Monday, February 15, 2010

வாழைப்பழம்_வகைகளும் நானும்..

பழங்கள் என்றால் அது ஆப்பிள், ஆரஞ்சி, திராட்சை என்று ஆகிவிட்ட காலத்தில் நமது முக்கனிகளில் ஒன்றாகிய வாழைப்பழத்தை பற்றி எனக்கு தெரிந்த சில விசயங்களை எழுதுகிறேன். பழங்களில் இதற்கு தான் வகைகள் அதிகம். சுமார் எழுபதிற்கும் அதிகமான வகைகள் காணப்படுகின்றன. மேலும் மற்ற பழங்களை ஒப்பிடும் போது இதன் விலையும் குறைவு. விலை குறைவான உணவு பொருட்களின் தரம் எதுவும் நன்றாக இருக்காது என்று சில மேல்தட்டு அறிவு ஜீவிகள் சுற்றி வருகிறார்கள். அவர்களுடைய வழியை இப்போது உள்ள நாகரீக கோமாளிகளும் பின்பற்றுவதால் தான் வாழைப்பழத்தின் பெருமைகள் மங்கி விட்டதாக நான் நினைக்கின்றேன். மேலும் நகரங்களில் வாழைப்பழத்தில் இரண்டு மூன்று வகைகளை தவிர மற்றவைகள் கிடைக்காததும் மற்றும் ஒரு காரணம்.



என‌க்கு தெரிந்த சில வாழைப்பழங்களின் வகைகளை எனக்கு அறிமுகமான பெயரிலேயே கூறுகிறேன்.

(1) செந்த்துழுவன்(செவ்வாழை)

(2)வெள்ளைத்துழுவன்

(3)பாளையங்கொட்டை(மஞ்சள்)

(4)மோரிஸ்(பச்சை)

(5)ஏத்தன்(நேந்திரன்)

(6)இரசகதலி

(7)பூங்கதலி

(8)கற்பூரவல்லி

(9)மொந்தன்

(10)சிங்கன்

(11)பேயன்

(12)மட்டி(ஏலரிசி)

(13)மலை வாழை



இதில் உள்ள அனைத்து வாழைப்பழங்களும் பல மருத்துவ குணங்களை கொண்டவை. மேலே கூறப்பட்ட செந்த்துழுவனும், வெள்ளைத்துழுவனும் ஒரே இனத்தை சார்ந்தவை. இவற்றின் சுவை தித்திப்பாக மாவு போன்று இருக்கும். பாளையங்கொட்டை(மஞ்சள்)என்று அழைக்கப் படும் இந்த வாழைப்பழமானது சிறிது புளிப்பு சுவையுடையது. மற்ற ரகங்களை பார்க்கும் போது இதன் விலை ச‌ற்று குறைவாக இருக்கும். மோரிஸ்(பச்சை) பெரும்பாலும் இந்த ஒரு ரகத்தை தான் நகரங்களில் பார்க்க முடிகிறது. கிராமத்தில் இருந்து வந்தவர்கள் இதன் விலையை கேட்டால் கண்டிப்பாக‌ வாங்க மாட்டார்கள். இதுவும் இனிப்பு தன்மையுடையது. ஏத்தன்(நேந்திரன்) இது ஏதோ கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டிலும் விளைவிக்கப் படுகிறது. மற்ற ரகங்களை விட இதன் சுவைத் தனிச்சிறப்பு. இதில் ஒரு வாழைப் பழத்தை முழுமையாக சாப்பிடுவது என்பது அனைவராலும் முடியாத காரியம். அவ்வளவு பெரிதாக இருக்கும். இதில் இருந்து தாயரிக்கப் படும் சீவல்(Banana Chips) அனைவரும் அறிந்ததே. இரசகதலி, பூங்கதலி மற்றும் கற்பூரவல்லி இந்த மூன்றும் நல்ல இனிப்புச் சுவையைக் கொண்டவை. இதன் அளவும் பார்பதற்கு சிறிதாக இருக்கும். மொந்தன் இது பார்பதற்கு நேந்திரன் போல் தோற்றம் அளித்தாலும் இதன் சுவையில் இனிப்பு தன்மை குறைவாக இருக்கும். சிங்கன் இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு. பேயன் இது தான் நமது ஊரில் பஜ்ஜி போடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப் படுக்கிறது. இதன் சுவையும் தித்திப்பே. மட்டி இது வாழைப்பழ ரகங்களில் மிக சிறியது. ஆனால் இதன் சுவைப் பல மடங்கு இனிப்பானது. இதில் மாவுத் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுக்கப்ப‌டும். இந்த பழத்திலும் ம‌ருத்துவ குணம் அதிகம். மலை வாழை இதன் சுவை தனி. இதுவும் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை.



வாழைப் பழத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வாழைப் பழத்தில் எழுபதிற்கும் அதிகமான வகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளன. வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. வாழைப் பழத்தில் இருந்து தாயரிக்கப் படும் எண்ணெய் ஆனது சரும அழகை பாதுகாக்கப் பயன்படுகிறது. இதய நோய் உடையவர்களும் வாழைப் பழ‌த்தை உண்ணலாம்.



வாழைப் பழ சாகுபடியில் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்களுக்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். நான் மேலே சொன்ன வாழைப் பழ வகைகளை பல பேர் கண்ணால் பார்த்து கூட இருக்க மாட்டார்கள். நான் அனைத்து பழ‌ங்களையும் ஒரே இடத்தில் பார்த்தும் இருக்கிறேன். சாப்பிட்டும் இருக்கிறேன். எனது மாவட்டத்தில் தக்கலை என்ற இடத்தை அனைவரும் அறிந்ததே. அதன் அருகில் உள்ள ஒரு சந்தையின் பெயர் "பேட்டை சந்தை". வாழைத் தார்கள் மட்டுமே விற்பதற்க்காக அமைக்கப் பட்ட சந்தை. இங்கு வேறு எந்த பொருட்களும் கிடைக்காது. வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு மட்டுமே கூடுகின்றது. இந்த இரண்டு நாட்களும் வாழைத் தார்கள் மலைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளையும், ஏற்றுமதியாளர்களையும் அன்றய தினம் பார்க்க முடியும். அனைத்து வாழைப் பழ ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்தவரிடமே எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வாங்க முடிவது இந்த பேட்டை சந்தையின் சிறப்பு. இங்கு இருந்து வெளிநாடுகளுக்கும் வாழைத் தார்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. இப்போது இந்த சந்தையானது “தக்கலை வாழைக்குலை சந்தை” என்று அழைக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த சந்தையானது காங்கிரிட் தளம் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாம். வாரத்தின் புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காய்கறி சந்தையாகவும் செயல் படுகிறதாம்.





மேலும் நான் எனது ஊரில் பார்த்த ஒன்று வாழைத் தார்களின் அளவு. கோவில் திருவிழாக்களில் இதற்காகவே போட்டிகள் நடத்துவார்கள். அதாவது கோவில் திருவிழாக்களின் முதல் நாளில் அவரவர் தோட்ட‌ங்களில் விளைந்த வாழைத் தார்களில் பெரிய தாரை ம‌ரத்துடன் வெட்டி கொண்டு வந்து நட்டு விடுவார்கள். திருவிழா முற்றம் முழுவதும் வாழை மரங்களின் அணிவகுப்பை தான் பார்க்க முடியும். திருவிழாவின் இறுதி நாளில் கோவில் நிர்வாகத்தின் நடுவர்களால் பார்வையிடப் பட்டு மிகப் பெரிய அளவு வாழைத் தாருக்கு பரிசும் பணமும் வழங்கப்படும். இங்கு நான் வாழை மரத்தின் உயரத்திற்கு வாழைத் தாரை பார்த்ததுண்டு. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு என்று ஒவ்வொரு தோட்டத்திலும் வாழை மரங்கள் வளர்ப்பது உண்டு. அந்த வாழைத் தார்களை "பந்தயகுலை" என்று அழைப்பார்கள்.




குறிப்பு: வாழைப் பழத்தின் மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும், விட்டமீன்களின் விளக்கங்களும் அதன் அளவுகளும் இணைய தளங்களில் விரவி கிடப்பதால் அதைப் பற்றி அதிகம் எழுதவில்லை.

19 comments:

Siraj Nawas said...

A beautiful write-up, a picture of our " Pettikkadai " where all the varieties usually be showcased would have been enlight the subject even better.

A nostalgic blog.

Note : My native is colachal
Siraj Nawas

Prathap Kumar S. said...

சூப்பர் ஸ்டீபன்... வாழைப்பழம் எல்லா சீசன்லையும் கிடைக்ககூடியது. அதனாலதான் என்னவோ வாழைப்பழத்தோட மகிமை நம்மமக்களக்கு அதிகம் தெரியமாட்டுது.

ஊர்ல இருக்கும்போது ராத்திரி சாப்பாட்டுக்கப்புறம் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடாம படுத்ததா நினைவில்லை. இப்ப எங்க அதெல்லாம்...

சின்ன வயசுல சிலபேரை பழம்னு கிண்டல் பண்ணுறோமே அது ஏன்தல.

gulf-tamilan said...

நல்ல பதிவு!!!
:))))
அடுத்து என்ன பதிவு?

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க. மட்டிப் பழம் குழந்தைகளுக்குக் கொடுத்தா சளி பிடிக்காதுன்னு சொல்வாங்க.

ஜோ/Joe said...

ஊர் நினைவை மீட்டி விட்டீர்கள்

Chitra said...

வாழைப்பழங்கள் வகைகள் குறித்த குறிப்புகளும், தகவல்களும் அருமை. அந்த புகைப்படங்கள், சூப்பர்.

செ.சரவணக்குமார் said...

அருமையான தகவல்கள். நல்ல பகிர்வு நண்பா.

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள தகவல்.

நானும் உங்க ஊர் வந்தால் மறக்காமல் வாங்கிச் செல்லும் பொருள்களில் ஒன்று வாழைப்பழம். குறிப்பாக செவ்வாழை.

தென் மாவட்டங்களின் சிறப்பே வாழைதான்.

அழகான தொகுப்பு அருமையான எழுத்து நடை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பதிவு , அருமை ஸ்டீபன்

தமிழ் உதயம் said...

பழங்கள் என்றால் அது ஆப்பிள், ஆரஞ்சி, திராட்சை என்று ஆகிவிட்ட காலத்தில்

உண்மைத்தான். உடம்புக்கு சாப்பிடாமல் பெருமைக்கு தானே சாப்பிடுகிறோம். தேவையான பதிவு.

Paleo God said...

ஏற்கனவே படிச்சி இருந்தாலும் .. இன்னொரு முறையும் சாப்பிட குடுத்ததுக்கு நன்றி நண்பரே..:))

படங்களும் அழகு.

தமிழ் said...

அருமை

தாராபுரத்தான் said...

vபயனுள்ள தகவலுங்க தம்பி.

கமலேஷ் said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் தொடருங்கள்..

அன்புடன் மலிக்கா said...

பயனுள்ள பதிவு..

malarvizhi said...

அழகான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பதிவு. நகரங்களில் எல்லா வகையும் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். சின்னதில் விரும்பிச் சாப்பிட்ட ‘மொந்தன்’வகை பெங்களூரில் கிடைக்கவே செய்யாது. மோரிஸ் கிடைத்தாலும் குளிருக்கு நல்லதில்லை என்பார்கள். செவ்வாழை, நேந்திரம் கிடைக்கும். ரெகுலராக பலரும் வாங்குவது ‘ஏலக்கி’ என அழைக்கப்படுவது, நம்ம ஊரு மலைப்பழம் போல இருக்கும்.

r.v.saravanan said...

கலக்கறீங்க சார் பதிவு இனிக்கிறது

Dr.S.Soundarapandian said...

நல்ல செய்திகள் ! தொடர்பான வரலாறுகளை எதிர்பார்க்கிறேன் !

Related Posts with Thumbnails