சௌதி அரேபியாவிற்கு கட்டடத்தொழில், தோட்ட வேலை மற்றும் கூலிவேலை என்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தை சார்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள், கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களில் இருந்து இவர்கள் மீண்டார்களா?.. இல்லை மேலும் கஷ்டத்தில் விழுந்தார்களா? என்பதை நான் பார்த்த சில சம்பவங்களை கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.
சௌதி அரேபியாவில் இருந்து இந்த வேலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் விசாக்களுக்கு சம்பளம் 600 ரியாலில் இருந்து 1200 ரியால் வரை இருக்கும் (8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை). இந்த விசாவை வாங்கிய லோக்கல் டிராவல் ஏஜன்ட்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சரியான தகவல்களை சொல்லாமல் ஒவ்வொரு விசாவையும் லட்ச ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு வாங்கும் இளைஞர்களும் வெளிநாடு மோகத்தில் கேள்விகளை ஏதும் கேட்காமல் வாங்கிவிடுகிறார்கள்.
வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களில் பெரும்பாலனர்வர்கள் ஊரில் ஊதாரித்தனமாக சுற்றுபவர்களும், ஏதாவது பிரச்சனையில் மாட்டியவர்களுமாகத் தான் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வெளிநாட்டிற்கு போனாலாவது திருந்திட மாட்டானா என்று வீட்டில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த அளவுப் பணத்தை புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். இதில் சிலருடைய அம்மா/மனைவியின் தாலி செயின்கள் கூட விற்பனை அல்லது அடகுக் கடைக்குப் போவது மறுக்க இயலாது.
இவ்வாறு சௌதி வருபவர்களுக்கு முதலில் அறிமுகம் ஆகிறவர் கபில். இவர்தான் விசாவிற்கு சொந்த காரர், வருபவர்களை ஸ்பான்சர் செய்து அழைத்திருப்பவர். இவர் லோக்கல் அரபியாக இருப்பார். இவர்கள் கம்பெனி வைத்திருப்பவர்களாகவும் இருப்பார் அல்லது வேறு கம்பெனிகளுக்கு ஆட்களை சப்ளை பண்ணுபவராகவும் இருப்பார்.
சௌதி வந்தவுடன் அனைவருடைய பாஸ்போர்ட்டும் முதலில் கபில் கைக்கு போய்விடும். பின்னர் இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளேன் என்பதை அடையாளப்படுத்த ஒரு அட்டை கொடுக்கப்படும், அதன் அரேபிய சொல் இக்காமா(IQAMA). இந்த அடையாள அட்டை இருந்தால் தான் சௌதியில் சுதந்திரமாக சுற்றமுடியும். வாகனத்தில் அல்லது வெளியில் செல்லும் போது சௌதி போலீசார் பிடித்தால் முதலில் கேட்பது இந்த இக்காமாவை தான். வங்கியில் பணம் அனுப்ப வேண்டுமானால் கூட இந்த இக்காமாவை தான் கேட்பார்கள்.
இந்த இக்காமா சௌதி அரசால் வழங்கப்படும். இதை தருவதற்கு முன்பு நம்முடைய கைரேகை முதல் ஜாதகம் வரை அனைத்தும் அரசாங்க கோப்புகளில் பதிக்கப்பட்டுவிடும். பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கொடுக்கப்பட மாட்டாது. இக்காமா மட்டும் தான் உங்களிடம் கொடுக்கப்படும். சில கபில்கள் இந்த இக்காமாவையும் வாங்கி வைத்து கொள்வார்கள்.
உங்களுடைய கபில் சொந்தமாக கம்பெனி வைத்திருந்தால் அவருடைய கம்பெனியில் நீங்கள் வேலை செய்வீர்கள். சில கபில்கள் மேன் பவர் சப்ளை மட்டும் செய்வார்கள். அவர்கள் உங்களுக்கு வேறு கம்பெனியில் வேலை வாங்கி தருவார்கள். வேலை நேரம் 10-ல் இருந்து 12 மணி நேரம் இருக்கும்.
தங்குவதற்கு ரூம் உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள். ஒரு அறையில் நான்கில் இருந்து ஐந்து பேர் இருப்பார்கள். அனைவரும் சமைத்து தான் சாப்பிடுவார்கள்.(சமையல் செலவு + மொபைல் செலவு + இதர செலவுகள் எல்லாம் சுமார் 300-ல் இருந்து 500 ரியால் செலவாகும், மேலே சொல்லப்பட்ட சம்பளத்தில் இந்தத் தொகை போனால் மீதம் எவ்வளவு வரும் என்பதை ஊகித்து கொள்ளுங்கள்)
வெளிநாட்டிற்கு வரும் பெரும்பாலானர்வர்கள் முதலில் கொடுக்கும் லட்ச ரூபாய் கடனுக்கு வாங்கியதாக தான் இருக்கும். அதற்கு வட்டியை கொடுக்க தான் இவர்களுடைய சம்பளம் இருக்கும். சிலர் ஓவர் டைம் போன்ற வேலைகள் பார்த்து ஏதும் மீதம் பிடித்தால் உண்டு. சௌதியில் உள்ள தட்பவெப்ப நிலைகள் அனைவரும் அறிந்ததே. வெயில் என்றால் மண்டைய பிளந்துவிடும், குளிர் என்றால் மூக்கில் ரத்தம் வழிய செய்துவிடும். இந்த சூழ்நிலைகள் எல்லாம் சமாளிக்க வேண்டும்.
இவர்களுக்கு வேலை கொடுக்கும் கம்பெனியில் சரியாக வேலையிருந்தால் பரவாயில்லை. வேலையில்லையென்றால் கபில் உங்களுக்கு சம்பளம் கம்பெனியில் இருந்து தரமாட்டார். உங்களிடம் "நீங்கள் வெளியில் யாரிடமாவது வேலை செய்து கொள்ளுங்கள், ஆனால் எனக்கு மாதம் 200-ல் இருந்து 300 ரியால் கொடுத்து விட வேண்டும்" என்று சொல்லுவார். வெளியில் வேலை நீங்கள் தேடி கொள்ள வேண்டும்.
இதற்கு நீங்கள் உடன்படாமல் என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள் என்றால் கபில் மறுத்துவிடுவார். டிக்கட்டிற்கு நீயே பணம் பார்த்து கொள். உன்னுடைய பாஸ்போர்ட் என் கையில் இருக்கிறது, அது வேண்டுமானால் இவ்வளவு பணம் கொடுத்துவிட்டு செல் என்று ஒரு பெரிய அமௌண்டை சொல்லுவார்கள்.(இதற்காகவாவது நீங்கள் வேலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்). இந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் ஒரு பகுதியினர்.
கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு முதல் மூன்று, நான்கு மாதங்கள் சொல்லிய சம்பளம் கொடுக்கப்படும். பின்பு சம்பளம் கொடுப்பதிலும் பிரச்சனை பண்ணுவார்கள். லட்ச ரூபாய் கடனில் வந்த ஒருவனுக்கு சம்பளம் சரியாக கொடுக்கப்பட வில்லையென்றால் பெரிய மனகஷ்டம் வந்து சேரும். மேலும் இவர்கள் தங்கவைக்கப் பட்டிருக்கும் இடங்கள் பெரும்பாலும் கிராமமாகத் தான் இருக்கும். கபிலின் உதவியில்லாமல் இவர்கள் நகரங்களுக்கு வரமுடியாது. எனவே இவர்களின் கஷ்டங்களையும் பிறருடன் பகிந்து கொள்ளவும் முடியாது.
சரியாக சம்பளம் கொடுக்காமல் பிரச்சனை பண்ணுவதால் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கபிலின் பிடியில் இருந்து இவர்கள் வெளியில் சாடிவிடுவார்கள். இவர்களிடம் எந்த பேப்பரும் இருக்காது(பாஸ்போர்ட், இக்காமா போன்றவை). இந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் ஒரு பகுதியினர்.
ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அங்கு குறைவான சம்பளம் தருகிறார்கள், வெளியில் வேலை செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு வெளியில் சாடும் ஒரு கூட்டமும் இருக்கிறது. இவர்களிடமும் எந்தவித பேப்பரும் இருக்காது.
இவ்வாறு எந்தவித பேப்பர்களும் இல்லாமல் எவ்வாறு இங்கு சமாளிக்கிறார்கள்?. எப்படி இந்தியா வருகிறார்கள் என்பதை அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.
10 பேர் சௌதியில் வேலை செய்கிறார்கள் என்றால் அதில் 6 பேர் நான் மேலே சொன்ன மூன்று பிரச்சனைகளில் மாட்டுபவர்கள். அப்படியானால் எத்தனை சதவீதம் என்று நீங்களே கணக்கிட்டு பாருங்கள்.
-------------தொடரும்--------------
குறிப்பு: இந்தியாவிற்கு வரும் காலம் நெருங்கிவிட்டதால் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதமுடியவில்லை. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பகிருவேன்.
Sunday, September 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
சவுதிக்கூட ஒப்பிடும்போது அமீரகம் எவ்வளோ பரவால்ல...சவுதில வேலைபார்த்த
ஒருத்தர் என்கிட்ட சொன்ன கதைகளை வாழ்க்கைல மறக்கவே முடியாது.
அடுத்த பகுதியையும் எழுதுங்க ஸ்டீபன்...
@நாஞ்சில் பிரதாப் said...
//சவுதிக்கூட ஒப்பிடும்போது அமீரகம் எவ்வளோ பரவால்ல...சவுதில வேலைபார்த்த
ஒருத்தர் என்கிட்ட சொன்ன கதைகளை வாழ்க்கைல மறக்கவே முடியாது.
அடுத்த பகுதியையும் எழுதுங்க ஸ்டீபன்...//
வாங்க தல.. இதுக்கு முன்னாடி கதைகேட்டு இருக்கீங்களா?... அப்ப உங்களுக்கு இது புதிதாக இருக்காது... அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதுகிறேன். கருத்துக்கு நன்றி தல.
அட ராமா...............
இதையெல்லாம் அங்கே வேலைக்குப்போகத் துடிச்சுக்கிட்டு இருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்கணுமே......
எப்படி? எப்படி?
திகிலா இருக்கே!! பாவம்தான் இது போன்று மாட்டுபவர்கள்.
எல்லா நாட்டிலயும் இப்படி கஷ்டப்படுறது படிக்காத மக்கள்தான் போல!!
ரெண்டு நாள் முன்னாடி இந்தப் பதிவுல ஒரு படிச்சவர் பண்ணதையும் பாருங்க.
http://singakkutti.blogspot.com/2010/09/blog-post_16.html
இப்படியும் சிலர்!!
மிகக் கொடுமை ஸ்டீபன். வருத்தமாயிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கே.ஆர்.பி செந்தில், வெளிநாட்டு வேலையில் இருப்பதை இழந்து, கடனாளியாகி, உள்ளுரிலேயே டீக்கடை வைத்து பெரிய ஆளாக மாறிய கதையை பகிர்ந்திருந்தார். முறையான தகவல் இல்லாமல் வெளிநாடுகளில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் பாவம். இதனைத் தொடர்ந்து எழுதுங்கள். சமூக அக்கரையும் பொதுத் தெளிவும் அடுத்தடுத்த நிலைக்குப் பரவட்டும். நன்றி.
மலேஷியாவிலும் இப்படி தவிப்பவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது எப்படி புரியவைப்பது என்றுதான் புரியவில்லை. இருக்கும் சிக்கல்களை எடுத்துச் சொன்னால் கூட நம் மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நம் மீதே கோபப்படவும் செய்யறாங்க :(
இவர்களை நினைத்தால் ரொம்ப மன வேதனையாக இருக்கும்,
எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்றூ வருகிறார்கள்.
ஐய்யோ இவர்கள் படும் வேதனை சொல்ல மாள முடியாது.
சவுதி என்றில்லை எல்லா நாடுகளிலும் இப்படி கழ்டபடுகீறார்கள்.
Hi
First of all why these people have craze to go abroad when they do not have basic qualifications?
In my expriance abroad, I have never seen any "skilled" workers getting troubles like what it is explained here.
So it is our people mentality that "any one" can abroad and earn more money and become rich within a shorter period.
PLEASE AVOID SHORTCUTS IN LIFE..
Sankara N Thiagarajan
The Netherlands-Coimbatore
படிக்கவே கஷ்டமா இருக்கு. இவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்திய அரசாங்கம் தலையிடாதா?
வாசிக்கவே மனசு கஷ்டமாக இருக்கு.ஆராய்ந்து அருமையாக பகிர்ந்து இருக்கீங்க.தம்பி நல்லபடியாக ஊருக்கு போய் விட்டு வாங்க.
இதப்பத்தி எழுதி எழுதி கைகள் ஒய்ஞ்சு போச்சு. பேசி பேசி வாய் ஒய்ஞ்சு போச்சு. ஆனா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க.
நல்லா சொல்லியிருக்கீங்க, தொடர்ந்து எழுதுங்க சார். சவூதிக்கு அமீரகம், ஒமான், கத்தார், பஹ்ரைய்ன் நாடுகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நானும் கேள்விப்பட்டேன்!
சரியா விசாரிக்காமல் வெளிநாடு வேலைன்னு கிளம்பி வருவதோட சிக்கல் இது.
நான் முன்பு கத்தாரில் இருக்கும் போது ஓரு ஆபிஸ் பாய் 700 ரியால் சம்பளத்திற்காக ஏஜென்சிக்கு 70000 வரை வட்டிக்கு வாங்கி கொடுத்து விட்டு வந்திருக்கிறான். மாத சம்பளம் வட்டிக்கே சரியாகி விடுகிறது. பாவமாக இருக்கும் :(
ஊருக்கு வர்றீங்களா ரைட்டு ... சந்தோஷம் :)
படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்டீபன்
ஊருக்கு வருவதாக சொல்லியுள்ளீர்கள் சந்தோஷம் ஸ்டீபன்
ஸ்டீபன் ...அதிர்ச்சியாக இருக்கிறது.....இதை இன்னும் விரிவாக எழுதுங்கள்...புத்தகமாக வெளியிட்டு..விழிப்புணர்வை ஏற்படுத்தி,,,,இப்படி இளைஞர்கள் வந்து மாட்டுவதை தடுக்கலாம்.
நம் இளைஞர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள்.
கொஞ்சமும் ஈவிரக்கமும் இல்லாத அரக்கர்களிடம் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை பறிகொடுத்த இவ்விளைஞர்களை இந்திய அரசாங்கம்தான் தலையிட்டு காப்பாற்ற வேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
சோகம்தான் என்ன பண்றது ஸ்டீபன்..
மிக நல்ல கட்டுரை சார் ... அங்கு சென்று ஒரு நாளைக்கு பனிரெண்டு மணிநேரம் உழைக்க தயாராய் இருக்கும் நம்மவர்கள், சொந்த ஊரில் கவுரவம் பார்க்கின்றனர்.. நாம் எவ்வளவு சொல்லினாலும் இன்னும் வெளிநாட்டுக்கு போகும் கூட்டம் தயாராகவே இருக்கிறது ...
நீங்கள் சொல்வது போல் எல்லோரும் அப்படியில்லை விதிஎன்று ஒன்று உண்டு
@துளசி கோபால் said...
//அட ராமா...............
இதையெல்லாம் அங்கே வேலைக்குப்போகத் துடிச்சுக்கிட்டு இருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்கணுமே......
எப்படி? எப்படி? //
வாங்க துளசி மேடம்..நானும் என்னால் முடிந்தவரை நண்பர்களிடம் சொல்லுகிறேன்.. நீங்களும் சொல்லுங்கள்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.
@சைவகொத்துப்பரோட்டா said...
//திகிலா இருக்கே!! பாவம்தான் இது போன்று மாட்டுபவர்கள். //
வாங்க சை.கொ.ப.. திகில் கதை இல்ல நண்பரே, உண்மை கதை. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@ஹுஸைனம்மா said...
//எல்லா நாட்டிலயும் இப்படி கஷ்டப்படுறது படிக்காத மக்கள்தான் போல!!
ரெண்டு நாள் முன்னாடி இந்தப் பதிவுல ஒரு படிச்சவர் பண்ணதையும் பாருங்க.
http://singakkutti.blogspot.com/2010/09/blog-post_16.html
இப்படியும் சிலர்!! //
வாங்க ஹுஸைனம்மா.. அந்த லிங்கையும் படித்தேன்.. இவர்களை போலவும் நிறைய பேர் இருக்கிறார்கள்.. வருகைக்கு ரெம்ப நன்றி.
@ஜானகிராமன் said...
//மிகக் கொடுமை ஸ்டீபன். வருத்தமாயிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கே.ஆர்.பி செந்தில், வெளிநாட்டு வேலையில் இருப்பதை இழந்து, கடனாளியாகி, உள்ளுரிலேயே டீக்கடை வைத்து பெரிய ஆளாக மாறிய கதையை பகிர்ந்திருந்தார். முறையான தகவல் இல்லாமல் வெளிநாடுகளில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் பாவம். இதனைத் தொடர்ந்து எழுதுங்கள். சமூக அக்கரையும் பொதுத் தெளிவும் அடுத்தடுத்த நிலைக்குப் பரவட்டும். நன்றி. //
வாங்க ஜானகிராமன்.. செந்தில் அவர்களின் கட்டுரையையும் படித்தேன்.. இதன் மூலம் ஒருவர் மீண்டால் சந்தோசமே.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@kavisiva said...
//மலேஷியாவிலும் இப்படி தவிப்பவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது எப்படி புரியவைப்பது என்றுதான் புரியவில்லை. இருக்கும் சிக்கல்களை எடுத்துச் சொன்னால் கூட நம் மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நம் மீதே கோபப்படவும் செய்யறாங்க :( //
வாங்க கவிசிவா.. மலேசியாவில் உள்ள விசயங்களை நானும் கேள்விபட்டிருக்கிறேன்.. நாம் சொல்லுவதை சொல்லுவோம்.. கேட்பவர்கள் கேட்கட்டும்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.
@Jaleela Kamal said...
//இவர்களை நினைத்தால் ரொம்ப மன வேதனையாக இருக்கும்,
எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்றூ வருகிறார்கள்.
ஐய்யோ இவர்கள் படும் வேதனை சொல்ல மாள முடியாது.
சவுதி என்றில்லை எல்லா நாடுகளிலும் இப்படி கழ்டபடுகீறார்கள். ///
வாங்க ஜலீலா சகோ.. நீங்கள் சொல்வது சரிதான். வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@tshankar89 said...
//Hi
First of all why these people have craze to go abroad when they do not have basic qualifications?
In my expriance abroad, I have never seen any "skilled" workers getting troubles like what it is explained here.
So it is our people mentality that "any one" can abroad and earn more money and become rich within a shorter period.
PLEASE AVOID SHORTCUTS IN LIFE..
Sankara N Thiagarajan
The Netherlands-Coimbatore //
வாங்க சங்கர்.. நீங்கள் சொல்வதும் ஒரு காரணம் தான்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@vanathy said...
//படிக்கவே கஷ்டமா இருக்கு. இவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்திய அரசாங்கம் தலையிடாதா? //
வாங்க வானதி சகோ.. இந்திய அரசாங்கம் இதுவரை எந்தவொரு நல்ல முடிவையும் எடுக்கவில்லை.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@asiya omar said...
//வாசிக்கவே மனசு கஷ்டமாக இருக்கு.ஆராய்ந்து அருமையாக பகிர்ந்து இருக்கீங்க.தம்பி நல்லபடியாக ஊருக்கு போய் விட்டு வாங்க. //
வாங்க சகோ.. உங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.
@தமிழ் உதயம் said...
//இதப்பத்தி எழுதி எழுதி கைகள் ஒய்ஞ்சு போச்சு. பேசி பேசி வாய் ஒய்ஞ்சு போச்சு. ஆனா புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க. //
ஆமா தமிழ் சார்.. என்ன பண்ண, நாம் சொல்லுவதை சொல்லுவோம்.. :)
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//நல்லா சொல்லியிருக்கீங்க, தொடர்ந்து எழுதுங்க சார். சவூதிக்கு அமீரகம், ஒமான், கத்தார், பஹ்ரைய்ன் நாடுகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நானும் கேள்விப்பட்டேன்! //
வாங்க ராமசாமி சார்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@கண்ணா.. said...
//சரியா விசாரிக்காமல் வெளிநாடு வேலைன்னு கிளம்பி வருவதோட சிக்கல் இது.
நான் முன்பு கத்தாரில் இருக்கும் போது ஓரு ஆபிஸ் பாய் 700 ரியால் சம்பளத்திற்காக ஏஜென்சிக்கு 70000 வரை வட்டிக்கு வாங்கி கொடுத்து விட்டு வந்திருக்கிறான். மாத சம்பளம் வட்டிக்கே சரியாகி விடுகிறது. பாவமாக இருக்கும் :(
ஊருக்கு வர்றீங்களா ரைட்டு ... சந்தோஷம் :) //
வாங்க கண்ணா தல.. ரெம்ப நாள் ஆச்சி பதிவு ஒண்ணும் கணோம்.. நல்ல பதிவா சீக்கிரம் போடுங்க.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@r.v.saravanan said...
//படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்டீபன் //
வாங்க சரவணன்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.
@r.v.saravanan said...
//ஊருக்கு வருவதாக சொல்லியுள்ளீர்கள் சந்தோஷம் ஸ்டீபன் //
ஆமா சரவணன், முடிந்தால் சந்திக்கலாம்..
@ஜெரி ஈசானந்தன். said...
//ஸ்டீபன் ...அதிர்ச்சியாக இருக்கிறது.....இதை இன்னும் விரிவாக எழுதுங்கள்...புத்தகமாக வெளியிட்டு..விழிப்புணர்வை ஏற்படுத்தி,,,,இப்படி இளைஞர்கள் வந்து மாட்டுவதை தடுக்கலாம். //
வாங்க ஜெரி சார்.. என்னால் முடிந்த அளவு எழுதுகிறேன்.. பின்பு அதிகபடியான தகவலுக்கு மீண்டும் திருத்தி கொள்ளலாம்.. ஊக்கதிற்கு ரெம்ப நன்றி.
@மாசிலா said...
//நம் இளைஞர்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள்.
கொஞ்சமும் ஈவிரக்கமும் இல்லாத அரக்கர்களிடம் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை பறிகொடுத்த இவ்விளைஞர்களை இந்திய அரசாங்கம்தான் தலையிட்டு காப்பாற்ற வேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி. //
வாங்க மாசிலா சார்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@அஹமது இர்ஷாத் said...
//சோகம்தான் என்ன பண்றது ஸ்டீபன்.. //
வாங்க இர்ஷாத்.. கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி.
@கே.ஆர்.பி.செந்தில் said...
//மிக நல்ல கட்டுரை சார் ... அங்கு சென்று ஒரு நாளைக்கு பனிரெண்டு மணிநேரம் உழைக்க தயாராய் இருக்கும் நம்மவர்கள், சொந்த ஊரில் கவுரவம் பார்க்கின்றனர்.. நாம் எவ்வளவு சொல்லினாலும் இன்னும் வெளிநாட்டுக்கு போகும் கூட்டம் தயாராகவே இருக்கிறது ... //
வாங்க செந்தில் அண்ணா.. நீங்கள் சொல்வது உண்மைதான் இங்கு உழைப்பவர்கள் சொந்த ஊர் சென்றால் வேலை செய்ய சங்கடபடுகிறார்கள்.. வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@hayathmohai said...
//நீங்கள் சொல்வது போல் எல்லோரும் அப்படியில்லை விதிஎன்று ஒன்று உண்டு //
வாங்க ஹாயத்.. எல்லோரும் விதியை நம்ம்புவதில்லை நண்பரே. கருத்துக்கு ரெம்ப நன்றி.
எப்படித்தான் இந்த அடிமைத்தனமான வாழ்க்கையை அங்குள்ள சீதோஷ்ண நிலைமையிலும், பொழுதுபோக்க கூட வசதி இல்லாமல் , ஒரு கைதி வாழ்க்கை வாழ முடியுதோ..
இந்திய அரசு இதை தடுக்கணும் சட்டம் போட்டாவது..
படிக்கவே வருத்தமா இருக்கு..
இங்கு சில பர்மா அகதிகள் அப்படி வருவதுண்டு..
அடிமட்ட வேலைக்கு வந்து எலும்பும் தோலுமாய் இருப்பதை பார்த்தாலே கஷ்டமாயிருக்கும்..
நாடு சரியில்லாமல்தானே இப்படி பிழைப்பு???
தொடருங்கள்...
ஏதாவது புது பதிவு இருக்கான்னு வந்தால் புது டெம்ப்லேட்.சிம்ப்ளி சூப்பர்ப்.
ஸ்டீபன் ண்ணா,
கேக்கவே மறந்துட்டேன்...ரெண்டு நாள்முன்னாடிதான் கஃபீல் சிஸ்டத்தை எடுத்துட்டதா செய்தியும் அதன் பின்னர் இந்த பதிவையும் படிச்சேன்... அப்ப இப்படி கஷ்டப்பட்டு அங்க வேலைக்கு வந்த / வரப்போற எல்லாருக்கும் நல்ல நேரம்தான்னு சொல்லுங்க!!
மிகவும் பயனுள்ள பதிவு ஸ்டீபன்.
என் நெருங்கிய நண்பனொருவன் இங்கு வந்து இதே சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு விழித்தான்.
எலக்ட்ரிகல் பணிக்கு வந்தவன் சவுதி ஆர்மி கேம்பில் கழிவறை சுத்தம் செய்யும் பணி தரப்பட்டு அதற்கும் எந்த உதியமும் தரப்படாத நிலையிலும் நான் சென்று பார்க்க முடியாத ஒரு டெசர்ட்பகுதில் மூன்று மாதமாக அகப்பட்டு கொண்டான். கிடைத்த தகவல்களை வைத்து சவுதி இந்தியன் எம்பசி அம்பாசிடருக்கு மெயில் செய்தேன். ஒரு முறை போன் செய்து என்ன நடந்தது என்று அவர்கள் விசாரித்ததோடு சரி. பிறகு என் முயற்சிகள் அனைத்தும் குளத்தில் போட்ட கல்தான். கடைசியாய் அவன் கபிலின் காலில் விழாத குறையாக பேசினேன். 2000 ரியால் வாங்கி கொண்டு அவன் பாஸ்போர்ட்டை மீண்டும் கொடுத்தார்கள். டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தேன்.
அது போன்ற நண்பர்களுக்கு இந்த இடகை நிச்சயம் மிக உதவியாக இருக்கும்.. நண்பரே..உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தொடருங்கள்... இந்த பதிவினை.
அருமையான இன்னொரு விழிப்புணர்வுப் பதிவு!
//இவ்வாறு வாங்கும் இளைஞர்களும் வெளிநாடு மோகத்தில் கேள்விகளை ஏதும் கேட்காமல் வாங்கிவிடுகிறார்கள்.//
படிச்சவன், படிக்காதவன், சவுதி, அமெரிக்கா எந்தப் பாகுபாடும் இதுக்குக் கிடையாது!!
நல்ல பதிவு தல. அடுத்த பதிவையும் போடுங்க சீக்கிரம்!! இந்த டெம்ப்ளேட் பரவாயில்லை சீக்கிரமா தொறக்குது!!
எவ்ளோ கஷ்டம்.. இங்கே வேலைக்கு வருவது?? ஹ்ம்ம்ம்....
வெளியில் வந்து, என்ன பாடு பட போராங்களோ? தெரியல..
தொடருங்கள்.. பகிர்வுக்கு நன்றிங்க. :-)
Post a Comment