காலையில் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகம் வரும் வழியில் நம்மிடம் அறிமுகம் இல்லாத ஒருவர் மலர்ந்த புன்னகையுடம் உங்களுக்கு காலை வணக்கம் சொன்னால் எப்படி இருக்கும்?. நம்மையும் அறியாமல் ஒரு இனம்காணத புத்துணர்ச்சி பெருக்கெடுப்பதை உணர முடியும்.
நான் அரேபியா வந்த புதிதில் இங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களில் என்னை ஆச்சரிய படுத்திய ஒன்று நான் மேலே சொன்ன விசயம் தான். நம்மை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் "சலாம் மாலிக்கும்" என்று புன்னகைக்க தவறுவது இல்லை.
அறிமுகம் இல்லாத எந்த நபராக/எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்கள் சலாம் மாலிக்கும் என்று கைக்குலுக்கி மகிழ்கின்றனர். அதேப் போல் கடைகள் நடத்துபவராக இருந்தாலும், கார் வாடகைக்கு ஓட்டுபவராக இருந்தாலும் அவர்களும் இந்த பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
தொலைப்பேசியில் பேசும் போதும் முதலில் சலாம் மாலிக்கும் என்று சொல்லி தான் பேச ஆராம்பிக்கிறார்கள். பதிலுக்கு நம்மிடம் இருந்து வணக்கத்தை எதிர்பார்ப்பது கிடையாது. அதன் பின் அவருடைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பெரியவர்கள் மட்டும் அல்லாது அரபி குழந்தைகளிடமும் இந்த பழக்கம் இருக்கின்றது. சில நேரங்களில் எங்களை அலுவலகத்திற்கு அழைத்து செல்லும் வாகனம் வருவதற்கு தாமதம் ஆனால் நாங்கள் வீட்டில் இருந்து இறங்கி சாலையில் நிற்ப்போம். அப்போது பள்ளிக்கு செல்லும் அரபி சிறுவர்கள் "சலாம் மாலிக்கும்" என்று சொல்வது வியப்பாக இருக்கும்.
இதுவே இரண்டு அரபிகள் சந்திந்திதால் அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது இன்னும் வித்தியாசமாக இருக்கு. சலாம் மாலிக்கும் என்று சொல்லி புன்னகைத்து கட்டி அணைத்து நண்பரின் கன்னத்துடன் தன்னுடைய கன்னத்தை பதிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
அரேபியா வந்த புதில் இவர்கள் சலாம் மாலிக்கும் என்று என்னிடம் சொல்லும் போது நான் அவர்களை ஏதோ விசித்திரமாக பார்த்து விட்டு சென்றது உண்டு. காரணம் நாம் வளர்ந்த சூழ்நிலைகள் அப்படிதான் நம்மை கட்டியமைத்திருக்கிறது. ஒருவரிடம் பேசுவதற்கு சிரிப்பதற்கும் காரணம் தேடுகிறோம். எல்லோரையும் நம்மைப்போல எண்ண மறுக்கின்றோம்.
இயந்திரத்தனமாக சுழன்று கொண்டிருக்கும் நம்முடைய சூழலில் புன்னகை என்ற ஒன்றை மறந்து போனோம் என்றுதான் சொல்லவேண்டும். நம்மை தினமும் சந்திக்கின்ற மக்களிடமாவது புன்னகைத்து வணக்கம் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோமா? இது கேள்வியாக தான் நிற்கின்றதே தவிர என்னிடம் பதில் இல்லை.
யாரப்பா அது!!!!!!!! பின்னூட்டத்தில் வந்து ஸ்மைலி போட்டுவிட்டு போவது?.. ஹி..ஹி..
குறிப்பு: கடந்த பதிவில் நான் எழுதிய பிரச்சனைக்கு கருத்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள். தனிமடலில் தொடர்பு கொண்டு எனக்கு ஆறுதல்/அறிவுரை சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் மிக்க வந்தனம். இன்னும் பத்து நாட்களே அரேபியாவில் இருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால் தான் இங்குள்ள அனுபவத்தை பற்றி எழுதியுள்ளேன். இன்னும் ஒரு பதிவு எழுத முடியுமா? என்று பார்க்கிறேன்.
.
.
Monday, October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
நல்ல பழக்கம்.
ஃபிஜித்தீவுகளிலும் வட இந்தியர்கள் தெரியாதவர்களை எதிரில் சந்திக்கும்போதும் 'ராம் ராம்' என்று சொல்கிறார்கள். தென்னிந்தியர்கள் 'நமஸ்காரம்' என்று சொல்வார்கள்.
நியூஸியில் எங்க ஊரில் தெரிஞ்ச தெரியாத எல்லோருக்கும் 'hi'உண்டு.
சலாம் மாலிக்கும்.....
சலாம் மாலிக்கம் என்ற சொல்லுக்கு மறு வணக்கம் அழுத்தம் திருத்தமாக சொல்பவர்கள் எகிப்தியர்களே என நினைக்கிறேன்.
சில சமயம் சில அரேபியர்களுக்கு சலாம் மாலிக்கும் என்று சொன்னால் வெறும் சலாம் என்று ஒப்புக்கு சப்பாணி சொல்வதால் நான் முதலில் சலாம் சொல்வதில்லை.யாராவது சொன்னால் புன்முறுவலுடன் முழு வார்த்தை சொல்லத் தவறுவதுமில்லை.
பாதத்திற்கு மேல் சராசரி அரேபியர்களிலிருந்து வித்தியாசப்படும் நீண்ட அங்கி அணியும் தாடி வைத்த அரேபியர்கள் very polite.அதே தாடி வைத்த பின்லாடன் குழுவினர் very extreme.
வணக்கம் ஸ்டீபன் :))
அது ''சலாம் மாலிக்கும்''' அல்ல சலாம் வலேக்கும் ரஹமதுல்லாஹி ஹுபரகாட்டு
அதற்க்கு பதில் வலேக்கும் சலாம் ரஹாமதுல்லாஹி ஹுபரகாட்டு
லியோ சுரேஷ்
நலம். நலமறிய ஆவல்.
மிகவும் அருமை.
//அரேபியா வந்த புதில் இவர்கள் சலாம் மாலிக்கும் என்று என்னிடம் சொல்லும் போது நான் அவர்களை ஏதோ விசித்திரமாக பார்த்து விட்டு சென்றது உண்டு//
சேம் பிளட்... நான் இங்க வந்த புதுசுல என்கிட்ட யாரோ சலாம் அலைக்கும் சொன்னபோது நான் பின்னாடி திரும்பி பார்த்தேன்...அப்புறம்தான் புரிஞ்சுது அவர் என்கிட்டத்தான் சொன்னாருன்னு..:)
இப்ப என்கிட்ட யாராவது சலாம் அலைக்கும் சொன்னா திரும்ப அலைக்கும் சலாம் கண்டிப்பா சொல்லுவேன்....:)
கடவுள் துணையிருப்பார் என்பதுதான் இதன் அர்த்தம் என நினைக்கிறேன்... கடவுளின்பெயர் சொல்ல எந்த மொழியால் இருந்தால் என்ன,,,,
ஒருவரிடம் பேசுவதற்கு சிரிப்பதற்கும் காரணம் தேடுகிறோம்.
...... Good Morning, Stephen! How are you? (with a smile) Hope you are having a great day... :-)
:-))
வடக்கேயும் நமஸ்தே சொல்றது, மற்றும் கொஞ்சம் வயசானவர்கள் சந்திச்சா 'ராம் ராம்'ன்னு சொல்றது வழக்கத்தில் உண்டு. சிலர் தன்னைவிட வயசானவர்களை சந்திச்சா மரியாதை நிமித்தம் அவர்கள் காலைத்தொட்டு வணங்குவதும் உண்டு.
வெற்றி கொடி கட்டு வில்
வடிவேலு பார்த்திபனிடம் சொல்லும் சலாம் அழைக்கும், தம்பி நீங்க துபாய்ல இருந்ததா இந்த பசங்க எல்லாம் பெசிக்ராங்க்லே
துபாயா, அபிதாபியா, ஷார்ஜாவா, பஹிரினா
ஞாபகம் வந்து விட்டது
// "சலாம் மாலிக்கும்" //
தல மேலே சொன்னதை முழுமையாய், "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்லுங்கள்
"வ அலைக்கும் சலாம்" என்று பதில் சொல்லி உங்களை அள்ளிக் கொள்வார்கள். டென்சன் மிக்க வேலையைக் கூட ஒரு ஆபீசில் நுழைந்தால் மேற்படி சலாத்தை சொல்லி, வெகு இலகுவாக முடித்து விடலாம். இதில் எந்த மதம், எந்த நாடு என்ற பாகுபாடு கிடையாது.
என்ன பத்து நாள் தான் பாக்கி இருக்கா?? வாங்க வருமுன் அலையில் பேசுங்க!!
// யாரப்பா அது!!!!!!!! பின்னூட்டத்தில் வந்து ஸ்மைலி போட்டுவிட்டு போவது?.. ஹி..ஹி..//
அவுக 'நாப்பது' நாள் பேசா விரதமாம்.. ஹி..ஹி (அவார்ட் குடுக்குறதுக்கு preparation நடக்குது போல!!)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
தமிழாக்கம்; உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்தச்சொல்லை எங்கு வேண்டாலும் சொல்லலாம் கல்யாணவீட்டில்,சந்தோஷமானதருணம்,விபத்து நடந்தஇடம்.மரணம் நிகழ்ந்த வீடு என்று எங்கும்.
கூறக்கூடாத ஒரே இடம் toilet மட்டுமே.
இதே போல்தான் அமெரிக்கா வந்த புதிதிலும் எனக்கு இருந்தது. யாராக இருந்தாலும் ஒரு 'ஹாய்' சில சமயம் 'ஹவ் ஆர் யூ' வரையும் பொறுமையுடன் விசாரிப்பு. இதெல்லாம் நம் நாட்டில் செய்தால் வடிவேலுவை பார்ப்பது போல்தான் பார்ப்பார்கள். என்ன செய்ய? :)
அதன் சரியான் உச்சரிப்பு, "அஸ் ஸலாமு அலைக்கும்", இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது இறங்கட்டும் என்று அர்த்தம். பதிலாக, 'வ அலைக்கும் அஸ்ஸலாம்' என்றால் உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று அர்த்தம். இறைவனின் சாந்தியும் சமாதானமும் எந்த கால கட்டத்திலும் மனிதனுக்கு தேவையானதே..!!
துளசி அண்ணே, இந்த பிஜிக்காரங்க மலையாளி மாதிரி, அவங்களோட நாட்டுக்காரங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்,இந்தியர்களை இவர்கள் மதிப்பதில்லை. ராம் ராம் என்று சொல்வது அப்புறம் இருக்கட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
(தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக).
வ அலைக்கும் ஸலாம்.
(தங்கள் மீதும் சாந்தி நிலவட்டுமாக).
ஸ்டீபன், நல்ல பதிவு. எங்கள் மக்களுக்கு பணம் குடுத்தால் கூட சிரிப்பார்களா என்பது கேள்விக்குறி. நான் கடையில் எங்கள் நாட்டவர்களை கண்டால் புன்னகைப்பேன். ஆனால், அவர்கள் ஏதோ ஒரு விசித்திர ஐந்துவை பார்ப்பது போல பார்ப்பார்கள். என்ன சொல்ல? நாம் வளர்ந்த விதம் அப்படியோ???
மிக நல்ல பழக்கம்..
நாம் எந்த மூடில் இருந்தாலும் நம்மை மாற்றிடும் ..
இதே கதைதான் எங்கள் புன்னகை தேசத்திலும்..
யாரை பார்த்தாலும் புன்னகை.. கோபம் னா என்னன்னே தெரியாத மக்கள்..
டிராஃபிக் போலீஸ் நம்மை பிடிச்சாலும் , உற்சாகமாய் ஒரு சிரிப்பை உதிர்த்து வணக்கம் சொல்லிவிட்டே, பைன் கேட்பார்..
அம்மக்கள் பற்றி நிறைய எழுதுங்கள் அறிய ஆவல்..
நம்ம ஊரில் இன்னும் கிராமப்புறத்தில் இந்த வெள்ளந்தித்தனம் இருக்கு..
alaikkum salaam ,kae faalaek :)
NICE POST
அரபியர்கள் கடைக்கு உள்ளே வரும்போதே ஒரு ஸலாத்தை உத்ரித்து விட்டு தான் வருவார்கள், அது யாராக இருந்தாலும், வெளிநாட்டவராக இருந்தாலும், கடைநிலை ஊழியராக இருந்தாலும் குழந்தையாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும்.
நன்றி மிக நல்ல பதிவு. பத்து நாள் தான் பாக்கி இருக்கா? பாக்க வேண்டிய இடமெல்லாம் பாத்தாச்சா??????????
லீவுக்குப் போறீங்களா? இல்லை இனி ஊர்லதானா?
நல்ல பார்வை!! தமிழ்நாட்டிலயே, பக்கத்தூருக்குப் போனாகூட பழக்கவழக்கங்கள் சற்றாவது மாறுபடும்.
அஸ்லாம் அலைக்கும்
என்ன சார் ச்வுதில இருக்கீகளா பக்கத்துலதான் பஹ்ரைன் சும்மா வந்திட்டுப் போங்க .........
ஸ்டீபன், நல்ல பதிவு.
nice
சூப்பர் பதிவு,
நம்மவர்கள் குட்மார்னிங் சொன்னால் கூட திரும்பி பார்ப்பதில்லை,
குட்மார்னிங் சொன்ன என்னை, எனது மலையாளி மேனேஜர், என்ன குட்மார்னிங்ல கூர்மை குறைவா இருக்குனு திருப்பி கேட்ட கொடுமையும் நடந்தது உண்டு.......
நம்ம ஆளுங்க அப்பிடிதான் பாஸ்.
இந்தியாவில் பார்ப்பனிய இந்து மதம் உருவாக்கிய "நமஸ்காரம்" என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. கை கூப்பி தொழுவது என்பதில் எதிரில் இருக்கும் நபரை தொட வேண்டிய அவசியமில்லை.
அரேபியாவில் நெஞ்சாராத் தழுவி வணக்கம் சொல்லும் முறை உண்மையில் பாராட்டத்தக்கது. இந்தியாவிலும் நாம் இத்தகைய முறையை அமல்படுத்துவது சரியாக இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களின்மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக [உண்டாகட்டும்]
வ அலைக்குமுஸ்ஸலாம்.
உங்களின்மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக [உண்டாகட்டும்]
ஒருவருக்கொருவர் முகமன் கூறிகொள்வதில் அதாவது சலாம் சொல்லிக்கொள்வதில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கிறது.
ஒருவரைப்பார்த்து எந்நேரத்தில் எச்சமயதிலும் இறைவனின் அருள் சாந்தி உனக்கு உண்டாகட்டும் எனசொல்லும்போது, அவன் மனதில் துக்கம் குடிகொண்டிருக்கும் சமயத்திலும். சந்தோஷம் நிலைகொண்டிருக்கும் சமயத்திலும் இவ்வார்த்தைகள் அவனை பலப்படுத்தும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அதற்கான இறைவனின் ஏற்படுதான் ஒருவருக்கொருவர் சலாம் சொல்லிக்கொள்வது..
நல்ல பதிவு ஸ்டீபன்..
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் நண்பரே.
நன்றி!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_07.html
தல ஊருக்கு போன உடனே எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா?? அட்லீஸ்ட் ஒரு போன் - ஒரு லெட்டர் - அதுவும் வேணாம் வந்தாவது நலம் விசாரிக்கக் கூடாதா?? அவ்வவ்வ்வ்வ்...
வந்து எழுதுங்க பாஸ்!!
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
Good inspiration
என்ன தல எப்படி இருக்கிங்க.
சீக்கிரம் தொடர்பு கொள்ளுங்க.
Post a Comment