Monday, April 4, 2011

ஊர் நினைவ‌லைக‌ள்_மாம்ப‌ழ‌த்துறையாறு அணை

நீங்க‌ எந்த‌ ஊரு த‌ம்பி?..

நான் க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ வில்லுக்குறி..

க‌ண்ணுக்கும், ம‌ன‌சுக்கும் ப‌சுமை த‌ரும் ஊருதான்.. உங்க‌ளுக்கு இந்த‌ சூடான‌ சென்னை வாழ்க்கை கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மாதான் இருக்கும்..

ஆமாங்க‌.. என்று சொல்லிவிட்டு அவ‌ர‌து முக‌த்தை பார்த்தால், ரெம்ப‌ ச‌ந்தோச‌மான‌ புன்ன‌கையுட‌ன், உண‌ர்ச்சி பொங்க‌, எங்க‌ள் ஊரில் உள்ள‌ வ‌ய‌ல் வெளிக‌ள் ப‌ற்றியும், நீர் நிலைக‌ள் ம‌ற்றும் அணைக‌ள் ப‌ற்றியும் அவ‌ற்றின் பெருமைக‌ளைப் ப‌ற்றியும் விவ‌ரிப்பார். அதில் என‌க்கு தெரியாத‌ சில‌ விச‌ய‌ங்க‌ளும் அட‌ங்கும்.

வெளியூரில் இருக்கும் ந‌ம்மை போன்ற‌ ம‌க்க‌ளுக்கு சொந்த‌ ஊரின் நினைவுக‌ளை ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசும் போது ந‌ம்முடைய‌ ம‌ன‌ம் த‌ன்னைய‌றியாம‌ல் ஒருவித‌ ம‌கிழ்ச்சியில் க‌ளிப்புறுவ‌து ம‌றுக்க‌யிலாது..

ஆனால் இவ‌ர்க‌ள் விய‌ந்து சொல்லும் அனைத்து விச‌ய‌ங்க‌ளுக்கும் ந‌ம்முடைய‌ ஊர், இப்போதும் ஏற்புடைய‌துதானா? என்ற‌ கேள்வி என்னில் எப்போதும் எழுவ‌து உண்டு..




சிறுவ‌ய‌தில் எங்க‌ள் ஊரில் கிண‌றுக‌ள் அதிக‌மாக‌ இருக்கும். அதில் இருந்து இறைக்கும் நீர் தான் குடிப்ப‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும். இந்த‌ கிண‌றுக‌ள் 50 அடியில் இருந்து 60 அடிக‌ள் வ‌ரை ஆழ‌ம் இருக்கும். இதில் 10 - 15 அடிக‌ள் நீர் எப்போதும் இதில் இருக்கும். கோடைக்கால‌த்திலும் வ‌ற்றாத‌ சில‌ கிண‌றுக‌ளை எங்க‌ள் ஊரில் நான் பார்த்த‌து உண்டு.

கால‌ ஓட்ட‌த்தில் இந்த‌ கிண‌றுக‌ளில் நீர் ஊற்றுக‌ள் குறைய‌ தொட‌ங்கிய‌து. ஒரு க‌ட்ட‌த்தில் முற்றிலும் நின்று க‌ட்டாந்த‌ரையை காட்டி ப‌ல்லிளித்த‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான் எங்க‌ள் ஊரில் உள்ள‌ ப‌ல‌ கிண‌றுக‌ளுக்கு மூடுவிழா போட‌ப்ப‌ட்ட‌து. அதில் என‌து வீட்டில் உள்ள‌ கிண‌றும் அட‌ங்கும். இப்போது எங்க‌ள் ஊரில் நீர் உள்ள‌ கிண‌றுக‌ளை பார்ப்ப‌து என்ப‌து மிக‌ அரிது.

கிணறுகளுக்கு மூடுவிழா போட்ட வீட்டில் எல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டது. இந்த ஆழ்துளைக் கிணறுகளில் ஆழம் சுமார் 250 அடியில் இருந்து 300 அடிகள்.. இப்போது இந்த ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து கொண்டு தான் வருகின்றது.

நிலத்தடி நீர் மட்டம் தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது, என்பது கண்முன்னே அழகாக தெரிகிறது.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் குளம் மற்றும் வாய்க்கால்கள் அதிகமாக இருக்கும். இவையிரண்டும் தான் விவசாயத்திற்கு ஊன்று கோலாய் இருந்தவை. இந்த குளங்கள் மற்றும் வாய்க்கால் பக்கம் நிலம் வைத்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி பல குளங்களை குட்டையாக மாற்றியதுண்டு.. சில நீர் நிலைகள் இருந்த இடங்களே, தடம் தெரியாமல் இன்று அடையாளம் தொலைத்து நிற்கின்றன. புதிய குளங்கள் எதுவும் வெட்டப்படவும் இல்லை. விவசாயத்திற்கு நீர் ஆதாரம் குறைவாக இருக்கிறது என்று பல விளைநிலங்கள் வீடுகளாக மாறி வருகிறது.

ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம்?_க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ள்

மேற்கண்ட என்னுடைய பதிவில் நான் காமெடியாக எழுதியிருந்தாலும் இதுதான் உண்மை..

எங்கள் ஊரில் மலைகள் அதிகமாக இருப்பதால் பருவ மழைகள் பொய்ப்பது இல்லை(2004 சுனாமி நிகழ்வுக்கு பிறகு பருவ மழைகளில் மாறுதல் உள்ளதாக சிலர் சொல்லுகிறார்கள், அது எவ்வளவு தூரம் உண்மையென்று எனக்கு தெரியவில்லை), ஆனால் இந்த மழை நீர்கள் சரியாக சேமிக்கப்படுவது இல்லை. அப்படியே கடலில் கலந்துவிடுகிறது. கோடைக்காலங்களில் எங்கள் ஊரில் வெயிலின் உக்கிரம் முன்பெல்லாம் அதிகமாக தெரிவதில்லை. ஆனால் இப்போது எங்கள் ஊரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

மேலே உள்ள விசயங்களால் குறைப்பட்டிருக்கும் எனக்கு, ஊரில் நேரில் பார்த்த சில ஆக்க பூர்வமான செயல்கள் ஆறுதல் தந்தன

பாலிதீன் பைகள் முற்றிலும் தடைச்செய்யபட்டிருக்கிறது. இந்த பைகளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடமும் அதிகமாக சென்றைடைந்திருக்கிறது. கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்பவர்களும் கைகளை வீசிக்கொண்டு செல்லாமல், கையில் துணிப்பைகளுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து எங்கள் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. எல்லா மாவட்டங்களிலும் இந்த கட்டுப்பாடு வந்தால் நன்றாக இருக்கும்..

இந்த ஆண்டு கட்டப்படும்.. அடுத்த ஆண்டு கட்டப்படும் என்று சில ஆண்டுகளாக எங்கள் ஊரில் சொல்லிவந்த மாம்பழத்துறையாறு அணைக்கட்டு ஒரு வழியாக கடந்த ஆண்டு கட்டி முடிக்கப் பட்டுவிட்டது. இது அமைந்திருக்கும் பகுதி இயற்கையாக அணைக்கட்டுவதைக்கு ஏதுவாக இருந்த இடம். மலைகளில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் இந்த அணையில் சேமிக்க படுகிறது... இந்த அணையின் மூலம் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மற்றும் விளை நிலங்களுக்கான நீர் ஆதரம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது...

அணை ப‌ற்றிய‌ விப‌ர‌ம் எல்லாம் இங்க‌ பாருங்க‌..



நான் போன‌து ம‌ழைக்கால‌ம் இல்லீங்கோ..



போட்டோவுக்கு போஸ் கொடுத்து ரெம்ப‌ நாள் ஆச்சுங்கோ..

14 comments:

Chitra said...

ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க.... ஆதங்கத்துடன் எழுதப்பட்ட நல்ல பதிவு.

Welcome back!

தமிழ் உதயம் said...

உங்கள் ஊர் அணைக்கட்டு மீது - எத்தனை ஆர்வம். மிக்க மகிழ்ச்சி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

'மாம்பழத்துறை ஆறு ' பேரே சுவையாய் இருக்குது

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு ஸ்டீபன்.

அன்று உங்களுடன் பேசிய பிறகுதான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நேரம் கிடைக்கும்போது மின்னஞ்சல் செய்யுங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

பச்சைப்பசேல் வயல்களை பாக்கறப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..

சிநேகிதன் அக்பர் said...

பழுப்பையே பார்த்து பழகி போயிருந்த கண்ணுக்கு பச்சையை காட்டிட்டீங்க ஸ்டீபன் :)

நானும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன் எப்படியிருந்த நம்ம ஊர் இப்படி மாறி வருதேன்னு. எல்லாம் நம்ம, நம்ம மக்களோட சுயநலம்.

போட்டோ சூப்பர்!

Asiya Omar said...

வில்லுக்குறி அழகான ஊர்,மாழ்பழத்துறையாறு பற்றிய பகிர்வுக்கு மகிழ்ச்சி,எங்க ஊர் பக்கம் தாமிரபரணி ஆற்று தண்ணீர் தான்.கிணறு அதிகம் பார்த்தது இல்லை.போட்டோவும் நல்லாயிருக்கு.

எம் அப்துல் காதர் said...

'மாம்பழத்துறை ஆறு' அப்படியே ஜூஸா பிழிந்து தந்துட்டீங்க!!

// அன்று உங்களுடன் பேசிய பிறகுதான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நேரம் கிடைக்கும்போது மின்னஞ்சல் செய்யுங்கள். //

அப்படி என்ன பேசுனீங்க... மனசுக்கு ஆறுதல் கிடைக்க... அதையும் ஒரு பதிவு போடுங்க தல!! ஹி..ஹி..

r.v.saravanan said...

நல்ல பதிவு ஸ்டீபன் படங்களும் சூப்பர்

மாலதி said...

நல்ல பதிவு.

நாடோடி said...

@Chitra said...
//ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க.... ஆதங்கத்துடன் எழுதப்பட்ட நல்ல பதிவு.

Welcome back//

நீங்க‌ தான் ந‌ம்ம‌ க‌டை ப‌க்க‌ம் லேட்டா வ‌ந்திருக்கீங்க‌.. :)

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@தமிழ் உதயம் said...
//உங்கள் ஊர் அணைக்கட்டு மீது - எத்தனை ஆர்வம். மிக்க மகிழ்ச்சி.//

வாங்க‌ த‌மிழ்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.


@நாய்க்குட்டி மனசு said...
//'மாம்பழத்துறை ஆறு ' பேரே சுவையாய் இருக்குது//

வாங்க‌.. பேரைப் போல‌ ஊரும் ரெம்ப‌ ந‌ல்லா இருக்கும்.. ஒருமுறை வாங்க‌.. :)

@செ.சரவணக்குமார் said...
//நல்ல பதிவு ஸ்டீபன்.

அன்று உங்களுடன் பேசிய பிறகுதான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நேரம் கிடைக்கும்போது மின்னஞ்சல் செய்யுங்கள். //

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. க‌ண்டிப்பா மெயில் ப‌ண்ணுறேன். வ‌ழ‌க்க‌ம் போல் எழுதுங்க‌.

@அமைதிச்சாரல் said...
//பச்சைப்பசேல் வயல்களை பாக்கறப்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.. //

வாங்க‌ ச‌கோ.. இந்த‌ ப‌ச்சைக‌ள் எல்லாம் அழிந்து வ‌ருவ‌தால் தான் வ‌ருத்த‌மா இருக்கு..

நாடோடி said...

@சிநேகிதன் அக்பர் said...
//பழுப்பையே பார்த்து பழகி போயிருந்த கண்ணுக்கு பச்சையை காட்டிட்டீங்க ஸ்டீபன் :)

நானும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன் எப்படியிருந்த நம்ம ஊர் இப்படி மாறி வருதேன்னு. எல்லாம் நம்ம, நம்ம மக்களோட சுயநலம்.

போட்டோ சூப்பர்! //

வாங்க‌ அக்ப‌ர்.. ஊரை ப‌ற்றி வ‌ருந்திய‌தால் தான் இந்த‌ ப‌திவை எழுதினேன்.. என்ன‌ செய்ய‌ அக்ப‌ர்.. ):
க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@asiya omar said...
//வில்லுக்குறி அழகான ஊர்,மாழ்பழத்துறையாறு பற்றிய பகிர்வுக்கு மகிழ்ச்சி,எங்க ஊர் பக்கம் தாமிரபரணி ஆற்று தண்ணீர் தான்.கிணறு அதிகம் பார்த்தது இல்லை.போட்டோவும் நல்லாயிருக்கு. //

வாங்க‌ ச‌கோ.. ஊர் ப‌க்க‌ம் வ‌ந்திருக்கிங்க‌ளா?.. ரெம்ப‌ ச‌ந்தோச‌ம். வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@எம் அப்துல் காதர் said...
'மாம்பழத்துறை ஆறு' அப்படியே ஜூஸா பிழிந்து தந்துட்டீங்க!!

// அன்று உங்களுடன் பேசிய பிறகுதான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நேரம் கிடைக்கும்போது மின்னஞ்சல் செய்யுங்கள். //

அப்படி என்ன பேசுனீங்க... மனசுக்கு ஆறுதல் கிடைக்க... அதையும் ஒரு பதிவு போடுங்க தல!! ஹி..ஹி.. //

வாங்க‌ த‌ல‌.. ரெம்ப‌ நாளா ந‌ம்ம‌ க‌டைப்ப‌க்க‌ம் வ‌ர‌ல‌ போல‌.. எழுத‌னும் தான் ஆனா நேர‌ம் தான் கிடைப்ப‌து இல்லை.. :)

@r.v.saravanan said...
//நல்ல பதிவு ஸ்டீபன் படங்களும் சூப்பர் //

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ம்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@மாலதி said...
//நல்ல பதிவு.//

வாங்க‌ மால‌தி.. க‌ருத்துக்கும், வ‌ருகைக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

ஹுஸைனம்மா said...

நாடோடி, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பாலிதீன் பைகளைத் தடை செய்ததுபோல, விளைநிலங்களை விற்பனை செய்யக்கூடாது (கட்டிடம் கட்ட) என்ற விதியும் இருக்கிறதே!! இயற்கைவளம் பெருக இவ்விதிகள் கொண்டுவந்த கலெக்டருக்குப் பாராட்டுகள்!!

vanathy said...

நல்ல பதிவு. அழகான படங்கள்.

Related Posts with Thumbnails