Wednesday, February 3, 2010

வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..

வாகனங்களின் உதிரிப்பாகங்கள்(Spare Parts) பழுதாகி விட்டால் அதற்காக தனியாக அமைக்கப்பட்ட நம்பகமான கடைகளில்(Authorized Dealer) வாங்காமல், விலைக் குறைவாக கிடைக்கிறது என்பதால் சில்லறை வியாபாரிகளிடம் வாங்குவது சரியா?. என்பதை எனது பார்வையில் நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.




இப்போது பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இருச் சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அவற்றின் உதிரிப்பாகங்கள் அனைத்தும் அவர்களால் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. பெரும்பாலும் ஒப்பந்ததாரர்கள்(Sub Contract) மூலம் சிறிய தொழிற்கூடங்களில்(Small Scale Industries-SSI) உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் உதிரிப்பாகங்கள் அனைத்தும் பெரிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப் பட்டு அங்கு ஒருங்கிணைக்கப்(Assembly) படுகிறது. இப்போது பெரும்பாலான பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்திப் பிரிவுகள்(Manufacturing unit) மூடப்பட்டு விட்டன. ஒருங்கிணைக்கும் பிரிவுகள்(Assembly) மட்டுமே இயங்குகின்றன. அதற்க்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் முதன்மையாய் இருப்பது தொழிலாளர் பிரச்சனை தான். இதைப் பற்றி நான் இந்த பதிவில் எழுதவில்லை. வரும் பதிவுகளில் எழுதுகிறேன். ஒரு சின்ன உதாரணம். அசோக் லேலண்ட்(Ashok Leyland) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் லாரியில் உள்ள கியர் பாக்ஸ்(Gear Box) பாகத்தில் வரும் ஒரு சிறிய உதிரிப்பாகம்(Spare Parts) லிவர்(Gear Change Lever). இந்த லிவரானது கிண்டியில் உள்ள ஒரு தொழிற்கூடத்தில் மெஷினிங்(Machining) செய்யப்பட்டு, ஈக்காட்டுதாங்கலில் கலைமகள் தெருவில் மூன்றாவது குறுக்குச் சந்தில் உள்ள தொழிற்கூடத்தில் ட்ரில்லிங்(Drilling) செய்யப்பட்டு, அம்பத்தூரில் வாவின் பக்கத்தில் உள்ள தொழிற்கூடத்தில் கிரைண்டிங்(Grinding) செய்யப்பட்டு, பெருங்குடியில் உள்ள ஒரு தொழிற்கூடம் மூலம் ஹீட் ட்ரீட்மென்ட்(Heat Treatment) செய்யப்பட்டு, கந்தன்சாவடியில் உள்ள மின்மூலாம் பூசும் தொழிற்கூடத்தில் கோட்டிங்(Electro Plating) செய்யப்பட்டு பின்பு அசோக் லேலண்ட் நிறுவத்தை அடைகிறது. அங்கு அந்த லிவரானது கியர் பாக்ஸில் ஒருங்கிணைக்கப்படுகிறது.(Assembly). இப்பவே கண்ணைக் கட்டுதே.... சோ..



இவ்வாறு சிறிய தொழிற்கூடங்களில்(SSI Unit) தாயரிக்கப்படும் உதிரிப்பாகங்களின் தரமானது அந்த தொழிற்கூடத்தில் உள்ள தர ஆய்வாளர்(Quality Inspector) ஒருவரால் ஆய்வு செய்யப்ப‌ட்டு பின்பு எந்த பெரிய நிறுவனம் மூலம் இந்த சிறிய தொழிற்கூடங்களுக்கு வேலை செய்ய உதிரிப்பாகங்கள் கொடுக்கப் படுகின்றதோ அந்த பெரிய நிறுவன‌த்தில் உள்ள தர கட்டுப்பாட்டாளர்(Quality Controller) ஒருவராலும் மீண்டும் அந்த உதிரிப்பாகத்தின் தரம் உறுதிப்படுத்த பட்டப் பின்பு வாகனங்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது(Assembly). இவ்வாறு உதிரிப்பாகங்களின் தரமான‌து இரண்டு இடங்களில் பிரிக்கப் படுகிறது. உதிரிப்பாகத்தின் அளவுகள்(Size) அனைத்தும் வரைப்படத்தாளில்(Drawing) உள்ள அளவுகள்(Size) மற்றும் விபரங்கள்(Specification) படி ஆய்வு(Check) செய்யப்படுகின்றது. வரைப்படத்தாளில் உள்ள விபரங்கள்(Specification) படி உதிரிப்பாகம் தாயரிக்கப் படவில்லையென்றால் அவை ஒதுக்கி(Rejection) வைக்கப்ப்டுகின்றன.



இந்த உதிரிப்பாகம் எதனால் ஒதுக்கப் படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். ஒரு உதிரிப்பாகத்தில் வரைப்படத்தின்(Drawing) படி 9mm துளை(Drill) போட்டு அதில் 10mm டேப்(Tap) செய்ய வேண்டும். ஆனால் தவறுதலாக 9.5mm துளை(Drill) போடப்பட்டு 10mm டேப்(Tap) செய்யப் படுகிறது. 9mm துளைக்கு பதில் 9.5mm துளை போட்டதனால் இந்த உதிரிப் பாகம் ஒதுக்கப்படுகிறது. இதை மேலோட்டமாக பார்த்தால் பெரிய தவறாக தோன்றவில்லை. ஆனால் 9mm துளையில் போடப்படும் டேப்பின் தெரட் பிட்ச்(Thread Pitch) அளவு 1mm இருக்கும். 9.5mm துளையில் போடப்படும் டேப்பின் தெரட் பிட்ச்(Thread Pitch) அளவு 0.5mm தான் இருக்கும். எனவே 1mm தெரட் பிட்ச் கொண்டத் துளையில் மாட்டப்படும் போல்ட்(Bolt) ஆனது அதிக முறுக்குப் பலம்(High Tensile Strength) கொண்டதாகவும். 0.5mm தெரட் பிட்ச் கொண்டத் துளையில் மாட்டப்படும் போல்ட் ஆனது குறைந்த முறுக்குப் பலம்(Low Tensile Strength) கொண்டதாக இருக்கும். 0.5mm தெரட் பிட்ச் துளை கொண்ட உதிரிப்பாகத்தை வாகனத்தில் மாட்டினால் ஐந்து வருடங்கள் உழைக்க வேண்டிய பாகம் இரண்டு வருடத்தில் புடுங்கி விட்டு தனியே வருகிறது. இவ்வாறு தரம்(Quality Check) பிரிக்கப்படும் போது பல காரணங்களினால் உதிரிப்பாகங்கள் தர ஆய்வாளரால்(Quality Inspector) ஒதுக்கி(Rejection) வைக்கப் படுகின்றன.



இந்த சிறிய தொழிற்கூடங்களில் தர ஆய்வாளரால் ஒதுக்க பட்ட உதிரிப்பாகங்களை வாங்குவதற்கு என்று சில வட நாட்டு வியாபாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் இந்த ஒதுக்கப் பட்ட உதிரிப்பாகங்களை மிக குறைந்த விலையில் தான் வாங்குவார்கள். அந்த தொழிற்கூடத்தைப் பொறுத்த வரையில் அந்த உதிரிப்பாகங்கள் கனிம கழிவில்(Scrap Bin) போட வேண்டியவை. எனவே அவர்களும் கிடைத்தது வரை லாபம் என்று விற்று விடுகிறார்கள். இவ்வாறு வாங்கிய உதிரிப்பாகங்களை எடுத்து சென்று அதை அழகாக பாலிஸ்(Polish) செய்து சிறிது ஆயில், கிரீஸ் போட்டு ஒரிஜினல் உதிரிப்பாகத்தின் பேக்கிங்கை விட அழகாக பேக் செய்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடம் நல்ல விலைக்கு விற்று விடுகிறர்கள். இவ்வாறு சிறிய தொழிற்கூடங்களின் ஒதுக்கப் பட்ட உதிரிப்பாகங்கள் அனைத்தும் சந்தையில் வந்து விடுகின்றன. இதில் இருக்கும் குறைபாடுகள் எதுவும் நமது கண்களுக்கு புலப்படுவது இல்லை. எனவே நாமும் விலை குறைவாக கிடைக்கின்றது என்று வங்கி நமது வாகனங்களில் மாட்டிவிடுகிறோம்.



இவ்வாறு வாங்கி மாட்டுவதால் அந்த உதிரிப்பாகம் மட்டும் விரைவில் பழுதடைவதோடு மட்டுமல்லாது அதனுடன் தொடர்புடைய சில பாகத்தையும் பழுதடைய செய்கின்றது. நல்லா தான் போயிட்டு இருந்து தீடிரென பிரேக் பிடிக்கவில்லை என்று சொல்வதை கேட்டு இருப்போம். இவ்வாறு தீடிர் தீடிரென ஏற்படும் பிரச்சனைகளுக்கு உத்திரவாதம்(Guarantee) இல்லாத உதிரிப்பாகங்களை மாட்டுவதால் தான். நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்யும் போது வழியில் பார்த்தால் தெரியும் பல வாகனங்கள் புளிய மரத்தை சாய விடாமல் தாங்கிக் கொண்டு நிற்பதை...அந்நியன் படத்தில் கூட அம்பி விக்ரம் தனது இரு சக்கர வாகனத்தில் புதிதாக வாங்கி மாட்டிய‌ பிரேக் வயர் அறுந்து விட்டதால் கடைக் காரரிடம் சண்டை போடுவது போல் ஒரு காட்சி அமைத்து இருப்பார்கள்.



இந்த குறைபாடு உள்ள உதிரிப்பாகத்தை விற்பதில் அதிக அளவு லாபம் சம்பாதிப்பது தொழிற்கூடத்திற்கும் லோக்கல் வியாபாரிக்கும் இடையில் உள்ள வட நாட்டு தரகர்கள் தான். உதாரணமாக ஒரிஜினல் உதிரிப்பாகத்தின் விலை 900 ரூபாய் என்றால் லோக்கல் வியாபாரி குறைபாடு உள்ள அதே உதிரிப்பாகத்தை 800 ரூபாய்க்கு விற்பனை செய்வான். அவன் இடைத்தரகரிடம் இருந்து வங்கிய விலை 700 ரூபாயாக இருக்கும். ஆனால் அந்த இடைத்தரகர் தொழிற்கூடத்தில் இருந்து வாங்கிய விலை 200 ரூபாயாக தான் இருக்கும். இது தான் கொடுமை...



காசை சேமிக்கிறேன் என்று தரம் இல்லாத உதிரிப்பாகங்களை வாங்கி மாட்டினால் பின்பு பெரிய அளவில் காசை செலவு செய்ய வேண்டி வரும். இது உயிருடன் விளையாடும் விளையாட்டு என்பதையும் மறந்து விட வேண்டாம். இந்த தரம் இல்லாத உதிரிப்பாகங்கள் விற்பனையில் கொடிக்கட்டிப் பறக்கும் இரண்டு இடங்களை சென்னையில் கூறலாம். அவைகளில் ஒன்று சென்ட்ரல் பக்கத்தில் உள்ள மோர் மார்கெட் மற்றொன்று புதுப்பேட்டை. எனவே முடிந்த வரை உங்களின் வாகனங்களில் ஏதேனும் உதிரிப்பாகங்கள் பழுதடைந்தால் அந்த வாகனத்தின் ஒரிஜினல் முகவர்களிடம்(Original Authorized Dealer) இருந்து வாங்குவது நல்லது...



நான் மேலே சொல்லியிருப்பது வாகங்களின் உதிரிப்பாகங்களுக்கு மட்டும் அல்ல. எல்லா வித தொழில் இயந்திரங்களுக்கும்(Equipments) பொருந்தும்.

12 comments:

தமிழ் உதயம் said...

நூற்றுக்கு நூறு உண்மை உங்கள் கருத்து. நுகர்வோருக்கு தான் தேவை விழிப்புணர்வு.

அண்ணாமலையான் said...

wow great post... congrats

Anonymous said...

நம் உறவுகளுக்கு அடுத்து நம்முடன் நெருக்கமாய் இருப்பது, நாம் பயன்படுத்தும் வாகனங்கள்தான். எனவே அவற்றிற்கு Original Spare Parts பயன்படுத்துவதே நல்லது. அப்போதுதான் மழை, வெயில் மற்றும் எந்த அவசரக்காலத்திலும் அவற்றை இயல்பாக பயன்படுத்த முடியும்.
- நவாப்

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப அருமையான பகிர்வு ஸ்டீபன்.

நாடோடி said...

@தமிழ் உதயம்

உண்மை தான்..கருத்துக்கு மிக்க நன்றி....


@அண்ணாமலையான்

வாழ்த்துக்கு ரெம்ப நன்றி..


@நவாப்

உங்கள் வருகைக்கு நன்றி...



@அக்பர்

வாங்க நேரம் கிடைக்கும் போது இந்த பக்கமும் வந்து போங்க..

gulf-tamilan said...

நல்லாயிருக்கு!!!எண்ணூர் பக்கம் வந்து இருக்கிறீர்கள?

Prathap Kumar S. said...

சூப்பர் தல... உபயோகமான பதிவு,,, நீங்க இன்ஜினியர்தான் நிருப்பிச்சுட்டீங்க.

அப்ப சுருக்கமாச்சொன்னா சேட்டுக்கடை பொருளை வாங்கதீங்கடான்னு சொல்றீங்க... ரைடு பகுத் அச்சா.. இந்த பதிவை மட்டும் ஏதாச்சும் சேட்டு படிச்சான் நிம்மள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிட்வான்,

நாடோடி said...

@ gulf-tamilan

எண்ணுர் அசோக் லேலண்ட் முன்னால் ஒரு பாட்டி பிரியாணிக் கடை வச்சிருப்பாங்க.. அவங்க இப்ப கடை வச்சிருக்காங்களா..அப்பிடி இருந்தா ஒரு பார்சல் அனுப்ப சொல்லுங்க..


@நாஞ்சில் பிரதாப்

என்ன தல...பிதாமகன் படத்துல சூர்யா ஜெயில்ல ஒரு சேட்டை பார்த்து கேட்பார் உங்க கிட்ட மட்டும் எப்பிடிய்யா மக்கள் எமாறுறாங்க என்று..

Unknown said...

வணக்கம்.நல்ல பதிவு.அந்நியன் திரைப்படம் நினைவுக்கு வருகிறது.

cheena (சீனா) said...

அன்பின் ஸ்டீபன் - புரிகிறது - இண்றய நிலைமையில் அனைவருமே இப்படித்தான் உதிரிப் பாகங்கள் வாங்குகின்றனர். அவசரத்திற்கு மெக்கானிக்குகள் விருப்பப்படி பாகங்கல் வாங்கபடுகின்றன. ஒன்றும் செய்ய இயலவில்லை. நீண்ட தொரு கட்டுரை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

arul said...

thanks for an informative post

”தளிர் சுரேஷ்” said...

நல்ல விளக்கமானபதிவு! நன்றி!

Related Posts with Thumbnails