இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் கீழே சொடுக்கி படித்துவிட்டு தொடரவும்.
முதல் பாகம்
அடுத்த நான்கு மணி நேரத்தில் கடலூரில் இருந்து பெரியப்பாவும், பெரியம்மாவும், சில சொந்த காரர்களும் ஒரு காரில் வந்தார்கள். அழுகைகள் தான் பிரதானமாக இருந்தது. ஜெனி அக்காவின் முகத்தை அருகில் சென்று பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. தூரத்தில் நின்று பார்த்தேன். முகத்தில் எந்தவொரு மாற்றமும் தெரியவில்லை. சிறிது பக்கத்தில் சென்று பார்த்தேன். கழுத்தில் மட்டும் ஒரு சிறிய இரத்தக் கட்டு போல் இருந்தது.
ஒவ்வொருவரும் வர வர, கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த ஜெனி அக்காவின் பக்கத்தில் சுற்றிலும் அமர்ந்திருந்த கூட்டத்தின் அழுகை அதிகமாக இருந்தது. அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு மனம் ஒப்பவில்லை. அங்கிருந்து நகர்ந்து சிறிது தூரத்தில் ஒரு வேப்பம் மரம் இருந்தது. அதன் அருகில் வீடு வேலை செய்வதற்க்காக கொட்டப்பட்ட மணல் குவிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் சென்று அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் சித்தப்பாவும் வந்து சேர்ந்து கொண்டார்.
ஜெனி அக்காவை வைத்திருந்த கூட்டத்தில் இருந்து சிறிது நேரத்தில் பெரியப்பாவும், அப்பாவும் வெளியே வந்தார்கள். பெரியப்பா விழியில் வழிந்த நீரை துடைத்து கொண்டு எங்களை நோக்கி நடந்தார்கள்.
அருகில் வந்து "என்னடே!!! பண்ணலாம்" என்று இறுக்கமான குரலில் கேட்டார்.
"எதுக்கும் போலிசில் ஒரு கம்பிளைன்ட் கொடுக்கலாம்" என்று சித்தப்பா சொன்னார்கள்.
அவனுளுட்ட மட்டும் சொன்ன, என்னடே பண்ணிட போறானுவ?. போன என் மகளை கூட்டிட்டா வந்திட போறானுவ?. என்று கண்ணில் ததும்பிய நீரை துடைத்தார் பெரியப்பா.
கம்பிளைண்ட் கொடுத்தா போஸ்ட் மார்டம் பண்ணாமல் பாடியை தரமாட்டார்கள். காலையிலேயே நடந்தது, மணி மூணு ஆகி போச்சி என்ன பண்ணலாமுனு சொன்னா தான் அடுத்த விசயத்தை பார்க்க முடியும். என்று எங்களுடைய கூட்டத்தில் நுழைந்தார் ஒருவர்.
ஆள் பார்ப்பதற்கு ஜெனி அக்காவின் வீட்டுகாரர் சாயலில் இருந்ததால், அவருடைய தம்பியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டேன்.
அவளை கூறு போட்டு பார்க்கும் அளவுக்கு என்னுடைய மனதில் தெம்பு இல்லடே, அதனால அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பாருங்கள். என்று சொல்லிவிட்டு பெரியப்பா பக்கத்தில் இருந்த மரத்தின் மீது சாய்ந்தார். அவருடைய கண்கள் குறும்பாட்டின் இரத்தம் போல் கலங்கி நின்றது.
உடனடியாக எங்கள் கூட்டத்தில் இருந்து சென்றவர் அங்கு கூடியிருந்த பெண்களிடம் குளிப்பாட்டுவதற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் கையில் வெள்ளை டவலுடன் வாயை பொத்தி அழும் அண்ணனிடம் காதில் ஏதோ சொன்னார்.
அதுவரையிலும் அமைதியாக அழுது கொண்டிருந்தவர், ஐயோ என் மவனுவ ரெண்டு பேரையும் அனாதையா விட்டுட்டு போய்ட்டியே சண்டாளி!!!
உனக்கு நான் என்ன குறைவெச்சேன், இப்படி தவிக்கவிட்டு போய்ட்டியே!!! போய்ட்டியே!!! என்று தலையில் அடித்து கொண்டு சத்தம் போட்டு மண்ணில் புரண்டு அழுதார்.
இவர் கதறி அழுவதை பார்த்ததும் எல்லாருடைய கவனமும் இவரை தேற்றுவதிலும் வேடிக்கை பார்ப்பதிலுமே இருந்தது.
அதற்க்குள் அவசர அவசரமாக ஜெனி அக்காவை கொண்டு போய் குளிப்பாட்டுவதில் சில பெண்கள் மும்முரமாக இருந்தனர்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளிப்பாட்டி, பவுடர் போட்டு, புது துணி உடுத்தி கட்டிலில் கிடத்தினார்கள்.
ஏம்பா!! சவப்பெட்டி எடுக்க ஆள் அனுப்புனீங்களா? இல்லையா? அதுக்குள்ள யாருப்பா குளிப்பாட்டுனது? குளிப்பாட்டி திரும்பவும் கட்டிலில் காக்க வைக்க கூடாது என்று கத்தினார் என்னுடைய அப்பா.
கூட்டத்தில் இருந்த சித்தி, வெளியே வந்து சித்தப்பாவை சைகை காட்டினார், சித்தப்பா சித்தியின் அருகில் சென்றார். சித்தி சித்தப்பாவின் காதில் ஏதோ சொன்னார். உடனே சித்தப்பா அப்பாவின் கையை பிடித்து கொண்டு எங்களை நோக்கி வந்தார்கள்.
கோபமாக வந்த சித்தப்பா, பெரியப்பாவிடம் "ஜெனியோட முதுகு பக்கத்துல அடிப்பட்டது போல காயம் இருக்காம், என் வீட்டுக்காரி குளிப்பாட்டும் போது பார்த்திருக்கா, பக்கத்துல இருந்த பொம்பளைங்க அவளை தொடவிடலியாம்" என்றார்.
ஆமடே.. இரண்டு நாளைக்கு முன்னாடி மருமவன் எனக்கு போன் பண்ணியிருந்தான், ஏதோ மாடி படியில இருந்து கீழ விழுந்திட்டாளாம், அப்ப அடிப் பட்டிருக்கும் என்றார் பெரியப்பா.
இவர்கள் இப்படி பேசிட்டு இருக்கும் போதே எங்கள் கூட்டதில் நுழைந்த ஜெனி அக்காவின் வீட்டுகாரரின் தம்பி, "எங்க அண்ணனும் எங்க குடும்பத்துல தலைச்சன் பிள்ளை, உங்க பொண்ணும் தலைச்சன் பிள்ளை. இவா வேற நான்டிட்டு நின்னு செத்து போயிருக்கா. அதனால பேசாம அடக்கம் பண்ணுறதுக்கு பதிலா எரிச்சுட்டாத்தான் எல்லோருக்கும் நல்லதுனு எங்க ஊரு சாமியாடி சொல்லுறாரு" என்று பெரியப்பாவிடம் சொன்னார்.
அதற்கு அப்பா, அதெல்லாம் முடியாது, எங்க சம்பிரதாயத்தில் நாங்கள் அடக்கம் தான் பண்ணுவோம், எரிக்க முடியாது என்றார்.
இல்ல நான் இரண்டு குழந்தைகளின் நல்லதுக்கு சொல்லுறேன், அப்புறம் அதுகளுக்கு இதனால பிரச்சனைனா? யாரு என்ன பண்ண முடியும் என்றார்.
சரி, உங்க சம்பிரதாய படியே நடத்துங்க என்று சொல்லிவிட்டு தலைகவிழ்ந்தார் பெரியப்பா.
அப்பாவும் சித்தப்பாவும், பெரியப்பாவின் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு பதில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
தூரத்தில் இவருடைய பதிலுக்காக காத்திருந்தது போல், கையில் டவலுடன் வாயை பொத்தி கொண்டிருந்த ஜெனி அக்கா வீட்டுகாரர் "ஹஓஓஓ" என்று கதறி அழுதார்.
========================================================
நேற்று இரவு நடந்த அண்ணன் தம்பியின் உரையாடல்:
லேய்... கிறுக்கு பயலே என்னல பண்ணி வைச்சிருக்க.
சாந்தி வீட்டுக்கு போயிட்டு வந்தேன், காட்டுகத்து கத்தினா, ரெண்டு அடிதான் அடிச்சேன், இப்படி ஆகி போச்சி..
சீ...த்தூ...உனக்கு கூத்தியா வீட்டுக்கு போறதுதான் பொளப்பா, _மவனே திருந்த மாட்டியா? செத்துட்டாளா!!
ஆமா தம்பி!!!! செத்து போயிட்டா...
என்னாது போயிட்டாளா, நாளைக்கு அவா குடும்ப காரங்க வந்து கேட்டா என்னல சொல்லுறது..
நீதான் ஏதாவது பண்ணனும்..
இதை மறைச்சி தொலைக்கலனா உன்னோட சேர்ந்து நாங்களும் இல்லா, போலிஸ் ஸ்டேசன் கம்பி எண்ணனும்......
குறிப்பு: சிலதுரோகங்கள் என்ற அத்தியாயத்தில் ஜெனி அக்காவின் கதையை இன்றைய பகுதியுடன் முடித்து விட்டேன். இனி அடுத்த ஒரு கதையுடன் சில துரோகங்கள் தொடரும். மேலே சொல்லப்பட்டது உண்மை கதை இல்லை. நான் பார்த்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதியது. அதனால் யாரும் உண்மை என்று சிலாய்க்க வேண்டாம்.
.
.
.
Showing posts with label சில துரோகங்கள். Show all posts

Thursday, August 12, 2010
சில துரோகங்கள்_ஜெனி அக்கா-2
Posted by
நாடோடி
at
9:22 PM
26
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
சில துரோகங்கள்,
சிறுகதை
Wednesday, August 11, 2010
சில துரோகங்கள்_ஜெனி அக்கா-1
ஜெனி அக்கா ஊரில் இருந்து வந்துவிட்டால் எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. ஆட்டம் பாட்டம் என்று ஒரே ஆர்பாட்டமாக இருக்கும். வரிசையாக இருக்கும் எங்கள் பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கு சென்று அறிமுகப்படுத்திவிட்டு எங்களுடன் தான் எப்போதும் இருப்பார். முத்துப்பல் தெரிய இனிக்க இனிக்க பேசுவார்,கதைகள் பல சொல்வார், ஜெனி அக்கா வந்துவிட்டால் போதும் எங்கள் வீட்டில் வாண்டுகளின் கூட்டம் அதிகமாகிவிடும். எல்லாரிடமும் சகஜமாக பேசுவார். அனைவரையும் வசீகரிக்கும் முகம்.
ஜெனி அக்கா என்னுடைய பெரியப்பாவின் ஒரே பெண். பெரியப்பாவின் தொழில் ரிகண்டிசனிங் பேட்டரிகள் செய்து விற்பது. இப்போதைய மோல்டடு பேட்டரிகள் வருவதற்கு முன்பு இவைகள் அதிகம் பிரபலம். ஊள்ளுரில் என்னுடைய சித்தப்பா இந்த கடை வைத்திருந்ததால், பெரியப்பா கடலூர் சென்று புதிய கடை ஒன்று ஆரம்பித்தார். கடலூரில் மீன்பிடி தொழில் சிறந்து விளங்குவதால் இந்த பேட்டரிகளின் வியாபாரமும் சூடுபிடித்தது. படகில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கு இந்த பேட்டரிகளில் இயங்கும் லைட்டின் ஒளிதான் அணையாவிளக்கு. புதிதாக பேட்டரிகள் செய்து விற்பதும், வாடகைக்கு விடுவதும் என்று பெரியப்பாவிற்கு தொழில் அமோகமாய் இருந்தது.
கடலூரில் உள்ள பிரபலமான பெண்கள் கன்வெண்ட் ஸ்கூலில் தான் ஜெனி அக்கா படித்து கொண்டிருந்தார்கள். அரையாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறை மற்றும் முழுவாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறையில் தவறாமல் எங்கள் ஊருக்கு வந்துவிடுவார்கள்.
இந்த வருடம் முழுவாண்டுத் தேர்வு முடிந்து ஒருவாரம் ஆகிவிட்டது, ஜெனி அக்கா வரவில்லை. நான் அம்மாவிடம் சென்று என்னவென்று கேட்டேன். "ஜெனி அக்காவுக்கு இந்த வருடம் கல்யாணம் பண்ண போறாங்க!! மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சு, அடுத்த மாதம் கல்யாணம் நடக்குது, அதுக்குத்தான் பெரியப்பா, பெரியம்மா மற்றும் ஜெனி அக்கா எல்லாம் வருவாங்க" என்று அம்மா சொல்லிக்கொண்டே சமையல் வேலையில் இருந்தார்கள். அப்ப, இனிமேல் அக்கா எங்க கூட விளையாட வரமாட்டாங்களா? என்று கேட்ட என்னை தலையில் தட்டிவிட்டு சிரித்தார் அம்மா.
ஜெனி அக்காவின் கல்யாண நாளும் வந்தது. என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சந்தோசமாக ஒவ்வொரு வேலையில் இருந்தார்கள். பெரியப்பா வாங்கி கொடுத்த புது துணியை போட்டு கொண்டு எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பார்க்க சாப்பாடு பந்தலுக்கு ஓடினேன். சாப்பாடுப் பந்தியில் இலை போட்டவுடன் இலையை கழுவுவதற்கு தண்ணீர் கொடுப்பதும், பின்பு அவர்களுக்கு டம்ளர் வைத்து அதில் தண்ணீர் நிரப்புவது தான் எங்களுடைய வாண்டு கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட வேலை.
சாப்பாடுப் பந்தி எல்லாம் முடிந்து மணமக்களை வழியனுப்பும் போதுதான் என்னுடைய அம்மா என்னை தேடிவந்து கையைபிடித்து கொண்டு மணமேடைக்கு கூட்டி போனார். ஜெனி அக்காவிற்கு அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கூட இருந்த மாப்பிள்ளை கறுப்பு கோட்டு, சூட்டு போட்டு சிரித்து கொண்டே இருந்தார், பல் மட்டும் தான் வெள்ளையாக தெரிந்தது. ஜெனி அக்கா என்னை பார்த்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை உதிர்த்துவிட்டு கையை பிடித்து கொண்டார். என் அண்ணனும், அப்பாவும் மேடைக்கு வர, நாங்கள் எல்லோரும் மணமக்களை சுற்றி நிற்க போட்டோகிராபரின் கையில் இருந்த கேமராவில் இருந்து வந்த ஒளி என்னை கண்மூட வைத்தது.
கல்யாணம் முடிந்து ஜெனி அக்காவை விருந்துக்காக வந்தபோது பார்த்தது. அதன்பிறகு ஜெனி அக்காவை பார்த்ததே கிடையாது. வீட்டில் அப்பப்ப அம்மாவும், பெரியம்மாவும் பேசும் போது அவர்களுடைய வாயில் ஜெனி அக்காவை பற்றிய பேச்சு வரும்போது நானும் கேட்டு கொள்வேன். ஜெனி அக்காவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது வரை தெரியும். நான் ஒருமுறை கூட அவர்கள் வீட்டிற்கு போனது கிடையாது.
ஜெனி அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்த ஊர் தோவாளை. மலர்மாலை கட்டுவதற்கு தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஊர். ரோஜா, அருளி, வந்தி, செவ்வந்தி, கொழுந்து போன்ற மலர்களின் விவசாயத்திற்கும் பேர் பெற்றது. ஜெனி அக்காவின் வீட்டு காரரும் தனியாக பல மலர் தோட்டம் வைத்திருப்பதாக அம்மா சொல்வார்கள். அவைகளில் உள்ள மலர்களை எல்லாம் சென்னை போன்ற ஊர்களுக்கு அனுப்பும் தொழில் செய்வதாகவும் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்.
ஒருநாள் காலை, கல்லூரிக்கு போக நான் ரெடியாகி கொண்டிருக்கும் போது, பக்கத்தில் உள்ள சித்தப்பா வீட்டில் இருந்த போன் அடிக்கும் சத்தம் எனக்கு கேட்டது. அந்த ஒலியிலேயே எனக்கு தெரிந்தது அது எஸ்டிடி(STD) கால்தான் என்று. போனை பேசி முடித்த சித்தி வெளறிய முகத்துடன் எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தார்.
அவசரமாக வந்த சித்தி வழியில் நின்ற என்னிடம் "சுரேஷ்... கடைக்கு போய் இருக்கும் சித்தப்பாவை உடனே கையோடு கூட்டி வா" என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் சென்று "இந்த ஜெனி பொண்ணு தூக்கல தொங்கிடிச்சாம், கடலூரில் இருந்து பெரிய அத்தானும், அக்கா எல்லாம் கிளம்பி வந்திட்டு இருக்கிறாங்களாம். நம்மளை வண்டி புடிச்சு உடனே போய் பார்க்க சொன்னாங்க" என்று கதறினார்.
இவர்களின் கதறலை கேட்டு, வெளியில் தோட்டத்தில் இருந்த அப்பாவும் ஓடி வந்தார். விசயத்தை கேள்விப்பட்டு உடனடியாக ஒரு வேன் பிடிக்க அப்பா கிளம்பினார்கள், நான் என்னுடைய டூவிலரை எடுத்து கொண்டு சித்தாப்பாவை கூப்பிட சென்றேன்.
அடுத்த அரை மணி நேரத்தில் எங்கள் சொந்தபந்தங்கள் என்று ஒரு வேன் புல்லா நிரம்பிற்று. வண்டி தோவாளையை நோக்கி கிளம்பியது. வண்டியில் இருந்த அனைவரின் முகமும் இறுக்கமாக இருந்தது. அம்மா மற்றும் சித்தியின் கண்களில் நீர் திவலைகள் எட்டி பார்த்தது. "பதினெட்டு வயது முடியல, அதுக்குள்ள அவசரப்பட்டு அந்த மனுஷன் தலையில கட்டி வச்சிட்டான்." என்று மௌனமாக இருந்த வண்டியில் அப்பா பேசினார்.
"நேற்றைக்கும் சண்டை போட்டிருப்பா!!! அதுல தான் இது நடந்திருக்கும்" என்று சித்தப்பா வண்டியின் ஓரத்தில் உள்ள ஜன்னலை வெறித்து கொண்டு பேசினார்.
"கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிடுவாளானு நானும் நல்ல சொன்னேன், அவங்க தான் கேக்கலை" என்று என் அம்மாவும் புலம்பினார்.
வண்டி தோவாளை மெயின் ரோட்டில் இருந்து இறங்கி மேற்கு பக்கமாக செல்லும் ஒற்றை ரோட்டிற்குள் நுழைந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், சென்று கொண்டிருந்த வண்டியை ஒரு பெரிய புளிய மரத்தில் அருகில் இருந்த காலியிடத்தில் ஓரம் கட்ட சொல்லிவிட்டு, வண்டியில் இருந்தவர்களை இறங்க சொன்னார் அப்பா.
வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து, சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் முன் போடப்பட்ட பச்சை ஓலை கொட்டகையில் கூடியிருந்தவர்களை பார்க்கும் போதே அதுதான் ஜெனி அக்காவின் வீடு என்று ஊகித்து கொண்டேன். எங்களை பார்த்தவுடனே கூட்டத்தில் இருந்தவர்களின் அழுகை ஓலம் அதிகமானது. அந்த கூட்டத்தில் இருந்து "மாமாஆஆஆஆ"!!!!!!! என்று ஓலமிட்டு ஒருவர் ஓடி வருவதை பார்த்தேன். வந்தவர் என்னுடைய அப்பாவின் காலில் விழுந்தார். அப்போது தான் அடையாளம் கண்டு கொண்டேன், அவர் தான் ஜெனி அக்காவின் புருசன். நான் அவரை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, முன்பு பார்த்ததை விட என் கண்களுக்கு இளமையாக தெரிந்தார்.
காலில் விழுந்தவரை என்னுடைய அப்பாவும், சித்தப்பவும் சேர்ந்து தூக்கினார்கள். மாமா!!!!!!!! நான் காலையிலேயே தோட்டத்துக்கு மருந்து அடிக்க போயிருந்தேன், மவனுங்க இரண்டு பேரும் என்னுடைய அண்ணன் வீட்டில் விளையாடிட்டு இருந்தாங்க. அந்த நேரம் பார்த்து கிறுக்கி மவா தூக்குல தொங்கிட்டா மா..மா ...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று கதறினார்.
--தொடரும்
=============================================
குறிப்பு: சில துரோகங்கள் - என்ற தலைப்பில் நான் பார்த்த, கேட்ட சில சம்பவங்களை எனது எழுத்தில் கொண்டு வரலாம் என்று நினைத்து தான் இந்த கதையை ஆரம்பிக்கிறேன். நீங்கள் தான் சொல்ல வேண்டும் எப்படியென்று.

5:23 PM
24
comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels:
சில துரோகங்கள்,
சிறுகதை
Subscribe to:
Posts (Atom)