ஏண்டா!! நீங்க‌ இர‌ண்டு பேரும் க‌வுத்து விளையாடுற‌துக்கு எங்க‌ வ‌யிறு தான் கிடைச்சுதானு சொல்லிட்டு, கொஞ்ச‌ம் இருந்த‌ த‌ண்ணியை நானே க‌வுத்து விட்டு மாவை க‌ல‌க்கி தோசை சுடுங்க‌னு சொல்லிட்டு துணியை துவைக்க‌ போனேன்.



துணியை துவைத்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வ‌ரும்போது தோசை சுட்டு அடுக்க‌ ப‌ட்டிருந்த‌து. ஆனால் ப‌க்க‌த்தில் இருந்த‌ சிக்க‌ன் குழ‌ம்பு பாத்திர‌ம் ம‌ட்டும் கொதித்து கொண்டிருந்த‌து. என்ன‌டா இன்னும் சிக்க‌ன் ரெடியாக‌லையானு கேட்டா உருளைகிழ‌ங்கு வேக‌லை, அத‌னால‌ கொஞ்ச‌ம் த‌ண்ணி விட்டு வேக‌ வைச்சிருக்கேனு சொன்னான் கார்த்திக்.

குழ‌ம்பை திற‌ந்து பார்த்தால், அது கோழிக்குழ‌ம்பு போல் தெரிய‌வில்லை, உருளைக்கிழ‌ங்கு குழ‌ம்பு போல் காட்சி அழித்த‌து. அப்ப‌டியே க‌ர‌ண்டி விட்டு கிண்டி பார்த்தேன், கிஷோர் போட்ட‌ கோழிக்காலில் உள்ள‌ ச‌தை அவ்வ‌ள‌வும் குழ‌ம்பில் க‌ரைந்து சாப்பிட்டு வைத்த‌ எலும்பு போல் காட்சிய‌ளித்த‌து.

அப்ப‌டியே நேற்று வாங்கிவ‌ந்த‌ பையில் உருளைக்கிழ‌ங்கு இருக்கிற‌தா? என்று பார்த்தேன். அது வெறும் காலி பையாக‌ இருந்த‌து. ஒரு கிலோ கோழிக்க‌றிக்கு ஒன்ற‌ரை கிலோ உருளைக்கிழ‌ங்கு சேர்த்து ந‌ம்மாளு குழ‌ம்பு வைத்துள்ளார். அதுவும் கிழ‌ங்கை முத‌லில் வேக‌வைக்காம‌ல் கோழிக்க‌றியுட‌ன் சேர்த்து வேக‌வைத்துள்ளார். அப்ப‌டினா அதுல‌ எங்க‌ க‌றி இருக்கும்?.. வெறும் எலும்பு தான் இருக்கும்.

எப்ப‌டியோ ப‌ய‌புள்ள‌ங்க‌ பேசியே ப‌சியை அட‌க்கிட்டானுங்க‌.. ஹி..ஹி..

.

.

Thursday, August 12, 2010

சில‌ துரோக‌ங்க‌ள்_ஜெனி அக்கா-2

இத‌ன் முத‌ல் பாக‌ம் ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் கீழே சொடுக்கி ப‌டித்துவிட்டு தொட‌ர‌வும்.

முத‌ல் பாக‌ம்

அடுத்த‌ நான்கு ம‌ணி நேர‌த்தில் க‌ட‌லூரில் இருந்து பெரிய‌ப்பாவும், பெரிய‌ம்மாவும், சில‌ சொந்த‌ காரர்க‌ளும் ஒரு காரில் வ‌ந்தார்க‌ள்‌. அழுகைக‌ள் தான் பிர‌தான‌மாக‌ இருந்த‌து. ஜெனி அக்காவின் முக‌த்தை அருகில் சென்று பார்க்கும் தைரிய‌ம் என‌க்கு வ‌ர‌வில்லை. தூர‌த்தில் நின்று பார்த்தேன். முக‌த்தில் எந்த‌வொரு மாற்ற‌மும் தெரிய‌வில்லை. சிறிது ப‌க்க‌த்தில் சென்று பார்த்தேன். க‌ழுத்தில் ம‌ட்டும் ஒரு சிறிய‌ இர‌த்த‌க் க‌ட்டு போல் இருந்த‌து.

ஒவ்வொருவ‌ரும் வ‌ர‌ வ‌ர‌, க‌ட்டிலில் ப‌டுக்க‌ வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ஜெனி அக்காவின் ப‌க்க‌த்தில் சுற்றிலும் அம‌ர்ந்திருந்த‌ கூட்ட‌த்தின் அழுகை அதிக‌மாக‌ இருந்த‌து. அத‌ற்கு மேல் அங்கு நிற்ப‌த‌ற்கு ம‌ன‌ம் ஒப்ப‌வில்லை. அங்கிருந்து ந‌க‌ர்ந்து சிறிது தூர‌த்தில் ஒரு வேப்ப‌ம் ம‌ர‌ம் இருந்த‌து. அத‌ன் அருகில் வீடு வேலை செய்வ‌த‌ற்க்காக‌ கொட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌ண‌ல் குவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அத‌ன் மேல் சென்று அம‌ர்ந்து கொண்டேன். சிறிது நேர‌த்தில் சித்த‌ப்பாவும் வ‌ந்து சேர்ந்து கொண்டார்.

ஜெனி அக்காவை வைத்திருந்த கூட்டத்தில் இருந்து சிறிது நேரத்தில் பெரியப்பாவும், அப்பாவும் வெளியே வந்தார்கள். பெரியப்பா விழியில் வழிந்த நீரை துடைத்து கொண்டு எங்களை நோக்கி நடந்தார்கள்.

அருகில் வந்து "என்னடே!!! பண்ணலாம்" என்று இறுக்கமான குரலில் கேட்டார்.

"எதுக்கும் போலிசில் ஒரு கம்பிளைன்ட் கொடுக்கலாம்" என்று சித்தப்பா சொன்னார்கள்.

அவனுளுட்ட மட்டும் சொன்ன, என்னடே பண்ணிட போறானுவ?. போன என் மகளை கூட்டிட்டா வந்திட போறானுவ?. என்று கண்ணில் ததும்பிய நீரை துடைத்தார் பெரியப்பா.

கம்பிளைண்ட் கொடுத்தா போஸ்ட் மார்டம் பண்ணாமல் பாடியை தரமாட்டார்கள். காலையிலேயே நடந்தது, மணி மூணு ஆகி போச்சி என்ன பண்ணலாமுனு சொன்னா தான் அடுத்த விசயத்தை பார்க்க முடியும். என்று எங்களுடைய கூட்டத்தில் நுழைந்தார் ஒருவர்.

ஆள் பார்ப்பதற்கு ஜெனி அக்காவின் வீட்டுகாரர் சாயலில் இருந்ததால், அவருடைய தம்பியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டேன்.

அவளை கூறு போட்டு பார்க்கும் அளவுக்கு என்னுடைய மனதில் தெம்பு இல்லடே, அதனால அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பாருங்கள். என்று சொல்லிவிட்டு பெரியப்பா பக்கத்தில் இருந்த மரத்தின் மீது சாய்ந்தார். அவருடைய கண்கள் குறும்பாட்டின் இரத்தம் போல் கலங்கி நின்றது.

உடனடியாக எங்கள் கூட்டத்தில் இருந்து சென்றவர் அங்கு கூடியிருந்த பெண்களிடம் குளிப்பாட்டுவதற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் கையில் வெள்ளை டவலுடன் வாயை பொத்தி அழும் அண்ணனிடம் காதில் ஏதோ சொன்னார்.

அதுவரையிலும் அமைதியாக அழுது கொண்டிருந்தவர், ஐயோ என் மவனுவ ரெண்டு பேரையும் அனாதையா விட்டுட்டு போய்ட்டியே சண்டாளி!!!

உனக்கு நான் என்ன குறைவெச்சேன், இப்படி தவிக்கவிட்டு போய்ட்டியே!!! போய்ட்டியே!!! என்று தலையில் அடித்து கொண்டு சத்தம் போட்டு மண்ணில் புரண்டு அழுதார்.

இவர் கதறி அழுவதை பார்த்ததும் எல்லாருடைய கவனமும் இவரை தேற்றுவதிலும் வேடிக்கை பார்ப்பதிலுமே இருந்தது.

அதற்க்குள் அவசர அவசரமாக ஜெனி அக்காவை கொண்டு போய் குளிப்பாட்டுவதில் சில பெண்கள் மும்முரமாக இருந்தனர்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளிப்பாட்டி, பவுடர் போட்டு, புது துணி உடுத்தி கட்டிலில் கிடத்தினார்கள்.

ஏம்பா!! சவப்பெட்டி எடுக்க ஆள் அனுப்புனீங்களா? இல்லையா? அதுக்குள்ள யாருப்பா குளிப்பாட்டுனது? குளிப்பாட்டி திரும்பவும் கட்டிலில் காக்க வைக்க கூடாது என்று கத்தினார் என்னுடைய அப்பா.

கூட்டத்தில் இருந்த சித்தி, வெளியே வந்து சித்தப்பாவை சைகை காட்டினார், சித்தப்பா சித்தியின் அருகில் சென்றார். சித்தி சித்தப்பாவின் காதில் ஏதோ சொன்னார். உடனே சித்தப்பா அப்பாவின் கையை பிடித்து கொண்டு எங்களை நோக்கி வந்தார்கள்.

கோபமாக வந்த சித்தப்பா, பெரியப்பாவிடம் "ஜெனியோட முதுகு பக்கத்துல அடிப்பட்டது போல காயம் இருக்காம், என் வீட்டுக்காரி குளிப்பாட்டும் போது பார்த்திருக்கா, பக்கத்துல இருந்த பொம்பளைங்க அவளை தொடவிடலியாம்" என்றார்.

ஆமடே.. இரண்டு நாளைக்கு முன்னாடி மருமவன் எனக்கு போன் பண்ணியிருந்தான், ஏதோ மாடி படியில இருந்து கீழ விழுந்திட்டாளாம், அப்ப அடிப் பட்டிருக்கும் என்றார் பெரியப்பா.

இவர்கள் இப்படி பேசிட்டு இருக்கும் போதே எங்கள் கூட்டதில் நுழைந்த ஜெனி அக்காவின் வீட்டுகாரரின் தம்பி, "எங்க அண்ணனும் எங்க குடும்பத்துல தலைச்சன் பிள்ளை, உங்க பொண்ணும் தலைச்சன் பிள்ளை. இவா வேற நான்டிட்டு நின்னு செத்து போயிருக்கா. அதனால பேசாம அடக்கம் பண்ணுறதுக்கு பதிலா எரிச்சுட்டாத்தான் எல்லோருக்கும் நல்லதுனு எங்க ஊரு சாமியாடி சொல்லுறாரு" என்று பெரியப்பாவிடம் சொன்னார்.

அதற்கு அப்பா, அதெல்லாம் முடியாது, எங்க சம்பிரதாயத்தில் நாங்கள் அடக்கம் தான் பண்ணுவோம், எரிக்க முடியாது என்றார்.

இல்ல நான் இரண்டு குழந்தைகளின் நல்லதுக்கு சொல்லுறேன், அப்புறம் அதுகளுக்கு இதனால பிரச்சனைனா? யாரு என்ன பண்ண முடியும் என்றார்.

சரி, உங்க சம்பிரதாய படியே நடத்துங்க என்று சொல்லிவிட்டு தலைகவிழ்ந்தார் பெரியப்பா.

அப்பாவும் சித்தப்பாவும், பெரியப்பாவின் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு பதில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

தூரத்தில் இவருடைய பதிலுக்காக காத்திருந்தது போல், கையில் டவலுடன் வாயை பொத்தி கொண்டிருந்த ஜெனி அக்கா வீட்டுகாரர் "ஹஓஓஓ" என்று கதறி அழுதார்.

========================================================

நேற்று இரவு நடந்த அண்ணன் தம்பியின் உரையாடல்:

லேய்... கிறுக்கு பயலே என்னல பண்ணி வைச்சிருக்க.

சாந்தி வீட்டுக்கு போயிட்டு வந்தேன், காட்டுகத்து கத்தினா, ரெண்டு அடிதான் அடிச்சேன், இப்படி ஆகி போச்சி..

சீ...த்தூ...உனக்கு கூத்தியா வீட்டுக்கு போறதுதான் பொளப்பா, _மவனே திருந்த மாட்டியா? செத்துட்டாளா!!

ஆமா தம்பி!!!! செத்து போயிட்டா...

என்னாது போயிட்டாளா, நாளைக்கு அவா குடும்ப காரங்க வந்து கேட்டா என்னல சொல்லுறது..

நீதான் ஏதாவது பண்ணனும்..

இதை மறைச்சி தொலைக்கலனா உன்னோட சேர்ந்து நாங்களும் இல்லா, போலிஸ் ஸ்டேசன் கம்பி எண்ணனும்......

குறிப்பு: சில‌துரோக‌ங்க‌ள் என்ற‌ அத்தியாய‌த்தில் ஜெனி அக்காவின் க‌தையை இன்றைய‌ ப‌குதியுட‌ன் முடித்து விட்டேன். இனி அடுத்த‌ ஒரு க‌தையுட‌ன் சில‌ துரோ‌க‌ங்க‌ள் தொட‌ரும். மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து உண்மை க‌தை இல்லை. நான் பார்த்த‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அடிப்ப‌டையாக‌ வைத்து எழுதிய‌து. அத‌னால் யாரும் உண்மை என்று சிலாய்க்க‌ வேண்டாம்.

.

.

.

Wednesday, August 11, 2010

சில‌ துரோக‌ங்க‌ள்_ஜெனி அக்கா-1

ஜெனி அக்கா ஊரில் இருந்து வ‌ந்துவிட்டால் எங்க‌ள் வீட்டில் உள்ள‌ அனைவ‌ருக்கும் ச‌ந்தோச‌த்திற்கு அள‌வே இருக்காது. ஆட்ட‌ம் பாட்ட‌ம் என்று ஒரே ஆர்பாட்ட‌மாக‌ இருக்கும். வ‌ரிசையாக‌ இருக்கும் எங்க‌ள் பெரிய‌ப்பா, சித்த‌ப்பா வீடுக‌ளுக்கு சென்று அறிமுக‌ப்ப‌டுத்திவிட்டு எங்க‌ளுட‌ன் தான் எப்போதும் இருப்பார். முத்துப்ப‌ல் தெரிய‌ இனிக்க‌ இனிக்க‌ பேசுவார்,‌க‌தைக‌ள் ப‌ல‌ சொல்வார், ஜெனி அக்கா வ‌ந்துவிட்டால் போதும் எங்க‌ள் வீட்டில் வாண்டுக‌ளின் கூட்ட‌ம் அதிக‌மாகிவிடும். எல்லாரிட‌மும் ச‌க‌ஜ‌மாக‌ பேசுவார். அனைவ‌ரையும் வ‌சீக‌ரிக்கும் முக‌ம்.

ஜெனி அக்கா என்னுடைய‌ பெரிய‌ப்பாவின் ஒரே பெண். பெரிய‌ப்பாவின் தொழில் ரிக‌ண்டிச‌னிங் பேட்ட‌ரிக‌ள் செய்து விற்ப‌து. இப்போதைய‌ மோல்ட‌டு பேட்ட‌ரிக‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்பு இவைக‌ள் அதிக‌ம் பிர‌ப‌ல‌‌ம். ஊள்ளுரில் என்னுடைய‌ சித்த‌ப்பா இந்த‌ க‌டை வைத்திருந்த‌தால், பெரிய‌ப்பா க‌ட‌லூர் சென்று புதிய‌ க‌டை ஒன்று ஆர‌ம்பித்தார். க‌ட‌லூரில் மீன்பிடி தொழில் சிற‌ந்து விள‌ங்குவ‌தால் இந்த‌ பேட்ட‌ரிக‌ளின் வியாபார‌மும் சூடுபிடித்த‌து. ப‌ட‌கில் ஆழ்க‌ட‌லில் சென்று மீன் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ பேட்ட‌ரிக‌ளில் இய‌ங்கும் லைட்டின் ஒளிதான் அணையாவிள‌க்கு. புதிதாக‌ பேட்ட‌ரிக‌ள் செய்து விற்ப‌தும், வாட‌கைக்கு விடுவ‌தும் என்று பெரிய‌ப்பாவிற்கு தொழில் அமோக‌மாய் இருந்த‌து.

க‌ட‌லூரில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ பெண்க‌ள் க‌ன்வெண்ட் ஸ்கூலில் தான் ஜெனி அக்கா ப‌டித்து கொண்டிருந்தார்க‌ள். அரையாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறை ம‌ற்றும் முழுவாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறையில் த‌வ‌றாம‌ல் எங்க‌ள் ஊருக்கு வ‌ந்துவிடுவார்க‌ள்.

இந்த‌ வ‌ருட‌ம் முழுவாண்டுத் தேர்வு முடிந்து ஒருவார‌ம் ஆகிவிட்ட‌து, ஜெனி அக்கா வ‌ர‌வில்லை. நான் அம்மாவிட‌ம் சென்று என்ன‌வென்று கேட்டேன். "ஜெனி அக்காவுக்கு இந்த‌ வ‌ருட‌ம் க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌ போறாங்க‌!! மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சு, அடுத்த‌ மாத‌ம் க‌ல்யாண‌ம் ந‌ட‌க்குது, அதுக்குத்தான் பெரிய‌ப்பா, பெரிய‌ம்மா ம‌ற்றும் ஜெனி அக்கா எல்லாம் வ‌ருவாங்க‌" என்று அம்மா சொல்லிக்கொண்டே ச‌மைய‌ல்‌ வேலையில் இருந்தார்க‌ள். அப்ப‌, இனிமேல் அக்கா எங்க‌ கூட‌ விளையாட‌ வ‌ர‌மாட்டாங்க‌ளா? என்று கேட்ட‌ என்னை த‌லையில் த‌ட்டிவிட்டு சிரித்தார் அம்மா.

ஜெனி அக்காவின் க‌ல்யாண‌ நாளும் வ‌ந்த‌து. என் குடும்ப‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ச‌ந்தோச‌மாக‌ ஒவ்வொரு வேலையில் இருந்தார்க‌ள். பெரிய‌ப்பா வாங்கி கொடுத்த‌ புது துணியை போட்டு கொண்டு என‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலையை பார்க்க‌ சாப்பாடு ப‌ந்த‌லுக்கு ஓடினேன். சாப்பாடுப் ப‌ந்தியில் இலை போட்ட‌வுட‌ன் இலையை க‌ழுவுவ‌த‌ற்கு த‌ண்ணீர் கொடுப்ப‌தும், பின்பு அவ‌ர்க‌ளுக்கு ட‌ம்ள‌ர் வைத்து அதில் த‌ண்ணீர் நிர‌ப்புவ‌து தான் எங்க‌ளுடைய‌ வாண்டு கூட்ட‌த்திற்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலை.

சாப்பாடுப் ப‌ந்தி எல்லாம் முடிந்து ம‌ண‌ம‌க்க‌ளை வ‌ழிய‌னுப்பும் போதுதான் என்னுடைய‌ அம்மா என்னை தேடிவ‌ந்து கையைபிடித்து கொண்டு ம‌ண‌மேடைக்கு கூட்டி போனார். ஜெனி அக்காவிற்கு அழ‌காக‌ அல‌ங்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. கூட‌ இருந்த‌ மாப்பிள்ளை க‌றுப்பு கோட்டு, சூட்டு போட்டு சிரித்து கொண்டே இருந்தார், ப‌ல் ம‌ட்டும் தான் வெள்ளையாக‌ தெரிந்த‌து. ஜெனி அக்கா என்னை பார்த்த‌வுட‌ன் ஒரு மெல்லிய‌ புன்ன‌கை உதிர்த்துவிட்டு கையை பிடித்து கொண்டார். என் அண்ண‌னும், அப்பாவும் மேடைக்கு வ‌ர‌, நாங்க‌ள் எல்லோரும் ம‌ண‌ம‌க்க‌ளை சுற்றி நிற்க‌ போட்டோகிராப‌ரின் கையில் இருந்த‌ கேம‌ராவில் இருந்து வ‌ந்த‌ ஒளி என்னை க‌ண்மூட‌ வைத்த‌து.

க‌ல்யாண‌ம் முடிந்து ஜெனி அக்காவை விருந்துக்காக‌ வ‌ந்த‌போது பார்த்த‌து. அத‌ன்பிற‌கு ஜெனி அக்காவை பார்த்த‌தே கிடையாது. வீட்டில் அப்ப‌ப்ப‌ அம்மாவும், பெரிய‌ம்மாவும் பேசும் போது அவ‌ர்க‌ளுடைய‌ வாயில் ஜெனி அக்காவை ப‌ற்றிய‌ பேச்சு வ‌ரும்போது நானும் கேட்டு கொள்வேன். ஜெனி அக்காவிற்கு இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌து வ‌ரை தெரியும். நான் ஒருமுறை கூட‌ அவ‌ர்க‌ள் வீட்டிற்கு போன‌து கிடையாது.

ஜெனி அக்காவை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி கொடுத்த‌ ஊர் தோவாளை. ம‌ல‌ர்மாலை க‌ட்டுவ‌த‌ற்கு தென் மாவ‌ட்ட‌ங்க‌ளில் மிக‌வும் பிர‌சித்த‌ பெற்ற‌ ஊர். ரோஜா, அருளி, வ‌ந்தி, செவ்வ‌ந்தி, கொழுந்து போன்ற ம‌ல‌ர்க‌ளின் விவ‌சாய‌த்திற்கும் பேர் பெற்ற‌து. ஜெனி அக்காவின் வீட்டு காரரும் த‌னியாக‌ ப‌ல‌ ம‌ல‌ர் தோட்ட‌ம் வைத்திருப்ப‌தாக‌ அம்மா சொல்வார்க‌ள். அவைக‌ளில் உள்ள‌ ம‌ல‌ர்க‌ளை எல்லாம் சென்னை போன்ற‌ ஊர்க‌ளுக்கு அனுப்பும் தொழில் செய்வ‌தாக‌வும் அப்பா சொல்ல‌ கேட்டிருக்கிறேன்.

ஒருநாள் காலை, க‌ல்லூரிக்கு போக‌ நான் ரெடியாகி கொண்டிருக்கும் போது, ப‌க்க‌த்தில் உள்ள‌ சித்த‌ப்பா வீட்டில் இருந்த‌ போன் அடிக்கும் ச‌த்த‌ம் என‌க்கு கேட்ட‌து. அந்த‌ ஒலியிலேயே என‌க்கு தெரிந்த‌து அது எஸ்டிடி(STD) கால்தான் என்று. போனை பேசி முடித்த‌ சித்தி வெள‌றிய‌ முக‌த்துட‌ன் எங்க‌ள் வீட்டிற்கு ஓடி வ‌ந்தார்.

அவ‌ச‌ர‌மாக‌ வ‌ந்த‌ சித்தி வ‌ழியில் நின்ற‌ என்னிட‌ம் "சுரேஷ்... க‌டைக்கு போய் இருக்கும் சித்த‌ப்பாவை உட‌னே கையோடு கூட்டி வா" என்று சொல்லிவிட்டு அம்மாவிட‌ம் சென்று "இந்த‌ ஜெனி பொண்ணு தூக்க‌ல‌ தொங்கிடிச்சாம், க‌ட‌லூரில் இருந்து ‌பெரிய‌ அத்தானும், அக்கா எல்லாம் கிள‌ம்பி வ‌ந்திட்டு இருக்கிறாங்க‌ளாம். ந‌ம்ம‌ளை வ‌ண்டி புடிச்சு உட‌னே போய் பார்க்க‌ சொன்னாங்க‌" என்று க‌த‌றினார்.

இவ‌ர்க‌ளின் க‌த‌ற‌லை கேட்டு, வெளியில் தோட்ட‌த்தில் இருந்த அப்பாவும் ஓடி வந்தார். விச‌ய‌த்தை கேள்விப்ப‌ட்டு உட‌ன‌டியாக‌ ஒரு வேன் பிடிக்க‌ அப்பா கிள‌ம்பினார்க‌ள், நான் என்னுடைய‌ டூவில‌ரை எடுத்து கொண்டு சித்தாப்பாவை கூப்பிட‌ சென்றேன்.

அடுத்த‌ அரை ம‌ணி நேர‌த்தில் எங்க‌ள் சொந்த‌ப‌ந்த‌ங்க‌ள் என்று ஒரு வேன் புல்லா நிர‌ம்பிற்று. வ‌ண்டி தோவாளையை நோக்கி கிள‌ம்பிய‌து. வ‌ண்டியில் இருந்த‌ அனைவ‌ரின் முக‌மும் இறுக்க‌மாக‌ இருந்த‌து. அம்மா ம‌ற்றும் சித்தியின் க‌ண்க‌ளில் நீர் திவ‌லைக‌ள் எட்டி பார்த்த‌து. "ப‌தினெட்டு வ‌ய‌து முடிய‌ல‌, அதுக்குள்ள‌ அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு அந்த‌ ம‌னுஷ‌ன் த‌லையில‌ க‌ட்டி வ‌ச்சிட்டான்." என்று மௌன‌மாக‌ இருந்த‌ வ‌ண்டியில் அப்பா பேசினார்.

"நேற்றைக்கும் ச‌ண்டை போட்டிருப்பா!!! அதுல‌ தான் இது ந‌ட‌ந்திருக்கும்" என்று சித்த‌ப்பா வ‌ண்டியின் ஓர‌த்தில் உள்ள‌ ஜ‌ன்ன‌லை வெறித்து கொண்டு பேசினார்.

"க‌ல்யாண‌ம் ப‌ண்ணி குடும்ப‌ம் ந‌ட‌த்திக்கிடுவாளானு நானும் ந‌ல்ல‌ சொன்னேன், அவ‌ங்க‌ தான் கேக்க‌லை" என்று என் அம்மாவும் புல‌ம்பினார்.

வ‌ண்டி தோவாளை மெயின் ரோட்டில் இருந்து இற‌ங்கி மேற்கு ப‌க்க‌மாக‌ செல்லும் ஒற்றை ரோட்டிற்குள் நுழைந்த‌து. அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌த்தில், சென்று கொண்டிருந்த‌ வ‌ண்டியை ஒரு பெரிய‌ புளிய‌ ம‌ர‌த்தில் அருகில் இருந்த‌ காலியிட‌த்தில் ஓர‌ம் க‌ட்ட‌ சொல்லிவிட்டு, வ‌ண்டியில் இருந்த‌வ‌ர்க‌ளை இற‌ங்க‌ சொன்னார் அப்பா.

வ‌ண்டி நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌ இட‌த்தில் இருந்து, சிறிது தூர‌த்தில் ஒரு வீட்டின் முன் போட‌ப்ப‌ட்ட‌ ப‌ச்சை ஓலை கொட்ட‌கையில் கூடியிருந்த‌வ‌ர்க‌ளை பார்க்கும் போதே அதுதான் ஜெனி அக்காவின் வீடு என்று ஊகித்து கொண்டேன். எங்க‌ளை பார்த்த‌வுட‌னே கூட்ட‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளின் அழுகை ஓல‌ம் அதிக‌மான‌து. அந்த‌ கூட்ட‌த்தில் இருந்து "மாமாஆஆஆஆ"!!!!!!! என்று ஓல‌மிட்டு ஒருவ‌ர் ஓடி வ‌ருவ‌தை பார்த்தேன். வ‌ந்த‌வ‌ர் என்னுடைய‌ அப்பாவின் காலில் விழுந்தார். அப்போது தான் அடையாள‌ம் க‌ண்டு கொண்டேன், அவ‌ர் தான் ஜெனி அக்காவின் புருச‌ன். நான் அவ‌ரை பார்த்து எட்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து, முன்பு பார்த்த‌தை விட என் க‌ண்க‌ளுக்கு‌ இள‌மையாக‌ தெரிந்தார்.

காலில் விழுந்த‌வ‌ரை என்னுடைய‌ அப்பாவும், சித்த‌ப்ப‌வும் சேர்ந்து தூக்கினார்க‌ள். மாமா!!!!!!!! நான் காலையிலேயே தோட்ட‌த்துக்கு ம‌ருந்து அடிக்க‌ போயிருந்தேன், ம‌வ‌னுங்க‌‌ இர‌ண்டு பேரும் என்னுடைய‌ அண்ண‌ன் வீட்டில் விளையாடிட்டு இருந்தாங்க‌. அந்த‌ நேர‌ம் பார்த்து கிறுக்கி ம‌வா தூக்குல‌ தொங்கிட்டா மா..மா ...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று க‌த‌றினார்.


--தொட‌ரும்

=============================================

குறிப்பு: சில‌ துரோக‌ங்க‌ள் - என்ற‌ த‌லைப்பில் நான் பார்த்த‌, கேட்ட‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை என‌து எழுத்தில் கொண்டு வ‌ர‌லாம் என்று நினைத்து தான் இந்த‌ க‌தையை ஆர‌ம்பிக்கிறேன். நீங்க‌ள் தான் சொல்ல‌ வேண்டும் எப்ப‌டியென்று.

.

.

Sunday, August 8, 2010

எந்திர‌ன் ரிலீஸ் எப்ப‌டி இருக்கும்?...

எந்திர‌ன் ப‌ட‌த்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்க‌ள். பாட‌ல்க‌ள் அனைத்தும் ஏற்க‌ன‌வே ரிலீஸ் ஆகி ப‌ட்டையை கிள‌ப்புகிற‌து. க‌ண்டிப்பாக‌ இர‌ண்டு பாட‌ல்க‌ள் எல்லோருடைய‌ வாயிலும் முனுமுனுக்க‌ ப‌டுவ‌து உறுதி. "அரிமா அரிமா" நான் இப்போது அடிக்க‌டி கேட்டும் பாட‌லாக‌ இருக்கிற‌து.



பெரும்பாலும் நான், என‌க்கு விருப்ப‌மான‌ ப‌ட‌ங்க‌ளை ரிலீஸின் முத‌ல்நாளே பார்த்து விடுவேன். அப்ப‌டி பார்த்தால் தான் ஒரு திருப்தி. சென்னை சிட்டியில் எல்லா ப‌ட‌த்துக்கும் முத‌ல் நாள் டிக்க‌ட் கிடைப்ப‌து குதிரை கொம்பு தான். அத‌னால் நான் சென்னையின் புற‌ந‌க‌ரான‌ அம்ப‌த்தூரில் உள்ள‌ ராக்கி காம்பிள‌க்ஸ் தான் பெரும்பாலான‌ ப‌ட‌ங்க‌ள் பார்ப்பேன்.

மாஸ் ஹீரோக்க‌ளின் ப‌ட‌ங்க‌ள் என்றால் ரிலீஸ் ஆன‌ ஒரு‌நாள் முழுவ‌தும் அந்த‌ காம்பிள‌க்ஸில் உள்ள‌ நான்கு ஸ்கிரின்க‌ளிலும்(ராக்கி, சினி ராக்கி, மினி ராக்கி, ல‌ஷ்மி ராக்கி) போட்டுவிடுவார்க‌ள். என‌வே ஏதாவ‌து ஒன்றில் டிக்க‌ட் கிடைத்துவிடும். அதிக‌மாக‌ போனால் டிக்க‌ட்டின் விலை எண்ப‌தில் இருந்து நூறுவ‌ரை இருக்கும். அத‌ற்கு மேல் விற்ற‌தை நான் பார்த்த‌து இல்லை.

ர‌ஜினியின் சிவாஜி ப‌ட‌ம் ரிலீஸ் ஆன‌ அன்று முத‌ல் நாள் ப‌ட‌ம் பார்க்க‌ வேண்டும் என்ற‌ ஆசை இருந்த‌து. ஆனால் அன்றைக்கு ஆபிஸில் ஆணி அதிக‌ம் லீவு போட‌ முடியாத‌ நில‌மை. நான் என்னுடைய‌ ந‌ண்ப‌னிட‌ம் "கூட்ட‌ம் அதிக‌மா இருக்குமுடா!! அத‌னால‌ காலையிலேயே போய் மாலைக் காட்சிக்கு இர‌ண்டு டிக்க‌ட் வாங்கி வ‌ச்சிக்கோ" என்று சொல்லிவிட்டு ஆபிஸுக்கு போய்விட்டேன்.

ஆபிஸ்ல‌ இருக்கும் போது ந‌ண்ப‌ன் போன் ப‌ண்ணினான் "டேய் நான் தியேட்ட‌ரில் இருக்கிறேன், இன்னும் இர‌ண்டு நாளைக்கு டிக்க‌ட் எதுவும் இல்லையாம், அத‌னால‌ நான் டிக்க‌ட் வாங்க‌ல‌னு சொன்னான்" என்னால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை, இவ‌ன் தியேட்ட‌ர் ப‌க்க‌மே போகாம‌ல் க‌தை விடுகிறான் என்று நினைத்து கொண்டேன். கார‌ண‌ம் எந்த‌வொரு ப‌ட‌த்திற்கு இப்ப‌டி இருந்த‌து இல்லை. நான் கேட்ட‌தும் இல்லை.

மாலையில் ஆபிஸ்வேலை முடித்துவிட்டு வ‌ந்து, வ‌ண்டியை எடுத்து கொண்டு ந‌ண்ப‌னும் நானும் தியேட்ட‌ருக்கு போனோம். போகும் போதே ந‌ண்ப‌ன் சொன்னான் டிக்கெட் கிடைக்காது என்று, நான் அதை காதிலே வாங்க‌வில்லை. அம்ப‌த்தூர் OT ப‌ஸ் ஸ்டாண்டை தாண்டி போகும் போதே தெரிந்த‌து ம‌க்க‌ளின் கூட்ட‌ம். தியேட்ட‌ர் ப‌க்க‌ம் வ‌ண்டியை கொண்டு போக‌ முடியாத‌ அள‌வு கூட்ட‌ம். போலிஸ் வேறு போட்டிருந்தார்க‌ள். என‌வே வ‌ழியிலேயே நாங்க‌ள் ரெகுலராக‌ சாப்பிடும் ஹோட்ட‌லில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு ந‌ட‌ந்து மெதுவாக‌ தியேட்ட‌ர் ப‌க்க‌ம் சென்றேன்.

காட்சி நேர‌ங்க‌ள் எல்லாம் மாற்றியிருந்தார்க‌ள். மேட்னி ஷேவே இன்னும் முடிய‌வில்லை. அத‌னால் மெயின் வாச‌லை மூடி வைத்திருந்தார்க‌ள். டிக்க‌ட் எடுப்ப‌த‌ற்கு க‌வுண்ட‌ரில் ஹ‌வுஸ்புல் போர்டு மாட்டி இருந்தார்க‌ள். கேட்டில் நிற்கும் தியேட்ட‌ர் ஊழிய‌ர்க‌ள் இர‌ண்டு நாட்க‌ளுக்கு டிக்க‌ட் இல்ல‌ அத‌னால‌ யாரும் வெயிட் ப‌ண்ண‌ வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தார்க‌ள்.

அவ‌ர்க‌ள் சொல்வ‌தை கேட்டு கூட்ட‌ம் ம‌ட்டும் ந‌க‌ர்ந்த‌தாக‌ தெரிய‌வில்லை. "டிக்க‌ட் இல்லைனு சொல்லிட்டு அவ‌னுவ‌ளுக்கு தெரிஞ்ச‌ ஆட்க‌ளுக்கு ம‌ட்டும் ஆயிர‌ம், ஐநூறுனு விக்கிறானுங்க‌" என்று என்னுடைய‌ ப‌க்க‌த்தில் இருந்த‌ தாடிவ‌ச்ச‌ அறுப‌து வ‌ய‌து பெரிசு சொல்லிய‌து.

இது எதுவும் ஆவுற‌து இல்ல‌னு ப‌க்க‌த்தில் இருந்த‌ ந‌ண்ப‌னிட‌ம் "வாட‌ நாம‌ போக‌லாம், அப்புற‌மா வ‌ந்து பாக்க‌லாம்" என்றேன். அவ‌ன் என்னிட‌ம் "ஒரு நிமிட‌‌ம்" என்று சொல்லி கொண்டு ஒரு ப‌க்க‌மாக‌ ந‌ட‌ந்தான். நான் கூட்ட‌த்தை வேடிக்கை பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். அப்போது ஒரு ஹோண்டா காரில் இருந்து கூலிங்கிளாஸோடு இற‌ங்கிய‌ ந‌ப‌ர் நேராக‌ சைக்கிள் நிறுத்த‌ காசு வ‌சுலிப்ப‌வ‌ரை நோக்கி சென்றான். அவ‌ரிட‌ம் சென்று மூன்று ஆயிர‌ம் ரூபாய் நோட்டை நீட்டி என‌க்கு மூன்று டிக்க‌ட் வேண்டும் என்றான். யோவ் டிக்க‌ட் எதுவும் இல்லையா!! போய்யா என்று சுத்த‌ சென்னை பாஷையில் க‌த்தினார். அப்ப‌டியும் அவ‌ரிட‌ம் ந‌ம்ம‌ கூலுங்கிளாஸ் ஹீரோ கெஞ்சி கொண்டிருந்தான்.

அப்ப‌டியே ம‌றுப‌க்க‌ம் திரும்பினால் குடும்ப‌ த‌லைவ‌ர் ஒருத்த‌ர் த‌ன் குடும்ப‌ த‌லைவியிட‌ம் டிக்க‌ட் காசை திணித்து "நீ போய் கேளு" அப்ப‌த்தான் டிக்க‌ட் த‌ருவானுங்க‌ என்று சொல்லிகொண்டிருந்தார். அந்த‌ த‌ங்க‌ம‌ணி அம்மா ம‌ருங்க‌ ம‌ருங்க‌ விழித்து கொண்டிருந்தார்க‌ள்.

கூட்ட‌த்தில் இருந்து க‌ரை வேட்டி, ச‌ட்டை போட்ட‌ ஆளு ஒருத்த‌ர் நேராக‌ தியேட்ட‌ருக்குள் நுழைந்தார். அவ‌ரை பார்த்த‌வுட‌ன் வாச‌ல் தானாக‌ திற‌ந்த‌து. அவ்ர் பின்ன‌டியே ஒரு குடும்ப‌ம் உள்ளே நுழைந்த‌து. இப்ப‌டி வ‌ருவோரையும், போவோரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த‌ என்னை "ஒரு நிமிட‌‌ம்" என்று சொல்லிவிட்டு போன‌ ந‌ண்ப‌ன் அரை ம‌ணி நேர‌ம் க‌ழித்து வ‌ந்து கையை பிடித்தான்.

என்ன‌டானு கேட்டேன், என‌க்கு தெரிஞ்ச‌ ஒருத்த‌ரிட‌ம் டிக்க‌ட் இருக்கு ஆயிர‌த்து ஐநூறு ரூபாய் கொடுத்தால் இர‌ண்டு டிக்க‌ட் கொடுப்பார் என்றான். போடா வென்று!!!!!!!! இன்னும் இந்த‌ மாச‌ம் முடிய‌ ப‌தின‌ஞ்சு நாளு இருக்கு என்னிட‌ம் செல‌வுக்கு இருக்கிற‌தே அவ்வ‌ள‌வு தான். வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்ட‌ல்ல‌ கொத்து புரோட்டா சாப்பிட‌லாம் என்று இழுத்து வ‌ந்தேன்.

60 கோடி ரூபாய் ப‌ட்ஜெட்ல‌ தாயாரித்த‌ "சிவாஜி" ப‌ட‌த்திற்கே இந்த‌ அள‌வு டிக்க‌ட் விலை என்றால்(அதுவும் சென்னைக்கு அவுட்ட‌ர்) இதை போல் மூன்று ம‌ட‌ங்கு அதிக‌ ப‌ட்ஜெட்ல‌ த‌யாரித்த‌ "எந்திர‌ன்" ப‌ட‌த்திற்கு முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் என்ன‌ டிக்க‌ட் விலை வைப்பார்க‌ள் நினைக்க‌வே த‌லை சுத்துது. ஆனா அந்த‌ காமெடி எல்லாம் பார்க்க‌தான் என‌க்கு இந்த‌ வ‌ருட‌ம் கொடுத்து வைக்க‌வில்லை.... ஹி.. ஹி... "எல்லாம் ந‌ன்மைக்கே"

======================================================


.

.

Tuesday, August 3, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்..??!!



த‌ல‌(த‌லையாய‌) ந‌ண்ப‌ர் நாஞ்சில் பிர‌தாப் அழைப்பை ஏற்று இந்த‌ தொட‌ர்ப‌திவு:

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நாடோடி

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இது என்னுடைய‌ உண்மையான‌ பெய‌ர் இல்லை. என‌க்கு பெற்றோர் வைத்த‌ பெய‌ர் ஸ்டீப‌ன். ப‌டித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல‌ ஆர‌ம்பித்த‌து முத‌ல் என்னுடைய‌ நாடோடி வாழ்க்கை ஆர‌ம்ப‌மாகிற‌து. தொட‌ர்ச்சியான‌ ஓட்ட‌ங்க‌ள் தான்(மார‌த்தானா என்று கேட்க‌ப்ப‌டாது), இதுவ‌ரையிலும் தொட‌ர்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌து. என‌வேதான் "நாடோடி" என்று இந்த‌ பெய‌ரை வைத்தேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

நின்ற‌ பொருள் அசைய‌வும், அசைந்த‌ பொருள் நின்ற‌தும்... நான் கால‌டி எடுத்து வைத்த அன்னைக்கு ந‌ட‌ந்த‌து என்று சொன்ன‌ நீங்க‌ ந‌ம்ப‌வா போறீங்க‌!!!!‌ ம‌லையேறி சிக‌ர‌ம் தொட்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்க்கும் ஒருவ‌ர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து வீட்டு சுவ‌ர் ஏறி குதிப்ப‌தில்லையா?... அதுபோல் தான்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தின‌மும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ வாச‌க‌ர் க‌டித‌ங்க‌ளை நானே எழுதி என‌து மெயிலுக்கு போஸ்ட் ப‌ண்ணுவ‌தில் இருந்தே உங்க‌ளுக்கு தெரியும் நான் எவ்வ‌ள‌வு பிர‌ப‌ல‌ம் என்று!!!!!. இருந்தாலும் இன்னும் ஒரு வேலை பாக்கியிருக்கு என்னிடைய‌ வ‌லைப்ப‌திவின் பெய‌ரை எவ‌ர‌ஸ்ட் சிக‌ர‌த்தில் ப‌திக்க‌ வேண்டும் என்ப‌து தான். அதையும் ப‌ண்ணிட்டேன் என்றால் "ப‌திவுல‌க‌ வ‌ர‌லாற்றில் முத‌ன் முறையாக‌" என்று போட்டுவிட‌லாம். அத‌ற்க்கான‌ முத‌ற்க்க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌து, விரைவில் முடிந்துவிடும்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில‌ சொந்த‌ விச‌ய‌ங்க‌ளை எழுதியிருக்கிறேன். ப‌ல‌ க‌ருப்பு, வெள்ளை ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு அழாகாக‌ வ‌ண்ண‌ம் பூசியும் எழுதியுள்ளேன். விளைவு பெரிதாக‌ ஒன்றும் இல்லை. இதுவ‌ரையில் யாரிட‌ம் இருந்தும் வெளியிட‌ப்ப‌ட‌ முடியாத‌ அள‌வு பின்னூட்ட‌ம் பெற்ற‌தும் இல்லை. யாருக்கும் நானும் அப்ப‌டி இட்ட‌துமில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

க‌ண்டிப்பாக‌ பொழுதுபோக்கிற்காக‌ தான் ஆர‌ம்பித்த‌து.. ச‌ம்பாத்திய‌ம் எல்லை க‌ட‌ந்து ப‌ல‌ ந‌ல்ல‌ ந‌ட்புக‌ளை..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு க‌ண்ணே க‌ண்ணுனு தான் இருந்த‌து. வீடியோக்க‌ள் அதிக‌மாக‌ ப‌திவேற்ற‌ம் செய்வ‌தால் வ‌லைப்ப‌திவு திற‌ப்ப‌த‌ற்க்கு அதிக‌ நேர‌ம் எடுத்து கொள்கிற‌து என்று ந‌ண்ப‌ர்க‌ள் தெரிவித்த‌தால், வீடியோக்க‌ளை ம‌ட்டும் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ ஒரு வ‌லைப்ப‌திவு ஆர‌ம்பித்தேன். மொத்த‌ம் இர‌ண்டு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

"தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா" இந்த‌ பாட‌லின் முத‌ல் வ‌ரியை ஞாப‌க‌ம் வைத்த‌ அள‌விற்க்கு இந்த‌ வ‌ரியை ஞாப‌க‌ம் வைக்க‌ த‌வ‌றி விடுகிறோம்..

=========================================

என்‌ கையில‌ கிடைத்த‌ தீப்ப‌ந்த‌த்தை அப்ப‌டியே அணைக்க‌ விருப்ப‌ம் இல்லை. அத‌னால‌ ந‌ம்ம‌ "த‌மிழ் உத‌ய‌ம்" ர‌மேஷ் அவ‌ர்க‌ளை இந்த‌ ப‌திவை தொட‌ர‌ அழைக்கிறேன்..

.



.


.

Tuesday, July 27, 2010

இந்த‌ பொண்ணுங்க‌ளே இப்ப‌டித்தான்!!!..

1) வாத்தியாரு போர்டுல எழுதி போடுறதுல அவரு ஸ்பீடுக்கு எழுதமுடியாமல், எல்லோரும் எழுதிட்டீங்களானு கேட்கும் போது "நான் இன்னும் முடிக்கலனு" சொல்லுறதுக்கு கூச்சபட்டு இருந்திட்டு, வாத்தியாரு அழிச்சி முடிச்சப்புறம் நம்ம கிட்ட வந்து உன் நோட்டை கொடு எழுதிட்டு தந்திடுறேனு கெஞ்சுவார்கள். சரினு நோட்டை கொடுத்துவிட்டா மறுநாளு நோட்டு தண்ணில நனைஞ்சது போல இருக்கும், என்னானு கேட்டா என் தம்பி ஒண்ணுக்கு அடிச்சிட்டானு கூலா சொல்லுவார்கள்.

2) குளிக்காம, பல்லும் தேய்க்காம புது துணியை மட்டும் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டு, நாம குளிச்சிட்டு, பல்லும் தேய்ச்சிட்டு நேற்று போட்ட டிரஸை இன்னைக்கு போட்டு வந்தத பற்றி கிண்டல் பண்ணுவார்கள். அவர்கள் மூஞ்சி கூட கழுவாமல் பவுடர் போட்டதை கண்ணுல இருக்கிற கூழை காட்டி கொடுத்திரும், அதை நாம சொன்னா மூஞ்சை தூக்கி வச்சிட்டு நாலு நாளு பேச மாட்டார்கள்!!!

3) ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போகும் போது ஏவானவது புதுசா வேற ஸ்கூல்ல படிச்ச பையன் ஒருத்தன் வந்து சேருவான். இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.

4) அப்படியே சைலண்டா நம்மள கழட்டிவிட்டுருவார்கள். இவ ஏன் நம்மள கழட்டி விட்டானு ஆரய்ச்சில இறங்கி, கொஞ்சம் படிச்சிட்டு இருந்த படிப்பையும் கோட்டை விட வச்சிருவார்கள். அப்படியே விட்டுட்டாலும் பரவாயில்லை. தீடிரெனு ஒரு நாள் வந்து எனக்கு பைசம் சைட்டைவம்(பட்டாணி) செடியின் பூ ஒண்ணு வேணுமுனு இளிச்சிட்டு வந்து நிப்பார்கள். நாமளும் காடு மேடுனு அலைஞ்சி திரிஞ்சி கொண்டு வந்து கொடுத்தா!!. மகேஷ் இரண்டு கொண்டு வந்தான், எனக்கும் ஒண்ணும் கொடுத்தான்னு வழிவார்கள்.

5) உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!



6) வாத்தியாரு கேட்ட கேள்விக்கு பதில் தெரியலனு நாம எழுந்து நிக்கும் போது, அவளிடம் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லி வாத்தியாரின் கோபத்தை கிளறி விடுவார்கள்.

7) நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன வாத்தியாரு, இன்னைக்கு மறந்து பாடம் நடத்த போனா, முத ஆளா எழுந்து சார் இன்னைக்கு பரிட்சை வைக்கிறேன்னு நேத்தைக்கு சொன்னீங்கனு எடுத்து கொடுப்பார்கள்.

8) ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநாளே பொண்ணுங்க எல்லாம் எழுதி கொண்டு வந்து அவருடைய டேபிளில் அடுக்கி விடுவார்கள். நாம இன்னும் அந்த ரெக்கார்டு நோட்டை கடையில் இருந்து வாங்கியே இருக்க மாட்டோம்.

9) காலையிலேயே இன்னைக்கு எந்த வாத்தியாரு எல்லாம் வரலேனு லிஸ்ட் எடுத்து அவருடைய பாடவேளையில் விளையாட போய்விடலாம் என்று பிளான் பண்ணி, கிரிக்கெட் விளையாட டீம் எல்லாம் பிரிச்சி வச்சிட்டு அந்த பாட வேளைக்கு காத்திருந்தா, நல்ல பிள்ளையாட்டு இந்த பொண்ணுங்க டீச்சர்ஸ் ரூம்க்கு போய் ஆணியில்லாமல் தூங்கிட்டு இருக்கும் ஏதாவது டீச்சரை கூட்டி வந்து மொக்கை போட வச்சிடுவாங்க.

10) A+B வெக்டார் இல் ஆரம்பித்து X+Y+Z-வெக்டார் வரைக்கும் ஒரு 70MM இங்கிலிஷ் படத்தை ஓட்டிட்டு நம்ம கணக்கு டீச்சர் புரிஞ்சுதானு நம்மளை பார்த்து கேக்காமல் பொண்ணுங்களை பாத்து கேக்கும் போது, பொண்ணுங்க எல்லாம் ஒண்ண சேர்ந்து ஆமா.. ஆமானு மேலும் கீழும் தலையை ஆட்டுவார்கள். அவங்களை கேட்டுட்டு இந்த பக்கம் நம்மளை பார்த்து கேக்கும் போது நம்ம மட்டும் என்னா?.. இல்லைனா தலையை ஆட்ட முடியும் நாமளும் கோயில் மாடு போல தலையை ஆட்ட வேண்டியது தான். அதுக்கு மாறா எவனாவது தலையை ஆட்டுறதை டீச்சர் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். அந்த பொண்ணுங்க எல்லாம் பாடத்தை கவனிக்க வருது, நீங்க எதுக்குடா வர்றீங்கனு ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு பயந்தே கமுக்கமா உக்கார்ந்து விடுவோம். டீச்சர் போனதும் இந்த பொண்ணுங்க கிட்ட என்ன புரிஞ்சுதுனு கேட்டா... ஒண்ணும் புரியலைனு கோரஸ் பாடும்...

அட ராமா... ராமா.. இந்த பொண்ணுங்க கூட எல்லாம் என்னை ஏண்டா படிக்க வச்ச?... (இதை க‌வுண்ட‌ம‌ணி வ‌ச‌ன‌ம் போல் ப‌டிக்க‌ வேண்டாம்..ஹி..ஹி..)

....................ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.....................

இதுக்கு செய்வினை, செய‌ப்பாட்டுவினை ஆற்றுப‌வ‌ர்க‌ள் எல்லாம் மேலே உள்ள‌ வாச‌க‌த்தை ந‌ல்லா திரும்ப‌ திரும்ப‌ ப‌டிச்சிட்டு ஆத்துமாறு கேட்டுகொள்கிறேன் :))

குறிப்பு: நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலான‌ந்தாவின் ஆசிர‌ம‌த்தில் முத‌ன்மை சிஷ்ய‌ன் ஆகுவ‌த‌ற்கு அனும‌தி வாங்கி விட்டேன். அத‌னால‌ இதுக்கு க‌மெண்ட் போடுப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டில் கிடைக்கும் ஆத‌ர‌வுக்கு(பூரிக்க‌ட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க‌ எச‌மான் குத்துங்க‌.. ஆனா ஒரு சின்ன‌ க‌ண்டிஷ‌ன் "பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..

.

.

.

Friday, July 23, 2010

சிரிக்க‌, ர‌சிக்க‌ ம‌ட்டும்

ஒரு ஆளு டாக்ட‌ரிட‌ன் போனான்;

ஆளு: டாக்ட‌ர் நான் ரெம்ப‌ நாள் வாழ‌னும் அதுக்கு நான் என்ன‌ ப‌ண்ண‌னும்?

டாக்ட‌ர்: அப்ப‌ நீங்க‌ உட‌னே க‌ல்யாண‌ம் ப‌ண்ணுங்க‌.

ஆளு: அது எப்ப‌டி என‌க்கு உத‌வியா இருக்கும் டாக்ட‌ர்?

டாக்ட‌ர்: ரெம்ப‌ நாள் வாழ‌னும் என்கிற‌ ஆசை உங்க‌ளுக்கு வ‌ர‌வே வ‌ராது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கேள்வி: வாழும் நாட்க‌ள் ஆண்க‌ளை விட‌ பெண்க‌ளுக்கு அதிக‌மாக‌ இருக்கிற‌தே எப்ப‌டி?

ப‌தில்: க‌டையில் பொருட்க‌ள் வாங்குப‌வ‌ர்க‌ளை விட‌, அத‌ற்கு ப‌ண‌ம் செலுத்துப‌வ‌ர்க‌ளுக்கு தான் ஹார்ட் அட்டாக் வ‌ரும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

முழுமைக்கும், முடிவ‌த‌ற்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

உன‌க்கு ந‌ல்ல‌ ம‌னைவி அமைந்தால் அது முழுமை, இல்லையென்றால் உன் க‌தை முடிந்துவிடும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

இர‌ண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்க‌ள்;

ஒருவ‌ன்: நான் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்னு நினைக்கிறேன் ம‌ச்சி. ஏன்னா வெளியில‌ சாப்பிடுற‌து, துணியை ச‌ல‌வை செய்யுற‌து, துணியை அய‌ன் ப‌ண்ணுற‌து, வீட்டை கிளீன் ப‌ண்ணுற‌து என்று ஒரே பிர‌ச்ச‌னையா இருக்குடா!!!!!

இன்னொருவ‌ன்: நான் டைவ‌ர்ஸ் ப‌ண்ணிக்க‌லாம்னு நினைக்கிறேன் ம‌ச்சி. ஏன்னா நீ மேல‌ சொன்ன‌ எல்லாம் என‌க்கு ட‌புளா செய்ய‌ வேண்டியிருக்குடா!!!!!

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

ஒரு ஆணின் ப‌டிநிலைக‌ள்

நிச்ச‌ய‌தார்த்த‌ம் முடிந்த‌ பின்பு: சூப்ப‌ர்மேன்

திரும‌ண‌ம் முடிந்த‌ பின்பு: ஜென்டில்மேன்

ப‌த்துவ‌ருட‌ம் க‌ழித்து: வாட்ச்மேன்

இருவ‌துவ‌ருட‌ம் க‌ழித்து: டாப‌ர்மேன்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

அப்ப‌டியே இதையும் பார்த்திட்டு போங்க‌...









குறிப்பு: இவை அனைத்தும் என்னுடைய‌ சொந்த‌ க‌ருத்துக்க‌ள் கிடையாது. ம‌ண்ட‌ப‌த்தில் யாரோ எழுதி என‌க்கு மெயில் அனுப்பிய‌வை.

.

.

.

Sunday, July 18, 2010

தாலாட்டும்(டிய‌) ப‌லாம‌ர‌ம்

அந்த‌ பெரிய‌ ப‌லாம‌ர‌ம் என‌து வீட்டின் எல்லையில் தான் இருந்த‌து. த‌டித்த‌ த‌ண்டில் கீழ்நோக்கி கிள‌ந்த‌ வேர்க‌ள் த‌ன் நீட்சியை ம‌ண்ணில் புதைத்திருந்த‌து. மேல்நோக்கி ஓங்கி வ‌ள‌ர்ந்த‌ கிளைக‌ள் நான்கு ப‌க்க‌மும் த‌ன்னுடைய‌ ஆதிக்க‌த்தை செலுத்தியிருந்த‌து. எந்த‌வொரு ப‌ருவ‌ நிலையிலும் அத‌ன் ப‌சுமை ம‌றைவ‌தில்லை.

என‌க்கு அப்போது நான்கு வ‌ய‌து. ம‌ழை "சோ" என்று கொட்டிய‌து, இடியும் மின்ன‌லும் வேறு சேர்ந்து கொண்டு ப‌ய‌முறுத்திய‌து. "உர்" என்ற‌ ச‌ப்த‌த்துட‌ன் காற்று ப‌ல‌மாக‌ அடித்த‌து. வீட்டை சுற்றிலும் இருந்த‌ ம‌ர‌ங்க‌ள் அனைத்தும் காற்றின் வேக‌த்திற்கு ஈடு கொடுத்து சுழ‌ன்று கொண்டிருந்த‌து. தீடிரென‌ "கிரீக்" என்ற‌ ஒலி காதில் ஒலித்த‌து. வீட்டின் திண்ணையில் இருந்து ம‌ழையை ர‌சித்து கொண்டிருந்த‌ அப்பா "ந‌ம‌து ப‌லாம‌ர‌த்தின் கிளையில் விரிச‌ல் ஏற்ப‌ட்டுவிட்ட‌து, முறிந்தாலும் முறிந்து விட‌லாம்" என்றார்க‌ள். என‌க்கு "திக்" என்று இருந்த‌து.

காற்றின் வேக‌ம் குறைந்து, ம‌ழை முற்றிலும் நின்ற‌ பின்பு ஓடி சென்று ப‌லாம‌ர‌த்தை பார்த்தோம். நான்கு ப‌க்க‌மும் ப‌ர‌ப்பியிருந்த‌ கிளையில் ஒரு கிளையில் விரிச‌ல் ஏற்ப‌ட்டிருந்த‌து. அப்பா உட‌ன‌டியாக‌ ம‌ர‌த்தில் ஏறி அந்த‌ விரிச‌ல் ஏற்ப‌ட்டிருந்த‌ கிளையை தேங்காய் நார் க‌யிற்றால் க‌ட்டி, ப‌க்க‌த்தில் இருந்த‌ ப‌ல‌மான‌ கிளையுட‌ன் சேர்த்து க‌ட்டினார். விரிச‌ல் நாள‌டைவில் காணாம‌ல் போன‌து. அந்த‌ ப‌லாம‌ர‌ம் என‌து தாத்தா ந‌ட்டு வைத்தது என்று அப்பா சொல்வார்க‌ள்



வ‌ருட‌த்திற்கு வ‌ருட‌ம் அந்த‌ ம‌ர‌த்தின் வ‌ள‌ர்ச்சி அபார‌மாக‌ இருந்த‌து. அத‌ன் வேர்க‌ள் ம‌ண்ணில் இருந்து வெளியில் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. சுற்றி ப‌ட‌ந்திருந்த‌ வேர்க‌ள் தான் எங்க‌ளுக்கு வ‌ண்டி, அந்த‌ வேர்க‌ளில் முத‌ன்மையாக‌ புடைத்திருந்த‌ வேர்தான் டிரைவ‌ர் உக்காரும் இட‌ம். அதில் பெரும்பாலும் நான் தான் இருப்பேன். என‌து அண்ண‌ன் தான் டிக்க‌ட் கொடுப்ப‌வ‌ர். அந்த‌ ப‌லாம‌ர‌த்தின் ப‌ழுத்த‌ இலைதான் டிக்க‌ட், வ‌ண்டியில் ஏறுப‌வ‌ர்க‌ளுக்கு அந்த‌ இலையில் குச்சியால் ஓட்டையிட்டு கொடுப்பான். வேரில் அம‌ர்ந்த‌ வாறே, டுர்..டுர்ர்ர் என்ற‌ ச‌ப்த்த‌துட‌ன் வ‌ண்டி ப‌ய‌ண‌ம் தொட‌ரும். ப‌க்க‌த்தில் உள்ள‌‌ ஊர்க‌ளில் பெய‌ரை சொல்லி ச‌ப்த‌த்தை நிறுத்துவேன். ஒவ்வொருவ‌ரும் இற‌ங்குவார்க‌ள்.

ப‌லாம‌ர‌த்தில் கிளைக‌ள் அட‌ந்து வ‌ள‌ந்திருந்த‌தால் சூரிய‌னின் க‌திர்க‌ள் முற்றிலும் மேலே விழுவ‌து இல்லை, என‌வே பொழுதோர‌மும் அத‌ன் அடியில் தான் எங்க‌ளின் பொழுது போகும். அக்கா, அண்ண‌னுட‌ன் சேர்ந்து கொண்டு கூட்டாஞ்சோறு செய்து விளையாடும் போது நான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்ப‌து இந்த‌ ப‌லாம‌ர‌த்தை தான். ம‌ண்ணில் வீடுக‌ள் க‌ட்டி, இலை த‌ழைக‌ளை ப‌றித்து வ‌ந்து ச‌மைய‌ல் செய்து விளையாடுவ‌து த‌னிசுக‌ம். மாலைநேர‌ம் ஆகிவிட்டால் கையில் புளிய‌ங்கொட்டையுட‌ன் ப‌லாம‌ர‌த்த‌டிக்கு கிள‌ம்பி விடுவோம். ஏற்க‌ன‌வே தோண்டி வைத்தியிருக்கும் பாண்டி விளையாட்டு குழியில் நிர‌ப்பி ஆட‌ துவ‌ங்கிவிடுவோம்.

ம‌ர‌த்தில் இருந்து ப‌ழுத்து விழும் இள‌ம‌ஞ்ச‌ள் இலைக‌ளை சேக‌ரித்து அவைக‌ளை வைத்து ராஜா, ராணி கீரிட‌ம் செய்வ‌து த‌னி அழ‌கு. அதில் என‌து அண்ண‌ன் கை தேர்ந்த‌வ‌ன். அந்த‌ இலையின் ஒரு முனையை ம‌ற்றொரு முனையுட‌ன் சேர்ந்து வைத்து தென்ன‌ங்குச்சியால் பிணைத்து அழ‌காக‌ கோர்த்து விடுவான். அதை த‌லையில் அணிந்து கொண்டு வ‌ல‌ம் வ‌ருவ‌தும் உண்டு. அதை நினைக்கும் போது, க‌ற்கால‌ ம‌னித‌ர்க‌ள் வாழ்க்கை தான் ஞாப‌க‌ம் வ‌ரும்.

வ‌ச‌ந்த‌ கால‌ங்க‌ள் வ‌ர‌ தொட‌ங்கிவிட்டால் அந்த‌ ம‌ர‌த்தில் காக்கையின் கூடுக‌ளை பார்க்க‌ முடியும். குறைந்த‌து இர‌ண்டு கூடுக‌ளாவ‌து இருக்கும். காலையில் எழுத‌வுட‌ன் முத‌லில் வ‌ந்து பார்ப‌து இந்த‌ காக்கையின் கூட்டை தான், சிறு குச்சிக‌ளால் க‌ட்ட‌ப‌ட்டிருக்கும் கூட்டில் உள்ள‌ முட்டைக‌ளை கீழே இருந்து பார்த்து ச‌ந்தோச‌ப்ப‌ட்டு கொள்வேன். அவைக‌ள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும் வ‌ரை அந்த‌ ம‌ர‌த்தில் எப்போதும் காக்கைக‌ளை பார்க்க‌ முடியும். முட்டையிட‌ வ‌ரும் சோம்பேறி குயிலுட‌னும் ச‌ண்டையும் ந‌ட‌க்கும். இந்த‌ காக்கைக‌ளின் பாதுகாப்பையும் மீறி எப்ப‌டியாவ‌து குயில் அந்த‌ கூடுக‌ளில் முட்டையிட்டுவிடும். அந்த‌ முட்டைக‌ள் குஞ்சு பொரித்து, சிறிது வ‌ள‌ரும் போது அது குயில் என்று தெரிந்த‌வுட‌ன், காக்கைக‌ள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை கொத்தி துர‌த்தும்.

ஓண‌ ப‌ண்டிகை கால‌ங்க‌ளில் ஊஞ்ச‌ல் க‌ட்டுவ‌து எங்க‌ள் ஊரில் வ‌ழ‌க்க‌ம். எல்லாருடைய‌ வீடுக‌ளிலும் சின்ன‌ ம‌ர‌ங்க‌ளில் தான் ஊஞ்ச‌ல் க‌ட்டியிருப்பார்க‌ள். ஆனால் எங்க‌ள் வீட்டில் ம‌ட்டும் தான் இந்த‌ பெரிய‌ ப‌லாம‌ர‌த்தின் கிளையில் பெரிய‌ வ‌டாம் க‌யிறு கொண்டு க‌ட்டி த‌ருவார்க‌ள். அதில் ஆடுவ‌த‌ற்கு என்று ப‌ல‌ அக்கா, அண்ண‌ன்க‌ள் எங்க‌ள் வீட்டிற்கு வ‌ருவார்க‌ள்.

இந்த‌ ம‌ர‌த்தில் காய்க்கும் பலாப்ப‌ழ‌மும் சுவையாக‌ இருக்கும். எங்க‌ள் ஊரில் உள்ள‌ பெரும்பாலான‌ வீடுக‌ளில் பலாம‌ர‌ங்க‌ள் இருக்கும். அத‌னால் ப‌லாப்ப‌ழ‌ம் விற்ப‌னை என்ப‌து எங்க‌ள் ஊரில் இருக்காது(இப்போது த‌லைகீழ்). எங்க‌ள் ம‌ர‌த்தில் காய்க்கும் ப‌ழ‌த்தை வெட்டி அந்த‌ ம‌ர‌த்தின் அடியிலேயே வைத்து "யாருக்கெல்லாம் வேணுமோ அவ‌ர்க‌ள் எடுத்து போங்க‌ள்" என்று எங்க‌ள் வீட்டிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ளிட‌ம் என‌து அப்பா சொல்வார்க‌ள். அவ‌ர்க‌ள் வீட்டில் ம‌ர‌ங்க‌ள் வைத்திருந்தாலும் "இந்த‌ ம‌ர‌த்தின் ப‌ழ‌ம் ந‌ல்லா இருக்கும்" என்று சொல்லிவிட்டு எடுத்து போவார்க‌ள். ஊரில் நான் இருக்கும் வ‌ரை அந்த‌ ம‌ர‌த்தின் ப‌ழ‌ங்க‌ளை விற்ற‌து கிடையாது.

இர‌ண்டு மாத‌த்திற்கு முன்பு ஊருக்கு போயிருந்த‌ போது, வீட்டின் எல்லையில் இருந்த‌ பலாம‌ர‌த்தின் இட‌த்தில் ப‌ள்ள‌ம் ம‌ட்டுமே இருந்த‌து. ம‌ர‌ம் வெட்ட‌ப‌ட்டிருந்த‌ அடையாள‌ங்க‌ள் ம‌ட்டும் தெரிந்த‌ன‌, கோப‌த்துட‌ன் வீட்டிற்குள் நுழைந்தேன். வீட்டின் ஹாலில் புதிதாக‌ செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தாலான‌ தொட்டிலில் என‌து குழ‌ந்தை அழ‌காக‌ சிரித்து கொண்டிருந்தான்.

குறிப்பு: இது என்னுடைய‌ ஐம்ப‌தாவ‌து ப‌திவு. என‌க்கு விருது கொடுத்த‌ அனைத்து ச‌கோத‌ர‌/ச‌கோத‌ரிக‌ளுக்கு என் ந‌ன்றிக‌ள். தொட‌ந்து என‌க்கு பின்னூட்ட‌ம் இட்டு உற்சாக‌ ப‌டுத்தும் அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.
.


.

.

Tuesday, July 13, 2010

உண‌ர‌ப்ப‌டாத‌ நிமிட‌ங்க‌ள்...

இந்தாப்பா!!!... உன‌க்கு 210 ரூபா சாம்ப‌ள‌ம் போட்டுருக்கேன். வெளியில‌ 225 ரூபா வ‌ரைக்கும் ச‌ம்ப‌ள‌ம் இருக்கு, ஆனா அவ‌ங்க‌ எல்லாம் உன‌க்கு ரெகுல‌ரா வேலை த‌ர‌ மாட்டாங்க‌. ஆனா எங்கிட்ட‌ அப்ப‌டியில்லை, வார‌த்தில் ஆறு நாளும் வேலையிருக்கும். ச‌ம்ப‌ள‌ம் உன‌க்கு எப்ப‌டி வேணுமோ அப்ப‌டி கொடுத்திருவேன். டெய்லி வேணுன்னாலும் ச‌ரி, வார‌த்திற்கு என்றாலும் ச‌ரி.. என்று சைடு ஸ்டாண்ட் போட்ட‌ டுவீல‌ரில் காலை த‌ரையில் ஊன்றிய‌ ப‌டி உக்கார்ந்து கொண்டு முன்னால் நின்று கொண்டிருந்த‌‌ ச‌ண்முக‌த்திட‌ம் பேசி கொண்டிருந்தார் காண்டிராக்ட‌ர் ந‌வ‌நீத‌ன்.

ஐயா!!! இந்த‌ காசை வ‌ச்சிதான் வீட்டுக்கு தேவையான‌ சாப்பாட்டு செல‌வை பாக்க‌ணும், அத‌னால‌ நீங்க‌ என‌க்கு அன்னைக்கு உள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை அன்னைக்கே கொடுத்துடுங்க‌ என்று ப‌தில‌ளித்தான் ச‌ண்முக‌ம்.

அப்ப‌டியா!!!.. இதுல‌ 200 ரூபா இருக்கு... மீத‌ம் ப‌த்து ரூபாயை நாளைக்கு சேர்த்து கொடுத்துறேன் .. என்று இர‌ண்டு நூறு ரூபா நோட்டை ச‌ண்முக‌த்திட‌ம் நீட்டினார்.

அந்த‌ நோட்டுக‌ளை கையில் வாங்கி கொண்டு, அய்யா!!! அந்த‌ ப‌த்து ரூபாயையும் சேர்த்து கொடுத்துடுங்க‌.. உங்க‌ளுக்கு இருக்கிற‌ டென்ச‌னில் நீங்க‌ நாளைக்கு இந்த‌ ப‌ண‌த்தை ம‌ற‌ந்திடுவீங்க‌... நானும் ப‌த்து ரூபாயை கேட்க‌ கூச்ச‌ ப‌ட்டு விட்டுருவேன்.. என்று கிடுக்குபிடி போட்டான் ச‌ண்முக‌ம்.

ந‌ல்லா வெவ‌ர‌மாதான் இருக்கிறா!!!!... நாளைக்கு இந்த‌ இட‌த்துக்கே வ‌ந்துரு.. இந்த‌ உன்னுடைய‌ ப‌த்து ரூபா.. என்று த‌ன் மேல் ச‌ட்டை பாக்க‌ட்டில் இருந்த‌ ப‌த்து ரூபா தாளை எடுத்து கொடுத்துவிட்டு வ‌ண்டியை ஸ்டார்ட் ப‌ண்ணினார் ந‌வ‌நீத‌ன்.

ப‌ண‌த்தை வாங்கி கொண்டு ப‌ஸ் ஸ்டாப்பை நோக்கி ந‌ட‌ந்தான் ச‌ண்முக‌ம். அந்த‌ ப‌ஸ் ஸ்டாப் வ‌ழ‌க்க‌த்தை விட‌ கூட்ட‌ம் குறைவாக‌வே இருந்த‌து. ச‌ண்முக‌மும் ஒரு ஓர‌மாக‌ நின்று கொண்டான். அரை ம‌ணி நேர‌ம் ஆயிற்று, அவ‌ன் போக‌ வேண்டிய‌ இட‌த்திற்கான‌ ப‌ஸ் இன்னும் வ‌ர‌வில்லை. க‌டுப்பாக‌ இருக்க‌வே எதிர்ப‌க்க‌த்தில் இருந்த‌ பெட்டிக்க‌டையை நோக்கி போனான்.

அந்த‌ பெட்டிக்க‌டையில் இருந்த‌ வ‌ய‌தான‌ பெரிய‌வ‌ரிட‌ம், சிக‌ரெட் ஒண்ணு கொடுங்க‌?.. என்று கேட்டான். பெரிய‌வ‌ர் க‌டையில் இருந்த‌ முழு சிக‌ரெட் பாக்கெட் ஒன்றை பிரித்து அதில் இருந்து ஒன்றை எடுத்து ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார். அதை வாங்கி கொண்டு சுவ‌ரில் மாட்டியிருந்த‌ எல‌ட்ரிக் காயிலில் ப‌த்த‌ வைத்து கொண்டு, பாக்க‌ட்டில் இருந்த‌ ஐந்து ரூபாயை எடுத்து பெரிய‌வ‌ரிட‌ம் கொடுத்தான் ச‌ண்முக‌ம்.

க‌டைக்கார‌ பெரிய‌வ‌ர் சிக‌ரெட் விலை 2.50 போக‌ ஒரு சாக்லேட்டும் 2 ரூபாயும் எடுத்து ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார். என்ன‌ பெரிசு!!!.. இப்ப‌டி வேற‌ பிசின‌ஸ் ப‌ண்ணுறியா?... தூர‌ போடுகிற‌ சாக்லெட்டை எங்கிட்டே கொடுக்கிறே!!!.. என‌க்கு வேண்டாம் என்று திருப்பி கொடுத்தான் ச‌ண்முக‌ம். இல்ல‌ த‌ம்பி!!!.. இப்ப‌ தான் என்னிட‌ம் இருந்த‌ சில்ல‌றை எல்லாம் பொறுக்கி பிஸ்க‌ட் கார‌ருக்கு கொடுத்தேன், அத‌னால‌ 50 காசு சில்ல‌றை என்னிட‌ம் இல்லை, அதுக்கு தான் த‌ம்பி நான் சாக்லெட் கொடுத்தேன் என்றார்.

அதை என்னிட‌ம் சொல்ல‌ வேண்டிய‌து தானே!!!... நான் உன‌க்கு சில்ல‌றை த‌ருகிறேன் என்று ப‌ஸ்க்கு வைத்திருந்த‌ சில்ல‌றையை எடுத்து பெரிய‌வ‌ரிட‌ம் கொடுத்து விட்டு ஐந்து ரூபாயை திரும்ப‌ வாங்கினான் ச‌ண்முக‌ம். ரோட்டில் ப‌ஸ் வ‌ருவ‌து தெரிய‌வே ப‌ஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினான்.

ப‌ஸ் ஸ்டாப்பில் வ‌ண்டி நிற்ப‌த‌ற்கு முன்ன‌ரே வ‌ண்டியில் குதித்து ஏறி, காலியாக‌ இருந்த‌ சீட்டில் உக்கார்ந்து கொண்டான். டிக்க‌ட் கொடுக்க‌ வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் "ஒரு சிம‌ண்ட் ரோடு" என்று ஐந்து ரூபாய் தாளை நீட்டினான். ஒரு டிக்க‌ட்டும் கூட‌வே ஒரு ரூபாய் நாணைய‌த்தையும் கொடுத்து விட்டு ப‌ஸ்சில் முன்னால் போனார் க‌ண்ட‌க்ட‌ர். சார்!!!!.. டிக்க‌ட் 3.50 தானே போட்டிருக்கு நீங்க‌ என்ன‌ 4 ரூபாய் எடுத்திருக்கீங்க‌ என்று க‌த்தினான் ச‌ண்முக‌ம். த‌ம்பி சில்ல‌றை இல்ல‌ப்பா!!!... வ‌ந்த‌வுட‌ன் கொடுத்திடுறேன் என்றார் க‌ண்ட‌க்ட‌ர்.

முன்னால் எல்லோருக்கும் டிக்க‌ட் கொடுத்துவிட்டு வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ரிட‌ம், சார் "50 காசு" என்றான் ச‌ண்முக‌ம். இன்னும் சில்ல‌றை வ‌ர்ல‌ த‌ம்பி..இற‌ங்கும் போது கொடுத்திடுறேன் என்றார். ச‌ண்முக‌ம் இற‌ங்குவ‌த‌ற்கு முன்னாடி ஸ்டாப் வ‌ந்த‌வுட‌னேயே எழுந்து க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் போய் நின்று கொண்டான், சார்!!!.. நான் அடுத்த‌ ஸ்டாப் இற‌ங்க‌ணும் என‌க்கு அந்த‌ 50 காசு என்றான். த‌ம்பி!!... இந்த‌ நீல‌ ச‌ட்டை த‌ம்பியும் இந்த‌ ஸ்டாப்புல‌ தான் இற‌ங்க‌ணும், அவ‌ரும் நீங்க‌ளும் பிரிச்சி எடுத்துக்குங்க‌ என்று 1 ரூபாயை ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார்.

அடுத்த‌ ப‌ஸ் ஸ்டாப்பில் இருவ‌ரும் இற‌ங்கின‌ர். நீல‌ ச‌ட்டைக்கார‌ர் ச‌ண்முக‌த்திட‌ம்; என‌க்கு அவ‌ச‌ர‌மா போக‌னும், நீங்க‌ அந்த‌ 1 ரூபாயை வ‌ச்சுக்குங்க‌ அடுத்த‌ முறை பார்க்கும் போது கொடுங்க‌ என்று சொல்லி கொண்டு விருவிரு என்று ந‌ட‌ந்தார். "போடா போ உன‌க்கு 50 காசின் அவ‌சிய‌ம் தெரிய‌ல‌, இந்த‌ 50 காசு இல்ல‌னா நாளைக்கு அந்த‌ க‌ண்ட‌க்ட‌ரு உன‌க்கு டிக்க‌ட் த‌ர‌ மாட்டான்" என்று ம‌ன‌திற்குள் நினைத்தான் ச‌ண்முக‌ம்.



ப‌ஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்ச‌ம் தூர‌த்தில் இருந்த‌ டாஸ்மாக் க‌டையை நோக்கி ந‌ட‌ந்தான் ச‌ண்முக‌ம். டாஸ்மாக் க‌டை வ‌ழ‌க்க‌த்தை விட‌ கூட்ட‌மாக‌ இருந்த‌து. ச‌ண்முக‌ம் கூட்ட‌த்தில் நுழைந்து ஒரு "ஒல்ட்ம‌ங் குவாட்ட‌ர்" என்றான். "யோவ் நாளைக்கு க‌டை திற‌க்காது, ஸ்டாக் எல்லாம் முடிஞ்சி போச்சி, இப்ப‌ வேணுன்னா ஒரு குவாட்ட‌ர் 100 ரூபா!!! இருந்த‌ கொடு இல்ல‌னா போயிட்டே இரு" என்று விர‌ட்டினான் சேல்ஸ்மேன். "இந்தாங்க‌ 100 ரூபா குவாட்ட‌ர் ஒண்ணு கொடுங்க‌" என்று 100 ரூபாய் தாளை சேல்ஸ்மேனின் கையில் திணித்தான் ச‌ண்முக‌ம்.

.

.

.
Related Posts with Thumbnails