Saturday, May 15, 2010

எனக்கு பிடித்த 10 படங்கள் - [தொடர்பதிவு]

நான் எழுதும் இர‌ண்டாவ‌து தொட‌ர்ப‌திவு. என்னை இந்த‌ தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ Dreamer(ஹ‌ரீஸ்) அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

நான் ப‌ட‌ம் பார்க்க‌ தியோட்ட‌ருக்கு சென்றால் அந்த‌ இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌மும் என்னுடைய‌ பிர‌ச்ச‌னைக‌ளை ம‌ற‌ந்து ப‌ட‌த்தில் ஒன்றினால் நான் அதை ந‌ல்ல‌ ப‌ட‌ம் என்று கொள்வேன். அது உல‌க‌ ப‌ட‌மாக‌ இருந்தாலும் அல்ல‌து உள்ளூர் ப‌ட‌மாக‌ இருந்தாலும் ச‌ரி. இதுதான் என்னுடைய‌ அள‌வுகோல். இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌மும் என்னை ம‌ற‌ந்து ர‌சிக்கும் எல்லா ப‌ட‌ங்க‌ளும் என்னை பொறுத்த‌வ‌ரை ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளே.

இத‌ற்கு மாறாக‌ ஏண்டா? ப‌ட‌ம் பார்க்க‌ வ‌ந்தாய் என்று நெளிய‌ வைக்கும் ப‌ட‌ங்க‌ள், அது உல‌க‌ ப‌ட‌மாக‌ இருந்தாலும் ச‌ரி. என்னை பொறுத்த‌வ‌ரை கும‌ட்டும் ப‌ட‌ங்க‌ளே..

ச‌மீப‌த்தில் வ‌ந்து அதிக‌ம் பேச‌ப்ப‌ட‌த‌ பார‌திராஜாவின் பொம்ம‌லாட்ட‌ம் ம‌ற்றும் பெண் டைர‌க்ட‌ர் ஜெ.எஸ் ந‌ந்தினி அவ‌ர்க‌ளின் திரு திரு..துறு துறு.. என்ற‌ இர‌ண்டு ப‌ட‌ங்க‌ளும் நான் ர‌சித்து பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள்..

கீழே நான் ஒவ்வொரு கால‌க‌ட்ட‌ங்க‌ளிலும் நான் ர‌சித்த‌ சில‌ ப‌ட‌ங்க‌ளை தொகுத்துள்ளேன்.

1)ஆண்பாவ‌ம்:

பாண்டிய‌ராஜ‌ன் ம‌ற்றும் பாண்டிய‌ன் ந‌டித்த‌ இந்த‌ ப‌ட‌ம் இப்போது பார்த்தாலும் சிரிப்பு தாங்க‌ முடியாது. இத‌ன் ஆர‌ம்ப‌ காட்சியே ப‌டு அம‌ர்க‌ள‌மாக‌ இருக்கும். பாண்டிய‌ ராஜ‌னும் பாண்டிய‌னும் த‌லைமுடியை பிடித்து கொண்டு ச‌ண்டை போடும் காட்சியை இவ‌ர்க‌ளுடைய‌ அப்பா வி.கே ராமாசாமி வெளியில் நின்று கொண்டு ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விள‌க்கும் காட்சியே... அனைவ‌ர் முக‌த்திலும் சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்துவிடும். இந்த‌ காமெடி கூட்ட‌ணி போத‌தென்று ஜ‌ன‌க‌ராஜ் வேறு இருப்பார். இவ‌ர் ஹேட்ட‌ல் ஆர‌ம்பிக்கும் முத‌ல் நாள் ந‌ட‌க்கும் காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான். பார்க்காத‌வ‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ பாருங்க‌ள். நூறு ச‌த‌வீத‌ம் சிரிப்புக்கு நான் உத்திர‌வாத‌ம்.

2)அஞ்ச‌லி:

இந்த‌ ப‌ட‌த்தை ப‌ற்றி நான் அதிக‌ம் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை. இதில் ஒரு குழ‌ந்தையை ப‌ற்றிய‌ அம்மாவின் த‌விப்பை ரேவ‌தி அழ‌காக‌ செய்து இருப்பார். அந்த‌ சின்ன‌ குழ‌ந்தையின்(ஷாம்லி) ந‌டிப்பும் அழ‌காக‌ இருக்கும். அந்த‌ குழ‌ந்தையின் அறிமுக‌ காட்சியையே அச‌த்தி இருப்பார் டைர‌க்ட‌ர். இந்த‌ ப‌ட‌த்தின் க‌டைசிகாட்சியில் அனைவ‌ரின் க‌ண்க‌ளும் க‌ண்டிப்பாக‌ ப‌னிக்கும். இசையும், பாட‌ல்க‌ளும் இந்த‌ ப‌ட‌த்திற்கு இன்னும் மெருகு ஊட்டியிருக்கும்.


3)குருதிப்புன‌ல்:

தீவிர‌வாத‌ம் ப‌ற்றி சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளில் இதுவும் ஒன்று. க‌ம‌ல் ம‌ற்றும் அர்ஜூன் இருவ‌ரின் க‌த‌ப்பாத்திர‌த்திற்க்கு ஏற்ற‌ ந‌டிப்பு அருமையாக‌ இருக்கும். போராளிக‌ளின் ம‌றுப‌க்க‌ம், க‌ட‌மைவீர‌ர்க‌ளின் வாழ்க்கை, அவ‌ர்க‌ளின் தியாக‌ம் என்று அனைத்தையும் விரிவ‌காக‌வும் ஆழ‌காக‌வும் சொல்லியிருக்கும் ப‌டம். இந்த‌ ப‌ட‌த்தில் குறிபிட்டு சொல்ல‌ வேண்டிய‌து நாச‌ர். போராளிக‌ளின் த‌லைவ‌ன் பாத்திர‌த்தை அழ‌காக‌ பூர்த்தி செய்திருப்பார். இந்த‌ ப‌ட‌த்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்ப‌திவு அருமையாக‌ இருக்கும்.



4)த‌ள‌ப‌தி:

நான் இந்த‌ ப‌ட‌த்தை பார்ப்ப‌த‌ற்கு முன் காட்டுகுயிலே.. பாட்டுதான் அறிமுக‌ம். கிர‌ம‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் இசைக்க‌ச்சேரி, ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி எதுவாக‌ இருந்தாலும் இந்த‌ பாட‌ல் இல்லாம‌ல் இருக்காது. அந்த‌ள‌வு இந்த‌ பாட‌ல் பிர‌ப‌ல‌ம். நானே ஒரு மேடையில் இந்த‌ பாட‌லுக்கு ஆடியிருக்கிறேன் என்றால் பாருங்க‌ள். ர‌ஜினி ம‌ற்றும் ம‌ம்முட்டியின் ந‌ட‌ப்பில் ப‌ட‌ம் அச‌த்தும். ந‌ட்பை ப‌ற்றி சொல்லியிருக்கும் இப்ப‌ட‌மும் ம‌ணிர‌த்தின‌த்தின் சூப்ப‌ர் ஹிட் வ‌ரிசையில் ஒன்று.



5)ஆன‌ந்த‌ம்:

டைர‌க்ட‌ர் லிங்குசாமியின் முத‌ல் ப‌ட‌ம். குடும்ப‌ உற‌வுக‌ளை மைய‌மாக‌ வைத்து இப்ப‌ட‌த்தை எடுத்திருப்பார். விக்கிர‌ம‌னின் ப‌ட‌ங்க‌ளின் சாய‌லில் இருந்தாலும் திரைக்க‌தை ந‌ன்றாக‌ அமைத்திருப்பார். இதில் உள்ள‌ பாட‌ல்க‌ள் அனைத்தும் அருமையாக‌ இருக்கும். இந்த‌ ப‌ட‌த்தை அடுத்து லிங்குசாமி இய‌க்கியிருப்ப‌து ர‌ன். இந்த‌ இர‌ண்டு ப‌ட‌த்திற்கும் துளியும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌ல் ப‌ட‌ங்க‌ளை இய‌க்கியிருப்ப‌து "அட‌" போட‌வைத்த‌து. குடும்ப‌த்துட‌ன் அனைவ‌ரும் எந்த‌வித‌ நெளிவுக‌ள் இல்லாம‌ல் இந்த‌ ப‌ட‌த்தை பார்க்க‌லாம்.



6)ஊமைவிழிக‌ள்:

ச‌ஸ்பென்ஸ், திரில்ல‌ர் ப‌ட‌ங்க‌ள் அதிக‌மாக‌ வ‌ராத‌ கால‌த்தில் கொஞ்ச‌ம் மிர‌ட்ட‌லாக‌ வ‌ந்திருக்கும் ப‌ட‌ம். அந்த‌ ப‌ட‌த்தில் வ‌ரும் குதிரைவ‌ண்டி ம‌ற்றும் க‌ண்க‌ளை உருட்டி கொண்டு வ‌ரும் அந்த‌ வ‌ய‌தான் மூதாட்டி என்று மிர‌ட்டியிருப்பார்க‌ள். இந்த‌ ப‌ட‌த்தில் உள்ள‌ பாட‌ல்க‌ள் அனைத்தும் அருமையாக‌ இருக்கும். "தோல்வி நிலை என‌ நினைத்தால்" என்ற‌ பாட‌லை இப்போது கேட்டாலும் ந‌ம்மை அறியாம‌ல் உட‌ம்பு சிலிர்ப‌தை காண‌லாம். இதில் விஜ‌ய‌காந்த‌ போலிஸ் ஆபிச‌ராக‌ கௌர‌வ‌ வேட‌த்தில் க‌ல‌க்கியிருப்பார்.

7)ரித‌ம்:

டைர‌க்ட‌ர் வ‌ச‌ந்தின் இந்த‌ பட‌ம் அர்ஜூன், மீனா, ர‌மேஸ் அர‌விந்த் ம‌ற்றும் ஜோதிகா ந‌டித்திருப்பார்க‌ள். ஒரு ரெயில் விப‌த்தில் ம‌னைவியை இழ‌ந்த‌ அர்ஜூன், அதே ரெயில் விப‌த்தில் க‌ண‌வ‌னை ப‌றி கொடுத்த‌ மீனா இவ‌ர்க‌ளின் வாழ்வில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அழ‌காக‌வும், இயால்பாக‌வும் காட்டியிருப்பார் டைர‌க்ட‌ர். இந்த‌ ப‌ட‌த்தில் உள்ள‌ ஐந்து பாட‌ல்க‌ளும் ப‌ஞ்ச‌பூத‌ங்க‌ளை( நீர், நில‌ம், காற்று, நெருப்பு, ஆகாய‌ம்) அடிப்ப‌டையாக‌ வைத்து எழுத‌ப்ப‌ட்டிருக்கும். ப‌ட‌ம் கொஞ்ச‌ம் மெதுவாக‌ ந‌க‌ரும்.

8)தில்லானா மோக‌னாம்பாள்:

இர‌ண்டு க‌லைஞ‌ர்க‌ளுக்கிடையில் ந‌ட‌க்கும் உண‌ர்வு போர‌ட்ட‌த்தை சொல்லும் ப‌ட‌ம். இர‌ண்டு வெவ்வேறு துறைக‌ளில் முத‌ல் இட‌த்தில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் காத‌லித்தால் அவ‌ர்க‌ளுக்கிடையில் ஏற்ப‌டும் ஈகோவால் ஏற்ப‌டும் பிர‌ச்ச‌னையை மைய‌மாக‌ வைத்து எடுத்த‌ப்ப‌ட‌ம். பிற்கால‌த்தில் இத‌ன் த‌ழுவ‌லில் வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் ஏராள‌ம். சிவாஜி பெரிய‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ஏதும் இல்லாம‌ல் க‌ண்க‌ளால் பேசி ந‌டித்த‌ப்ப‌டம். பாட‌ல்க‌ளும் அருமையாக‌ இருக்கும்.





9)அஞ்சாதே:

இந்த‌ ப‌ட‌ம் என‌க்கு ஒரு நாவ‌லை ப‌டித்துமுடித்த திருப்தியை அளித்த‌து. ந‌ரேன் ம‌ற்றும் அஜ்ம‌ல் ந‌டிப்பு பார‌ட்ட‌வேண்டிய‌து. ச‌ஸ்பென்சுட‌ன் ப‌ட‌த்தை கொண்டு சென்று அதில் ந‌ட்பையும் சொல்லி அழாகாக‌ த‌ந்திருப்பார் டைர‌க்ட‌ர் மிஷ்கின்.



10)இந்திய‌ன்:

இந்த‌ ப‌ட‌த்தை ப‌ற்றி அதிக‌ம் சொல்ல‌ தேவையில்லை. ஆனால் இந்த‌ ப‌ட‌த்தில் வ‌ரும் இந்திய‌ன் தாத்தாவின் சேவை இந்த‌ நாட்டிற்கு தேவை என்பதை ம‌ட்டும் சொல்லி கொள்கிறேன். த‌ங்க‌ம் 1500 கிலோவாம், ப‌ண‌ம் 1800 கோடியாம் .... ந‌ல்லா இருங்க‌டே ம‌க்கா!!!!!!!!

.

.


.
.


.

29 comments:

ஸ்ரீராம். said...

தில்லானா மோகனாம்பாள் இரண்டாம் தளத்தில் பார்க்கிறேன்...கமல் படம் இல்லாத பத்துப் படங்கள் தெரிவு சொல்லவும் என்று ஒரு கண்டிஷன் சேர்க்க வேண்டும் போலும்.

r.v.saravanan said...

இவற்றில் ஆண் பாவம் , ஆனந்தம், இந்தியன், குருதிபுனல், தளபதி எனக்கு பிடித்த
படங்கள்
ஆனந்தம் வெகு யதார்த்தம் மம்முட்டி கேரக்டரும் பல்லாங்குழியில் வட்டம் ....
பாடலும் எனை கவர்ந்தவை

நல்ல தொகுப்பு பவுல் ராஜ்

Anonymous said...

without kamal's Movies?

It is impossible to collect ten best movies in tamil without them!( if the person is genuine)

தமிழ் உதயம் said...

இதில் சில படங்கள், தமிழ் சினிமாவின் மைல்கல்கள்.

ஜெய்லானி said...

படங்கள் அருமை.:-))

ஜில்தண்ணி said...

ம்ம்ம் ஆனந்தம்,குருதிப் புனல்,அஞ்சாதே
பக்கா பக்கா லிஸ்ட்
பகிர்விற்க்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தேர்வு ஸ்டீபன்.

நீங்கள் குறிப்பிட்ட அனைத்துபடங்களுமே எனக்கும் பிடிக்கும்.

prince said...

எல்லாமே பிடித்தமான படங்கள்! அறுசுவை உணவு போல ....

Unknown said...

Ridham actors: please change the name RAHMAN. the name is RAMESH ARAVINTH.Thanks.
saravanan,
kurumbalur.

சைவகொத்துப்பரோட்டா said...

சுவராசியமான லிஸ்ட்!!

malar said...

ஆண் பாவம் நல்ல படம் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை..என்ன கவலை இருந்தாலும் மறக்கடித்துவிடும்..

ஆண்பாவம்,அஞ்சலி,தளபதி,ஊமைவிழிகள்,தில்லானா மோக‌னாம்பாள்,போன்ற படங்கள் பள்ளி நாள்களில் பழைய VCR ல் பார்திருக்கேன்..தியேட்டர் என்றாலே வீட்டில் என்னவோ கெட்ட வர்ர்தயை சொன்ன மாதிரி பாப்பாங்க.

குருதிப்புனல் போன்ற ரொம்ப சஸ்பென்ஸ் படங்கள் பார்பதில்லை...

செ.சரவணக்குமார் said...

அருமையான தொகுப்பு ஸ்டீபன். படங்களைத் தேர்ந்தெடுத்த விதமும் அருமை. இப்ப சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள்?

Jaleela Kamal said...

எல்லா படங்களும் நல்ல தேர்வு.

ஆண்பாவம் நினைச்சாலே சிரிப்பு தான்.

தில்லான மோகனாம்பாள். சூப்பர்.
அஞ்சலியும் ரொம்ப அருமையாக இருக்கும்.

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//அருமையான தொகுப்பு ஸ்டீபன். படங்களைத் தேர்ந்தெடுத்த விதமும் அருமை. இப்ப சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள்?//

க‌ட‌ந்த‌ வெள்ளிகிழ‌மை "பையா" ப‌ட‌ம் பார்த்தேன் ச‌ர‌வ‌ண‌ன் சார்... என‌க்கு என்ன‌வோ அந்த‌ ப‌ட‌ம் லிங்குசாமியின் ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் தொகுப்பு போல்தான் இருந்த‌து.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

Ahamed irshad said...

சரியான தேர்வுங்க நாடோடி, நீங்கள் குறிப்பிட்ட அனைத்து படமும் எனக்கும் பிடிக்கும்...நல்ல தொகுப்பு

நாடோடி said...

@ஸ்ரீராம். said...
//தில்லானா மோகனாம்பாள் இரண்டாம் தளத்தில் பார்க்கிறேன்...கமல் படம் இல்லாத பத்துப் படங்கள் தெரிவு சொல்லவும் என்று ஒரு கண்டிஷன் சேர்க்க வேண்டும் போலும்.//

க‌ம‌ல் மேல் ஏன் இந்த‌ கோப‌ம் ஸ்ரீராம் சார்?... நான் ந‌டிக‌ர்க‌ளுக்காக‌ ப‌ட‌ம் பார்ப்ப‌து இல்லை.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி

@r.v.saravanan said...
//இவற்றில் ஆண் பாவம் , ஆனந்தம், இந்தியன், குருதிபுனல், தளபதி எனக்கு பிடித்த
படங்கள்
ஆனந்தம் வெகு யதார்த்தம் மம்முட்டி கேரக்டரும் பல்லாங்குழியில் வட்டம் ....
பாடலும் எனை கவர்ந்தவை

நல்ல தொகுப்பு பவுல் ராஜ்///

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் சார்... நீங்க‌ சொன்ன‌ பாட‌ல் என‌க்கும் ரெம்ப‌ பிடிக்கும்.. அப்புற‌ம் என்னுடைய‌ பெய‌ர் ஸ்டீப‌ன். அந்த‌ மெயில் ஐடியில் இருப்ப‌து என்னுடைய‌ அண்ண‌னின் பெய‌ர்.

@Anonymous said...
without kamal's Movies?

It is impossible to collect ten best movies in tamil without them!( if the person is genuine)

வாங்க‌ அனானி... உண்மைதான்.. த‌மிழ் சினிமாவில் க‌ம‌லின் ப‌ங்கு அதிக‌ம் தான்...

@தமிழ் உதயம் said...
//இதில் சில படங்கள், தமிழ் சினிமாவின் மைல்கல்கள்.//

ஆமா த‌மிழ் சார்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

சௌந்தர் said...

இவற்றில் ஆண் பாவம் ,இந்தியன், குருதிபுனல், தளபதி,அஞ்சாதே எனக்கு பிடித்த
படங்கள்

நாடோடி said...

@ஜெய்லானி said...
//படங்கள் அருமை.:-))//

வாங்க‌ ஜெய்லானி. ர‌சிச்சீங்க‌ளா?.. ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்..

@ஜில்தண்ணி said...
//ம்ம்ம் ஆனந்தம்,குருதிப் புனல்,அஞ்சாதே
பக்கா பக்கா லிஸ்ட்
பகிர்விற்க்கு நன்றி//

அப்ப‌டியா ஜில்த‌ண்ணி... ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்... வ‌ந்து ர‌சித்த‌திற்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@அக்பர் said...
//நல்ல தேர்வு ஸ்டீபன்.

நீங்கள் குறிப்பிட்ட அனைத்துபடங்களுமே எனக்கும் பிடிக்கும்.//

வாங்க‌ அக்ப‌ர்... உங்க‌ளுக்கும் பிடிக்குமா?... சேம் பிஞ்ச் அக்ப‌ர்,,

@ப்ரின்ஸ் said...
//எல்லாமே பிடித்தமான படங்கள்! அறுசுவை உணவு போல ....//

வாங்க‌ பிரின்ஸ்.. எப்ப‌டி ஊர்ல‌ ம‌ழை எல்லாம் இருக்கா?... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@director said...
//Ridham actors: please change the name RAHMAN. the name is RAMESH ARAVINTH.Thanks.
saravanan,
kurumbalur.//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் சார்.. ஆமாங்க‌ த‌ப்பா எழுதிவிட்டேன்.. இவ‌ங்க‌ இர‌ண்டு பேருக்கும் இடையில் என‌க்கு ஒரு சின்ன‌ க‌ன்பியூச‌ன் இருந்துட்டே இருக்கும்.. த‌வ‌றை சுட்டி காட்டிய‌மைக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.. மாற்றிவிட்டேன்..

@சைவகொத்துப்பரோட்டா said...
//சுவராசியமான லிஸ்ட்!!//

வாங்க‌ சை.கொ.ப.. ர‌சிச்சீங்க‌ இல்லையா? அதுதான் என‌க்கு வேணும்.. அப்புற‌ம் க‌டைக்கு வ‌ரும் போது ந‌ம்ம‌ளை ஸ்பெச‌லா க‌வ‌னிக்க‌னும்..ம்ம்ம்ம்ம்ம்

நாடோடி said...

@malar said...
//ஆண் பாவம் நல்ல படம் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை..என்ன கவலை இருந்தாலும் மறக்கடித்துவிடும்..

ஆண்பாவம்,அஞ்சலி,தளபதி,ஊமைவிழிகள்,தில்லானா மோக‌னாம்பாள்,போன்ற படங்கள் பள்ளி நாள்களில் பழைய VCR ல் பார்திருக்கேன்..தியேட்டர் என்றாலே வீட்டில் என்னவோ கெட்ட வர்ர்தயை சொன்ன மாதிரி பாப்பாங்க.

குருதிப்புனல் போன்ற ரொம்ப சஸ்பென்ஸ் படங்கள் பார்பதில்லை...//

ஆமாங்க‌.. ஆண்பாவ‌ம் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌மில்லாத‌ ப‌ட‌ம் தான்..அப்புற‌ம் ஆன‌ந்த‌ம் , ரித‌ம் இந்த‌ இர‌ண்டு ப‌ட‌ங்க‌ளையும் பாருங்க‌ள்.. க‌ண்டிப்பாக‌ பிடிக்கும்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@Jaleela said...
//எல்லா படங்களும் நல்ல தேர்வு.

ஆண்பாவம் நினைச்சாலே சிரிப்பு தான்.

தில்லான மோகனாம்பாள். சூப்பர்.
அஞ்சலியும் ரொம்ப அருமையாக இருக்கும்.//

ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் ஜ‌லீலா மேட‌ம்.. உங்க‌ளுக்கு பிடித்த‌ ப‌ட‌ங்க‌ளை தொகுத்த‌ளித்திருப்ப‌தில் என‌க்கும் ச‌ந்தோச‌மே... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

நாடோடி இலக்கியன் said...

நல்ல தொகுப்பு.

இன்றளவும் போரடித்தால் தேடிப்பார்க்கும் பழைய படங்களில் ஆண்பாவமும் ஒன்று.

ரிதம்,ஆனந்தம்-பக்கா டீஸண்ட் மூவிஸ்.மிக ரசித்தப் படங்கள்.

அஞ்சலி,தளபதி- மணிரத்தினத்தின் ரத்தினங்கள்.

குருதிப்புனல்- கமலுக்கு மிகப் பெரிய வெற்றியை தந்திருக்க வேண்டிய படம்.

தில்லானா மோகனாம்பாள்-மறக்க முடியுமா காதலிக்க நேரமில்லையையும் தில்லானா மோகனாம்பாளையும்.

சத்ரியன் said...

ஸ்டீவன்,

இதில்,

எல்லாப் படங்களும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஆனந்தம் படத்தில் ஒரு வசனம், எப்போதும் என் நினைவில் ஆடும்
“ உழைக்கும் போது மணி பாத்து செய்யக்கூடாது.”

ஊமை விழிகள்- தன்னம்பிக்கைப் பாடல்.

இந்தியன் படம் பார்த்துட்டு ( தாலுக்கா ஆபிஸில் ஜாதிச் சான்றிதழ் வாங்கப்போனேன். அப்போ 10 ரூபாய் பணம் கேட்டான் ஒருத்தன். ) சண்டைப் போட்டது.

(அடிதடி எல்லாம் இல்லை. சும்மா மிரட்டல் தான்.)

ஹுஸைனம்மா said...

சில படங்கள் பார்த்ததில்லை என்றாலும், பாடல்கள் அருமையா இருக்கும். ஊமை விழிகள் “தோல்வி நிலையென..” பாட்டு குறித்து நீங்க சொல்லிருக்கது ரொம்ப உண்மை. அதுல வர இன்னொரு பாட்டு “மாமரத்து கிளை எடுத்து..” அதுவும் நல்லாருக்கும்.

DREAMER said...

அழைப்பை ஏற்று அமர்க்களப்படுத்தியிருக்கும் நாடோடி நண்பரே மிக்க நன்றி!

ஒரு ரசிகனின் பார்வையில் சில படங்கள் பதிந்துவிடுவதை பார்க்கும்போது, அந்த படக்குழுவினரின் உழைப்பு நன்றாக தெரிகிறது. அந்தவகையில் வெரைட்டியான தேர்வுகளால், நல்லதொரு பல்சுவை லிஸ்ட்டை போட்டிருக்கிறீர்கள். சூப்பர்ங்க!

-
DREAMER

நாடோடி said...

@அஹமது இர்ஷாத் said...
//சரியான தேர்வுங்க நாடோடி, நீங்கள் குறிப்பிட்ட அனைத்து படமும் எனக்கும் பிடிக்கும்...நல்ல தொகுப்பு//

ரெம்ப‌ ந‌ன்றி இர்ஷாத்... தொட‌ர்வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும்.

@soundar said...
//இவற்றில் ஆண் பாவம் ,இந்தியன், குருதிபுனல், தளபதி,அஞ்சாதே எனக்கு பிடித்த
படங்கள்//

வாங்க‌ சௌந்த‌ர்.. முத‌ல் வ‌ருகை ந‌ல்வ‌ர‌கு ஆகுக‌... வ‌ந்து ர‌சித்த‌த‌ற்கு ரெம்ப‌ ந‌ன்றி..

@நாடோடி இலக்கியன் said...
//நல்ல தொகுப்பு.

இன்றளவும் போரடித்தால் தேடிப்பார்க்கும் பழைய படங்களில் ஆண்பாவமும் ஒன்று.

ரிதம்,ஆனந்தம்-பக்கா டீஸண்ட் மூவிஸ்.மிக ரசித்தப் படங்கள்.

அஞ்சலி,தளபதி- மணிரத்தினத்தின் ரத்தினங்கள்.

குருதிப்புனல்- கமலுக்கு மிகப் பெரிய வெற்றியை தந்திருக்க வேண்டிய படம்.

தில்லானா மோகனாம்பாள்-மறக்க முடியுமா காதலிக்க நேரமில்லையையும் தில்லானா மோகனாம்பாளையும்.///

வாங்க‌ நாடோடி இல‌க்கிய‌ன்... ந‌ம்ம‌ பேர் உங்க‌ பேர்ல‌ ப‌தியா இருக்கு ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்.. முத‌ல் வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும்..

@’மனவிழி’சத்ரியன் said...
//ஸ்டீவன்,

இதில்,

எல்லாப் படங்களும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஆனந்தம் படத்தில் ஒரு வசனம், எப்போதும் என் நினைவில் ஆடும்
“ உழைக்கும் போது மணி பாத்து செய்யக்கூடாது.”

ஊமை விழிகள்- தன்னம்பிக்கைப் பாடல்.

இந்தியன் படம் பார்த்துட்டு ( தாலுக்கா ஆபிஸில் ஜாதிச் சான்றிதழ் வாங்கப்போனேன். அப்போ 10 ரூபாய் பணம் கேட்டான் ஒருத்தன். ) சண்டைப் போட்டது.

(அடிதடி எல்லாம் இல்லை. சும்மா மிரட்டல் தான்.)///

கேட்ட‌வுட‌ன் நாமும் ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌தும் த‌வ‌று தான்... க‌ண்டிப்பா கேள்வி கேட்க‌னும்..அப்ப‌த்தான் திருந்துவானுங்க‌... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி ச‌த்திரிய‌ன் சார்..

Riyas said...

நல்லாயிருக்கு உங்கள் படத்தெரிவுகள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நீங்கள் குறிப்பிட்ட அனைத்து படங்களும் செமஹிட். எனக்கு ரொம்ப பிடிக்கும்.

vanathy said...

Very nice movie collections. I like kamal very much.

கமலேஷ் said...

எல்லாமே என்னக்கும் ரொம்ப பிடிச்ச படங்கள்தான்.....


nice collection

கமலேஷ் said...

எல்லாமே என்னக்கும் ரொம்ப பிடிச்ச படங்கள்தான்.....


nice collection

Related Posts with Thumbnails