Monday, August 23, 2010

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி

ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையான‌து இந்த‌ வ‌ருட‌த்தை உல‌க‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் வ‌ருட‌மாக‌ அறிவித்துள்ள‌து(International Year of Biodiversity-2010). இவ்வாறு அறிவித்திருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வையும், அத‌ன் அவ‌சிய‌த்தையும் ம‌க்க‌ளிட‌ம் கொண்டுசெல்வ‌தாகும்.

Biodiversity is life.
Biodiversity is our life.




விள‌க்க‌ம்:

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌து. இந்த‌ உயிரின‌ங்க‌ளின் த‌ற்போதைய‌ நிலைக‌ளை அள‌விட‌வும், அவைக‌ளின் பெருக்க‌த்தையும் ம‌திப்பிடுகிற‌து.

எத‌ற்க்காக‌ இந்த‌ உயிரின‌ங்க‌ளை பாதுகாக்க‌ வேண்டும்?.

நாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்து தான் இருக்கின்ற‌ன‌.

இப்போது உள்ள‌ வாழ்க்கைமுறையில் நோயில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து நினைத்து பார்க்க‌ முடியாத‌ ஒன்று, இந்த‌ நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள் தான்.

இருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும் தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து.

இவ்வாறு ந‌ம‌க்கு இன்றிய‌மையாத‌ பொருட்க‌ளான‌ உண‌வு, உடை, உற‌விட‌ம் என்ற‌ கார‌ணிக‌ளுக்கு நாம் இவைக‌ளை சார்ந்தே வாழ‌ வேண்டியுள்ள‌து. இவ்வாறு ந‌ம‌க்கு எல்லாவித‌த‌திலும் தேவையாக‌ இருக்கும் இந்த‌ உயிரின‌ங்க‌ளை நாம் பாதுகாக்கிறோமா? என்ப‌து ந‌ம்மை நாம் கேட்க‌ வேண்டிய‌ கேள்வி.

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் இய‌ற்கையாக‌ க‌ண்ணுக்கு தெரியாம‌ல் ந‌டைபெறும் ப‌ல‌ ப‌ணிக‌ளை செய்கின்றது. வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் ந‌டைபெறும் வேதியிய‌ல் ம‌ற்றும் நீர் சுழ‌ற்ச்சிக‌ளை ச‌ம‌ன் ப‌டுத்துகிற‌து. நீரை தூய்மை ப‌டுத்துத‌ல்(மீன்க‌ள்) ம‌ற்றும் ம‌ண்ணில் ச‌த்துக‌ளை ம‌றுசுழ‌ற்ச்சி செய்து(ம‌ண்புழு) வ‌ள‌மான‌ நில‌த்தை கொடுக்கிற‌து. ப‌ல்வேறு ஆய்வுக‌ளின் ப‌டி இய‌ற்கையான‌ சூழ்நிலையை ந‌ம்முடைய‌ அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் அமைத்து கொள்ள‌ முடியாது என்று ஆய்வாள‌ர்க‌ள் தெரிவிக்கிறார்க‌ள்.

உதார‌ண‌மாக‌ பூக்க‌ளில் பூச்சிக‌ள் மூல‌ம் ந‌ட‌க்கும் ம‌க‌ர‌ந்த‌சேர்க்கையை ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்மால் ந‌ட‌த்த‌ முடியுமா?... (முடியும் ஆனால் இய‌ற்கையாய் ந‌டைபெறும் ஒரு செய‌லை செய்ய‌, செய‌ற்கைக்கு எவ்வ‌ள‌வு செல‌வு செய்ய‌ வேண்டிவ‌ரும்)

தொழிற்ச‌லைக‌ளுக்கு தேவையான‌ மூல‌ப்பொருட்க‌ள் பெரும்பாலும் உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளில் இருந்தே எடுக்க‌ப்ப‌டுகிற‌து. என‌வேதான் இந்த‌ உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளை அழியாம‌ல் பாதுகாப்ப‌துக்கு உல‌க‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து.

இய‌ற்கையை ர‌சிப்ப‌து என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் மிக‌ பிடித்த‌மான‌ ஒன்று. கோடைக்கால‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால் இய‌ற்கையை ர‌சிக்க‌ ம‌லைப் பிரேதேச‌ங்க‌ளுக்கு கிள‌ம்பிவிடுவோம். இய‌ற்கை அருவிக‌ளும், ப‌ற‌வைக‌ளும் எவ‌ர் க‌ண்க‌ளையும் கொள்ளை கொள்ளும். இந்த‌ இய‌ற்கைய‌ழ‌கு தான் ப‌ல‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளுக்கும், க‌விஞ‌ர்க‌ளுக்கும், ஓவிய‌ர்க‌ளுக்கும் ம‌ற்றும் க‌லைஞ‌ர்க‌ளுக்கும் ஊக்க‌மாய் அமைந்துள்ள‌து.



அழிக்கும் கார‌ணிக‌ள்:

ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை அழிக்கும் கார‌ணிக‌ளை எட்வ‌ர்ட் ஓ வில்ச‌ன் என்ற‌ ஆய்வாள‌ர் ஆங்கில‌த்தில் HIPPO (ஹிப்போ) என்று அழைக்கிறார். அதில் ஐந்து கார‌ணிக‌ளை குறிப்பிடுகிறார்.

1)வாழிட‌ம் அழித்த‌ல் (H-Habitat destruction)
2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)
3)மாசுபாடு (P-Pollution)
4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)
5)அதிக‌மான‌ அறுவ‌டை (O-Overharvesting)

1)வாழிட‌ம் அழித்த‌ல்:

இதை ப‌ற்றி அதிக‌ம் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை. ந‌ம் க‌ண்முன்னே ந‌ட‌க்கும் செய‌ல்க‌ள் தான். ப‌ல‌ விளைநில‌ங்க‌ள் க‌ட்டிட‌ங்க‌ளாக‌வும், காடுக‌ள் தொழிற்சாலைக‌ளாக‌ மாறிக்கொண்டிருக்கின்ற‌து. உயிரின‌ங்க‌ளில் வாழிட‌ங்க‌ளை அழித்து ந‌ம‌து வாழிட‌ங்க‌ளை பெருக்கி கொள்கிறோம். கி.பி 1000 முத‌ல் இன்றுவ‌ரை அழிவிற்கு உண்டான‌ தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்கின‌ங்க‌ள் ம‌னித‌ ந‌ட‌வ‌டிக்கையால் ஏற்ப‌ட்ட‌தே ஆகும்.

2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள்:

உல‌கில் ப‌ல்வேறு ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அந்த‌ சூழ‌லுக்குகேற்ப‌ கூட்ட‌மாக‌ வாழ்கின்ற‌ன‌. அவ்வாறு கூட்ட‌மாக‌ வாழ்வ‌த‌ற்கு கார‌ண‌ம் க‌ண்ட‌ங்க‌ள், க‌ட‌ல்க‌ள், ம‌லைக‌ள், ஆறுக‌ள் ஆகிய‌வ‌ற்றால் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்துவிடாம‌ல் பிரித்துவைக்க‌ப்ப‌டுவ‌தால் தான். ஆனால் த‌ற்போது ம‌னித‌ர்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போக்குவ‌ர‌த்து வ‌ச‌திக‌ளால் இவைக‌ள் த‌ங்க‌ளின் சூழ‌லில் இருந்து சுல‌ப‌மாக‌ இட‌ம்பெய‌ர்கின்ற‌ன‌. இவ்வாறு இட‌ம்பெய‌ரும் சிற்றின‌ங்க‌ள் அந்த‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ சிற்றின‌ங்க‌ளில் வ‌ள‌ர்ச்சியை அப‌க‌ரித்து த‌ன்னுடைய‌ இன‌த்தை விருத்திசெய்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டுவ‌ந்து ந‌ம‌து நாட்டில் ப‌யிரிட‌ப்ப‌டும் ப‌ழ‌ங்க‌ளை சொல்ல‌லாம்.

3)ம‌ர‌ப‌ணு மாசுபாடு:

தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்குக‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ம‌ர‌ப‌ணு சோத‌னைக‌ள் மூல‌ம் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌ங்க‌ள். இத‌னால் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌த்தின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளில் மாசுபாடு ஏற்ப‌டுகிற‌து. இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும்.

எந்த‌வொரு உயிரியிலும் வெளிப்புற‌த் தோற்ற‌த்தை ம‌ட்டும் அடிப்ப‌டையாக‌ வைத்து க‌ல‌ப்பின‌ம் செய்யாம‌ல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புற‌த் தோற்ற‌த்திலும் உள்ள‌ மாற்ற‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு ஆய்வு செய்வ‌தே சிற‌ந்த‌து.

உதார‌ண‌மாக‌ இப்போது ச‌ந்தையில் உள்ள‌ க‌த்திரிக்காவை(Genetically Modified Brinjal) சொல்ல‌லாம்.

4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு:

ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை ஆண்டுதோறும் அதிக‌ரித்து கொண்டே இருக்கிற‌து. இந்த‌ அதிக‌ப்ப‌டியான‌ வ‌ள‌ர்ச்சியும் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு த‌டையாக‌ இருக்கின்ற‌து. இந்த‌ ம‌க்க‌ள்த்தொகை பெருக்க‌த்தால் சுற்றுப்புற‌ச்சூழ‌ல் வெகுவாக‌ ப‌திக்க‌ப்ப‌டுகிற‌து அத‌னால் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் போன்ற‌ நிக‌ழ்வுக‌ளும் நிக‌ழ்கின்ற‌ன‌. ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌ த‌ள‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும் ப‌வ‌ள‌ப்பாறைக‌ள், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வுக‌ளால் இன்னும் 20 முத‌ல் 40 வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலும் அழிந்துவிடும் அபாய‌ம் உள்ள‌து.

5)அதிக‌மான‌ அறுவ‌டை:

தாவ‌ர‌ங்க‌ளில் விளையும் பொருட்க‌ளை உண‌வுக்கு என்று பொரும்ப‌குதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைக‌ளின் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குவ‌த‌ற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அதிக‌ விளைச்ச‌ல் த‌ரும் வீரிய‌ ர‌க‌ ப‌யிர்க‌ளை ப‌யிர் செய்து அதில் இய‌ற்கைக்கு மீறிய‌ அதிக‌ ம‌க‌சூலை பெறுகிறோம்.

இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் அதிக‌ம் செறிந்துள்ள‌ ப‌குதியான‌ அமோசான் ம‌ழைக்காடுக‌ள் ப‌ற்றியும், அவ‌ற்றின் அழிவுக‌ள் ப‌ற்றியும் அடுத்த‌ ப‌குதியில் எழுதுகிறேன்.


தொட‌ரும்...

குறிப்பு: ஒரு வார‌த்திற்கு முன்னால் இர‌வு ப‌தினொரு ம‌ணிய‌ள‌வில் டிவி ரிமோட்டை பொதிகை சேன‌ல் திருப்பினேன். அதில்தான் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் ப‌ற்றி டாக்ட‌ர் ஒருவ‌ர் த‌ன்னுடைய‌ க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொண்டிருந்தார். அத‌ன் தாக்க‌ம் தான் என்னை எழுத‌ தூண்டிய‌து. என்னுடைய‌ ச‌ந்தேக‌ம் எல்லாம் இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது?.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்? ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை?..

.

.

35 comments:

Asiya Omar said...

தேவையான பகிர்வு.அருமை.பாராட்டுக்கள்.

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நண்பா, மிக முக்கியமான, தேவையான செய்தியை தொட்டிருக்கிறீர்கள். ஆழமாக எழுதுங்கள். நானும் என்னுடைய தளத்தில் மனிதனுக்கு மட்டுமா உலகம் என்ற தலைப்பில் இது பற்றிய அறிமுகத்தை கொடுத்துள்ளேன்.http://podhujanam.wordpress.com/2010/06/18/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

ரசிகன் said...

நல்ல பகிர்வு:)

வாழ்த்துக்கள்:)

Prathap Kumar S. said...

நல்ல பதிவு ஸ்டீபன்...விகடன் குட்பிளாக்குக்கு அனுப்புங்கள்.


துர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.... மற்ற சானல்களில் இந்த நேரம் வர்ற நிகழ்ச்சிகள்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் நிகழ்ச்சிகள்தான்...

நீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும்போது இதுமாதிரி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே,,,:))

kavisiva said...

நல்ல பதிவு ஸ்டீபன்! பதினோரு மணிக்காவது போடறாங்களே! சீரியல் நேரத்துல போட்டா யார் பார்ப்பாங்க:-)

தூயவனின் அடிமை said...

நல்ல அருமையான பதிவு, இவற்றையெல்லாம் இந்த மக்கள் எங்கே தொலைகாட்சியில் பொறுமையாக
பார்கிறார்கள். அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சியே வேறு.

Chitra said...

prime டைம்ல ஒளிப்பரப்பினாலும், எத்தனை பேர் பார்க்க போறாங்க என்று நினைத்து இருப்பார்கள்...
நல்ல பதிவு....!

செ.சரவணக்குமார் said...

அவசியமான பதிவு ஸ்டீபன். பகிர்வுக்கு நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

1)வாழிட‌ம் அழித்த‌ல் (H-Habitat destruction)
2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)
3)மாசுபாடு (P-Pollution)
4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)
5)அதிக‌மான‌ அறுவ‌டை (O-Overharvesting)

----------

மிக அருமையான விளக்கம்.

ஆனால் மக்கள்தொகை பற்றி மட்டும் அல்டிமேட்டம் என மாற்றுப்பார்வை கட்டுரை ஒன்று படித்த நியாபகம் முடிந்தால் பகிர்கிறேன்.

எம் அப்துல் காதர் said...

@@@ நல்ல பதிவு ஸ்டீபன்!!

//துர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.. நீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும் போது இதுமாதிரி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே//

ச்சே..ச்சே.. அப்படியும் இதை எடுத்துக்க முடியாது. பாத்துக்கிட்டு இருக்கும் போது சேனல் மாறிடிச்சு. அப்படீன்னு வேனா.....!! ஹா ஹா )):-

ஜெய்லானி said...

அவசியமான பதிவு ...

ஹுஸைனம்மா said...

நிறைய புதியன அறிந்துகொண்டேன். நன்றி.

தூர்தர்ஷன்தான் பெஸ்ட். ஆனால் யாரும் அதைத் தப்பித் தவறிக்கூட பார்ப்பத்ல்லை;, இப்படி தவறிப் போய்ப் பார்த்தால்தான் உண்டு!!

vanathy said...

Very good informations!

r.v.saravanan said...

அருமையான பகிர்வு நன்றி ஸ்டீபன்
பாராட்டுக்கள்

கண்ணா.. said...

அருமையான அவசியமான பகிர்வு ஸ்டீபன்...

இந்த பதிவிற்கு பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பிற்க்கு சல்யூட்...

நீங்கள் தமிழில் இதுமாதிரியான தொழில்நுட்ப வார்த்தைகளை கொடுத்து தேடினால் நமக்கு வரும் சுட்டிகள் மிக சொற்பமே. காரணம் தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகமிக குறைவு. நண்பர்கள் அவ்வப்போது இது மாதிரியான தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதுதான் இதற்கு தீர்வு...


அடிக்கடி இது போன்ற பதிவுகளையும் எழுதுங்கள். சிலசமயம் வரவேற்பு குறைவாக இருந்தாலும்

பிகு: என்னோட டேஷ் போர்டில் என்ன பிரச்சனைன்னு தெரியலை.. இந்த பதிவு இன்னும் அப்டேட் ஆக வில்லை

Unknown said...

இம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..

Unknown said...

இம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..

Unknown said...

இம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..

அன்புடன் மலிக்கா said...

எப்படியிருக்கீங்க ஸ்டீபன்.

மிகவும் அவசியமான பதிவு. பகிர்வுக்கு
மகிழ்ச்சி..

kavisiva said...

வாழ்த்துக்கள் ஸ்டீபன். உங்கள் இந்த பதிவு விகடன் குட் ப்ளாக்ஸ் ல் வந்துள்ளது

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது?.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்? ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை?..///

சரி விடுங்க கேக்கல.. :-))

பயனுள்ள பகிர்வு.. ரொம்ப தெளிவா, அழகா விளக்கி இருக்கீங்க.. நல்லா இருக்கு.. :)

Paleo God said...

//இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும். //

இதெல்லாமே ரொம்ப முக்கியமான விஷயங்கள் ஸ்டீபன். இதில் நாம் தவறவிட்ட பாரம்பர்ய ரகங்கள் ஏராளம். இதுபோன்று இன்னும் தேடி எடுத்து எழுதுங்கள். முக்கியமாய் இயற்கை விவசாய முறைகள் பற்றி ஆராயுங்கள். எல்லோருமே உட்கொள்ளும் உணவின் வந்த வழி தெரிய விரும்பினாலே ஒரு மாற்ற்ம் நிகழும் என்று எண்ணுகிறேன்.

Paleo God said...

//இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும். //

இதெல்லாமே ரொம்ப முக்கியமான விஷயங்கள் ஸ்டீபன். இதில் நாம் தவறவிட்ட பாரம்பர்ய ரகங்கள் ஏராளம். இதுபோன்று இன்னும் தேடி எடுத்து எழுதுங்கள். முக்கியமாய் இயற்கை விவசாய முறைகள் பற்றி ஆராயுங்கள். எல்லோருமே உட்கொள்ளும் உணவின் வந்த வழி தெரிய விரும்பினாலே ஒரு மாற்ற்ம் நிகழும் என்று எண்ணுகிறேன்.

DREAMER said...

தூர்தர்ஷனில், அடிக்கடி இப்படி நல்ல ப்ரோக்ராம்களை பார்க்க நேரும்போதுதான், 'நாம் இந்த சேனலை ஏன் புறக்கணிக்கிறோம்?' என்று வருத்தம் ஏற்படுகிறது. நல்ல பகிர்வு..! மிக்க நன்றி!

-
DREAMER

நாடோடி said...

@asiya omar said...
//தேவையான பகிர்வு.அருமை.பாராட்டுக்கள்.//

வாங்க‌ ஆசியா ச‌கோ!!.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@Tamilulagam said...
//உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.//

வாங்க‌ த‌மிழ் உல‌க‌ம்... உங்க‌ பின்னூட்ட‌த்திற்கு ரெம்ப‌ ந‌ன்றி.. க‌ண்டிப்பா இணைகிறேன்.

@ஒரு கோப்பை வாழ்க்கை said...
//நண்பா, மிக முக்கியமான, தேவையான செய்தியை தொட்டிருக்கிறீர்கள். ஆழமாக எழுதுங்கள். நானும் என்னுடைய தளத்தில் மனிதனுக்கு மட்டுமா உலகம் என்ற தலைப்பில் இது பற்றிய அறிமுகத்தை கொடுத்துள்ளேன்//

வாங்க‌ ஜான‌கிராம‌ன்..ப‌டித்தேன் ந‌ண்ப‌ரே.. நீங்க‌ள் ஏன் தொட‌ர‌வில்லை.. சீக்கிர‌ம் தொட‌ருங்க‌ள். உங்க‌ளுடைய‌ எழுத்து ச‌முதாய‌த்தை தொட்டு செல்கிற‌து.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@ரசிகன் said...
//நல்ல பகிர்வு:)

வாழ்த்துக்கள்:)//

வாங்க‌ ர‌சிக‌ன்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

@நாஞ்சில் பிரதாப் said...
//நல்ல பதிவு ஸ்டீபன்...விகடன் குட்பிளாக்குக்கு அனுப்புங்கள்.


துர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.... மற்ற சானல்களில் இந்த நேரம் வர்ற நிகழ்ச்சிகள்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் நிகழ்ச்சிகள்தான்...

நீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும்போது இதுமாதிரி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே,,,:))//

வாங்க‌ பிர‌தாப்பு.. நீங்க‌ சொன்ன‌து போல் அனுப்பியாச்சி, அவ‌ங்க‌ளும் த‌ள‌த்தில் போட்டிருக்காங்க‌..

உண்மையெல்லாம் இப்ப‌டி பொதுவில் போட்டு உடைக்க‌ கூடாது.. :)

நாடோடி said...

@kavisiva said...
//நல்ல பதிவு ஸ்டீபன்! பதினோரு மணிக்காவது போடறாங்களே! சீரியல் நேரத்துல போட்டா யார் பார்ப்பாங்க:-)//

வாங்க‌ க‌விசிவா... நீங்க‌ சொல்வ‌து ச‌ரிதான். சீரிய‌லுக்கு கொடுக்கும் முக்கிய‌துவ‌த்தை ம‌க்க‌ள் இத‌ற்கு கொடுப்ப‌து இல்லை.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@இளம் தூயவன் said...
//நல்ல அருமையான பதிவு, இவற்றையெல்லாம் இந்த மக்கள் எங்கே தொலைகாட்சியில் பொறுமையாக
பார்கிறார்கள். அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சியே வேறு.//

வாங்க‌ ந‌ண்ப‌ரே.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@Chitra said...
//prime டைம்ல ஒளிப்பரப்பினாலும், எத்தனை பேர் பார்க்க போறாங்க என்று நினைத்து இருப்பார்கள்...
நல்ல பதிவு....!//

வாங்க‌ சித்ரா அக்கா.. நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரிதான். ம‌க்க‌ள் ம‌ன‌ம் வைத்தால்தான் மாற்ற‌ம் வ‌ரும்..க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@செ.சரவணக்குமார் said...
//அவசியமான பதிவு ஸ்டீபன். பகிர்வுக்கு நன்றி.//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் அண்ணா.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@புன்னகை தேசம். said...
1)வாழிட‌ம் அழித்த‌ல் (H-Habitat destruction)
2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)
3)மாசுபாடு (P-Pollution)
4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)
5)அதிக‌மான‌ அறுவ‌டை (O-Overharvesting)

----------

மிக அருமையான விளக்கம்.

ஆனால் மக்கள்தொகை பற்றி மட்டும் அல்டிமேட்டம் என மாற்றுப்பார்வை கட்டுரை ஒன்று படித்த நியாபகம் முடிந்தால் பகிர்கிறேன்.//


வாங்க‌ சாந்தி அக்கா.. க‌ண்டிப்பா ப‌கிருங்க‌ள், நானும் தெரிந்து கொள்கிறேன்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@எம் அப்துல் காதர் said...
@@@ நல்ல பதிவு ஸ்டீபன்!!

//துர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.. நீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும் போது இதுமாதிரி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே//

ச்சே..ச்சே.. அப்படியும் இதை எடுத்துக்க முடியாது. பாத்துக்கிட்டு இருக்கும் போது சேனல் மாறிடிச்சு. அப்படீன்னு வேனா.....!! ஹா ஹா )):-//

வாங்க‌ அப்துல்.. என்ன‌ பிர‌தாப்பு கிள‌ப்பிய‌தை நீங்க‌ளும் வ‌ழிமொழிகிறீர்க‌ளா?... ஹா.. ஹா.. :) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@ஜெய்லானி said...
//அவசியமான பதிவு ...//

வாங்க‌ ஜெய்லானி.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@ஹுஸைனம்மா said...
//நிறைய புதியன அறிந்துகொண்டேன். நன்றி.

தூர்தர்ஷன்தான் பெஸ்ட். ஆனால் யாரும் அதைத் தப்பித் தவறிக்கூட பார்ப்பத்ல்லை;, இப்படி தவறிப் போய்ப் பார்த்தால்தான் உண்டு!!//

வாங்க‌ ஹுஸைனம்மா.. நான் த‌ப்பி த‌வ‌றியெல்லாம் பார்க்க‌ வில்லைங்க‌..

நான் பொதிகையின் நிக‌ழ்ச்சிக‌ள் சில‌வ‌ற்றை பார்பேனுங்க‌...:)

பிர‌தாப்பு சொல்லுற‌தை நீங்க‌ கேட்காதீங்க‌.. :)

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

நாடோடி said...

@vanathy said...
//Very good informations!//

வாங்க‌ வான‌தி ச‌கோ.. ரெம்ப‌ ந‌ன்றி.

@r.v.saravanan said...
//அருமையான பகிர்வு நன்றி ஸ்டீபன்
பாராட்டுக்கள்//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@கண்ணா.. said...
//அருமையான அவசியமான பகிர்வு ஸ்டீபன்...

இந்த பதிவிற்கு பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பிற்க்கு சல்யூட்...

நீங்கள் தமிழில் இதுமாதிரியான தொழில்நுட்ப வார்த்தைகளை கொடுத்து தேடினால் நமக்கு வரும் சுட்டிகள் மிக சொற்பமே. காரணம் தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகமிக குறைவு. நண்பர்கள் அவ்வப்போது இது மாதிரியான தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதுதான் இதற்கு தீர்வு...


அடிக்கடி இது போன்ற பதிவுகளையும் எழுதுங்கள். சிலசமயம் வரவேற்பு குறைவாக இருந்தாலும்

பிகு: என்னோட டேஷ் போர்டில் என்ன பிரச்சனைன்னு தெரியலை.. இந்த பதிவு இன்னும் அப்டேட் ஆக வில்லை//

வாங்க‌ க‌ண்ணா.. நீங்க‌ள் சொல்வ‌து உண்மைதான் நானும் இதைப் ப‌ற்றி த‌மிழில் தேடினேன்.. அதிக‌ம் கிடைக்க‌வில்லை.. உங்க‌ளில் ஊக்க‌திற்கு ரெம்ப‌ ந‌ன்றி..

ஹிட்ஸா அப்ப‌டினு ஒண்ணை நான் எதிர்பார்ப்ப‌து இல்லை.. :)

டேஷ் போர்டில் தெரியாத‌ற்கு என்ன‌ பிர‌ச்ச‌னை என்று தெரிய‌வில்லை.. உங்க‌ளுக்கு தெரிந்தால் சொல்லுங்க‌ள்.. ச‌ரி செய்கிறேன்..

@கே.ஆர்.பி.செந்தில் said...
//இம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..//

வாங்க‌ செந்தில் அண்ணா.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@அன்புடன் மலிக்கா said...
//எப்படியிருக்கீங்க ஸ்டீபன்.

மிகவும் அவசியமான பதிவு. பகிர்வுக்கு
மகிழ்ச்சி..//

வாங்க‌ ம‌லிக்கா அக்கா.. ரெம்ப‌ நால்லா இருக்கேன்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@kavisiva said...
//வாழ்த்துக்கள் ஸ்டீபன். உங்கள் இந்த பதிவு விகடன் குட் ப்ளாக்ஸ் ல் வந்துள்ளது//

வாங்க‌ க‌விசிவா.. உங்க‌ள் வாழ்த்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.. நீங்க‌ள் த‌க‌வ‌ல் சொன்ன‌ பிற‌குதான் நானே பார்த்தேன்.. ரெம்ப‌ ந‌ன்றி.

@Ananthi said...
//இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது?.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்? ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை?..///

சரி விடுங்க கேக்கல.. :-))

பயனுள்ள பகிர்வு.. ரொம்ப தெளிவா, அழகா விளக்கி இருக்கீங்க.. நல்லா இருக்கு.. :)//

வாங்க‌ ஆன‌ந்தி ச‌கோ.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும். //

இதெல்லாமே ரொம்ப முக்கியமான விஷயங்கள் ஸ்டீபன். இதில் நாம் தவறவிட்ட பாரம்பர்ய ரகங்கள் ஏராளம். இதுபோன்று இன்னும் தேடி எடுத்து எழுதுங்கள். முக்கியமாய் இயற்கை விவசாய முறைகள் பற்றி ஆராயுங்கள். எல்லோருமே உட்கொள்ளும் உணவின் வந்த வழி தெரிய விரும்பினாலே ஒரு மாற்ற்ம் நிகழும் என்று எண்ணுகிறேன்.//

வாங்க‌ ஷ‌ங்க‌ர்ஜி.. நீங்க‌ள் சொல்வ‌து போல் நானும் இய‌ற்கை விவ‌சாய‌த்தைப் ப‌ற்றி எழுத‌ வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.. என்னால் முடிந்த‌வ‌ரை முற‌ற்ச்சிக்கிறேன். ஊக்க‌திற்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@DREAMER said...
//தூர்தர்ஷனில், அடிக்கடி இப்படி நல்ல ப்ரோக்ராம்களை பார்க்க நேரும்போதுதான், 'நாம் இந்த சேனலை ஏன் புறக்கணிக்கிறோம்?' என்று வருத்தம் ஏற்படுகிறது. நல்ல பகிர்வு..! மிக்க நன்றி!

-
DREAMER//

வாங்க‌ ஹ‌ரீஸ்.. நீங்க‌ள் சொல்வ‌துபோல் அந்த‌ ஆத‌ங்க‌ம் என‌க்கும் உண்டு.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

Ahamed irshad said...

நல்ல பதிவு ஸ்டீபன்..

Jaleela Kamal said...

நல்ல் பதிவு அனைவரூம்படிக்க வேண்டிய பதிவு.
குட் பிளாக் பகுதியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

அண்ணாமலை..!! said...

உல‌க‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் வ‌ருட‌மாக‌ அறிவித்துள்ள‌து(International Year of Biodiversity-2010).

தமிழுடன் அழகாகத் தங்களின் கட்டுரை விழிப்புணர்வுடன் அமைந்துள்ளது.
நன்றிகள்!

சிநேகிதன் அக்பர் said...

மிக அவசியமான பதிவு ஸ்டீபன். மிக முக்கியமான இந்த விசயத்தை பற்றி நிறைய பேர் அறியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

நம்மாளுக்கு இறைவன் இருக்கிறானா இல்லையான்னு சண்டை போட தெரியும். கொடுத்ததை அழிக்காமல் பாதுக்காக்கத்தெரியாது.

(இந்த பதிவை எப்படி விட்டேன்னு தெரியலை. சாரி)

சிநேகிதன் அக்பர் said...

குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளி வந்ததற்கு வாழ்த்துகள் ஸ்டீபன்

இராஜராஜேஸ்வரி said...

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் ப‌ற்றி பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு சார்... பாராட்டுக்கள்...

இன்று நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து தளங்களும் (மனிதனுக்கு முதுகுத் தண்டுப் போல) மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

Related Posts with Thumbnails