Tuesday, August 31, 2010

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி - நிறைவு

நமது சென்னையில் காக்கைகளை பார்க்க முடியவில்லை, கோவையில் நடந்த மாநாட்டிற்கு பல மரங்கள் முறிக்கப்பட்டன, சிட்டுக்குருவி என்று ஒரு இனத்தை பார்க்கவே முடியவில்லை என்று வரும் செய்திகளும் பல்லுயிர் பெருக்கத்தின் அழிவின் நீட்சியே.

பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்ததும், பல்லுயிர் பெருக்கத்தின் செறிவு மிகுந்த பகுதியாக கருதப்படுவது அமேசான் மழைக்காடுகள் தான். இந்த காடுகளின் அழிவுகள் தான் இன்று பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.

அமேசான் மழைக்காடுகள்:

தென் அமெரிக்கா கண்டத்தில் பரந்து விரிந்துள்ளது இந்த மழைக்காடுகள். மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகையானது இந்த மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் தான் அமேசான் ஆறும், அதன் துணை ஆறுகளும் ஓடி பின் கடலில் கலக்கின்றன. இதன் பரப்பளவு சுமார் 7 மில்லியன் சதுரகிலோ மீட்டர். இதில் காடுகள் மட்டும் சுமார் 5.5 மில்லியன் சதுரகிலோ மீட்டர்.



இந்த காடுகள் சுமார் ஒன்பது நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. பிரேசில் நாட்டில் தான் இந்த மழைக்காடுகளின் 60 சதவீதம் உள்ளது. இந்த காடுகளில் சுமார் 2.5 மில்லியன் பூச்சியினங்களும், பத்தாயிரத்திற்கு அதிகமான தாவரயினங்களும், ஏறத்தாழ இரண்டாயிரம் பறவை மற்றும் பாலூட்டிகளும் வகைகள் இருப்பதாக ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மழைக்காட்டில் பாயும் ஆறுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான மீன் வகைகளும் காணப்படுகின்றன.

இந்த மழைக்காடுகளில் சுமார் 75,000 வகையான மரங்களும் தாவர இனங்களும் காணப்படுகின்றன. உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் இந்த காடுகளில் உள்ள தாவரங்கள் தான் உட்கொள்ளுகின்றன. எனவே இவைகளை பாதுகாப்பது சுற்றுபுறச்சூழலுக்கு மிக இன்றியமையாதது ஆகும்.

1960 ஆம் ஆண்டுவரை இந்தக் காடுகளுக்குள் இருக்கும் வளங்களை சுரண்டாமல் இருக்க கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு சில பண்ணைகள் மற்றும் பண்ணை விவசாயம் செய்ய, என்று உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அதில் இருந்து அந்த காடுகளின் அழிவுகள் தொடங்குகிறது.



1991 முத‌ல் 2000 வ‌ரையிலான‌ ஆண்டுக‌ளில் இந்த‌ காடுக‌ளின் நில‌ப்ப‌ர‌ப்பு 415000 முத‌ல் 587000 ச‌துர‌ ப‌ர‌ப்ப‌ள‌வு அழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ ஆய்வுக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. 2000 முத‌ல் 2005 வ‌ரையிலான் இடைப்ப‌ட்ட‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ காடுக‌ளின் அழிவுக‌ள் மிக‌ப்பெரிய‌ அள‌வு என்று க‌ண‌க்கிட‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து இதுவ‌ரையிலும் அழிக்க‌ப்ப‌ட்ட‌ காடுக‌ளின் அழிவுக‌ளின் ச‌த‌வீத‌த்தை விட‌ இந்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளின் அழிவுக‌ள் 18% அதிக‌ரித்துள்ள‌து.

இதே ச‌த‌வீத‌த்தில் இந்த‌ காடுக‌ள் அழிக்க‌ப் ப‌டுமானால் இன்னும் 20 வ‌ருட‌ங்க‌ளில் இந்த‌ ம‌ழைக் காடுக‌ளின் ப‌ர‌ப்ப‌ள‌வு 40% வ‌ரை குறையும் அபாய‌ம் உள்ள‌து. இந்த‌ காடுக‌ளின் அழிவுக‌ளால் ப‌சுமை இல்ல‌ வாயுக்க‌ள்(Green House Gases) க‌ண்டிப்பாக‌ பாதிக்க‌ப்ப‌டும். இந்த‌ ப‌சுமை இல்ல‌ வாயு பாதிப்புக‌ளின் விளைவுக‌ள் தான் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming).

இந்த‌ பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வின் வீரிய‌த்தால் வ‌ரும் 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் துருவ‌ப் ப‌குதியில் உள்ள‌ ப‌னிப்ப‌றைக‌ள் முற்றிலும் உருக‌த் தொட‌ங்கிவிடும் என்று ஆய்வாள‌ர்க‌ள் எச்ச‌ரிக்கிறார்க‌ள். இந்த‌ ப‌னிப்பாறைக‌ளின் உருகுத‌‌லில் வெளியிட‌ப்ப‌டும் மீதேன் போன்ற‌ க‌ரிய‌மில‌ வாயுக்க‌ள் மேலும் வ‌ளிம‌ண்ட‌ல‌த்தை பாதிக்கும். இப்ப‌டித்தான் ஒவ்வொரு விளைவுக‌ளும் ஒன்றுட‌ன் ஒன்றுத் ச‌ங்கிலித் தொட‌ர் போல் தொட‌ர்புடைய‌வை. என‌வே இந்த‌ விளைவுக‌ளின் கார‌ணிக‌ளை க‌ட்டுப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகிற‌து.



பாதுகாக்க‌ எடுக்க‌ப்ப‌டும் முய‌ற்ச்சிக‌ள்:

உல‌க‌ அள‌வில் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு இழ‌ப்பு ஏற்ப‌டும் இந்த‌ இருப‌தாம் நூற்றாண்டில் சூழ‌லிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள், இய‌ற்க்கை ஆய்வாள‌ர்க‌ள் ம‌ற்றும் அறிவிய‌ல் அறிஞ‌ர்க‌ள் போன்றோர் இந்த‌ப் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தைப் ப‌ற்றி ஆராய‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ர். ஜான் முய‌ர்(John Muir) என்ப‌வ‌ர் இவைக‌ளை பாதுகாப்ப‌திற்கும், அழிவின்றி பாதுகாப்ப‌திற்கும் உள்ள‌ வேறுப்பாட்டை பின்வ‌ருமாறு விள‌க்குகிறார்.

இழ‌ப்பின்றி பாதுகாப்ப‌து என்ப‌து ம‌னித‌ ஊடுருவ‌ல் அல்ல‌து உப‌யோக‌ம் இல்லாத‌ பாதுகாப்பான‌ ப‌குதிக‌ளாகும். இழ‌ப்பின்றி பாதுகாத்த‌ல் என்ற‌ வ‌ரைமுறையின் ப‌டி இய‌ற்கையான‌ வாழிட‌ங்க‌ளுட‌ன் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை நிலையாக‌ பேணுவ‌தே ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகிற‌து.

இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌துவ‌த்தைக் க‌ருத்தில் கொண்டுதான் ஐக்கிய‌ நாடுக‌ள் ஒருங்கினைப்பான‌து இந்த‌ வ‌ருட‌த்தை ப‌ல்லுயிர் பெருக்க‌தின் ஆண்டாக‌(International Year of Biodiversity) அறிவித்துள்ள‌து.

ப‌ல்லுயிர் பெருக்க‌ ஆண்டின் குறிக்கோள்க‌ள்:

1) ம‌க்க‌ளிட‌ம் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தையும், அத‌ன் முக்கிய‌துவ‌த்தை ப‌ற்றி விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்துவ‌து.

2)அந்த‌ந்த‌ நாடுக‌ளில் உள்ள‌ குழும‌ங்க‌ளில் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை பாதுகாக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌த்தை ஊக்குவிப்ப‌து.

3)ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அழிவுக‌ளை குறைக்க‌க் காணும் வ‌ழிமுறைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்துவ‌து.

4)அர‌சாங்க‌ம் ம‌ற்றும் ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் மூல‌ம் ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அழிவை த‌டுக்கு முய‌ற்ச்சி எடுப்ப‌து.

5)ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு ப‌ட‌ங்க‌ள் ம‌ற்றும் வாச‌க‌ங்க‌ளை இந்த‌ 2010 ஆண்டிற்குள் ம‌க்க‌ள் ம‌த்தியில் கொண்டு சேர்ப்ப‌து.

உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ல்லுன‌ர்க‌ள் த‌ற்போது உள்ள‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் த‌ன்மைக‌ளை அறிவிய‌ல் கொண்டு கூற‌வ‌து ஹோலோசீன் இழ‌ப்பு கால‌ம்(The Holocene extinction) அல்ல‌து ஆறாவ‌து மொத்த‌ இழ‌ப்பு கால‌ம்(Sixth Mass Extinction match) என்ப‌தாகும். ப‌ல‌ தொல்பொருள் ஆர‌ச்சியாள‌ர்க‌ளின் ப‌திவேடுக‌ளின் ப‌டி இந்த‌ ஆறாவ‌து மொத்த‌ இழ‌ப்பான‌து அத‌ன் முந்திய‌ ஐந்து இழ‌ப்புக‌ளை காட்டிலும் அதிக‌ம் என்கிற‌து. இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளில் இருந்து மீள்வ‌த‌ற்கு உயிரிய‌ல் பாதுகாப்பு வ‌ல்லுன‌ர்க‌ள் ப‌ல‌ வ‌ரைமுறைக‌ளை வ‌குத்து செய‌ல்திட்ட‌ங்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்.

நாமும் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தை உண‌ர்ந்து ப‌ல்லுயிர்க‌ளை வாழ‌வைப்போம். அவைக‌ளின் வாழ்க்கை தான் ந‌ம்முடையாக‌ வாழ்க்கையாக‌ அமையும் என்ப‌தையும் க‌ருத்தில் கொள்வோம்.

Biodiversity is life.
Biodiversity is our life.

குறிப்பு: ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றி முழுவ‌தும் எழுத‌ வேண்டுமானால் குற‌ந்த‌து இருப‌து இடுகையாவ‌து எழுத‌ வேண்டும். நான் என்னால் முடிந்த‌ அள‌வு மேலோட்ட‌மாக‌வே எழுதியுள்ளேன். இத‌ன் அவ‌சிய‌த்தின் சிறுதுளியை விதைக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தில் தான் எழுதியுள்ளேன். இத‌ன் நீட்சிக‌ளை முடிந்தால் அவ்வ‌ப்போது தொட‌ர்வேன்.

.

.

.

29 comments:

Chitra said...

Great post!!!!!!!!!!! Super!!!

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள் ஸ்டீபன்.

தமிழ் உதயம் said...

அக்கறையுடன் சொல்லப்பட்ட பதிவு. நன்றாக இருந்தது.

Riyas said...

அருமையான பதிவு ஸ்டீபன்..

இயற்கையும் அதில் வாழும் உயிரினங்களும் பாதுகாக்கப்படவேண்டியவையே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குறிக்கோள்க‌ள் அருமை.

r.v.saravanan said...

இயற்க்கை என்பது பாதுகாக்க பட வேண்டிய ஒன்று அதை உணர்த்தும் இந்த இடுகைக்கு நன்றி ஸ்டீபன்


நாமும் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தை உண‌ர்ந்து ப‌ல்லுயிர்க‌ளை வாழ‌வைப்போம். அவைக‌ளின் வாழ்க்கை தான் ந‌ம்முடையாக‌ வாழ்க்கையாக‌ அமையும் என்ப‌தையும் க‌ருத்தில் கொள்வோம்.

இதை நானும் வழி மொழிகிறேன்

Paleo God said...

அவ்வப்பொழுது இதை சார்ந்து எழுதுங்கள்/பகிருங்கள் ஸ்டீபன்.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல குறிக்கோள்கள். நம்மூர்ல கூட மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள காடுகள் அழியாமல், அதன் பல்லுயிர்ப்பெருக்கம் காக்கப்படுவதற்கு, சந்தன வீரப்பனும் ஓர் மறைமுக காரணமா இருந்தார்ன்னு அறிவியல் அறிஞர்கள் சொன்னதுண்டு...

Ahamed irshad said...

Super post Stephen..

தூயவனின் அடிமை said...

நல்ல பகிர்வு, பூமி வெப்பமயமாதலை தடுக்க முயற்சி செய்வதாக சொல்வது எல்லாம் கண்துடைப்பு,
இவர்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை என்பதை இந்த வருடம் உலகம் முழுவதும்
ஏற்பட்ட வெப்பத்தை உதாரணத்திற்கு காட்டலாம், வெப்ப மாயம் ஆவதை தடுக்க காடுகளை அழிப்பதை
மட்டும் நிறுத்தினால் போதாது, இயற்கையை அச்சுறுத்தும் தொழில் நிலையங்கள் உருப்பதியை தடை செய்ய வேண்டும். நண்பரே இது போன்ற மக்கள் விழிப்புணர்வு இடுக்கை மிக அவசியம் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

நல்ல பகிர்வு..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

very nice post.. informative.. :)

மரா said...

நல்ல விசயம்..பூரா தமிழ்ல எழுவாம அங்கினைக்கங்குன ஆங்கில வார்த்தைகளும் யூஸ் பண்ணுங்கண்ணே..ஆரும் ஒன்னியும் சொல்ல மாட்டாங்க..நன்றி

வால்பையன் said...

நல்ல பகிர்வு தல!

ஹுஸைனம்மா said...

காடுகளை மனிதர்கள் அழிப்பதுதவிர, காட்டுத் தீயும் அழிப்பது பெரும் சோகம்!!

நாடோடி said...

@Chitra said...
Great post!!!!!!!!!!! Super!!!

வாங்க‌ சித்ரா அக்கா.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@சைவகொத்துப்பரோட்டா said...
//நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள் ஸ்டீபன்.//

வாங்க‌ சைவ‌கொத்துப‌ரோட்டா.. வாழ்த்துக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி. என்ன‌ உங்க‌ இடுகை ஒண்ணும் கானோம், ஊருக்கு போயிட்டு வ‌ந்து நிறைய‌ எழுதுவீங்க‌னு பார்த்தா...

@தமிழ் உதயம் said...
//அக்கறையுடன் சொல்லப்பட்ட பதிவு. நன்றாக இருந்தது.//

வாங்க‌ ர‌மேஷ் சார்... க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி. சிஸ்ட‌ம் ரெடி ப‌ண்ணிட்டீங்க‌ளா?..

@Riyas said...
//அருமையான பதிவு ஸ்டீபன்..

இயற்கையும் அதில் வாழும் உயிரினங்களும் பாதுகாக்கப்படவேண்டியவையே..//

வாங்க‌ ரியாஸ்.. உண்மைதான் இய‌ற்கை க‌ண்டிப்பா பாதுகாக்க‌ ப‌ட‌ வேண்டும் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@முத்துலெட்சுமி/muthuletchumi said...
//குறிக்கோள்க‌ள் அருமை.//

வாங்க‌ முத்துலெட்சுமி ச‌கோ.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@r.v.saravanan said...
//இயற்க்கை என்பது பாதுகாக்க பட வேண்டிய ஒன்று அதை உணர்த்தும் இந்த இடுகைக்கு நன்றி ஸ்டீபன்


நாமும் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் அவ‌சிய‌த்தை உண‌ர்ந்து ப‌ல்லுயிர்க‌ளை வாழ‌வைப்போம். அவைக‌ளின் வாழ்க்கை தான் ந‌ம்முடையாக‌ வாழ்க்கையாக‌ அமையும் என்ப‌தையும் க‌ருத்தில் கொள்வோம்.

இதை நானும் வழி மொழிகிறேன்//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. வ‌ருகைக்கும் க‌ருத்தினை வ‌ழிமொழிந்த‌மைக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//அவ்வப்பொழுது இதை சார்ந்து எழுதுங்கள்/பகிருங்கள் ஸ்டீபன்.//

வாங்க‌ ஷ‌ங்க‌ர்ஜி... ப‌டிக்க‌ நீங்க‌ இருக்கும் போது என‌க்கு என்ன‌ க‌வ‌லை?.. :)

க‌ண்டிப்பா எழுதுவேன்.

@அமைதிச்சாரல் said...
//நல்ல குறிக்கோள்கள். நம்மூர்ல கூட மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள காடுகள் அழியாமல், அதன் பல்லுயிர்ப்பெருக்கம் காக்கப்படுவதற்கு, சந்தன வீரப்பனும் ஓர் மறைமுக காரணமா இருந்தார்ன்னு அறிவியல் அறிஞர்கள் சொன்னதுண்டு...//

வாங்க‌ அமைதிச்சார‌ல் ச‌கோ..நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரிதான், வீர‌ப்ப‌னுக்கு ப‌ய‌ந்திட்டாவ‌து காட்டிற்கும் போகாம‌ல் இருந்தார்க‌ள்... இப்ப‌ எல்லாம் த‌லைகீழா மாறியிருக்கும்..

@அஹமது இர்ஷாத் said...
//Super post Stephen..//

வாங்க‌ இர்ஷாத்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@இளம் தூயவன் said...
//நல்ல பகிர்வு, பூமி வெப்பமயமாதலை தடுக்க முயற்சி செய்வதாக சொல்வது எல்லாம் கண்துடைப்பு,
இவர்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை என்பதை இந்த வருடம் உலகம் முழுவதும்
ஏற்பட்ட வெப்பத்தை உதாரணத்திற்கு காட்டலாம், வெப்ப மாயம் ஆவதை தடுக்க காடுகளை அழிப்பதை
மட்டும் நிறுத்தினால் போதாது, இயற்கையை அச்சுறுத்தும் தொழில் நிலையங்கள் உருப்பதியை தடை செய்ய வேண்டும். நண்பரே இது போன்ற மக்கள் விழிப்புணர்வு இடுக்கை மிக அவசியம் வாழ்த்துக்கள்.//

வாங்க‌ இள‌ம்துய‌வ‌ன்.. வ‌ருகைக்கும் விரிவான‌ உங்க‌ள் க‌ருத்துரைக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@ஜெய்லானி said...
//நல்ல பகிர்வு..!!//

வாங்க‌ ஜெய்லானி... க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@Ananthi said...
//very nice post.. informative.. :)//

வாங்க‌ ஆன‌ந்தி ச‌கோ.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@மரா said...
//நல்ல விசயம்..பூரா தமிழ்ல எழுவாம அங்கினைக்கங்குன ஆங்கில வார்த்தைகளும் யூஸ் பண்ணுங்கண்ணே..ஆரும் ஒன்னியும் சொல்ல மாட்டாங்க..நன்றி//

வாங்க‌ மரா அண்ணே.. த‌மிழ்ல‌ தான் எழுத‌ன‌னு க‌ட்டாய‌ம் எல்லாம் இல்ல‌.. :)

சும்மா ட்ரை ப‌ண்ண‌லாமுனு தான்.. :) உங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@வால்பையன் said...
//நல்ல பகிர்வு தல!//

வாங்க‌ வால்பைய‌ன்... க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றிங்க‌.. டிரீட் எப்ப‌?

@ஹுஸைனம்மா said...
//காடுகளை மனிதர்கள் அழிப்பதுதவிர, காட்டுத் தீயும் அழிப்பது பெரும் சோகம்!!//

வாங்க‌ ஹுஸைனம்மா..ஆமாம் அது இய‌ற்கையால் நிக‌ழும் நிக‌ழ்வு, ந‌ம்மால் த‌டுக்க‌ முடியாது.. ஆனால் ந‌ம்மாளால் முடிந்த‌தையாவ‌து சொய்ய‌லாம் அல்ல‌வா?.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

ஜானகிராமன் said...

ஸ்டீபன், மிக அழகான, ஆழமான பதிவு. இது போன்ற பதிவுகள், காலத்தின் சுழற்சியில் காலங்கடந்து நிற்கும். உங்கள் எழுத்தில் இயல்பான மொழிஓட்டமும் இருப்பதால், சுலபமாக மனதில் இறங்குகிறது. இதைச் சார்ந்து தொடர்ந்து இயங்கவும். 4 பதிவு பொழுதுபோக்கிற்காக எழுதினாலும் 1 பதிவு மனிதத்துக்காக எழுதும் பாங்கு எல்லாருக்கும் வளரனும்.

Asiya Omar said...

அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி ஸ்டீபன்.

சமூக அக்கறையுள்ள இடுகை.

என்றைக்கு நாம் இயற்கையிலிருந்து செய்ற்கைக்கு மாற ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே நாம் எதை நோக்கியோ பயப்படுவது உறுதியாகிவிட்டது என நினைக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால் அறிவியல் முன்னேற்த்தின் மூலம் இப்போதிருப்பதை விட நன்றாக இருக்க முடியும் என நினைத்து நினைத்தே நாம் இந்த நிலைக்கு வந்துவிட்டோம்.

கொண்டையை விற்று பூ வாங்கிய கதையாக.

ராஜவம்சம் said...

அவசியமானப்பதிவு.

ராஜவம்சம் said...

அவசியமானப்பதிவு.

கமலேஷ் said...

அருமையான பகிர்வுங்க...

தேவையானதும் கூட...

நிறைய தகவல்கள்...நன்றி.

எம் அப்துல் காதர் said...

தல இந்த மாதிரி எல்லாம் ஆராய்ச்சி செய்ய உங்களுக்கு யார் சொல்லிக் கொடுக்குறா!! அருமையா இருக்கு. லேட்டா வந்து கமெண்ட்ஸ் போடுறேன்னு ஒன்னும் நெனச்சுக்காதீங்க. ஏன்னா நாம எப்பவுமே அப்படித் தான். ஹி.. ஹி..

அடுத்தப் பதிவப் போடுங்க முதலில் வருவேன். ஏன்னா ஆபீசருக்கு லீவு எட்டு நாலு!! ஹா..ஹா..

DREAMER said...

அருமையான பகிர்வு நண்பரே..! இது போன்ற டாக்குமெண்ட்ரி வகையான பதிவுகள் நிறைய வரணும்..! வாழ்த்துக்கள் நண்பரே!

-
DREAMER

Asiya Omar said...

நல்ல அக்கறையான இடுகை.பாராட்டுக்கள்.தம்பி கறுப்பு பின்னணியில் எழுத்துக்கள் தெளிவில்லாமல் வாசிக்க சிரமமாக இருக்கிறது.முன்பு வந்துவிட்டு வாசிக்காமல் திரும்ப சென்று விட்டேன்.ரீடிங் க்ளாஸ் போட்டாலும் சிறிது சிரமம்தான்.

Asiya Omar said...

என்ன பிரச்சனைன்னு தெரியலை டவுன்லோட் ஆவதில் பிரச்சனை போலும்.இப்ப சரியாகி விட்டது.

கமலேஷ் said...

மிகவும் பயனுள்ள பதிவு ஸ்டீபன்.
என் நெருங்கிய நண்பனொருவன் இங்கு வந்து இதே சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு விழித்தான்.

எலக்ட்ரிகல் பணிக்கு வந்தவன் சவுதி ஆர்மி கேம்பில் கழிவறை சுத்தம் செய்யும் பணி தரப்பட்டு அதற்கும் எந்த உதியமும் தரப்படாத நிலையிலும் நான் சென்று பார்க்க முடியாத ஒரு டெசர்ட்பகுதில் மூன்று மாதமாக அகப்பட்டு கொண்டான்.

கிடைத்த தகவல்களை வைத்து சவுதி இந்தியன் எம்பசி அம்பாசிடருக்கு மெயில் செய்தேன். ஒரு முறை போன் செய்து என்ன நடந்தது என்று அவர்கள் விசாரித்ததோடு சரி. பிறகு என் முயற்சிகள் அனைத்தும் குளத்தில் போட்ட கல்தான்.

கடைசியாய் அவன் கபிலின் காலில் விழாத குறையாக பேசினேன். 2000 ரியால் வாங்கி கொண்டு அவன் பாஸ்போர்ட்டை மீண்டும் கொடுத்தார்கள். டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தேன்.

அது போன்ற நண்பர்களுக்கு இந்த இடகை நிச்சயம் மிக உதவியாக இருக்கும்.. நண்பரே..உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தொடருங்கள்... இந்த பதிவினை.

Related Posts with Thumbnails