பள்ளியில் வகுப்பு முடிப்பதற்கு சரியாக பத்து நிமிடம் இருப்பதற்கு முன்பு எல்லா புத்தகங்களையும் எடுத்து அடுக்கி விடுவேன். பள்ளியிலேயே சத்துணவில் சாப்பிடுவதால் என்னிடம் ஒரு வட்ட சில்வர் தட்டு இருக்கும். மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி ஈரத்துடன் துணி பையில் வைத்தால், பையில் இருக்கும் புத்தகங்கள் நனைந்து விடும் என்பதால் அதை உலருவதற்காக வெளியில் வைத்திருப்பேன்.
நான் இருக்கும் வகுப்பறையின் ஜன்னல் வழியாக பார்த்தால் வட்ட வடிவமாக வெண்கல தட்டு தொங்கவிடப்பட்டிருப்பது தெரியும். அதன் பக்கத்தில் ஒரு சுத்தியலும் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இறுதி பாடவேளையின் கடைசி நேரத்தில் அந்த சுத்தியலையே பார்த்து கொண்டு இருப்பேன். எனது பக்கத்தில் இருக்கும் ஷெர்லின் கொஞ்சம் வசதியானவன். அவனுடைய அப்பா வெளி நாட்டில் வேலை செய்வதால், அவனுக்கு அவனுடைய அப்பா எண்களை காட்டும் கைகடிகாரம் ஒன்று வாங்கி கொடுத்திருந்தார்.
எங்கள் வகுப்பிலேயே கைகடிகாரம் கட்டி வரும் மாணவன் அவன் ஒருவன் தான். அதுவும் அவன் என் பக்கத்தில் இருப்பதால் எனக்கு வசதியும் கூட. நான்கு மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் போதே வெளியில் இருக்கும் மணியின் பக்கத்தில் இருக்கும் சுத்தியலின் கைப்பிடியை பார்த்து கொண்டே இருப்பேன். அதன் அருகில் ஒரு கை வருவது மட்டும் தெரிந்தால் போதும் என்னுடைய புத்தகப்பை எப்படி எனது தோளில் போகும் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.
இவ்வளவு அவசரமாக கிளம்புவதற்கு காரணம் பள்ளியில் நுழைவு வாயிலை தாண்டுவதற்கு தான். அந்த நுழைவு வாயிலில் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு பேர்தான் செல்ல முடியும். கொஞ்சம் தாமதித்தாலும் மாணவர்களின் கூட்டம் அதிகமாகிவிடும். அதன்பிறகு பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் காத்து இருந்து தான் செல்ல முடியும்.
பள்ளியை விட்டு வெளியில் வந்துவிட்டால் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன். சாதரணமாக என் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்ல பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் ஆகும். காலையில் பள்ளிக்கு வரும் போது நான் கூட இந்த நேரத்தை எடுத்து கொள்வேன். ஆனால் மாலையில் ஐந்து நிமிடங்கள் தான். வாசலில் வரும் போதே "அம்மா சாப்பாடு ரெடியா?" என்று கேட்டு கொண்டுதான் வீட்டிற்குள் நுழைவேன். அம்மாவும் மீன் குழம்பு வைத்து சாப்பாடு ரெடியாக வைத்து இருப்பார். மதியம் பள்ளியில் சத்துணவில் சாப்பிடுவதால் மாலையில் இந்த சாப்பாடு தேவையான ஒன்றாகவே இருக்கும்.
சாப்பாடு முடித்து விட்டு வீட்டிற்கு வெளியில் வந்து விட்டால் அந்தி மாலை இருட்டும் வரை வீட்டிற்குள் திரும்ப வருவது இல்லை. எங்கள் அப்பாவின் கூட பிறந்தவர்கள் ஆறு பேர் உண்டு. அனைவரும் எங்கள் வீட்டின் பக்கத்தில் தான் இருந்தார்கள். அனைவரின் வீடுகளும் வரிசையாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் என்னை போல் சிறுவர் பாட்டாளம் உண்டு.
எங்கள் குடும்பம் நெல் விவசாயத்தை மையமாக கொண்டது. நெற்பயிரை அறுவடை செய்வதற்கு பெரிய இடம் தேவைப்படும். அந்த இடத்தை கிராமத்தில் "களம்" என்று அழைப்பார்கள். அந்த களத்தை அறுவடை காலத்தில் உபயோகப்படுத்துவார்கள். மற்ற நேரத்தில் அந்த இடம் எங்களுடைய விளையாட்டு களமாக இருக்கும். கோலி குண்டு, சிங்காம்பிள்(கிட்டிபிள்), பந்து எறிதல், பாண்டி, நாடு பிடித்தல் போன்ற விளையாட்டுகள் பிரதானமாக இடம்பெறும்.
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-
பள்ளி விடுவதற்கு பதினைந்து நிமிடங்கள் இருப்பதற்கு முன்பாகவே என்னுடைய அண்ணி பள்ளியின் வாசலில் காவல் நின்றார்கள். பள்ளியில் நான்கு மணிக்கு மணி அடிக்கின்றது. ஒரு சின்ன ஆரவாரமும் கேட்கவில்லை, எந்த மாணவர்களும் வெளியில் வரவும் இல்லை. நான் என் அண்ணியிடம் "வகுப்பு முடிந்து விட்டதல்லாவா?" என்று கேட்டேன். அவரும் "ஆம்" என்று எனக்கு பதிலளித்தார். சிறிது நேரத்தில் வரிசையாக கைதிகள் வருவது போல் ஒவ்வொரு மாணவனாக வந்து கொண்டிருந்தார்கள்.
வந்த எந்த ஒரு மாணவனின் முகத்திலும் வீட்டிற்கு போகிறோம் என்ற சந்தோசத்தை பார்க்க முடியவில்லை. பிரிக்கேஜியில் இருந்து மாணவர்கள் வரிசையாய் வர ஆரம்பித்து நான்காம் வகுப்பு வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. அரவிந்த் படிப்பது ஐந்தாம் வகுப்பு. அவன் வரிசையில் தூரத்தில் நிற்பதை அண்ணி பார்த்து விட்டார். கண்களாலேயே அவனை மிரட்டினார். "சீக்கிரம் வா" என்று.
வாசலில் அரவிந்த் வந்தவுடன் கையை பிடித்து கொண்டு "உனக்கு நடக்க தெரியாதா?" உன்னுடைய வகுப்பு படிக்கும் சுரேஷ் முதல் ஆளாய் வந்துவிட்டான். "வா!!! சீக்கிரம் வந்து வண்டியில் ஏறு" என்று மிரட்டினார். வண்டியில் அண்ணியும், அரவிந்தும் ஏறியவுடன் நான் வண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு செலுத்தினேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் நாங்கள். பள்ளி முடிந்து நான் ஓடி வந்த தொலைவைதான் நாங்கள் மூன்று பேரும் வண்டியில் வந்தோம்.
வீட்டிற்கு வந்ததும் அரவிந்திற்கு சாப்பாடு வலுகட்டாயமாக கொடுக்க படுகிறது. காலையில் பள்ளிக்கு போகும் போதே அவனுடைய புத்தக மூட்டையை விட பெரிதாக, சாப்பாடு மூட்டை ஒன்று கொடுத்து அனுப்ப படுகிறது. அதில் மதியம் சாப்பாடு, மற்றும் ஒரு பாட்டிலில் பால், ஒரு பழம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கட் போன்றவை. இத்தனையும் சாப்பிட்டால் மாலையில் பசி எப்படி எடுக்கும்?. சாப்பாடு முடிந்தவுடன் அவசர அவசரமாக துணி மாற்ற படுகிறது.
கையில் மற்றொரு புத்தக பையுடன் வண்டியில் ஏறினான். இப்போது அவன் போகும் இடம் ஹிந்தி வகுப்பிற்கு. நான் அவனை வண்டியில் கொண்டு விட்டு விட்டு வீட்டிற்கு வந்தேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து அவனை திரும்ப அழைத்து கொண்டு ஒரு கம்யூட்டர் கிளாசில் விட்டேன். அங்கு அவனுக்கு ஒரு மணி நேரம் வகுப்பாம். இது முடிந்தவுடன் அரவிந்த் வீட்டிற்கு வருவது கிடையாது. எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அவனுடைய மிஸ்ஸிடம் டியுசன் வகுப்பு ஒரு மணி நேரம்.
எல்லா வகுப்பையும் முடித்துவிட்டு அரவிந்த் வீட்டிற்கு வருவது ஒன்பது மணி.
அரவிந்தை பார்க்கும் போது எனது மனதிற்குள் ஒரு நெருடல் வராமல் இல்லை. அந்த நெருடல் அனுதாபமா? ஏக்கமா?
தொடரும்........
.
.
Sunday, June 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
அது ஏக்கம் இல்ல அனுதாபம்தான்...
காலம் மாறிப்போச்சுத்தல... இப்பவுள்ள பசங்க கம்ப்யுட்டரோடத்தான் விளையாடுதுங்க.
உங்க பள்ளி வாழ்க்கையை படிச்சப்போது எனக்கும் என்னோட ஸ்கூல் விட்டதும் யாரு முதல்ல ரோட்டுக்கு வர்றாங்கனு நடக்குற போட்டி ஞாபகத்துக்கு வந்துடுச்சு...
இரண்டு கதைகள்.. நல்ல முயற்சி .. அன்றைய நாட்கள் இனிதானவை கிராமத்து பள்ளிக் கூடம், ஆறு, மீன் பிடித்தல் வகை வகையான விளையாட்டு இப்போது நகரத்தில் என்ன கிராமத்தில் கூட கிரிக்கெட் தவிர வேறெதுவும் கிடையாது.. தொடருங்கள் .
நல்லா எழுதிரிக்கிங்க... தொடருங்கள்
நாடோடி, நல்லா இருக்கு. இந்தக் காலத்தில் பிள்ளைகளை எங்கே விளையாட அனுப்புறாங்க. அந்த கிளாஸ், இந்த கிளாஸ் என்று ஓய்வே இல்லாமல் பிள்ளைகள் ஓடியபடி. பாட்டு, டான்ஸ் கிளாஸ் என்று ஒரே தொல்லை. அதில் பிள்ளைகளுக்கு விருப்பம் இருக்கா என்று அறிந்து கொள்வதும் இல்லை. பக்கத்து வீட்டில் அனுப்பினால் நாங்களும் அனுப்ப வேண்டும் என்று போட்டியே காரணம்.
ஸ்டீபன் அருமை. என்னுடைய பள்ளி ஞாபகங்களும் நினைவுக்கு வந்துவிட்டது. என்ன அருமையான பள்ளிநாட்கள்.. அதை இப்போது நினைக்கும்போதும் சுகமாக இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் பிள்ளைகளின்மீது படிப்பு திணிக்கப்படுகிறது. அப்போ உள்ள ஒரு ஜாலி, சுதந்திரமில்லாம் காணாமல் போனதை நினைக்கும்போது இனி வருங்காலம் எப்படி இருக்குமோ?.. தெரியல..
என்னோட ஸ்கூல்லயும் அதே சுத்தி வட்ட வடிவ வெண்கலத்தட்டு,3அடி வாசல் அடிதடி முதல்ல யாரு போறாங்கன்றது எல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க,,,
அன்றும் இன்றும் ....... தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்....... அருமையாக இருக்கிறது.
எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து உண்டு. நமக்கு அந்த காலத்திய நிதான வாழ்க்கை தெரியும் என்பதால் இன்றைய குழந்தைகள் மேல் அனுதாபம் வருகிறது. அவர்களுக்கு அது தெரியாத வரையில் இது தான் வாழ்க்கை என்று நினைப்பார்கள். அது வேதனையாக தெரியாது. ரொம்ப காலமாக மூளையின் மிகச் சிறிய பகுதி தான் பயன்படுத்தப் பட்டுக் கொண்டு இருந்தது. இன்று கொஞ்சம் கூடி இருக்கிறது. என்ன ஒன்று ஒவ்வொரு குழந்தையின் தாங்கு சக்திக்கு ஏற்றாப் போல் பளு கொடுக்க வேண்டும்.
வீட்டிற்க்கு வரும் சந்தோஷம் குழந்தைகளுக்கு அன்று போல் இன்று இல்லை என்பது உண்மை தான்.
ரொம்ப அருமையாக எழுதியிருக்கேங்க...
தேவையே இல்லை இந்த மாதிரி படிப்பு..இந்தியா முழுவதும் ஒரே கல்வி வரனும்..தாய் மொழி தவிர..பாட சுமை ,புத்தகச்சுமை,ஒரு வாரத்துக்கு மூன்று வகயான யூனிபாம்,இரண்டு வை சூ....எழுத எழுத நீண்டுட்டே போகும்..
ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது மகனுக்கு 10 வகையான புத்தகங்கள்...
:). Nice. continue
நாய்க்குட்டி மனசு சொல்வது மிக சரி.
@நாஞ்சில் பிரதாப் said...
//அது ஏக்கம் இல்ல அனுதாபம்தான்...
காலம் மாறிப்போச்சுத்தல... இப்பவுள்ள பசங்க கம்ப்யுட்டரோடத்தான் விளையாடுதுங்க.//
கம்ப்யூட்டரோட விளையாடினா பரவாயில்லை தல... அதுல என்ன செய்ய கூடாதோ அதையும் செய்றாங்க தல... அதுதான் வருத்தமா இருக்கு..
@கே.ஆர்.பி.செந்தில் said...
//இரண்டு கதைகள்.. நல்ல முயற்சி .. அன்றைய நாட்கள் இனிதானவை கிராமத்து பள்ளிக் கூடம், ஆறு, மீன் பிடித்தல் வகை வகையான விளையாட்டு இப்போது நகரத்தில் என்ன கிராமத்தில் கூட கிரிக்கெட் தவிர வேறெதுவும் கிடையாது.. தொடருங்கள் .///
அடுத்த பதிவுக்கு எடுத்து குடுத்திருக்கீங்க செந்தில் அண்ணா... மீன், ஆறு.. சூப்பர் எழுதிடுவோம்..
முதல் முறையா தளத்திற்கு வந்திருக்கீங்க, வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி ... தொடர்ந்து வாங்க,
@நாஞ்சில் பிரதாப் said...
//உங்க பள்ளி வாழ்க்கையை படிச்சப்போது எனக்கும் என்னோட ஸ்கூல் விட்டதும் யாரு முதல்ல ரோட்டுக்கு வர்றாங்கனு நடக்குற போட்டி ஞாபகத்துக்கு வந்துடுச்சு...//
பழைய ஞாபகங்களை அசை போடுறதே நல்ல சுகம் தல..
@Riyas said...
//நல்லா எழுதிரிக்கிங்க... தொடருங்கள்//
வாங்க ரியாஸ்... என்ன உங்க கமெண்ட் பெட்டியை மூடி வச்சுருக்கீங்க?... திறந்து விடுங்க.. கமெண்ட் போட முடியவில்லை..
@vanathy said...
//நாடோடி, நல்லா இருக்கு. இந்தக் காலத்தில் பிள்ளைகளை எங்கே விளையாட அனுப்புறாங்க. அந்த கிளாஸ், இந்த கிளாஸ் என்று ஓய்வே இல்லாமல் பிள்ளைகள் ஓடியபடி. பாட்டு, டான்ஸ் கிளாஸ் என்று ஒரே தொல்லை. அதில் பிள்ளைகளுக்கு விருப்பம் இருக்கா என்று அறிந்து கொள்வதும் இல்லை. பக்கத்து வீட்டில் அனுப்பினால் நாங்களும் அனுப்ப வேண்டும் என்று போட்டியே காரணம்.//
நீங்க சொல்வது சரிதான் வானதி மேடம்.... பக்கத்து வீட்டு காரர்களுடன் எதுக்கெல்லாம் கம்பேர் பண்ணுவது என்பது தெரியாமல் போயாச்ச்சி...
அருமையா எழுதிருக்கீங்க....எனக்கும் என் பள்ளி நாட்களை நினைவு படுத்தும் படியான விவரிப்புகள்.
நல்லா இருக்கு ஸ்டீபன்
:)
@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ஸ்டீபன் அருமை. என்னுடைய பள்ளி ஞாபகங்களும் நினைவுக்கு வந்துவிட்டது. என்ன அருமையான பள்ளிநாட்கள்.. அதை இப்போது நினைக்கும்போதும் சுகமாக இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் பிள்ளைகளின்மீது படிப்பு திணிக்கப்படுகிறது. அப்போ உள்ள ஒரு ஜாலி, சுதந்திரமில்லாம் காணாமல் போனதை நினைக்கும்போது இனி வருங்காலம் எப்படி இருக்குமோ?.. தெரியல..//
வாங்க ஸ்டார்ஜன்... பழைய பள்ளி நினைவுகளை பற்றி நினைத்தாலே சந்தோசம் தான்..
@ப்ரியமுடன்...வசந்த் said...
//என்னோட ஸ்கூல்லயும் அதே சுத்தி வட்ட வடிவ வெண்கலத்தட்டு,3அடி வாசல் அடிதடி முதல்ல யாரு போறாங்கன்றது எல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க,,,///
உண்மைதான் வசந்த்.... அப்ப இந்தபதிவு வெற்றிதான்... பழைய நினைவுகளை அசை போடத்தான் எழுதினேன்...
@Chitra said...
//அன்றும் இன்றும் ....... தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்....... அருமையாக இருக்கிறது.///
வாங்க சித்ரா மேடம்.... தொடர்ந்து உங்கள் ஆதரவு இருப்பதால் கண்டிப்பா எழுதுவேன்..
@நாய்க்குட்டி மனசு said...
//எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து உண்டு. நமக்கு அந்த காலத்திய நிதான வாழ்க்கை தெரியும் என்பதால் இன்றைய குழந்தைகள் மேல் அனுதாபம் வருகிறது. அவர்களுக்கு அது தெரியாத வரையில் இது தான் வாழ்க்கை என்று நினைப்பார்கள். அது வேதனையாக தெரியாது. ரொம்ப காலமாக மூளையின் மிகச் சிறிய பகுதி தான் பயன்படுத்தப் பட்டுக் கொண்டு இருந்தது. இன்று கொஞ்சம் கூடி இருக்கிறது. என்ன ஒன்று ஒவ்வொரு குழந்தையின் தாங்கு சக்திக்கு ஏற்றாப் போல் பளு கொடுக்க வேண்டும்.
வீட்டிற்க்கு வரும் சந்தோஷம் குழந்தைகளுக்கு அன்று போல் இன்று இல்லை என்பது உண்மை தான்.//
இது மாற்று கருத்து இல்லையே.... முழுவதும் நானும் உடன்படுகிறேன்... ஆனால் குழந்தைகளின் மன நிலையை அறிந்துதான் நாம் அவர்களை படிக்க வைக்கிறோமா?...
@malar said...
//ரொம்ப அருமையாக எழுதியிருக்கேங்க...
தேவையே இல்லை இந்த மாதிரி படிப்பு..இந்தியா முழுவதும் ஒரே கல்வி வரனும்..தாய் மொழி தவிர..பாட சுமை ,புத்தகச்சுமை,ஒரு வாரத்துக்கு மூன்று வகயான யூனிபாம்,இரண்டு வை சூ....எழுத எழுத நீண்டுட்டே போகும்..
ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது மகனுக்கு 10 வகையான புத்தகங்கள்...///
வாங்க மலர் யக்கா... சமச்சீர் கல்வி என்று ஒண்ணு சொன்னாங்க... ஆனா இந்த பள்ளி கட்டணங்களின் பிரச்சனையில் அது காணாமல் போய்விட்டது.. கல்வி சுமையாகி வருகிறது.. என்னத்த சொல்ல..
@வானம்பாடிகள் said...
//:). Nice. continue///
வாங்க ஐயா... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@தமிழ் உதயம் said...
//நாய்க்குட்டி மனசு சொல்வது மிக சரி.//
வாங்க தமிழ் சார்... உங்கள் இருவரின் கருத்தோடும் ஒத்து போகிறேன்..
எனக்கும் அனுதாபம்தான் மிஞ்சுகிறது.
அந்த காலத்துல படிச்ச நாமளே நம்ம பிள்ளைகளை காலமாற்றத்துக்கேற்ப படிக்க வைக்கிறோம். அவர்களோட பிள்ளைகளை இன்னும் 25 ஆண்டுகள் கழித்து எப்படி படிக்கவைப்பார்கள் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.
நாம நிதானமா எல்லாத்தையும் அனுபவிச்சோம்னா, அப்ப உலகமே நிதானமாத்தான் சுத்துச்சு. இப்ப அப்படியா? அன்னிக்கு பாஸஞ்சர் ரெயில்; இன்னிக்குப் பறக்கும் ரெயில்!!
குழந்தைங்க மாறிடுவாங்க; நம்மளப் போல பெரியவங்கதான் அட்ஜஸ்ட் பண்ணமுடியாம ரொம்பத் தடுமாறி, பயந்து குழந்தைகளையும் பறக்க வைக்கிறோம்.
கஷ்டமாத்தான் இருக்கு.
என்ன பண்றது.
வாழ்க்கைக்கு எது தேவன்னு சரியா தெரியல, யாருக்குமே.
கதை ரொம்ப அருமை! வாழ்த்துகள் ஸ்டீபன்..
இப்ப உள்ள வங்கதான் பாவம்.....
என் சிறு வயது பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்த பதிவு
நன்று தொடருங்கள்
ஸ்டீபன் அருமையாக ஞாபகப்படுத்தி எழுது இருக்கிறீங்க..வெல்டன்
ஹ்ம்ம்... எனது பள்ளி நினைவுகளையும் ஞாபக படுத்திட்டீங்க..
அருமையான பகிர்வு. நன்றி..
காலம் எவ்வாறு வேகமகச் சுற்றுகிறது. ஆயினும் உணர்வுகள் சாகாது. பழைய நினைவுகள் நிழலாடுகிறது. பாராட்டுக்கள்.
Nanri...
Thanks...
natpudan..
Kanchi Murali...
என்னை சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்று விட்டது உங்கள் பதிவு. அன்று நமக்கு கிடைத்த சந்தோஷம் உண்மையிலேயே இந்த கால குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வ்ருத்தமாக உள்ளது.
@கண்ணா.. said...
///அருமையா எழுதிருக்கீங்க....எனக்கும் என் பள்ளி நாட்களை நினைவு படுத்தும் படியான விவரிப்புகள்.
நல்லா இருக்கு ஸ்டீபன்
:)///
வாங்க தல... நினைவுகளை அசை போட வேண்டும் என்று தான் எழுதினேன்..
@அக்பர் said...
//எனக்கும் அனுதாபம்தான் மிஞ்சுகிறது.
அந்த காலத்துல படிச்ச நாமளே நம்ம பிள்ளைகளை காலமாற்றத்துக்கேற்ப படிக்க வைக்கிறோம். அவர்களோட பிள்ளைகளை இன்னும் 25 ஆண்டுகள் கழித்து எப்படி படிக்கவைப்பார்கள் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.//
அதுவும் ஒரு அனுபவமாக இருக்கும் அக்பர்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@ஹுஸைனம்மா said...
//நாம நிதானமா எல்லாத்தையும் அனுபவிச்சோம்னா, அப்ப உலகமே நிதானமாத்தான் சுத்துச்சு. இப்ப அப்படியா? அன்னிக்கு பாஸஞ்சர் ரெயில்; இன்னிக்குப் பறக்கும் ரெயில்!!
குழந்தைங்க மாறிடுவாங்க; நம்மளப் போல பெரியவங்கதான் அட்ஜஸ்ட் பண்ணமுடியாம ரொம்பத் தடுமாறி, பயந்து குழந்தைகளையும் பறக்க வைக்கிறோம்.///
ஆமாங்க கரெக்டு தான்... உலகம் போகும் வேகத்திற்கு நாமும் ஈடு கொடுத்து தான் ஆகனும்..
@soundr said...
//கஷ்டமாத்தான் இருக்கு.
என்ன பண்றது.
வாழ்க்கைக்கு எது தேவன்னு சரியா தெரியல, யாருக்குமே.//
வாங்க சவுந்தர்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@எம் அப்துல் காதர் said...
//கதை ரொம்ப அருமை! வாழ்த்துகள் ஸ்டீபன்..///
வாங்க அப்துல்.. புறா பிரியாணி எப்ப?.. மறந்து விடாதீங்க,,,,
@Software Engineer said...
//இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
http://kaniporikanavugal.blogspot.com///
வாங்க சாப்ட்வேர் இஞ்சினீயர்... உங்க அப்ரோச் ரெம்ப பிடிச்சிருக்கு... வருகைக்கு நன்றி ... வோட்டுக்கும் நன்றி..
@ஜெய்லானி said...
//இப்ப உள்ள வங்கதான் பாவம்.....//
வாங்க ஜெய்லானி... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி,,
@r.v.saravanan said...
//என் சிறு வயது பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்த பதிவு
நன்று தொடருங்கள்//
அப்படியா சரவணன்.. ரெம்ப சந்தோசம்...
@அஹமது இர்ஷாத் said...
//ஸ்டீபன் அருமையாக ஞாபகப்படுத்தி எழுது இருக்கிறீங்க..வெல்டன்//
வாங்க இர்ஷாத்... ரெம்ப சந்தோசம்..
@Ananthi said...
//ஹ்ம்ம்... எனது பள்ளி நினைவுகளையும் ஞாபக படுத்திட்டீங்க..
அருமையான பகிர்வு. நன்றி..//
வாங்க ஆனந்தி மேடம்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Dr.எம்.கே.முருகானந்தன் said...
//காலம் எவ்வாறு வேகமகச் சுற்றுகிறது. ஆயினும் உணர்வுகள் சாகாது. பழைய நினைவுகள் நிழலாடுகிறது. பாராட்டுக்கள்.//
வாங்க டாக்டர் சார்... உங்கள் பாரட்டுக்கு ரெம்ப நன்றி..
@காஞ்சி முரளி said...
//Nanri...
Thanks...
natpudan..
Kanchi Murali...//
வாங்க முரளி சார்... திட்டனும் என்று முடிவு பண்ணிட்டீங்க... அப்புறம் என்ன இங்கிலீசில் திட்டிகிட்டு.. தமிழ்லேயே திட்டுங்க....(சும்மா சொன்னேன் சார்... உங்கள் முதல் வருகைக்கு ரெம்ப நன்றி. தொடர்ந்து வாங்க)
@பி.திரவிய நடராஜன் said...
//என்னை சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்று விட்டது உங்கள் பதிவு. அன்று நமக்கு கிடைத்த சந்தோஷம் உண்மையிலேயே இந்த கால குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வ்ருத்தமாக உள்ளது.//
வாங்க நடராஜன் சார்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
அருமையா எழுதி இருக்கீங்க நண்பரே...வாய்ப்பே இல்லை...படித்து முடிக்கும் வரை நான் என் பால்ய வயது பள்ளியின் கடைசி பெஞ்சில் போய் மீண்டும் அமர்ந்த விட்டது போல ஒரு உணர்வு...அன்றைய சூழ்நிலையையும் இன்றைய சூழ்நிலையையும் இணைத்து பார்த்தது மேலும் இந்த கட்டுரைக்கு வலிமை..போலவே வரிகளுக்குள் இருந்த உங்களின் குரல் மிக மென்மையாக இருக்கிறது. தொடருங்கள் உங்களின் நினைவுகளையும் எழுத்துக்களையும்.....
அருமையாக எழுதி இருக்கீங்க ஸ்டீபன்.
ம்ம்ம்ம் என்ன சொல்ல இப்படில நீ கஷ்டப்பட வேணாம்னு ஹாஸ்டல்லுக்கு அனுப்ப படும் பிள்ளைகள் இதைவிட அனுதாபத்துக்கு உரியவர்கள்.......
அன்பின் ஸ்டீபன்
அனுதாபமா ஏக்கமா ? நிச்சயம் அனுதாபம் தான் - அக்கால பள்ளி வாழ்க்கையினையும் இக்கால பள்ளி வாழ்க்கையினையும் ஒப்பு நோக்கும் அருமையான பதிவு. என்ன செய்வது - காலம் மாறுகிறது - எல்லாம் நன்மைக்கே - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
Post a Comment