Wednesday, March 16, 2011

புதிய‌ வான‌ம்(பாலைவ‌ன‌ம்).. புதிய‌ பூமி(ம‌ண‌ல்மேடு)..

அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம்.

ப‌திவு எழுதுவ‌த‌ற்கு ரெம்ப‌ நாட்க‌ள் விடுமுறை கொடுத்தாயிற்று. அத‌ற்கு முற்றுப்புள்ளி வைக்க‌வேண்டும் என‌ நினைப்பேன். ஆனால் அத‌ற்க்கான‌ச் சூழ‌ல் அமைவ‌து குதிரை கொம்பாக‌வே இருந்த‌து.ச‌வூதி அரேபியாவில் நான் ப‌ணி செய்தப் ‌பிராஜ‌க்டை ந‌ல்ல ‌ப‌டியாக‌ முடித்துவிட்டு ஊருக்கு வ‌ந்தேன். ஊரில் அண்ண‌னின் திரும‌ண‌ம். அத‌ற்கான‌ வேலையில் பிஸியாக ‌இருந்தேன். இர‌ண்டு மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரிய‌வில்லை. ச‌வூதியில் இருக்கும் போதே, இந்தப் ‌பிராஜ‌க்ட் முடித்த‌வுட‌ன் ந‌ம்ம‌ டீமில் உள்ள ‌அனைவ‌ரும் ஒரு அவுட்டிங் பிளான் ப‌ண்ண‌லாம் என்று மேனேஜ‌ர் சொல்லியிருந்தார். அத‌ன்ப‌டி கேர‌ளா சுற்றுப்ப‌ய‌ண‌ம் ஒரு வார‌ம். ப‌ய‌ண‌ம் நிறைவாய் இருந்த‌து.

க‌ட‌ந்த‌ ஒன்ப‌து வ‌ருட‌ங்க‌ளாய் வேலையின் நிமித்த‌ம் வெளியூர்க‌ளில் இருந்து வ‌ருகிறேன். ஊருக்கு விடுமுறையில் அவ்வ‌ப்போது சென்று வ‌ருவேன். அதிக‌ப‌ட்ச‌மாக‌ ப‌த்து நாட்க‌ள் தான் ஊரில் இருப்பேன். ஆனால் இந்த‌ விடுமுறையில் தான் அதிக‌ நாட்க‌ள்(மூன்று மாத‌ம்) ஊரில் இருந்த‌து.

ஊரில் அதிக‌ நாட்க‌ள் இருந்த‌தினால் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் குடும்ப‌த்தின‌ரின் இல்ல‌ நிக‌ழ்ச்சிக‌ளிலும் க‌ல‌ந்து கொள்ள‌முடிந்த‌து. என்னைப்போல் வெளியூர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் அதிக‌ம‌காக‌ விடுமுறையில் எங்க‌ள் ஊருக்கு வ‌ருவ‌து டிச‌ம்ப‌ர் ம‌ற்றும் ஜ‌ன‌வ‌ரி மாத‌மாக‌தான் இருக்கும். இந்த‌மாத‌ங்க‌ளில் தான் ப‌ண்டிகைக‌ள்(கிறிஸ்ம‌ஸ், பொங்க‌ல், கோவில் திருவிழா) அதிக‌ம். என‌வே என்னுட‌ன் ப‌டித்த‌ பால்ய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரை ச‌ந்திக்க‌ முடிந்த‌து. என்ன‌வொரு ஆச்ச‌ரிய‌ம்!!.. ப‌ல‌ருக்கு திரும‌ண‌ம் ஆகி இருந்த‌து. :‍-)

ச‌வூதியில் நான் இருக்கும் போதே, நீங்க‌ள் அடுத்து ம‌ஸ்க‌ட் தான் வ‌ருவீர்க‌ள் என்று என்னுடைய‌ மேனேஜ‌ர் சொல்லியிருந்தார். அத‌ன்ப‌டி ஊருக்கு வ‌ந்த‌வுட‌ன் என்னை ம‌ஸ்க‌ட் அனுப்புவ‌த‌ற்க்கான‌வேலையை என்னுடைய‌ ஹைதிராபாத் ஆபிஸ் தொட‌ங்கிய‌து. விசா தொட‌ர்பான‌ எல்லா வேலைக‌ளையும், மெடிக்கலையும் முடித்து ஒரு வ‌ழியாக‌ க‌ட‌ந்த‌மாத‌ம் ப‌னிரென்டாம் தேதி ம‌ஸ்க‌ட் வ‌ந்து சேர்ந்தேன்.

புதிய‌ நாடு
புதிய‌ வீடு
புதிய‌ அலுவ‌ல‌க‌ம்
புதிய‌ ம‌க்க‌ள்

என்று எல்லாவ‌த்தையும் ச‌மாளித்து செட்டில் ஆக‌ ஒரு மாத‌ம் பிடித்துவிட்ட‌து.....

இங்கு வ‌ந்த‌வுட‌ம் முத‌லில் த‌டுமாறிய‌து ப‌ண‌த்தில் தான், கார‌ண‌ம் ச‌வூதியில் உள்ள‌ ஒரு ரியாலின்(SAR) ம‌திப்பை விட‌ இங்குள்ள‌ ரியாலின்(OMR) ம‌திப்பு ப‌த்து ம‌ட‌ங்கு அதிக‌ம்!!!..

ச‌வூதி 1 ரியால் = 11.8 இந்திய‌ன் ரூபாய்

ஓம‌ன் 1 ரியால் = 118.0 இந்திய‌ன் ரூபாய்

குறிப்பு: இந்த‌ க‌டையும் திற‌க்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் க‌ழ‌ன்று போகாத‌ அனைத்து பாலோவ‌ருக்கும் என்னுடைய‌ ந‌ன்றி.... :-)

தொட‌ர்ந்து எழுத‌லாம் என்று இருக்கிறேன்.. பார்ப்போம்..

15 comments:

r.v.saravanan said...

me first

r.v.saravanan said...

வாருங்கள் நண்பா என்ன ரொம்ப நாளாயிற்றே என்று நினைத்து கொண்டிருந்தேன்


ம‌ஸ்க‌ட் வ‌ந்து சேர்ந்தேன்.

புதிய‌ நாடு
புதிய‌ வீடு
புதிய‌ அலுவ‌ல‌க‌ம்
புதிய‌ ம‌க்க‌ள்

என்று எல்லாவ‌த்தையும் ச‌மாளித்து செட்டில் ஆக‌ ஒரு மாத‌ம் பிடித்துவிட்ட‌து.....


வெற்றி பெற வாழ்த்துக்கள்

பதிவுகளை தொடருங்கள்

செ.சரவணக்குமார் said...

வெல்கம் பேக் ஸ்டீபன்.

//தொட‌ர்ந்து எழுத‌லாம் என்று இருக்கிறேன்.. பார்ப்போம்.//

தொடர்ந்து எழுதுங்கள்.

நாஞ்சில் பிரதாப்™ said...

வருக வருக...வந்து சங்கத்தில் மீண்டும் ஐக்கியமாகுங்க...:))
எல்லா நல்லபடியா முடிஞ்சுதா ஸ்டீபன்...மெயிலில் மொபைல் நம்பர் கொடுங்க.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஸ்டீபன் லீவு அதுக்குள்ள முடிஞ்சுதா?!

தொடர்ந்து எழுதுங்க.

நீங்க மறுபடியும் எழுதியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இளம் தூயவன் said...

வாங்க ஸ்டீபன், தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் வருகை எதிபார்த்து கொண்டுள்ளோம்.

NIZAMUDEEN said...

வாங்க ஸ்டீபன், வரவேற்கிறோம்.
உங்க திருமணம் எப்போ?

ஜெய்லானி said...

கெடு பிடி இல்லாத புதிய சூழ்நிலை வித்தியாசமாதான் இருக்கும் ..தொடர்ந்து எழுதுங்க :-))

Jai said...

மஸ்கட் நண்பர்கள் சார்பாக உங்களை வரவேற்கிறோம் உங்கள் contact details கொடுக்கவும் சந்திப்போம், sent to my mail id - win2jai@gmail.com

அமைதிச்சாரல் said...

வாங்க..வாங்க, லீவு முடிஞ்சுதா :-))

ஹுஸைனம்மா said...

நல்வரவு!! மஸ்கட்லயா இப்ப? நல்லது.

//பால்ய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரை ச‌ந்திக்க‌ முடிந்த‌து. என்ன‌வொரு ஆச்ச‌ரிய‌ம்!!.. ப‌ல‌ருக்கு திரும‌ண‌ம் ஆகி இருந்த‌து//

உங்க கவலை உங்களுக்கு!! வீட்டுக்கு நண்பர்களைக் கூட்டிப்போயிருந்தீங்கன்னா, அம்மா புரிஞ்சிருந்துப்பாங்க. :-)))))

எம் அப்துல் காதர் said...

thala me 1st

எம் அப்துல் காதர் said...

இப்ப தானே அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு! கொஞ்சம் பொருத்துங்க. நோ பீலிங்க்ஸ்யா!! வீட்ல இந்த மேட்டர படிக்கிற மாதிரி பார்த்துங்க ஹீ..ஹீ... அம்புட்டுதேன்! தொடர்ந்து எழுதுங்க தல! on-line-லயும் அடிக்கடி வாங்க!!

நாடோடி said...

@r.v.saravanan said...
//me first //

வாங்க‌ ஆர்.வி.ச‌ர‌வ‌ண‌ன்..முத‌ல் வாழ்த்து உங்க‌ளுடைய‌து தான்.. :)

@செ.சரவணக்குமார் said...
வெல்கம் பேக் ஸ்டீபன்.

//தொட‌ர்ந்து எழுத‌லாம் என்று இருக்கிறேன்.. பார்ப்போம்.//

தொடர்ந்து எழுதுங்கள்.///

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. ஊக்க‌த்திற்கும் வாழ்த்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.. :)

@நாஞ்சில் பிரதாப்™ said...
//வருக வருக...வந்து சங்கத்தில் மீண்டும் ஐக்கியமாகுங்க...:))
எல்லா நல்லபடியா முடிஞ்சுதா ஸ்டீபன்...மெயிலில் மொபைல் நம்பர் கொடுங்க. //

எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாக‌ முடிந்த‌து பிர‌தாப்.. மெயில் அனுப்பிவிட்டேன்..

@சிநேகிதன் அக்பர் said...
//வாங்க ஸ்டீபன் லீவு அதுக்குள்ள முடிஞ்சுதா?!

தொடர்ந்து எழுதுங்க.

நீங்க மறுபடியும் எழுதியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. //

வாங்க‌ அக்ப‌ர்.. லீவு எல்லாம் ந‌ல்ல‌ ப‌டிய‌ முடிஞ்ச‌து.. வாழ்த்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

@இளம் தூயவன் said...
//வாங்க ஸ்டீபன், தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் வருகை எதிபார்த்து கொண்டுள்ளோம். //

வாங்க‌ இள‌ம் தூய‌வ‌ன்.. வாழ்த்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

@NIZAMUDEEN said...
//வாங்க ஸ்டீபன், வரவேற்கிறோம்.
உங்க திருமணம் எப்போ? //

வாங்க‌ நிஜாமுதீன்.. ந‌ட‌க்கும் போது க‌ண்டிப்பா உங்க‌ளிட‌ம் சொல்லுவேன்...:‍)

@ஜெய்லானி said...
//கெடு பிடி இல்லாத புதிய சூழ்நிலை வித்தியாசமாதான் இருக்கும் ..தொடர்ந்து எழுதுங்க :-)) //

வாங்க‌ ஜெய்லானி.. ஊக்க‌த்திற்கு ரெம்ப‌ ந‌ன்றி..

நாடோடி said...

@Jai said...
//மஸ்கட் நண்பர்கள் சார்பாக உங்களை வரவேற்கிறோம் உங்கள் contact details கொடுக்கவும் சந்திப்போம், sent to my mail id - win2jai@gmail.com //

வாங்க‌ ஜெய் ந‌ண்ப‌ரே.. நீங்க‌ளும் ம‌ஸ்க‌ட்டில் தான் இருக்கிறீர்க‌ளா?.. உங்க‌ளுக்கு மெயில் அனுப்பிவிட்டேன்... தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்.. ச‌ந்திப்போம்..

@அமைதிச்சாரல் said...
//வாங்க..வாங்க, லீவு முடிஞ்சுதா :-)) //

வாங்க‌ ச‌கோ.. எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாக‌ முடிந்த‌து..

@ஹுஸைனம்மா said...
நல்வரவு!! மஸ்கட்லயா இப்ப? நல்லது.

//பால்ய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரை ச‌ந்திக்க‌ முடிந்த‌து. என்ன‌வொரு ஆச்ச‌ரிய‌ம்!!.. ப‌ல‌ருக்கு திரும‌ண‌ம் ஆகி இருந்த‌து//

உங்க கவலை உங்களுக்கு!! வீட்டுக்கு நண்பர்களைக் கூட்டிப்போயிருந்தீங்கன்னா, அம்மா புரிஞ்சிருந்துப்பாங்க. :-))))) ///

வாங்க‌ ச‌கோ.. இப்ப‌ ம‌ஸ்க‌ட் தான்.. வீட்ல‌ உள்ள‌வ‌ங்க‌ளுக்கும் புரிஞ்சாச்சி... :))))

@எம் அப்துல் காதர் said...
//இப்ப தானே அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு! கொஞ்சம் பொருத்துங்க. நோ பீலிங்க்ஸ்யா!! வீட்ல இந்த மேட்டர படிக்கிற மாதிரி பார்த்துங்க ஹீ..ஹீ... அம்புட்டுதேன்! தொடர்ந்து எழுதுங்க தல! on-line-லயும் அடிக்கடி வாங்க!! ///

வாங்க‌ அப்துல்.. க‌ண்டிப்பா ஆன்லைனில் வ‌ருவேன்.. :))))

Related Posts with Thumbnails