முதல் இடுகயை படிக்காதவர்கள் படித்து விட்டு இதை தொடரவும்.
இந்த சாலையை வெறும் வாணிபத்திற்க்கும், போக்குவரத்திற்கு மட்டும் பயன் படுத்தாமல் சுற்றுலாதலமாகவும் இதை வடிவமைத்திருப்பது இதன் மற்றும் ஒரு சிறப்பம்சம். நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன் இதன் மொத்த நீளம் 28 கிலோ மீட்டர் என்று. நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து இந்த பாலத்தை சுற்றி வர காரில் அந்த சாலையில் பயணித்தோம். கார் பயணத்தில் இரண்டு பக்கங்களிலும் கடலின் அழகை காரில் இருத்தவாறு ரசிக்க முடிந்தது. சிறிது நேரத்தில் பயணம் முடிவுக்கு வந்தது கார் ஒரு நகரத்திற்குள் புகுந்தது. கடலும் கண்ணை விட்டு மறைந்தது. இரண்டு பக்கமும் மரங்களும், கட்டிடங்களும் என் கண்களுக்கு தென்பட்டன. ஒரு பூங்கா போல் தோன்றியது. காரை டிரைவர் காலியாக இருந்த இடத்தில் நிறுத்தினான். வண்டியின் முன்னால் இருந்த நண்பர் தான் எங்களை அழைத்து வந்தார். அவர் காரை விட்டு இறங்கவே நாங்களும் காரை விட்டு இறங்கினோம். எங்களுடன் வந்த நண்பரில் ஒருவர் அழைத்து வந்தவரிடம் " கடலில் உள்ள பாலத்தை சுற்றி கட்டுகிறேன் என்று கூறி விட்டு ஏதோ பூங்காவிற்கு அழைத்து வந்துருக்கிறீர் " என்று கேட்டார். நானும் அதை வழிமொழியலாம் என்று அழைத்து வந்தவரின் முகத்தை பார்த்தேன். அவர் கண்ணில் தெரிந்த ஏளன பார்வை என் வாயை மூடியது. அழைத்து வந்த நண்பர் சிரித்துக்கொண்டே " அதற்கு மேல் தான் நாம் நிற்கிறோம் " என்றார். அனைவரும் ஆச்சரியத்துடன் சுற்றும், முற்றும் பார்த்தோம்.
உண்மை தான் நாங்கள் நிற்பது கடலின் மேல் தான் என்பது அவர் சுட்டிக் காட்டிய அந்த வானுயர்ந்த கோபுரத்தை பார்த்த போது எங்களுக்கு புலப்பட்டது. ஏனென்றால் இங்கு வருவதற்கு முன் அவர் தனது மொபைலில் ஏற்கனவே அவர் வந்த போது எடுத்த போட்டோவை காட்டியிருந்தார். நாங்கள் நிற்க்கும் இடத்தை சுற்றிலும் மரங்கள் அழகாக வளர்க்கப் பட்டு இருந்தது. வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களும், கட்டிடங்களும் இருந்தன. சிறிது நடந்து சென்றோம் அங்கு கடல் கண்ணுக்கு புலப் பட்டது. அழகாக வேலி அமைக்கப் பட்டு இருந்தது. ஆங்காங்கே மண் மேடைகள் காணப்பட்டன. அதில் இருந்த வாறு சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். ஆம் தூண்டில் போட்டு கடலில் மீன் பிடிப்பது இவர்களின் பொழுதுப்போக்கு. அதில் நாமும் கலந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த மண்மேடையில் புற்கள் வளர்க்கப்பட்டு அழகாக இருந்தன. அதில் இருந்தவாறு கடலின் அழகையும், அதன் மேல் உள்ள இந்த சாலையின் ஒரு பகுதியையும் ரசிக்க முடியும்.
அங்கிருந்து அப்படியே நகர்ந்து அந்த கோபுரம் இருந்த திசையை நோக்கி நடந்தோம். கோபுரதிற்கு உள்ளே செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இந்த கோபுரம் மிக வித்தியாகமாக கட்டப்பட்டு இருந்தது. மேலே செல்வதற்கு லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது நமது பெரியோர் வாக்கு. அது இவர்கள் விசயத்தில் நூறு சதவீதம் உண்மை. இங்கு இரண்டு மசூதி(Mosque) இருக்கின்றது. மேலும் இந்த கோபுரத்தில் ஒரு உணவகமும் உள்ளது. குழந்தைகள் விளையாட விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய ஒரு அறையும் உள்ளது. மேல் தளத்தில் நின்று இந்த கடல் நகரின் அழகை சுற்றி பார்க்க கண்ணாடி சுவர் அமைக்கப்ப்ட்டுள்ளது.
இதன் மேல் நின்று பார்க்கும் போது கடல் மேல் அமைந்துள்ள இந்த அழகிய சாலையும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் மற்றும் சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்களின் அழகும் அருமை. இரவு நேரமாக இருந்தால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த சாலையின் அழகு இருமடங்காக ஜொலிக்கிறது. லிப்டில் மேலிருந்து கீழாக வரும் போதும்
அதில் உள்ள கண்ணாடி வழியாக வெளி காட்சியை பார்க்க முடிகிறது.
நான் மேலே விவரித்து இருப்பது சவூதி அரேபிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை மட்டும் தான். இதை அடுத்து பெக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் மேலே உள்ளது போல் ஒரு குட்டி நகரம் உள்ளது. கடலின் மேல் அமைக்கப் பட்ட இந்த இரு இடங்களின் பரப்பளவு 660,000 சதுர அடி. அந்த இரண்டு கோபுரங்களின் உயரம் 65 மீட்டர்.
புதன் மற்றும் வியாழக் கிழமைகாளில் இந்த சாலை மிக கூட்டமாக இருக்கும். அந்த நாட்களில் இந்த சாலையில் உள்ள வாகன நெரிசல் நமது ஊரில் உள்ள மவுண்ட் ரோடு நெரிசலை தாண்டி விடும். காரணம் நமது ஊரில் வாரத்தின் கடைசி நாட்காளாகிய சனி மற்றும் ஞாயிறு போல் இங்கு வியாழன் மற்றும் வெள்ளி. சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை போதை,.....மற்றும் எல்லா விசயங்களுக்கும் தடா என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் பெக்ரைனை பொறுத்தவரை இதற்கு நேர் எதிர்மறை. மதுவில் இருந்து மா....வரை அனைத்தும் சுலபமாக கிடைக்கும். எனவே குடிமக்கள் அதிகம் வார இறுதி நாட்களில் இந்த சாலையை பயன்படுத்துவதால் மிக நெரிசலாக இருக்கும். குடிமக்கள் என்று நான் கூறியது பயணிகளை பற்றி தான் நீங்கள் தப்பாக புரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல. 2008 ஆம் ஆண்டின் காணக்கெடுப்பின் படி சாரசரியாக ஒரு நாள் இந்த சாலையை உபயோகப்படுத்தியவர்களின் எண்ணிக்கை 48,612. வாகனங்களின் எண்ணிக்கை 23,690.
எலே மக்க இதை படிச்சிட்டு சவூதி போயிட்டு நாக்கில் எச்சில் உறினால் நாமளும் அப்படியே பெக்ரைன் போலானு நினைக்சுட்டு வந்திடாதுங்க. அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஓய்..என்னன விசா(Visa) அடிக்கும் போதே அதில் மல்டிபிள் எண்டிரி(Multiple Entry Visa) என்று அடிக்க வேண்டும். இல்லாமல் சிங்கிள் எண்டிரி(Single Entry Visa) என்று சவூதி வந்துட்டு பெக்ரைன் போனால் திரும்ப சவூதி வரமுடியாது .நல்ல கப்சாவும் குப்பூசும் ஜெயில்ல கிடைக்கும் ஓய்..
Wednesday, January 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
படிக்கும் போது, அப்படியே நேரில் பார்ப்பது போல இருக்கும் படி நன்கு விவரித்து எழுதி உள்ளீர்கள். படங்களும் தொகுப்பும் அருமை.
//குடிமக்கள் என்று நான் கூறியது பயணிகளை பற்றி தான் நீங்கள் தப்பாக புரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல//
ஹீஹீஹீ... இதுபுரியாம இருக்குமா?? என்னாத்தல...
அருமை... அப்படியே பக்ரைன் போய்ட்டு வந்ததைப்பற்றி போட்டீங்கன்னா கொஞசம் கிளுகிளுப்பா இருக்கும்...
Hi Paul,
Nice to see your blog with all amazing photos, then the incident which was happened in our place. keep posting.....
அழகான விளகத்துடன்கூடிய புகைப்படங்களும் அருமை..
நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்
என்தளங்களையும்
http://fmalikka.blogspot.com/
நல்ல தொகுப்பு நண்பரே வாழ்துக்கள், படங்கள் மிக அருமை, மல்டிபிள் விசா’ :) இது போன்ற நுனுக்கமான தகவல்கள் எல்லா பதிவிலும் போடுங்கள்.. நன்றி.:)
தமிழ் மணத்தில் இணைக்கவில்லையா.??
@Chitra
முதல் ஆளா வந்து கருத்து சொன்னதற்கு ரெம்ப நன்றி.
வாங்க தல...பக்ரைன் தானே வாங்க ஊருக்குப் போகும் போது சொல்லுங்கள் அப்படியே பக்ரைன் ஏர்போட்ல இறங்கிடுவோம்...
@MICHAEL
வாடா ஊருகாரா......துரை இங்கீலிசு தான்..
@அன்புடன் மலிக்கா
அழைக்காமலே நம்ம எல்லாம் வருவோம். அழைச்சுட்டீங்க பாலோவரா ஆயிட்டேன்...
@பலா பட்டறை
உண்மை தான் நண்பரே.. மல்டிபிள் எண்டிரி விசயங்கள் சவூதி வருவதற்கு முன்னால் எனக்கும் தெரியாது. தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன் நண்பரே..
அரபு நாட்டு நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. படங்களும். சொன்ன விதமும் நன்று.
@தமிழ் உதயம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
hi naadodi,
i have read ur journey experience.really wow.no one can't give lik tis expression.i wish to u,achv ur goal.al te best.jesus wit u bye.
@Christal
வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.
//குடிமக்கள் என்று நான் கூறியது பயணிகளை பற்றி தான் நீங்கள் தப்பாக புரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல//
அந்த குடிமக்களில் நீங்களும் இருந்ததாக ஏஜென்சி செய்திகள் சொல்கின்றன!!!
:)))
பஹ்ரைன் வந்தா ஒரு கால் பண்ணுங்க பாஸ்!.....சந்திப்போம்!
என் நம்பர் 00 973 39470789.
@gulf-tamilan
வாங்க...நான் நினைக்கிற குடிமக்களில் ஒருவனாய் இருக்க வாய்ப்பு உள்ளது. நீங்க நினைப்பதுப் போல் இருக்க வாய்ப்பு இல்லை.
@நேசன்...,
கண்டிப்பா கால் பண்ணுறேன். வந்ததற்க்கும் மிக்க நன்றி
Post a Comment