Tuesday, April 12, 2011

தேர்த‌ல்_இறுதிக்க‌ட்ட‌ ஓட்டு சேக‌ரிப்பு

தேர்த‌லில் போட்டியிடுப‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளை ம‌க்க‌ளிட‌ம் சொல்லி ஓட்டு கேட்ப‌தெல்லாம் சினிமாக்க‌ளில் ம‌ட்டும் தான் பார்க்க‌ முடியும் என்று நினைக்கிறேன்...

ஒவ்வொருவ‌ரின் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளையும், கொலைபாத‌க‌ங்க‌ளையும் காட்டி ஓட்டு கேட்கிறார்க‌ள். எந்த‌ ஆட்சியில் அதிக‌மாக‌ வ‌ன்முறைக‌ள் க‌ட்ட‌விழ்க்க‌ ப‌டுகிற‌து என்று போட்டா போட்டி போட்டு த‌ங்க‌ள் ஊட‌க‌ங்க‌ளில் ஒளிப‌ர‌ப்புகிறார்க‌ள். க‌ண‌க்கில் அட‌ங்காத‌ குற்ற‌ங்க‌ளை காட்டி எங்க‌ள் ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?... உன‌து ஆட்சியில் ந‌ட‌ந்த‌தா?.. என்று போட்டி போடும் வேட்பாள‌ மாக்க‌ளே(எழுத்துப்பிழை இல்லை)!!!!.. ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் ம‌க்க‌ளுக்கு செய்த‌ ந‌ல்ல‌ விச‌ய‌ம் ஒன்றை உங்க‌ளால் சுட்டிக் காட்ட‌முடியுமா?..




எதிரெதிர் ஆட்சியில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளை காட்டி ஓட்டுப்பிச்சை கேட்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளே!!!... உங்க‌ள் ஆட்சியில் ஊழ‌ல் இல்லாம‌ல், த‌ன்ன‌ல‌ம் க‌ருதாம‌ல் செய்த‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை ப‌ட்டிய‌ல் இட்டு, ம‌க்க‌ளிட‌ம் காட்டி எப்போது ஓட்டு கேட்க‌ப் போகிறீர்க‌ள்?..

அவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் ந‌ட‌ந்த‌ ஊழ‌ல் ம‌ற்றும் வ‌ன்முறைக‌ளை இவ‌ர்க‌ளின் ஐந்தாண்டு ஆட்சியில் குறைவாக‌ இருக்கிற‌து என்று ந‌டுநிலைமையாள‌ர்க‌ளும் வாய் ச‌வுடால் அடிக்கிறார்க‌ள்.... அட‌ பெரிய‌ம‌னுச‌ங்க‌ளா!!!! ஊழ‌ல், வ‌ன்முறை இர‌ண்டுமே அர‌சிய‌லில் த‌ப்பு.. அதில‌ சின்ன‌து, பெருசு... அதிக‌ம், குறைவு.. காமெடியா இல்ல‌... போங்க‌ய்யா!!!! போங்க‌.... நீங்க‌ளும் உங்க‌ள் ந‌டுநிலைமையும்.....

அர‌சிய‌ல் என்றாலே ஊழ‌லும், வ‌ன்முறையும் தான் என்ப‌து பெரும்பால‌ன‌ ம‌க்க‌ளில் க‌ருத்து. அந்த‌ மாயையை இப்போது உள்ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் ஊட‌க‌ங்க‌ளும் அழ‌காக‌ வ‌ள‌ர்த்தெடுகின்ற‌ன‌. இப்ப‌டியே போனால் வ‌ன்முறையும், ஊழ‌லும் தான் அர‌சிய‌ல் செய்ய‌ முக்கிய‌ கார‌ணிகள் என்று ஆகிவிடும்.. இந்த‌ ஊட‌க‌ங்க‌ளும் அத‌ற்கு தூப‌ம் போடும்..

செழிக்க‌ட்டும்‌!!!! ஊழ‌ல்‌ அர‌சிய‌ல்...

வ‌ள‌ர‌ட்டும்‌!!!! இல‌வ‌ச‌ங்க‌ள்...

--------X--------X-------X----------X----------X-------------X------------X----------------X----------X----

என்னுடைய‌ தொகுதி ப‌த்ம‌னாப‌புர‌ம். என்னுடைய‌ தொகுதி வேட்பாள‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் தான்.

ஆஸ்டின் - தேமுதிக‌

புஷ்ப‌ லீலா ஆல்ப‌ன் - திமுக‌

சுஜித்குமார் - பிஜேபி

இதில் தேதிமுக‌ வேட்பாள‌ர் ஆஸ்டின் ம‌க்க‌ளுக்கு அறிமுக‌மான‌ ஒருவ‌ர். இவ‌ர் முன்பு அதிமுகாவில் இருந்த‌வ‌ர். விஜ‌ய‌காந்த‌ க‌ட்சி ஆர‌ம்பித்த‌வுட‌ன் வ‌ந்து சேர்ந்த‌வ‌ர்.

இந்த‌ தேர்த‌லில் பிஜேபி த‌னியாக‌ வேட்பாள‌ரை நிறுத்தியிருக்கிற‌து. எங்க‌ள் ப‌குதியில் பிஜேபிக்கு க‌ணிச‌மான‌ ஓட்டு உண்டு. எது எப்ப‌டியிருந்தாலும் க‌டைசி இர‌ண்டு நாட்க‌ள் ந‌ட‌த்தும் வாக்கு சேக‌ரிப்பு தான் எங்க‌ள் தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும்..

அப்ப‌டி என்ன‌தான் ப‌ண்ணுவார்க‌ள்?.. யாரெல்லாம் வெளியூரில் இருக்கிறார்க‌ள்? என்ப‌த‌ன் க‌ண‌க்கெடுப்பு ஒன்று.

ஊரில் இருந்தும் ஓட்டு போட‌ பூத்திற்கு வ‌ராத‌வ‌ர்க‌ளின் க‌ண‌க்கெடுப்பு ம‌ற்றொன்று..

இந்த‌ க‌ண‌க்கெடுப்பு ப‌ட்டிய‌ல் போட‌ ஒவ்வொரு க‌ட்சிக்கும் ஒரு குழுவே இருக்கும். கார‌ண‌ம் வெளியூர்க‌ளிலும், வெளிநாடுக‌ளும் இருப்ப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை இங்கு அதிக‌ம். இறுதியாக‌ ப‌ட்டிய‌லில் வ‌ரைவு அந்த‌ந்த‌ க‌ட்சி பெருசு‌க‌ளின் கைளுக்கு சென்றுவிடும்.

அப்புற‌ம் என்ன‌!!!!!!! எந்த‌ பூத்தில் எந்த‌ க‌ட்சியின் கை ஓங்கி இருக்கிற‌தோ அங்கே அந்த‌ ப‌ட்டிய‌லில் உள்ள‌வ‌ர்க‌ளின் ஓட்டுக‌ளை போட‌ வேண்டிய‌துதான்..

இப்ப‌ எங்க‌ தொகுதியில‌ எந்த‌ க‌ட்சி ஜெயிக்க‌ போவுதுனு என‌க்கு புரியுது.. உங்க‌ளுக்கு புரியுதா?....... :)

13 comments:

Chitra said...

அப்புற‌ம் என்ன‌!!!!!!! எந்த‌ பூத்தில் எந்த‌ க‌ட்சியின் கை ஓங்கி இருக்கிற‌தோ அங்கே அந்த‌ ப‌ட்டிய‌லில் உள்ள‌வ‌ர்க‌ளின் ஓட்டுக‌ளை போட‌ வேண்டிய‌துதான்..


....
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், இப்படியா? :-(

எண்ணங்கள் 13189034291840215795 said...

இறுதியாக‌ ப‌ட்டிய‌லில் வ‌ரைவு அந்த‌ந்த‌ க‌ட்சி பெருசு‌க‌ளின் கைளுக்கு சென்றுவிடும்.//

பப்ளிக்.. பப்ளிக்.. சரி என்னிக்காவது நமக்கும் உபயோகமா இருக்கும்ல..

இப்படி ஒரு தேர்தலை மக்கள் வரிப்பணத்தில் செலவழிச்சு நடத்தாமலேயே இருக்கலாம்தான்..:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

செழிக்க‌ட்டும்‌!!!! ஊழ‌ல்‌ அர‌சிய‌ல்...

வ‌ள‌ர‌ட்டும்‌!!!! இல‌வ‌ச‌ங்க‌ள்...//

அதே.. இப்பதான் சீமான் விளக்கம் பார்த்தேன்..

http://www.youtube.com/watch?v=EpXhnrqPXSs&feature=related

Jayadev Das said...

நாம் எல்லோருமே ஒரு தப்புக் கணக்கு போடுகிறோம். அது, அரசியல் வாதிதான் எல்லாத்துக்கும் காரணம் என்று. உண்மை அது அல்ல. இப்போ கருணாநிதியைக் காப்பியடித்து, காங்கிரஸ் குஜராத் தேர்தல்களில் இலவசமாக எது எதையோ தரோம் என்று சொல்லிப் பார்த்தார்கள். அந்த மக்கள் உன் இலவசத்தை நீயே வச்சுகோன்னு சொல்லிட்டு, இலவசமா மின்சாரம் தர மாட்டேன்னு ஆனா தடையில்லா மின்சாரம் உறுதி என்று சொன்ன மோடிக்கு வாக்களித்தார்கள். பக்கத்து மாநிலம் கேரளத்தில் எந்த சினிமாக்காரனும் அரசியலில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முடியாது. அவங்களுக்குத் தெரியும், நிழல் நிஜமாகாதுன்னு. இங்கெல்லாம் ஆட்சி நாம் மாநில அளவுக்கு மோசமில்லை. இம்மாநிலங்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? அங்க மக்கள் விவரமானவங்க, தமிழன் இளிச்சவாயன், ஈசியா தலையில் மிளகாய் அரைக்க முடியும். பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்குதல், ஆட்சிக்கு வந்தால் இலவசம் தரப் போகிறேன் என்பது போன்றவை குழந்தைகளிடம் சாக்கலேட் தருகிறேன் உன் நகையைக் கொடு என்று நயவஞ்சகமாகப் பிடுங்கி கொண்டு ஓடும் திருடன் செய்யும் வேலை. அதை பார்த்து ஏமாந்து போகும் அப்பாவி மக்களாகத்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள், இங்கு காமராஜரைப் போல நல்ல மனது கொண்ட ஒருத்தர் முதல்வராக வந்தால் நாடு தப்பிக்கும், இன்றைய நிலையில் அப்பாடி யாரும் இருப்பதாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை, எனவே நாம் திரும்பத் திரும்ப திருடர்கள் கையிலேயே மாட்டி சின்னாபின்னமாகப் போகிறோம், பிழைக்க வழியே இல்லை. இலவசங்கள் தொடரும், சாரயக் கடைகளும் தொடரும், பெண்களின் தாலிகள் அறுக்கப் படும், மாநிலத்தின் கடன் இன்னும் பல லட்சம் கோடிகளாக உயரும், மாநில முதல்வர் பிள்ளைகள் பேரன்கள் ஒவ்வொருவரும் 1000 கோடி மதிப்புள்ள நிருவனகளில் அதிபர்களாக இருப்பார்கள், ஆனால் மக்கள்.....???????? ஐயோ பாவம்....

சிநேகிதன் அக்பர் said...

இப்படி போகுதா கதை. :)

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு ஸ்டீபன். கவலையே வேண்டாம்.. ஊழல் மென்மேலும் செழித்து வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.

vanathy said...

good post.

simariba said...

தலைய சுத்துது! பதிவு நல்லாயிருக்கு!

r.v.saravanan said...

நல்ல பதிவு ஸ்டீபன்

இப்ப‌ எங்க‌ தொகுதியில‌ எந்த‌ க‌ட்சி ஜெயிக்க‌ போவுதுனு என‌க்கு புரியுது.. உங்க‌ளுக்கு புரியுதா

புரியுது ஸ்டீபன்

நாடோடி said...

@Chitra said...
//அப்புற‌ம் என்ன‌!!!!!!! எந்த‌ பூத்தில் எந்த‌ க‌ட்சியின் கை ஓங்கி இருக்கிற‌தோ அங்கே அந்த‌ ப‌ட்டிய‌லில் உள்ள‌வ‌ர்க‌ளின் ஓட்டுக‌ளை போட‌ வேண்டிய‌துதான்..


....
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், இப்படியா? :-( //

வாங்க‌ சித்ரா ச‌கோ....இந்த‌ அட்டையெல்லாம் ந‌ம்முடைய‌ ம‌க்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்திவிடுமா?.. :)

@எண்ணங்கள் 13189034291840215795 said...
இறுதியாக‌ ப‌ட்டிய‌லில் வ‌ரைவு அந்த‌ந்த‌ க‌ட்சி பெருசு‌க‌ளின் கைளுக்கு சென்றுவிடும்.//

பப்ளிக்.. பப்ளிக்.. சரி என்னிக்காவது நமக்கும் உபயோகமா இருக்கும்ல..

இப்படி ஒரு தேர்தலை மக்கள் வரிப்பணத்தில் செலவழிச்சு நடத்தாமலேயே இருக்கலாம்தான்..:) //

வாங்க‌ அக்கா... இப்ப‌டி ந‌ட‌த்த‌லைனா?.. உல‌க‌ அர‌ங்கில் ம‌க்காளாட்சி என்று பிலிம் காட்டுவ‌து எப்ப‌டி?.... :)

@Jayadev Das said...

வாங்க‌ ஜெய‌தேவ் தாஸ்.. உங்க‌ளின் நீள‌மான‌ க‌ருத்துரைக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

@சிநேகிதன் அக்பர் said...
//இப்படி போகுதா கதை. :) //

வாங்க‌ அக்ப‌ர்... இப்ப‌டித்தான் போகும் இந்த‌ கதை.. :)

@செ.சரவணக்குமார் said...
//நல்ல பதிவு ஸ்டீபன். கவலையே வேண்டாம்.. ஊழல் மென்மேலும் செழித்து வளர்ந்துகொண்டேதான் இருக்கும். //

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@vanathy said...
//good post. //

வாங்க‌ ச‌கோ.. க‌ருத்துரைக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

@simariba said...
//தலைய சுத்துது! பதிவு நல்லாயிருக்கு! //

வாங்க‌ ச‌கோ.. இதுக்கே த‌லைச்சுத்தினா எப்ப‌டி.. :)

@r.v.saravanan said...
நல்ல பதிவு ஸ்டீபன்

இப்ப‌ எங்க‌ தொகுதியில‌ எந்த‌ க‌ட்சி ஜெயிக்க‌ போவுதுனு என‌க்கு புரியுது.. உங்க‌ளுக்கு புரியுதா

புரியுது ஸ்டீபன் ///

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. உங்க‌ளுக்கும் புரிஞ்சி போச்சா?... :)

Asiya Omar said...

எனக்கும் புரிஞ்சி போச்சு..நடக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது...

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே ஆஸ்டின்....???

Related Posts with Thumbnails