நான் இன்னைக்கு ரூம்க்கு வரலைடா.. குமார் ரூமுக்கு போறேன்.
ஏண்டா, என்னாச்சி..
இல்லடா... வீட்ல இருந்து போன் வந்திச்சி. அப்பா ரெண்டு நாளா வீட்ல சாப்பிடலையாம், எனக்கு மனசு கஷ்டமா இருக்குடா.. தண்ணி அடிச்சே ஆகனும். குமார் ரூம்ல தான் இன்னைக்கு பாட்டில் இருக்கும்...
அப்பா ஏண்டா வீட்ல சாப்பிடலை? ஏதும் பிரச்சனையா? என்ன ஆச்சி?..
நாம இரண்டு பேரும் சென்னையில இருக்கும் போது உன்னிடம் சொல்லியிருக்கிறேனானு தெரியல.. எனக்கு அம்மா வழியில் உள்ள ஒண்ணுவிட்ட மாமா ஒருத்தர் சென்னை நெசபாக்கத்தில் குடும்பத்துடன் இருந்தார். அவருக்கு இரண்டு பொண்ணுங்க. இரண்டு பொண்ணுங்களுக்கும் விவரம் தெரியிறதுக்கு முன்பே ஒரு விபத்துல மாமி இறந்திட்டாங்க. அதுக்க அப்புறம் மாமா வேற கல்யாணம் ஏதும் பண்ணல. மாமாவின் இரண்டு பொண்ணுங்களும் படிச்சிட்டு இருந்தது. நான் கூட ஒரு நாளு அவங்க வீட்டுக்கு போயிருக்கிறேன்..
சரிடா. அதுக்கும் உங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?...
போன வாரம் வீட்டுக்கு போன் பேசினேன். ஸ்கூல் லீவா இருக்கிறதால அண்ணனும் ஊர்ல தான் இருக்கிறான். எலக்சன் டூட்டி, பரிட்சை பேப்பர் திருத்துறதுனு, வேலை எல்லாம் முடிச்சிட்டு இரண்டு வாரம் முன்னாடி தான் ஊருக்கு வந்திருக்கிறான். அன்றைக்கு, அவன் தான் போனில் என்னிடம் மாமா வீட்டு பிரச்சனை பற்றி சொன்னான். மாமாவின் மூத்த பொண்ணு கூட வேலை பார்த்த பையனுடன் வீட்டை விட்டு ஓடி போயிவிட்டாராம். ஓடிப் போனவர் சும்மா போகவில்லை, இளைய பொண்ணுக்கு மாமா செய்து வைத்திருந்த சில நகைகளையும் எடுத்திட்டு போயிட்டாராம். இந்த விசயத்தால் மாமா ரெம்ப மனசு ஒடிஞ்சி போயிட்டாராம். அதனால சென்னையில் இருந்த, தன்னோட சின்ன பொண்ணை கூட்டிட்டு ஊருக்கு வந்திருக்கிறார்.
சரி.. அப்புறம் என்ன ஆச்சி..
ஊருக்கு வந்தவர் எப்படியும் எங்க வீட்டுக்கு வருவாரு என்பதால், அண்ணனும், அம்மாவும் அப்பாவிடம் மாமாவின் பொண்ணு விசயத்தை பற்றி விவரமா சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் அவரிடம் ஓடிப்போன மூத்த பொண்ணு பற்றியே கேட்பதால் ரெம்ப மன கஷ்டத்தில் இருப்பார் என்பதால் அதை பற்றி எதுவும் திரும்பவும் மாமாவிடம் கேட்க வேண்டாமுனு சொல்லிருக்கிறார்கள். அப்பாவும் இருவரும் சொல்லும் போது "அதுவும் சரிதான், நான் ஏதும் கேட்க மாட்டேனு " தலையை ஆட்டியிருக்கிறாரு.
நேத்தைக்கு காலையில சின்ன பொண்ணுடன் வீட்டுக்கு வந்த மாமாவிடம், அப்பா; என்ன மனோகரா, மூத்த பொண்ணை கூட்டிட்டு வரலியா?.. என்று மாமாவை நெளிய வைத்திருக்கிறார். அவரும் பொண்ணுக்கு ஆபிசில் லீவு கிடைக்கவில்லை, பரிட்சை இருக்கு அப்படினு சொல்லி சமாளிச்சிட்டு கிளம்பிட்டார். அப்புறம் தான் வீட்டில் பூகம்பம் கிளம்பியிருக்கிறது.
நாங்க அவ்வளவு சொல்லியிருக்கிறோன், அவரு வந்தா.. பொண்ணு பற்றி ஏதும் கேட்க வேண்டானு, எல்லாத்துக்கும் சரினு தலையை ஆட்டிட்டு, "முதல் கேள்வியே உங்களுக்கு அதான் கிடைச்சுதானு" அண்ணனும், அம்மாவும் கேள்வி கணையை தொடுக்க...
அப்படினா, எனக்கு வயசாகி போச்சு, எனக்கு பேச தெரியாது, உங்களுக்கு தான் எல்லாம் பேச தெரியுமுனு அப்பா எதிர் கணையை தொடுக்க..
அப்படி இல்லைங்க.. நம்ம பையன் தான் அவ்வளவு சொன்னான் இல்லையா?.. அப்புறம் எதுக்கு அவரிடம் திரும்ப கேட்டீங்கனு.. அம்மா கேட்டிருக்காங்க..
"புள்ளைங்க பேச்சுதான் உனக்கு பெருசா போச்சானு" அப்பா கேட்க, சண்டை வேற மாதிரி திரும்பிடுச்சு....
இப்படி ஆரம்பிச்ச சண்டையால் தான்.. அப்பா, வீட்ல இரண்டு நாளா சாப்பிடலை...
எனக்கு காலையில இருந்து வேலையே ஓடலடா... நான் குமார் ரூமுக்கு போறேன்.
சரி போயிட்டு வா!!.. ராத்திரி சாப்பிட ரூமுக்கு வந்திருடா..
சரிடா... தூங்க வந்திடுறேன்..
"யாரோ ஒருத்தரோட பொண்ணு, யாரோ ஒருவருடன் ஓடிவிட்டாராம், அதுக்கு எங்க வீட்ல எதுக்குடா சண்டை போடனும்?, சாப்பிடாம இருக்கனும்" என்று, இரவு பதினொரு மணிக்கு தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி, அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு, பதினாறாவது முறையாக கேட்டும் நண்பனை பார்த்து, நான் என்ன சொல்வது?.... நீங்களே சொல்லுங்க!!!...
.
.
.
Monday, May 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
பிறர் கஷ்டத்தை பார்த்து சந்தோசம் அடைவது மிக பெரிய தவறு. அதே நேரத்தில் நமக்கு நாமே பிரச்சினைகளை உருவாக்கி கொள்ளவும் கூடாது.
யாருக்குக்காகவோ நாமேன் சண்டை போட வேண்டும்
@இளம் தூயவன் said...
//பிறர் கஷ்டத்தை பார்த்து சந்தோசம் அடைவது மிக பெரிய தவறு. அதே நேரத்தில் நமக்கு நாமே பிரச்சினைகளை உருவாக்கி கொள்ளவும் கூடாது. //
வாங்க இளம் தூயவன்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.. ஆனா எனக்கு புரியல.. :))))
@தமிழ் உதயம் said...
//யாருக்குக்காகவோ நாமேன் சண்டை போட வேண்டும்//
வாங்க தமிழ் உதயம் சார்.. என் நண்பனும் அதே தான் என்னிடம் கேட்கிறான்.. :))
உங்கள் வலைப்பூவில் நாங்கள் போடும் கமன்ட்களை படிக்க சொல்லுங்க. பிறகு தெளிவாயிடுவார்.
இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் நடப்பவை தானே. வீட்டு சாப்பாட்டு மேலை எதுக்கு கோபப்படணும்.
சரியாகச் சொல்லனும்னா...
வயசானவங்களுக்கு சண்டை போட காரணம் வேனும்
இளவட்டப் பயலுக்கு தண்ணிபோட காரணம் வேனும்
இது இல்லாட்டி வேற ஒரு காரணம் கிடைச்சி இருக்கும்
அவ்வளவுதான்...இதுக்குப்போய்...
நல்ல நடை,நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அவருக்கு தூக்கம் வரலை..ஊர் கதை பேசணும்..
நீங்க எப்படி தூங்கலாம்?..
நீங்களும் உங்க ஊர்ல நடந்த அரத பழசான கதையை எடுத்து விட்டிருந்தா பாதிலேயே தூங்கிருப்பாரே...
இருந்தாலும் சாப்பிடாம சண்டைலாம் போடக்கூடாது..
நல்லா சாப்பிட்டு தெம்பா போட்டிருக்கலாம்..
@vanathy said...
//உங்கள் வலைப்பூவில் நாங்கள் போடும் கமன்ட்களை படிக்க சொல்லுங்க. பிறகு தெளிவாயிடுவார்.
இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் நடப்பவை தானே. வீட்டு சாப்பாட்டு மேலை எதுக்கு கோபப்படணும். //
வாங்க சகோ.. அதுக்கென்ன படிக்க சொல்லிடுவோம்..
@Ramani said...
//சரியாகச் சொல்லனும்னா...
வயசானவங்களுக்கு சண்டை போட காரணம் வேனும்
இளவட்டப் பயலுக்கு தண்ணிபோட காரணம் வேனும்
இது இல்லாட்டி வேற ஒரு காரணம் கிடைச்சி இருக்கும்
அவ்வளவுதான்...இதுக்குப்போய்...
நல்ல நடை,நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் //
வாங்க ரமணி சார்.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, வயதாகி விட்டால் சண்டை போட காரணம் தேடுகிறார்கள்.. இளசுகளுக்கு தண்ணியடிக்க சொல்லவே வேண்டாம்.. :)))))
@எண்ணங்கள் 13189034291840215795 said...
//அவருக்கு தூக்கம் வரலை..ஊர் கதை பேசணும்..
நீங்க எப்படி தூங்கலாம்?..
நீங்களும் உங்க ஊர்ல நடந்த அரத பழசான கதையை எடுத்து விட்டிருந்தா பாதிலேயே தூங்கிருப்பாரே... //
ஆமா அக்கா..
பிரச்சனைக்குரிய இரண்டு வீட்டிலும் நல்லா தூங்கியிருப்பாங்க.. ஆனா நம்ம ஆளு என் தூக்கத்தை கெடுத்திட்டான்... :)
@எண்ணங்கள் 13189034291840215795 said...
//இருந்தாலும் சாப்பிடாம சண்டைலாம் போடக்கூடாது..
நல்லா சாப்பிட்டு தெம்பா போட்டிருக்கலாம்.. //
அதுவும் சரிதான்..
"யாரோ ஒருத்தரோட பொண்ணு, யாரோ ஒருவருடன் ஓடிவிட்டாராம், அதுக்கு எங்க வீட்ல எதுக்குடா சண்டை போடனும்?, சாப்பிடாம இருக்கனும், athuku ni en da thani adikanum ... ph pani appa ku samathanam panu " .......
Post a Comment