Sunday, August 8, 2010

எந்திர‌ன் ரிலீஸ் எப்ப‌டி இருக்கும்?...

எந்திர‌ன் ப‌ட‌த்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்க‌ள். பாட‌ல்க‌ள் அனைத்தும் ஏற்க‌ன‌வே ரிலீஸ் ஆகி ப‌ட்டையை கிள‌ப்புகிற‌து. க‌ண்டிப்பாக‌ இர‌ண்டு பாட‌ல்க‌ள் எல்லோருடைய‌ வாயிலும் முனுமுனுக்க‌ ப‌டுவ‌து உறுதி. "அரிமா அரிமா" நான் இப்போது அடிக்க‌டி கேட்டும் பாட‌லாக‌ இருக்கிற‌து.பெரும்பாலும் நான், என‌க்கு விருப்ப‌மான‌ ப‌ட‌ங்க‌ளை ரிலீஸின் முத‌ல்நாளே பார்த்து விடுவேன். அப்ப‌டி பார்த்தால் தான் ஒரு திருப்தி. சென்னை சிட்டியில் எல்லா ப‌ட‌த்துக்கும் முத‌ல் நாள் டிக்க‌ட் கிடைப்ப‌து குதிரை கொம்பு தான். அத‌னால் நான் சென்னையின் புற‌ந‌க‌ரான‌ அம்ப‌த்தூரில் உள்ள‌ ராக்கி காம்பிள‌க்ஸ் தான் பெரும்பாலான‌ ப‌ட‌ங்க‌ள் பார்ப்பேன்.

மாஸ் ஹீரோக்க‌ளின் ப‌ட‌ங்க‌ள் என்றால் ரிலீஸ் ஆன‌ ஒரு‌நாள் முழுவ‌தும் அந்த‌ காம்பிள‌க்ஸில் உள்ள‌ நான்கு ஸ்கிரின்க‌ளிலும்(ராக்கி, சினி ராக்கி, மினி ராக்கி, ல‌ஷ்மி ராக்கி) போட்டுவிடுவார்க‌ள். என‌வே ஏதாவ‌து ஒன்றில் டிக்க‌ட் கிடைத்துவிடும். அதிக‌மாக‌ போனால் டிக்க‌ட்டின் விலை எண்ப‌தில் இருந்து நூறுவ‌ரை இருக்கும். அத‌ற்கு மேல் விற்ற‌தை நான் பார்த்த‌து இல்லை.

ர‌ஜினியின் சிவாஜி ப‌ட‌ம் ரிலீஸ் ஆன‌ அன்று முத‌ல் நாள் ப‌ட‌ம் பார்க்க‌ வேண்டும் என்ற‌ ஆசை இருந்த‌து. ஆனால் அன்றைக்கு ஆபிஸில் ஆணி அதிக‌ம் லீவு போட‌ முடியாத‌ நில‌மை. நான் என்னுடைய‌ ந‌ண்ப‌னிட‌ம் "கூட்ட‌ம் அதிக‌மா இருக்குமுடா!! அத‌னால‌ காலையிலேயே போய் மாலைக் காட்சிக்கு இர‌ண்டு டிக்க‌ட் வாங்கி வ‌ச்சிக்கோ" என்று சொல்லிவிட்டு ஆபிஸுக்கு போய்விட்டேன்.

ஆபிஸ்ல‌ இருக்கும் போது ந‌ண்ப‌ன் போன் ப‌ண்ணினான் "டேய் நான் தியேட்ட‌ரில் இருக்கிறேன், இன்னும் இர‌ண்டு நாளைக்கு டிக்க‌ட் எதுவும் இல்லையாம், அத‌னால‌ நான் டிக்க‌ட் வாங்க‌ல‌னு சொன்னான்" என்னால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை, இவ‌ன் தியேட்ட‌ர் ப‌க்க‌மே போகாம‌ல் க‌தை விடுகிறான் என்று நினைத்து கொண்டேன். கார‌ண‌ம் எந்த‌வொரு ப‌ட‌த்திற்கு இப்ப‌டி இருந்த‌து இல்லை. நான் கேட்ட‌தும் இல்லை.

மாலையில் ஆபிஸ்வேலை முடித்துவிட்டு வ‌ந்து, வ‌ண்டியை எடுத்து கொண்டு ந‌ண்ப‌னும் நானும் தியேட்ட‌ருக்கு போனோம். போகும் போதே ந‌ண்ப‌ன் சொன்னான் டிக்கெட் கிடைக்காது என்று, நான் அதை காதிலே வாங்க‌வில்லை. அம்ப‌த்தூர் OT ப‌ஸ் ஸ்டாண்டை தாண்டி போகும் போதே தெரிந்த‌து ம‌க்க‌ளின் கூட்ட‌ம். தியேட்ட‌ர் ப‌க்க‌ம் வ‌ண்டியை கொண்டு போக‌ முடியாத‌ அள‌வு கூட்ட‌ம். போலிஸ் வேறு போட்டிருந்தார்க‌ள். என‌வே வ‌ழியிலேயே நாங்க‌ள் ரெகுலராக‌ சாப்பிடும் ஹோட்ட‌லில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு ந‌ட‌ந்து மெதுவாக‌ தியேட்ட‌ர் ப‌க்க‌ம் சென்றேன்.

காட்சி நேர‌ங்க‌ள் எல்லாம் மாற்றியிருந்தார்க‌ள். மேட்னி ஷேவே இன்னும் முடிய‌வில்லை. அத‌னால் மெயின் வாச‌லை மூடி வைத்திருந்தார்க‌ள். டிக்க‌ட் எடுப்ப‌த‌ற்கு க‌வுண்ட‌ரில் ஹ‌வுஸ்புல் போர்டு மாட்டி இருந்தார்க‌ள். கேட்டில் நிற்கும் தியேட்ட‌ர் ஊழிய‌ர்க‌ள் இர‌ண்டு நாட்க‌ளுக்கு டிக்க‌ட் இல்ல‌ அத‌னால‌ யாரும் வெயிட் ப‌ண்ண‌ வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தார்க‌ள்.

அவ‌ர்க‌ள் சொல்வ‌தை கேட்டு கூட்ட‌ம் ம‌ட்டும் ந‌க‌ர்ந்த‌தாக‌ தெரிய‌வில்லை. "டிக்க‌ட் இல்லைனு சொல்லிட்டு அவ‌னுவ‌ளுக்கு தெரிஞ்ச‌ ஆட்க‌ளுக்கு ம‌ட்டும் ஆயிர‌ம், ஐநூறுனு விக்கிறானுங்க‌" என்று என்னுடைய‌ ப‌க்க‌த்தில் இருந்த‌ தாடிவ‌ச்ச‌ அறுப‌து வ‌ய‌து பெரிசு சொல்லிய‌து.

இது எதுவும் ஆவுற‌து இல்ல‌னு ப‌க்க‌த்தில் இருந்த‌ ந‌ண்ப‌னிட‌ம் "வாட‌ நாம‌ போக‌லாம், அப்புற‌மா வ‌ந்து பாக்க‌லாம்" என்றேன். அவ‌ன் என்னிட‌ம் "ஒரு நிமிட‌‌ம்" என்று சொல்லி கொண்டு ஒரு ப‌க்க‌மாக‌ ந‌ட‌ந்தான். நான் கூட்ட‌த்தை வேடிக்கை பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். அப்போது ஒரு ஹோண்டா காரில் இருந்து கூலிங்கிளாஸோடு இற‌ங்கிய‌ ந‌ப‌ர் நேராக‌ சைக்கிள் நிறுத்த‌ காசு வ‌சுலிப்ப‌வ‌ரை நோக்கி சென்றான். அவ‌ரிட‌ம் சென்று மூன்று ஆயிர‌ம் ரூபாய் நோட்டை நீட்டி என‌க்கு மூன்று டிக்க‌ட் வேண்டும் என்றான். யோவ் டிக்க‌ட் எதுவும் இல்லையா!! போய்யா என்று சுத்த‌ சென்னை பாஷையில் க‌த்தினார். அப்ப‌டியும் அவ‌ரிட‌ம் ந‌ம்ம‌ கூலுங்கிளாஸ் ஹீரோ கெஞ்சி கொண்டிருந்தான்.

அப்ப‌டியே ம‌றுப‌க்க‌ம் திரும்பினால் குடும்ப‌ த‌லைவ‌ர் ஒருத்த‌ர் த‌ன் குடும்ப‌ த‌லைவியிட‌ம் டிக்க‌ட் காசை திணித்து "நீ போய் கேளு" அப்ப‌த்தான் டிக்க‌ட் த‌ருவானுங்க‌ என்று சொல்லிகொண்டிருந்தார். அந்த‌ த‌ங்க‌ம‌ணி அம்மா ம‌ருங்க‌ ம‌ருங்க‌ விழித்து கொண்டிருந்தார்க‌ள்.

கூட்ட‌த்தில் இருந்து க‌ரை வேட்டி, ச‌ட்டை போட்ட‌ ஆளு ஒருத்த‌ர் நேராக‌ தியேட்ட‌ருக்குள் நுழைந்தார். அவ‌ரை பார்த்த‌வுட‌ன் வாச‌ல் தானாக‌ திற‌ந்த‌து. அவ்ர் பின்ன‌டியே ஒரு குடும்ப‌ம் உள்ளே நுழைந்த‌து. இப்ப‌டி வ‌ருவோரையும், போவோரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த‌ என்னை "ஒரு நிமிட‌‌ம்" என்று சொல்லிவிட்டு போன‌ ந‌ண்ப‌ன் அரை ம‌ணி நேர‌ம் க‌ழித்து வ‌ந்து கையை பிடித்தான்.

என்ன‌டானு கேட்டேன், என‌க்கு தெரிஞ்ச‌ ஒருத்த‌ரிட‌ம் டிக்க‌ட் இருக்கு ஆயிர‌த்து ஐநூறு ரூபாய் கொடுத்தால் இர‌ண்டு டிக்க‌ட் கொடுப்பார் என்றான். போடா வென்று!!!!!!!! இன்னும் இந்த‌ மாச‌ம் முடிய‌ ப‌தின‌ஞ்சு நாளு இருக்கு என்னிட‌ம் செல‌வுக்கு இருக்கிற‌தே அவ்வ‌ள‌வு தான். வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்ட‌ல்ல‌ கொத்து புரோட்டா சாப்பிட‌லாம் என்று இழுத்து வ‌ந்தேன்.

60 கோடி ரூபாய் ப‌ட்ஜெட்ல‌ தாயாரித்த‌ "சிவாஜி" ப‌ட‌த்திற்கே இந்த‌ அள‌வு டிக்க‌ட் விலை என்றால்(அதுவும் சென்னைக்கு அவுட்ட‌ர்) இதை போல் மூன்று ம‌ட‌ங்கு அதிக‌ ப‌ட்ஜெட்ல‌ த‌யாரித்த‌ "எந்திர‌ன்" ப‌ட‌த்திற்கு முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் என்ன‌ டிக்க‌ட் விலை வைப்பார்க‌ள் நினைக்க‌வே த‌லை சுத்துது. ஆனா அந்த‌ காமெடி எல்லாம் பார்க்க‌தான் என‌க்கு இந்த‌ வ‌ருட‌ம் கொடுத்து வைக்க‌வில்லை.... ஹி.. ஹி... "எல்லாம் ந‌ன்மைக்கே"

======================================================


.

.

18 comments:

நாஞ்சில் பிரதாப் said...

hahaha.... இந்தமாதிரி க்ரேஸ் நமக்கு கிடையாது தல...

ஒரு தடவை உதயம் தியேட்டருல தவமாய் தகவமிருந்து பார்க்க போனேன் housfull ஆயிடுச்சு, வேற தியேட்டர்ல சிவாகசி ஓடிட்டிருந்துச்சு.
ஒருத்தன் வந்து சிவகாசி படத்துக்கு பிளாக்ல டிக்கெட் 150 ருபாய் வேணுமான்னு கேட்டான்.அவன்கிட்ட சொன்னேன் "நீங்க சும்மா கொடுத்தாலும் வேண்டாம்னு... :))

ரஜினி படம் முதல் ஒருவாரம் தியேட்டர் பக்கமே போகமுடியாது...அதனால அந்த ரிஸ்க் எடுக்கறதே இல்லை.

ஜெய்லானி said...

அப்படி பார்த்து என்ன ஆகப் போவுதுன்னு மட்டும் எனக்கு புரியல..!! அதே நாள் இங்கேயே பிளாக்குல டிவிடி கிடைக்கும் . தியேட்டரில நா பாக்க ஆசைபட்டது ”தாளம்” ஹிந்தி மியூசிக்காக.

இளம் தூயவன் said...

ஏதாவது சொல்லணும், ஓகே வந்துட்டேன்.

கே.ஆர்.பி.செந்தில் said...

எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காமல் இருக்க வேண்டும்..

asiya omar said...

எப்படியும் செப்டம்பரில் தெரிந்துவிடும்.பார்ப்போம்.

எம் அப்துல் காதர் said...

//போடா வென்று!!!!!!!! வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்ட‌ல்ல‌ கொத்து புரோட்டா சாப்பிட‌லாம் என்று இழுத்து வ‌ந்தேன்.//

அதானே!!! வார்த்தையில் வென்று விட்டீர்கள். அவசரப் படாம இருக்கிறது தான் இந்த வயசுக்கு அழகு!! அப்புறம் கொ.ப. சாப்டீங்களா??

அக்பர் said...

ரொம்ப அருமையா சொல்லியிருந்திங்க ஸ்டீபன்.

நம்மளோடு அடிப்படைத்தேவையே ஒரு வேளை நிம்மதியான சாப்பாடுதான். அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம்.

எனக்கு சிவாஜி பட வசனம்தான் ஞாபகம் வருது.

ஒரு பக்கம் கோடி கோடியா பணம் வச்சிருக்கிறவங்க. மறுபக்கம் அன்றாடம் சோத்துக்கு கஷ்டப்படும் மக்கள்.

இப்படியாகவே இருக்கிறது வாழ்க்கை.

ஏழை பணக்காரனாகலாம். பணக்காரன் ஏழையாகலாம்.

ஆனால் ஏழை, பணக்காரங்கிற ஏற்றதாழ்வு மட்டும் உலகத்தில் என்றுமே மாறாது போல...

அனேகமா இந்த படத்தோட ப்ளாக் டிக்கட் ரெண்டாயிரத்தை தாண்டும்...

kulasekaram said...

Sorry I dont have Tamil fonts.

You have good writing style. Write more.

I saw Shivaji free. Not DVD. But in a cinema-cum-auditorium. Within a month of its release.

I see such films although such films are not worthy of seeing by people who respect their intelligence. I went with children who, too, didnt enjoy much.

Same fate will befall this film too. The hype and hoopla will make everyone feel that he ought to see the movie, if not, he is not a Tamilian.

But thereafter, the films will neither be seen nor talked about.

The film is meant only for metro audiences. The Rural Tamil nadu will not like because Shankar sujatha combination lives far away from them.

Sit at home for a month. and get the opportunity to see the film in rakhi buying the tickets at normal rate.

While I am waiting for a free show of a film whose budget is 150 crore

kulasekaram

வானம்பாடிகள் said...

:).

Rajakanna (Software Engineer) said...

ஸ்டீபன் சார், எதுக்கு இப்படி பணத்தை வேஸ்ட் பண்றீங்க? ஒரு வாரம் கழிச்சி பாத்தா போச்சி.

தமிழ் உதயம் said...

சன் பிக்சர்ஸ் மிக பெரிய தவறு செய்துள்ளதை, படம் வெளியான பிறகு உணர்வார்கள்.

Riyas said...

ம்ம்ம் பார்க்கலாம்..

Ananthi said...

ஹ்ம்ம்.. நல்ல அனுபவம் தான்..
பரோட்டா சாப்பிட எடுத்த முடிவு தான் கரெக்ட் :-)

அதில் வரும் "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை...." சாங் ரொம்ப பிடிச்சிருக்கு..
பாக்கலாம் படம் ரிலீஸ் ஆனா தெரியா போகுது..

vanathy said...

அட! எந்திரன் இன்னும் வெளிவரவேயில்லையா? சினிமா பற்றிய என் அறிவு அவ்வளவு தான், முறைக்க வேண்டாம், ஸ்டீபன்.

என் அப்பா தியேட்டர் பக்கம் கூட்டிப் போகவே மாட்டார். படம் வந்து வெற்றிகரமாக ஓடி, தியேட்டரில் ஈ ஓடத் தொடங்கிய பின்னர் தான் போய் பார்ப்போம். அதனால் நீங்கள் ரஜினி படம் பற்றி சொன்னது ஆச்சரியமாக இருந்திச்சு. ஏன் கூட்டம் குறைய பார்த்தா என்னவாம்???

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
hahaha.... இந்தமாதிரி க்ரேஸ் நமக்கு கிடையாது தல...

ஒரு தடவை உதயம் தியேட்டருல தவமாய் தகவமிருந்து பார்க்க போனேன் housfull ஆயிடுச்சு, வேற தியேட்டர்ல சிவாகசி ஓடிட்டிருந்துச்சு.
ஒருத்தன் வந்து சிவகாசி படத்துக்கு பிளாக்ல டிக்கெட் 150 ருபாய் வேணுமான்னு கேட்டான்.அவன்கிட்ட சொன்னேன் "நீங்க சும்மா கொடுத்தாலும் வேண்டாம்னு... :))

ரஜினி படம் முதல் ஒருவாரம் தியேட்டர் பக்கமே போகமுடியாது...அதனால அந்த ரிஸ்க் எடுக்கறதே இல்லை.//

சென்னையில் இருக்கும் போதுதான் த‌ல‌, அந்த‌ மாதிரி. ஊர்ப‌க்க‌ம் போனா தியேட்ட‌ரா அப்படினா என்ன‌ தான்..ஹி..ஹி..

@ஜெய்லானி said...
//அப்படி பார்த்து என்ன ஆகப் போவுதுன்னு மட்டும் எனக்கு புரியல..!! அதே நாள் இங்கேயே பிளாக்குல டிவிடி கிடைக்கும் . தியேட்டரில நா பாக்க ஆசைபட்டது ”தாளம்” ஹிந்தி மியூசிக்காக.//

வாங்க‌ ஜெய்லானி..எல்லாம் ஒரு பில்ட‌ப்புக்கு தான், வேற‌ எதுக்கு?.. வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@இளம் தூயவன் said...
//ஏதாவது சொல்லணும், ஓகே வந்துட்டேன்.//

வாங்க‌ இள‌ம்தூய‌வ‌ன்... வ‌ருகைக்கு ந‌ன்றி

@கே.ஆர்.பி.செந்தில் said...
//எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காமல் இருக்க வேண்டும்..//

வாங்க‌ செந்தில் அண்ணா..நீங்க‌ வேற‌ பிளாப் எல்லாம் ஆகாதுங்க‌... முத‌ல் இர‌ண்டு நாள்லேயே காசு பார்த்திருவாங்க‌.

@asiya omar said...
//எப்படியும் செப்டம்பரில் தெரிந்துவிடும்.பார்ப்போம்.//

வாங்க‌ ச‌கோ.. ஆமா.. நீங்க‌ சொல்வ‌து ச‌ரிதான்.

@எம் அப்துல் காதர் said...
//போடா வென்று!!!!!!!! வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்ட‌ல்ல‌ கொத்து புரோட்டா சாப்பிட‌லாம் என்று இழுத்து வ‌ந்தேன்.//

அதானே!!! வார்த்தையில் வென்று விட்டீர்கள். அவசரப் படாம இருக்கிறது தான் இந்த வயசுக்கு அழகு!! அப்புறம் கொ.ப. சாப்டீங்களா??.//

வாங்க‌ அப்துல்.. ந‌ம‌க்‌கு அதுதானே முக்கிய‌ம்..ஹி.ஹி

@அக்பர் said...
ரொம்ப அருமையா சொல்லியிருந்திங்க ஸ்டீபன்.

நம்மளோடு அடிப்படைத்தேவையே ஒரு வேளை நிம்மதியான சாப்பாடுதான். அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம்.

எனக்கு சிவாஜி பட வசனம்தான் ஞாபகம் வருது.

ஒரு பக்கம் கோடி கோடியா பணம் வச்சிருக்கிறவங்க. மறுபக்கம் அன்றாடம் சோத்துக்கு கஷ்டப்படும் மக்கள்.

இப்படியாகவே இருக்கிறது வாழ்க்கை.

ஏழை பணக்காரனாகலாம். பணக்காரன் ஏழையாகலாம்.

ஆனால் ஏழை, பணக்காரங்கிற ஏற்றதாழ்வு மட்டும் உலகத்தில் என்றுமே மாறாது போல...

அனேகமா இந்த படத்தோட ப்ளாக் டிக்கட் ரெண்டாயிரத்தை தாண்டும்...//

வாங்க‌ அக்ப‌ர்...தியோட்ட‌ரில் ம‌க்க‌ள் யாரும் ப‌ண‌த்தை ப‌ற்றி க‌வ‌லை ப‌ட்ட‌தாக‌ தெரிய‌வில்லை.. க‌ண்டிப்பாக‌ இர‌ண்டாயிர‌ம் தாண்டும்..

நாடோடி said...

@kulasekaram said...
Sorry I dont have Tamil fonts.

You have good writing style. Write more.

I saw Shivaji free. Not DVD. But in a cinema-cum-auditorium. Within a month of its release.

I see such films although such films are not worthy of seeing by people who respect their intelligence. I went with children who, too, didnt enjoy much.

Same fate will befall this film too. The hype and hoopla will make everyone feel that he ought to see the movie, if not, he is not a Tamilian.

But thereafter, the films will neither be seen nor talked about.

The film is meant only for metro audiences. The Rural Tamil nadu will not like because Shankar sujatha combination lives far away from them.

Sit at home for a month. and get the opportunity to see the film in rakhi buying the tickets at normal rate.

While I am waiting for a free show of a film whose budget is 150 crore

kulasekaram//

முத‌லில் உங்க‌ள் பின்னூட்ட‌த்திற்கு ந‌ன்றி... அவ‌ரை நாம் ஒரு ந‌டிக‌னாக‌ பார்க்க‌ வேண்டும் என்ப‌து என் எண்ண‌ம். நீங்க‌ள் சொல்வ‌து போல் சிவாஜி ப‌ட‌ம் அவ்வ‌ள‌வு ரூபாய் கொடுத்து பார்ப்ப‌த‌ற்கு ஒர்த் கிடையாது தான்... வெயிட் ப‌ண்ணி பொறுமையா பார்ப்ப‌தே ந‌ல்ல‌து.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி குல‌சேக‌ர‌ன்.

r.v.saravanan said...

எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காமல் இருக்க வேண்டும்..

repeat.....

ஜானகிராமன் said...

இதுல கொடுமை என்னன்னா, ஆயிரக்கணக்கில் அழுது, பிளாக்கில் டிக்கட் வாங்கி உள்ள உக்காந்தா, ஷங்கரும் ரஜினியும் நாட்டின் ஊழல்களைப் பற்றி அங்கலாய்ப்பதும், அத ஒழிக்கனும்னு நமக்கு அட்வைஸ் பண்ணி, அதற்கு கையாளாகாத வித்தைகள் செய்வதும் தான். கொடுமை.

Related Posts with Thumbnails