Sunday, May 2, 2010

என்னுடைய‌ சென்னை ப‌ய‌ண‌ம்_1

ஒருமுறை ஊரில் இருந்து சென்னைக்கு ப‌ய‌ண‌ம். இது என‌க்கு புதிது அல்ல. ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஊரில் இருந்து சென்னைக்கு போகும் போது ஒரு அட்டைப் பெட்டியில் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌ பார்ச‌ல் இருக்கும். என‌து அக்காவுக்காக‌ எங்க‌ள் அம்மா க‌ட்டிய‌ பார்ச‌லாக‌ இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை எடுத்து செல்லும் போதெல்லாம் என‌க்கும் என‌து அம்மாவுக்கும் பிர‌ச்ச‌னை ந‌ட‌க்கும். கார‌ண‌ம் என‌க்கு ப‌ய‌ண‌த்தின் போது இது போல் பார்ச‌ல் தூக்கி சும‌ப்ப‌து சுத்த‌மாக‌ பிடிக்காது.



ஆனா அம்மா அப்ப‌டி எல்லாம் சும்மா விட்டுட‌ மாட்டாங்க‌. நீயா தூக்கி சும‌க்க‌ போற‌, ப‌ஸ்சு தானே சும‌க்க‌ போகிற‌து என்று சொல்லி எப்ப‌டியாவ‌து த‌ள்ளிவிட்டிடுவாங்க‌. நாக‌ர்கோவில் வ‌ரை பார்ச‌லை சும‌ந்து வ‌ந்து அப்பாதான் ப‌ஸ் ஏற்றிவிடுவார். அதேப் போல் சென்னை ப‌ல்ல‌வ‌ர‌ம் வ‌ந்த‌வுட‌ன் என்னுடைய‌ அத்தான்(மாமா) கார் கொண்டுவ‌ந்து ஏற்றி செல்வார். ஆக‌ நான் ஒன்றும் பார்ச‌லை சும‌ப்ப‌து இல்லை. இருந்தாலும் அம்மாவிட‌ம் நொண்ணை பேச்சுக்கு குறைவிருக்காது. அன்றைக்கும் அப்ப‌டித் தான் அப்பா என் கூட‌ நாக‌ர்கோவில் வ‌ரை வ‌ந்து, அடுத்து சென்னைக்கு கிள‌ம்பும் வ‌ண்டியில்(மாலை நான்கு ம‌ணி) பார்ச‌லை வைத்துவிட்டு என்னுட‌ன் பேசிக் கொண்டு இருந்தார். அப்பா பார்ச‌லை வைத்த‌ இட‌ம் டிரைவ‌ர் இருக்கும் சீட்டுக்கு பின்னால் கொஞ்ச‌ம் இட‌ம் காலியாக‌ இருக்கும் அந்த‌ இட‌த்தில் வைத்திருந்தார். வ‌ண்டியை செக் ப‌ண்ண‌ வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் அந்த‌ அட்டை பெட்டியை காலால் மிதித்து "இது யாருடைய‌து எடுத்து அவ‌ங்க‌ சீட்டுக்கு அடியில் வையுங்க‌" என்று க‌த்தினார்.

இதை பார்த்து கொண்டிருந்த‌ என‌க்கு கோப‌ம் த‌லைக்கு மேல் ஏறிவிட்ட‌து. "யோவ் யாரை கேட்டு பார்ச‌லில் கால் வைத்தாய்" . அதுல‌ என்ன‌ இருக்குனு உன‌க்கு தெரியுமா?. அப்ப‌டினு க‌த்திவிட்டு. வ‌ண்டியில் ஏறினேன். அவ‌ர் சும்மா இருந்திருந்தா பிர‌ச்ச‌னையில்லை. இதுல‌ வேற‌ ஆளோட‌ பார்ச‌லை வைக்க‌ வேண்டும். "நீ இதை எடுத்து உன்னுடைய‌ சீட்டுக்கு அடியில் வை" என்றார். அதெல்லாம் வைக்க‌ முடியாது. "வேற‌ ஆளுடைய‌ பொருளை வைக்க‌ நீ வேற‌ இட‌ம் பாரு" என்னுடைய‌ பார்ச‌ல் இங்க‌ தான் இருக்கும் உன்னால் முடிந்த‌தை பாரு" என்று க‌த்திவிட்டு நான் வ‌ண்டியைவிட்டு இற‌ங்கி விட்டேன்.

இங்க‌ தான் ஆர‌ம்பித்த‌து என‌க்கு ஏழ‌ரை ச‌னி. வ‌ண்டியின் ப‌க்க‌த்தில் அப்பாவிட‌ம் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த‌ வ‌ழியே அப்பாவுக்கு தெரிந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ந்தார். அவ‌ர் தான் அந்த‌ டிப்போவில் உள்ள‌ செக்கிங் இன்ஸ்பெக்ட‌ர். அவ‌ர் என்னிட‌ம் வ‌ந்து என்ன‌ த‌ம்பி சென்னைக்கா? என்று கேட்டுவிட்டு அப்பாவிட‌ம் பேசி கொண்டிருந்தார். இதை அந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் பார்த்திருக்க‌ வேண்டும். அத‌னால் நான் வ‌ண்டியில் திரும்ப‌ ஏறும் போது எதுவும் சொல்ல‌வில்லை. வ‌ண்டி நாக‌ர்கோவிலை தாண்டி ந‌க‌ர‌ தொட‌ங்கிய‌து. என‌க்கு லைட்டாக‌ த‌லைவ‌லி ஆர‌ம்பித்த‌து. க‌ண்ட‌க்ட‌ர் வ‌ந்து டிவியை ஆன் பாண்ணினார். அது ஒழுங்கா பாடாவும் இல்லை. ப‌ட‌மும் தெரிய‌வில்லை. அவ‌ரும் ச‌ளைக்காம‌ல் அதோடு போராடி கொண்டிருந்தார். கொஞ்ச‌ம் நேர‌ம் ந‌ல்லா பாடும். அப்புற‌ம் முருங்கை ம‌ர‌ம் ஏறும்.

என‌க்கு த‌லைவ‌லி வேற‌ க‌டுப்பா இருந்த‌து. என‌க்கேத்த‌து போல‌ பின்னால் இருந்து ஒருவ‌ர் எழுந்து "யோவ் க‌ண்ட‌க்ட‌ரே அந்த‌ டிவியை ஆப் ப‌ண்ணி போடுய்யா" என்று குர‌ல் கொடுத்தார். நானும் இதுதான் ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று நினைத்து கொண்டு ஆமா நிறுத்துங்க‌ என்று க‌த்தினேன். யார் சொன்ன‌து கேட்ட‌தோ இல்லையோ நான் சொன்ன‌தை ம‌ட்டும் ந‌ல்லா க‌ண்ட‌க்ட‌ர் கேட்டிருப்பார். அப்ப‌டியே வேற்றுகிர‌க‌வாசியை பார்ப்ப‌து போல‌ என்னை பார்த்துவிட்டு டிவியை ஆப் ப‌ண்ணினார்.

வ‌ண்டி வ‌ள்ளியூரை தாண்டி போய்கொண்டிருந்த‌து. என‌க்கு த‌லைவ‌லி கொஞ்ச‌ம் ஓவ‌ரா இருந்த‌து. ம‌றுநாள் என‌க்கு ஆபிஸில் முக்கிய‌மான‌ வேலை ஒன்று இருந்த‌து. இப்ப‌டி த‌லைவ‌லியுட‌ன் தூங்க‌ம‌ல் போய் சேர்ந்தால் நாளை ஆபிஸில் ஒழுங்கா வேலை பார்க்க‌ முடியாது, என‌வே திருநெல்வேலி வ‌ந்த‌வுட‌ன் த‌லைவ‌லிக்கு மாத்திரை வாங்கி போட‌ வேண்டும் என்று நினைத்தி கொண்டிருந்தேன்.

வ‌ண்டி திருநெல்வேலி ப‌ஸ் ஸ்டாண்டில் நுழைந்த‌து. வ‌ண்டி நின்ற‌வுட‌ன் ஓடிபோய் ஒரு மெடிக்க‌ல் ஷாப்பில் "த‌லைவ‌லிக்கு மாத்திரை தாங்க‌? என்று கேட்டேன். அவ‌னும் ஒரு மாத்திரை த‌ந்தான். நான் அந்த‌ மாத்திரையின் பெய‌ரையும் பார்க்க‌வில்லை. ப‌க்க‌த்தில் இருந்த‌ டீ க‌டையில் இருந்து ஒரு பால் வாங்கி மாத்திரையை வாயில் போட்டு முழுங்கினேன். அப்ப‌டியே கொஞ்ச‌ம் நேர‌ம் வெளியில் நின்று கொண்டிருந்தேன். ரெம்ப‌ சோர்வாக‌ இருந்த‌து. அத‌னால் வ‌ண்டியில் ஏறினேன்.

வ‌ண்டியில் ஏறினால் ந‌ம்ம‌ க‌ண்ட‌க்ட‌ர் முன் சீட்டில் இருந்த‌ ஒரு வ‌ய‌தான‌ பாட்டியிட‌ம் ஏதோ வாக்குவாத‌ம் செய்து கொண்டிருந்தார். சில‌ ஆட்க‌ளை பார்த்தா வ‌லிய‌ சென்று‌ பேச‌ தோணும், சில‌ரை பார்த்த‌ வ‌லிய‌ சென்று ச‌ண்டைக்கு போக‌ தோணும். என‌க்கு என்ன‌வோ அன்னைக்கு அந்த‌ ப‌ஸ் க‌ண்ட‌க்ட‌ரிட‌ன் இர‌ண்டாவ‌து தான் தோணிய‌து.

நான் அந்த‌ பாட்டியிட‌ம் என்ன‌ பிர‌ச்ச‌னை என்று கேட்டேன். அவ‌ங்க‌ " நான் என் மவ‌ வூட்டுக்கு போறேன் பிள்ளே ", என்னோட‌ பேர‌ன் தான் வ‌ந்து வ‌ண்டியேத்தி வுட்டுட்டு போனான். அவ‌ன் தான் சொன்னான் இந்த‌ சீட்டுல‌ இருக்க‌ , இப்ப‌ இந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் வ‌ந்து என்னை பின்னால‌ இருக்குற‌ சீட்டுல‌ போக‌ சொல்லுறான், என்றார். நான் அவ‌ரிட‌ம் எந்த‌ ஊருக்கு பாட்டி போறிங்க‌ என்று கேட்டேன். அந்த‌ பாட்டி ம‌துரை என்றார்க‌ள்.

நான் உட‌னே க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் ஏங்க‌ அவ‌ங்க‌ தான் ஏற்க‌ன‌வே நாக‌ர்கோவிலில் இருந்து இந்த‌ சீட்டுல‌ தானே உக்கார்ந்து வ‌ந்திருக்காங்க‌. அப்புற‌ம் ஏன் அவ‌ங்க‌ளை துர‌த்துறீங்க‌ என்று கேட்டேன். "யோவ் திருநெல்வேலியில் ரிச‌ர்வேச‌ன் டிக்கெட் வ‌ர்றாங்க‌, அவ‌ங்க‌ முன் சீட்டுக்கு முன்ப‌திவு செய்திருக்காங்க‌. அவ‌ங்க‌ளுக்கு இட‌ம் வேணும்" என்று கோப‌மாக‌ சொன்னார். அவ‌ர் சொன்ன‌து போல் இர‌ண்டு இள‌ம்பெண்க‌ள் வ‌ண்டியில் ஏறினார்க‌ள்.

நான் வ‌ந்த‌ பெண்க‌ளிட‌ம், அந்த‌ பாட்டியின் நிலைமையை சொல்லி அவ‌ங்க‌ ம‌துரையில் இற‌ங்கி விடுவார்க‌ள், அது வ‌ரைக்கும் நீங்க‌ கொஞ்ச‌ம் பின்னாடி உக்காந்துக்குங்க‌ என்று சொன்னேன். அவ‌ர்க‌ளும் ஏதோ என்னுடைய‌ பாட்டிக்கு தான் நான் வ‌க்கால‌த்து வாங்குறேன் என்று பின்னால் போய் அம‌ர்ந்து கொண்ட‌ன‌ர். நானும் அப்பாடா!!! என்று இருக்கையில் அம‌ர்ந்தேன். என்னை மொறைத்து கொண்டே அந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் வ‌ண்டியில் இருந்து இற‌ங்கி ப‌க்க‌த்தில் உள்ள‌ டீ க‌டையில் சென்று டீ குடித்தார்.

நானும் ச‌ன்ன‌ல் ஓர‌ சீட் என்ப‌தால் அவ‌ரை பார்க்க‌ வேண்டிய‌ நிலைமை. அவ‌ர் டீயுட‌ன் முறுக்கு சாப்பிடும் போதே தெரிந்த‌து என்னைத் தான் நினைத்து கொண்டு சாப்பிடுகிறார் என்று. அவ்வ‌ள‌வு ஆத‌ங்க‌மும் கோப‌மும் அவ‌ர் க‌ண்க‌ளில் தெரிந்த‌து.

என‌க்கு இப்ப‌ மாத்திரை வேலையை காட்ட‌ ஆர‌ம்பிச்சிடுச்சி. த‌லைவ‌லி குறைந்து க‌ண் சொருக‌‌ ஆர‌ம்பித்த‌து. எப்போது தூங்கினேன் என்று என‌க்கே தெரிய‌வில்லை. ந‌ல்ல‌ தூக்க‌ம் ம‌றுநாள் காலையில் ஆறு ம‌ணிக்கு ப‌ஸ் பெருங்க‌ள‌த்தூர் நெருக்கும் போது தான் முழிப்பு வ‌ந்த‌து. முழித்த‌வுட‌ன் முத‌லில் பார்த்த‌து என‌து அட்டை பெட்டியில் உள்ள‌ பார்ச‌லைத்தான். அது அப்ப‌டியே ப‌த்திர‌மாக‌ இருந்த‌து. ஆனால் என்னுடைய‌ த‌லைக்கு மேல் இருந்த‌ சூட்கேசை பார்க்க‌ வேன்டும் என்ற‌ எண்ண‌ம் தோன்றாம‌ல், என்னை நானே ச‌ந்தோச‌ப்ப‌ட்டு கொண்டேன். அப்ப‌டியே க‌ண்ட‌க்ட‌ரின் முக‌த்தை பார்த்தேன். கொர் என்று தான் இருந்த‌து. திரும்ப‌வும் தூங்காம‌ல் அப்ப‌டியே சாலையை பார்க்க‌ தொட‌ங்கினேன்.



வ‌ண்டி தாம்ப‌ர‌த்தை தாண்டிய‌து. என‌க்கு அடுத்த‌ ப‌ஸ் ஸ்டாப் ப‌ல்ல‌வ‌ர‌ம் போலிஸ் ஸ்டேச‌ன் இற‌ங்க‌ வேண்டும், கையில் இருந்த‌ மொபைலை எடுத்து அத்தானுக்கு(மாமா) போனைப் போட்டேன். அவ‌ர்க‌ள் ப‌ல்ல‌வ‌ர‌த்தில் நிற்ப‌தாக‌ சொன்னார்க‌ள். தாம்ப‌ர‌த்தில் பெருங்கூட்ட‌ம் இற‌ங்கிய‌தால் வ‌ண்டி பாதிக்கு மேல் காலியாக‌த் தான் இருந்த‌து.

வ‌ண்டியில் சீட்டில் இருந்து எழுந்து த‌லைக்கு மேல் வைத்திருந்த‌ சூட்கேசை தேடினேன். நான் வைத்திருந்த‌ இட‌ம் காலியாக‌ இருந்த‌து. அத‌ற்குள் நான் இற‌ங்க‌ வேண்டிய‌ இட‌மும் வ‌ந்த‌து. ப‌க்க‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டேன், எவ‌ரும் பார்க்க‌வில்லை, பார்க்க‌வில்லை என்ற‌ ப‌தில் தான் வ‌ந்த‌து. நான் தேடுவ‌தை பார்த்த‌வுட‌ன் அந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் என்னிட‌ம் வ‌ந்தார், என்ன‌? என்று கேட்டார், நான் அவ‌ரிட‌ம் சொன்னேன் அவ‌ரும் என‌க்கு தெரியாது என்று கையை விரித்து விட்டார். அப்ப‌த்தான் அவ‌ருடைய‌ முக‌த்தில் ஒரு ஒளிவ‌ட்ட‌ம் தெரிந்த‌து. "டேய் சின்ன‌ ஆட்ட‌மாடா போட்டே நேற்று" வைச்சானுங்க‌ இல்ல‌ இப்ப‌ ஆப்பு" என்ப‌து போல் என்னுடைய‌ முக‌த்தை பார்த்தார்.

அத‌ற்கு மேல் அந்த‌ பேருந்தில் தேட‌ என‌க்கு பிடிக்க‌வில்லை. அந்த‌ அட்டை பார்ச‌லை ம‌ட்டும் எடுத்துக் கொண்டு வ‌ண்டியை விட்டு இற‌ங்கினேன்.
(தொட‌ரும்)
.

.

25 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அடடா!!! அதுக்குள்ளே தொடரும் போட்டுட்டீங்களே ஸ்டீபன்,
பெட்டி கிடைச்சதா?

Muruganandan M.K. said...

உண்மையா நடந்ததா? நல்லது செய்யப் போய் சூட்கேசை இழக்க நேர்ந்ததை நினைக்க கவலைதான்.

Anonymous said...

may be, the conductor himself threw your suitcase out of the window...who know? LOL :))

Ramesh said...

என்னங்க முழுசா சொல்லியிருக்க கூடாதா...சுவாரஸ்யமா படிச்சிட்டு வந்தா தொடரும் போட்டுட்டீங்களே.

சிநேகிதன் அக்பர் said...

ஆனாலும் அக்குறும்பு ஜாஸ்தி உங்களுக்கு. :)

என்னா ஆட்டம்.

இதுல தொடருமா. அடுத்தது யார் மாட்ட போறாங்களோ.

செ.சரவணக்குமார் said...

சுவாரஸ்யமான பதிவு ஸ்டீபன். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

vasu balaji said...

ஆஹா! இவரு தொலைச்ச தவிப்ப நம்மகிட்ட எறக்கி வச்சிட்டு போய்ட்டாரே:))

ஜெய்லானி said...

@@@வானம்பாடிகள்--//ஆஹா! இவரு தொலைச்ச தவிப்ப நம்மகிட்ட எறக்கி வச்சிட்டு போய்ட்டாரே:)) //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு பயணம்..

தாராபுரத்தான் said...

நல்லாத்தான் இருக்குது நாடோடியின் பார்வை..

Chitra said...

என்ன ஆச்சு? என்ன ஆச்சு? தலை வலி போச்சா? பெட்டி கிடைச்சுதா?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அச்சோ... சூட்கேஸ் கிடைத்ததா இல்லைங்க?
இப்ப பார்த்து இடைவேளை விட்டுடீங்களே..!!

(ஆபீஸ்-ல பியூன், பஸ்-ல கண்டக்டர் , ஹாஸ்பிட்டல்-ல நர்ஸ் கிட்டல்லாம் வம்பு வச்சுக்கவே கூடாது.. நேரம் பார்த்து பழி வாங்கிருவாங்க)

malar said...

வாலு போய் பெட்டி வந்தது டும் டும்....

தமிழ் உதயம் said...

அடுத்த பதிவை எதிர்பார்த்து

சத்ரியன் said...

// "டேய் சின்ன‌ ஆட்ட‌மாடா போட்டே நேற்று" வைச்சானுங்க‌ இல்ல‌ இப்ப‌ ஆப்பு" என்ப‌து போல் என்னுடைய‌ முக‌த்தை பார்த்தார்.//

ஸ்டீவன்,

இருக்காதா பின்னே..?

அப்புறம்? (சீக்கிரம் ஆரம்பிங்க சாமி)

ஸ்ரீராம். said...

அந்தப் பாட்டி மேல மட்டும் பழியைக் கொண்டு வந்து விடாதீங்க..பாவம்.

எல் கே said...

nalla edatula camma pottache ? ithu sariya

vanathy said...

Yesterday I posted a comment and could not find it. Please fin....d it 4 me, nadodi!

கமலேஷ் said...

நல்லா போன திரைக்கதைல தொடரும் போட்டுடீங்களே...

ஹுஸைனம்மா said...

/இருந்தாலும் அம்மாவிட‌ம் நொண்ணை பேச்சுக்கு குறைவிருக்காது//

இதுக்கெல்லாம் ஆப்பு (கல்யாணத்துக்கு) அப்புறமா வரும்!!

ஆக, அம்மாகிட்ட நொண்ணை, சும்மா இருந்த் கண்டக்டர்ட்ட வம்பு இழுத்தது, லேடீஸ்ட்ட ஹீரோ பில்ட் அப், எல்லாம் நடக்கும்போதே அடுத்தது வில்லங்கம்தான்னு தெரியும்!!

Romeoboy said...

முக்கியமான பொருள் ஏதும் இல்லையே ??

நாடோடி said...

@சைவகொத்துப்பரோட்டா said...
//அடடா!!! அதுக்குள்ளே தொடரும் போட்டுட்டீங்களே ஸ்டீபன்,
பெட்டி கிடைச்சதா?//

இன்னைக்கு முடிச்சுடிவோம்.....வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சை.கொ.ப

@Dr.எம்.கே.முருகானந்தன் said...
//உண்மையா நடந்ததா? நல்லது செய்யப் போய் சூட்கேசை இழக்க நேர்ந்ததை நினைக்க கவலைதான்.//

உண்மைதாங்க‌... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி டாக்ட‌ர்

@Anonymous said...
//may be, the conductor himself threw your suitcase out of the window...who know? LOL :))//

அய்ய‌யோ.... அப்ப‌டியும் ப‌ண்ணுவாங்க‌ளா? LOL:))...க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி அனானி..

@அக்பர் said...
//ஆனாலும் அக்குறும்பு ஜாஸ்தி உங்களுக்கு. :)

என்னா ஆட்டம்.

இதுல தொடருமா. அடுத்தது யார் மாட்ட போறாங்களோ.//

ஆமா த‌ல‌ கொஞ்ச‌ம் ஓவ‌ராதான் ஆடிட்டேன்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி அக்ப‌ர்.

@Ramesh said...
//என்னங்க முழுசா சொல்லியிருக்க கூடாதா...சுவாரஸ்யமா படிச்சிட்டு வந்தா தொடரும் போட்டுட்டீங்களே.//

ரெம்ப‌ பெரிய‌ ப‌திவா ஆயிடிச்சு ர‌மேஷ்..அத‌னால‌த்தான்.. வ‌ருகைக்கு ந‌ன்றி

@செ.சரவணக்குமார் said...
//சுவாரஸ்யமான பதிவு ஸ்டீபன். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.//

வாங்க‌ வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் சார்... சீக்க‌ர‌ம் போட்டுவிடுகிறேன்..

@வானம்பாடிகள் said...
//ஆஹா! இவரு தொலைச்ச தவிப்ப நம்மகிட்ட எறக்கி வச்சிட்டு போய்ட்டாரே:))//

வாங்க‌ பாலா சார்... ஒண்ணும் பெரிசா த‌விக்க வேண்டாம்... ஒரு பில்ட‌ப்பு தான்..

நாடோடி said...

@ஜெய்லானி said...
@@@வானம்பாடிகள்--//ஆஹா! இவரு தொலைச்ச தவிப்ப நம்மகிட்ட எறக்கி வச்சிட்டு போய்ட்டாரே:)) //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்///

ஓண்ணு கூடிட்டாங்க‌ப்பா!!! ஒண்ணு கூடிட்டாங்க‌.... வ‌ங்க‌ ஜெய்லானி.

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு பயணம்..//

ஆமா ஸ்டார்ஜ‌ன்.. ந‌ல்ல ப‌ய‌ண‌ம் தான் சூட்கேசை எடுத்த‌வ‌னுக்கு..

@தாராபுரத்தான் said...
//நல்லாத்தான் இருக்குது நாடோடியின் பார்வை..//

அப்ப‌டிய்யா ஐயா!!!!! ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்..

@Chitra said...
//என்ன ஆச்சு? என்ன ஆச்சு? தலை வலி போச்சா? பெட்டி கிடைச்சுதா?//

நீங்க‌ வேற‌ ந‌ம்ம‌ க‌லைஞ‌ர் ஆச்சி தான்.. எங்க‌ வீட்டுக்கு இன்னும் வ‌ண்ண‌ தொலைகாட்சி பெட்டி கிடைக்க‌லை...(ஹா..ஹா...ஹா) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி சித்ரா மேட‌ம்..

@Ananthi said...
//அச்சோ... சூட்கேஸ் கிடைத்ததா இல்லைங்க?
இப்ப பார்த்து இடைவேளை விட்டுடீங்களே..!!

(ஆபீஸ்-ல பியூன், பஸ்-ல கண்டக்டர் , ஹாஸ்பிட்டல்-ல நர்ஸ் கிட்டல்லாம் வம்பு வச்சுக்கவே கூடாது.. நேரம் பார்த்து பழி வாங்கிருவாங்க)//

வாங்க‌ ஆன‌ந்தி மேட‌ம்... இன்னைக்கு சுப‌ம் போட்டுவிடுவோம்..

@தமிழ் உதயம் said...
//அடுத்த பதிவை எதிர்பார்த்து//

வாங்க‌ த‌மிழ் சார்... சீக்கிர‌ம் போட்டுவிடுகிறேன்..

@malar said...
//வாலு போய் பெட்டி வந்தது டும் டும்....//

ஆஹா ப‌ழைய‌ பாட்டு இல்லையா? இது நான் கூட‌ பாடியிருக்கிறேன்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றிங்க‌..

@’மனவிழி’சத்ரியன் said...
// "டேய் சின்ன‌ ஆட்ட‌மாடா போட்டே நேற்று" வைச்சானுங்க‌ இல்ல‌ இப்ப‌ ஆப்பு" என்ப‌து போல் என்னுடைய‌ முக‌த்தை பார்த்தார்.//

ஸ்டீவன்,

இருக்காதா பின்னே..?

அப்புறம்? (சீக்கிரம் ஆரம்பிங்க சாமி)//

வாங்க‌ ச‌த்திரிய‌ன் சார்... இன்னைக்கு போட்டுவிடுவோம்..

@ஸ்ரீராம். said...
//அந்தப் பாட்டி மேல மட்டும் பழியைக் கொண்டு வந்து விடாதீங்க..பாவம்.//

அய்ய‌ய்யோ... அப்ப‌டி எல்லாம் க‌ற்ப‌னை ப‌ண்ணாதீங்க‌.... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி ஸ்ரீராம்

@LK said...
nalla edatula camma pottache ? ithu sariya

கொங்ச‌ம் கொஞ்ச‌ம் பொறுத்துக்குங்க‌ எல்.கே. ரெம்ப‌ பெரிசா இருந்த‌து அத‌னால் தான் இப்ப‌டி தொட‌ரும் போட்டேன்..

@vanathy said...
//Yesterday I posted a comment and could not find it. Please fin....d it 4 me, nadodi!//

அய்ய‌ய்யோ... இந்த‌ பிர‌ச்ச‌னை வேற‌யா? செக் ப‌ண்ணுறேன் மேட‌ம்... இர‌ண்டாவ‌து முறைவ‌ந்து க‌ருத்து சொன்ன‌துக்கு ரெம்ப‌ ந‌ன்றி வான‌தி மேட‌ம்..

நாடோடி said...

@கமலேஷ் said...
//நல்லா போன திரைக்கதைல தொடரும் போட்டுடீங்களே...//

திரைக்க‌தைக்கு இன்னைக்கு சுப‌ம் போட்டுவிடுவோம்... உட‌ம்பை பார்த்துக்குங்க‌ க‌ம‌லேஷ்..

@ஹுஸைனம்மா said...
/இருந்தாலும் அம்மாவிட‌ம் நொண்ணை பேச்சுக்கு குறைவிருக்காது//

இதுக்கெல்லாம் ஆப்பு (கல்யாணத்துக்கு) அப்புறமா வரும்!!

//ஆக, அம்மாகிட்ட நொண்ணை, சும்மா இருந்த் கண்டக்டர்ட்ட வம்பு இழுத்தது, லேடீஸ்ட்ட ஹீரோ பில்ட் அப், எல்லாம் நடக்கும்போதே அடுத்தது வில்லங்கம்தான்னு தெரியும்!!//

//அம்மாகிட்ட‌ நொண்ணை பேச்சு// அம்மாகிட்ட நான் ப‌ண்ணாம‌ வேற‌ யார் ப‌ண்ண‌ப் போறா?
//ஹீரோ பில்ட‌ப்பு, வ‌ம்பு ச‌ண்டை// இது ரெண்டுக்கும் என‌க்கும் ச‌ம்ப‌ந்த‌மே கிடையாது...

@~~Romeo~~ said...
//முக்கியமான பொருள் ஏதும் இல்லையே ??//
அய்ய‌ய்யோ அத‌ ஏன் கேக்கிறீங்க‌... வாழ்க்கையே அதில் தான் இருந்த‌து.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி ரோமியோ

செ. நாகராஜ் - C. Nagaraj said...

நல்லாயிருக்கு வாசிப்பதற்கு, நமக்கு பஸ் பற்றி யார் எழுதினாலும், பிடிக்கும், அதிலேயும் நாகர்கோயில் சென்னை வேறு ஆயிற்றா, எப்படி படிக்காமல் போவது

Related Posts with Thumbnails