Wednesday, September 14, 2011

கூடங்குளம்_மக்களின் போரட்டம்!!!

நான் படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் எங்கள் மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவை கீழ்க்கண்ட முன்று திட்டங்கள்.

# கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்.

# கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய போகும் ரப்பர் தொழிற்ச்சாலை.

# குளச்சல் துறைமுகம்.

சில ஓட்டு கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் அள்ளிவீசிய வாக்குறுதிகளில் இவைகளும் அடங்கும்.

இவைகளின் மூலம் எங்கள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருக போகிறது. அதனால் தொழிற்நூட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளை குறிவைத்து படித்த மாணவர்கள் அதிகம். அதில் நானும் ஒருவன்.. :))

இந்த கால கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் அதிக அளவில் பாலிடெக்னிகள் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போதும் வேறு மாவட்டங்களை கணக்கிடும் போதும் எங்கள் மாவட்டத்தில் இவைகளின் எண்ணிக்கை அதிகம் தான். திரும்பிய திசையெங்கும் கல்லூரிகள்.

படித்து முடித்தவுடன் அனைவரும் செய்யும் முதல் காரியம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. காரணம் மேலே சொன்ன திட்டங்கள் நிறைவேறினால் வேலை நிச்சயம் என்பது அனைவரின் எண்ணம். நானும் பதிந்து வைத்திருக்கிறேன். ஆறு வருடம் தவறாமல் புதுப்பிக்கவும் செய்தேன்.அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை மற்றும் பொறுமையில்லை அப்படியே கிடப்பில் இருக்கிறது.

மேலே கூறிய மூன்று திட்டங்களில் நடைமுறைக்கு வந்தது கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் மட்டும் தான். மற்றவை என்ன ஆனது? என்று அந்த அரசியல் ஆண்டவருக்கே வெளிச்சம். இத்திட்டத்திற்கு கையெழுத்து போடப்பட்ட ஆண்டு 1988. ஒரு சில காரணங்களால் பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்பு 2001 ஆம் ஆண்டில் இருந்து மிக துரிதமாக வேலைகள் ஆரம்பிக்கபட்டது.

இது ஆரம்பிக்க பட்ட காலத்தில் ஊடகங்களின் தாக்கமும், தகவல் பரிமாற்றங்கள் அதிகமாக இல்லாததால் மக்களுக்கு இந்த அணுமின் உலையை பற்றிய தகவல்களும், விழிப்புணர்வுகளும் அதிகம் இல்லை. அரசியல்வாதிகளும் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லத் தவறிவிட்டார்கள். அதற்கு பதிலாக அணு உலையின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடக்கும் போதே, ஆரம்பித்தவுடன் அனைவருக்கும் வேலை என்று மட்டும் சொல்லி ஓட்டுகளாக மாற்றினர். இன்னும் சிலர் முன்பணம் கொடுங்கள் உடனே வேலைவாங்கி தருகிறேன் என்று கல்லா கட்டினார்கள்.

ஆனால் இத்திட்டம் முழுமையடைந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள எவருக்கும் பணிகள் வழங்கப்படவில்லை. ஒரு சில இயக்கங்களில் போராட்டங்களுக்கு பிறகு சிலரை ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்தார்கள். அவர்களையும் முழுமையாக பணியில் வைத்துக்கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவரும் இந்த காலகட்டங்களில் நம்முடைய அரசு மட்டும் மீண்டும் மீண்டும் புதிய அணு உலைகளை நிறுவுகிறது. இந்த கூடங்குளம் அணு உலையிலும் இந்த வருடம் புதிய 4 ரியாக்டர்கள் (Reactors) நிறுவப்படுகிறது. இதில் இவர்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.“வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட இந்த பூமியில் மனித உயிர்களும், இதர உயிரினங்களும் முக்கியம் அல்லவா?”

இது தான் ”தூக்கம் கெடுத்து கட்டில் வாங்குவதோ?..”

இந்த கூடங்குளம் குறித்து அதிகம் கவலைப்பட மேலும் ஒரு வலுவான காரணம் உண்டும். இது சுற்றிலும் கடலால் சூழப்பட்ட பகுதி. சுனாமி போன்ற பேரலைகள் பயம் காட்டும் இந்த காலக்கட்டதில் இந்த அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே!!!!!!!!!!...

இந்த அழிவுகள் எல்லாம் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். பலர் சாகும் வரை உண்ணாவிரதமும் இருக்கிறார்கள். இவர்களின் அறப்போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நம்முடைய சில பதிவர்களும் இதில் கலந்துள்ளார்கள் அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். இந்த பதிவில் பதிவர் கூடல் பாலா அவர்கள் எழுதிய போரட்டம் பற்றிய சுட்டியும் இணைத்துள்ளேன். முடிந்தவரை இந்த போரட்டத்தை பற்றி பலரிடம் கொண்டு சேர்க்க நண்பர்களை வேண்டுகிறேன்.

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

நன்றி: பதிவர் கூடல்பாலா.

16 comments:

நாடோடி said...

தமிழ் மணத்தில் என்னால் இணைக்க முடியவில்லை நண்பர்கள் யாராவது இணைத்தால் நன்று..

தமிழ் உதயம் said...

தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன். கண்களை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன். கூடங்குளம் மக்களின் போராட்டத்தை ஊடகங்கள் கூட எழுதவில்லையே.

நாடோடி said...

ரெம்ப நன்றி தமிழ்.

நமது ஊடகங்களை பற்றி உங்களுக்கு தெரியாதா?... இதைவிட் பெரிய பெரிய கலைச்சேவைகள் நாட்டுக்கு தேவை. அவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள்..

ஹுஸைனம்மா said...

கூடங்குளம் தொடர்பான செய்திகள் அதிகம் இணைய ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப் படவில்லையோ எனச் சந்தேகம் வருகிறது.

ஒரு அணு உலை முழுதாகக் கட்டிமுடிக்கப்பட்டு, செயல்படத் துவங்கும்வரை என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும். சமீபத்திய ஜப்பான் விபத்தே எழுச்சிக்குக் காரணமாக இருக்கும். எப்படியோ, காலதாமதமானாலும், அவசியமான போராட்டம்.

இவ்வாரம், ஃபிரான்ஸ் நாட்டு அணு உலையொன்று வெடித்து இன்னொரு விபத்து. பாதுகாப்பு ஏர்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படும் நாடுகளிலேயே இக்கதி என்றால்....

நாடோடி said...

@ஹுஸைனம்மா said...
//கூடங்குளம் தொடர்பான செய்திகள் அதிகம் இணைய ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப் படவில்லையோ எனச் சந்தேகம் வருகிறது.//

மக்களின் போரட்டங்களை ஊடகங்கள் என்றைக்கும் முன்னெடுத்து செல்வதில்லை.. அது நமது சாபக்கேடு..

//ஒரு அணு உலை முழுதாகக் கட்டிமுடிக்கப்பட்டு, செயல்படத் துவங்கும்வரை என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும். சமீபத்திய ஜப்பான் விபத்தே எழுச்சிக்குக் காரணமாக இருக்கும். எப்படியோ, காலதாமதமானாலும், அவசியமான போராட்டம். //

உண்மைதான் சகோ..தொடக்கத்தில் இதை பற்றிய முழுமையான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

MANO நாஞ்சில் மனோ said...

போராட்டம் பற்றி அரசோ, ஊடகங்களோ, ஏன் பதிவர்கள் கூட கண்டு கொள்ளாதது அதிர்ச்சியாக இருக்கிறது....!!!???

MANO நாஞ்சில் மனோ said...

நான் என்னால் முடிந்தவரை பேஸ்புக், பஸ், டிவிட்டர், பிளாக்'கிலும் சொல்லி வருகிறேன் இதைப்பற்றி...

நாடோடி said...

@MANO நாஞ்சில் மனோ said...
//போராட்டம் பற்றி அரசோ, ஊடகங்களோ, ஏன் பதிவர்கள் கூட கண்டு கொள்ளாதது அதிர்ச்சியாக இருக்கிறது....!!!???//

மக்களின் போராட்டம் குறித்து யாருக்கும் கவலை இல்லை.

நாடோடி said...

@MANO நாஞ்சில் மனோ said...
//நான் என்னால் முடிந்தவரை பேஸ்புக், பஸ், டிவிட்டர், பிளாக்'கிலும் சொல்லி வருகிறேன் இதைப்பற்றி...//

நல்லது மனோ..

சத்ரியன் said...

ஸ்டீவன்,

நம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முழு மூச்சாக போராடி தடுக்க வேண்டிய தருணம் இது.

நம்மினம் இதற்கு பிறகும் தூங்கி வழியுமேயானால்... எதிர்வரும் நம்மின சந்ததிகள் ”போபால், ஹிரோஷிமா, நாகசாகி” - போன்ற இடங்களில் பிறக்கும் குழந்தைகள் போல் உடற்குறையுடன் தான் பிறக்கும்.

தமிழினம் மெல்ல அழியும்!

Anonymous said...

நண்பா சத்திரியன் ... தங்களின் பகிர்வை பார்த்தேன். தாங்கள் குறிப்பிட்ட போபால் , ஹிரோஷிமா , நாகசாகி போன்ற இடங்களுக்கும் கூடன்குளத்திர்க்கும் என்ன தொடர்பு ...? இந்தியாவில் இது வரை 20 அணு உலைகள் செயல் படுகின்றன. தாங்கள் அச்சப்பட்டது போல எங்காவது நடந்திருந்தால் கூறுங்களேன் ...? நன்றி

நாடோடி said...

@சத்ரியன் said...

//நம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முழு மூச்சாக போராடி தடுக்க வேண்டிய தருணம் இது.//

உண்மை தான் அண்ணா..

நாடோடி said...

@Anonymous said...
//நண்பா சத்திரியன் ... தங்களின் பகிர்வை பார்த்தேன். தாங்கள் குறிப்பிட்ட போபால் , ஹிரோஷிமா , நாகசாகி போன்ற இடங்களுக்கும் கூடன்குளத்திர்க்கும் என்ன தொடர்பு ...? இந்தியாவில் இது வரை 20 அணு உலைகள் செயல் படுகின்றன. தாங்கள் அச்சப்பட்டது போல எங்காவது நடந்திருந்தால் கூறுங்களேன் ...? நன்றி//

வாங்க நண்பரே..

நான் வரும் முன் காப்போம் என்பதை வெறும் காகிதத்தில் தான் எழுதுவோன் என்றால் என்ன செய்யமுடியும்?..

ஆபத்து வருவதற்கு முன்பு தடுப்பது நல்லது அல்லவா!!

r.v.saravanan said...

அனைத்தையும் விட உயிர் மிக முக்கியமானது அரசு அதை கவனத்தில் கொண்டு மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் ஸ்டீபன்அறப்போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

இந்த கூடங்குளம் குறித்து அதிகம் கவலைப்பட மேலும் ஒரு வலுவான காரணம் உண்டும். இது சுற்றிலும் கடலால் சூழப்பட்ட பகுதி. சுனாமி போன்ற பேரலைகள் பயம் காட்டும் இந்த காலக்கட்டதில் இந்த அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே!!!!!!!!!!...

நெஞ்சில் பயம் குடிகொண்டுவிட்டால் தூக்கம் ஏது?.... பாவம் இந்த மக்களின் கோரிக்கை நிறைவேற பிரார்த்திக்கின்றேன் .மிக்க நன்றி தங்களின் சமூக சிந்தனைகளுடன்கூடிய ஆக்கபூர்வமான பகிர்வுக்கு.
வாழ்த்துக்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றிபெற .

angel said...

“வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட இந்த பூமியில் மனித உயிர்களும், இதர உயிரினங்களும் முக்கியம் அல்லவா?”

இது தான் ”தூக்கம் கெடுத்து கட்டில் வாங்குவதோ?..”

niz

Related Posts with Thumbnails