Showing posts with label ப‌திவுல‌க‌ம். Show all posts
Showing posts with label ப‌திவுல‌க‌ம். Show all posts

Friday, July 15, 2016

சாருவின் அறிவுரைகள்_யாருக்கு?

சாருவின் கட்டுரைகளை இப்போது படிக்கும் போதெல்லாம் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்திருக்கும் வயசான பெரிசுகள் இன்றைய இளைய தலைமுறையை பார்த்து "லோகம் கெட்டு போயிடிச்சி பார்த்தேளா!" என்று புலம்பும் விதமாகத் தான் இருக்கிறது.  எங்கேயோ ஒரு முலையில் அமர்ந்து புலம்பும் பெரிசாக இவரும் இருப்பாரானால் நாமும் "போகட்டும்" என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால் இவரின் கழிவிரக்க புலம்பல்கள் எல்லாம் பத்திரிக்கைகளில் வரும் போது தான், நாம் இவற்றை விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. சமீபத்தில் வந்த தினமலர் பத்திரிக்கைகளில் இவர் எழுதிய கட்டுரையில் முதல் பத்தியிலேயே முரண்பாடுகளும், தடுமாற்றமும் தான், நீங்களே படித்து பாருங்கள்.

"வெறும், 100, 'லைக்' மட்டுமே வந்தால் மனம் பதறுகிறது; முகம் வாடுகிறது." இப்படி பெண்களை பற்றி எழுதியவர் அடுத்த வரியில் இப்படி எழுதுகிறார்.

"எந்தப் பெண்ணின் புகைப்படம் வரும் என்று, தவமாய்க் கிடக்கிறது மாபெரும் இளைஞர் கூட்டம். ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தவுடன், மாறி மாறி, 'சரசர' வென்று லைக்குகள் குவிகின்றன. வெறும் லைக்குகள் மட்டுமல்ல. 'ஆசம்... அடடா என்ன அழகு, மனம் கிறங்குகிறது, அழகே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை"

தர்க்கரீதியாக பார்த்தால், மேலே சொன்ன இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே உண்மையில்லை, பெண்கள் என்ற அடையாளத்துடன் கவர்ச்சியான புகைப்படங்களையும், கிளுகிளுப்பு ஏற்றும் கவிதைகளையும் பதிவிடுபவர்கள் உண்மையில் யார் என்று முகநூலில் அனா ஆவன்னா தெரியாத கத்துக்குட்டிகளுக்கு கூடத் தெரியும். உண்மை இப்படி இருக்க இவரோ அந்தப் படங்களுக்கு ஜொள்ளு விட்டு திரியும் சிறு கூட்டத்தை மிகைப்படுத்திப் புலம்புகிறார்.

"இவ்வளவுக்கும் அந்தப் பெண் செய்த சாதனை என்னவென்று பார்த்தால், காலையில் எழுந்து தன் புகைப்படத்தைப் போட்டு, 'குட் மார்னிங்' சொன்னார்; அவ்வளவு தான். இத்தனை லைக்குகளையும், கமென்டுகளையும் பார்த்த பெண்ணின் மனம் குதூகலிக்கிறது."

பெண்கள் தன்னுடைய புகைப்படத்தைப் போடுவது அவ்வளவு பெரிய குற்றமா?.. உங்களுக்கு ஏன் சாரு வயிறு எரிகிறது? தனக்கு வராத லைக்குகளும் கமெண்டுகளும் இவர்களுக்கு வருகிறதே! என்ற ஆதங்கம் தான் இதில் வெளிப்படுகிறது. தாங்கள் இந்தப் பதிவிற்கு எதற்காக உங்களுடைய வரைபடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்ளும் வாசகர் கடிதத்தில் கூட "சாருவின் புகைப்படம் இல்லாமல் பத்திரிக்கையில் கட்டுரையா?" என்றெல்லாம் அள்ளித் தெளிப்பது எதற்காக?. தங்களின் புகைப்படம் பதிந்த டி-ஷர்டை எதற்காக வெளியிட்டீர்கள்?. பொதுவெளியில் வரும் போதெல்லாம் என்னைப் புகைப்படம் எடுக்க முடியுமா ? என்னைக் காணொளி எடுக்க முடியுமா? என்று கூவி கூவி அழைப்பது எதனால்? சமீபத்தில் உங்களுடைய புத்தகத்தில் உள்ள அட்டைப் படத்தில் தங்கள் புகைப்படத்தை சரியாக லே-அவுட் செய்யவில்லை என்று எத்தனைக் கட்டுரை எழுதினீர்கள்?

"எதார்த்த உலகில் ஒரு பெண்ணை, ஆண் எப்படி எதிர்கொள்கிறான்? எந்தப் பெண்ணிடமும் ஒரு ஆண் எடுத்த எடுப்பில், 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!' என்று சொன்னால், உதை தான் விழும்."

எதார்த்த உலகம் மட்டுமல்ல, இணைய உலகிலும் "உதை தான் விழும்" சாருவிற்கு விழுந்த உதை மறந்து விட்டது என்று நினைக்கிறேன். உங்களின் முகநூல் பேச்சுக்கள் அதற்கான எதிர்வினைகள் இன்றும் இணையத்தில் இருக்கிறது.

"ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'சாட்டிங்'கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, 'வாடி, போடி' என்று அழைக்க முடியும்."

இந்த மைனர் குஞ்சு வாயில் வடை சுடுகிறது, சாரு அந்த மைனர் குஞ்சு சுட்ட வடையை எடுத்துக் கொண்டு வந்து பொதுவெளியில் வைத்து உளுந்து வடையா? பருப்பு வடையா? என்று கிண்டி பார்க்கிறார். அய்யோ சாரு, கிண்டிப் பார்க்க வேண்டியது வடையை அல்ல மைனர் குஞ்சை. சமீபத்தில் இறைவி படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்திருக்கும் ஆண் நண்பர், அந்தப் பெண் நண்பரிடம் சொல்லுவது தான் எனக்கு ஞாபகம் வருகிறது, எனக்கும் இது தான் முதல்முறை, ஒரு பெண் கூட என்னைக் கிட்ட சேர்க்க மாட்டார்கள், வீட்டிற்குக் கூட அழைக்க மாட்டார்கள் என்ற நிதர்சன உண்மையை  வருத்தத்துடன்  சொல்வார், அதற்கு அந்தப் பெண் நண்பர் "அப்ப நீ அட்டைக் கத்தியா" என்று கேட்டு சிரிப்பார்.

நிதர்சன உலகில் சிலர், இந்தப் பெண்ணை நான் வளைத்துக் காட்டட்டுமா? அவளை என்னிடம் "ஐ லவ் யு" சொல்ல வைக்கட்டுமா? என்று உதார் விட்டுக் கொண்டு நடப்பார்கள், நிஜத்தில் தன்னால் செய்ய முடியாத ஒன்றை, தான் செய்ததாகவும், செய்யப் போகிறதாகவும் சொல்லிக்கொண்டு கனவுலகில் மிதப்பார்கள், அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் இப்படியானவர்களின் பேச்சை பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஜெயமோகன் அவர்கள் சாருவிற்கு புனைவு எழுத வாராது என்று சொல்லியதை படித்திருக்கிறேன். சாருவின் எழுத்தில் அதை பார்த்திருக்கவும் செய்திருக்கிறேன், கீழே சாரு எழுதியிருக்கும் பத்தியில் இருப்பது புனைவா? நிதர்சனமா? ஒரு வித தடுமாற்றத்துடனே தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

"'வாடி, போடி!' ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை."

" 'சாட்டிங்'கின் முடிவில் அது, 'செல்லம்' வரை போய் விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்."

முதல் பத்தியில் "தப்பு தாண்டா பேச்சு எதுவும் இல்லை" என்று பூசி மெழுகுகிறார், அப்படியே அடுத்த பத்தியில் "செல்லம் வரை போய் விட்டது" என்று அங்கலாய்க்கிறார்.

ஒரு பெண் தன்னுடன் மட்டும் தோழியாக பேசினால் அது "சுதந்திரம்" அவள் அப்படியே தோழியாக இன்னொரு ஆணிடம் பேசினால் "கட்டற்ற சுதந்திரம்" உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் தீயை வைக்க... போங்கய்யா போங்க !!


கட்டுரையின் இணைப்பு:


சாருவின் தினமலர் முதல் கட்டுரைக்கு நான் எழுதிய முகநூல் பதிவு:

இது தான் சாத்தான் வேதம் ஓதுவது!

முகநூலில் உள்ள உள் பெட்டியில் இளம் பெண் ஒருவரிடம் இந்த எழுத்தாளர் செய்த வக்கிர பேச்சுகளின் ஈரம் இன்னும் காயவில்லை, அதற்குள் வந்துவிட்டார் லோகத்துக்கு அறிவுரை சொல்ல... பிரபல கவிஞர் சொன்னது போல் போங்கய்யா! போய் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கள் என்று சொல்ல மாட்டேன்! போய் முதலில்‌ பொதுத் தளத்தில் பெண்களிடம் எப்படிப் பேசுவது என்று படியுங்கள்! அப்புறம் வந்து பொங்கல் வைக்கலாம்.

பாமினி என்று பெண் வாசகருக்கு இந்த எழுத்தாளர் சொன்னதாவது இவருக்கு ஞாபகம் இருக்கிறதா? மறந்துவிட்டது என்றால் அவருடைய‌ விமர்சகர் வட்டம் வந்து கேட்டால் பக்குவமாகச் சொல்லுவார்கள்.

பெண்களைப் பற்றிய இவரின் மனோபாவத்தை இயக்குநர் மிஸ்கின் அவர்களிடம் கேட்டால் தெரியும்!

வாசகர்களுக்கு மறதி என்று ஒன்று இருப்பது இவர்களுக்குச் சாதகமாக போய்விடுகிறது ..

கட்டுரையின் இணைப்பு:

மனோபாவம் மாற வேண்டும்!
.

Wednesday, June 29, 2016

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் நடந்த சுவாதி படுகொலை மிகக் கொடூரமானது, கண்டிப்பாக இந்தக் கொலையை செய்தவன் மனித தன்மை சிறிதும் இல்லாதவனாகத் தான் இருப்பான். அவனுக்கு எத்தகையைக் கொடூர தண்டனையைக் கொடுத்தாலும் அது இந்தக் கொலைக்கு ஈடாகாது. இது இப்படி இருக்க இந்தக் கொலையை வைத்து சமூக வலைத்தளங்களில் சிலர் நடத்தும் அரசியலும், கண் துடைப்பு ஒப்பாரிகளும் தாங்க முடியவில்லை.

யாருய்யா இந்தச் சிம்பு, அனிருத் ?

அவர்கள் பாடிய பீப் பாடல்களின் நீட்சிகள் தான் இந்தச் சுவாதியின் கொலையும், வினுபிரியாவின் தற்கொலையும் என்று கூடவா இந்த மர மண்டைகளுக்குப் புரியவில்லை. யாருக்காகக் கொடி பிடிக்கிறோம், எதற்காகக் கொடி பிடிக்கிறோம் என்று கூட தெரியாமல் எவனோ ஒருவன் வெட்டி ஒட்டிய வால்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடலை பாடியதற்குச் சிம்பு மற்றும் அனிருத் இருவரில் ஒருவரோ, அவர்களுடைய குடும்பத்தினரோ இதுவரையிலும் ஒரு சிறு துளி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தவறுகள் செய்வது இயல்பு, ஆனால் அதைத் திருத்தி கொள்ள முயல்வதும், நடந்த தவற்றுக்கு வருத்தம் தெரிவிப்பதும் தான் பண்பட்ட மனிதர்களின் செயல்களாக இருக்கும். ஆனால் இந்தத் தற்குறிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, மாதர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்க இந்த இருவர் செய்த ஈனச் செயலுக்கு இலக்கணம் கற்பிப்பது தான் கொடுமையாக இருக்கிறது.

தன்னுடைய மனைவியையோ, சகோதரியையோ எந்தவொரு பொது தளங்களிலும், சமூக தளங்களிலும் இயங்க அனுமதிக்காத காவாளி கூட்டம் தான் இன்றைக்கு மாதர் சங்கங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வகுப்பு எடுக்கிறது. இது கூட வேண்டாம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் கூடும் கூட்டங்களுக்கு கூட தன்னுடைய வீட்டிலிருக்கும் பெண்களை அனுமதிக்காத கூட்டம் தான் இன்று ஏதோ ஒரு சில பிரச்சனைகளுக்காவது குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்பைப் பார்த்து ஊளையிடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் செயல்படும் ஒரு சில‌ பெண்களையே இந்த ஆணாதிக்க மனநிலை கொண்ட கூட்டம் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல, வலைத்தளங்களில் கூட பெண்களுக்கு எதிராக எழுதியிருக்கும் பல பதிவுகளை நீங்கள் பார்க்கலாம், முன்பு போல் பல பெண்கள் இந்தத் தளங்களில் செயல்படாமல் முழுமையாக விலகி இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் பெண்களின் முன் இருப்பது மிகப் பெரிய சவால். அவர்களுக்கு ஆதரவாகக் கூட நீங்கள் எழுத வேண்டாம், அவர்களைக் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.

தன்னைப்போல் ஒரு பிறவி தான் பெண், இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் அனைத்து உரிமையும் அவளுக்கும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள அல்லது அந்த உரிமையை அவள் எடுத்துக் கொள்ளும் போது சகித்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் அந்த ஆணாதிக்க மனோபாவம் தான் இப்படியான செயல்களை செய்ய வைக்கிறது.

தன்னை ஒரு பெண் விரும்பா விட்டால், அவனவனுக்கான திறமை மற்றும் தகுதிக்கேற்ப அவளைத் தாக்குவதற்கு கீழ்கண்ட வழிகளில் ஆயுதங்களைத் தூக்குகிறான்.

*அவளைத் திட்டி பாடல்கள்/கவிதைகள் எழுதுவது, எழுத முடியாதவன் கை கொட்டி அந்தப் பாடல்களை/கவிதைகளை ரசிப்பது.. 

*அவளுடைய நடத்தைக்குக் களங்கம் விளைவிக்க முயல்வது, சமூகத்தில் அவளின் ஒழுக்கத்தைப் பற்றி புனைவு கதைகள் கட்டுவது..

*சமூக வலைத்தளங்களில் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பகிருவது, அதை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டுவது..

*அமிலத்தை எடுத்து அவளின் முகத்தில் வீசுவது இல்லையென்றால் கத்தி எடுத்து படுகொலை செய்வது..

எப்படியான மனநிலையில் நாம் வாழ்ந்து கொண்டியிருக்கிறோம் என்று சுய சிந்தனை செய்து கொள்வது நமக்கும் நம்முடைய தலைமுறைக்கும் நலன் பயக்கும். காரணம் நீ வானத்திலிருந்து குதித்து வந்தவன் அல்ல, உன்னுடன் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கும் இன்னொரு பிறவியை அழிக்கத் தான் மேலே சொல்லியிருக்கும் ஆயுதங்களை எடுத்து வீசுகிறாய்.



(பழைய திருவிளையாடல் பட பாலைய்யா வசனம் ஞாபகம் வரலாம்)

ஆமா, யாரோ பண்டிதராம்!
என்னை சொல்லிட்டு இவன் உளறுகிறான், பண்டிதர் இல்ல, பாகவதராம்! ஹி ஹி !!
இரண்டு பயலுவளும் உளறுகிறார்கள்!
அப்படியா! நீ திருத்திச் சொல்லு!
பண்டிதரும் இல்ல ! பாகவதரும் இல்ல ! ஒய் ஜி மகேந்திரன் னு ஒருத்தரு!
யாரவர்?
இந்த கலா மண்டபத்துல நாடகத்துல எல்லாம் நடிப்பாருல்ல!
வேதனை! வேதனை! இந்த படு கொலையைக் கண்டிக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா?
பழைய படங்களில் கூடச் சோடா புட்டி கண்ணாடி போட்டுவிட்டு, கைவிரலைச் சப்பி கொண்டே நடிப்பார் அவரு தானுங்க!
என்னடா இது! இந்தத் தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை! இந்தப் படுகொலையை பத்தி கருத்து கேட்க வேற ஆளே கிடைக்கவில்லையா!
என்னங்க செய்யுறது! மேக்கப் போட்டு திரையில் வந்துட்டா, சமூகத்துக்குக் கருத்து சொல்லித் தானே ஆகவேண்டும்!
ஆமா! ஆமா! கண்டிப்பா சொல்லித்தான் ஆகவேண்டும்!
சமூகத்தில் அநியாயம் நடந்தால் அப்படியே பொங்கிடுவார்!
ஓ அப்படியா! அந்த பீப் பாட்டுக்கு இசை அமைத்த, இவருடைய பங்காளி பையன் அனிருத் பற்றி என்ன பொங்கி இருக்காரு?

ஙே! ஙே! ஙே! ஙே! ஙே!

பாலா இருந்தால் பொங்கும்! பச்சை தண்ணி எப்படிப் பொங்கும்?


.

Wednesday, June 22, 2016

நாகர்கோவில்_ஜாக்கி ஜட்டி கிடைக்குமிடம்?

சமீபத்தில் லங்கோடு போடுவதிலும், வாங்குவதில் உள்ள பிரச்சனைகளை பற்றித் தான் தற்போதைய இலக்கிய உலகம் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் நமது மாவட்ட இலக்கிய பிதாமகர் வெளியூர் பயணத்திற்கு தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்ற போது எங்கும், எதிலும் நீக்க மற போலிகள் நிறைந்திருப்பது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை தொடர்ந்து முகநூலிலும், வலைத்தளத்திலும் யாரெல்லாம் பிராண்டட் ஜட்டி போடுகிறார்கள்/லோக்கல் உபயோகிக்கிறார்கள் என்ற முக்கியமான ஆய்வுகளில் நம்மவர்கள் திளைக்கிறார்கள். அந்தக் கட்டுரையில் குறிப்பாக தனக்கு ஜாக்கி ஜட்டி கிடைக்கவில்லையென்றும், நாகர்கோவிலில் மிகப் பெரிய ரெடிமேட் ஷாப் "டவர் ரெடிமேட்" கடையில் கூட அந்த பிராண்ட் ஜட்டி கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் எழுதியிருந்தார். நாகர்கோவிலில் எங்குத் தேடியும் டியூரோ செல் பேட்டரி கிடைக்கவில்லை என்ற ஒரு புகார் வேறு அந்தக் கட்டுரையில் இருக்கிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும், அந்தக் கட்டுரைக்கும் வரும் வாசகர் கடிதத்தை பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள், ஜட்டியே போடுவது இல்லை போலவும், இப்போதும் பழைய வேட்டியைக் கிழித்து கோவணமாகச் சுற்றி கொண்டிருப்பவர்கள் போலவும், ஒரிஜினல் பிராண்டுக்கும், டூப்பிளிகேட் பிராண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குபவர்கள் போலவும் ஒரு தோற்றம் அந்தக் கட்டுரையில் தென்படுகிறது. அதிலும் இங்குள்ள எந்தக் கடையிலும் ஒரிஜினல் பொருட்கள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைக்கிறார்.

எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் பல வேலைகளுக்குச் சென்றவர்கள். இப்போதும் பெரும்பான்மையான குடும்பத்தில் ஒருவராவது வளைகுடா நாடுகளில் வேலையில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் பெரும்பாலும் பிராண்டட் எலக்ட்ரானிக் பொருட்களை தான் வாங்கி வைத்திருப்பார்கள். சொந்தக்காரனிடம் கூட வெளிநாட்டிலிருந்து உனக்காகக் கொண்டு வந்தேன் என்று ஏதாவது ஒரு பொருளை நீட்டினால், சோனியா, மேட் இன் ஜப்பானா என்று கேட்டு தான் வாங்கிக் கொள்கிறார்கள், அப்படியான ஊரில் நமது ஜெயமோகன் அவர்கள் சொல்வது போல் டூப்பிளிகேட் பொருட்களை மட்டுமே நம்பி ஒருவர் கடையை திறந்தால், அவர் சீக்கிரம் அந்தக் கடையை மூடி விட்டு போக வேண்டியது தான். அதற்காக எனது மாவட்டத்தில் போலி பிராண்டட் பொருட்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். எத்தனை டூப்பிளிகேட் பிராண்டட் இருக்கிறதே, அதே அளவு ஒரிஜினல் பிராண்டும் இருக்கிறது என்பது தான் நான் கூற வருவது.

ஜாக்கி ஜட்டி பற்றி சொல்லவே வேண்டாம், இப்போது கல்லூரியில் படிக்கும் அனைத்து இளைய பட்டாளங்களும் அந்த பிராண்டட் ஜட்டியின் ரோப் வெளியில் தெரியும் அளவிற்கு தான் ஜீன்ஸ் பேண்ட் வாங்கி அணிகிறார்கள். அதனால் இலக்கியம் படைக்கும் பெருசுகள் எல்லாம் ஜாக்கி ஜட்டியை வாங்கி தன்னுடைய வேட்டி, மற்றும் பேண்டுக்கும் மறைவாகப் போட்டுவிட்டு நாங்களும் பிராண்டட் ஜட்டி தான் போடுகிறோம் என்று இளசுகளின் முன்னால் மார் தட்டிட முடியாது, வேண்டுமானால் ஒன்று பண்ணலாம், சூப்பர் மேன் போல் ஜட்டியை வாங்கி பேண்டுக்கு மேல் போட்டு கொள்ளலாம்.

நமது எழுத்தாளர், நாகர்கோவில் முழுவதும் ஒரு ஜாக்கி ஜட்டி வாங்க அலைந்தேன், எங்கும் கிடைக்கவில்லை என்று எழுதியிருப்பது தான் என்னை இந்தக் கட்டுரையை எழுத வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது, மிகப் பெரிய எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் கட்டுரையை படித்த அவருடைய வாசகர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தால் ஒரு பிராண்டட் லங்கோடு கூட வாங்க முடியாது போல! என்ற முன் முடிவுக்கு வரக்கூடும். அதற்குத் தினமும் அவரது இணையதளத்தில் ஜாக்கி ஜட்டி கட்டுரைக்கு வந்து கொண்டிருக்கும் வாசகர் கடிதங்களே சாட்சி!

அவர் வீடு இருக்கும் பார்வதிபுரத்திலிருந்து அப்படியே செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி நடந்தால், பால் பண்ணை பஸ் ஸ்டாப் வரும், அந்த சிக்கனலில் இருக்கும் ஹோண்டா டூவீலர் ஷோரூம் பக்கத்தில் ஒரு மெகா மார்ட் இருக்கிறது, அங்குப் போனால் வித விதமான ஜாக்கி ஜட்டிகள் வாங்கலாம், இந்த ஜட்டியில் என்ன வித விதமான என்று கேட்கிறீர்களா? இருக்கிறது, இந்தமுறை நான் வாங்கிய கிளாசிக் டைப் ஜாக்கி ஜட்டி, காலேஜ் பசங்க போடுற ஜீன்ஸ் பேண்டு போல் பிருஷ்டத்திற்கு கீழாக நிற்கிறது, எவ்வளவு தான் முயற்சித்தாலும் பாதி பிருஷ்டத்திற்கு மேல் ஏற மாட்டேன் என்கிறது, உன்னோட பிருஷ்டம் பெருசு ஆனதற்குக் கடைக்காரன் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, ஆனால் என்னுடைய பிருஷ்டம் பெரிதானதால் வந்த பிரச்சனை இல்லை, அந்த வகையான மாடலின் வடிவமைப்பே அப்படி தான் இருக்கிறது, என்னென்ன வகை இருக்கிறது என்று தெரிய வேண்டுமானால் குகூள் செய்து பாருங்கள் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அதனால் ஜாக்கி ஜட்டி வாங்குபவர்கள் இதையும் கவனத்தில் வைத்து வாங்குங்கள். இந்தமுறை நான் வாங்கிய நான்கு செட் ஜாக்கி ஜட்டியை போடாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறேன். ஏன்டா! ஒரு எதிர்வினை கட்டுரையில் கூட அட்வைஸ், மெசேஜ் என்ற மொக்கைகள் இல்லாமல் எழுதத் தெரியவில்லை. நீயெல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டே! என்று சொல்லும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது..ஹி.. ஹி..

அப்படியே நமது எழுத்தாளர் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டு, மீண்டும் செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி முன்நோக்கி நடந்து அடுத்த பஸ் ஸ்டாப் ஆன மத்தியாஸ் வார்டு வந்தால் அங்கு டெரிக் சூப்பர் மார்கெட் இருக்கிறது. இவருக்கு டூயூரோ செல் பேட்டரி என்ன, பிலிப்ஸ் மற்றும் சானியோ பிராண்ட் பேட்டரி வகைகள் வரைக் கிடைக்கும். நமது எழுத்தாளர் இன்னும் திருவிதாங்கோடு பக்கம் இருக்கும் கடைகளுக்கு போனது இல்லை என்று நினைக்கிறேன், வளைகுடா நாடுகளில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சாக்லெட் வரை அனைத்துப் பொருட்களும் அங்குக் கிடைக்கிறது, அப்படி அந்தக் கடைகளில் இல்லையென்றால், என்ன பொருள் வேண்டும் என்பதை நாம் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் ஒரு வாரக் காலத்தில் நமக்கு வாங்கி வந்து தருகிறார்கள்.

இந்த பிராண்டட் பொருட்கள், நான் சொல்லிய இரண்டு இடங்கள் தவிர வேறு எங்கும் கிடைக்காதா என்றால், இல்லை வேறு பல இடங்களில் இருக்கும் கடைகள் பற்றியும் என்னால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்க முடியும், ஆனால் நமது எழுத்தாளரின் வசதிக்காக அவர் வசிக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிடைக்கும் கடைகளை மட்டும் எழுதியிருக்கிறேன்.



ஜட்டி பற்றிய கதை வந்ததால், எனது நண்பருடைய அனுபவத்தையும் சேர்த்து எழுதுகிறேன், இந்த அனுபவம் வட இந்தியா போன போது எனக்கும் ஒருமுறை நடந்து இருக்கிறது. சவுதியில் நண்பர் ஒருவரை ஒரு புது ப்ரொஜெக்ட் விசயமாக, ஒரு நாள் மீட்டிங் போய் வரலாம் என்று மேனேஜர் அழைத்துக் கொண்டு போயிருந்தார். அந்த ப்ரொஜெக்ட் பண்ண வேண்டிய சைட் கொஞ்சம் ரிமோட் ஏரியா, பெரிதாக டெவலப் ஆகாத சிட்டி. நண்பரும் ஒரு நாள் தானே, என்று அதிகமான துணிகள் எடுத்துப் போகவில்லை, இரண்டு செட் துணிகள் மட்டும் கைப் பையில் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். ப்ரொஜெக்ட் மீட்டிங் முடிந்தவுடன், உங்கள் நிறுவனத்திலிருந்து ஒரு ஆள் இன்றிலிருந்தே வேலையைத் தொடங்க வேண்டும், உங்கள் ப்ரொஜெக்டுக்கு தேவையான அனைத்தும் டாக்குமெண்டுகளும் வரத் துவங்கி விட்டது என்று கிளைண்ட் வற்புறுத்தியிருக்கிறான். அப்புறம் என்ன, ப்ரொஜெக்டில் கிளைன்ட் சொன்னால் தட்ட முடியுமா? ஒரு வாரம் "நீ சமாளித்துக் கொள்!" என்று நண்பரை அடகு வைத்துவிட்டு மேனேஜர் வந்து விட்டார்.

ஒரு வாரம் என்று நினைத்து, ஒரு மாதம் அந்த நண்பர் ப்ரொஜெக்டில் தனியாக இருக்க வேண்டி வந்தது, அதன் பிறகு தான் என்னுடன் சேர்ந்து மூன்று பேர் வந்தோம். ஒரு மாதம் நண்பர் தங்கியிருந்த ஹோட்டலில் தான் நாங்களும் தங்க வைக்கப் பட்டோம், நண்பரின் ரூமில் ஒரு மூலையில் கசங்கிய ஜட்டி குவியாக கிடந்தது, என்ன என்று விசாரித்த போது, ஹோட்டலில் துணி துவைப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றும், வெளியில் லாண்டரியில் தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கும் ஜட்டி குவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், இங்கிருக்கும் லாண்டரி கடையில் ஒரு ஜட்டி துவைப்பதற்கு கூட இரண்டு ரியால் கேட்கிறான், இரண்டு முறைத் துவைக்க கொடுத்தால் நான்கு ரியால் ஆகிறது, புதிதாகக் கடையில் விற்கும் பத்து ஜட்டிகள் இருக்கும் பாக்கெட் முப்பது ரியால் தான் சொல்கிறான், அதனால் நான் இரண்டு பாக்கெட் வாங்கி உபயோகித்து வருகிறேன் என்று சொன்னார்.


.


.

Saturday, June 21, 2014

வம்புக்கு இழுப்பது_இலக்கியம் யார் படைக்கிறார்கள்?

வலைத்தளங்களில் எழுதுவர்களில், ஆண்களிடமிருந்து அதிகமாக இப்படியான புலம்பல்களைப் பார்க்க முடியும். நான் பக்கம், பக்கமாக எழுதினாலும் ஒரு கமெண்டோ, லைக்குகளோ விழுவது இல்லை. ஆனால் பெண்கள் தும்மினாலும் கூடப் பல கமெண்டுகளும், லைக்குகளும் வந்து விழுகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?. இதற்குத் தான் இந்தச் சமூகத்தில் வாழமாட்டேன் என்று சொல்லுகிறேன். நான் தமிழில் இலக்கியம் படைக்காமல் இருப்பதற்கு இதைவிட வேறு ஏதாவது காரணம் வேண்டுமா?. இந்தச் சமூகம் என்னைத் தூக்கி அடிக்கிறது(எப்படிப் படிக்க வேண்டுமோ உங்கள் விருப்பம்) என்பதற்கு இதைவிட வேறு காரணம் இருக்க முடியாது.

மேலே குறிப்பிடும் புலம்பலில் இருக்கும் சில அடிப்படையான கேள்விகள். பெண்கள் எழுதும் தும்மல்களுக்கு அதிகமான லைக்குகள், கமெண்டுகள் போடுபவர்கள் யார்? அவர்கள் ஆண்களா? பெண்களா?. எல்லோருக்கும் தெரியும் ஆண்கள் தான். அப்படியானால் இங்கு ஒரு கேள்வி வருகிறது. இதில் பெண்களின் மீது வன்மம் வளர்ப்பதற்கு என்ன வேண்டி இருக்கிறது?. ஆனா... ஊனா.. கூட்டம் கூட்டமாக லைக்குகளைப் போட்டுக் கொண்டு அலையும் இந்தக் கூட்டத்தைப் பார்த்து அல்லவா நீங்கள் கேட்க வேண்டும்?. உங்கள் இலக்கிய அறிவு என்னவென்று?. தினம் ஒரு தகவலாக இலக்கியம் படைக்கும் இலக்கியவாதியும், கனவில் வரும் செவ்விலக்கியங்களைத் தமிழில் படைக்கும் இலக்கிய ஆளுமையும் அல்லவா யோசிக்க வேண்டும்?. நம்முடைய இலக்கியப் படைப்புகளை இவர்களை எந்தளவிற்கு வருத்தியிருக்க‌ வேண்டுமென்று?. தும்மலைப் போடும் எந்தப் பெண்களும் வாருங்கள்! வந்து லைக்கு, கமெண்டு போடுங்கள் என்று புலம்பியதாகவோ! அல்லது இன்னும் புலம்பப் போவதாகவோ அறிவிக்க வில்லை. நாங்கள் இலக்கியம் படைத்துவிட்டோம்! உலக மகா இலக்கியவாதிகளே வாருங்கள்! வந்து எங்களுக்கு மதிப்பெண் தாருங்கள் என்று கேட்ட‌தாகவும் தெரியவில்லை. எங்களுக்கு விருப்பமானவைகளை படைக்கிறோம். உங்களுக்குப் பிடித்தவைகள் படைக்க வேண்டும் என்று எங்களை அடிமை படுத்தாதீர்கள் என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். இதுதான் உங்களுக்குப் பொறுக்கவில்லை, இங்குத் தான் வருகிற‌து ஆணாதிக்க மனோநிலை.

நம்முடைய சில‌ தமிழ் திரைப்படங்களில் பெண்களின் அங்கங்களுக்கு மதிப்பெண் போடும் காட்சிகளைப் பார்க்க முடியும். அதைப் பெண்களும் ரசிப்பதாக அந்தத் திரைப்படங்களில் காண்பித்திருப்பார்கள். அந்தப் புத்தம் புதுக் காட்சியைத் திரையில் வைப்பவர்கள் ஆண்கள் தான். அதை ரசிப்பவர்களும் ஆண்கள் தான். எதார்த்த வாழ்க்கையில் என்னவோ! பெண்கள் எல்லாம் தங்களுக்கு மதிப்பெண் போடுவத‌ற்கு உங்களை அழைத்தாகக் கருதி வர்ணித்தால் செருப்படியும், துடைப்பக்கட்ட அடியும் தான் மிஞ்சும். 

சரி, இப்போது ஜெ.மோ அவர்களின் பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பிரச்சனையின் தொடக்கம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். எல்லோராலும் இலக்கியவாதி என்று அறியப்பட்ட எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஆ.வி.யில் தமிழின் இலக்கிய‌ வருங்காலம் இவர்கள் கையில் தான் படப்போகிற‌து என்று ஒரு லிஸ்டை எழுதுகிறார். அதில் சில பெண் எழுத்தாளர்களின் பெயரும் இடம் பெற்றுவிட்டதாம். அதில் தான் ஜொ.மோ அவர்கள் பொங்கிவிட்டார். முக்காலமும் நாங்கள் தான் இலக்கியம் படைப்போம் என்று படைத்த பிரம்மனிட‌மே, குத்தகை வாங்கி வந்த பிறகு இப்படி ஒரு லிஸ்டை எப்படிப் போடலாம் என்று அறசீற்றம் கொள்கிறார் பாவம் தான். அறம் பாடும் இலக்கிய ஆளுமைக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணீர் வடித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன?.

இவர் பொங்கும் பொங்கலை எல்லாம் லிஸ்ட் போட்ட, நா.நா அவர்களிடம் தான் பொங்கியிருக்க வேண்டும். அந்தப் பெண் எழுத்தார்கள் என்ன படைத்திருக்கிறார்கள்?. தமிழ் இலக்கிய உல‌கில் அவர்களின் பங்களிப்பு என்ன?. எவருடைய இலக்கியங்களையாவது படித்திருக்கிறார்களா?. அப்படியென்றால் அவற்றின் தரவுகள் எங்கே?. அவற்றையெல்லாம் எனக்குத் தொகுத்துத் தரமுடியுமா?. எதன் அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்? என்று நீங்கள் எழுதினீர்கள்? என்பதாக, கம்பை நா.நா. பக்கம் சுற்றியிருக்க வேண்டும். இப்படியான இவர்களின் கம்பு சுற்றலில் நமக்கும் இன்னொரு மான் கராத்தேவைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால் ஜொ.மோ.வோ முச்சந்தியில் நின்று கொண்டு ஒரண்டை இழுத்துக்கொண்டு சொல்கிறார், இந்தக் குழாயடிச் சண்டைகளை வெறுக்கிறேன். என்னோட நிலை ரெம்பப் பெரிது. இவ்வுலகில் நான் இல்லை என்றெல்லாம் சினிமா வசனம் பேசுகிறார். முச்சந்தியில் நின்று ஒரண்டை இழுத்தால் முகம் தெரியாதவனும் தான் கல்லெடுத்து அடிப்பான். குழாயடிச் சண்டையை விட ஒரண்டை இழுப்பது இன்னும் மோசம்.

ஜெ.மோ. எழுதுவது எப்படி ஒரண்டை இழுப்பது ஆகும்?. எந்தப் பெண் எழுத்தாளர்களும், நாங்கள் பெரிய எழுத்தார்கள் என்று உங்களிடம் வந்து கொடிப்பிடிக்கவில்லை. எங்களுக்கு அங்கீகார‌ம் கொடுங்கள் என்று உங்களிடம் அவர்கள் கையை ஏந்தி நிற்கவில்லை. எங்களுக்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள் என்றும் வரவில்லை. அப்படியிருக்கும் போது எவரோ ஒருவர் எழுதினார் என்று அவர்களை இழுத்துப் போட்டுப் பொதுவீதியில் வைத்து நக்கல் செய்வதை என்னவென்று சொல்வது?.

பொதுவான தரவுகளைச் சுட்டித் தான் ஜெ.மோவும் எழுதினார். எதையும் ஆதாரபூர்வமாகச் சுட்டி எழுதவில்லை. உண்மையில் பெண்களின் படைப்புகள் மீது அக்கறையிருந்தால் அவர்தான் இந்தச் சமகால இலக்கியச் சூழலில் பெண்களின் பங்களிப்புகள் பற்றிய தரவுகளைத் தந்து எழுதியிருக்க வேண்டும். அவர்களின் படைப்புகளின் மீது விமர்சனங்களை வைத்திருக்க வேண்டும். அந்த விமர்சனங்களைப் பொதுவெளியில் விவாததிற்கு விட்டிருந்தால் பாரட்டியிருக்கலாம். ஆனால் இவர் செய்தது என்ன?. இவர் செய்யாததை எதிர்வினைக்கு மட்டும் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன‌ மனநிலை?.

சரி, இவை ஒருபுறம் இருக்கட்டும். தான் படிப்பது எனது மனைவிக்குக் கூடத் தெரியாது. (இது, தான் இன்று வாக்காலத்து வாங்கி எழுதும் எழுத்தாளருக்கு ஒரு சம‌யத்தில் சொல்லிய‌ பதில் தான்) தமிழ் நூல்களைப் படிப்பதை நான் வதையாக உணர்கிறேன் என்றெல்லாம் எழுதும் அல்டிமேட் எழுத்தாளர் சாரு அவர்கள், தனது சக எழுத்தாளருக்காகப் பொங்கும் போது, அவருடைய விஷ்ணுபுரம் நூலையாவது இந்தப் பெண் எழுத்தாளர்கள் படித்திருப்பார்களா? என்று கேள்விக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கான பதில், மேலே எழுதியிருக்கும் வாக்கியங்களுக்கான‌ நகைமுரண் ஒன்று போதும்.

பெண் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்று எழுதுவதற்கு முன், கொஞ்சம் சிந்தியுங்கள். யார் அங்கீகாரம் கொடுக்கிறார்கள்?. எழுத்தில் இல்லாத அங்கீகாரத்தைப் பாலினத்தில் பெற முடியுமா?. அப்படிப் பாலினம் பார்த்துக் கொடுத்தால் யார் அந்த அங்கீகாரத்தைக் கொடுப்பார்கள்?. அந்த அங்கீகாரம் கொடுப்பவர்களின் இலக்கிய அறிவு/புரிதல்/ஆளுமை என்ன?. நீங்களே நிமிர்ந்துப் படுத்துக் கொண்டு உங்கள் மீதே காறி உமிழ்கிறீர்கள்.

முதலில் பெண்களை எழுதவிடுங்கள். அதன்பிறகு அவர்கள் படைத்தார்களா? இல்லையா? என்று உங்கள் அளவுகோல்களை நீட்டுங்கள். தலையெடுக்கவே அவர்கள் பல தடைகளைத் தகர்க்க‌ வேண்டியிருக்கிறது. உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் எழுதுவதற்கு வந்தால் எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டும் என்று மன‌சாட்சி உள்ள ஆண்கள் சிந்தியுங்கள். இன்றைய சூழ்நிலையில் வலைத்தளங்களில் இயங்கவே பெண்களுக்கும் இருக்கும் சவால்கள் பெரிது. அவர்களும் படைப்பார்கள், படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்க முன்வாருங்கள். இப்போதே தட்டி மூலையில் அமர வைக்காதீர்கள்!.. 

Saturday, April 19, 2014

சனிக்கிழமையானால் சண்டியர்!!!

ஒருவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியான ஆள் எவராக இருக்க முடியும். உழைப்பை சுரண்டுபவர்களைப் பற்றி அறிந்தவர்களால் தான் என்பதில் எவருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. ஆனால் நீ ஒரு கார்பரேட் முதலாளியிடம் பணிசெய்வதால் தொழிலாளர்கள் பற்றிப் பேச உனக்கு உரிமையில்லை என்று சொல்வது எப்படியான வாதம் என்று எனக்குப் புரியவில்லை.

நீ அந்தக் கார்பரேட் அலுவலகத்தில் உழைத்த உழைப்பை வெளிநாட்டுக் கம்பெனிக‌ளிடம் கொடுத்து லட்சம் டாலர்கள் சம்பாதித்துவிட்டு, அதில் வரும் சில லட்சங்களை ரூபாயில் உனக்குக் கூலியாகத் தருகிறார்கள். முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்கள் எப்படிப் புரட்சி, போராட்டம் என்று பேசலாம் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய கூலியை தான் வாங்குகிறோம் என்பதைக் கூட அறியாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?.

நண்பரே! ஓடாத குதிரையை எவரும் வாங்கி ரேசில் ஓட விடுவது இல்லை. வலுவான குதிரையின் மீது தான் பணம் கட்டுவார்கள். அதேபோல் தான் உழைக்காத‌ எவருக்கும் லட்சங்களில் சம்பளங்களை இந்தக் கார்பரேட் கம்பெனிகள் கொடுத்துவிடுவதில்லை என்பதை நண்பர் புரிந்தால் நலம்.

ஒரு பண்ணையாரிடம் பல‌ தொழிலாளிகள் வேலைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பண்ணையார் தொழிலாளிகளிக்கு உரிய ஊதியத்தை கொடுக்காமலும், தொழிலாளிகளின் நலனில் அக்கறையும் இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களை அவரின் கீழ் வேலைச் செய்யும் தொழிலாளிகளை விட எவர் அதிகாமாகத் தெரிந்து வைத்துக் இருக்க‌ முடியும்?. அந்தத் தொழிலாளி வர்கம் பண்ணையாரிடம் வாங்கிய சம்பளத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறது என்ற காரணத்திற்காக, அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களுக்கு எதிராகக் கருத்துக்களோ அல்லது போராட்டங்களே செய்யக் கூடாது என்று சொல்வது என்னவகையான நியாயம்?.

குடிப்பது தவறு என்று சொல்கிறோம். ஆனால் உனக்குத் தான் குடிப்பழக்கமே கிடையாதே, அப்புறம் நீ எல்லாம் எப்படி அய்யா குடிப்பழக்கம் தீங்கு என்று சொல்லவருகிறாய் என்று கேட்பது போல் தான் இருக்கிறது வா. மணிகண்டன் அவர்கள் எழுதியிருக்கும் பதிவு. குடிப்பழக்கத்தின் கொடுமையை ஒருவர் அனுபவித்துத் தான் அறியவேண்டும் என்றில்லை. அதன் வீச்சுச் சமூகத்தில் எத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற‌து என்பதைச் சிந்திக்கச் சிறிய அளவு மூளை இருந்தால் போதுமானது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த பல வகையான போராட்டங்களில் பெரியளவில் கவனத்தில் ஈர்த்தது காந்தியடிகளின் "ஒத்துழையாமை இயக்கம்". வரலாற்றைப் படித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். அப்படியானால் ஆங்கிலேயர்களில் கீழ் வேலைப்பார்த்துவிட்டு, அவர்களிடம் ஊதியமும் வாங்கிவிட்டு எப்படி அய்யா? இந்தப் போராட்டத்தை நடத்துகிறீர்கள் என்று கேட்பதற்கு ஒப்பாகும் உங்களின் இந்த‌ப் பதிவு.

நானும் முழுமையாகக் கம்யூனிசத்தைப் படித்தவன் இல்லை. எல்லா இசங்களையும் கரைத்து குடித்தவனும் இல்லை. ஏதோ பொதுவுடமை தத்துவ நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொள்கை இல்லாத வழ்க்கை என்பது உயிர் இல்லாத உடம்பு போன்றது என்பதை முழுமையாக நம்புப‌வன். கொள்கைகள் மட்டும் தான் எந்தவொரு சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் என்று இன்றும் ந‌ம்புப‌வன். தனிமனித துதிபாடல்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை, மக்களால் தூக்கியெறியப்படும்

சில ம‌னிதர்களைக் குறிவைத்து எழுதிய பதிவாக எனக்குத் தெரியவில்லை. அப்படியாகயிருந்தால் அவர்களின் பெயர்களையோ, தளங்களையோ சுட்டி எழுதியிருப்பார். ஆனால் போகிற போக்கில் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவனெல்லாம் கம்யூனிசத்தைப் பற்றிப் பேசுவதா? என்று தலையில் குட்டு வைத்துவிட்டு செல்வதால் தான் இந்த ப‌திவு எழுத தேவையாயிற்று.



.

Sunday, April 6, 2014

மல்லிகைப் பூ மணத்தில் மீன்குழம்பு!!

என்னவோ தெரியவில்லை, கன்னியாகுமரி எனது மாவட்டம் என்பதால் மீன் என்பது என்னுடைய வாழ்வியலில் ரெம்ப நெருக்கமான ஒன்று. இத்தகைய நெருக்கம் என்பது எனக்கு மட்டும் அல்ல, எனது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலனவர்களும் அப்படித் தான். கண்டிப்பாக வாரத்தில் ஆறு நாட்களும் மீன் குழம்பும், பொரித்த மீனும் எங்கள் வீட்டில் இருக்கும். அப்படியென்றால் ஒரு நாள் மட்டும் காய்கறி சாப்பிடுவீங்களா? என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது தான். ஞாயிறு விடுமுறை என்பதால் கடலிற்குப் பெரும்பாலானவர்கள் மீன் பிடிக்கச் செல்வது இல்லை, அதனால் அன்று எங்கள் ஊரில் இருக்கும் மீன் சந்தையில் மீன்கள் வருவது இல்லை. அதற்குப் பதிலாக‌ அன்று ஒரு நாள் மட்டும் அந்த மீன் சந்தையில் சிக்கன் அல்லது மட்டன் கடையைப் போடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை சர்ச்க்குப் போய்விட்டு விட்டு வீட்டிற்கு வரும் போதே அப்பா கையில் கறியுடன் தான் வருவார். காலையிலேயே டிபன் கறிக்குழம்புடன் தான் ஆரம்பம ஆகும். இந்த நிகழ்வு எங்கள் வீட்டில் மட்டுமே நடக்கும் என்பது இல்லை, எங்கள் ஊரில் இருக்கும் பெரும்பாலனவர்களில் வீட்டில் வாரம்தோறும் நடக்கும் நிகழ்வு இது தான்.

எங்கள் ஊரில் மீன் என்பது சென்னை போன்ற பெரு நகரங்களில் விற்பதை போல் எடைப் போட்டு விற்பனை செய்வது இல்லை. நெத்தலி, கூனி போன்ற சிறுமீன்களைக் கூறு(சிறுக்குவியல்) போட்டு விலையைச் சொல்லுவார்கள். சாளை, மத்தி போன்ற மீன்களை எண்ணம் வைத்து விற்பார்கள். அயிலை, நெய்மீன், வெங்கட, விளமீன், வாளை, பிள்ளை சுறா, சீலா போன்ற‌ பெரிய மீன்களை எல்லாம் தோரயமாக விலை சொல்லுவார்கள், நாம் அவற்றைப் பேரம் பேசி வாங்கவேண்டும். எங்கள் ஊரில் இருக்கும் மீன் கடையில் பேரம் பேசத் தெரியவில்லை என்றால் மீன் வாங்குவது என்பது குதிரைக்கொம்பு கதையை போல் தான், கண்டிப்பாக அதிகமான விலைக் கொடுத்து தான் மீன் வாங்கி வருவீர்கள்.

உள்ளுரில் இருக்கும் மீன் சந்தை என்பதால் இங்கு பெரும்பாலும் எங்கள் ஊரில் உள்ள‌ பெண்களைத் தான் அதிகமாகப் பார்க்க முடியும். இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஊரில் படிக்கும் போது விடுமுறை நாட்களில் இந்த மீன் சந்தைக்கு என்னுடைய பெரியம்மாவுடன் செல்வேன். பேரம் பேசுவது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இப்படியெல்லாம் பேரம் பேசலாமா? என்று வியந்து பார்த்தது எங்கள் ஊரில் உள்ள இந்த மீன் சந்தையில் தான். மீன் வியாபாரி இருபது ரூபாய் என்று சொல்லும் மீனை எந்தவித அலட்டலும் இல்லாமல் மூன்று ரூபாய் என்று கேட்பார்கள், அவரும் அவ்வளவுக்கு எல்லாம் வராது என்பார், அப்படியே பேரம் பேச்சு நடந்து ஐந்து ரூபாயில் விலை முடியும். பாருங்கள்! எவ்வளவு விலை சொன்ன மீனை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினார்கள் என்று. இப்போதும் ஊருக்குச் செல்லும் போது இந்த மீன் சந்தைக்குச் சில நாட்கள் போவது உண்டு. இன்றைக்கும் இந்த மீன் சந்தையின் பேரம் பேசும் நிலை இதுதான் ஆனால் அன்று இருபது ரூபாய் என்று சொல்லிய‌ மீன் இன்று இருநூறு ஆகியிருக்கிற‌து.

எங்கள் வீட்டில் அம்மா வைக்கும் மீன் குழம்பையே சாதத்தில் ஊற்றி சாப்பாட்டை முடித்து விடலாம், வேறு வகையான‌ குழம்பு எதுவும் தேவைப்படுவது இல்லை. வைக்கவும் மாட்டார்கள். அப்படியே குழம்பு என்று வைத்தால் அதன் பெயர் வெறங்கறி(வெறும் கறி: இதில் தேங்காய் அரைத்து மீன் மசாலா போட்டு வைப்பார்கள், வேறு எதுவும் போட மாட்டார்கள் அதனால் தான் அது வெறும் கறி). எனது மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் நான் இந்தக் குழம்பை பார்த்தது இல்லை. மதியமும், இரவும் மீன் வைத்து தான் எங்கள் வீட்டில் சாப்பாடு இருக்கும். அம்மா மீன் குழம்பு வைப்பதற்கு என்று தனியாகவே மசாலா அரைத்து வைத்திருப்பார்கள். அந்த மசாலாவில் குறைந்தது பதினைந்தில் இருந்து இருபது பொருட்கள்(வத்தல், மல்லி, சீரகம், மஞ்சள், பால் காயம், அரிசி, மிளகு, வெந்தயம்.. போன்ற‌) சேர்த்து அரைத்து வைத்திருப்பார்கள். தேங்காய் அரைத்து விட்டு வைக்கும் எனது வீட்டின் மீன் குழம்பின் சுவையே தனிதான்.

தினமும் மதியம், இரவு என்று வாரத்தின் ஆறு நாட்களும் இந்த மீன் குழம்பை ஊற்றி சாப்பிடுவ‌தில் சலிப்பு என்பது வருவதே இல்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருப்பவர்களுக்குச் சலிப்படையாமல் சாப்பிட, தினமும் என்ன குழம்பு வைப்பது, என்ன பொரியல் பண்ணுவது என்பதை முடிவு செய்வதே ஒரு பெரிய போராட்டமாக இருக்கும். இப்போது நான் இருக்கும் ஹைதிராபத்திலும் எனது மனைவிக்கும், எனக்கும் இந்தப் பிரச்சனை வருவது உண்டு.

கட்டுரையின் தலைப்புக்கு வரவே இல்லையே என்று நினைக்காதீர்கள், மீனைப் பற்றிய அரிச்சுவடுத் தெரியாதவன் எல்லாம் பெருசா பேச வந்துட்டான் என்று கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால் தான் மேலே உள்ள‌ விளக்கங்கள். இப்போது தலைப்பிற்கு வந்து விடலாம். மல்லிகைப் பூ மணத்தில் மீன் குழம்பு வைக்க முடியுமா? என்பது தான் இன்றைக்கு என்னுடைய குழப்பம். முடியும் என்று உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த சாரு அவர்கள் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். உலக இலக்கியம் படித்தவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று மீன் உணவுடன் நெருங்கிய தொடர்புடைய என்னால் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை.

மீனை சுத்தம் செய்வது என்பது கண்டிப்பாக ஒரு கலை தான். நன்றாகச் சுத்தம் செய்யவில்லை என்றால் ஒரு வகையான கவுச்சு நாற்றம் வருவது உண்மை. ஆனால் நன்றாகச் சுத்தம் செய்துவிட்டால் மல்லிகைப் பூ மணம் வந்துவிடும் என்று நம் காதில் இரண்டு பெரிய வாழைப்பூவை மாட்டிவிட நினைப்பதால் தான் இந்த சீற்றம்.

ஒரு காய்கறியை சமையல் செய்தாலே எத்தகைய மணம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் இயற்கையான மணத்தை விட வேறு மணம் வருவதற்கு வாய்ப்பு உண்டா? என்றால் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இயற்கையாக மீனின் வாசம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த மீனைச் சமையல் செய்யும் போது மீனின் வாசம் வராமல் வேறு வாசம் வந்தால் அதில் போடப்பட்டது மீன் அல்ல, வேறு ஏதோ என்று தான் அர்த்தம்.

வத்தல் மற்றும் மல்லிப் பொடிகளுக்குப் பதிலாக, சந்தன‌மும் ஜவ்வாதும் கலந்து குழம்பு வைத்தாலும் மீனின் வாச‌ம் தான் வருமே தவிர, நம்ம ஊர் ஊதுபத்தியின் வாசம் வீசுவது இல்லை. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு, பிறவிக் குணத்தைப் பேய்க்குக் கொடுத்தாலும் அது மாறுவது இல்லை என்பது. அதைப் போலத் தான் மீனின் குணத்தை மாற்ற முடியாது.

மீன் குழம்பை ரசித்து உண்பவர்களுக்குத் தெரியும், அந்தக் குழம்பில் மீனின் குணமும், மணமும் இல்லையென்றால் அதன் சுவை மீனின் சுவையாக இருக்காது வேறு ஏதாகவோ இருக்கும். அப்படியென்றால் மல்லிகைப் பூ வாசம் வீசும் மீன் குழம்பு என்று கவித்துவமாகச் சொல்வதில், ஒன்று இயற்கையாக வரும் மீனின் வாசனையைக் கொண்ட மீனால் அந்தக் குழம்பு செய்யப்படவில்லை அல்லது மீனின் வாசனையை மல்லிகைப் பூ வாசமாக எண்ணி நுகருகிறார். எதுவாக இருந்தாலும் இரண்டு பிரச்சனையிலும் "அவர் நமது காதில் சர்வ சாதரணமாக நாலு முழ பூவை சொருகி விட்டு செல்ல பார்க்கிறார்" என்று தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

வீட்டிலேயே கருவாடு தயாரிக்கும் பேக்டரி வைத்திருக்கிறேன் என்றும் அளக்கிறார். அந்தப் பேக்டரி துவங்குவதற்குக் காரணம் வெளியில் கிடைக்கும் கருவாடுகளில் உப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார். ஒரு பொருளைப் பதப்படுத்துவதற்கு உப்பு என்ற மூலப் பொருள் இல்லாமல் முடியுமா என்றால், நான் முடியாது என்று தான் சொல்வேன். உப்புப் போடாமல் உலர்த்தப் பட்ட கருவாடு என்பது அழுகிய மீனை போன்றது. மீனில் தான் அழுகல் இருக்கும். கருவாட்டில் அழுகல் என்று ஒன்று இல்லை என்று வாதிட்டால் கருவாட்டைப் பற்றி முழுமையாக அறியாதவர் என்று தான் நான் சொல்வேன். குறைவான‌ அளவு உப்புச் சேர்த்து உலர்த்தப்படும் கருவாடு என்பது அழுகிய மீனை காய வைத்து சாப்பிடுவதைப் போன்றது. இத்தகைய கருவாடை குழம்பில் போட்டவுடன் முற்றிலும் கரைந்து காணமல் போய்விடும். நல்ல கருவாட்டு குழம்பிற்கும் இந்தக் குழம்பிற்கும் வாசம் முற்றிலும் வேறாக இருக்கும்.

உப்பு அதிகமாக‌ போட்டு உலர்த்தப்படும் கருவாடுதான் சுவையாக இருக்கும். கருவாட்டில் இருக்கும் உப்பின் தன்மையை எடுக்க வேண்டுமானால் இரண்டு முறை தண்ணீரில் கருவாடை சிறுது நேரம் ஊறவைத்துக் கழுவி சுத்தம் செய்து எடுத்தால் போதும்.

மீன் குழம்பு மல்லிகைப் பூ வாசம் வீசும் முறையை உங்களுக்கு என்னால் சொல்லித்தர முடியாது. அந்த அளவிற்கு உலக இலக்கியம் நான் படிக்கவில்லை ஆனால் மீன் குழம்பு மீனின் வாசம் வீச எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல தர‌ முடியும். மீனின் செதில்களை எடுத்து துண்டுகளாக நறுக்கிய பின்பு கொஞ்சம் பரல் உப்பை(கல் உப்பு) மீன் துண்டுகள் இருக்கும் சட்டியில் போட்டு நன்றாகத் தோய்த்துக் கழுவினால் கவுச்சி நாற்றம் சுத்தமாக இருக்காது.

சிறிது மஞ்சள் தூளுடன் தயிர் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்தால் வாத்துக் கறி மட்டும‌ல்ல எந்தக் கறியிலும் வரும் கவுச்சி நாற்றம் என்பது அறவே இருக்காது. தயிர் இல்லையென்றால் எழுமிச்சைப் பழச்சாறு பிழிந்தும் ஊறவைக்கலாம்.

.


Friday, February 28, 2014

பல்லிளிக்கும் தமிழ்மணம் ம‌குடம்!!!

நான் பெரும்பாலும் தமிழ் பதிவுகள் படிக்க வேண்டுமானால் முதலில் இணையத்தில் திறப்பது தமிழ் மணம் திரட்டியை தான். நண்பர்களுக்கும் பதிவுகள் படிப்பத‌ற்கு பரிந்துரை செய்வது இதைத் தான். தமிழ் மணம் திரட்டியில் திறந்தவுடன் முதலில் படிப்பது மகுடத்தில் இருக்கும் பதிவையும், வாசகர் பரிந்துரை பதிவுகளையும் தான். மகுடம் ஏறும் பதிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் எனக்கும் அவ்வப்போது எழாமல் இல்லை. அதைப்பற்றிப் பல பதிவர்கள் எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் தமிழ் மணத்தில் மகுடத்தில் இருக்கும் பதிவை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பதிவுக்கு ஓட்டு அளித்திருப்பவர்களின் பெயர்களைப் பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருந்தது. நீங்களும் அந்தப் பொன்னான ஓட்டு போட்டு மகுடத்தில் ஏற்றியவர்களை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.



பல பதிவர்கள் சொல்லியதை போல, எழுதியதை போல் தமிழ்மணம் ஓட்டு முறையில் மாற்றம் கொண்டு வருவது மிக முக்கியம். இல்லையென்றால் எவர் நினைத்தாலும் அவருடைய பதிவை மகுடத்தில் ஏற்றி பார்க்கலாம் அல்லது எளிதாக வாச‌கர் பரிந்துரையிலும் கொண்டு வரலாம்.

முன்பு தமிழ்மணம் பற்றி என்னுடைய எண்ணம் இதுவாகத் தான் இருந்தது ஒருவருக்குச் சுயமாக வலைத்தளம் இருந்து, அதில் தமிழ்மணபட்டையை நிறுவி பின்னர்த் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடம் இருந்து பாஸ்வேர்டு வந்த பின்பு தான் ஒட்டளிக்க முடியும் என்று நினைத்து வந்தேன். தமிழ்மணம் ஓட்டு பற்றிய பலருடைய பதிவுகளைப் படித்த பின்பு தான் இதில் இவ்வளவு தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் இந்தப் பதிவில் ஓட்டு அளித்திருக்கும் அனைத்து பெயர்க்ளையும் கொஞ்சம் பாருங்கள். பெயர் ஒன்றாக இருக்கிறது, இறுதியில் ஒன்று, இரண்டு என்று எண்களை மட்டும் சேர்த்து இருக்கிறார்கள்..

இனியும் தாமதிக்காமல் தமிழ்மணம் நிர்வாகிகள் நட‌வடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் இதைப்போல் பல பதிவுகள் மகுடத்தில் வந்து பல்லிளிக்கும். அதையும் கொடுமை என்று படித்துத் தீர வேண்டும்...

தமிழ்மணம் என்ன செய்ய வேண்டும் என்று பல பதிவர்கள், பல பதிவுகளை எழுதியுள்ளார்கள், அவற்றில் சிறந்தவற்றைக் கருத்தில் கொண்டு உருவாகினால் நன்றாக இருக்கும். அல்லது தமிழ்மணமே ஒரு வாசகர் பரிந்துரை பக்கத்தை நிறுவி அதில் வாசகர்கள், பதிவர்கள், கருத்துரையாளர்களின் கருத்துகளைக் கேட்டு பின்பு அவற்றில் சிறந்தவற்றை எடுத்து நடைமுறைப்படுத்தலாம்.

.

Wednesday, June 20, 2012

க‌ழ‌ட்டி மாட்ட‌ப்ப‌டும் முக‌மூடிக‌ள்


ஒரு த‌வ‌றை சுட்டிக்காட்டு எழுதுவ‌தாலோ!!.. அல்ல‌து அந்த‌ த‌வ‌றைப் ப‌ற்றிய‌ விவாத‌த்தில் த‌ன‌து க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்தாலோ!!!.. முத‌லில் உங்க‌ளை நோக்கி வ‌ரும் கேள்வி, நீ ம‌ட்டும் யோக்கிய‌மா?.. நீ யோக்கிய‌ன் என்றால் உன் ப‌க்க‌த்து வீட்டுக் கார‌ன் யோக்கிய‌மா?.. என்று தான் வ‌ரும்.

மேலே சொன்ன‌ இர‌ண்டையும் நீங்க‌ள் எப்ப‌டியோ முட்டி மோதி "யோக்கிய‌ன்" என்று நிலை நிறுத்தி விட்டால் முடிந்து விட்ட‌து!!! என்று நீங்க‌ள் நினைத்தால்.. உங்க‌ளை விட‌ முட்டாள் யாரும் இல்லை :)))

அடுத்து அடிப்பாங்க‌ பாருங்க‌ ஒரு அந்த‌ர் ப‌ல்டி.. இந்த‌ உல‌க‌த்தில் யாரும் செய்யாத‌தையா?.. நான் செய்துவிட்டேன் என்பார்க‌ள். உல‌க‌ம்.. உல‌க‌ம்...என்று அவ‌ர் பேசுவ‌தை பார்த்தால் சில‌ருக்கும், உண்மையில் உல‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லோருமே இப்ப‌டித்தான் இருப்பார்க‌ளோ!!! என்று பீதியாகிவிடும். ஆனால் இவ‌ர்க‌ள் சொல்லும் உல‌க‌ம் என்ப‌து அந்த‌ முனை "டீக்க‌டையில் கூடும் நான்கு பேர்" என்ப‌து அனேக‌ருக்கு தெரியாது.

உன்னுடைய‌ ச‌ட்டையை க‌ழ‌ட்டி பார்!!.. நெஞ்சை பிள‌ந்து பார்!!.. கண்ணாடி முன்பு நின்று பார்!!!.. என்று வ‌ரும் யோக்கிய‌மான‌ கேள்விக‌ளை கேட்டும் போது ந‌ம‌க்கும் அடிவ‌யிறு க‌ல‌ங்க‌ ஆர‌ம்பித்துவிடும். ந‌ம்முடைய‌ புரித‌ல்‌ ப‌ற்றி ந‌ம‌க்கே ச‌ந்தேக‌ம் வ‌ருவ‌தை த‌விர்க்க‌ இய‌லாது.

நான்‌ எட்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் அம்ப‌த்தூரில் உள்ள‌ ஒரு வாக‌ன‌ உதிரிப்பாக‌ம் தாய‌ரிக்கும் தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வ‌ந்தேன். அங்கு நான் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் வேலை பார்த்து இருப்பேன். பின்பு என‌க்கு வேறு வேலை கிடைத்த‌தால் அங்கிருந்து வெளியேறினேன். நான் வேலையை விட்டு வெளியில் வ‌ருவ‌த‌ற்கு ஒரு மாத‌த்திற்கு முன்பு என‌து மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஒரு பைய‌ன் வ‌ந்து வேலையில் சேர்ந்தான். சொந்த‌ மாவ‌ட்ட‌ம் என்ப‌தால் அவ‌னிட‌ம் கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌ழ‌கி விட்டேன். கொஞ்ச‌ம் துடுதுடுப்பான‌ பைய‌ன், வேறு தொழிற்ச்சாலைக‌ளில் வேலைப் பார்த்த‌ முன் அனுப‌வ‌ம் ஏதும் இல்லாத‌தால் யார் என்ன‌ வேலை சொன்னாலும் த‌ய‌ங்காம‌ல் செய்வான்.

"ப‌ணியிட‌ பாதுக்காப்பு" என்ப‌து எந்த‌ள‌வில் இருக்கும் என்ப‌து அம்ப‌த்தூர் தொழிச்சாலைக‌ளில் வேலை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும். மெஷினில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு எப்போது வேண்டுமான‌லும் எதுவும் ந‌ட‌க்க‌லாம். ஏதாவ‌து ஒரு விப‌த்து ந‌ட‌ந்து கொண்டே இருக்கும்.

அந்த‌ தொழிற்ச்சாலையில் இருந்து வெளிவ‌ந்து ஆறு மாத‌ம் க‌ழித்து, என்னுட‌ன் அதே தொழிற்ச்சாலையில் வேலைப் பார்த்த‌ ப‌ழைய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ரை பார்க்க‌ முடிந்த‌து. அவ‌ரிட‌ம் பேசிக் கொண்டு இருக்கும் போது, என‌து மாவ‌ட்ட‌த்தில் இருந்து வ‌ந்த‌ அந்த‌ பைய‌னை ப‌ற்றியும் விசாரித்தேன். அப்போது அவ‌ர் சொன்ன‌து என‌க்கு பேர‌திர்சியாக‌ இருந்த‌து. அவ‌ன் மேனுவ‌ல் ஹைடிராலிக் பிர‌ஸ் மெசினில்(Manual Hydraulic Press Machine) வேலை பார்க்கும் போது ஒரு "கை" போய்விட்ட‌தாக‌ கூறினார்.

மேலும் "பிளாஸ்டி கை" வாங்கி வைக்கிறோம், உன்னால் முன்பு போல‌ எல்லா வேலையும் செய்ய‌ முடியும், அனைத்து ம‌ருத்துவ‌ செல‌வையும் நாங்க‌ளே ஏற்று கொள்கிறோம், ஆயுள் முழுவ‌தும் நாங்க‌ளே ப‌ணியில் வைத்து கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லி அவ‌னுடைய‌ குடும்ப‌த்தின‌ரிட‌ம் "போலிஸ் கேஸ்" ஆகாம‌ல் பார்த்து கொண்டார்க‌ள். ஆனால் இவ‌ர்க‌ள் சொன்ன‌து எதுவும் செய்யாம‌ல் கொஞ்ச‌ நாளிலேயே வேலையில் இருந்து நீக்கி விட்டார்க‌ள். என்று அவ‌ர் சொன்ன‌போது விக்கித்து நின்றேன்.

நான் மேலே உள்ள‌ ச‌ம்ப‌வ‌த்தை சொல்வ‌த‌ற்கு கார‌ண‌ம், ச‌மீப‌த்தில் அந்த‌ தொழிற்ச்சாலை ஐ எஸ் ஓ த‌ர‌ச் சான்றித‌ழ்(ISO) பெற்ற‌து. ஆனால் அந்த‌ தொழிற்ச்சாலையில் பாதுக்காப்புக்கான‌ எந்த‌ வித‌மான‌ புது மாற்ற‌மும் செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

என‌து "கை" த‌ப்பிவிட்ட‌து என்ப‌தாலும், ஐ எஸ் ஓ(ISO) த‌ர‌ச்சான்றித‌ழ் பெற்றுவிட்ட‌து என்ப‌தாலும் அந்த‌ தொழிற்ச்சாலையை ப‌ற்றி "ப‌ணிபுரிய‌ சிற‌ந்த‌ இட‌ம்" என்று நானே ஒரு ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் எடுத்தால் எப்ப‌டி இருக்கும்?... என‌ வாச‌க‌ர்க‌ளின் சிந்தைக்கே விட்டு விடுகிறேன்.

கால‌த்தின் க‌ட்டாய‌ம் இது.....இப்ப‌டித்தான் ச‌ம்பாதிக்க‌ வேண்டும் என்று இல்லை, எப்ப‌டியும் ச‌ம்பாதிக்க‌லாம் என்று திருவாய் ம‌ல‌ரும் மெத்த‌ ப‌டித்த‌, முற்போக்கு, திராவிட‌, பின்நவீன‌த்துவ‌, உல‌க‌ இல‌க்கிய‌ம் ப‌டித்த‌ பெரும‌க்க‌ள் துணைக்கு அழைப்ப‌து யாரை என்றால் "பிதாவே இவ‌ர்க‌ளை ம‌ன்னியும்" என்று சொன்ன‌ இயேசு பெருமானை...

வெட்டி ஒட்டுவ‌தில் அதி மேதாவிக‌ளான‌ ந‌ம் பெரும‌க்க‌ள், அந்த‌ பைபிள் வ‌ச‌ன‌த்தில் கீழே இருக்கும் இர‌ண்டு வ‌ரியை சேர்த்து ஒட்டியிருந்தால் ந‌ல்லாயிருக்கும்... ச‌ரி அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னையோ... :))) நாம‌ அதை ஒட்டி ப‌டிப்போம்...


"7 அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.


8 மீண்டும் குனிந்து தரையில் எழுதலானார்.


9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்; அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.


10 அவர் நிமிர்ந்துபார்த்து, "மாதே, எங்கே அவர்கள் ? உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று கேட்டார்.


11 அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என, இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்."

கூட்ட‌த்தின‌ரை பார்த்து "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்று முத‌ல் வ‌ரியில் சொல்லிவிட்டு, இர‌ண்டாவ‌து வ‌ரியில் "இனிமேல் பாவ‌ம் செய்யாதே போ" என்று சொல்லி இயேசு அந்த‌ பெண்ணை ந‌ல்வ‌ழி ப‌டுத்துகிறார்.

ஆனால் த‌த்துவ‌ முடிச்சுக‌ளை அவிழ்க்க‌ ந‌ம‌து நீதிமான்க‌ளுக்கு முத‌ல் வ‌ரி ம‌ட்டும் போதுமான‌தால் இயேசு சொன்ன‌ இர‌ண்டாவ‌து வ‌ரி தேவையில்லாம‌ல் போயிற்று....

ச‌ரி இந்த‌ ஒட்டு வேலையை விட்டுவிட்டு, பைபிளில் சொல்ல‌ப்ப‌டும் பிர‌ச்ச‌னையையும், இங்கு இவ‌ர்க‌ள் ஆராயும் பிர‌ச்ச‌னையையும் ஒன்றா? என்று சீர் தூக்கிப் பார்த்தால்............ ரெம்ப‌ கேவ‌ல‌மாக‌ இருக்கிற‌து. உண்மையில் யாருக்கு இவ‌ர்க‌ள், முட்டு குடுத்து நிறுத்துகிறார்க‌ளோ.. அவ‌ரே முக‌ம் சுழிப்பார்.....

ஏதாவ‌து ஒரு புத்த‌க‌த்தில் இருந்து காப்பி ப‌ண்ணி இது போல் ஒட்டு போடும் வேலையை செய்வ‌த‌ற்கு முன்பு ஒன்றுக்கு நாலு முறை ப‌டியுங்க‌ள்.... அப்புற‌ம் த‌த்துவ‌ முடிச்சுக‌ளை அவிழுங்க‌ள்...

ஆமா.... என‌க்கு ஒரு ட‌வுட்டு....

என‌க்கு தேவைனா ஆத்திக‌ம் முக‌மூடி போட்டுகிற‌தும், தேவையில்லைனா நாத்தீக‌ம் முக‌மூடி போட்டுகிற‌தும் தான் திராவிட‌ கொள்கையா?........

.

.

Thursday, October 14, 2010

த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌ம்_த‌னிம‌னித‌த் தாக்குத‌ல்.

நான் முந்திய‌ இடுகையில் எழுதிய‌ அதிமேதாவிக‌ளும், கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுப்ப‌வ‌ர்க‌ளும் குடியிருக்கும் கோவில் த‌மிழ் வ‌லைப்ப‌திவாள‌ர் குழும‌ம் என்ப‌தை மிகுந்த‌ வ‌ருத்த‌துட‌ன் தெரிவித்து கொள்கிறேன்..

இதை நீ எப்ப‌டி சொல்லாம், உன‌க்கும் அத‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் என‌ "ப‌ராச‌க்தி" ப‌ட‌ வ‌க்கீல் கேள்விக‌ள் நிறைய‌ இருக்கும்...

"அதில் நானும் பாதிக்க‌ப்ப‌ட்டேன், நேர‌டியாக‌ தாக்க‌ ப‌ட்டேன்" என‌ "ப‌ராச‌க்தி" சிவாஜி வ‌ச‌ன‌ம் போல் நானும் ப‌தில் சொல்லுகிறேன்..

இதோ கேளுங்க‌ள் என் க‌தையை,

ப‌திவுல‌கில் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக‌ சாந்தி என்ற‌ பெண் ப‌திவ‌ரின் பிர‌ச்ச‌னை எல்லாயிட‌ங்க‌ளிலும் எழுத‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே..

இந்த‌ ப‌திவ‌ரின் பிர‌ச்ச‌னைக்கு மூல‌க்கார‌ண‌ம் இந்த‌ த‌மிழ் பிளாக்க‌ர் போர‌ம் தான். அதில் நானும் ஒரு பார்வையாள‌னாக‌ இருந்த‌தால் அங்கு ந‌ட‌ந்த‌ சில‌ பிர‌ச்ச‌னைக‌ள் என‌க்கு தெரியும்...

இந்த‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி வின‌வில் ஒரு க‌ட்டுரை வ‌ருகிற‌து. அதை நானும் போய் ப‌டிக்கிறேன். அதில் ஒரு பின்னூட்ட‌மும் போடுகிறேன். கார‌ண‌ம் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ள் இருந்த‌ போது அவ‌ர்க‌ளை "அக்கா" என்று அழைத்த‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்..

வின‌வில் நான் போட்ட‌ பின்னூட்ட‌ம் எவ‌ரையும் குறிப்பிட்டு போட‌வில்லை, என்னை நானே ப‌ழித்துக் கொண்டேன்..

இர‌ண்டாவ‌து இதே பிர‌ச்ச‌னை ப‌ற்றி முகில‌ன் அவ‌ர்க‌ள் ஒரு ப‌திவு எழுதுகிறார், அந்த‌ ப‌திவில் நான் சில‌ பின்னூட்ட‌ங்க‌ள் போடுகிறேன். இதில் நான் முகில‌னிட‌ம் சில‌ கேள்விக‌ள் வைக்கிறேன். அவ‌ரை த‌ர‌க்குறைவாக‌ அதில் ஒரு வார்த்தை கூட‌ நான் உப‌யோக‌ப் ப‌டுத்த‌வில்லை. அதில் சில‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொன்னார், சில‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌வில்லை, உட‌னே நானும் அவ‌ரிட‌ம் ந‌ன்றி சொல்லிவிட்டு வ‌ந்துவிடுகிறேன்.. அவ‌ரும் அந்த‌ ப‌திவில் அத‌ன் பிற‌கு வேறு எந்த‌ கேள்வியும் என‌க்கு வைக்க‌வில்லை, நானும் அதை ம‌ற‌ந்துவிட்டேன்..

உண்மையில் என்னுடைய‌ ப‌திவை ப‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், நான் இதுவைரையில் எந்த‌வொரு விவாத‌ங்க‌ளிலும் க‌ல‌ந்து கொள்வ‌தும் கிடையாது, எவ‌ருடைய‌ த‌ள‌த்திலும் கும்மி அடிப்ப‌தும் கிடையாது...

அப்ப‌டியிருக்கும் போது முகில‌னிட‌ம் ம‌ட்டும் நான் விவாத‌ம் செய்த‌மைக்கு கார‌ண‌ம், என்னுடைய‌ சில‌ ப‌திவுக‌ளில் அவ‌ரும் வ‌ந்து விவாத‌ம் செய்திருக்கிறார், நானும் அவ‌ருடைய‌ விவாத‌ங்க‌ளுக்கு ப‌திலும் சொல்லியிருக்கிறேன். அந்த‌ உரிமையில் தான் அவ‌ரிட‌ம் சென்று அன்றைக்கு கேள்விக‌ள் வைத்தேன். இல்லையென்றால் க‌ண்டிப்பாக‌ அவ‌ரிட‌ம் நான் கேள்விக‌ள் வைத்திருக்க‌ மாட்டேன்.


ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை முகில‌ன் ம‌ட்டும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து அல்ல‌, அது இரும்புத்திரை அர‌விந்த், ம‌ற்றும் ப‌திவ‌ர் ம‌தார் அவ‌ர்க‌ளும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து என்ப‌தும் என‌க்கு தெரியும், ஆனால் அர‌விந்த் ம‌ற்றும் ம‌தார் என‌க்கு அறிமுக‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுடைய‌ த‌ள‌த்தில் நான் சென்று ஒரு பின்னூட்ட‌ம் போட்ட‌து கூட‌ கிடையாது, அவ‌ர்க‌ளும் என்னுடைய‌ ப‌திவிற்கு பின்னூட்ட‌ம் போட்ட‌து கிடையாது... என‌வே அவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ புரித‌ல் என‌க்கு இல்லாத‌தால் எந்த‌வொரு இட‌த்திலும் இவ‌ர்க‌ளை ப‌ற்றி நான் பேசிய‌து கிடையாது..

இது இப்ப‌டி இருக்க‌, முகில‌ன் ப‌திவு எழுதி ஒரு வார‌ங்க‌ள் க‌ழித்து த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் திடிரென‌ ஒரு ப‌ஸ்ஸின் முக‌வ‌ரியை ப‌கிருகிறார். அந்த‌ முக‌வ‌ரியை சென்று பார்த்தால் நான் ஒரு மாத‌திற்கு முன்பு எழுதிய‌ காமெடி ப‌திவில் ஒரு அடைப்பு குறியில் எழுதிய‌ வாச‌க‌த்தை ம‌ட்டும் எடுத்து போட்டுவிட்டு

http://www.google.com/buzz

"இது ஆணாதிக்க‌மாக‌ தெரிய‌வில்லையா" என்று கேள்வி வைக்கிறார்..

இதை பார்த்த‌ பின்புதான் என‌க்கு தெரிந்த‌து உண்மையில் முகில‌ன் என் மீது வ‌ன்ம‌ம் வைத்திருக்கிறார் என்று, கார‌ண‌ம் மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌திவை நான் எழுதிய‌ நாளில் வ‌ந்து என்னுடைய‌ பேச்சில‌ர் வாழ்க்கையை நினைவு ப‌டுத்தி விட்டீர்க‌ள் என்று சொல்லிவிட்டு போன‌வ‌ர் அப்ப‌டியே இர‌ண்டு வார‌ங்க‌ளில் மாறிப்போனார்..

அந்த‌ ப‌ஸ்ஸின் லிங்க் போர‌த்தில் போட‌ப்ப‌ட‌வுட‌ன் அத‌ற்கும் சில‌ அதிமேதாவிக‌ள் வ‌ந்து கும்மி அடிக்கிறார்க‌ள். நான் க‌டைசியில் சிரித்துவிட்டு வ‌ந்தேன்..

இந்த‌ கும்மி ந‌ட‌க்கும் போது தான் சிரிப்பு போலிஸ் (ர‌மேஷ்) போர‌த்தில் ஒரு இழையை ஆர‌ம்பித்து "போர‌மா?.. போர் ந‌ட‌க்கிற‌ இட‌மா?.." என்று ஒரு கேள்வி வைத்து சில‌ க‌ருத்துக்க‌ளை வைக்கிறார்.. ஆனால் அந்த‌ க‌ருத்துக‌ளும் அதிமேதாவிக‌ளால் எள்ளி ந‌கையாட‌ப்ப‌டுகின்ற‌து.. அதை அவ‌ருடைய‌ ப‌திவில் பார்த்தால் உங்க‌ளுக்கு புரியும்..

இது இப்ப‌டி இருக்க‌..

இர‌ண்டு நாட்க‌ள் முன்னால் முகில‌ன் ப‌ஸ்ஸில் இருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து வ‌ந்து போர‌த்தில் ஒரு புது இழையை தொட‌ங்குகிறார். அதுவும் என்னுடைய‌ பெய‌ர் போட்டு ஒரு கேள்வியும் வைக்கிறார். அந்த‌ ஸ்கிரீன் ஷாட் ப‌திவ‌ர் சாந்தியின் ப‌ஸ் முக‌வ‌ரியுடைய‌து. அதில் த‌லையும் வாலும் புரியாம‌ல் சில‌ வாச‌க‌ங்க‌ள் இருக்கிற‌து.. அதை ப‌ற்றி நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டுமாம்? என்ன‌வொரு கொடுமை?.. உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு எல்லாம் என்னிட‌ம் க‌ருத்து கேட்பார்க‌ள் போல் இருக்கிற‌து...

ஒரு பிர‌ச்ச‌னையை ப‌ற்றி கேள்வி கேட்டால் அந்த‌ பிர‌ச்ச‌னைக்கு ப‌தில் சொல்லாம‌ல், வேறோரு பிர‌ச்ச‌னையை காட்டி அத‌ற்கு ஏன் நீ கேள்வி கேட்க‌வில்லையென்று என்னிட‌ம் கேட்கிறார்க‌ள்?.. என்ன‌ ப‌தில் சொல்வ‌து?.. (கேள்வி கேட்ப‌த‌ற்கு கூட‌ உரிமை கிடையாது, அதுவும் மேதாவிக‌ள் தான் முடிவு செய்வார்க‌ளாம்.. என்ன‌ கொடுமை சார் இது..)

ப‌ர‌வாயில்லை..

முகில‌னின் கேள்விக்கு நான் ப‌தில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இரும்புத்திரை அர‌விந்த் த‌ங்கிலிஷ் என்ற‌ வாளால் சுழ‌ற்றுகிறார்... (வாந்தியெடுக்கிறார்)

அவை உங்க‌ள் பார்வைக்கு,

From: aravind

Date: 2010/10/11


ayya sombu thooki stephen

ellorum pesi thaane ellaam seireenga appuram enna.ini engayaavathu ponnunu vantha sombu thooki raasa appuram irukku

unnai pathi evandaa eluthinaan paadu..

vaa unakku venumnaa vanthu kuni

ini engayaavathu pesu pinja seruppaalaye unnai adikkirendaa paadu


en naan address thanthaa en veettukku vanthu sombu thookuviyaadaa badu

endaa unakkum oru thadavai sonna puriyaathaa.address thaa.neengalum aal vaichu thaane kosham poduveenga.athe paaniyil un sombai naan udaikiren.ithaiyum anga poi solli alu.


saridaa sombu thooki..ini engavaathu pombalaikku aatharavaa pesathe.nee pathilukku ethai ethirpaakkuranu theriyala


(இந்த‌ வார்த்தைக‌ளை த‌மிழ்ப்ப‌டுத்த‌ கூட‌ என‌க்கு விருப்ப‌ம் இல்லை, அவ்வ‌ள‌வு வ‌க்கிர‌ங்க‌ளும், ஆபாச‌மும் இருக்கிற‌து, ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌லாம்)


அர‌விந்த் சுழ‌ற்றிய‌ வாளில் வ‌ழியும் குருதியை ர‌சிக்கிறார், சொல்ல‌த் துடிக்குது ம‌ன‌சு ம‌தார்..

அவை உங்க‌ள் பார்வைக்கு,

மதார் பட்டாணி to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


@முகிலன் ,

அவர் பேசட்டும் விடுங்க என்னால பேச முடியல .இவ்ளோ கீழ்த்தரமா பேசிட்டு . தப்பா பேசினதுக்கு எங்கே ஆதாரம் என்று கேட்டாங்களே இதுக்கு மேல தப்பா எங்கேயும் பேச முடியும் ?


வாள் சுழ‌ற்ற‌ அடித்த‌ள‌ம் அமைத்த‌ முகில‌ன் இப்போது ம‌ன்னிப்பு கேட்டு சுப‌ம் போடுகிறார்..

அதுவும் உங்க‌ள் பார்வைக்கு,

Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அதே தான் மணிஜி. இந்த இழையை ஆரம்பித்ததற்காக நான் குழும உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மாடரேட்டர் இத்திரியை நீக்கிவிட்டால் மகிழ்வேன்.



என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,
Dhinesh Kumararaman(முகிலன்)


சொல்ல‌ ம‌ற‌ந்திட்டேன் இவ்வாறு ஒருவ‌ர் வாந்தியெடுத்து கொண்டிருக்கும் போது முகில‌ன் க‌ண்டிக்கிறார், அதை சொல்லாம‌ல் விட்டுவிட்டால் சாமி குத்த‌ம் ஆகிடும்.

அதுவும் உங்க‌ள் பார்வைக்கு,

Dhinesh Kumar (முகிலன்) to tamizhbloggers.
show details Oct 11 (2 days ago)


Images are not displayed.
Display images below - Always display images from maildhinesh@gmail.com
அரவிந்த், ப்ளீஸ், தகாத வார்த்தைகள் இங்கே வேண்டாம். உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகள் நம் கோபத்தில் உள்ள நியாயத்தை மறைத்துவிடும்.


இவ்வ‌ள‌வு அசிங்க‌மான‌ வார்த்தைக‌ளை உப‌யோக‌ப்ப‌டுத்தி என்னை ஒருவ‌ர் திட்டுகிறார், போர‌த்தில் இருக்கும் எவ‌ர் ஒருவ‌ரும் அர‌விந்தை த‌டுத்து நிறுத்த‌வில்லை..

இந்த‌ பிர‌ச்ச‌னையில் ம‌ன‌முடைந்த‌ நான் என்னுடைய‌ த‌ர‌ப்பு நியாய‌ங்க‌ளை(யாருக்கு வேணும்?..) எழுதி போர‌த்தில் புது இழையில் போடுகிறேன், தீர்வு சொல்லுங்க‌ள் என்று..

இந்த‌ இழையிலும் எவ‌ர் ஒருவ‌ரும் அர‌விந்துக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ங்க‌ளை ப‌திவு செய்ய‌வில்லை, மாறாக‌ சில‌ மேதாவிக‌ள் மீண்டும் வாந்தியெடுத்தார்க‌ள், சில‌ அதிமேதாவிக‌ள் ம‌ற‌ப்போம், ம‌ன்னிப்போம் என்றார்க‌ள், அதைவிட‌ சில‌ மெகா மேதாவிக‌ள் கெட்ட‌ வார்த்தையை க‌ண்டுபிடித்த‌வ‌னை தான் க‌ண்டிக்க‌ வேண்டும் என்று சொன்னார்க‌ள்... என்ன‌வொரு நியாமான‌ வார்த்தைக‌ள்... கார‌ண‌ம் ந‌ம‌க்கு ஆத‌ர‌வாக‌ பேச‌த்தான் குழுக்க‌ள் கிடையாதே?..

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ இர‌ண்டு இழையின் முழுவிப‌ர‌ங்க‌ளையும் என்னுடைய‌ ப‌ஸ் முக‌வ‌ரியில் ஏற்றியுள்ளேன், விருப்ப‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் பார்க்க‌லாம்..

http://www.google.com/profiles/101916289514179757488#buzz

மேலே ந‌ட‌ந்த‌ விவாத‌த்தில் என‌து ம‌ன‌சாட்சி கேட்ட‌ சில‌ கேள்விக‌ள்..

1) நான் யாருக்கு பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும் என்ப‌தை யார் முடிவு செய்ய‌ வேண்டும்?..

2) எந்தெந்த‌ விவாத‌ங்க‌ளுக்கும், ப‌திவுக‌ளுக்கும் நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டும் என்ப‌தை யார் முடிவு செய்வ‌து? ..

3) உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னை எல்லாவ‌ற்றிற்கும் நான் க‌ருத்து சொல்ல‌ வேண்டும் என‌ தீர்மானிக்க‌ நீங்க‌ள் யார்?

4) ஒரு ப‌திவில் வைத்த‌ கேள்விகளுக்கு ப‌தில் சொல்லாம‌ல், அதை உங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ இட‌ங்க‌ளில் கொண்டு போய் விவாதிப்ப‌தின் ம‌ர்ம‌ம் என்ன‌?..

5) இந்த‌ பிர‌ச்ச‌னையில் என‌க்கும் முகில‌னுக்கும் தான் விவாத‌ம், ஆனால் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம் ஆஜ‌ராக‌ கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுப்ப‌த‌ன் நோக்க‌ம் என்ன‌?..

6) உண்மையில் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இருந்தால் தார‌ள‌மாக‌ நாக‌ரீக‌மாக‌ வைக்க‌லாமே!!.. அதை விட்டுவிட்டு அசிங்க‌மாக‌ பேசுவ‌த‌ன் நோக்க‌ம் என்ன‌?.. ஒருவேளை நானும் த‌வ‌றாக‌ பேசிவிட்டால் அதை வைத்து க‌ம்பு சுத்த‌லாம் என்ப‌துதான் உங்க‌ள் நோக்க‌மா?..

இப்போது நீங்க‌ள் என்னுடைய‌ முந்தைய‌ ப‌திவை ப‌டித்தீர்க‌ள் என்றால் ஒவ்வொரு வார்த்தைக்கும் விடை கிடைக்கும்..

1) இந்த‌ பிர‌ச்ச‌னையை இங்கு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம், த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் போர‌த்தில் என்ன‌ ந்ட‌க்கிற‌து என்ப‌தை அனைவ‌ரும் அறிந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌தும் தான்..

2) குழு அர‌சிய‌ல் எந்த‌ அள‌வு ப‌திவுல‌க‌த்தில் வேருன்றி இருக்கிற‌து என்ப‌தை சொல்ல‌ வேண்டும் என்ப‌தும்..

3) புதிதாக‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இதுபோன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளில் மாட்டிக்கொண்டு ம‌ன‌ உளை‌ச்ச‌ல் அடைய‌க் கூடாது என்ப‌தும்..

4) இந்த‌ ப‌திவை எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம் உங்க‌ளிட‌ம் சொல்லி அனுதாப‌ம் வாங்க‌ வேண்டும் என்று துளியும் என‌க்கு விருப்ப‌ம் கிடையாது. என‌து ந‌ட்புக‌ள் சில‌ர் இதை நீங்க‌ள் வெளியில் சொன்னால் தான் மேலும் எவ‌ரும் இது போல் பிர‌ச்ச‌னையில் மாட்டாம‌ல் இருப்பார்க‌ள் என்று கேட்ட‌தாலும்..

குறிப்பு: இணைய உலகில் என்னைப் போல உலகம் சுற்றும் தமிழர்களுக்கு சொந்த நாட்டின் நினைவோடு இளைப்பாறுதல் என்பது மகிழ்ச்சியான விசயம். இது எனக்கு மட்டுமல்ல ஊரில் இருக்கும் என் குடும்பத்தாருக்கும் கூட ஒரு இனிய இணைப்பாக விளங்குகிறது. ஆனால் இத்தனை நாட்கள் பதிவுலகில் மென்மையான சுபாவத்தோடு மரியாதையோடும் செயல்படும் என்னை தமிழ் வலைப்பதிவாளர் குழுமத்தில் இருக்கும் சில கடிநாய்கள் கடித்து குதறியிருக்கின்றன.

நாட்டில் ஒரு நல்லது கெட்டது என்றால் அதில் நான் தலையிடவேண்டுமென்று விரும்பினால் தலையிடுகிறேன். அதுதான் இந்த அநாகரீக மனிதர்களுக்கு பிடிக்கவில்லை. இணையம் என்பது நிழல் உலகம் என்பதால் க‌ணிப்பொறியின் முன் ஊளையிடுகிறார்கள். இதுவே எங்கள் கிராமத்து பக்கம் நடந்திருந்தால் நடப்பது வேறு. இந்த கோழைகள் எவரும் நேரில் பேசுவதற்கு வரமாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆயினும் இவர்களை உரிய நேரத்தில் உரிய முறையில் என்றாவது ஒரு நாள் நேரில் எதிர்கொள்வேன்.

என்னை தாகாத வார்த்தைகளால் குழுமத்தில் அரவிந்தும் அவரது அடிப்பொடிகளும் கடித்த போது ஓரிருவரைத் தவிர எவரும் அதை கண்டிக்க வரவில்லை. எனவே கடித்தவர்களை விட அதை வேடிக்கை பார்த்து இரசிக்கும் அநாகரிகத்தையும் குழுமத்தில் கண்டேன். இத்தகையவர்களுடன் இவ்வளவு நாட்கள் நானும் குழும‌த்தில் இருந்தேன் எனபதை நினைத்து பார்த்தால் குற்ற உணர்வாக இருக்கிறது.

கொள்கைக்காக ஒரு குழுவில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் என் குழுவைச் சேர்ந்தவனை நீ ஆதரிக்க வில்லை என்று இவர்கள் என்னைக் குறிவைக்கிறார்கள். இதையே தொடர்ந்து பதிவுகளாலும், விவாதங்களாலும் செய்து வருகிறார்கள். இந்த மன விகாரம் படைத்தவர்களை எழுதியே பேசியோ விவாதித்தோ திருத்த முடியாது என்பது எனது அனுபவம். என்ன செய்யலாம் என்பதை நண்பர்களிடம் கேட்கிறேன்.

இந்த விசயகங்களினால் நான் வருந்தினேன். ஆனால் அஞ்சவில்லை. கீ போர்டில் எழுதவதைத்தாண்டி வேறு ஒன்றும் உடனடியாக செய்ய முடியவில்லை என்ற க‌வ‌லை என‌க்கு உண்டு. இந்த சாக்கடை அனுபவத்திலிருந்து இந்த சாக்கடையை எழுத்துக்களால் உற்பத்தி செய்யும் மனித விலங்குகளை நாம் என்றைக்கு வெளியேற்றுகிறோமோ அன்றுதான் இணையம் உற்சாகமானதாக இருக்குமென்று தோன்றுகிறது. அந்த சுத்தப்படுத்தும் வேலையை நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து செய்வேன்.


ஏற்க‌ன‌வே த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் உள்ள‌ கொடுமைக‌ள் தாங்காம‌ல் வெளியேறிய‌வ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ளும்.

1) கே.ஆர்.பி.செந்தில் அண்ண‌ன்

2) சிரிப்பு போலிஸ் ர‌மேஷ்

நானும் இன்றில் இருந்து த‌மிழ் வ‌லைப்ப‌திவ‌ர் குழும‌த்தில் இருந்து வில‌வி விட்டேன், அத‌ன் மாட‌ரேட்ட‌ர் கேபிள் ச‌ங்க‌ர் அவ‌ர்க‌ளுக்கு மெயில் அனுப்பி விட்டேன்.. த‌ய‌வு செய்து என்னை நீக்கி விடுங்க‌ள் என்று இத‌ன் மூல‌மும் தெரிவித்து கொள்கிறேன்.
Related Posts with Thumbnails