Monday, May 2, 2011

க‌வ‌லை உன‌க்கு..




மழைப் பொழிந்தாலும்-கவலை உனக்கு
அறுவடை செய்ய வேண்டுமேயென்று!!!

மழைப் பொய்த்தாலும்-கவலை உனக்கு
நாற்றுநடவு செய்ய வேண்டுமேயென்று!!!

அதிகப்படியாக விளைந்தாலும்-கவலை உனக்கு
தானியங்களின் விலை வீழுமேயென்று!!!

குறைவாக விளைந்தாலும்-கவலை உனக்கு
வட்டிக்கடன் வீதம் ஏறுமேயென்று!!!

திருவிழாக்கள் வந்தாலும்-கவலை உனக்கு
புத்தாடை வாங்க வேண்டுமேயென்று!!!

மகன் நன்றாக படித்தாலும்-கவலை உனக்கு
கல்விக் கட்டணம் கட்ட வேண்டுமேயென்று!!!

மகள் பெரியவள் ஆனாலும்-கவலை உனக்கு
விளைநிலம் விலை போகுமோயென்று!!!

.

.
.

25 comments:

தமிழ் உதயம் said...

விவசாயிக்கு திரும்பின திசையெங்கும் கடன் மட்டுமல்ல... கவலையும் கூட. கவிதை நன்றாக சொல்லப்பட்டிருந்தது.

Asiya Omar said...

ஆமாம் அவர்கள் கவலை எல்லோருக்கும் வெளிச்சம்,நல்ல கவிதை..

Anonymous said...

வாழ்க்கையில் அதிக நேரம் கவலையிலே கழித்துவிடுகிறான் விவசாயி, அருமையான கவிதை பாஸ்

r.v.saravanan said...

கவலை கவிதை அருமை

Jaleela Kamal said...

kavithai arumai

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஊழல் செய்வது எப்படியென - கவலை எனக்கு
ஊர்மெச்ச வாழணும், ஆட்சிசெய்யணுமேயென்று..

இலங்கையோடு நேசம்வைக்க - கவலை எனக்கு
இனமழியுதேன்னு அழுபவர் வாயடைக்கணுமேயென்று..

உங்க கவலை உங்களுக்கு சாமி என் கவலை எனக்கு..சாமி

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல எளிமையா புரியும்படி கவிதை கவலைகளை பட்டியலிட்டு..

எம் அப்துல் காதர் said...

ஜெயித்து வந்தால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமே என்று கவலை அரசாங்கத்துக்கு!

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
கவலைப் பட ஏதுமில்லையே என
கவலைப் படுபவர்களை கூட
அன்றாட வாழ்வில் அதிகம் பேரை
நாம் சந்திக்கிறோம்
அதை மிக அழகாகச் சொல்லிப் போகிறது
உங்கள் பதிவு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

விவசாயி நிம்மதியா இருக்கும் காலம்தான் எப்போ :-(

சிநேகிதன் அக்பர் said...

அருமையான கவிதை ஸ்டீபன்.

கூடிய விரைவில் பாருங்க. விவசாயத்துக்கு டிமாண்ட் ஏற்படத்தான் போகுது. ஆனால் என்ன அதன் பலனை இது போன்ற கஷ்டப்படும் விவசாயிகள் அனுபவிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

பல மல்டி நேஷனல் கம்பெனிகள் இத்தொழில் இறங்கி அவர்கள் வைத்ததுதான் விலை என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உலகமயமாக்கலும் , மோசமான அரசாங்கமும் இருக்கும் வரை மக்களுக்கு ஏது நிம்மதி?

Ahamed irshad said...

நாட்டின் முதுகெலும்பு ஒடிஞ்சி ப‌ல‌ வ‌ருஷ‌மாச்சி ஸ்டீப‌ன்.. :(

அன்புடன் மலிக்கா said...

நெசவாளி. விவசாயி.தொழிலாளி என அவர்களின் கஷ்டம் காலா காலத்திற்க்கு தொடர்கிறது. கவலையை தந்த கவிதை மிக அருமை..

Unknown said...

விவசாயியின் வாழ்வை அப்படியே கூறும் கவிதை!!

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

DREAMER said...

நாடோடி நண்பேர, விவசாயிகளின் உணர்வுகளை நினைவுகூறும் அருமையான வரிகள். விவசாய பிரச்சினைகளின் பிரதான பட்டியல்... அருமை..!

-
DREAMER

அம்பாளடியாள் said...

ஆகா அருமையான கவிதை.
அதிக நேரம் தண்ணீரோடும்
கண்ணீரோடும் வாழ்பவன்
விவசாயி என்பதை மிக
அழகாகச் சொன்னீர்கள்
வாழ்த்துக்கள்.............

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனைப் பட வைக்கும் கவிதை...
இந்த நிலை என்று மாறுமோ....?

Unknown said...

விவசாயி கவலை நம் நாட்டிற்கு அவமானம்... அவர்களின் கவலைகள் களையப்பட வேண்டும்... உங்களின் பதிவு அருமை.. என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

Unknown said...

விவசாயி கவலை நம் நாட்டிற்கு அவமானம்... அவர்களின் கவலைகள் களையப்பட வேண்டும்... உங்களின் பதிவு அருமை.. என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

cheena (சீனா) said...

கவலை கவலை - எல்லோருக்கும் கவலை - எதிலும் கவலை - என்ன செய்வது .... கவலை இன்றி வாழ்க்கை இல்லை - கவலை இல்லையே எனக் கவலைப் படலாமா ? கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

விவசாயிகளின் கவலைகளை , கவிதையாக கூறியுள்ளீர்கள் . நன்றி

அருணா செல்வம் said...

கருத்தான கவிதை.

அருமைங்க நட்பே.

”தளிர் சுரேஷ்” said...

இன்றைய விவசாயியை படம் பிடித்த கவிதை! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

Anonymous said...

ஆம் , விவசாயிகளின் நிலைமை மிகப் பரிதாபத்திற்குரியது.
அவர்களுக்கு இரு[ நால் ]புறமும் இடி என்பதை மிக அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே !

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

Related Posts with Thumbnails