Sunday, January 17, 2010

என்னுடைய மாற்றம் சமுதாயத்தை மாற்றும்..

நான் வலைப்பதிவுகளைப் பற்றி அறிந்துக் கொண்டது இரண்டு வருடங்களுக்கு முன்னதாகத் தான். இதை எனக்கு அறிமுகப் படுத்தியவர் எனது மேனேஜர் விஜய் சங்கரன். அவர் சாருவின் தீவிர ரசிகன். சாருவின் எல்லாப் புத்தகங்களையும் வெளிவந்தவுடன் வாங்கிப் படித்து விடுவார். மேனேஜர் என்று சொன்னவுடன் ஏதோ ஐம்பது வயது இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம். முப்பத்தைந்து வயதுக்குள் தான். அவரிடம் இருந்து தான் நானும் பல புத்தகங்களை இலவசமாக வாங்கிப் படித்துள்ளேன். அவரிடம் உள்ள சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அது தான் இந்த பதிவை என்னை எழுதத் துண்டியது.

காலந்தவறாமல் காலையில் அலுவலகம் வருவதும் சரி. திட்டமிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுப்பதும் சரி. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பார். ஹைதிராபாத் அலுவலுகத்தில் நாங்கள் வேலை செய்த போது ஞாயிறு என்றால் அனைவரும் கிரிக்கெட் விளையாட செல்வோம். காலையில் ஆறு மணிக்கே சென்றால் தான் மைதானத்தில் விளையாட இடம் கிடைக்கும். அங்கும் முதல் ஆளாக வந்து அசத்துவார். எங்க வீட்ல இன்னைக்கு பேப்பர் போடுறவன் தாமதமாக வந்தான். அதனால அலுவலகத்துக்கு நான் தாமதமாக வந்தேன் என்று நொண்டி சாக்கு சொல்வதை தான் நம்மில் பல பேர் கொண்டுள்ளோம். மாற்றம் வேண்டும் என்று சொல்லும் சொல் வீரர்களாக மட்டுமல்லாமல் நமது செயல்களிலும் சிறிது மற்றத்தை கொண்டு வரலாமே...

நண்பர்களின் நட்பின் மேல் ஆபார நம்பிக்கை அவருக்கு உண்டு. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நட்பு பெரிதாக கை கொடுக்கவில்லை மாறாக ஏமாற்றத்தையே தந்து இருந்தது. ஆனால் இவரைப் பார்த்த பிறகு நட்பு பற்றிய எனது பார்வை மாறியது. அவர் அடிக்கடிச் சொல்லும் வார்த்தை நட்பின் மீது எதிர்பார்த்தல் கூடாது என்பது. எங்களது நிறுவனம் ஆரம்பித்த போது முதலில் வேலைக்கு சேர்ந்த மூன்று பேர்களில் இவரும் ஒருவர். இப்போது எங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை எண்பதுக்கு மேல். அதில் இருபதுக்கு மேல் இவருடன் படித்தவர்கள் மற்றும் நண்பர்கள். அனைவரும் இவருடைய சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தவர்கள். நகரங்களில் வேலை தேடுவதை விட வேலை இல்லாமல் தங்குவது என்பது ரெம்பக் கொடுமை. அதன் வலி சொன்னால் தெரியாது அனுபவித்தால் தான் புரியும். கிராமத்தில் உள்ள சில படித்த இளைஞர்களுக்கு சொந்தம், பந்தம் நகரங்களில் இருந்தால் சுலபமாக வந்து தங்கி வேலை வாங்கிவிடுகிறார்கள். அப்படி வேலை வாங்கி சம்பாதிக்கும்ப் போது தன்னோடு படித்த பழைய நண்பர்களை மறந்து விடாமல் நினைவு கூரலாமே.....

அந்நிய குளிர்பானங்களை குடிக்கக் கூடாது என்ற கொள்கை கொண்டவர். எங்கள் அலுவலகத்தில் நடக்கும் விருந்துகளில் இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அவர் குடிப்பது இல்லை. நான் ஒருவன் அந்நியக் குளிர்பானம் குடிப்பதை நிறுத்தி விட்டால் அதைக் குடிப்பவர்கள் அனைவரும் நிறுத்தி விடுவார்களா என்று வாதம் செய்வதை விட்டு விட்டு என்னுடைய மாற்றம் ஒரு நாள் சமுதாயத்தை மாற்றும் என்று எண்ணலாமே...

இவர் ஆறு நாடுகளுக்கு மேல் சென்று வந்து விட்டார். அவருடைய வருங்கால லட்சியக் கனவு இன்னும் சில வருடங்களில் சொந்த ஊருக்கு சென்று பண்ணை விவசாயம் செய்வது என்பதே. வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு போய் கடற்கரை ஓரமாய் நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு வீட்டை வாங்கி கால் மேல் கால் போட்டு இயற்கையை ரசிக்கலாம் என்று எண்ணாமல் சொந்த கிராமத்துக்குச் சென்று தொலைந்துப் போன விவசாயத்துக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என்று எண்ணலாமே...


குறிப்பு: விரைவில் இவரும் ஒரு வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். அதற்கும் எனது வாழ்த்துக்கள்.

11 comments:

Chitra said...

Best wishes! Good write-up!

நாடோடி said...

@Chitra..

வழ்த்துக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள் .. ஆரம்பிக்க இருப்பவருக்கும் வாழ்த்துக்கள்..

அண்ணாமலையான் said...

நல்லாருங்க நன்பர்களே

நாடோடி said...

@முத்துலெட்சுமி..
வாழ்த்துக்கு ரெம்ப நன்றி

நாடோடி said...

@அண்ணாமலையான்...
வாங்க நண்பரே!.

Prathap Kumar S. said...

என்னாச்சு ஸ்டீபன், பழையை பிளாக் என்னாச்சு...

நல்ல பகிர்வு...வலைப்பூ ஆரம்பிக்கப்போகும் உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

நாடோடி said...

பிரதாப் கொஞ்சம் உங்க மொபைல் நெம்பர் கொடுங்க......வாழ்த்துக்கு நன்றி

நாடோடி said...
This comment has been removed by the author.
Prathap Kumar S. said...

சாரி ஸ்டீபன், கமண்ட் பாலோவர் இன்னைக்குத்தான் பார்த்தேன்,

என்னோட நம்பர் 97 0559840571
pratapk2005@gmail.com

Keep in touch

cheena (சீனா) said...

இருவருக்கும் நல்வாழ்த்துகள் - நல்ல பழக்கங்கள் - கடைப்பிடிக்கலாமே

Related Posts with Thumbnails