Monday, August 16, 2010

ச‌ப்பாத்தி தோசையாக‌ மாறிய‌க் க‌தை..

சென்னையில் வேலை செய்யும் போது, நாங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் நான்கு பேர் ரூம் எடுத்து த‌ங்கி இருந்தோம். அதில் ஒருவ‌ன் என்னுடைய‌ ஊர்கார‌ன் பெய‌ர் குமார், ம‌ற்ற‌ இருவ‌ரும் ஆபிசில் என்னுட‌ன் வேலை செய்ப‌வ‌ர்க‌ள். அந்த‌ ஆபிசில் வேலைக்கு சேர்ந்த‌ பின்பு என்னிட‌ம் ந‌ண்ப‌ன் ஆன‌வ‌ர்க‌ள். ஒருவ‌ன் திருநெல்வேலி பெய‌ர் கிஷோர், இன்னொருவ‌ன் திருச்சி பெய‌ர் கார்த்திக். ரூமில் நாங்க‌ள் ச‌மைய‌ல் எதுவும் செய்வ‌து கிடையாது. வெளியில் ஹோட்ட‌லில் தான் சாப்பிட்டு வ‌ந்தோம்.

ஹோட்ட‌லில் சாப்பிடுவ‌து போர் அடிக்க‌வே, அனைவ‌ரும் யோசித்து அறையில் ச‌மைப்ப‌து என்று முடிவான‌து. அத‌ற்க்கான‌ எல்லா ஏற்பாடும் செய்ய‌ ஆர‌ம்பித்தோம். ஒவ்வொருத்த‌ரும் ஊருக்கு போயிட்டு வ‌ரும் போது அவ‌ர்க‌ளால் முடிந்த‌ பொருட்க‌ளை வீட்டில் இருந்து சுட்டு வ‌ருவ‌து என்று முடிவு செய்து வேலையில் இற‌ங்கினோம்.

அடுத்த‌ ஒரு வார‌த்தில் ச‌மைய‌ல் செய்வ‌த‌ற்க்கான‌ பாத்திர‌ங்க‌ள் அனைத்தும் ரெடி. நான் ஊரில் இருந்து கேஸ் ஸ்ட‌வ் எடுத்து வ‌ந்திருந்தேன். வீட்டு ஓன‌ரிட‌ம் சொல்லி ஒரு சிலிண்ட‌ரை ஆட்டைய‌ போட்டுவிட்டோம். பொண்ணு கிடைச்சாலும் புத‌ன் கிடைக்காது, என்று அன்னைக்கே ச‌மைய‌லை ஆர‌ம்பித்துவிட்டோம். கிடைக்கிற‌ காயை வெட்டிப் போட்டு ப‌ருப்பை அவித்து கொட்டி சாம்பாருனு சொன்னேன். அரிசியை அவித்து சாத‌ம் ரெடி ப‌ண்ணி சாம்பாருட‌ன் சாப்பிட்டோம், ஹோட்ட‌ல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு செத்து போன‌ நாக்குக்கு இதுவும் வித்தியாச‌மாக‌ இருந்த‌து.

மூணு நாளு ந‌ல்லா தான் போயிட்டு இருந்த‌து. ச‌னிக்கிழ‌மை ராத்திரி எல்லோரும் ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருக்கும் போது, "ந‌ம‌க்கு சைவ‌ம் தான் ச‌மைக்க‌ வ‌ராது, ஆனா சிக்க‌ன் குழ‌ம்பு சூப்ப‌ரா செய்வேன்" என்று ந‌ம்ம‌ கார்த்திக்கு வாயை தொற‌ந்தான். நானும் நாக்கை தொங்க‌ போட்டிட்டு "அப்ப‌டியானு கேட்க‌" ப‌க்க‌த்துல‌ இருந்த‌ ம‌க்க‌ளும் அப்ப‌ நாளைக்கே செய்திட‌லானு சொல்ல‌, நானும் த‌லையாட்டினேன்.

ச‌ரி, நாளைக்கு சிக்க‌ன் செய்தா ம‌திய‌ம் தான் சாப்பிட‌ முடியும், காலையில் என்ன‌ ப‌ண்ணுற‌துனு? நான் கேட்டேன். உட‌னே ந‌ம்ம‌ கிஷோர் நானும் ர‌வுடிதானு காமிக்க‌, நான் சூப்ப‌ரா ச‌ப்பாத்தி செய்வேனு சொன்னான். என‌க்கு ச‌ந்தோச‌ம் தாங்க‌ முடிய‌லை, ந‌ம‌க்கு கிடைத்த‌ ரூம்மேட்க‌ள் ச‌மைப்ப‌தில் மிக‌வும் திற‌மைசாலிக‌ள் என்று ம‌ன‌தில் நினைத்து கொண்டேன்.

அப்ப‌ என்னென்ன‌ வேணுமோ!! இப்ப‌வே வாங்கிட‌லாம். நாளைக்கு ஞாயிறு, யாரும் க‌டையை தொற‌க்க‌ மாட்டாங்க‌ என்று சொல்லிவிட்டு க‌டைக்கு கிள‌ம்பினோம். நாளைக்கு ச‌மைக்க‌ போகிற‌ இர‌ண்டு போரும், தேவையான‌ பொருட்க‌ளை வாங்கி கொண்டிருந்த‌ன‌ர். அவைக‌ளை சும‌க்கும் பொறுப்பு எங்க‌ளுக்கு த‌ர‌ப்ப‌ட்ட‌து.

உருளை கிழ‌ங்கு, வெங்காய‌ம், த‌க்காளி, க‌றி ம‌சாலா, முட்டை, தேங்காய், ச‌ப்பாத்தி மாவு என்று அம‌ர்க்க‌ள‌ ப‌டுத்தினார்க‌ள். நாங்க‌ள் பொருட்க‌ள் வாங்கிய‌ க‌டையில் நெய் இல்லையென்று க‌டைக்கார‌ர் சொன்னார், நான் உட‌னே நெய் எதுக்கு என்று கிஷோரிட‌ம் கேட்டேன். கொஞ்ச‌ம் நெய் போட்டு சுட்டா தான் ச‌ப்பாத்தி சாப்டா வ‌ரும் என்று சொல்லிவிட்டு ப‌க்க‌த்து க‌டைக்கு ஓடினான். என‌க்கு அப்ப‌வே ச‌ப்பாத்தியின் வாச‌ம் மூக்கில் நுழைய‌ ஆர‌ம்பித்த‌து.

சிக்க‌ன் ம‌ட்டும் தான் வாங்க‌வில்லை, அதை காலையில் வாங்கி கிளீன் ப‌ண்ண‌ வேண்டிய‌ பொறுப்பு குமாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

ம‌றுநாள் காலை, எல்லாம் தூக்க‌த்தை விட்டு எழுந்த‌தே ஒன்ப‌து ம‌ணிக்கு தான். குமார் எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு சிக்க‌ன் வாங்க‌ ஓடினான். சிக்க‌ன் வாங்கி வ‌ந்த‌வ‌ன், தோலை ம‌ட்டும் உரித்து முழு கோழியாக‌ வாங்கி வ‌ந்தான். நான் அவ‌னிட‌ம் "ஏன்டா!! கோழியை வெட்டி வாங்கி வ‌ர‌வேண்டிய‌து தானே" என்றேன்.

க‌டையில‌ கூட்ட‌ம் அதிக‌ம் ம‌ச்சி, அவ‌னுங்க‌ ஒழுங்க‌ வெட்ட‌ மாட்ட‌னுங்க‌, நான் சூப்ப‌ர‌ வெட்டுவேனு பீதியை கிளாப்பினான். எல்லாம் ந‌ம்ம‌ளைவிட‌ பெரிய‌ ச‌மைய‌ல் கார‌னா இருப்பானுங்க‌ போலிருக்கு என்று நினைத்து கொண்டேன்.

ந‌ம்ம‌ கார்த்திக் வெங்காய‌ம், த‌க்காளி வெட்ட‌ தொட‌ங்கினான். நான் அவ‌னிட‌ம் ஏதாவ‌து ஹெல்ப் வேணுமானு கேட்டேன். நீ தான் மூனு நாளு சாம்பாருனு ஒண்ணு வெச்சா இல்லையா, இன்னைக்கு என் முறை, நீ ஓர‌மா போய் உக்காரு, தேவைனா கூப்பிடுறோம் என்றான்.

ந‌ம்ம‌ ச‌ப்பாத்தி சுடுற‌ கிஷோர் தான் முத‌லில் அடுப்பை ப‌ற்ற‌ வைத்தான். என்ன‌டா!! அதுக்குள்ள‌ ச‌ப்பாத்தி உருட்டிட்டானானு போய் பார்த்தால், ஒரு பெரிய‌ பாத்திர‌த்தில் த‌ண்ணியை ஊத்தி அடுப்பில் வைத்திருந்தான். எதுக்குனு கேட்டா!! வெந்நீரில் மாவு பிசைஞ்சா தான் ச‌ப்பாத்தி சூப்ப‌ரா வ‌ரும் என்றான். நோட் ப‌ண்ணுங்க‌ப்பா!!! நோட் ப‌ண்ணுங்க‌ப்பா !!

அப்ப‌டியே சிக்க‌ன் வெட்டுப‌வ‌ன் என்ன‌ செய்கிறாருனு வெளியே போய் பார்த்தால், இர‌ண்டு காலு ம‌ற்றும் இற‌க்கை ம‌ட்டும் வெட்டாம‌ல் த‌னியா வ‌ச்சிருந்தான். ஏன்டானு!!! கேட்டால்‌ இதை முழுசா போட்டா தான் க‌டிக்கிற‌துக்கு சூப்ப‌ரா இருக்குமுனு சொன்னான். அட‌ !!! அட‌ !!

த‌க்காளி, வெங்காய‌ம், உருளை கிழ‌ங்கு எல்லாம் வெட்டி த‌ட்டில் அடுக்கியிருந்த‌தே, ஒரு பைவ்ஸ்டார் ஹோட்ட‌ல் கிச்ச‌ன் ரேஞ்சுக்கு இருந்த‌து. வெட்டிய‌ சிக்க‌னை எடுத்து கொண்டு கொடுத்த‌ குமாரிட‌ம், நேற்று த‌யிர் வாங்க‌ மற‌ந்திட்டேன், நீ போய் ஒரு பாக்கெட் த‌யிர் வாங்கிட்டு வா!! த‌யிர்ல‌ சிக்க‌னை ஊற‌ வைச்சாதான் ப‌ஞ்சு போல‌ இருக்கும் என்று கார்த்திக் சொன்னான்.

ப‌சி பிடுங்கிய‌து, இவ‌னுங்க‌ வ‌ர்ண‌னையே என‌க்கு நாக்குல‌ த‌ண்ணி வ‌ர‌ வைச்சிடுச்சி, ம‌ணி வேற‌ ப‌த்து ஆகி போன‌து. ந‌ம்ம‌ ச‌ப்பாத்தி போடுற‌வ‌ன் இப்ப‌தான் ஒரு பாத்திர‌த்தில் இர‌ண்டு முட்டையை அடித்து ஊற்றி க‌ல‌க்கி கொண்டிருந்தான். எப்ப‌டியும் அரை ம‌ணி நேர‌த்திற்கு மேல் ஆகும் என்று நினைத்து கொண்டு துணி துவைக்க‌ பாத்ரூம் போனேன்.

பாத்ரூமில் இருந்த‌ என்னை, அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌த்தில் குமார் வ‌ந்து அழைத்தான். என்ன‌னு உள்ள‌ வ‌ந்து பார்த்தா, ந‌ம்ம‌ கிஷோரு வைச்சிருந்த‌ பாத்திர‌த்தில் இருந்த‌ மாவு, ச‌ப்பாத்தி மாவா இல்லாம‌ல் இட்லி மாவா ஆகி இருந்த‌து. "த‌ண்ணி பார்த்து ஊத்துடானு சொல்லிட்டு தான் இருந்தேன், அப்பிடியே க‌வுத்துட்டான் இந்த‌ குமாரு" என்றான் கிஷோர். நான் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தான் ஊத்திட்டே இருந்தேன், இவ‌ன் தான் "ஏண்டா!! குழ‌ந்தை ஒன்னுக்கு போற‌து போல் ஊத்துற‌னு" கிண்ட‌ல் அடிச்சான் அதான் க‌வுத்தேன் என்றான் குமார்.

ஏண்டா!! நீங்க‌ இர‌ண்டு பேரும் க‌வுத்து விளையாடுற‌துக்கு எங்க‌ வ‌யிறு தான் கிடைச்சுதானு சொல்லிட்டு, கொஞ்ச‌ம் இருந்த‌ த‌ண்ணியை நானே க‌வுத்து விட்டு மாவை க‌ல‌க்கி தோசை சுடுங்க‌னு சொல்லிட்டு துணியை துவைக்க‌ போனேன்.



துணியை துவைத்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வ‌ரும்போது தோசை சுட்டு அடுக்க‌ ப‌ட்டிருந்த‌து. ஆனால் ப‌க்க‌த்தில் இருந்த‌ சிக்க‌ன் குழ‌ம்பு பாத்திர‌ம் ம‌ட்டும் கொதித்து கொண்டிருந்த‌து. என்ன‌டா இன்னும் சிக்க‌ன் ரெடியாக‌லையானு கேட்டா உருளைகிழ‌ங்கு வேக‌லை, அத‌னால‌ கொஞ்ச‌ம் த‌ண்ணி விட்டு வேக‌ வைச்சிருக்கேனு சொன்னான் கார்த்திக்.

குழ‌ம்பை திற‌ந்து பார்த்தால், அது கோழிக்குழ‌ம்பு போல் தெரிய‌வில்லை, உருளைக்கிழ‌ங்கு குழ‌ம்பு போல் காட்சி அழித்த‌து. அப்ப‌டியே க‌ர‌ண்டி விட்டு கிண்டி பார்த்தேன், கிஷோர் போட்ட‌ கோழிக்காலில் உள்ள‌ ச‌தை அவ்வ‌ள‌வும் குழ‌ம்பில் க‌ரைந்து சாப்பிட்டு வைத்த‌ எலும்பு போல் காட்சிய‌ளித்த‌து.

அப்ப‌டியே நேற்று வாங்கிவ‌ந்த‌ பையில் உருளைக்கிழ‌ங்கு இருக்கிற‌தா? என்று பார்த்தேன். அது வெறும் காலி பையாக‌ இருந்த‌து. ஒரு கிலோ கோழிக்க‌றிக்கு ஒன்ற‌ரை கிலோ உருளைக்கிழ‌ங்கு சேர்த்து ந‌ம்மாளு குழ‌ம்பு வைத்துள்ளார். அதுவும் கிழ‌ங்கை முத‌லில் வேக‌வைக்காம‌ல் கோழிக்க‌றியுட‌ன் சேர்த்து வேக‌வைத்துள்ளார். அப்ப‌டினா அதுல‌ எங்க‌ க‌றி இருக்கும்?.. வெறும் எலும்பு தான் இருக்கும்.

எப்ப‌டியோ ப‌ய‌புள்ள‌ங்க‌ பேசியே ப‌சியை அட‌க்கிட்டானுங்க‌.. ஹி..ஹி..

.

.

43 comments:

kavisiva said...

சமையல்ல இதெல்லாம் சகஜமப்பா!

நீங்களும் இப்படித்தான் சமைப்பீங்களான்னு கேட்டு இமேஜை டேமேஜ் ஆக்கப்படாது சொல்லிட்டேன் :)

Menaga Sathia said...

haa haa..

Unknown said...

பேச்சுலர் வாழக்கை .. வாழ்வில் மறக்க முடியாதது ..

vasu balaji said...

கால் பீசுக்கு காத்திருந்து காமெடி பீசாயிடுச்சா:))

Asiya Omar said...

அட விடுங்கய்யா,நாங்களும் வில்லேஜ் ஸ்டே ப்ரோகிராம் -காலேஜில் இதே ரேஞ்சிற்கு புகுந்து விளையாடியிருக்கோம்ல,சேமியா உப்புமா பன்றேன்னு சேமியா கஞ்சி செய்ததை என் ரூம் மேட்ஸ் இன்னும் மறந்திருக்கமாட்டாளுக.மலரும் நினைவுகள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.என்ன ஒரு வருத்தம் ,தம்பிங்க பசியில் இருந்திருப்பீங்களேன்னு தான்.

துளசி கோபால் said...

சிக்கன் ஸூப் ன்னு டக் னு பெயரை மாத்தி இருக்கலாமுல்லே:-))))))

நாடோடி said...

@kavisiva said...
//சமையல்ல இதெல்லாம் சகஜமப்பா!

நீங்களும் இப்படித்தான் சமைப்பீங்களான்னு கேட்டு இமேஜை டேமேஜ் ஆக்கப்படாது சொல்லிட்டேன் :)//

வாங்க‌ க‌விசிவா.. ஆஹா!!! ரெம்ப‌ அனுப‌வ‌மா? அப்ப‌ துணைக்கு ஆள் இருக்கு ... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப ந‌ன்றி.


@Mrs.Menagasathia said...
/haa haa..//

வாங்க‌ மேன‌கா மேட‌ம்.. எங்க‌ புள‌ப்பு சிரிப்பா போச்சி.. :)) வ‌ருகைக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@கே.ஆர்.பி.செந்தில் said...
//பேச்சுலர் வாழக்கை .. வாழ்வில் மறக்க முடியாதது ..//

ஆமா செந்தில் அண்ணா.. உண்மையில் அனுப‌விக்க‌ வேண்டிய‌ விச‌ய‌ங்க‌ள்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@வானம்பாடிகள் said...
//கால் பீசுக்கு காத்திருந்து காமெடி பீசாயிடுச்சா:))//

வாங்க‌ பாலா சார்... கோழிக் க‌றிக்கு க‌த்திருந்தா கோழி எலும்பை கையில் குடுத்திட்டானுங்க‌. வ‌ருகௌக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@asiya omar said...
//அட விடுங்கய்யா,நாங்களும் வில்லேஜ் ஸ்டே ப்ரோகிராம் -காலேஜில் இதே ரேஞ்சிற்கு புகுந்து விளையாடியிருக்கோம்ல,சேமியா உப்புமா பன்றேன்னு சேமியா கஞ்சி செய்ததை என் ரூம் மேட்ஸ் இன்னும் மறந்திருக்கமாட்டாளுக.மலரும் நினைவுகள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.என்ன ஒரு வருத்தம் ,தம்பிங்க பசியில் இருந்திருப்பீங்களேன்னு தான்.//

வாங்க‌ ச‌கோ... உங்க‌ அனுப‌வ‌த்தை ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி. அதையும் நாங்க‌ விட‌லியே,மொத்த‌த்தையும் காலி ப‌ண்ணிட்டோம்ல்ல‌.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி

@துளசி கோபால் said...
//சிக்கன் ஸூப் ன்னு டக் னு பெயரை மாத்தி இருக்கலாமுல்லே:-))))))//

வாங்க‌ துள‌சி மேட‌ம்.. க‌டைசில‌ சூப்பு போல‌ தான் குடித்தோம். க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

Prathap Kumar S. said...

hhahahaa என்னோட மெட்ராஸ் வாழ்க்கை ஞபாகம் வந்துடுச்சு...நான் சாம்பார் வச்சு அதுலயே ரசமும் தனியா பிரிச்சு சாப்பிட்டோம்...அதெல்லாம் பெரிய கதை.... உங்ககதையும் நம்மள்து மாதிரியேத்தான் இருக்கு...:))

Jerry Eshananda said...

Stephan Rocks Here.

சாந்தி மாரியப்பன் said...

இப்பவாவது சமைக்க கத்துக்கிட்டீங்களா :-))))))

கண்ணா.. said...

பேச்சுலர் சமையலில் இதெல்லாம் சாதரணமப்பா.. :))))

//எப்ப‌டியோ ப‌ய‌புள்ள‌ங்க‌ பேசியே ப‌சியை அட‌க்கிட்டானுங்க‌.. ஹி..ஹி//

அதுல ஒருத்தன் எங்கூருகாரன்லா அதான் பேசியாச்சும் பசிய அடக்கலாம்னு ட்ரை பண்ணிருக்கான்.... விவரகாரன்லா

நசரேயன் said...

பழைய ஞாபகத்தை கிளறி விட்டுடீங்க

எம் அப்துல் காதர் said...

//அதையும் நாங்க‌ விட‌லியே,மொத்த‌த்தையும் காலி ப‌ண்ணிட்டோம்ல்ல‌.. //

அருமை நண்பரே. பழைய நினைவுகளில் மூழ்க வைத்து விட்டீர்கள்.

மதார் said...

ரொம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க வாய் விட்டு சிரிச்சேன் .என் அம்மா 10 வயசுலையே எனக்கு சமையல் பழக்கிட்டாங்க. அதான் சென்னையில் மூணு வருசமா ஹாஸ்டல் பக்கம் போகாம வண்டி ஓடுது .

senthil velayuthan said...

பேச்சுலர் வாழக்கை .. வாழ்வில் மறக்க முடியாதது .

Unknown said...

பேச்சுலர் லைப் நினைவுகள கிளறி விட்டுட்டீங்க. பேச்சுலர் லைப்ல நம்ம சமையல நாமலே கிண்டல் பண்ணிக்கிட்டு சாப்டலாம். பேச்'சிலர்' லைப்ல ??????? 

ம.தி.சுதா said...

வணக்கம் தலைவா இளமை அனுபவங்கள் மறக்க முடியாதவை. வாழ்த்துக்கள். அப்படியே நாமள் தோசை பெயர் எப்படி வந்ததுண்ணு எழுதியிருக்கோம். ஆர்வம் இருந்தால் பாருங்க. http://mathisutha.blogspot.com/2010/07/blog

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா. முடியல..
சரி சரி விடுங்க..

தோசையாவது கிடைச்சதே..... அந்த மட்டும் ஓகே தான்..!

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... யம்மா..... பில்ட் அப் கொடுத்தே கவுத்துட்டாங்களே! இன்னும் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்.

Mahi_Granny said...

minced chicken curry with wheat dosai really tasty

Unknown said...

ஹையோ ஹையோ சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு

தூயவனின் அடிமை said...

ஸ்டீபன் இதுல முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், உங்கள் நண்பர்கள் உங்களை வைத்து சமையல் கலை என்ன
என்பதை முயற்சி செய்து இருக்கிறார்கள். அந்த நண்பர்களோடு சேர்ந்து கழித்த நாட்கள் , உண்மையில் இனிமையான நாட்களாகவே இருந்து
இருக்கும். என்ன நான் சொன்னது சரியா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

யம்மாடி முடியல... சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிருச்சி ஸ்டீபன்.. கூத்து சரியான கூத்தடிச்சிருக்கீங்க.. அன்னக்கி நீங்க புல்லா சாப்பிட்டிங்க.. ஒருவழியா சப்பாத்தி தோசையாகி கோழிக்குழம்பு எலும்புக்குழம்பாகிருச்சே.. ரசித்து படித்தேன்..

vanathy said...

ஸ்டீபன், நல்ல நகைச்சுவையா இருக்கு. அப்படியே உங்கள் சாம்பார் ரெசிப்பி போட்டிருக்கலாம்.

Anonymous said...

பேச்சுலர் வாழ்க்கையில இதல்லாம் சகஜமப்பா.
வெரி நைஸ்.
//கோழிக்காலில் உள்ள‌ ச‌தை அவ்வ‌ள‌வும் குழ‌ம்பில் க‌ரைந்து சாப்பிட்டு வைத்த‌ எலும்பு போல் காட்சிய‌ளித்த‌து.//
கடைசில கோழி சூப் சாப்டீங்கன்னு சொல்லுங்க :))

ஹுஸைனம்மா said...

தண்ணீர் கூடினாலும் சளைக்காமல் அதை தோசையாக்கிய திறமை பாராட்டத்தான் செய்யணும்!!

ஜெய்லானி said...

என்னங்க நீங்க ஒன்னறை கிலோ உருளை ரொம்ப கம்மி எப்படியிம் ரெண்டரை கிலோவாவது போடனும் . அதான் குழம்பு சரியா வரல..ஹி..ஹி..

சத்ரியன் said...

//நீங்க‌ இர‌ண்டு பேரும் க‌வுத்து விளையாடுற‌துக்கு எங்க‌ வ‌யிறு தான் கிடைச்சுதானு சொல்லிட்டு, கொஞ்ச‌ம் இருந்த‌ த‌ண்ணியை நானே க‌வுத்து விட்டு மாவை க‌ல‌க்கி தோசை சுடுங்க‌னு சொல்லிட்டு துணியை துவைக்க‌ போனேன்.//

ஓஹ்...! மூனு நாளாவும் நானே சமைச்சேன். இன்னிக்கி சமையல்லயும் நம்ம பேரு வரட்டுமேன்னு - தண்ணிய கவுத்து உட்டீங்க.

பயங்கரமா யோசிக்கிறாய்ங்கப்பா.

சத்ரியன் said...

////சிக்கன் ஸூப் ன்னு டக் னு பெயரை மாத்தி இருக்கலாமுல்லே:-))))))//

ஒரு கிலோ கோழிக்கி ஒன்னரைக் கிலோ உருளையப் போட்டாய்ங்கன்னு சொன்னத நீங்க கவனிக்கல போல.

ஸ்டீவன்,

“உருளைக்கோழி” சூப்புன்னு புது பேர் வெச்சிருக்கலாமே..!

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
hhahahaa என்னோட மெட்ராஸ் வாழ்க்கை ஞபாகம் வந்துடுச்சு...நான் சாம்பார் வச்சு அதுலயே ரசமும் தனியா பிரிச்சு சாப்பிட்டோம்...அதெல்லாம் பெரிய கதை.... உங்ககதையும் நம்மள்து மாதிரியேத்தான் இருக்கு...:))//

வாங்க‌ த‌ல‌... உங்க‌ளுக்கும் பிளாஷ்பேக் இருக்கா?.. ஹி.ஹி.. ஒரு ச‌ந்தோச‌ம் தான்.

@ஜெரி ஈசானந்தன். said...
/Stephan Rocks Here.//

வாங்க‌ ஜெரி சார்... ரெம்ப‌ நாள் ஆச்சி.. வ‌ருகைக்குக் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@அமைதிச்சாரல் said...
//இப்பவாவது சமைக்க கத்துக்கிட்டீங்களா :-))))))//

வாங்க‌ ச‌கோ..நான் ஏதோ ப‌ண்ணுவேங்க‌.. இந்த‌ ப‌ச‌ங்க‌ தான் பில்ட‌ப் கொடுத்து க‌வுத்திட்டானுங்க‌... :)

@கண்ணா.. said...
பேச்சுலர் சமையலில் இதெல்லாம் சாதரணமப்பா.. :))))

//எப்ப‌டியோ ப‌ய‌புள்ள‌ங்க‌ பேசியே ப‌சியை அட‌க்கிட்டானுங்க‌.. ஹி..ஹி//

அதுல ஒருத்தன் எங்கூருகாரன்லா அதான் பேசியாச்சும் பசிய அடக்கலாம்னு ட்ரை பண்ணிருக்கான்.... விவரகாரன்லா//

வாங்க‌ க‌ண்ணா... ஆமா த‌ல‌ உங்க‌ ஊர்க்காரன் பேச்சு தான் தாங்க‌ முடிய‌லை.. எல்லாத்துக்கும் ஒரு கார‌ண‌ம் சொல்லுவான்... :)

@நசரேயன் said...
//பழைய ஞாபகத்தை கிளறி விட்டுடீங்க//

வாங்க‌ ந‌ச‌ரேய‌ன்... ஏதோ என்னால‌ முடிஞ்ச‌து. :)

@எம் அப்துல் காதர் said...
//அதையும் நாங்க‌ விட‌லியே,மொத்த‌த்தையும் காலி ப‌ண்ணிட்டோம்ல்ல‌.. //

அருமை நண்பரே. பழைய நினைவுகளில் மூழ்க வைத்து விட்டீர்கள்.//

வாங்க‌ அப்துல்..அந்த‌ புறாபிரியாணி என்ன‌ ஆச்சி, எப்ப‌ ப‌ண்ணுவீங்க‌?.. :)

நாடோடி said...

@மதார் said...
//ரொம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க வாய் விட்டு சிரிச்சேன் .என் அம்மா 10 வயசுலையே எனக்கு சமையல் பழக்கிட்டாங்க. அதான் சென்னையில் மூணு வருசமா ஹாஸ்டல் பக்கம் போகாம வண்டி ஓடுது .//

வாங்க‌ மதார்... ப‌த்து வ‌ய‌திலா? சூப்ப‌ர்.. நானும் ஏதோ ப‌ண்ணுவேங்க‌.. இந்த‌ ப‌ச‌ங்க‌ தான் பில்ட‌ப் கொடுத்து க‌வுத்திட்டானுங்க‌.. :) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@senthil1426 said...
//பேச்சுலர் வாழக்கை .. வாழ்வில் மறக்க முடியாதது .//

வாங்க‌ செந்தில்.. உண்மைதான், அத‌ன் நினைவுக‌ளை எப்போதும் அசை போட‌லாம். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@முகிலன் said...
//பேச்சுலர் லைப் நினைவுகள கிளறி விட்டுட்டீங்க. பேச்சுலர் லைப்ல நம்ம சமையல நாமலே கிண்டல் பண்ணிக்கிட்டு சாப்டலாம். பேச்'சிலர்' லைப்ல ??????? //

வாங்க‌ முகில‌ன்.. அந்த‌ லைப் த‌னி ஜாலிதான் என்ன‌ தான் கிண்ட‌ல் ப‌ண்ணினாலும் அந்த‌ நினைவுக‌ள் என்றும் மற‌க்காத‌வை தான்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@ம.தி.சுதா said...
//வணக்கம் தலைவா இளமை அனுபவங்கள் மறக்க முடியாதவை. வாழ்த்துக்கள். அப்படியே நாமள் தோசை பெயர் எப்படி வந்ததுண்ணு எழுதியிருக்கோம். ஆர்வம் இருந்தால் பாருங்க. http://mathisutha.blogspot.com/2010/07/blog//

வாங்க‌ ம.தி.சுதா... தோசையின் விள‌க்க‌ம் அருமை... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@Ananthi said...
ஹா ஹா ஹா. முடியல..
சரி சரி விடுங்க..

தோசையாவது கிடைச்சதே..... அந்த மட்டும் ஓகே தான்..!//

வாங்க‌ ஆன‌ந்தி ச‌கோ.. பின்ன‌ அப்பிடியே உட்டுவிடுவோமா என்னா? முழுவ‌தும் காலி ப‌ன்ணிட்டோமில்லா.... :))

@Chitra said...
//ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... யம்மா..... பில்ட் அப் கொடுத்தே கவுத்துட்டாங்களே! இன்னும் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்.//

வாங்க‌ சித்ரா அக்கா... ஆமா!! ஆமா!! ரெம்ப‌ ர‌ண‌க‌ள‌ ப‌டுத்திட்டானுங்க‌.. ஹி.ஹி. :)

@Mahi_Granny said...
//minced chicken curry with wheat dosai really tasty//

வாங்க‌ ம‌ஹி.. க‌ரெக்டா புடிச்சிட்டீங்க‌.. :) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@ஹாஜா மொஹைதீன் said...
//ஹையோ ஹையோ சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு//

வாங்க‌ மொஹைதீன்... ரெம்ப‌ ந‌ன்றி..

@இளம் தூயவன் said...
//ஸ்டீபன் இதுல முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், உங்கள் நண்பர்கள் உங்களை வைத்து சமையல் கலை என்ன
என்பதை முயற்சி செய்து இருக்கிறார்கள். அந்த நண்பர்களோடு சேர்ந்து கழித்த நாட்கள் , உண்மையில் இனிமையான நாட்களாகவே இருந்து
இருக்கும். என்ன நான் சொன்னது சரியா?//

உண்மைதான் இள‌ம்தூய‌வ‌ன்.. அந்த‌ நாட்க‌ள் இனியும் அமையுமா? என்ப‌து ச‌ந்தேக‌ம் தான்.. அந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் க‌ழித்த‌ நாட்க‌ள் மிக‌வும் ச‌ந்தோச‌மான‌ நாட்க‌ள். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//யம்மாடி முடியல... சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிருச்சி ஸ்டீபன்.. கூத்து சரியான கூத்தடிச்சிருக்கீங்க.. அன்னக்கி நீங்க புல்லா சாப்பிட்டிங்க.. ஒருவழியா சப்பாத்தி தோசையாகி கோழிக்குழம்பு எலும்புக்குழம்பாகிருச்சே.. ரசித்து படித்தேன்..//

வாங்க‌ ஸ்டார்ஜ‌ன்... ந‌ல்ல‌ கூத்துதான்.. பின்ன‌ கோழிக்குழ‌ம்புனா சும்மாவா?.. :) க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@vanathy said...
//ஸ்டீபன், நல்ல நகைச்சுவையா இருக்கு. அப்படியே உங்கள் சாம்பார் ரெசிப்பி போட்டிருக்கலாம்.//

வாங்க‌ வான‌தி ச‌கோ.. நான் செஞ்ச‌து சாம்பார் இல்ல‌ .. சாம்பார் மாதிரி. :)))) அதெல்லாம் போட்டால் அவ்வ‌ள‌வு தான்.

@Balaji saravana said...
பேச்சுலர் வாழ்க்கையில இதல்லாம் சகஜமப்பா.
வெரி நைஸ்.
//கோழிக்காலில் உள்ள‌ ச‌தை அவ்வ‌ள‌வும் குழ‌ம்பில் க‌ரைந்து சாப்பிட்டு வைத்த‌ எலும்பு போல் காட்சிய‌ளித்த‌து.//
கடைசில கோழி சூப் சாப்டீங்கன்னு சொல்லுங்க :))//

வாங்க‌ பாலாஜி... ஆமாங்க‌ ஆமா!!! வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@ஹுஸைனம்மா said...
//தண்ணீர் கூடினாலும் சளைக்காமல் அதை தோசையாக்கிய திறமை பாராட்டத்தான் செய்யணும்!!//

வாங்க‌ ஹுஸைன‌ம்மா... வேறா வ‌ழி, என்ன‌ ப‌ண்ணுற‌து.. ஆனா ந‌ல்லா இருந்த‌துங்க‌.. :))

@ஜெய்லானி said...
//என்னங்க நீங்க ஒன்னறை கிலோ உருளை ரொம்ப கம்மி எப்படியிம் ரெண்டரை கிலோவாவது போடனும் . அதான் குழம்பு சரியா வரல..ஹி..ஹி..//

வாங்க‌ ஜெய்லானி... கூட‌ ரெண்டு கிலோ அதிக‌மா வாங்கி‌ வ‌ந்திருந்தாலும் மொத்த‌மா போட்டிருப்பானுங்க‌... :))

@சத்ரியன் said...
//நீங்க‌ இர‌ண்டு பேரும் க‌வுத்து விளையாடுற‌துக்கு எங்க‌ வ‌யிறு தான் கிடைச்சுதானு சொல்லிட்டு, கொஞ்ச‌ம் இருந்த‌ த‌ண்ணியை நானே க‌வுத்து விட்டு மாவை க‌ல‌க்கி தோசை சுடுங்க‌னு சொல்லிட்டு துணியை துவைக்க‌ போனேன்.//

ஓஹ்...! மூனு நாளாவும் நானே சமைச்சேன். இன்னிக்கி சமையல்லயும் நம்ம பேரு வரட்டுமேன்னு - தண்ணிய கவுத்து உட்டீங்க.

பயங்கரமா யோசிக்கிறாய்ங்கப்பா.//

வாங்க‌ ச‌த்ரிய‌ன் அண்ணா... இப்ப‌டி வேற‌ ஒண்ணு இருக்கா?.. நான் யோசிக்க‌வே இல்லையே.. :))

@சத்ரியன் said...
////சிக்கன் ஸூப் ன்னு டக் னு பெயரை மாத்தி இருக்கலாமுல்லே:-))))))//

ஒரு கிலோ கோழிக்கி ஒன்னரைக் கிலோ உருளையப் போட்டாய்ங்கன்னு சொன்னத நீங்க கவனிக்கல போல.

ஸ்டீவன்,

“உருளைக்கோழி” சூப்புன்னு புது பேர் வெச்சிருக்கலாமே..!//

ந‌ல்ல‌ பேருதான் அண்ணா.. அடுத்த‌ முறை செய்து பார்த்துவிட்டு வைத்துவிட‌லாம். :))

r.v.saravanan said...

சமையல் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லி விட முடியாது உங்கள் பதிவு படித்து விட்டு ஹி ஹி ஹி தான்

Jaleela Kamal said...

h=ஹா ஹா கோழிக்கு பதில் ஒரு கிலோ உருளை கிழங்கு,,,,,,

பேச்சுலர்களை நினைத்தாலே பாவமா இருக்கும்
ஆனால் அவர்கள்: தான் கிரேட் குக் கொஞ்ச நாளில்

சிநேகிதன் அக்பர் said...

செம காமெடி ஸ்டீபன். இப்பதான் டல் மூடுல இருந்து சகஜமாக மாற முடிஞ்சது.

நல்ல எழுத்து நடை. கலக்குங்க.

சாமக்கோடங்கி said...

விடுங்க பாசு.. ஆயிரம் தடவ செய்யும் போது ஒரு தடவ தப்பு நடக்கிறது தான்...

Ahamed irshad said...

Ha ha Super post Stephen..Arumai..

கமலேஷ் said...

ரொம்ப நல்ல அனுபவம்தான் சார்.

சிரிச்சி வயிறு வலிக்குது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஹாஹா கலக்கல்...

சீக்கிரம் பழகிடுங்க.. வீட்டுக்காரம்மாவுக்கு உதவணுமே.,.

ஜானகிராமன் said...

அருள், இன்று தான் உங்கள் பதிவு பக்கம் வந்திருக்கிறேன். மிக அழகான, விதவிதமான பதிவுகள். இந்த சுயசமையலை ரசித்துப் படித்தேன். நாங்கள்ளாம் சுடுதண்ணியை சமைச்சதோட சரி. அதுக்கு மேல சமையல் பக்கம் போனா வீடே ரணகளமாகிடும்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா...ஹா... நல்ல அனுபவம் சார்... நன்றி...

Related Posts with Thumbnails