Friday, February 28, 2014

பல்லிளிக்கும் தமிழ்மணம் ம‌குடம்!!!

நான் பெரும்பாலும் தமிழ் பதிவுகள் படிக்க வேண்டுமானால் முதலில் இணையத்தில் திறப்பது தமிழ் மணம் திரட்டியை தான். நண்பர்களுக்கும் பதிவுகள் படிப்பத‌ற்கு பரிந்துரை செய்வது இதைத் தான். தமிழ் மணம் திரட்டியில் திறந்தவுடன் முதலில் படிப்பது மகுடத்தில் இருக்கும் பதிவையும், வாசகர் பரிந்துரை பதிவுகளையும் தான். மகுடம் ஏறும் பதிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் எனக்கும் அவ்வப்போது எழாமல் இல்லை. அதைப்பற்றிப் பல பதிவர்கள் எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் தமிழ் மணத்தில் மகுடத்தில் இருக்கும் பதிவை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பதிவுக்கு ஓட்டு அளித்திருப்பவர்களின் பெயர்களைப் பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருந்தது. நீங்களும் அந்தப் பொன்னான ஓட்டு போட்டு மகுடத்தில் ஏற்றியவர்களை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.



பல பதிவர்கள் சொல்லியதை போல, எழுதியதை போல் தமிழ்மணம் ஓட்டு முறையில் மாற்றம் கொண்டு வருவது மிக முக்கியம். இல்லையென்றால் எவர் நினைத்தாலும் அவருடைய பதிவை மகுடத்தில் ஏற்றி பார்க்கலாம் அல்லது எளிதாக வாச‌கர் பரிந்துரையிலும் கொண்டு வரலாம்.

முன்பு தமிழ்மணம் பற்றி என்னுடைய எண்ணம் இதுவாகத் தான் இருந்தது ஒருவருக்குச் சுயமாக வலைத்தளம் இருந்து, அதில் தமிழ்மணபட்டையை நிறுவி பின்னர்த் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடம் இருந்து பாஸ்வேர்டு வந்த பின்பு தான் ஒட்டளிக்க முடியும் என்று நினைத்து வந்தேன். தமிழ்மணம் ஓட்டு பற்றிய பலருடைய பதிவுகளைப் படித்த பின்பு தான் இதில் இவ்வளவு தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் இந்தப் பதிவில் ஓட்டு அளித்திருக்கும் அனைத்து பெயர்க்ளையும் கொஞ்சம் பாருங்கள். பெயர் ஒன்றாக இருக்கிறது, இறுதியில் ஒன்று, இரண்டு என்று எண்களை மட்டும் சேர்த்து இருக்கிறார்கள்..

இனியும் தாமதிக்காமல் தமிழ்மணம் நிர்வாகிகள் நட‌வடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் இதைப்போல் பல பதிவுகள் மகுடத்தில் வந்து பல்லிளிக்கும். அதையும் கொடுமை என்று படித்துத் தீர வேண்டும்...

தமிழ்மணம் என்ன செய்ய வேண்டும் என்று பல பதிவர்கள், பல பதிவுகளை எழுதியுள்ளார்கள், அவற்றில் சிறந்தவற்றைக் கருத்தில் கொண்டு உருவாகினால் நன்றாக இருக்கும். அல்லது தமிழ்மணமே ஒரு வாசகர் பரிந்துரை பக்கத்தை நிறுவி அதில் வாசகர்கள், பதிவர்கள், கருத்துரையாளர்களின் கருத்துகளைக் கேட்டு பின்பு அவற்றில் சிறந்தவற்றை எடுத்து நடைமுறைப்படுத்தலாம்.

.

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

தமிழ்மணம் நிர்வாகத்தின் கவனத்திற்கு :

கடந்த இரு தினங்களாக ibakthi-என்னும் பெயரோடு பல தளங்களில் மைனஸ் ஓட்டு விழுகிறது... விளக்கங்கள் கீழே...

1. http://thillaiakathuchronicles.blogspot.in/2014/02/Aavippaa-Kovaiavee.html - 7/15

ibakthi kabagawanjee@gmail.com ibakthi1y i2bakthi chellappay@yahoo.com ibakthi2 seenuguru maduraitamilguy anandsva@gmail.com ibakthi1 ibakthi5 dindiguldhanabalan stsivanesan@gmail.com ksami i1bakthi

2. http://thillaiakathuchronicles.blogspot.com/2014/02/TamilStory-VazhaninaithalVazhalam.html - 4/10 (இப்போதைய நேரம் வரை)

maduraitamilguy texlords@aol.in i1bakthi dindiguldhanabalan ibakthi1 ibakthi2 rakshith.sk@gmail.com i2bakthi ibakthi ibakthi3

3. http://rupika-rupika.blogspot.com/2014/02/blog-post_210.html - 22/22

ibakthi5 karanthaikj@gmail.com jram178 avvaipaatti@live.fr ibakthi thulasidharan61 ibakthi4y dindiguldhanabalan rathnavel.natarajan@gmail.com anandsva@gmail.com ibakthi2 rupika@hotmail.ch ibakthi2y ibakthi3y namblki arunzen@gmail.com kabagawanjee@gmail.com i1bakthi ibakthi1y i2bakthi ibakthi3 maduraitamilguy

4. http://www.nambalki.com/2014/02/tits-and-bits-2252014.html - 25/29

ibakthi4y maheshswis isakki.dvk@gmail.com ibakthi5y texlords@aol.in mraja1961 ibakthi10y ibakthi ibakthi3 dindiguldhanabalan jpsekar63@gmail.com ibakthi2y bpathi arunzen@gmail.com ibakthi7y mutta.nina@gmail.com ibakthi2 i2bakthi ibakthi6y ksami kaamakkizaththan@gmail.com ibakthi3y i1bakthi kabagawanjee@gmail.com ibakthi1 ibakthi1y namblki ibakthi5 saarvaakan

5. http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html - 24/37 (இப்போதைய நேரம் வரை)
avvaipaatti@live.fr jram178 priyasaki12 ibakthi3y ibakthi2y ibakthi1y ibakthi4y Ramalakshmi ibakthi1 rupika@hotmail.ch sri.esi89@gmail.com kbjana ibakthi7y kaamakkizaththan@gmail.com mutta.nina@gmail.com svramani08@gmail.com soundar76rasi@gmail.com i1bakthi kodimalligai thulasidharan61 chennaipithan kabagawanjee@gmail.com i2bakthi asiyaomar parithimuthurasan@gmail.com ibakthi5y dindiguldhanabalan ibakthi3 maheshswis texlords@aol.in kandasan@gmail.com ibakthi6y viyapathy arunzen@gmail.com stsivanesan@gmail.com ibakthi2 ibakthi

தங்களின் விளக்கம் அல்லது நடவடிக்கை என்ன...?

நன்றி...


நேற்று காலையில் அவர்களுக்கு அனுப்பிய தகவல்... இதுவரை பதில் இல்லை...

கிட்டத்தட்ட 60 தளத்திற்கும் மேல் தமிழ்மணம் இணைப்பையும், ஓட்டுப்பட்டையாக மாற்றுவதற்கும் பல நண்பர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்து கொடுத்துள்ளேன்... செய்து கொண்டும் இருக்கின்றேன்... இதில் பல புதிய வலைப்பதிவர்கள் உண்டு... அவர்களிடமிருந்து இரண்டு நாளாக பல சந்தேகங்கள் + கோபத்துடன்... திரட்டி இணைத்து கொடுக்கும் போதே சொன்னவர்களை ஞாபகப் படுத்தினேன்... அதைப் பற்றி சொன்னால் ஒரு பெரிய பதிவே இட வேண்டும்... அதில் ஒன்றே ஒன்று : நல்ல எழுத்துக்களை தேடி தானாக வருவார்கள்... தொடர்வார்கள்... கருத்துரை இடுவார்கள்...

வாசகர் பரிந்துரையோ, மகுடமோ வந்தால், வழக்கமாக வரும் (100-க்கும் மேல்) கருத்துரைகளை விட குறைந்து விடும் என்பது எனது அனுபவ உண்மை...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணத்திற்கு தகவல் அனுப்ப :

1) techsupport@thamizmanam.com

2) admin@thamizmanam.com

Anonymous said...

வழிமொழிகின்றேன். தமிழ்மண வாக்களிக்கும் முறையில் மாற்றங்கள் மிக மிக அவசியம். தமிழ்மண நிர்வாகம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

Unknown said...

முற்றிலும் சரி! தமிழ் மணம் கவனிக்குமா!?

வவ்வால் said...

பதிவுகளை படிக்க தேர்ந்தெடுக்கும் முறை தப்பா வச்சிக்கிட்டு ,தமிழ்மணம் ஓட்டு முறை சரியில்லனா எப்படி?

மகுடத்துல இருந்தா ,அதனை படிக்கணும்னு எதுனா கட்டாயமா?

தமிழ்மணத்துல ஒரு நாளைக்கு பதிவாகிற பதிவுகளே மொத்தம் 165 தான் ,அதுல 100 பதிவுகளை ஒரே ஆளே எழுதுறான் போல :-))

மீதி 65 ல இத்தனை அக்கப்போறா அவ்வ்!

ஒருக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேலான பதிவுகள் பதிவாகும், இப்போ பலப்பேரு விலகிட்டாங்க.

# போன வருடம் ஃபுல்லா கள்ள ஓட்டுப்போட்டு மகுடத்தில உட்கார்ந்தது வேண்டப்பட்ட ஆளுங்களா இருக்கவும் பலப்பேரு வாயே தொறக்கலை, இப்ப மட்டும் ,அநியாயம் ,அக்கிரமம்னு மூலைக்கு மூலை பொலம்புறாங்க,உங்களை சொல்லலை,பொதுவா சிலருக்கு சொன்னேன்.

தமிழ்மணத்தினை எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டு ரொம்ப நாளாச்சு,இப்போ போய் அது சரியில்ல,இது சரியில்லனு கவலைப்படுறிங்களே,ரொம்ப நாளா வலைப்பதிவு பக்கமே வராம இருந்தீங்களோ?

# தமிழ்மண வாக்கு,மகுடம் பத்தி கவலைப்படுறதுலாம் யாருனு பார்த்தால் ,போட்டியே இல்லாத இடத்தில நாம தான் நம்பர் ஒன்னுனு காட்டிக்க ஆசைப்படும் அல்பங்கள் தான் :-))

எனவே நீங்க அதையெல்லாம் கண்டுக்காம , நல்லப்பதிவு எதுனு தேடிப்படிக்க கத்துக்குங்க.
-------------------

பொதுவான ஒருக்கேள்வி,

பதிவர் சந்திப்பு போல எதுனா நடத்தினா,தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் பங்களிப்பும் பதிவுலகின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்பதாகவோ,இல்லை திரட்டிகளுக்கு ஒரு நன்றினோ கூட சொல்ல ஒருத்தருக்கும் மனசு வராது,ஆனால் ஆயிரம் குறைகளை மட்டும் சொல்லுறாங்க.

இராய செல்லப்பா said...

துளசிதரனின் தளத்தில் மைனஸ் வாக்குகளைப் பார்த்தவுடனே நான் அவருக்குப் போன் செய்தேன். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு நான் சிலருக்கு வ்பாக்களித்துப் பார்த்தேன். பிளஸ் வாக்கு போட்டாலும், கூடவே மைனஸ் வாக்கும் விழுந்தது. இது சிறியதொரு software bug தான். அவர்கள் உடனே சரிப்படுத்தவேண்டும். (2) தமிழ் மனத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், எல்லாப் பதிவர்களும் ஒன்றுகூடும் இடமாகப் பிரபலம் பெற்றுள்ள தளம் அது ஒன்றுதானே! எனவே குறையை மறந்து சிறப்பைக் கொண்டாடுவோமே! (3) பதிவர்களுக்குத் தெரியும், அவர்கள், நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தையா தங்கள் பதிவில் இடுகிறார்கள் என்று! பெரும்பாலோர் எழுதுவது 'பத்தோடு பதினொன்று' என்ற மாதிரியில் தான். இதெற்கெல்லாம் மகுடம் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பதே கேவலம் இல்லையா? அதிகம் பேர் படிக்க நேர்வதே உங்களுக்கு மகுடம் தானே!

”தளிர் சுரேஷ்” said...

தமிழின் முன்னனி வலைதிரட்டியில் இது போன்று நடைபெறுவது வருத்தமான விசயம்தான்!சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!

Unknown said...

முன்பே திரு .நம்பள்கிக்குஎன் கறுத்து இதோ >>>
உங்கள் வாதம் நூற்றுக்குநூறு சரியானது .வாசகர் ஹிட் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவேண்டும் .தமிழ் மண உறுப்பினர்கள் வோட் செய்ய முடியும் என்பதால் வாசகர்கள் அனைவரும் வோட் போட முடியாத நிலை உள்ளது .
முன்னணியில் இருக்கும் பதிவர்களுக்கு விழும் வோட்டை கவனித்தால் ,அவர்கள் வீட்டில் இருந்தே நான்கு வோட் விழுவதைப் பார்க்க முடிகிறது .இப்படி நான்கு வோட் வைத்திருக்கும் இரண்டு பதிவர்கள் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கிறார்கள் .உடனே எட்டு வோட் விழுந்ததும் வாசகர் பரிந்துரையில் வந்து விடுகிறது .
என் பதிவுக்கு எட்டு வோட் விழ வேண்டுமென்றால் ,நீங்கள் சொன்ன மாதிரி பதிவர்கள் காலிலே விழ வேண்டியுள்ளது .உனக்கு என் வோட் .எனக்கு உன் வோட் என்ற நிலை தொடர்கிறது .நானும் என் உறவுகள் பெயரிலும்,நண்பர்கள் பெயரில் பெயரில் புகுந்து கொண்டு வோட் போட்டுக் கொள்ள மனசாட்சி இடம் கொடுக்கவில்லை !
தமிழ் மணத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றம் ...குழுக்கள் நடத்தும் பதிவுகளை ரேங்க் வரிசையில் சேர்க்கக் கூடாது .தனி நபர் ,குழுவிடம் மோதி ஜெயிக்க முடியாது என்பதற்கு இன்றைய தரவரிசையே சாட்சி ...முதல் மூன்று இடத்தில் இருப்பது குழுக்கள் நடத்தும் செய்தி பதிவுகள் தான் !
தமிழ் மணம் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நேர்மையான பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாய் இருக்கும் .நிறைய பதிவுகள் எழுதப் படும் .இது என் அனுபவம் ,ஒரு நாளில் பல பதிவுகளை எழுத நினைத்தாலும் மனம் வரவில்லை .ஒரு பதிவுக்கு ஏழு வோட் வாங்கினால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி விட்டது தமிழ்மணம் !
தமிழ் மணம் நிர்வாகிகள் சீர்திருத்தம் செய்ய முன் வரவேண்டும் !
த ம +1இது உங்களுக்கு !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தமிழ்மணம் இதை சரி செய்யும்( என நம்புகிறேன்).

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said..

வாங்க தனபாலன் சார்,

நானும் தமிழ் மணத்திற்கு மெயில் அனுப்பிவிட்டேன், இதுவைரையிலும் பதில் இல்லை. பார்க்கலாம், எனக்கு மகுடமோ, பரிந்துரையின் மீதோ துளியும் ஆர்வமில்லை. ஆனால் நான் பரிந்துரையில் இருக்கும் பதிவுகளை படிப்பது உண்டு..

நாடோடி said...

@இரா. விவரணன் said...
//வழிமொழிகின்றேன். தமிழ்மண வாக்களிக்கும் முறையில் மாற்றங்கள் மிக மிக அவசியம். தமிழ்மண நிர்வாகம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.//

வாங்க நண்பரே,

கருத்துரைக்கு ரெம்ப நன்றி.

@புலவர் இராமாநுசம் said...
//முற்றிலும் சரி! தமிழ் மணம் கவனிக்குமா!?//

வாங்க ஐயா,

கருத்துரைக்கும், ஆதரவிற்கும் ரெம்ப நன்றி.

நாடோடி said...

@வவ்வால் said...
//பதிவுகளை படிக்க தேர்ந்தெடுக்கும் முறை தப்பா வச்சிக்கிட்டு ,தமிழ்மணம் ஓட்டு முறை சரியில்லனா எப்படி?

மகுடத்துல இருந்தா ,அதனை படிக்கணும்னு எதுனா கட்டாயமா?//

வாங்க வவ்வால் நண்பரே,

உங்களை போல அறிவாளிகளுக்கு எழுதிய பதிவு இல்லை, என்னை போல முட்டாள் பதிவர்ககுக்கு எழுதியது இன்னும் சில மனசாட்சி உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை கவன‌த்தில் கொண்டு எழுதியது.. ஒருவர் பரிந்துரை செய்கிறார் என்றால் கண்டிப்பாக ஏதேனும் நல்லது இருக்கும் என்ற எண்ணம் இருப்பதால் தான் படிக்கிறேன்..அவ்வ்வ்... :)

///தமிழ்மணத்துல ஒரு நாளைக்கு பதிவாகிற பதிவுகளே மொத்தம் 165 தான் ,அதுல 100 பதிவுகளை ஒரே ஆளே எழுதுறான் போல :-))

மீதி 65 ல இத்தனை அக்கப்போறா அவ்வ்!

ஒருக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேலான பதிவுகள் பதிவாகும், இப்போ பலப்பேரு விலகிட்டாங்க.///


அந்த ஆயிரம் பதிவுகள் வரும் போது எழுதியவர்களில் நானும் ஒருவன். உங்களுக்கு என்னை போல் இருக்கும் பதிவர்க்ளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை..



//# போன வருடம் ஃபுல்லா கள்ள ஓட்டுப்போட்டு மகுடத்தில உட்கார்ந்தது வேண்டப்பட்ட ஆளுங்களா இருக்கவும் பலப்பேரு வாயே தொறக்கலை, இப்ப மட்டும் ,அநியாயம் ,அக்கிரமம்னு மூலைக்கு மூலை பொலம்புறாங்க,உங்களை சொல்லலை,பொதுவா சிலருக்கு சொன்னேன்.
தமிழ்மணத்தினை எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டு ரொம்ப நாளாச்சு,இப்போ போய் அது சரியில்ல,இது சரியில்லனு கவலைப்படுறிங்களே,ரொம்ப நாளா வலைப்பதிவு பக்கமே வராம இருந்தீங்களோ?///

பதிவுடன் சம்பந்தபடாத விசயங்களை என்னிடம் வந்து கொட்டுவதன் நோக்கம் என்ன நண்பரே, நான் எங்காவது வந்து பஞ்சாயத்து கூட்டியதை நீர் பார்த்தீரா?... இல்லை நீர் தான் வந்து நாட்டாமை செய்தீரா?... பொதுவான விசயமாக இருந்தால் உங்கள் வலைத்தளத்தில் எழுதி நாட்டாமை பண்ணும். இங்கு வந்து கூட்ட வேண்டாம்..

நான் கடந்த ஒரு வருடம் "ஒரு பதிவு கூட எழுதவில்லை" என்பதை முதலில் தெரிந்து கொள்ளும், இன்னும் சொல்ல போனால் வலைப்பதிவு பக்கம் வந்ததே அரிது.


//# தமிழ்மண வாக்கு,மகுடம் பத்தி கவலைப்படுறதுலாம் யாருனு பார்த்தால் ,போட்டியே இல்லாத இடத்தில நாம தான் நம்பர் ஒன்னுனு காட்டிக்க ஆசைப்படும் அல்பங்கள் தான் :-))

எனவே நீங்க அதையெல்லாம் கண்டுக்காம , நல்லப்பதிவு எதுனு தேடிப்படிக்க கத்துக்குங்க.
-------------------

பொதுவான ஒருக்கேள்வி,

பதிவர் சந்திப்பு போல எதுனா நடத்தினா,தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் பங்களிப்பும் பதிவுலகின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்பதாகவோ,இல்லை திரட்டிகளுக்கு ஒரு நன்றினோ கூட சொல்ல ஒருத்தருக்கும் மனசு வராது,ஆனால் ஆயிரம் குறைகளை மட்டும் சொல்லுறாங்க.//

என்னோட பதிவு என்னைக்காவது வாசகர் பரிந்துரையிலோ, அல்லது மகுடத்திலோ பார்த்து இருக்கீங்களா வவ்வால் நண்பரே.. இல்லை என்னுடைய பதிவை எங்காவது வந்து நான் புரோமோட் செய்ததை பார்தீரா?..

இங்கேயும் சொல்லுகிறேன், என்னுடைய பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பொதுவான‌ கேள்வியென்றால் உங்கள் வலைபதிவில் எழுதி பஞ்சாய்த்து கூட்டாமல் இங்கு வந்து பஞ்சாயத்து கூட்டுவதன் நோக்கம் என்ன?

பதிவர் சந்திப்பா???? அப்படினா என்னா??????

நாடோடி said...

@ Chellappa Yagyaswamy said...
//துளசிதரனின் தளத்தில் மைனஸ் வாக்குகளைப் பார்த்தவுடனே நான் அவருக்குப் போன் செய்தேன். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு நான் சிலருக்கு வ்பாக்களித்துப் பார்த்தேன். பிளஸ் வாக்கு போட்டாலும், கூடவே மைனஸ் வாக்கும் விழுந்தது. இது சிறியதொரு software bug தான். அவர்கள் உடனே சரிப்படுத்தவேண்டும். (2) தமிழ் மனத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், எல்லாப் பதிவர்களும் ஒன்றுகூடும் இடமாகப் பிரபலம் பெற்றுள்ள தளம் அது ஒன்றுதானே! எனவே குறையை மறந்து சிறப்பைக் கொண்டாடுவோமே! (3) பதிவர்களுக்குத் தெரியும், அவர்கள், நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தையா தங்கள் பதிவில் இடுகிறார்கள் என்று! பெரும்பாலோர் எழுதுவது 'பத்தோடு பதினொன்று' என்ற மாதிரியில் தான். இதெற்கெல்லாம் மகுடம் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பதே கேவலம் இல்லையா? அதிகம் பேர் படிக்க நேர்வதே உங்களுக்கு மகுடம் தானே!//

வாங்க சார் வணக்கம்,

நீங்க எழுதியிருப்பது சத்தியமா எனக்கு புரியல.., என்னோட பதிவை சொல்லுறீங்களா, இல்ல உங்க நண்பரின் பதிவையா எதுவும் புரியல..

நாடோடி said...

@s suresh said...
//தமிழின் முன்னனி வலைதிரட்டியில் இது போன்று நடைபெறுவது வருத்தமான விசயம்தான்!சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!//

வாங்க சுரேஷ் வணக்கம்,

அந்த எண்ணத்தில் எழுதியது தான் இந்த பதிவு நண்பரே.. கருத்துரைக்கு ரெம்ப நன்றி.

@Bagawanjee KA said...
//முன்பே திரு .நம்பள்கிக்குஎன் கறுத்து இதோ >>>
உங்கள் வாதம் நூற்றுக்குநூறு சரியானது .வாசகர் ஹிட் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவேண்டும் .தமிழ் மண உறுப்பினர்கள் வோட் செய்ய முடியும் என்பதால் வாசகர்கள் அனைவரும் வோட் போட முடியாத நிலை உள்ளது .
முன்னணியில் இருக்கும் பதிவர்களுக்கு விழும் வோட்டை கவனித்தால் ,அவர்கள் வீட்டில் இருந்தே நான்கு வோட் விழுவதைப் பார்க்க முடிகிறது .இப்படி நான்கு வோட் வைத்திருக்கும் இரண்டு பதிவர்கள் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கிறார்கள் .உடனே எட்டு வோட் விழுந்ததும் வாசகர் பரிந்துரையில் வந்து விடுகிறது .
என் பதிவுக்கு எட்டு வோட் விழ வேண்டுமென்றால் ,நீங்கள் சொன்ன மாதிரி பதிவர்கள் காலிலே விழ வேண்டியுள்ளது .உனக்கு என் வோட் .எனக்கு உன் வோட் என்ற நிலை தொடர்கிறது .நானும் என் உறவுகள் பெயரிலும்,நண்பர்கள் பெயரில் பெயரில் புகுந்து கொண்டு வோட் போட்டுக் கொள்ள மனசாட்சி இடம் கொடுக்கவில்லை !
தமிழ் மணத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றம் ...குழுக்கள் நடத்தும் பதிவுகளை ரேங்க் வரிசையில் சேர்க்கக் கூடாது .தனி நபர் ,குழுவிடம் மோதி ஜெயிக்க முடியாது என்பதற்கு இன்றைய தரவரிசையே சாட்சி ...முதல் மூன்று இடத்தில் இருப்பது குழுக்கள் நடத்தும் செய்தி பதிவுகள் தான் !
தமிழ் மணம் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நேர்மையான பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாய் இருக்கும் .நிறைய பதிவுகள் எழுதப் படும் .இது என் அனுபவம் ,ஒரு நாளில் பல பதிவுகளை எழுத நினைத்தாலும் மனம் வரவில்லை .ஒரு பதிவுக்கு ஏழு வோட் வாங்கினால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி விட்டது தமிழ்மணம் !
தமிழ் மணம் நிர்வாகிகள் சீர்திருத்தம் செய்ய முன் வரவேண்டும் !
த ம +1இது உங்களுக்கு !///

வாங்க பகவான் ஜி,

நீங்கள் சொல்லும் தில்லுமுல்லுகள் நானும் பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன். குரூப்பாக இருந்து ஒட்டு போடும் முறை, ஆனால் இந்த பதிவில் இருக்கும் ஓட்டுகள் இன்னும் கொடுமை.. கருத்துக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//தமிழ்மணம் இதை சரி செய்யும்( என நம்புகிறேன்).//

வாங்க நிஜாம் சார்,

கருத்துக்கு ரெம்ப நன்றி, உங்க பதிவுகளை படித்தேன்,ஒரு மாசமா புது பதிவு ஒண்ணும் போடலியே.. சீக்கிரம் போடுங்க..

வவ்வால் said...

நாடோடி,

//பதிவுடன் சம்பந்தபடாத விசயங்களை என்னிடம் வந்து கொட்டுவதன் நோக்கம் என்ன நண்பரே, //

கள்ளஓட்டு என்பது தானே உங்க பஞ்சாயத்து ,அப்போ நான் சொன்னது பதிவோட தொடர்புடையது தான்!

//நான் எங்காவது வந்து பஞ்சாயத்து கூட்டியதை நீர் பார்த்தீரா?... இல்லை நீர் தான் வந்து நாட்டாமை செய்தீரா?..//

இப்ப கூட்டியிருப்பதே பஞ்சாயத்து தானே?

//பொதுவான விசயமாக இருந்தால் உங்கள் வலைத்தளத்தில் எழுதி நாட்டாமை பண்ணும். இங்கு வந்து கூட்ட வேண்டாம்..//

தமிழ்மணத்துக்கு தான் புகார் தெரிவிக்க மின்னஞ்சல் வச்சிருக்கே,அதுல சொல்லாம எதுக்கு பதிவா போட்டிங்க?

எனவே பதிவா போட்டால் அதுக்கு பின்னூட்டமாவும் யாராவது வந்து கருத்து சொல்வாங்கனு தானே?

எல்லாம் உங்க விருப்பம் போல கருத்து சொல்லணுமா என்ன?

# //முன்னணியில் இருக்கும் பதிவர்களுக்கு விழும் வோட்டை கவனித்தால் ,அவர்கள் வீட்டில் இருந்தே நான்கு வோட் விழுவதைப் பார்க்க முடிகிறது .இப்படி நான்கு வோட் வைத்திருக்கும் இரண்டு பதிவர்கள் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கிறார்கள் .உடனே எட்டு வோட் விழுந்ததும் வாசகர் பரிந்துரையில் வந்து விடுகிறது .//

இப்படி ஒருத்தர் சொல்லி இருக்காரே ,இதுக்கும் கள்ள ஓட்டுக்கும் என்ன தொடர்பு? சம்பந்தமில்லாம பேசினார்னு பொங்குறது? அது உங்க தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.

# பதிவ எழுதுற வரைக்கும் தான் அது உங்க கருத்து,எழுதி இணையத்தில் வச்சாச்சுனா பொதுக்கருத்து,பின்னூட்டப்பெட்டி இருக்குமெனில் அதில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. வெளியிடுவதும் இடாததும் உங்க விருப்பம். அதை எல்லாம் நானும் கேட்கமாட்டேன்.

இந்த கண்ராவிலாம் வேண்டாம்னா வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கங்கவங்களோட "கருத்து பரிமாறி" மகிழ வேண்டியது தான்!
------------------

மற்றவர்கள் சமீபகாலமாக "கள்ள ஓட்டு" எனபுலம்ப ஆரம்பித்திருப்பது, சமீப காலமாகவே அவர்களுடன் உங்களையும் சேர்த்து பார்த்துவிட்டேன் அதான் குழப்பமாகிடுச்சு.

நீங்க இந்த பிரச்சினையே இப்பத்தான் தெரியும் என்பதாக சொன்னதால் , உங்களுக்கு முந்தய நடப்புகள் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அது வேறக்கதை,யாராவது விளக்கக்கூடும்.

நாடோடி said...

@வவ்வால் said...

//# போன வருடம் ஃபுல்லா கள்ள ஓட்டுப்போட்டு மகுடத்தில உட்கார்ந்தது வேண்டப்பட்ட ஆளுங்களா இருக்கவும் பலப்பேரு வாயே தொறக்கலை, இப்ப மட்டும் ,அநியாயம் ,அக்கிரமம்னு மூலைக்கு மூலை பொலம்புறாங்க,உங்களை சொல்லலை,பொதுவா சிலருக்கு சொன்னேன்.
தமிழ்மணத்தினை எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டு ரொம்ப நாளாச்சு,இப்போ போய் அது சரியில்ல,இது சரியில்லனு கவலைப்படுறிங்களே,ரொம்ப நாளா வலைப்பதிவு பக்கமே வராம இருந்தீங்களோ?///

வவ்வால் நண்பரே,

நான் மேலே உள்ள பத்திக்கு தான் கேட்டு இருந்தேன், என்னிடம் வந்து கேட்பதன் நோக்கத்தை, உடனே பொத்தாம் பொதுவா பேசே வேண்டாம் எந்த பதிவுக்கும் எவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு, அதை ஏற்பதும் அல்லது மறுப்பதும் ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தது. நான் என்றைக்கும் அடுத்தவ‌ரின் கருத்துக்கு மதிப்பளித்தே வந்திருக்கிறேன். இப்போதும் சொல்லுகிறேன் நீங்கள் வேறு ஏதோ பிரச்சனைகளை என்னிடம் வந்து கேட்பதன் நோக்கம், நான் ஏன் அன்று கருத்து சொல்லவில்லை என்று கேட்பதும் முறையா?, இத்தனைக்கும் அப்போது நான் எழுதவில்லை என்றும் சொல்லிவிட்டேன்..

உங்களின் தேவையில்லாத திசைதிருப்பல்களுக்கு பதில் அளித்தால் அது மேலும் நம் இருவருக்குமான வீண்விவாதமாக அமையும்.

நான் இப்போது சொல்லுகிறேன், "பொதுவான கேள்வி, அந்த பதிவுக்கு ஏன் வந்து பதில் சொல்லவில்லை என்பதாக" நீங்கள் கருத்துரை இட்டதால் தான் நான் அந்த கேள்விகளை கேட்டேன்....

என்னுடைய பதிவுகள் ஏதாவது முன்னால் நீங்கள் படித்திருங்களா என்று தெரியவில்லை, ஆனால் உங்களுடைய விவசாய கட்டுரைகளையும், வால்மார்ட் பற்றிய கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்..

வவ்வால் said...

நாடோடி நண்பரே,

//நான் இப்போது சொல்லுகிறேன், "பொதுவான கேள்வி, அந்த பதிவுக்கு ஏன் வந்து பதில் சொல்லவில்லை என்பதாக" நீங்கள் கருத்துரை இட்டதால் தான் நான் அந்த கேள்விகளை கேட்டேன்....
//

இதுக்கு முந்தைய பின்னூட்டத்திலே இப்படி விளக்கம் சொன்னேன்,கவனிக்கவேயில்லை,நான் மட்டும் தான் அவசரப்பட்டேனு நினைச்சேன்,நீங்களும் அவசரக்காரர் தான் :-))

//மற்றவர்கள் சமீபகாலமாக "கள்ள ஓட்டு" எனபுலம்ப ஆரம்பித்திருப்பது, சமீப காலமாகவே அவர்களுடன் உங்களையும் சேர்த்து பார்த்துவிட்டேன் அதான் குழப்பமாகிடுச்சு.
//

தெளிவாக சொல்லணும்னா, இங்கே வேறு சிலர் ஏற்கனவே பொலம்பிட்டு இருக்காங்க,அவங்க நோக்கமே வேற, அதே நேரத்தில் நீங்களும் சொல்லவே ,அதோடு இதை சேர்த்திட்டேன் , சரியா ,தவறாக இருப்பின் மன்னிக்கவும்!

# நானும் உங்கப்பதிவு மற்றும் பலரின் பதிவுகளும் படிக்கிறேன், உங்களுக்கும் கருத்துக்கள் முன்னரே சொல்லி இருக்கக்கூடும்.

உங்களுக்கு அதிகம் பதிவுகள் வாசிக்கும் பழக்கமில்லாமல் இருக்கலாம் எனவே நாம அப்படிலாம் பாகுபாடு பார்ப்பதில்லைனு தெரியாமல் இருக்கக்கூடும.

பெரும்பாலும் நம்ம கருத்தை வெளியிடுவாங்கனு நம்பிக்கை இருக்குமிடத்தில் தான் தொடர்ந்து கருத்து சொல்வேன்,அதனால் பல பதிவுகளை படிச்சுட்டு எதுவும் சொல்லாமல் போய்விடுகிறேன்,அதனால் படிக்காமலே போய்விடுவதல்ல.

நமக்கு பதிவு எழுத சோம்பல் ,எழுத தோன்றும் போது தான் எழுதுவது ,மத்த நேரமெல்லாம் வாசிக்கிறது ,பின்னூட்டமிடுவது தான் :-))

Geetha said...

ஆஹா இது இவ்ளோ இருக்கா...ஆமா நீங்க புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு பதிவு செய்யல போலவே ..அவசியம் வாங்க....உங்க வலைப்பூ முகவரியை வலைப்பதிவர் கையேட்டில் சேர்க்கனும்ல....bloggersmeet2015.blogspot.com

Related Posts with Thumbnails