Tuesday, May 31, 2011

இர‌ண்டு பாக்கெட் கொடு!!!

சுத்த‌மான‌ த‌ண்ணி எங்கும் கிடைக்காது, கார்ப்ப‌ரேச‌ன் த‌ண்ணியை தான் எல்லா இட‌மும் வைச்சிருப்பானுங்க‌. அத‌னால‌ ப‌ச‌ங்க‌ளுக்கு வெளியில் இருந்து த‌ண்ணி வாங்கி குடிக்க‌ கொடுக்க‌ முடியாது, ரெண்டு பாட்டில‌ த‌ண்ணி நிர‌ப்பி ஹேண்ட் பேக்குல‌ போட்டுக்க‌.

ச‌ரிங்க‌..

உன‌க்கு ஒவ்வொரு வாட்டியும் சொல்ல‌னுமா?.. ப‌ச‌ங்க‌ளை வெளியில‌ கூட்டி போகும் போதும் அவ‌ங்க‌ முக‌த்தை கைக்குட்டையால‌ க‌ட்ட‌‌ சொல்லியிருக்கேனா, இல்லையா?.. ரோட்டுல‌ ம‌னுச‌ன் ந‌ட‌க்க‌ முடிய‌லை. வ‌ண்டி எல்லாம் புழுதியையும், புகையையும் ந‌ம்ம‌ மேல‌ தான் கொட்டிட்டு போவான். என்னைக்கு தான் இந்த‌ ஹ‌வ‌ர்மெண்ட் திருந்த‌ போகுதோ...

ஹெண்ட்பேக்ல‌ தான் வ‌ச்சிருக்கிறேன், இதோ க‌ட்டிவிட்டுறேன்..

ம்ம்ம்..

ஏங்க‌ வீட்ல‌ நீங்க‌ வாங்கி வ‌ந்த‌ ப‌ழ‌ம் எல்லாம் தீர்ந்து போச்சு, இதோ ப‌ழ‌ வ‌ண்டி வ‌ருது, இரு ரெண்டு கிலோ வாங்கி வைச்சுக‌லாமா?..

உன‌க்கு அறிவே கிடையாதா?.. இந்த‌ ப‌ழ‌ங்க‌ள் எல்லாம் க‌ல்லு போட்டு ப‌ழுக்க‌ வைச்சுருப்பானுங்க‌. க‌ல‌ருதான் சூப்ப‌ரா இருக்கும்.. வாங்கி சாப்பிட்டா வாந்தி தான் வ‌ரும்...

அம்மா என‌க்கு ஜ‌ஸ்கிரீம் வேணும்?..

டேய்..... என்னிட‌ம் கேட்காத‌, முன்னாடி போற‌ உங்க‌ அப்பாகிட்ட‌ போய் கேளு.. நான் அவ‌ர்கிட்ட‌ கேட்டு, வாங்கி க‌ட்டிக்கிட்ட‌து போதும்.. போ.. போய் நீயே கேளு!!!..

அப்பா... அப்பா.. இங்க‌ பாருங்க‌ ஐஸ்கிரீம் க‌டை இருக்கு, அதுல‌ இருந்து என‌க்கு ஒரு வெண்ணிலா ஐஸ்கிரீம் வாங்கி தாங்க‌..

என் செல்ல‌ குட்டியில்லா.. சூச் சூசூ.. ஐஸ்கிரீம் சாப்பிட்டா ஜ‌ல‌தோச‌ம் வ‌ரும், இரும‌ல் வ‌ரும், காய்ச்ச‌ல் வ‌ரும், அப்புற‌ம் டாக்ட‌ர் கிட்ட‌ போக‌னும், உங்க‌ளுக்கு பெரிய‌ ஊசி போட‌னும், அத‌னால‌ இப்ப‌ வேண்டாண்டா க‌ண்ணு.. போ.. போய் அம்மாகிட்ட‌ பிஸ்க‌ட் வாங்கி சாப்பிடு..

அம்மா என‌க்கு பிஸ்க‌ட் வேண்டாம், எல்லாத்தையும் த‌ம்பிக்கு கொடுங்க‌.. என‌க்கு சாக்லெட் வாங்கி தாருங்க‌..

ஏங்க‌.. உங்க‌ பொண்ணுக்கு சாக்லெட் தான் வேணுமாம், பிஸ்க‌ட் வேண்டாமாம்..

புஷ்சு இங்க‌ வாட‌ செல்ல‌ம்.. இங்க‌ பாருடா!!! சாக்லெட் சாப்பிட்ட‌ ப‌ல்லெல்லாம் சொத்தை ஆயிடும். அப்புற‌ம் அதுல‌ பூச்சி எல்லாம் வ‌ரும். அது ரெம்ப‌ வ‌லிக்கும்டா.. அத‌னால‌ இன்னைக்கு சாக்லெட் வேண்டாம். போம்மா போய் அம்மா கிட்ட‌ போய் பிஸ்க‌ட் வாங்கி ச‌ம‌த்த‌ சாப்பிடு..

ஏங்க‌ இந்த‌ ப‌ஸ் ஸ்டாப்புல‌ தானே, நாம‌ ப‌ஸ் ஏற‌னும்?...

ஆமா.. இங்க‌ தான் ஏற‌னும்.. அதோ பாரு.. அந்த‌ செய‌ர் காலியா தான் இருக்கு.. இர‌ண்டு பேரையும் கூட்டிட்டு போய் அதுல‌ உக்காரு.. நான் அந்த‌ பெட்டிக‌டைக்கு போயிட்டு வ‌ந்திடுறேன்.

ச‌ரிங்க‌..

------- X -------- X ------- X -------- X --------

வாங்க‌ சார், என்ன‌ இன்னைக்கு, குடும்ப‌தோட‌ வெளியில‌ கிள‌ம்பிட்டீங்க‌ போல‌...

ஆமா காளி.. வெளியில‌ கொஞ்ச‌ம் ஷாப்பிங்‌ இருக்கு..

கோல்ட் பிளாக் பில்ட‌ர் ஒரு பாக்கெட் போதுமா சார்?..

இல்ல‌ காளி.. நான் வ‌ர்ற‌துக்கு ஈவ்னிங் ஆயிரும் போல‌.. அத‌னால் ரெண்டு பாக்கெட்டா கொடுத்துடு, போற‌ இட‌த்துல‌ இந்த‌ பிராண்டு இல்ல‌, சிச‌ர்ஸ் இருக்கு, வில்ஸ் இருக்குனு க‌டுப்பேத்துவானுங்க‌.. உன‌க்கு தான் தெரியுமே, இந்த‌ பிராண்டை த‌விர‌ வேறுயேதும் ந‌ம‌க்கு ஒத்துக்காதுனு......

தெரியும் சார்..

------- X -------- X ------- X -------- X -------- X ------- X -------- X -------- X -------



இன்று உல‌க‌ புகையிலை எதிர்ப்பு நாள்

புகையிலையால் ஏற்ப‌டும் தீமைக‌ளை நாமும் அறிவோம்!!!!!!..

ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் அறிய‌ த‌ருவோம்!!!!!..


.

.

.

13 comments:

r.v.saravanan said...

present steban

r.v.saravanan said...

சமுதாய விழிப்புணர்வை தரும் பதிவு ஸ்டீபன்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

குழந்தைகளிடம் நாம் சொல்லும் அறிவுரையை விட நம் நடத்தை தான் அதிக பலன் தரும் அந்த அப்பாவிடம் என் சார்பா சொல்லிடுங்க ஸ்டீபன்

சிநேகிதன் அக்பர் said...

நல்ல அர்த்தமுள்ள கதை ஸ்டீபன்.

சின்ன குழந்தைகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாம், நம் தவறுகளை உணர்வதில்லை. இதுதான் இன்றைய சமூகத்தின் நிலை

போக புகை பிடிக்காதீர்கள் என சொல்வதை விட அதை தயாரிக்கும் கம்பெனிகளை மூடிவிடுவது நல்லது.

angel said...

really nice post n gud too

erodethangadurai said...

விழிப்புணர்வை தரும் பதிவு ..!


நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !


http://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html

தூயவனின் அடிமை said...

நல்ல அருமையான கதை. புகைப்பவர்களுக்கு புரிந்தால் சரி.

தூயவனின் அடிமை said...
This comment has been removed by the author.
Asiya Omar said...

சகோ,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்.

நாடோடி said...

@r.v.saravanan said...
//present steban //

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்..

@r.v.saravanan said...
//சமுதாய விழிப்புணர்வை தரும் பதிவு ஸ்டீபன் //

ரெம்ப‌ ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌ன்..

@நாய்க்குட்டி மனசு said...
//குழந்தைகளிடம் நாம் சொல்லும் அறிவுரையை விட நம் நடத்தை தான் அதிக பலன் தரும் அந்த அப்பாவிடம் என் சார்பா சொல்லிடுங்க ஸ்டீபன் //

உங்க‌ க‌ண்ணுலேயும் அந்த‌ அப்பா ப‌ட‌லாம் நீங்க‌ளும் சொல்லிடுங்க‌... :))))))

@சிநேகிதன் அக்பர் said...
//நல்ல அர்த்தமுள்ள கதை ஸ்டீபன்.

சின்ன குழந்தைகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாம், நம் தவறுகளை உணர்வதில்லை. இதுதான் இன்றைய சமூகத்தின் நிலை

போக புகை பிடிக்காதீர்கள் என சொல்வதை விட அதை தயாரிக்கும் கம்பெனிகளை மூடிவிடுவது நல்லது. //

வாங்க‌ அக்ப‌ர்.. நீங்க‌ள் சொல்வ‌து அர‌சாங்க‌த்திற்கு புரிந்தால் ச‌ரி.. :)

@angel said...
//really nice post n gud too //

வாங்க‌ ஏஞ்ச‌ல்...

ஸ்கூல் லீவு விட்டாச்சா?.. :))

@ஈரோடு தங்கதுரை said...
//விழிப்புணர்வை தரும் பதிவு ..!


நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !


http://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html //

வாங்க‌ த‌ங்க‌துரை.. க‌ண்டிப்பா ப‌டிக்கிறேன்..

@இளம் தூயவன் said...
//நல்ல அருமையான கதை. புகைப்பவர்களுக்கு புரிந்தால் சரி. //

வாங்க‌ இள‌ம் தூய‌வ‌ன்.. நாம் சொல்லுவ‌தை சொல்லுவோம்.. :))

நாடோடி said...

@asiya omar said...
//சகோ,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன். //

வாங்க‌ ச‌கோ.. ரெம்ப‌ ந‌ல‌ம்.. பொறுமையா வாங்க‌..

ஹுஸைனம்மா said...

வித்தியாசமான விழிப்புணர்வு கதை. யதார்த்தமும் கூட. புகைப்பவர்கள், மற்றவர்களின் நலனில் காட்டும் அகறையை, தன்னலனில் காட்டவேண்டும் என உணர்த்தும் கதை.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு

Related Posts with Thumbnails