எப்படியோ தனது மூத்த மகளுக்கு கல்யாணம் செய்து முடித்த கையோடு திருப்பதி ஏழுமலை வெங்கடேசபெருமாளை வேண்டி விட்டு வந்ததில் இருந்து ரெம்ப சந்தோசமாக இருந்தார் ஏகாம்பரம். எப்படியும் தனது இளைய மகனுக்கு இந்த வருடம் கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.
மகனுக்கு பொண்ணுபார்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார் ஏகாம்பரம். இப்ப எல்லாம் யாருங்க வீட்ல போய் பொண்ணை நேர்ல பார்க்கிறா!!. அல்லது கேட்கிறா!!.. நம்ம ஊர்லேயே இதுக்குனு ஆபிஸ் வைச்சு நாலு பேர் இருக்காங்க. அது போதாதுனு நம்ம பக்கத்து வீட்டு பங்கஜம் இல்ல அவ கூட இப்ப இந்த இந்த வேலை தான் பார்கிறாளாம். போனா வாரம் நாம மணியம்மை வீட்டு கல்யாணத்துக்கு போயிருந்தோம் இல்லையா? அந்த கல்யாணம் கூட பங்கஜம் ஏற்பாடு பண்ணியது தானாம். நாமளும் அவகிட்ட சொல்லிடுவோமா? என்று கையில் இருந்த காப்பியை ஏகாம்பரத்திடம் கொடுத்துவிட்டு பதிலுக்காக கத்திருந்தாள் மனைவி லட்சுமி.
நீ சரியான விவஸ்தை கெட்டவா.. என் பையனுக்கு பொண்ணு பார்க்க நான் போகாம ஊர்ல இருக்கிறவனை போயா பார்க்க சொல்லுறா!!.. அந்த வேட்டியையும் சட்டையும் எடுத்து வைச்சுட்டு அடுப்புல ஏதாவது வேலை இருந்தா போய் பாரு.. இன்னைக்கு நான் ஒரு இடத்துக்கு பொண்ணு பார்க்க போறேன் என்று மனைவிக்கு கட்டளையிட்டார் ஏகாம்பரம்.
அன்றையில் இருந்து மகனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சது. ஊரில் அவருக்கு தெரிந்த சொந்த, பந்தங்கள் எல்லார் வீட்டிலும் உள்ள பொண்ணுங்களை தன்னுடைய மகனுக்கு கேட்டுவிட்டார். அனைவரும் இப்ப கல்யாணம் பண்ணவில்லை. என் பொண்ணு மேலே படிக்க வேண்டும் என்று இருக்கிறாள் எனவே இப்போது கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறாள். என்ற பதில்கள் தான் வந்தன.
இன்னும் சில இடங்களில் நம்ம ஏகம்பரத்தின் முகத்தை பார்த்தாலே, அந்த வீட்டில் உள்ள பெரிவர்கள் வந்து என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணவில்லை என்று, ஏகாம்பரம் கேட்பதற்கு முன்னாடியே பதில் சொன்னார்கள்.
இப்ப எல்லாம் ஏகாம்பரம் ஊர் முழுவதும் ரெம்ப பிரபலம். இவருடைய தலையை பார்த்தாலே பொண்ணுங்க எல்லாம் ஏதோ “பிள்ளை பிடிக்கிறவர்” என்ற ரேஞ்சில் ஓட ஆரம்பிச்சிட்டாங்க.
இன்னும் சில வீட்டில் கலேஜிக்கு போகும் பொண்ணுங்களிடம் அம்மாக்கள் எல்லாம் இந்த வருசம் அரியர் ஏதாவது வச்சிங்கனா, "நம்ம ஏகாம்பரத்தை வீட்டுக்கு வர சொல்லிடுவேன்" என்று மிரட்டினாங்கனா பார்த்துக்கங்க..
இதுக்கெல்லாம் சோர்ந்து போற ஆளு இல்ல.. நம்ம ஏகாம்பரம். செந்தகாரங்கதான் வேலைக்கு ஆகல, வெளியில பார்க்கலாம் என்று தேட ஆரம்பித்தார். பார்க்கிற ஆளுகளிடம் எல்லாம் நம்ம சாலமன் பாப்பையா சொன்னது போல்" நமக்கு ஒரு பையன் இருக்கான். வாங்க!!! பாருங்க!!! பழகுங்க!!! புடிச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்.. என்று விளம்பரம் செய்ய தொடங்கினார்.
இப்படியே பொண்ணு தேடிட்டு இருந்த நம்ம ஏகாம்பரத்தை தெருவில் பார்த்தாலே, ஓடுங்க!! ஓடுங்க!! அவர் வந்திட்டு இருக்கார்" என்பது போல் ஓட ஆரம்பித்தனர்.
இப்படிதான் ஏகாம்பரம் ஒரு நாள் தெருவில் போய்கொண்டு இருக்கும் போது ஒரு பெரியவரும் இளம் பெண்ணும் எதிரில் வந்தார்கள். பெரியவருடன் வரும் பொண்ணு அவருடைய மகளாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு நம்ம ஏகாம்பரம் அந்த பெரிவரிடம் தன்னுடைய மகனை பற்றியும், அவனுக்கு பொண்ணு தேடி கொண்டிருப்பதாகவும் சொன்னார். பொறுமையாய் எல்லா கதையையும் கேட்டுவிட்டு "எதுக்கு இது எல்லாம் என்னிடம் சொல்லுகிறீர்கள்" என்று ஏகாம்பரத்தை பார்த்து கேட்டார் அந்த பெரியவர்.
உங்க பொண்ணை என் பையனுக்கு கேட்கலாம் என்று பெரியவரின் பக்கத்தில் இருந்த இளம் பொண்ணை பார்த்தவாறு கேட்டார் ஏகாம்பரம். இதை கேட்ட அந்த பெரியவர் ஷாக்கடித்தது போல் திடுகிட்டு "யோவ் உனக்கு கண்ணு தெரியாதா இது என்னோட ரெண்டாவது சம்சாரம்ய்யா?... என்று கத்தினார்.
மேலே நடந்த சம்பவத்தை கேள்வி பட்டு ஊர்பக்கமே எட்டி பார்க்காமல் இருக்கும் நம்ம ஏகாம்பரத்தின் மகனை யாரவது பார்த்தா கொஞ்சம் நம்ம ஏகாம்பரம் ஐயாவுக்கு தகவல் கொடுங்களேன், ப்ளீஸ்... ப்ளீஸ்... என்னது அடையாளமா? அது இரண்டு கால் இருக்குமுங்க, இரண்டு கை கூட இருக்கும் ஆமாங்க கரைட்டுதான்.. ஆனா தலை ஒண்ணுதான் இருக்கும்.. அவரை பார்த்தா எப்படியாவது சொல்லி அனுப்புங்க.. எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க க்ரெக்டா சொல்லிடுவீங்க..
குறிப்பு: மொக்கை போட்டு ரெம்ப நாளாச்சி... என்னால முடிஞ்சது.. தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்... அது நம்மள நோக்கி வந்திட்டு இருக்கு ஓடுங்க.. ஓடுங்க தான்.. இதையும் மீறி வந்து படிச்சீங்கனா!!!! நான் பொறுப்பில்லை.
.
.
Saturday, May 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
சிரிக்க வைத்திர்கள்.
நான் இங்க வரவேயில்லை...
எதையும் படிக்கலை...
பின்னுட்டமும் போடலை
உங்க பொண்ணை என் பையனுக்கு கேட்கலாம் என்று பெரியவரின் பக்கத்தில் இருந்த இளம் பொண்ணை பார்த்தவாறு கேட்டார் ஏகாம்பரம். இதை கேட்ட அந்த பெரியவர் ஷாக்கடித்தது போல் திடுகிட்டு "யோவ் உனக்கு கண்ணு தெரியாதா இது என்னோட ரெண்டாவது சம்சாரம்ய்யா?... என்று கத்தினார்.
.....ha,ha,ha,ha,ha,ha,ha.....
மொக்கை போடுறதுல இது புதுசா இருக்கே.
ஆனா விறுவிறுப்பா எழுதியிருக்கீங்க.
ஸ்டீவன்,
குறிப்ப மொதல்லியே போடப்படாத?
கீழ போனப்பறம் ‘ஓடுங்க..ஓடுங்க’ன்னு இருந்த எடத்துல “கிளிக்”கனன் பாருங்க. அது,
“ஓட்டுங்க...ஒரேயொரு ஓட்டுங்க’ -ன்னு கேட்டுச்சி. நானும் போட்டேங்க.
@சத்ரியன் said...
//ஸ்டீவன்,
குறிப்ப மொதல்லியே போடப்படாத?
கீழ போனப்பறம் ‘ஓடுங்க..ஓடுங்க’ன்னு இருந்த எடத்துல “கிளிக்”கனன் பாருங்க. அது,
“ஓட்டுங்க...ஒரேயொரு ஓட்டுங்க’ -ன்னு கேட்டுச்சி. நானும் போட்டேங்க.//
குறிப்பை முதலிலே போட்டா உங்களை மாதிரி நல்லவங்க எப்ப வந்து படிப்பாங்க... அதுனாலத்தான் கடைசில போட்டேன்... ஹி...ஹி...
@நாஞ்சில் பிரதாப் said...
//நான் இங்க வரவேயில்லை...
எதையும் படிக்கலை...
பின்னுட்டமும் போடலை///
அப்படியே நானும் நினைச்சுகிறேன் தல..
@Chitra said...
உங்க பொண்ணை என் பையனுக்கு கேட்கலாம் என்று பெரியவரின் பக்கத்தில் இருந்த இளம் பொண்ணை பார்த்தவாறு கேட்டார் ஏகாம்பரம். இதை கேட்ட அந்த பெரியவர் ஷாக்கடித்தது போல் திடுகிட்டு "யோவ் உனக்கு கண்ணு தெரியாதா இது என்னோட ரெண்டாவது சம்சாரம்ய்யா?... என்று கத்தினார்.
//.....ha,ha,ha,ha,ha,ha,ha.....//
வாங்க மேடம் வந்து சிரிச்சீங்களா?... என்ன உங்க கடை என்ன பூட்டி கிடக்குது சீக்கிறமா ஒரு பதிவை போடுங்க... தங்கமலை போர் அடிச்சிடுச்சு..
@ தமிழ் உதயம் said...
//சிரிக்க வைத்திர்கள்.//
வாங்க தமிழ் சார்...
@அக்பர் said...
//மொக்கை போடுறதுல இது புதுசா இருக்கே.
ஆனா விறுவிறுப்பா எழுதியிருக்கீங்க.///
வாங்க அக்பர்... உங்களுடைய ரெண்டாவது பார்ட்டை எழுதுங்க...
சிரிக்க வைத்தாலும் , ஒரு பக்கம் சிந்திக்க வைக்குது, பெண் சிசுக்கொலை , பிறந்த பத்து நாளில் குப்பையில் வீச்சுன்னு பேப்பரில வரும் போது. இப்படியே போனால் இது மாதிரி வரும் காலத்தில் பெண்ணுக்கு அலைய வேண்டி வரலாம் .
இது மொக்கை பதிவு இல்லை....
நல்லாயிருக்குங்க நாடோடி...
மொகையாக தெரியவில்லை...
நல்ல இருந்தது....
***நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.
தலைப்பு கீழ போடவேண்டிய டிஸ்கிய கடோசில போட்டு கவுத்துபுட்டீங்களே.:))
நாடோடி, ம்ம்.. நல்ல மொக்கை. நல்லா இருக்கு. தொடருங்கோ.
விறுவிறுப்பா இருக்கே
விறுவிறுப்பா இருக்கே
மொக்கையிலும் சிந்திக்கவேண்டியவைகளை புகுத்தியவிதம் அருமை..
ஐயையோ!! ஓடுங்க ஓடுங்க வில்லுகுறி அண்ணாச்சி வாராங்க!! ஓடுங்க...........
இதையும் மீறி வந்து படிச்சீங்கனா!!!! நான் பொறுப்பில்லை.
ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் நாங்க ஏன் படிக்க போறோம்
பரவாயில்லே நல்லாஇருக்கு நாடோடி
நானும் ஒன்னும் சொல்ல மாட்டேன், நான் கேட்டதுக்கு (போன பதிவில்) பதிலே சொல்லலியே அதுக்காக உங்க கூட டூ!!!
@எம் அப்துல் காதர் said...
//நானும் ஒன்னும் சொல்ல மாட்டேன், நான் கேட்டதுக்கு (போன பதிவில்) பதிலே சொல்லலியே அதுக்காக உங்க கூட டூ!!!///
நீங்க மெயில் செக் பண்ணுங்க உங்களுக்கு உடனேயே பதில் சொன்னேனே...அப்படி நீங்க பக்கலைனா உங்க மெயில் ஐடி கொடுங்க.. பேசுவோம்.. நான் இருப்பது ஜித்தாவில்..உங்க போன் நம்பர் இருந்த கொடுங்க பேசுவோம்...
Post a Comment