Thursday, March 4, 2010

புதிர் விளையாட்டு_குடும்ப‌த்தை காப்பாற்றுங்க‌ள்.

இது ஒரு விளையாட்டு புதிர். இந்த‌ GAME லிங்கை அழுத்தி பார்த்தால் ஒரு வ‌லைத்த‌ள‌ம் வ‌ரும். அதில் இந்த‌ விளையாட்டின் ப‌க்க‌த்தை இணைத்துள்ளேன். அந்த‌ வ‌லைத்த‌ள‌ம் என‌து ந‌ண்ப‌ருடைய‌து. என்னுடைய‌ பிளாக்கில் இந்த‌ SWF பார்மெட்(Format) பைலை என்னால் இணைக்க‌‌ முடிய‌வில்லை. என‌வே தான் என‌து ந‌ண்ப‌ரின் இணைய‌ த‌ள‌த்தில் இணைக்க‌ வேண்டிய‌தாற்று. தெரிந்த‌வ‌ர்க‌ள் யார‌வ‌து பின்னுட்ட‌த்தில் சொன்னால் ரெம்ப‌ ம‌கிழ்ச்சிய‌டைவேன்.

இந்த‌ விளையாட்டின் விதிமுறையை சொல்லிவிடுகிறேன்.

1)இந்த குடும்ப‌த்தை இவ‌ர்க‌ள் நிற்கும் ப‌க்க‌த்தில் இருந்து ம‌றுப‌க்க‌ம் அழைத்து செல்ல‌ வேண்டும்‌

2)அரிக்கேன் விள‌க்கு ரெம்ப‌ முக்கிய‌ம். இர‌வு நேர‌ம் என‌வே விள‌க்கு இல்லாம‌ல் பாதையை க‌ட‌க்க‌ முடியாது.

3)ஒரே நேர‌த்தில் இர‌ண்டு பேர் ம‌ட்டும் தான் பாதையை க‌ட‌க்க‌ முடியும்.

4)ஒவ்வொருவ‌ரும் பாதையை க‌ட‌க்க‌ முறையே கீழ்க‌ண்ட‌ நேர‌த்தை எடுத்து கொள்கிறார்க‌ள்.

வ‌ல‌மிருந்து இட‌ம் அவ‌ர்க‌ளை A, B, C, D, E, F என்று வைத்து கொள்வோம்.
A - 1 நிமிட‌ம்
B - 3 நிமிட‌ம்
C - 6 நிமிட‌ம்
D - 8 நிமிட‌ம்
E - 12 நிமிட‌ம்

5)இர‌ண்டு பேர் பாதையை க‌ட‌க்கும் போது, க‌ட‌க்க‌ அதிக‌ நேர‌ம் எடுத்து கொள்ப‌வ‌ரின் நிமிட‌ம் விளையாட்டின் நேர‌மாக‌ எடுத்து கொள்ள‌ப்ப‌டும்.(அதாவ‌து மெதுவாக‌ ந‌ட‌ப்ப‌வ‌ரின் நேர‌ம்)

6)இது தான் முக்கிய‌மான‌து. விள‌க்கு 30 நிமிட‌ம் தான் எரியும். அத‌ன் பிற‌கு அணைந்து விடும். விள‌க்கு அணைந்து விட்டால் பாதையை க‌ட‌க்க‌ முடியாது. என‌வே 30 நிமிட‌த்துக்குள் அனைவ‌ரும் பாதையை க‌ட‌க்க‌ வேண்டும்.


இது விதிமுறையில் கிடையாது. ஆனால் சிறு த‌க‌வ‌லுக்காக‌ த‌ருகிறேன். பாதையை க‌ட‌ந்த‌ இருவ‌ரில் ஒருவ‌ர் தான் விள‌க்கை எடுத்து சென்று ம‌றுப‌க்க‌ம் உள்ள‌வ‌ர்க‌ளை கூட்டி வ‌ர‌வேண்டும்.

உங்க‌ளுட‌ய‌ ப‌தில்க‌ளை பின்னுட்ட‌த்தில் தெரிவிக்க‌வும்..ப‌திலை ச‌ரியாக‌ சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு நாஞ்சிலான‌ந்தாவின் த‌ரிச‌ன‌த்துக்கு இல‌வ‌ச‌ டிக்கெட் அனுப்ப‌ப‌டும்.

விளையாட்டின் சுவார‌சிய‌த்தை கூட்டுவ‌த‌ற்காக‌ ச‌ரியான‌ ப‌தில் பின்னூட்ட‌ங்க‌ளை உட‌ன‌டியாக‌ பிர‌சுரிக்க‌ மாட்டேன்.

20 comments:

malar said...

த‌ப்ப‌ சொல்லிட்டீங்க‌...வில்லுக்குறி வ‌ரைப‌ட‌த்தை இன்னும் ஒருக்கா பாருங்க..’’’’

ஏன் அங்க எற்கனவே சாமியார் கூட்டம் அதிகமோ?

தப்பு சாமியார்மேல இல்ல ..மக்கள் மேலதான்...

நான் "நாஞ்சிலானந்தா...வை சொல்ல சாமி..
தெரியும் நீங்க வரிந்து கட்டிட்டு வருவீங்க என்று....

நீங்க புதிதாக போட்ட பதிவை இன்னும் படிகவில்லை..படிது பின்னூட்டம் போடுகிரேன்.

நாஞ்சில் பிரதாப் said...

மலரக்கா என்னை ஒருவழி பண்ணாம போகமாட்டாங்க போலருக்கு... நம்முரு காரங்களை நமக்கெதிரா சதி பண்றாங்களே...

நாஞ்சில் பிரதாப் said...

தல இந்த விளையாட்டை முன்னாடியே விளையாண்டு இருந்த கொஞ்ச நஞ்ச மசாலாவையும் வேஸ்ட் பண்ணிட்டேன். சின்ன கால்குலேஷன்தான். ஆனா முடில...

நாஞ்சிலானந்தா தரிசனத்துக்கு டிக்கெட் கொடுக்கறதெல்லாம் சரி அதுல வீடியோ காமெரா அனுமதி இல்லன்னு பிரிண்ட் பண்ணி கொடுங்க தல... உஷாரா இருக்கனும்...

அக்பர் said...

1. A+B RETURN A
2. D+E RETURN B
3. A+C RETURN A
4. A+B

ஓகேயா தல.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

1.A+B RETURN B
2.D+E RETURN A
3.A+C RETURN A
4.A+B

யப்பாடி கண்டுபிடிச்சாச்சு.. சாமியாரை பார்த்துப்புடலாம்.

நாடோடி said...

நாஞ்சிலான‌ந்தாவின் த‌ரிச‌ன‌த்திற்கு முத‌லில் த‌குதி பெற்றவ‌ர்க‌ள் ந‌ம்ம‌ ஸ்டார்ஜ‌ன் ம‌ற்றும் அக்ப‌ர்..

malar said...

வீட்டில் மொத்த குடும்பமும் இருந்து விளையாடி மண்டையபிச்சாசு.அந்த போட்ட பற்றி நீங்க சொல்லல்ல ...ஏதொ ஒரு சின்ன ட்ரிக்...தெரியல்ல...

நாடோடி said...

@malar

நீங்க புதிதாக போட்ட பதிவை இன்னும் படிகவில்லை..படிது பின்னூட்டம் போடுகிரேன்.

க‌ண்டிப்ப‌ போடுங்க‌...வ‌ருகைக்கு ந‌ன்றி..

//ஏன் அங்க எற்கனவே சாமியார் கூட்டம் அதிகமோ?//

நான் சொல்ல‌ வ‌ந்த‌து வில்லுக்குறி திருநெல்வேலிக்கும் நாக‌ர்கோவிலுக்கும் இடையில் இல்லை என்று தான்..அத‌ற்காக‌ தான் வ‌ரைப‌ட‌த்தை பார்க்க‌ சொன்னேன்..

Chitra said...

ப‌திலை ச‌ரியாக‌ சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு நாஞ்சிலான‌ந்தாவின் த‌ரிச‌ன‌த்துக்கு இல‌வ‌ச‌ டிக்கெட் அனுப்ப‌ப‌டும்.

..........பதிலை தப்பா சொல்றவங்களுக்கு, அவரின் சாபமா? ha,ha,ha....

சைவகொத்துப்பரோட்டா said...

விளையாடிய பின்பு வருகிறேன்......... :))

malar said...

ஆமாம் நான் விலுக்குறி நான் நாகர்கோயிலுக்கும் திருநெல்வேலிகும் இடையில் என்று எழுதி இருந்தேன் என்று நினைகிரேன்.விலுக்குறி TVM போகும் பாதை.

சரி கேமை சொல்லுங்க.....

K.P.RAJ said...

1st Step 1 & 3 Return 1,
2nd Step 8 & 12 Return 3,
3rd Step 1 & 6 Return 1, Then
4th Step 1 & 3

நாடோடி said...

@malar said...
//ஏதொ ஒரு சின்ன ட்ரிக்...தெரியல்ல...///

இதில் டிரிக் எதுவும் இல்லை..நீங்க கொஞ்சம் டிரை பண்ணினா உங்களால் கண்டு பிடிக்க முடியும்..இது வரைக்கு மூன்று பேர் சரியான பதிலை சொல்லி விட்டார்கள்..

நாடோடி said...

@சைவகொத்துப்பரோட்டா
//விளையாடிய பின்பு வருகிறேன்......... :))//

பதிலோடு வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்...

நாடோடி said...

@Chitra said...
எல்லேரும் உங்களை டீச்சர் என்று அழைக்கிறார்கள்..கணக்குக்கு விடையை சொல்லாமல் போனால் எப்படி?..வந்து விடையை சொல்லிட்டு போங்க..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்
//மலரக்கா என்னை ஒருவழி பண்ணாம போகமாட்டாங்க போலருக்கு... நம்முரு காரங்களை நமக்கெதிரா சதி பண்றாங்களே...//

விடுங்க தல இது என்ன நமக்கு புதுசா?..

//நாஞ்சிலானந்தா தரிசனத்துக்கு டிக்கெட் கொடுக்கறதெல்லாம் சரி அதுல வீடியோ காமெரா அனுமதி இல்லன்னு பிரிண்ட் பண்ணி கொடுங்க தல... உஷாரா இருக்கனும்...//

அதே..அதே..

தமிழ் பிரியன் said...

வ - இ - 1,3
இ-வ - 3
வ-இ - 12,8
இ-வ - 1
வ-இ - 1,6
இ-வ - 1
வ-இ - 1,3
3+3+12+1+6+1+3=29

நினைவுகளுடன் -நிகே- said...

விளையாடிய பின்பு வருகிறேன்.....

நாடோடி said...

ச‌ரியான‌ ப‌திலை கொடுத்த‌ அக்ப‌ர், ஸ்டார்ஜ‌ன், K.P.RAJ ம‌ற்றும் த‌மிழ் பிரிய‌ன் எல்லோருக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்..

@நினைவுகளுடன் -நிகே-
//விளையாடிய பின்பு வருகிறேன்...../

க‌ண்டிப்பா வாருங்க‌ள்...

Siva said...

ரஞ்சிதாவின் இலவச மசாஜ்க்கு எதாவது புதிர் போட்டா என்னவாம்?

Related Posts with Thumbnails