நம்ம ஆளுங்களுக்கு வீட்ல பொண்ணுப் பார்க்க ஆரம்சிட்டாங்க என்பதை அவர்கள் நடந்து கொள்ளும் விதங்களை வைத்தே சொல்லிட முடியும்.
1) முதல் கவலையே மயிரைப் பற்றிய தாக இருக்கும். ஊர்ல உள்ள ஆத்துத் தண்ணியில குளிக்கும் போது கருக் கருனு அடர்த்தியா இருந்துச்சு, இப்ப இங்க வந்து இந்த உப்பு தண்ணியில குளிச்சுச் செம்பட்டை பாய்ஞ்சி மண்டையே காலி ஆகிடுச்சுனு அறையில் இருக்கும் நண்பனிடம் புலம்ப ஆரம்பிப்பார்கள். இந்தப் புலம்பலை கேட்டு கிட்டு இருக்குறவனோ "சிக்கினான் அடிமை ஒருத்தனு" மயிரு வளரனமுனு சொல்லிட்டு வர்ற விளம்பரம் அத்தனையும் இவனை வச்சே டெஸ்ட் பார்த்திருவான். இதுவும் ஒவ்வொருத்தரின் பண வசதிகேற்ப எண்ணையில் ஆரம்பித்து ஹேர் பிளாண்டிங் வரை போகும்.
2) அது வரையிலும் கண்ணாடியின் முன்பு போய் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவன், இப்போது கண்ணாடியை சிறுது கீழே இறக்கி தொப்பையைப் பார்த்து "ஓ மை காட்" என்பான். அன் லிமிட்டடு மீல்ஸ் ரெண்டு சாப்பிடும் போது தெரியாத தொப்பை இப்போது, நண்பன் டீ குடிக்கலாம் என்று கூப்பிட்டால் கூட மச்சி "கிரீன் டீ" சொல்லு என்பான். இணையத்தில் படித்தாலும் சரி, புத்தகங்கள் வாங்கினாலும் சரி, தொப்பையைக் குறைக்கும் வழிகளைத் தான் அவன் கண்கள் தேடும். தங்கியிருக்கும் அறையில் பெல்லி ரெடிசுர் பெல்டில் இருந்து ஆர்பிட் எலைட் வரை அவரவர் வசதிகேற்ப இருக்கும்.
3) உடம்பை பற்றிய கவலையெல்லாம் வந்துவிடும். ஒன்பது மணி ஆபிசுக்கு எட்டரைக்கு அலாரம் வச்சு, எட்டே முக்காலுக்கு எழுந்து குளிச்சும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஒன்பது மணிக்குப் பைக்கை ஸ்டார்ட் செய்கிறவன், விடியற்காலை ஆறு மணிக்கே அலாரம் வச்சி எழுந்து டிராக் சூட்டை மாட்டுவான், அப்படியே பக்கத்தில் தூங்கிறவனையும் பிடிச்சு இழுப்பான் "வாடா வாக்கிங் போகலாம்" என்று. ஆளு பாக்குறதுக்குப் பவர் ஸ்டார் போல இருந்துட்டு, வாரணம் ஆயிரம் சூர்யா உடம்புக்கு ஆசை படுவாங்க. ஆபிஸ் முடிஞ்சு படம் பாக்கலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி ஜிம்முக்கு போகனும் என்று நமக்குப் பல்பு கொடுப்பார்கள்.
4) பண்டிகைக்கும், திருவிழாவிற்கும் எடுத்த நான்கு டிரஸ்ஸை வருசம் புள்ளா போட்டுகிட்டு இருப்பவன் தீடிரென மாசத்துக்கு நான்கு டிரஸ் எடுப்பான். பண்டிகைக்கு எந்தக் கடையில தள்ளுப்படி அதிகமா போட்டிருக்குனு பார்த்து பார்த்து எடுத்தவன், பிரண்டட் கடையா தேடிப் பார்த்து தான் இப்ப டிரஸ் எடுப்பான். சும்மா இல்லீங்க இன்னர் வேர் கூடப் பிரண்டட் பெயர் போட்டுருந்தால் தான் செலக்ட் பண்ணுவான்.
5) நாமுளும் அவன் கூட நாலு வருசமா ஒன்னா ரூம்ல தான் இருந்திருப்போம், எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா என்பது அந்தப் பாத்ரூம் கண்ணாடிக்கு தான் வெளிச்சம். ஆனா இப்ப புது இருநூறு கிராம் அடவான்ஸ்ட் சென்சோடைன் டூத் பேஸ்ட்டும், சென்சிட்டிவ் டூத் பிரஷும் ஹால்ல இருக்கிற கண்ணாடி முன்னாடி இருக்கும். காலையிலேயும் மாலையிலேயும் டங் கிளீனர் வச்சு இவன் போடுற சவுண்டை பார்த்து நம்ம நாக்கை, நாமளே பிடிங்கி வெளியே போட்டுவிடலாம் போல இருக்கும்.
6) எப்பவுமே சவரம் செய்யாத அரைத் தாடியுடம் அலையும் நம்ம ஆளு கிட்ட ஏன்டா சவரம் செய்யலைனு கேட்ட "டைம் இல்ல மச்சி" என்பான். இப்ப எல்லாம் வீட்லேயே ட்ரிபிள் பிளேடு ரேசர் வைச்சு தினமும் கண்ணாடி முன்பு ஒரு மணி நேரம் நிற்பான். வாரத்துக்கு ஒரு முறை சலூனுக்கும் கிளம்பிடுவான். ஸ்டீம் பாத், ஹேர் கலரிங், ஆயில் மசாஜ், பேசியல் என்று சொல்லி பீதியை கிளப்புவான்.
7) நான்கு வருடமா அதே இடத்தில் தான் இருந்திருப்பான். ஹோட்டல், தியேட்டர் தவிர எங்கேயுமே சுற்றாத ஆளு புதுசா அந்த ஏரியாவில் இருக்கும் கோவிலை தேடுவான். வெள்ளிக்கிழமை ஆகிட்டா காலையிலேயே குளிச்சுட்டு விபூதியை பூசிடுவான். பக்கோடா சாப்பிடலாம் வாடானு கூப்பிட்டா கூட, மச்சி சிக்கன் பக்கோடாவா சொல்லுனு சொல்லுறவன், இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்.
8) தியேட்டரில் படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சிகள் வந்தால் வெளியே தம் அடிக்கவோ, அல்லது மொபைல் போனில் கேம் விளையாடவோ செய்வான், இன்னும் ஏன், லேப்டாப்புல படம் பார்த்தால் கூடப் பாடல் காட்சியை மட்டும் பாஸ்ட் பார்வர்டு செய்து இரண்டரை மணி நேரப் படத்தை இரண்டு மணி நேரத்தில் பார்த்து முடிப்பான். இப்ப என்னடானா ஹெட் போனை தலையில் மாட்டிவிட்டு மெலோடிஸ் பாட்டா கேட்டுட்டு இருப்பான். ரூம்க்கு வந்தாலும் சன் மியூசிக்கோ, இசை அருவியோ தான் ஓடும். நாம ரிமோட்டை வாங்கி வேற சேனல் மாத்தினால் "ஞானசூனியம்" என்று தலையில் அடிப்பான்.
9) பேண்ட், சர்ட், செருப்புனு சுத்திட்டு இருந்த ஆளு, இப்ப ஜீன்ஸ், டீ சர்ட், சிலிம் பிட், கேன்வாஸ் என்று கலக்குவான். தண்ணியையும், அயன் பாக்ஸையும் பார்க்காத ஜீன்ஸ் பேண்ட் இப்ப லாண்டரிக்கும், வாசிங் மிசினுக்குப் போகும்.
10) லீவு நாள்ல அழுக்கான துணியைத் துவைக்காமல் குப்புற அடிச்சு தூங்கிட்டு, திங்கட்கிழமை காலையில அழுக்கான சட்டையைத் துக்கிட்டு, ஸ்பிரே அடிக்கத் தேடுற ஆளு, இப்ப எல்லாம் குளிச்சு முடிஞ்சு பாடி ஸ்பிரே போடாமல் இன்னர் பனியன் போட மாட்டன். வெளியில் நடந்து போகும் போது, வழியில் நிற்கும் ஒரு டூவீலரை கூட விட மாட்டான். பக்கத்தில் போய்ப் பாக்கெட்ல இருக்குற சீப்பை எடுத்து தலையைச் சீவி விட்டு, "மச்சி முடி ரெம்பக் கொட்டுதுடா, எதாவது பண்ணனும்" என்பான்.

அப்படியே இதையும் பார்த்துட்டு போங்க.. இணையத்தில் சுட்டது தான்..
.
13 comments:
கிணற்றில் விழப் போகிறோம்னு தெரிஞ்சா,ஏன் இவ்வளவு 'பில்ட்அப்'பும் பண்ணிக்க போறாங்க !
த ம +1
// இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்//
மெக்டொனால்ட், செஸ்டர்ஸ் கிரில் இங்கேல்லாம் கூப்பிட்டுப் பாருங்களேன், வராறான்னு!
//எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா //
அந்தக் கண்ணாடிக்கே உண்மை என்னன்னு தெரியாதாமே?
இவ்வளவு சிறப்பான நண்பர்களாய் இருக்காங்களே உங்கள் அன்பு நண்பர்கள்!?
2013 முழுதும் எங்கே போனீங்க, ஆளே காணவில்லை?
@Bagawanjee KA said...
//கிணற்றில் விழப் போகிறோம்னு தெரிஞ்சா,ஏன் இவ்வளவு 'பில்ட்அப்'பும் பண்ணிக்க போறாங்க !
த ம +1//
வாங்க பகவான் ஜி,
அதென்னவோ உண்மைதான்.. :) கருத்துரைக்கும், வருகைக்கும் நன்றி.
@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
// இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்//
மெக்டொனால்ட், செஸ்டர்ஸ் கிரில் இங்கேல்லாம் கூப்பிட்டுப் பாருங்களேன், வராறான்னு!///
என்ன நிஜாம் சார், எப்படி இருக்கீங்க..
அங்க மட்டும் என்ன வெங்காய போண்டாவா போடுறாங்க.. :)
@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா //
அந்தக் கண்ணாடிக்கே உண்மை என்னன்னு தெரியாதாமே?///
அப்ப ஒண்ணும் பண்ண முடியாது.. :)
அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
இவ்வளவு சிறப்பான நண்பர்களாய் இருக்காங்களே உங்கள் அன்பு நண்பர்கள்!?///
அதெப்படி "உங்களுடைய" என்று ஒருமையில சொல்லிட்டு, பெரியவங்க சொன்னது போல எப்போதும் பன்மையா சொல்லி பழகணும், "நாம்முடைய" எவ்வளவு நல்லா இருக்கு.. :)
@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
2013 முழுதும் எங்கே போனீங்க, ஆளே காணவில்லை?//
என்ன எப்பவும் போல பல ஆணிகள் தான், ஒவ்வொன்னா புடுங்கணும் தானே.. :)
//என்ன நிஜாம் சார், எப்படி இருக்கீங்க..//
நல்லாயிருக்கேங்க... ஸ்டீபன்!
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சுங்க, ஏனுங்க? வாங்க... நிஜாம் பக்கம்!
நக்கல் ல ஊற வெச்சு, நையாண்டி ல தொவைச்சு ,கிண்டல் ல அலசி,கேலியில காயபோட்ட மாதிரி ஒரு பதிவு. இம்புட்டு நாளா ஏங்கண்ணுல எப்பிடி சிக்காம போனேரு?. சரி பொண்ணு கெடச்சுட்டா?
நல்ல அனுபவம் , நல்ல ரசனை ரசித்தேன்.எப்படியெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்கள் ,அருமையான கேலிச்சித்திரம் :)
@சேக்காளி said...
//நக்கல் ல ஊற வெச்சு, நையாண்டி ல தொவைச்சு ,கிண்டல் ல அலசி,கேலியில காயபோட்ட மாதிரி ஒரு பதிவு. இம்புட்டு நாளா ஏங்கண்ணுல எப்பிடி சிக்காம போனேரு?. சரி பொண்ணு கெடச்சுட்டா?//
வாங்க சேக்காளி நண்பரே,
கொஞ்ச காலமா எழுதவில்லை, அதனால் தான் உம்ம கண்ணுல மட்டல,, இவ்வளவு பில்டப்பு பண்ணிய பிறகும் கிடைக்கலைனா எப்படி?>.. :)
வருகைக்கும் கருத்துரைக்கும் ரெம்ப நன்றி.
@ Srini Vasan said...
//நல்ல அனுபவம் , நல்ல ரசனை ரசித்தேன்.எப்படியெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்கள் ,அருமையான கேலிச்சித்திரம் :)//
வாங்க சீனிவாசன் சார்,
ரசித்து படித்து விட்டு கருத்துரை இட்டமைக்கு ரெம்ப நன்றி.
என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா //
Before marriage be aware about FALSE DOWRY CASE (498A)...
MORE DETAILS,
http://ipc498a-victim.blogspot.com

Post a Comment