Saturday, January 30, 2010

நம்ம கோபாலும்....கேரள வேலையும்..

நம்ம ஊரை விட்டு வந்து நாடோடியாய் சுற்ற ஆரம்பித்து வருடங்கள் பல ஆகின்றன. இதுனால ஊர்ல நடக்கிற தில்லாலங்கடி செய்தி எல்லாம் தெரிந்சுக்காம இருக்கலாமா?. முடியவே முடியாது. அதுக்கு தான் இருக்கவே இருக்கான் நம்ம சுரேஷ். விடுமுறைகளில் ஊருக்கு செல்லும் போது மறக்காமல் என்னை வந்து பார்த்து விடுவான். என்ன வேலை செய்கின்றாய் என்று கேட்டால் பல பிஸினஸ் செய்கிறேன் என்று சொல்வான். ஊரில் ஒரு வேலையும் ஒழுங்கா செய்து நான் பார்த்தது கிடையாது. என்னுடைய பொழுதுப்போக்கு ஊரில் நடக்கும் விசயங்களை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வதுதான். அப்படி தான் ஒரு நாள் நம்ம் ராஸ்கோல் விசயத்தையும் சொன்னான்.



ஊரில் வெட்டி ஆபிசர்களாய் சுற்றிக் கொண்டு இருந்த சுரேஷின் நண்பர்கள் கூட்டத்தில் நம்ம ராஸ்கோல் ரெம்ப முக்கியமானவன். அவனுடைய முழுப் பெயர் ராஜகோபால். அது நண்பர்களுடைய வாய் வழக்கில் ராஸ்கோலாக மாறிப்போனது. ஆள் பார்பதற்க்கு கலரில் யமன் வாகனத்தைப் போலவும், உடம்பு ஒங்கி வளர்ந்த மூங்கிலைப் போலவும் கன்னம் இரண்டும் டொக்கு விழுந்து பார்பதற்கு வயல் வெளியில் கட்டப் பட்ட சொக்கப் பாணை போல் காட்சி தருவான். ஊரில் எந்த கெட்ட விசயங்கள் நடந்தாலும் அதில் இந்த கூட்டத்தின் பங்கு கண்டிப்பாக இருக்கும். அதனால் ஊரில் உள்ளவர்களிடம் தறுதலைகள், திருந்தாத ஜென்மங்கள், ஊதாரிக் கூட்ட்ம் என்று பல பட்ட பெயர்களை சுமந்து வந்தார்கள்.

இப்படி போயிட்டு இருந்த நாட்களில் ஒரு நாள் அந்த கூட்டத்தில் இருந்து நம்ம ராஸ்கோலு தீடிரென காணமல் போயிட்டானாம். பிறகு மூன்று மாதம் கழித்து ஊரில் உள்ள கோவில் திருவிழா ஒன்றிற்கு வந்து சேர்ந்து இருக்கிறான். சுரேஷின் மகாசபையிலும் வந்து கலந்து இருக்கிறான். அப்போது அவனது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் மலையாளம் கலந்து இருந்ததாம். தமிழே ஒழுங்காக பேசத் தெரியாத நம்ம ராஸ்கோலு இப்ப மலையாள பாட்டு எல்லாம் பாடி இருக்கிறான். வளர சுகமானோ, பின்னே நான் கானன் என்ற மலையாள வார்த்தைகள் அவன் நாவில் விளையாடி இருக்கின்றன. இதனால் அனைவரும் ஆச்சரியத்துடன் என்ன என்று விசாரித்து இருக்கிறார்கள். அதற்க்கு அவன் நான் இப்போது கேரளாவில் வேலைக்கு சென்று வந்தேன் என்று பதில்மொழி கூறி இருக்கிறான். ஊரில் எந்த வேலைக்கு சென்றாலும் இரண்டு நாட்கள் தங்காத நம்ம ராஸ்கோலு இன்று " பட்சே ஞான் இல்லை என்றால் அவிடே ஒரு சோலியும் நடக்கா " என்று அவர்களிடம் புராணம் பாடியிருக்கிறான். இரண்டு நாட்கள் தான் ராஸ்கோலை ஊரில் பார்க்க முடிந்தாதாம். மறுபடியும் காணாமல் போய் இருந்தானாம்.

நம்ம ராஸ்கோலின் அம்மாவும் அப்பாவும் பையன் இப்ப எல்லாம் வேலைக்கு முழுக்கு போடுவதே இல்லை என்றும் ஒழுங்காக வேலைக்கு செல்கிறான் என்று ஊரில் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் சுரேஷ் கூட்டத்தின் அம்மா அப்பாவிடம் தன் பிள்ளையைப் பற்றி புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். இதை கேட்கும் அவர்களுக்கு காதில் புகை வந்து அதை அப்படியே திருப்பி இவர்களுக்கு காதில் ரத்தம் வழிய அர்ச்சனை செய்வார்களாம்.




தீடிரென ஒரு நாள் நம்ம ராஸ்கோலின் வீட்டின் முன்பு நின்று வேடிக்கை பார்க்க கூட்டம் ஒன்று கூடி இருந்ததாம். சுரேஷும் கூட்டத்தின் அருகில் சென்று ஒரு பொக்கை வாய் பெரியவரிடம் என்ன விசயம் என்று கேட்டு இருக்கிறான். அதற்கு அவர் கேரளாவிற்கு சென்ற நம்ம ராஜகோபாலு அங்க இருந்து லட்டு போல ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் லவட்டிட்டு வந்து விட்டான் என்று பொக்கை வாயைக் காட்டி சிரித்திருக்கிறார். இவனுக்கும் அந்த பெண்ணின் முகத்தை பர்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. சிறிது நகர்ந்து எட்டி பார்த்தானாம் அங்கு அழகிய சேர நாட்டு இளம்பெண் ஒருத்தி நின்று இருக்கிறாள். கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணின் அழகைப் பற்றியும், நம்ம ராஸ்கோலைப் பற்றியும் பலவாறு பேசியது இவன் காதில் விழுந்ததாம். " பின்னே நமக்கும் ஏதும் சோலி அவிடே கிட்டுமோ " என்று ராஸ்கோலிடம் சோதிக்கணும் என்ற முடிவுடன் அங்கிருந்து நகர்ந்து வந்து இருக்கிறான்.

8 comments:

gulf-tamilan said...

/அழகிய சேர நாட்டு இளம்பெண்ணை/
பிடித்த கதையை ராஸ்கோலிடம் கேட்டு எழுதுங்க! உங்களுக்கும் கேரளா போக ஆசையிருக்கா?

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு...

Anonymous said...

கதை சட்டென்று முடிந்துவிட்டது

நாடோடி said...

@gulf-tamilan

உங்க ஆர்வம் எனக்கு புரியிது..18+ போட்டு எழுதிடுவோம்..

நாடோடி said...

@அண்ணாமலையான்

கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து வரவும்..

Prathap Kumar S. said...

ஹஹஹஹ...... அவரு வெறும் ராஸ்கோல் இல்ல படவா ராஸ்கோல்... படம் பொருத்தமா போட்ருக்கீங்க...

அப்படி என்னவேலைத்தான் கேரளாவுல பார்த்தாராம்... ??!!!

சிநேகிதன் அக்பர் said...

" பின்னே நமக்கும் ஏதும் சோலி அவிடே கிட்டுமோ "

ஹஹஹஹ.....

//அப்படி என்னவேலைத்தான் கேரளாவுல பார்த்தாராம்... ??!!!//

நீங்க பார்த்த அதே வேலைதான் தல.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்

நமக்கு இல்லை என்று ஆகி போச்சு....விடுங்க தல..



@அக்பர்

எப்ப பார்த்தாலும் தலைக் கூட விளையாடுறதே வேலை போச்சி....ம்ம்ம்ம்....இங்க வந்துமா அக்பர்..

Related Posts with Thumbnails