காலை நாலரை மணிக்கு அலாரம் அடித்தது. சித்தியும், சித்தப்பாவும் தனது படுக்கையில் இருந்து எழுந்தார்கள். அலாரத்தின் ஒலி கீச்சு குரலில் கோரமாக இருந்தது. எனக்கும் அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. காலையில் விழிப்பு முழுவதும் வந்துவிட்டால் திரும்ப எப்படித்தான் கண்கள் மூடினாலும் எனக்கு தூக்கம் வருவதில்லை. நானும் படுக்கையில் இருந்து எழுந்து மாடிப்படியில் போய் உக்கார்ந்து கொண்டேன்.
என்ன ரவி தூக்கம் வரலியா? "எதுக்கு இவ்வளவு சீக்கரமாய் நீயும் எழுந்துவிட்டாய். நீ படுத்து தூங்கு" என்று சித்தி என்னிடம் சொன்னார்கள். இல்ல சித்தி எனக்கு தூக்கம் அவ்வளவுதான். எதுக்கு சித்தி இவ்வளவு சீக்கிரமாய் எழுந்து விட்டீர்கள் என்று கேட்டேன். நாங்கள் இருவரும் தினமும் இவ்வளவு சீக்கிரமாய் எழுந்து வேலை செய்தால் தான் ஒன்பது மணிக்குள்ள எல்லா வேலையும் முடியும் என்று பதில் சொல்லிவிட்டு கிச்சனை நோக்கி நடந்தார்கள் சித்தி.
சித்தப்பா தின்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்து, வெளியில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் வந்தார். சித்தி கையில் வைத்திருந்த கயிறால் சேர்த்து கட்டப்பட்ட இரண்டு கேன்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் உள்ள கேரியரில் மாட்டிக் கொண்டு சைக்கிள் ஸ்டேண்டை தட்டிவிட்டு கிளம்பினார். நான் சித்தியிடம் "விஜயை எழுப்பி தண்ணி எடுத்து வர சொல்லா கூடாதா?" என்று கேட்டேன்.
நீ வேற ரவி.. அதுவே ஒரு தத்தி. அது எங்க போய் தண்ணி எடுத்து வர போகுது, ஆளுதான் பனைமரம் போல் வளர்ந்து இருக்கானே தவிர செயலில் ஒண்ணும் இருக்காது என்று சொல்லி கொண்டே நேற்று ராத்திரி சாப்பிட்ட பாத்திரங்களை கழுவத்தொடங்கினார் சித்தி.
சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த சித்தப்பா அந்த இரண்டு கேன்களில் உள்ள தண்ணீரை கிச்சனில் உள்ள குடங்களில் நிரப்பினார். பின்பு சித்தி கழுவி வைத்த ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை கையில் எடுத்து அதில் செல்ப்பில் இருந்த கோதுமை மாவை எடுத்து கொட்டி சப்பாத்தி மாவு பிசைய தொடங்கினார்.
சித்தி பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்துவிட்டு, ரைஸ் குக்கரை எடுத்து அதில் நான்கு கப் அரிசி போட்டு அதற்கு தேவையான தண்ணீரை ஊற்றி ஸ்டவ்வின் ஒரு அடுப்பை பற்றவைத்தார். மற்றொரு அடுப்பில் சாம்பாருக்கு தேவையான பருப்பை போட்டு மூடிவைத்தார்.
சித்தப்பா மாவை பிசைந்து சின்ன சின்ன உருண்டையாக உருட்டி வைத்துவிட்டார். கிச்சனில் உள்ள தரையில் அழகாக மண்டிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு பூரிகட்டையால் அவ்வளவு உருண்டையையும் பதினைந்த்து நிமிடத்தில் சப்பாத்தியாக விரித்து ஒரு பாத்திரத்தில் அடுக்கி விட்டு எழுந்தார்.
சித்தி குக்கரில் இருந்து விசில் சத்தம் வருவதற்குள் பெட்ரூம்க்குள் சென்று ஆங்காங்கே சிதறி கிடந்த அழுக்கு துணிகளை எல்லாம் எடுத்து வந்து பாத்ரூமில் உள்ள ஒர் பெரிய பக்கெட்டில் ஏரியல் பவுடைரை தட்டி தண்ணீர் பிடித்து அதில் எல்லா துணிகளையும் ஊற வைத்தார். என்னிடம் வந்து "ரவி உனக்கு ஏதாவது துணி துவைக்க வேண்டுமா? என்று கேட்டார். இல்ல சித்தி என்னுடையதை நானே துவைத்து கொள்வேன் என்றேன்.
சித்தப்பா சப்பாத்தி உருட்டும் வேலையை முடித்துவிட்டு சாம்பாருக்கு தேவையான காய்களை வெட்ட தொடங்கினார். அதையும் முடித்துவிட்டு பொரியல் பண்ணுவதற்கு கேரட்டை எடுத்து சீவ தொடங்கினார்.
அடுப்பில் இருந்து விசில் சத்தம் வரவே சித்தி கிச்சனில் சென்று ரைஸ்குக்கரை அடுப்பில் இருந்து கீழே இறக்கிவிட்டு மில்க் குக்கரை அடுப்பில் வைத்து பிரிஜில் இருந்து பால் பாக்கட்டை எடுத்து அதை கத்தியால் உடைத்து குக்கரில் ஊற்றினார். மணி ஆறு ஆகியிருந்தது. சித்தப்பாவிடம் சித்தி அடுப்பை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, மாடிப்படியின் அடியில் இருந்த கோலமாவை ஒரு கையிலில் எடுத்து கொண்டு மறுகையில் ஒரு பக்கெட் தண்ணியையும் கொண்டு வீட்டு வாசலுக்கு சென்றார்.
சித்தப்பா இப்போது காய்கறிகள் நறுக்கி முடித்துவிட்டு அடுப்பில் இருந்த பருப்பை இறக்கி அதில் காய்கறிகள் கலந்து, சாம்பார்பொடியையும் சேர்த்து திரும்பவும் அடுப்பில் கொதிக்க வைத்தார். அதற்குள் கோலம் போட்டு முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தார் சித்தி.
சித்தி சித்தப்பாவிடம்" ஏங்க பசங்களை போய் எழுப்புங்க... நீங்க சத்தம் போட்டால் தான் எழும்புவார்கள், நான் கூப்பிட்டா எழுந்திரிக்க மாட்டனுங்க" என்று சொன்னார். சித்தப்பா மாடிப் படி ஏறி தலைமூடி படுத்திருந்த மூன்று பேரை எழுப்பினார்கள்.
மேலே நான் சித்தி என்று சொல்லியிருப்பது என்னுடைய அம்மாவின் தங்கை. இவர்கள் இருப்பது கடலூரில். சித்திக்கு வீட்டின் பக்கத்தில் உள்ள காண்வெண்ட் பள்ளியில் ஆசிரியர் வேலை. சித்தப்பாவும் பக்கத்து ஊரில் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார். சித்திக்கு மூன்று பையன்கள். மூத்தவன் விஜய், கணிப்பொறி பிரிவில் இன்சினியரிங் முடித்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான். பெரிய சம்பளம் எதுவும் வருவது இல்லை. தினமும் வீட்டில் இருந்து தான் வேலைக்கு செல்வான்.
நான் அடிக்கடி சித்தியிடம் சொல்லுவது விஜயை வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை தேட சொல்லுங்கள் என்று. ஆனால் சித்தி சொல்வது " நீ வளந்த விதம் வேறு, அவனை நாங்கள் வளர்த்திருப்பது வேறு, தன்னுடைய வேலைகளை கூட அவனுக்கு செய்ய தெரியாது, இவன் எப்படி வெளியில் தனியாக இருப்பான் அது மட்டுமல்லாது, அவனை பிரிந்து நாங்கள் ஒரு நாட்கள் கூட தனியாக இருந்தது கிடையாது" என்பார்.
இரண்டாவது ராபின். அவன் இந்த வருடம் கலை கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படிக்கின்றான். இளையவன் சிரில் பிள்ஸ் ஒன் படிக்கிறான். நான் சென்னையில் ஒரு கெமிக்கல் கம்பெனியில் மார்கெட்டிங்க் பிரிவில் வேலையில் இருக்கிறேன். கடலூர் தொழிற்ப்பேட்டையில் பல கெமிக்கல் தொழிற்சாலைகள் இருப்பதால், பணியின் நிமித்தம் கடலூருக்கு வருவேன். வரும் போது ஒவ்வொரு முறையும் ஹோட்டலில் தான் தங்குவேன். சித்தி அடிக்கடி என்னிடம் பேசும் போது வீட்டிற்கு அழைப்பார்கள். எனவே இந்த முறை நான் வந்த போது சித்தி வீட்டில் தங்கினேன்.
மணி ஏழானது. மாடியில் இருந்து ஒவ்வொருத்தனாக வெளியில் வந்தான்கள். முதலில் இளையவன் சிரில், ஏம்மா மணி ஏழு ஆகி போச்சா? "இன்னைக்கு ஏழு முப்பதுக்கு ஸ்கூல் பஸ் வந்துவிடும் நான் கிளம்ப வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு அரை மணி நேரத்தில் பாத்ரூம், காக்கா குளியல், சாப்பாடு, கிளம்புதல். எப்படித்தான் முடிகிறதோ? அவன் ரெடி. கையில் சாப்பாடு பையுடன். சட்டையில் டையுடனும்.
மூத்தவன் விஜய், ஆள் பார்பதற்கு என்னுடைய அண்ணன் போல் இருப்பான், நடிகர் பிரபுவின் தோற்றம், செய்கையில் நடிகர் உசிலைமணி. அவ்வளவு சுறுசுறுப்பு. ராபின் இவர்கள் இரண்டு பேரை விடவும் கொஞ்சம் வித்தியாசம். காலை வெயில் மண்டையில் சுர் என்று அடிக்கிறது. அந்த நேரத்தில் மொட்டை மாடியில் உடற்பயிற்ச்சி.
சித்தி இவனுங்க மூன்று பேருக்கும் தேவையான மதிய சாப்பாட்டை டிபன்பாக்ஸில் கட்டி வைத்து விட்டு, சித்தப்பாவிடம் சப்பாத்தியை தோசைகல்லில் சுடும் வேலையை கொடுத்துவிட்டு துணிகளை துவைக்க கிளம்பி விட்டார்கள். ஏழரை மணிக்கு துணி துவைக்க ஆரம்பித்தது, இந்த மூன்று பேரின் உள்ளாடைகள் வரை சித்திதான் துவைத்தார்கள். இடையிடையே ஒவ்வொருத்தனும் குளித்துவிட்டு தான் அணிந்திருந்த துணிகளை வேறு சித்தியிடம் தூக்கி எறிந்து விட்டு சென்றான்கள்.
மணி எட்டு முப்பது ஆகியிருந்தது. சித்தி துணிகளை எல்லாம் துவைத்து முடிந்து இப்போது குளிக்க தாயாரனார். ஒன்பது மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும். சித்தியின் கான்வெண்ட் பள்ளி வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடை தூரம் தான். அடுத்த பத்து நிமிடங்களில் சித்தியும் ரெடி, நின்று கொண்டே சாப்பாடு, வீட்டில் பெட்ரூமில் இருந்து பையை எடுத்து கொண்டு வெளியில் கிளம்பும் போதே சேலையின் தலப்புகளை சரிசெய்தல்...அவசர அவசரமாக ஓட்டமும் நடையும்...
மேற்கண்ட நிகழ்ச்சி இரண்டு மாதங்களுக்கு முன்னால் நான் கடலூர் போயிருந்த போது எனது சித்தி வீட்டில் நடந்த அன்றாட நிகழ்வுதான். ஆனால் அந்த நிகழ்ச்சியை இன்றைக்கு அசை போட வைத்ததற்கு காரணம் எனக்கு எங்கள் வீட்டில் இருந்து காலையில் வந்த போன் கால் தான். போனில் அம்மாதான் பேசினார்கள்.
சித்தியின் மூத்த பையன், அதாங்க விஜய் நேற்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு போனாவன் திரும்பி வரவே இல்லையாம். அவனுடைய ஆபிஸுக்கு போன் போட்டு கேட்டால் அவன் ஆபிஸுக்கு வரேவே இல்லை என்று சொன்னார்களாம். அவனுடைய நண்பன் ஒருவனுக்கு போன் போட்டு கேட்டால் "விஜய் கொஞ்சம் நாட்களாய் ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். இன்றைக்கு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் எங்கு போனார்கள் என்று எனக்கு தெரியாது" என்று சொல்லியிருக்கிறான். அதைகேட்டு சித்தி ஒரு மூலையில் உக்காந்தவர்கள் இன்னும் எழவில்லையாம்.. உலகம் அறியா பிள்ளை... தன் வேலைகளை செய்ய தெரியா பிள்ளை...
.
.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
உலகம் அறியா பிள்ளை... தன் வேலைகளை செய்ய தெரியா பிள்ளை...
...... நீங்கள் கதைக்காக எழுதி இருக்கிறீர்கள்..... ஆனால், என் நண்பர் ஒருவர் இதை போல செய்துவிட்டார்.... அவரின் அம்மாவை நான் சந்தித்தபோது என் கண்கள் குளமாகின....
. உலகம் அறியா பிள்ளை... தன் வேலைகளை செய்ய தெரியா பிள்ளை...
அதற்காக, எதுவுமே செய்யாமல் இருக்க முடியுமா.
good post
Asathiviteenga Nadodi.. super
மிக நல்ல கதை.
சிலதுகள் இப்படி அசடுகள் போல இருப்பார்கள்.
ஏதோ ஒரு இளமை வேகம் என்று கூட சொல்லலாம். திருமணம் ஆன பின் தான் புத்தி வரும்.
சித்தப்பா காரக்டர் தான் சூப்பர். இவ்வளவு வேலைகள் செய்து அசத்தி விட்டார்.
அதிக செல்லம் குடுத்து வளர்ப்பது எப்பவும் தப்பு...
:-((
இது கதையா அனுபவமா என்றே புரியவில்லை.ரஅருமையான நடை. உண்மையுஇல் இது போன்று பல இடங்களில் நடக்கின்றது. தாய் தந்தை இவ்வளவு செல்லம் தரக் கூடாது. கண்டிப்பும் சுயமாக வேலைகளை முடிக்கக் கூடியச் பக்குவத்தையும் சின்னதிலிருந்தே தந்துவிட வேண்டும்.
@Chitra said...
//உலகம் அறியா பிள்ளை... தன் வேலைகளை செய்ய தெரியா பிள்ளை...
...... நீங்கள் கதைக்காக எழுதி இருக்கிறீர்கள்..... ஆனால், என் நண்பர் ஒருவர் இதை போல செய்துவிட்டார்.... அவரின் அம்மாவை நான் சந்தித்தபோது என் கண்கள் குளமாகின....//
வாங்க சித்ரா மேடம், இது போல சிக்கலில் யாரை குறை சொல்வது என்று தெரியாமல் போய்விடுகிறது
சில உண்மை சம்பவங்களை கோர்த்து புனைவாக எழுதினேன்..
@தமிழ் உதயம் said...
//. உலகம் அறியா பிள்ளை... தன் வேலைகளை செய்ய தெரியா பிள்ளை...
அதற்காக, எதுவுமே செய்யாமல் இருக்க முடியுமா.///
வாங்க தமிழ் சார்... சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள்..
@Riyas said...
//good post//
வாங்க ரியாஸ்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@அஹமது இர்ஷாத் said...
//Asathiviteenga Nadodi.. super//
அப்படியா இர்ஷாத் ... ரெம்ப சந்தோசம்..
@வானம்பாடிகள் said...
//மிக நல்ல கதை.///
வாங்க பாலா சார்... கருத்துக்கு ரெம்ப நன்றி..
சித்தியும், சித்தப்பாவும் ப்ளான் பண்ணி வேலை செய்தது மனதை கவர்ந்தது. அதை நீங்கள் விவரித்த விதம் அருமை ஸ்டீபன்.
அதை விட விஜய் போட்ட பிளான் சூப்பர். அம்பளை பிள்ளைதானே ரெண்டு வருடம் கழித்து கையில் குழந்தையுடன் வந்து நிற்பார்.
உண்மையிலேயும் இது மாதிரி நடக்குது தலைவா
உலகமறியா பிள்ளைகள் அதுல மட்டும் தெளிவா இருப்பாங்க
தன் பொறுப்பை உணரவைக்காத பெற்றோர்தான் குற்றவாளிகள். ஒரு வேலையும் செய்யாதவன், கல்யாணம் பண்ணிட்டா மட்டும்?? சுவத்துல அடிச்ச பந்து மாதிரி வந்துடுவான் பாருங்க!!
செல்லம் குடுத்து வளர்ப்பது தப்பு
நல்ல கதை
உலகம் அறியா பிள்ளை... அருமைங்க..
அந்த அம்மாவின் நிலை தான் பாவம்..
Niraya veetil ippadi nakakkarathu romba sahajamaachu... ulagamae paiyannu iruppanga.. andha paiyan ippadi yedhavathu panni aappu vachittu poyiruvaan.. hmm..
இது இப்போ அனைத்து வீடுகளிலும் நடப்பதுதான்...
விஜயின் செயல் வெறுப்பை வரவழைத்தாலும்...
சித்தி, சித்தப்பாவின் அபார உழைப்பு பிரமிப்பை
வரவழைத்தது
@vanathy said...
//சிலதுகள் இப்படி அசடுகள் போல இருப்பார்கள்.
ஏதோ ஒரு இளமை வேகம் என்று கூட சொல்லலாம். திருமணம் ஆன பின் தான் புத்தி வரும்.
சித்தப்பா காரக்டர் தான் சூப்பர். இவ்வளவு வேலைகள் செய்து அசத்தி விட்டார்.//
அந்த சித்தப்பா கேரக்டர் போல் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி வானதி..
@ஜெய்லானி said...
//அதிக செல்லம் குடுத்து வளர்ப்பது எப்பவும் தப்பு...
:-((//
நீங்க சொல்வது சரிதான் ஜெய்லானி..
@அன்னு said...
//இது கதையா அனுபவமா என்றே புரியவில்லை.ரஅருமையான நடை. உண்மையுஇல் இது போன்று பல இடங்களில் நடக்கின்றது. தாய் தந்தை இவ்வளவு செல்லம் தரக் கூடாது. கண்டிப்பும் சுயமாக வேலைகளை முடிக்கக் கூடியச் பக்குவத்தையும் சின்னதிலிருந்தே தந்துவிட வேண்டும்.//
சில பார்த்த கேரக்டர்களை வைத்து புனைவாக எழுதியது... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி அன்னு..
@அக்பர் said...
//சித்தியும், சித்தப்பாவும் ப்ளான் பண்ணி வேலை செய்தது மனதை கவர்ந்தது. அதை நீங்கள் விவரித்த விதம் அருமை ஸ்டீபன்.
அதை விட விஜய் போட்ட பிளான் சூப்பர். அம்பளை பிள்ளைதானே ரெண்டு வருடம் கழித்து கையில் குழந்தையுடன் வந்து நிற்பார்.//
குழந்தையோடு வந்தாலும் மனதில் உள்ள வலிகள் மாறுவது இல்லையே அக்பர்... கருத்துக்கு ரெம்ப நன்றி..
@கரிசல்காரன் said...
//உண்மையிலேயும் இது மாதிரி நடக்குது தலைவா
உலகமறியா பிள்ளைகள் அதுல மட்டும் தெளிவா இருப்பாங்க///
எதுல தெளிவில்லையோ அதில் மட்டும் ரெம்ப தெளிவா இருப்பாங்கா.. கேரக்டர்கள் சில உண்மை கரிசல்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@ஹுஸைனம்மா said...
//தன் பொறுப்பை உணரவைக்காத பெற்றோர்தான் குற்றவாளிகள். ஒரு வேலையும் செய்யாதவன், கல்யாணம் பண்ணிட்டா மட்டும்?? சுவத்துல அடிச்ச பந்து மாதிரி வந்துடுவான் பாருங்க!!//
நானும் இப்படிபட்ட பெற்றோர்களைத்தான் சொல்வேன்... கடைசியில் நீங்கள் சொன்னதுதான் நடக்கும்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி ஹுஸைனம்மா
@r.v.saravanan said...
//செல்லம் குடுத்து வளர்ப்பது தப்பு
நல்ல கதை///
வாங்க சரவணன் சார்... கருத்துக்கு ரெம்ப நன்றி..
@Ananthi said...
//உலகம் அறியா பிள்ளை... அருமைங்க..
அந்த அம்மாவின் நிலை தான் பாவம்..
Niraya veetil ippadi nakakkarathu romba sahajamaachu... ulagamae paiyannu iruppanga.. andha paiyan ippadi yedhavathu panni aappu vachittu poyiruvaan.. hmm..//
வாங்க ஆனந்தி மேடம்... புது இடுகை ஒன்னும் காணோம்... அடிக்கடி போடுங்க..
@www.thalaivan.com said...
நன்றி தலைவன்.காம்
@soundar said...
//இது இப்போ அனைத்து வீடுகளிலும் நடப்பதுதான்...//
வாங்க சௌந்தர்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@NIZAMUDEEN said...
//விஜயின் செயல் வெறுப்பை வரவழைத்தாலும்...
சித்தி, சித்தப்பாவின் அபார உழைப்பு பிரமிப்பை
வரவழைத்தது//
என்ன நிஜாம் சார் ரெம்ப பிஸியா?... இப்ப சிரிப்புகள் ஒண்ணும் போட மாட்டேங்கிறீங்க.. அடிக்கடி போடுங்க..
இஸ்துகுனு ஓடினாலும் அப்பால வந்து டாடி மம்மியை, நல்லபடியா வெச்சுகினா சர்தாம்ப்பா....
நன்றி..
ஹும்.. இது கலி காலம்....
உங்க சித்திக்காவது பரவாயில்லை.. இன்னும் இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். ஒரே மகனும் இதே வழியில்..தலைவிரி கோலத்தில் அந்த பெற்றோர்..அங்கிகெனாதபடி எங்கும் இதே நிலை..
கதை மிகுந்த கவலையைத்தந்தது.
அருமையா எழுதியிருக்கீங்க ஸ்டீபன்.
இச் சிறுகதை பல இடங்களின் உண்மை கதைதான்..
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_10.html
:-)
Post a Comment