ஜெனி அக்கா ஊரில் இருந்து வந்துவிட்டால் எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. ஆட்டம் பாட்டம் என்று ஒரே ஆர்பாட்டமாக இருக்கும். வரிசையாக இருக்கும் எங்கள் பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கு சென்று அறிமுகப்படுத்திவிட்டு எங்களுடன் தான் எப்போதும் இருப்பார். முத்துப்பல் தெரிய இனிக்க இனிக்க பேசுவார்,கதைகள் பல சொல்வார், ஜெனி அக்கா வந்துவிட்டால் போதும் எங்கள் வீட்டில் வாண்டுகளின் கூட்டம் அதிகமாகிவிடும். எல்லாரிடமும் சகஜமாக பேசுவார். அனைவரையும் வசீகரிக்கும் முகம்.
ஜெனி அக்கா என்னுடைய பெரியப்பாவின் ஒரே பெண். பெரியப்பாவின் தொழில் ரிகண்டிசனிங் பேட்டரிகள் செய்து விற்பது. இப்போதைய மோல்டடு பேட்டரிகள் வருவதற்கு முன்பு இவைகள் அதிகம் பிரபலம். ஊள்ளுரில் என்னுடைய சித்தப்பா இந்த கடை வைத்திருந்ததால், பெரியப்பா கடலூர் சென்று புதிய கடை ஒன்று ஆரம்பித்தார். கடலூரில் மீன்பிடி தொழில் சிறந்து விளங்குவதால் இந்த பேட்டரிகளின் வியாபாரமும் சூடுபிடித்தது. படகில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கு இந்த பேட்டரிகளில் இயங்கும் லைட்டின் ஒளிதான் அணையாவிளக்கு. புதிதாக பேட்டரிகள் செய்து விற்பதும், வாடகைக்கு விடுவதும் என்று பெரியப்பாவிற்கு தொழில் அமோகமாய் இருந்தது.
கடலூரில் உள்ள பிரபலமான பெண்கள் கன்வெண்ட் ஸ்கூலில் தான் ஜெனி அக்கா படித்து கொண்டிருந்தார்கள். அரையாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறை மற்றும் முழுவாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறையில் தவறாமல் எங்கள் ஊருக்கு வந்துவிடுவார்கள்.
இந்த வருடம் முழுவாண்டுத் தேர்வு முடிந்து ஒருவாரம் ஆகிவிட்டது, ஜெனி அக்கா வரவில்லை. நான் அம்மாவிடம் சென்று என்னவென்று கேட்டேன். "ஜெனி அக்காவுக்கு இந்த வருடம் கல்யாணம் பண்ண போறாங்க!! மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சு, அடுத்த மாதம் கல்யாணம் நடக்குது, அதுக்குத்தான் பெரியப்பா, பெரியம்மா மற்றும் ஜெனி அக்கா எல்லாம் வருவாங்க" என்று அம்மா சொல்லிக்கொண்டே சமையல் வேலையில் இருந்தார்கள். அப்ப, இனிமேல் அக்கா எங்க கூட விளையாட வரமாட்டாங்களா? என்று கேட்ட என்னை தலையில் தட்டிவிட்டு சிரித்தார் அம்மா.
ஜெனி அக்காவின் கல்யாண நாளும் வந்தது. என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சந்தோசமாக ஒவ்வொரு வேலையில் இருந்தார்கள். பெரியப்பா வாங்கி கொடுத்த புது துணியை போட்டு கொண்டு எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பார்க்க சாப்பாடு பந்தலுக்கு ஓடினேன். சாப்பாடுப் பந்தியில் இலை போட்டவுடன் இலையை கழுவுவதற்கு தண்ணீர் கொடுப்பதும், பின்பு அவர்களுக்கு டம்ளர் வைத்து அதில் தண்ணீர் நிரப்புவது தான் எங்களுடைய வாண்டு கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட வேலை.
சாப்பாடுப் பந்தி எல்லாம் முடிந்து மணமக்களை வழியனுப்பும் போதுதான் என்னுடைய அம்மா என்னை தேடிவந்து கையைபிடித்து கொண்டு மணமேடைக்கு கூட்டி போனார். ஜெனி அக்காவிற்கு அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கூட இருந்த மாப்பிள்ளை கறுப்பு கோட்டு, சூட்டு போட்டு சிரித்து கொண்டே இருந்தார், பல் மட்டும் தான் வெள்ளையாக தெரிந்தது. ஜெனி அக்கா என்னை பார்த்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை உதிர்த்துவிட்டு கையை பிடித்து கொண்டார். என் அண்ணனும், அப்பாவும் மேடைக்கு வர, நாங்கள் எல்லோரும் மணமக்களை சுற்றி நிற்க போட்டோகிராபரின் கையில் இருந்த கேமராவில் இருந்து வந்த ஒளி என்னை கண்மூட வைத்தது.
கல்யாணம் முடிந்து ஜெனி அக்காவை விருந்துக்காக வந்தபோது பார்த்தது. அதன்பிறகு ஜெனி அக்காவை பார்த்ததே கிடையாது. வீட்டில் அப்பப்ப அம்மாவும், பெரியம்மாவும் பேசும் போது அவர்களுடைய வாயில் ஜெனி அக்காவை பற்றிய பேச்சு வரும்போது நானும் கேட்டு கொள்வேன். ஜெனி அக்காவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது வரை தெரியும். நான் ஒருமுறை கூட அவர்கள் வீட்டிற்கு போனது கிடையாது.
ஜெனி அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்த ஊர் தோவாளை. மலர்மாலை கட்டுவதற்கு தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஊர். ரோஜா, அருளி, வந்தி, செவ்வந்தி, கொழுந்து போன்ற மலர்களின் விவசாயத்திற்கும் பேர் பெற்றது. ஜெனி அக்காவின் வீட்டு காரரும் தனியாக பல மலர் தோட்டம் வைத்திருப்பதாக அம்மா சொல்வார்கள். அவைகளில் உள்ள மலர்களை எல்லாம் சென்னை போன்ற ஊர்களுக்கு அனுப்பும் தொழில் செய்வதாகவும் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்.
ஒருநாள் காலை, கல்லூரிக்கு போக நான் ரெடியாகி கொண்டிருக்கும் போது, பக்கத்தில் உள்ள சித்தப்பா வீட்டில் இருந்த போன் அடிக்கும் சத்தம் எனக்கு கேட்டது. அந்த ஒலியிலேயே எனக்கு தெரிந்தது அது எஸ்டிடி(STD) கால்தான் என்று. போனை பேசி முடித்த சித்தி வெளறிய முகத்துடன் எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தார்.
அவசரமாக வந்த சித்தி வழியில் நின்ற என்னிடம் "சுரேஷ்... கடைக்கு போய் இருக்கும் சித்தப்பாவை உடனே கையோடு கூட்டி வா" என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் சென்று "இந்த ஜெனி பொண்ணு தூக்கல தொங்கிடிச்சாம், கடலூரில் இருந்து பெரிய அத்தானும், அக்கா எல்லாம் கிளம்பி வந்திட்டு இருக்கிறாங்களாம். நம்மளை வண்டி புடிச்சு உடனே போய் பார்க்க சொன்னாங்க" என்று கதறினார்.
இவர்களின் கதறலை கேட்டு, வெளியில் தோட்டத்தில் இருந்த அப்பாவும் ஓடி வந்தார். விசயத்தை கேள்விப்பட்டு உடனடியாக ஒரு வேன் பிடிக்க அப்பா கிளம்பினார்கள், நான் என்னுடைய டூவிலரை எடுத்து கொண்டு சித்தாப்பாவை கூப்பிட சென்றேன்.
அடுத்த அரை மணி நேரத்தில் எங்கள் சொந்தபந்தங்கள் என்று ஒரு வேன் புல்லா நிரம்பிற்று. வண்டி தோவாளையை நோக்கி கிளம்பியது. வண்டியில் இருந்த அனைவரின் முகமும் இறுக்கமாக இருந்தது. அம்மா மற்றும் சித்தியின் கண்களில் நீர் திவலைகள் எட்டி பார்த்தது. "பதினெட்டு வயது முடியல, அதுக்குள்ள அவசரப்பட்டு அந்த மனுஷன் தலையில கட்டி வச்சிட்டான்." என்று மௌனமாக இருந்த வண்டியில் அப்பா பேசினார்.
"நேற்றைக்கும் சண்டை போட்டிருப்பா!!! அதுல தான் இது நடந்திருக்கும்" என்று சித்தப்பா வண்டியின் ஓரத்தில் உள்ள ஜன்னலை வெறித்து கொண்டு பேசினார்.
"கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிடுவாளானு நானும் நல்ல சொன்னேன், அவங்க தான் கேக்கலை" என்று என் அம்மாவும் புலம்பினார்.
வண்டி தோவாளை மெயின் ரோட்டில் இருந்து இறங்கி மேற்கு பக்கமாக செல்லும் ஒற்றை ரோட்டிற்குள் நுழைந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், சென்று கொண்டிருந்த வண்டியை ஒரு பெரிய புளிய மரத்தில் அருகில் இருந்த காலியிடத்தில் ஓரம் கட்ட சொல்லிவிட்டு, வண்டியில் இருந்தவர்களை இறங்க சொன்னார் அப்பா.
வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து, சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் முன் போடப்பட்ட பச்சை ஓலை கொட்டகையில் கூடியிருந்தவர்களை பார்க்கும் போதே அதுதான் ஜெனி அக்காவின் வீடு என்று ஊகித்து கொண்டேன். எங்களை பார்த்தவுடனே கூட்டத்தில் இருந்தவர்களின் அழுகை ஓலம் அதிகமானது. அந்த கூட்டத்தில் இருந்து "மாமாஆஆஆஆ"!!!!!!! என்று ஓலமிட்டு ஒருவர் ஓடி வருவதை பார்த்தேன். வந்தவர் என்னுடைய அப்பாவின் காலில் விழுந்தார். அப்போது தான் அடையாளம் கண்டு கொண்டேன், அவர் தான் ஜெனி அக்காவின் புருசன். நான் அவரை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, முன்பு பார்த்ததை விட என் கண்களுக்கு இளமையாக தெரிந்தார்.
காலில் விழுந்தவரை என்னுடைய அப்பாவும், சித்தப்பவும் சேர்ந்து தூக்கினார்கள். மாமா!!!!!!!! நான் காலையிலேயே தோட்டத்துக்கு மருந்து அடிக்க போயிருந்தேன், மவனுங்க இரண்டு பேரும் என்னுடைய அண்ணன் வீட்டில் விளையாடிட்டு இருந்தாங்க. அந்த நேரம் பார்த்து கிறுக்கி மவா தூக்குல தொங்கிட்டா மா..மா ...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று கதறினார்.
--தொடரும்
=============================================
குறிப்பு: சில துரோகங்கள் - என்ற தலைப்பில் நான் பார்த்த, கேட்ட சில சம்பவங்களை எனது எழுத்தில் கொண்டு வரலாம் என்று நினைத்து தான் இந்த கதையை ஆரம்பிக்கிறேன். நீங்கள் தான் சொல்ல வேண்டும் எப்படியென்று.
.
.
Wednesday, August 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
நல்லாயிருக்கு ஸ்டீபன் தொடருங்கள்..
எதனால தூக்கு மாட்டிக்கிட்டாங்கன்னு அடுத்த போஸ்ட்ல சொல்வீங்களா?
கோழைத்தனமான முடிவுகள் சில தைரியமான பெண்களால் சில நேரங்களில் எடுக்கப்படுகின்றன...
எழுதுங்க ஸ்டீபன்....விறுவிறுப்பான கதைகளை எழுதுங்க...:))
விறுவிறுப்பா எழுதறீங்க! தொடர்ந்து எழுதுங்க.
ஆனால் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயங்கும் கோழைகள் எப்படி தைரியமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்? வாழ்க்கையே புரியாத புதிர்தானோ!
நல்லாருக்கு ஸ்டீபன் தொடருங்கள்..
அருமையாப் போகுது ஸ்டீபன்.
கதையை முழுமையாக படித்த பிறகு முழுமையான கருத்துரை.
@Riyas said...
//நல்லாயிருக்கு ஸ்டீபன் தொடருங்கள்..//
வாங்க ரியாஸ்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@ப்ரியமுடன் வசந்த் said...
//எதனால தூக்கு மாட்டிக்கிட்டாங்கன்னு அடுத்த போஸ்ட்ல சொல்வீங்களா?
கோழைத்தனமான முடிவுகள் சில தைரியமான பெண்களால் சில நேரங்களில் எடுக்கப்படுகின்றன...//
வாங்க வசந்த்..கண்டிப்பா அடுத்த பதிவில் சொல்வேன். அப்போது அந்த பெண்ணை பற்றிய உங்கள் பார்வை மாறலாம்..
@நாஞ்சில் பிரதாப் said...
//எழுதுங்க ஸ்டீபன்....விறுவிறுப்பான கதைகளை எழுதுங்க...:))//
வாங்க பிரதாப்பு... அப்ப இது விறுவிறுப்பா இல்லையா தல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@kavisiva said...
விறுவிறுப்பா எழுதறீங்க! தொடர்ந்து எழுதுங்க.
ஆனால் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயங்கும் கோழைகள் எப்படி தைரியமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்? வாழ்க்கையே புரியாத புதிர்தானோ!//
வாங்க கவிசிவா... விறுவிறுப்பா இருக்கா?.. ரெம்ப நன்றி
@r.v.saravanan said...
//நல்லாருக்கு ஸ்டீபன் தொடருங்கள்..//
வாங்க சரவணன்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@வானம்பாடிகள் said...
//அருமையாப் போகுது ஸ்டீபன்.//
வாங்க பாலா சார்..உங்க வாயில் இருந்து இந்த வார்த்தை கேட்பது சந்தோசமாக இருக்கிறது.. :)
@தமிழ் உதயம் said...
//கதையை முழுமையாக படித்த பிறகு முழுமையான கருத்துரை.//
வாங்க ரமேஷ் சார்... கண்டிப்பா உங்கள் கருத்தை எதிர்பாக்கிறேன். அடுத்த பதிவில் முடித்து விடுவேன். அப்ப சொல்லுங்கள்..
தொடர்ந்து எழுதுங்க ... கதை நன்றாக போகின்றது ...
இப்போது கருத்து கூறமுடியவில்லை. தொடருங்கள்,
கதை நல்லா ஸ்பீடாதான் போகுது.. கதை ஹிரோயினை ஆரம்பத்திலேயே சாகடிச்சிட்டீங்களே....????
நல்ல எழுதியிருக்கிங்க ஸ்டீபன். ஆனா மனம் இது கதையாகவே இருக்க கூடாதான்னு அடிச்சுக்குது. அடுத்த பாகத்தில் விவரம் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.
கதை நன்றாக போகின்றது தொடருங்கள் ஸ்டீபன் ..
நல்லா இருக்கு ஸ்டீபன்..
தொடருங்கள் , வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லா இருக்குங்க.. ஜெனி.. ஏன் அப்படி செஞ்சாங்கன்னு தெரியணுமே...
ஓகே ஓகே.. அடுத்த பதிவுக்கு வெயிட் பண்றேன்..
அடுத்த பாகம் சீக்கிரம் எழுதுங்க.
கதைன்னா செம விறுவிறுப்பா போகுது
நிஜகதைன்னா :((
@கே.ஆர்.பி.செந்தில் said...
//தொடர்ந்து எழுதுங்க ... கதை நன்றாக போகின்றது ...//
வாங்க செந்தில் அண்ணா.. கண்டிப்பா சீக்கிரம் தொடர்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@அருண் பிரசாத் said...
//இப்போது கருத்து கூறமுடியவில்லை. தொடருங்கள்,//
வாங்க அருண்... அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுகிறேன். படித்துவிட்டு சொல்லவும்.
@ஜெய்லானி said...
//கதை நல்லா ஸ்பீடாதான் போகுது.. கதை ஹிரோயினை ஆரம்பத்திலேயே சாகடிச்சிட்டீங்களே....????//
அவங்களை சாகடிச்சா தான் கதை நகருது தல.. அதான் அப்படி.. :))) வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி ஜெய்லானி.
@சிநேகிதன் அக்பர் said...
//நல்ல எழுதியிருக்கிங்க ஸ்டீபன். ஆனா மனம் இது கதையாகவே இருக்க கூடாதான்னு அடிச்சுக்குது. அடுத்த பாகத்தில் விவரம் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.//
நீங்க இதை கதை என்றே படியுங்கள் அக்பர்... அடுத்த பதிவில் கண்டிப்பா சொல்கிறேன்.
@இளம் தூயவன் said...
//கதை நன்றாக போகின்றது தொடருங்கள் ஸ்டீபன் ..//
வாங்க இளம்தூயவன்... அப்ப அடுத்த பாகமும் உங்களுக்கு பிடிக்கும்.
@Balaji saravana said...
//நல்லா இருக்கு ஸ்டீபன்..//
வாங்க பாலாஜி சரவணன்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி,
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் ஸ்டீபன்.. கொஞ்சம் கனத்த மனதுடன்.
ஸ்டீபன், நல்லா இருக்கு. தொடருங்கோ. எனக்கு இந்த தற்கொலை என்ற வார்த்தையை கேட்டாலே மூட் அவுட் ஆகி விடுவேன்.
அன்பிற்கினிய நண்பரே..,
கதைக்களமான அந்த ஊருக்கு போயிருக்கிறேன்.
கதை அருமையாக உள்ளது...தொடருங்கள்..
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.
Post a Comment