நான் சிறுவனாக இருக்கும் போது, எங்களுடைய வீடு இருக்கும் இடத்தைப் பற்றிய பேச்சு வரும்போது அப்பா சொல்லும் வார்த்தை நாம் வீடு கட்டியிருக்கும் இடமெல்லாம் நான் சிறுவனாக இருந்த போது ஒரே காடாக இருந்தது. அப்போது எல்லாம் இந்த இடங்களுக்கு தனியாக வரமுடியாது, ஒரே இருட்டாக இருக்கும், ஆட்கள் நடமாட்டம் என்பது பார்ப்பது அரிது என்று சொல்வார். அதை கேட்கும் போது எனது மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடும். அது எப்படி இருபது ஆண்டு கால இடைவெளியில் இவ்வளவு மாற்றங்கள் வந்தது, அடர்ந்த மரங்கள் இருந்த இடங்களா இன்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டன, எப்படி இது நடந்திருக்க கூடும் என்று அடுக்கடுக்கான கேள்விகள். இந்த கேள்விகள் அனைத்திற்கும் பிற்காலங்களில் என் கண்முன்னே நடந்த மாற்றங்கள் பதில் தந்தன.
எனது கண்முன்னே நடந்த மாற்றங்களை விவரிக்க நாம் ஒரு பதினைந்து வருடம் பின்னோக்கி செல்ல வேண்டியுள்ளது.
எனது வீட்டில் இருந்து சிறிது தூரம் நடந்தால் ஒரு தேசிய நெடுஞ்சாலை வரும். அதுதான் நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்திற்க்கும் இடைப்பட்ட சாலை. அந்த சாலையை கடந்து நடந்தால் ஒரு வாய்கால் வரும். அந்த வாய்கால் அருகில் நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் அவ்வளவும் வயல்வெளிகளாக தெரியும். காலைவேளையில் சென்று பார்த்தோம் ஆனால் அதன் அழகே தனிதான்!. வானின் நீலநிறத்தில் இருந்து அப்படியே பச்சை கம்பளம் விரித்தது போலும், அந்த கம்பளத்தில் ஆங்காங்கே அழகிய வேலைப்பாடுகள் செய்தது போல் ஓவ்வொரு வயல்வெளிகளுக்கு இடையில் உள்ள வரப்புகள் காட்சியளிக்கும். அந்த வரப்புகளில் களை எடுப்பதற்காகவும் சென்று வரும் பெண்களின் வரிசைகளும், ஆங்காங்கே நடப்பட்ட கொம்புகளில் மேல் அமர்ந்திருக்கும் வெள்ளை கொக்குகளின் அழகும் ரசிக்க கண்கள் ஆயிரம் வேண்டும்.
ஒரு முறை நெற்பயிர் செய்வத்ற்கு நான்கு மாதகாலம் ஆகும். வருடத்திற்கு இரண்டு தடைவை எங்கள் ஊரில் நெற்பயிர் செய்வார்கள். மீதமுள்ள நான்கு மாதத்தில் மாற்று பயிர்களாகிய பருப்பு வகைகள் பயிரிடப்படும். இதுதான் சுழல் முறையில் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்படியே எத்தனை நாள் தான் கோவணம் கட்டிகிட்டு மாட்டை கட்டி உழுதுகொண்டு இருப்பது என்று ஒரு புண்ணியவான் யோசித்தான், எப்படியாவது பக்கத்து ஊர்ல இருந்து ஒரு சொக்கா வாங்கி மாட்டிடனும் என்று நினைத்தான். அந்த வருடம் அனைவரும் கோவணம் கட்டிக்கொண்டு நெல் நாற்று நடும் போது, நம்ம புண்ணியவான் மட்டும் சொக்கா மாட்டிட்டு வாழைக்கன்று நட்டு கொண்டிருந்தான். அவனை அனைவரும் அதிசயமாக பார்த்தனர். வருடத்தின் அறுவடை முடிந்தது. அனைவரும் நெற்பயிர் செய்து சாம்பாதித்த பணத்தை விட, வாழைப்பயிர் செய்த நம்ம புண்ணியவான் அதிகம் லாபம் ஈட்டினான். காரணம் அந்த வருடத்தில் அவன் மட்டுமே வாழைப்பயிர் செய்தான். இதைப் பார்த்த நம்ம கோவணம் கட்டிய ஆட்கள எல்லோருக்கும் சொக்கா மீது ஆசை வந்துவிட்டது. அதன் பயனாக அடுத்த இரண்டு வருடங்களில் அந்த வயல்வெளிகள் அனைத்தும் வாழைத்தோட்டங்களாக காட்சியளித்தது. வயல்வெளிகள் இருந்த சுவடுகளே மறைந்து போனது.
இப்ப நம்ம ஊர்ல எல்லோரும் சொக்கா மாட்டிகிட்டு வாழைத்தோட்டங்களை வலம் வந்தார்கள். என்னடா இது நமக்கு வந்த சோதனை!.. நாம தான் முதல்ல சொக்கா மாட்ட ஆரம்பித்தோம் அதுக்குள்ள அவ்வளவு பயபுள்ளைகளும் சொக்கா மாட்டிட்டு நம்ம முன்னாடியே சுத்திகிட்டு திரியுது. இது சரிப்படாது. நாம பக்கத்து ஊர்ல இருந்து எப்படியாவது பேண்டு சட்டை வாங்கிட வேண்டியது தான் என்று நினைத்தான் புண்ணியவான். அனைவரும் அந்த வருடம் வாழைக்கன்று நட்டு கொண்டிருக்கும் போது, நம்ம புண்ணியவான் வேளாண்மைத் துறை அதிகாரியின் உதவியுடன் தென்னை மரக்கன்றுகள் நட்டு கொண்டிருந்தான். வேளாண்மைத்துறை அதிகாரி ஒரு பெரிய புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு ஓவ்வொரு மரத்திற்கும் மூன்று மீட்டர் இடைவெளி வேண்டும், ஆழமான பள்ளம் தோண்டவேண்டும் என்று பேண்டு, சட்டை மாட்டிய நம்ம புண்ணியவானுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த நம்ம மக்கள் சும்மா இருப்பார்களா? நாமளும் எப்ப தான் பேண்டு, சட்டை மாட்டுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள், அடுத்த ஐந்து வருடங்களின் நம்ம புண்ணியவானின் தயவால் அனைவரும் சொக்காவை தூக்கி போட்டு விட்டு, பேண்டு, சட்டை மாட்டி தென்னங்கன்று நட ஆரம்பித்தனர். இப்போது வாழைத்தோட்டம் இருந்த சுவடுகள் இல்லாமல் அழிந்து போயின.
இப்படித்தான் நம்ம ஆளுங்க கோவணத்துல இருந்து பேண்டு, சட்டைக்கு மாறினாங்க, இல்லை.. இல்லை.. வயல்வெளிகளில் இருந்து தென்னத்தோட்டத்திற்கு மாறினார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நான் ஊரில் சென்று பார்த்த போதுதான் அப்பா சொன்னது எவ்வளவு உண்மை என்று தெரியவந்தது. பச்சை பசேல் என்று காட்சியளித்த அந்த இடங்கள் எல்லாம் இன்று எப்படி மாறிவிட்டது என்று.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
ஹலோ!..ஹலோ! நான் தான் மச்சி, மைக்கேல் பேசுறேன்.
ஆம் மச்சி, சொல்லு எப்படி இருக்க, எப்ப அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வர்ற?
மச்சி அமெரிக்க வாழ்க்கை போர் அடிச்சாச்சி, அப்படியே ஊர்ல வந்து செட்டில் ஆகிவிடாலம் என்று இருக்கிறேன்.
பரவாயில்லையே மச்சி, ரெம்ப சந்தோசம், எப்ப ஊருக்கு வருகிறாய்?
இப்பதான் ஆபிஸ்ல சொல்லி இருக்கேன், அடுத்த ஒரு மாசத்தில எல்லாம் செட்டில் ஆகி விடும்.
ரெம்ப சந்தோசம் மச்சி, அப்புறம் ஊருக்கு வந்து என்ன பண்ணுறதா உத்தேசம்?
அது பிளான் பண்ணாம இருப்பேனா மச்சி. அதான் போனவாட்டி நான் லீவுக்கு வந்தப்ப நாம எல்லாம் போய் என்னுடையதோட்டத்தில் இளநீர் வெட்டி சாப்பிட்டோம் இல்லயா?
ஆமா! அந்த மெயின்ரோட்டின் பக்கத்துல உள்ள உன்னுடைய பெரிய தென்னந்தோப்பு, எனக்கு தெரியும் சொல்லு, அதுல என்ன பண்ண போற?
அப்பாகிட்ட கேட்டேன் எனக்கு பெட்ரோல் பங்க் வைக்க ஒரு நாலு ஏக்கர் இடம் வேண்டும் என்று. அவரு தான் சொன்னாரு “நம்ம தென்னந்தோப்பு இப்ப காய் எதுவும் சரியா வைக்கலை” எனவே அதை எல்லாம் முறித்து விட்டு அந்த இடத்தில் நீ பெட்ரோல் பங்க் கட்டிக்க என்று சொல்லிவிட்டார்.
அப்படியா மச்சி, ரெம்ப சந்தோசம், நீ ஊருக்கு வருவதற்கு முன்னாடி எனக்கு போன் பண்ணு.. ஓ.கே.வா?
ஓகே மச்சி. பாய் மச்சி.
ஆஹா.....இப்ப சரிதான் நம்ம புண்ணியவான் கோட்டு, சூட்டு மாட்ட ஆசைபடுகிறார். அப்படியானால் இன்னும் சில வருடங்களில் நம்ம மக்கள் எல்லாம் கோட்டு, சூட்டு மாட்டி விடுவார்கள். அப்படியே எனது மகனுக்கு கதைச் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஏனென்றால் மைக்கேல் தென்னந்தோப்பு பக்கத்துல எனக்கும் ஒரு ஏக்கர் இருக்குதுல்ல..நாங்களும் கட்டுவோம் இல்ல..
அந்த ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகின்றது....... ஆஹா என்ன வரிகள். அவர் என்ன நினைத்து பாடினாரோ?
Thursday, April 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
ஆதங்கத்தை, அற்புதமாக
பதிவு செய்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
மாத்தி யோசி ! மாத்தி யோசி !
சொன்னவிதம் அருமை ஸ்டீபன்... எல்லா இடத்துலயும் மக்கள் இப்ப பேன்ட் சட்டைலேருந்து கோர்ட் சூட்டுக்கு மாறிட்டாங்க... எங்கப்போய் முடியப்போவுதோ???
நிதர்சனமான உண்மை.
அந்த ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகின்றது.
..... மாற்றங்கள் நல்லதா கெட்டதா? :-o
அழகாக பதிந்து விட்டீர்கள்..
ஆனா எங்கூர்ல நான் சின்னபுள்ளயா இருந்து பாத்ததே இப்ப பயங்கரமா மாறியிருக்கு... இன்னும் என்னெல்லாம் நடக்குமோ..?!
நல்ல பகிர்வு, எங்க ஒட்டு மொத்த பேரும் இது போல் யோசித்தாஅல் தான் ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கலாம்
மக்கா, அடிக்கிற வெய்யில்ல எல்லாரும் கோட்டு, சூட்டு எல்லாத்தையும் கலட்டி எறிஞ்சுட்டு அம்மணமா அலையிற நாள் வரும். அப்போ யோசிப்பானுங்க கோவணம் கட்டுறது எப்புடின்னு.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நாடோடி. முதல் போட்டோ மிக அருமை. நேர்ல பாக்க எவ்ளோ அழகா இருக்கும்...! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. புதுப் பொண்டாட்டிக்காக பெத்த அம்மாவ கொன்னுட்டாங்களே...! :( எனக்கு இப்பவே கோவணம் கட்டணும்னு ஆசை வந்துடுச்சு.
சரியான பதிவு.
சொக்காவுக்கு ஆசைப்பட்டு,இப்ப கக்கா போறதுக்கு கூட இடமில்லை,விளைநிலங்கள் எல்லாம் பிளாட் போடப்பட்டு,கான்க்ரீட் ஜன்கிள் ஆகி வருகிறது.எல்லாம் காலத்தின் கோலம்.
இயல்பான எழுத்துநடையில் அருமையான பதிவு ஸ்டீபன். பதிவிற்கேற்ற படங்களும் அழகு.
வீட்டையெல்லாம் இடித்துவிட்டு வயல்காடாக்கும் காலம் விரைவில் வரத்தான் போகிறது.
அப்புறம் மச்சி , வரும்போது நம்ம மேட்டர் எல்லாம் மறக்காம வாங்கிட்டு வா
(இந்த டைலாக் இல்லாத ஒரு ISD call , ரொம்ப நல்ல பசங்களா இருப்பாக போல )
நல்ல பார்வையிங்க தம்பி.
மனதில் உள்ள ஆதங்கம் தான்... அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
ஸ்டீபன் மிக அருமையாக பதிந்துள்ளீர்கள். பச்சைபசேல் மிக அற்புதம்.
தற்போது உடனே ஓப்பனாகுது. இனி வீடியோ லிங் மட்டும் கொடுத்தா போதும்.
http://niroodai.blogspot.com/
@ சைவகொத்துப்பரோட்டா said...
//ஆதங்கத்தை, அற்புதமாக
பதிவு செய்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.//
சரியாக சொன்னீர்கள்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@நாய்க்குட்டி மனசு said...
//மாத்தி யோசி ! மாத்தி யோசி !//
இது தான் மாத்தி யோசிக்கிறதா... வாங்க மேடம் கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி
@நாஞ்சில் பிரதாப் said...
//சொன்னவிதம் அருமை ஸ்டீபன்... எல்லா இடத்துலயும் மக்கள் இப்ப பேன்ட் சட்டைலேருந்து கோர்ட் சூட்டுக்கு மாறிட்டாங்க... எங்கப்போய் முடியப்போவுதோ???//
எங்க தல போய் முடியும்... சீக்கிரம் கோட்டு, சூட்டு மாட்டிட்டு வெளி நாடுகளில் சாப்பாட்டிற்கு பிச்சை எடுப்போம்.வருகைக்கு ரெம்ப நன்றி தல
@தமிழ் உதயம் said...
//நிதர்சனமான உண்மை.//
ஆமா சார்...வருகைக்கு ரெம்ப நன்றி
@Chitra said...
//அந்த ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகின்றது.
..... மாற்றங்கள் நல்லதா கெட்டதா? :-o//
உங்களுக்கும் தெரிந்துவிட்டாதா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா மேடம்
@கண்ணா.. said...
//அழகாக பதிந்து விட்டீர்கள்..
ஆனா எங்கூர்ல நான் சின்னபுள்ளயா இருந்து பாத்ததே இப்ப பயங்கரமா மாறியிருக்கு... இன்னும் என்னெல்லாம் நடக்குமோ..?!//
ஆமா தல.. அதை நினைத்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது,, வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி
@Jaleela said...
//நல்ல பகிர்வு, எங்க ஒட்டு மொத்த பேரும் இது போல் யோசித்தாஅல் தான் ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கலாம்//
வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி மேடம்..
@அறிவு GV said...
//மக்கா, அடிக்கிற வெய்யில்ல எல்லாரும் கோட்டு, சூட்டு எல்லாத்தையும் கலட்டி எறிஞ்சுட்டு அம்மணமா அலையிற நாள் வரும். அப்போ யோசிப்பானுங்க கோவணம் கட்டுறது எப்புடின்னு.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நாடோடி. முதல் போட்டோ மிக அருமை. நேர்ல பாக்க எவ்ளோ அழகா இருக்கும்...! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. புதுப் பொண்டாட்டிக்காக பெத்த அம்மாவ கொன்னுட்டாங்களே...! :( எனக்கு இப்பவே கோவணம் கட்டணும்னு ஆசை வந்துடுச்சு.//
இப்படியே போனால் மொத்த பேரும் நீங்கள் சொன்னது போல் அம்மணமாக தான் அலைய வேண்டும்.. வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி அறிவு ஜீவி
@அஹமது இர்ஷாத் said...
சரியான பதிவு.
வாங்க... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி
@ஜெரி ஈசானந்தன். said...
//சொக்காவுக்கு ஆசைப்பட்டு,இப்ப கக்கா போறதுக்கு கூட இடமில்லை,விளைநிலங்கள் எல்லாம் பிளாட் போடப்பட்டு,கான்க்ரீட் ஜன்கிள் ஆகி வருகிறது.எல்லாம் காலத்தின் கோலம்.///
ஆமா சார்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி ஜெரி சார்
@துபாய் ராஜா said...
//இயல்பான எழுத்துநடையில் அருமையான பதிவு ஸ்டீபன். பதிவிற்கேற்ற படங்களும் அழகு.
வீட்டையெல்லாம் இடித்துவிட்டு வயல்காடாக்கும் காலம் விரைவில் வரத்தான் போகிறது.//
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தான் நானும் நினைக்கிறேன்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி
@மங்குனி அமைச்சர் said...
//அப்புறம் மச்சி , வரும்போது நம்ம மேட்டர் எல்லாம் மறக்காம வாங்கிட்டு வா
(இந்த டைலாக் இல்லாத ஒரு ISD call , ரொம்ப நல்ல பசங்களா இருப்பாக போல )//
வாங்க.. வாங்க அமைச்சரே... மேற்படி சமாச்சாரம் இல்லாமல் இந்தியாவிற்குள் காலெடி எடுத்து வைக்க முடியாது.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி நன்பரே
@தாராபுரத்தான் said...
//நல்ல பார்வையிங்க தம்பி.//
வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி சார்
@thalaivan said...
//வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்//
கண்டிப்பாக முயற்ச்சி செய்கிறேன்.. வந்து தகவல் சொன்னதிற்கு நன்றி
@ரோஸ்விக் said...
//மனதில் உள்ள ஆதங்கம் தான்... அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.//
கருத்துக்கு ரெம்ப நன்றி நண்பா!
@அன்புடன் மலிக்கா said...
ஸ்டீபன் மிக அருமையாக பதிந்துள்ளீர்கள். பச்சைபசேல் மிக அற்புதம்.
தற்போது உடனே ஓப்பனாகுது. இனி வீடியோ லிங் மட்டும் கொடுத்தா போதும்.
http://niroodai.blogspot.com/
அப்படியா... ரெம்ப சந்தோசம்... இனிமேல் அதுபோலவே செய்து விடுகிறேன்.. வந்து பதில் சொன்னதிற்கு ரெம்ப நன்றி மேடம்..
சாரி ஸ்டீபன் பஸ் கொஞ்சம் லேட்.
ஆதங்கத்தை பதிவு செய்த விதம் அற்புதம். மிக அருமையான நடை படிப்பவரை ஒன்றச்செய்து விடுகிறது.
என்ன செய்ய பிற்காலத்துல சாப்பாட்டுக்கு என்ன செய்ய. பணத்தை திங்கலாம்ன்னு பார்த்தா அதுதானே கழுதையின் உணவாக இருக்கு.
திருநெல்வேலி பைபாஸ் ரோடு வந்ததால, அங்க இருந்த வயல்கள் எல்லாம் பிளாட்டா ஆகி, இப்ப நகரமாகிவிட்டது!! :-(
ஆதங்கம் புரிகிறது ஸ்டீபன் - என்ன செய்வது - காலங்கள் மாறுகின்றன - காட்சிகளும் மாறுகின்றன - இயற்கை அழிக்கப் படுகிறது - காக்க்ப் பட வேண்டிய இயற்கை இருந்த இடம் தெரியாமல் போகிறது. விளை நிலங்கள் அடுக்கு மாடிக் கட்டடங்களாக மாறுகின்றன. அசோகர் நட்ட மரங்களெல்லாம் வெட்டிச் சாய்க்கப்பட்டு - நவீன வாழும் இடங்களாக மாறி விட்டன். இன்னும் சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ ?? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment