Wednesday, September 15, 2010

பேச்சில‌ர் வாழ்க்கையும்_வாட‌கை வீடும்

பேச்சில‌ரா இருந்தா சென்னையில் வீடு வாட‌கைக்கு கிடைப்ப‌து க‌ஷ்ட‌ம் என்று சொல்வ‌து உண்டு. ஆனால் சில‌ ஹ‌வுஸ் ஓன‌ர்க‌ள் இவ‌ர்க‌ளுக்கு கொடுப்ப‌தில் ஆர்வ‌மாக‌‌ இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ள் ஆர்வ‌மாக‌ இருப்ப‌த‌ற்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு.

1) முன்பு குடியிருந்த‌வ‌ர்க‌ளின் வாட‌கையை விட‌ அதிக‌மாக‌ சொன்னால், கார‌ண‌ம் ஏதும் கேட்காம‌ல் ச‌ரி என்று த‌லையை ஆட்டுவ‌து. (ந‌ம்ம‌ளை வீடு பார்க்க‌ கூட்டி வ‌ருகிற‌வ‌ன் ஒரு ப‌ய‌ம் காட்டித்தான் கூட்டி வ‌ருவான், உல‌க‌த்துல‌ வேற‌ யாருமே பேச்சில‌ருக்கு வீடு கொடுக்க‌ மாட்டாங்க‌. இவ‌ங்க‌ ம‌ட்டும் தான் கொடுப்பாங்க‌, காசு கொஞ்ச‌ம் ஜாஸ்தியா இருக்குமுனு)

2) வ‌ட‌க்கு வாச‌ல், கிழ‌க்கு வாச‌ல் என்ற‌ முறைவாச‌ல்க‌ளுக்கு நீங்க‌ளே செய்து கொள்ளுங்க‌ள் என்று அவ‌ர்க‌ளிட‌ன் பொறுப்பை ஒப்ப‌டைத்து ப‌ண‌ம் கொடுத்து விடுவ‌து. (இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை க‌ட்டிக்கொண்டு கோல‌மா போட‌ முடியும்)

3) த‌ண்ணீர், கார்ப்ப‌ரேச‌ன், மின்சார‌ம் என்று எல்லாவ‌ற்றிற்கும் சேர்த்து ஒரு மொத்த‌ தொகையை மாத‌ம் மாத‌ம் கேட்டால் வாயை மூடிக்கொண்டு கொடுத்துவிடுவ‌து.(காலையிலே தூக்க‌ம் எழுவ‌தே லேட்டாக‌ தான் இருக்கும். அந்த‌ நேர‌ம் த‌ண்ணி வ‌ர‌வில்லை, பாத்ரூம் ச‌ரியில்லை என்று நிற்க‌முடியுமா? இது அவ‌ங்க‌ளுக்கும் தெரியும்.)

4) காலையில் குடும்ப‌த்துட‌ன் குடியிருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் எழுந்து ஆபிஸ் கிள‌ம்பிய‌ பிற‌குதான் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ப‌டுக்கையில் இருந்து எழுந்து த‌லையில் த‌ண்ணீர் தெளித்துவிட்டு ஆபிஸுக்கு ஓடுவ‌து. லீவு நாளாக‌ இருந்தால் சொல்ல‌வே வேண்டாம் இர‌வு முழுவ‌தும் டீவி/க‌ம்பியூட்ட‌ர் முன் க‌ண்விளித்துவிட்டு ப‌க‌லில் ந‌ல்லா குற‌ட்டை விட்டு தூங்குவ‌து.

5) சுவ‌ரில் ஆணி அடித்துவிடுவார்க‌ள் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை. கார‌ண‌ம் அறையில் சாமி ப‌ட‌ங்க‌ளோ அல்ல‌து அம்மா, அப்பா ப‌ட‌ங்க‌ளோ தொங்க‌விடுவ‌து இல்லை. அப்ப‌டியே ப‌ட‌ங்க‌ள் இருந்தாலும் அது ந‌டிக‌ர் அல்ல‌து ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளாக‌த் தான் இருக்கும். அவை அனைத்தும் செல்லோடேப் கொண்டுதான் ஒட்டுவோம். அத‌னால் எளிதில் அவ‌ற்றை அப்புற‌ப்ப‌டுத்த‌ முடியும்.

6) த‌ண்ணீர் செல‌வாகிடும் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை, காலையில் வீட்டை விட்டு கிள‌ம்பி போனால் இர‌வுதான் வீட்டிற்கு வ‌ருவ‌து. துணிக‌ள் துவைப்பார்க‌ளா? என்று எல்லோருக்கும் ட‌வுட் இருக்கும். இத‌ற்கென்றே நான்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி வைத்திருப்போம். மூன்று மாத‌திற்கு ஒரு த‌ட‌வை ஊருக்கு போகும் போது துவைத்தால் போதும் என்று.

7) வேலையை முடித்துவிட்டு இர‌வில் வீட்டிற்கு வ‌ந்து, போர் அடிக்குதே என்று மாடிப்ப‌க்க‌ம் போய் நின்று ஒரு த‌ம்மை போட‌லாம் என்று ப‌த்த‌வைக்கும் போதுதான் ஹ‌வுஸ் ஓன‌ர் மேலே வ‌ருவார். என்ன‌ த‌ம்பி இங்க‌ தான் இருக்கீங்க‌ளா? என்று மொக்கைப்போட‌ தொட‌ங்கிவிடுவார். அப்ப‌டியே நாம‌ளும் ந‌ம்ம‌ க‌தையை கேக்க‌ ஒருத்த‌ர் சிக்கிட்டாரு நினைச்சி மொக்கை போட‌ ஆர‌ம்பிச்சிடுவோம். அவ‌ரு ந‌ம்ம‌கிட்ட‌ க‌தை கேக்குறேன் என்கிற‌ பேர்ல‌ ஊர்ல‌ என்ன‌ ப‌யிர் விளையுது, அங்க‌ என்ன‌ ஸ்வீட் பேம‌ஸு, உங்க‌ வீட்ல‌ என்ன‌ ப‌ழ‌ம் எல்லாம் இருக்குனு வாயில‌ இருந்து புடிங்கிடுவாரு. நாம‌ளும் க‌தைதானே என்று ப‌க்க‌த்து வீட்ல‌ விளையுற‌து எல்லாம் எங்க‌ வீட்டுல‌ விளையுதுனு ஜ‌ம்ப‌ம் அடிச்சி வைப்போம். இப்ப‌டி சொல்லுற‌தால‌ அப்ப‌ ஒண்ணும் பிர‌ச்ச‌னை இருக்காது, ஆனா தீபாவ‌ளி, பொங்க‌லுனு ஊருக்கு போகும் போது வீட்டை பூட்டி சாவியை ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் கொடுக்கும் போதுதான் பிர‌ச்ச‌னையே. த‌ம்பி இங்க‌ இந்த‌ ப‌ழ‌ம் எல்லாம் யானை விலை, குதிரை விலை விக்குது ஊர்ல‌ இருந்து வ‌ரும் போது அப்ப‌டியே கொஞ்ச‌ம் எடுத்து வாங்க‌ளேன்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்

8) நாம் ரூம்ல‌ ப‌க‌ல்ல‌ இருப்ப‌தே அபூர்வ‌மா தான் இருக்கும். ஏதாவ‌து முக்கிய‌ ஆபிஸ் வேலையை முடிக்க‌லாம் என்று இருந்தால் அப்ப‌ தான் ஹ‌வுஸ் ஓன‌ர் அக்கா டீவி சீரிய‌ல் பார்க்க‌ விடாம‌ல் அட‌ம்பிடிக்கிற‌ ம‌க‌னை பார்த்து, மேல‌ மாடில‌ இருக்கிற‌ அங்கிளுக்கு ஆபிஸ் இன்னைக்கு லீவாம் நீ போய் அவ‌ரோட‌ விளையாடு என்று அனுப்பி வைப்பாங்க‌. அவ‌ங்க‌ ஜாலியா சீரிய‌ல் பார்க்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌, ஆனா பைய‌ன் ந‌ம்ம‌ளை ட‌ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடுவான்.

9) ச‌மைய‌ல் அறை ஒன்றை ம‌ற‌ந்தே இருப்பார்க‌ள். அங்கு தான் துணிக‌ள் உல‌ர்த்த‌ப்ப‌டும். அத‌னால் வீட்டில் புகை ம‌ற்றும் சுவ‌ர் அழுக்காகிவிடும் என்ற‌ பிர‌ச்ச‌னை ஹ‌வுஸ் ஓன‌ருக்கு இருக்காது. அப்ப‌டியே ச‌மைய‌ல் என்று ஆர‌ம்பித்தாலும் நாலு நாள் கூத்தாக‌ தான் இருக்கும். ஐந்தாவ‌து நாள் ஹோட்ட‌லை தான் தேடுவார்க‌ள். இந்த‌ நாலு நாளு கூத்துக்கு வாங்கிய‌ பாத்திர‌ங்க‌ள் எல்லாம் வீடு காலி ப‌ண்ணும் போது ஹ‌வுஸ் ஓன‌ருக்கு தான் சொந்த‌ம்.

10) வீட்ல‌ அது ச‌ரியில்லை, இது ச‌ரியில்லை என்ற‌ புல‌ம்ப‌ல் இல்லாம‌ல் ச‌ரியா சொன்ன‌ தேதில‌ வீட்டு வாட‌கையை கொண்டு போய் ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் சேர்த்துவிடுவ‌து.

குறிப்பு:

மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)

ஆனா இதுக்கு நேர் எதிராய் ஒரு குரூப் இருக்கும் அந்த‌ குரூப்பிட‌ம் ம‌ட்டும் வீடு வாட‌கைக்கு விட்டால் அந்த‌ ஹ‌வுஸ் ஓன‌ர் வீட்டை வித்துவிட்டே ஓடிவிடுவார். அவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னை கொடுப்பார்க‌ள். அதைப் ப‌ற்றி அடுத்த‌ப் ப‌திவில் எழுதுகிறேன்.

.


.

.

36 comments:

Muruganandan M.K. said...

ஹா ஹா. ஆனால் உண்மை

நாடோடி said...

@Dr.எம்.கே.முருகானந்தன் said...
//ஹா ஹா. ஆனால் உண்மை//

வாங்க‌ டாக்ட‌ர் சார்.. ரெம்ப‌ நாளா ஆள‌க் கானோம்.. :)

க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல அலசல்..

வீட்டை க்ளீன் செய்யறதுன்னு ஒண்ணை பேச்சிலர்ஸ் மறந்தே போயிருவாங்களே.. அதைப்பத்தியும் சொல்லியிருக்கலாம். அது அடுத்த பாகத்துல வருதா என்ன :-)))

எல் கே said...

mmmm./ ippadium irukkanga.. innum vaadagaia tharama ilukaravangalum irukkanga

நாடோடி said...

@அமைதிச்சாரல் said...
//நல்ல அலசல்..

வீட்டை க்ளீன் செய்யறதுன்னு ஒண்ணை பேச்சிலர்ஸ் மறந்தே போயிருவாங்களே.. அதைப்பத்தியும் சொல்லியிருக்கலாம். அது அடுத்த பாகத்துல வருதா என்ன :-)))//

வாங்க‌ ச‌கோ..

அது அடுத்த‌ பாக‌த்தில் தான் சொல்ல‌னும். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@LK said...
//mmmm./ ippadium irukkanga.. innum vaadagaia tharama ilukaravangalum irukkanga//

வாங்க‌ எல்.கே

அந்த‌ குரூப்பை ப‌ற்றி அடுத்த‌ இடுகையில் எழுதிர‌லாம்.. :) க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

Ahamed irshad said...

ரைட்டு ஸ்டீபன்.. அடுத்த பதிவுக்கு ஆவலாய் காத்திருப்பு பட்டியலில் நான்..

Asiya Omar said...

அனுபவம் அருமையாக எழுதியிருக்கீங்க.

மாதேவி said...

நல்ல ரசனை.

Unknown said...

நல்லா இருக்கு

Jaleela Kamal said...

பேச்சிலர்கள் படும் பாடு பாவமாதான் இருக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சினிமாத் துறையில் இருக்கும் நண்பர் ஒருவர் சொல்வார், "என்றாவது ஒரு நாள் சமைக்கிறேன் பேர்வழினு பாத்திரம் எல்லாம் அழுக்காக்கி அதைக் கழுவ ஆள் கிடைக்காமல் வீடெல்லாம் நாறி அப்படியே சாக்கில் போட்டு கட்டி ஆளில்லாத ஒதுக்குப்புறமாய் வீசி .... அதுக்காகவாவது கேள்வி கேட்காத பொண்ணா பார்த்து சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணணும்"

senthil velayuthan said...

innum onnu undu, pasangaluku freeya tution kuda vachiduranga , sila house owners, free cds

தமிழ் உதயம் said...

ஆனா இதுக்கு நேர் எதிராய் ஒரு குரூப் இருக்கும் அந்த‌ குரூப்பிட‌ம் ம‌ட்டும் வீடு வாட‌கைக்கு விட்டால் அந்த‌ ஹ‌வுஸ் ஓன‌ர் வீட்டை வித்துவிட்டே ஓடிவிடுவார்.///


இல்ல கோர்ட் கேஸ்ன்னு அலையலாம்.

வினவு said...

அருள், நீங்க நல்ல செட்டு பேச்சுலருன்னு சொன்னீங்க, அதுல சமையல் அனுபவம் பத்தி மறந்திட்டிங்களா?

Chitra said...

மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)


.....நீங்க ரொம்ப நல்லவங்க.

Prathap Kumar S. said...

நம்ம கதையை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே ஸ்டீபன்.90 பர்சன்ட் நம்ம கதைதான் இது....
வீட்டுஓனருக்கு பாட்டில் வாங்கிகொடுத்தே நிறைய காசு போயிருக்கு..:)

எனக்கு உடம்பு சரியில்லாத போதுதன் மகனை போல கவனிச்சாங்க...அதையும் மறக்க முடியாது....

Prathap Kumar S. said...

நம்ம கதையை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே ஸ்டீபன்.90 பர்சன்ட் நம்ம கதைதான் இது....
வீட்டுஓனருக்கு பாட்டில் வாங்கிகொடுத்தே நிறைய காசு போயிருக்கு..:)

எனக்கு உடம்பு சரியில்லாத போதுதன் மகனை போல கவனிச்சாங்க...அதையும் மறக்க முடியாது....

r.v.saravanan said...

மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)

நம்புகிறோம் steban

அருமையாக எழுதியிருக்கீங்க

Gayathri said...

அருமை..நல்லா தமாஷா எழுதுறீங்க

vanathy said...

அடடா! நல்லா பாயின் பாயின்டா அள்ளி வீசியிருக்கீங்க. இதைப் பார்த்துட்டு எல்லோரும் பிரம்மச்சாரிகளுக்கே வீடு குடுக்கப் போறாங்க. நல்ல பதிவு, ஸ்டீபன்.

Unknown said...

நீங்கள் எழுதியதைப் படித்ததும் பெங்களூரில் வாசம் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

நன்றி.

//இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை க‌ட்டிக்கொண்டு கோல‌மா போட‌ முடியும்//

இந்த வரிகளை நான் எழுதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். :)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. அம்புட்டு நல்லவுகளா நீங்க.. (சும்மா தாங்க சொன்னேன்...)
ரசிக்கும் படியா.. அழகா இருக்குங்க.. பதிவு..
அங்கங்கே...கர்ர்ர்ரர்ர்ர்ர்...டர்ரர்ர்ர்ர் எல்லாம் சூப்பர் போங்க.. :-))))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு ஸ்டீபன்..

வாடகைக்கு வீடு கிடைக்குமா.. :))

ஹுஸைனம்மா said...

பேச்சிலருக்கு வாடகைக்கு வீடு கொடுக்கிறதுல இவ்வளவு நனமை இருக்கா? நல்ல கதையா இருக்கே!!

இதுக்கு யாரும் இன்னும் எதிர்ப்பதிவு போடலையா?? :-))))

Anisha Yunus said...

//மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும்.//

மெய்யாலுமேவாண்ணா?

சிநேகிதன் அக்பர் said...

சொன்ன காரணங்கள் அனைத்தும் அனுபவித்து எழுதியது போல.. :)

அடுத்த பதிவில் நாஞ்சிலும் இருப்பார் போல... :)

நாடோடி said...

@அஹமது இர்ஷாத் said...
//ரைட்டு ஸ்டீபன்.. அடுத்த பதிவுக்கு ஆவலாய் காத்திருப்பு பட்டியலில் நான்..//

வாங்க‌ இர்ஷாத்.. க‌ண்டிப்பா சீக்கிர‌ம் போடுகிறேன். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@asiya omar said...
//அனுபவம் அருமையாக எழுதியிருக்கீங்க.//

வாங்க‌ ச‌கோ. பாராட்டுக்கு ரெம்ப‌ ந‌ன்றி

@மாதேவி said...
//நல்ல ரசனை.//

வாங்க‌ மாதேவி ச‌கோ. பாராட்டுக்கு ரெம்ப‌ ந‌ன்றி

@சிநேகிதி said...
//நல்லா இருக்கு//

வாங்க‌ சிநேகிதி ச‌கோ. ர‌சிப்புக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@Jaleela Kamal said...
//பேச்சிலர்கள் படும் பாடு பாவமாதான் இருக்கு//

வாங்க‌ ஜ‌லீலா ச‌கோ. ஆமாங்க‌.. ஆனால் அதிலும் ஒரு ச‌ந்தோச‌ம் தான். வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@நாய்க்குட்டி மனசு said...
//சினிமாத் துறையில் இருக்கும் நண்பர் ஒருவர் சொல்வார், "என்றாவது ஒரு நாள் சமைக்கிறேன் பேர்வழினு பாத்திரம் எல்லாம் அழுக்காக்கி அதைக் கழுவ ஆள் கிடைக்காமல் வீடெல்லாம் நாறி அப்படியே சாக்கில் போட்டு கட்டி ஆளில்லாத ஒதுக்குப்புறமாய் வீசி .... அதுக்காகவாவது கேள்வி கேட்காத பொண்ணா பார்த்து சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணணும்"//

வாங்க‌ நாய்க்குட்டி மனசு. உங்க‌ ந‌ண்ப‌ர் த‌ப்பான‌ முடிவு எடுத்திருக்கிறார்.. அத‌னால் வேலை கூடுமே த‌விர‌ குறையாது. ஹா..ஹா.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@senthil velayuthan said...
//innum onnu undu, pasangaluku freeya tution kuda vachiduranga , sila house owners, free cds//

வாங்க‌ செந்தில். நீங்க‌ள் சொல்வ‌தும் சில‌ வீடுக‌ளில் பார்க்க‌ முடியும்.. :) வ‌ருகைக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@தமிழ் உதயம் said...
ஆனா இதுக்கு நேர் எதிராய் ஒரு குரூப் இருக்கும் அந்த‌ குரூப்பிட‌ம் ம‌ட்டும் வீடு வாட‌கைக்கு விட்டால் அந்த‌ ஹ‌வுஸ் ஓன‌ர் வீட்டை வித்துவிட்டே ஓடிவிடுவார்.///


இல்ல கோர்ட் கேஸ்ன்னு அலையலாம்.//

வாங்க‌ த‌மிழ் சார்.. நீங்க‌ள் சொல்வ‌தும் ந‌ட‌க்கும். க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@வினவு said...
//அருள், நீங்க நல்ல செட்டு பேச்சுலருன்னு சொன்னீங்க, அதுல சமையல் அனுபவம் பத்தி மறந்திட்டிங்களா?//

வாங்க‌ வின‌வு. என்னுடைய‌ ப‌ழைய‌ ப‌திவு ப‌டிக்க‌லைனு நினைக்கிறேன். அதையும் பெரிய‌ காமெடியா எழுதியாச்சி. வ‌ருகைக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@Chitra said...
மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)


.....நீங்க ரொம்ப நல்லவங்க.//

வாங்க‌ சித்ரா ச‌கோ. எல்லோரும் அப்ப‌டித்தான் சொல்லுறாங்க‌.. ஹி.ஹி.

@நாஞ்சில் பிரதாப் said...
நம்ம கதையை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே ஸ்டீபன்.90 பர்சன்ட் நம்ம கதைதான் இது....
வீட்டுஓனருக்கு பாட்டில் வாங்கிகொடுத்தே நிறைய காசு போயிருக்கு..:)

எனக்கு உடம்பு சரியில்லாத போதுதன் மகனை போல கவனிச்சாங்க...அதையும் மறக்க முடியாது....//

வாங்க‌ பிர‌தாப். அனுப‌வ‌ம்தானே எழுத்தில் வ‌ரும் த‌ல‌. உட‌ம்பு ச‌ரியில்லையென்றால் ந‌ன்றாக‌ க‌வ‌னிப்பார்க‌ள், நானும் அனுப‌வித்திருக்கிறேன்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@r.v.saravanan said...
மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)

நம்புகிறோம் steban

அருமையாக எழுதியிருக்கீங்க//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன். க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@Gayathri said...
//அருமை..நல்லா தமாஷா எழுதுறீங்க//

வாங்க‌ காய‌த்ரி. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@vanathy said...
//அடடா! நல்லா பாயின் பாயின்டா அள்ளி வீசியிருக்கீங்க. இதைப் பார்த்துட்டு எல்லோரும் பிரம்மச்சாரிகளுக்கே வீடு குடுக்கப் போறாங்க. நல்ல பதிவு, ஸ்டீபன்.//

வாங்க‌ வான‌தி ச‌கோ. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@முகிலன் said...
நீங்கள் எழுதியதைப் படித்ததும் பெங்களூரில் வாசம் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

நன்றி.

//இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை க‌ட்டிக்கொண்டு கோல‌மா போட‌ முடியும்//

இந்த வரிகளை நான் எழுதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். :)))//

வாங்க‌ முகில‌ன். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@Ananthi said...
ஹா ஹா ஹா.. அம்புட்டு நல்லவுகளா நீங்க.. (சும்மா தாங்க சொன்னேன்...)
ரசிக்கும் படியா.. அழகா இருக்குங்க.. பதிவு..
அங்கங்கே...கர்ர்ர்ரர்ர்ர்ர்...டர்ரர்ர்ர்ர் எல்லாம் சூப்பர் போங்க.. :-))))//

வாங்க‌ ஆன‌ந்தி ச‌கோ. வ‌ந்து ர‌சித்த‌மைக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பகிர்வு ஸ்டீபன்..

வாடகைக்கு வீடு கிடைக்குமா.. :))//

வாங்க‌ ஸ்டார்ஜ‌ன்.. உங்க‌ளுக்கு இல்லாத‌ வீடா?. பார்த்திட்டா போச்சு. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@ஹுஸைனம்மா said...
//பேச்சிலருக்கு வாடகைக்கு வீடு கொடுக்கிறதுல இவ்வளவு நனமை இருக்கா? நல்ல கதையா இருக்கே!!

இதுக்கு யாரும் இன்னும் எதிர்ப்பதிவு போடலையா?? :-))))//

வாங்க‌ ஹுஸைனம்மா. நீங்க‌ யார‌லோ பாதிக்க‌ ப‌ட்டிருக்கீங்க‌ என்று நினைக்கிறேன். இதுக்கு எதிர்ப‌திவு நானே எழுதுகிறேன். க‌வ‌லைப‌டாதீங்க‌. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@அன்னு said...
//மேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும்.//

மெய்யாலுமேவாண்ணா?//

வாங்க‌ அன்னு.. உண்மைதான் ச‌கோ.. :)

@சிநேகிதன் அக்பர் said...
//சொன்ன காரணங்கள் அனைத்தும் அனுபவித்து எழுதியது போல.. :)

அடுத்த பதிவில் நாஞ்சிலும் இருப்பார் போல... :)//

வாங்க‌ அக்ப‌ர். பாவ‌ம் ந‌ம்ம‌ நாஞ்சிலை ஏன் இழுக்குறீங்க‌?.. :)

Unknown said...

இப்போது சென்னையில் பேச்சிலர்கள் என்றால்தான் உடனே வீடு கிடைக்கிறது ...

thiyaa said...

நல்லா இருக்கு

எம் அப்துல் காதர் said...

//ஊர்ல‌ என்ன‌ ப‌யிர் விளையுது, அங்க‌ என்ன‌ ஸ்வீட் பேம‌ஸு, உங்க‌ வீட்ல‌ என்ன‌ ப‌ழ‌ம் எல்லாம் இருக்குனு வாயில‌ இருந்து புடிங்கிடுவாரு. நாம‌ளும் க‌தைதானே என்று ப‌க்க‌த்து வீட்ல‌ விளையுற‌து எல்லாம் எங்க‌ வீட்டுல‌ விளையுதுனு ஜ‌ம்ப‌ம் அடிச்சி வைப்போம். ஆனா தீபாவ‌ளி, பொங்க‌லுனு ஊருக்கு போகும் போது//

உண்மையிலேயே அருமை..!! எல்லா வீட்டு ஓனர்களும் இப்படி தானிருப்பாங்களா?? ஒங்கள மாதிரி நல்லவங்களே இருக்க மாட்டேங்கிறாங்களே அது ஏன் பாஸ்?? ஹா.. ஹா..

Download Gprs said...

அனுபவம் பேசுகிறதா நண்பரே..!

தமிழ் செம்மொழி மாநாட்டின் மையநோக்கு பாடல் மற்றும் பாடல் வரிகளை அழகு தமிழில் பார்க்க கீழுள்ள link ஐ சொடுக்கவும்...

http://www.youtube.com/watch?v=3lgDJdIgiTQ

ஸாதிகா said...

அட..ஹவுஸ் ஓனர்களுக்கு அருமையான டிப்ஸை கொடுத்து இருக்கின்றீர்கள்.காமெடியாக எழுதினாலும் உண்மையும்தான் உள்ளது.அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள்!

thiyaa said...

அருமை என்று ஒற்றை வரியில் சொல்வது முறையல்ல
அருமையோ அருமை

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_23.html

ஜானகிராமன் said...

நல்லா இருக்கு ஸ்டீபன். ரொம்ப அனுபவிச்சு எழுதியிருப்பீங்க போல. இந்த மாதிரி, பேச்சுலர்ஸ் எல்லாம் சேர்ந்து, கும்பலா, நம்ம தமிழினத் தலைவருக்கு பாராட்டு விழா எடுத்துட்டா அவரு சென்னையில வேலை பாக்குறவங்களுக்கு திண்டிவனம், விக்கிரவாண்டி பக்கம் இலவச வீடு கட்டிக்கொடுத்தா பிரச்சனைக்கு விடிவு கிடைச்சுடும்ல... சீக்கரம் ஊருக்கு வாங்க. பிளான் போடுவோம்.

Related Posts with Thumbnails