Tuesday, April 27, 2010

ஐந்துத‌லை பாம்பு_புகைப்ப‌ட‌ம்

ந‌ம்ம‌ ஊர் திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ர் ராம‌ நார‌ய‌ண‌ன் சாரோட‌ ப‌ட‌த்துல‌ தான் இந்த‌ மாதிரி பாம்புக‌ளை கிராபிக்ஸில் பார்த்து இருக்கிறேன்.. இப்ப‌ அவ‌ரும் அந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளை எடுக்கிற‌து இல்லை. க‌ர்நாட‌கா மாநில‌த்தில் ம‌ங்க‌ளூருக்கு அருகில் Kukke Subramanya Swamy கோவிலில் அருகே க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த‌ அரிய‌ வ‌கை ஐந்து த‌லை பாம்பு.

குறிப்பு: நான் போய் போட்டோ புடிக்க‌லைய்யா?.... ஒரு 2 செக‌ண்டு அதிக‌மா ப‌ட‌த்தில் கூட‌ என்னால் இந்த‌ பாம்பை பார்க்க‌ முடிய‌வில்லை.. ந‌ம‌க்கு அம்புட்டு ப‌ய‌ம்... யாரோ ஒருவ‌ர் எடுத்து ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் என்னுடைய‌ மெயிலுக்கு பார்வ‌ர்டு ப‌ண்ணியிருந்தான்..
''
'

29 comments:

ஜெய்லானி said...

நம்ப முடியல நம்பாமலும் இருக்க முடியல , தமிழ் குடும்பத்தில கூட வந்துச்சி. அது சரி அது எப்படி சாப்பிடும் எப்படி தீனி உள்ளே போகும் . பாக்கவே படு பயங்கரமா இருக்கு.

SurveySan said...

சும்மா, அல்வாங்க இது.

அஹமது இர்ஷாத் said...

அதிசயம்... இப்போதுதான் பார்க்கிறேன்.பார்த்தாலே பயம் "ஆட்டோமேட்டிக்கா" வருது...

’மனவிழி’சத்ரியன் said...

மைல்டா மைண்டுக்குள்ள ட்வுட்டு வருது. ஏன்னா, ஃபோட்டோஷாஃப் -புல புகுத்தி வெளியேத்துன மாதிரி தெரியுது.

இருந்தாலும், பகிர்வுக்கு நன்றி.

தமிழ் உதயம் said...

படத்தை அனுப்பிய நண்பருக்கு எங்கள் மகிழ்ச்சியை, நன்றியை சொல்லி விடுங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

மெய்யாலுமே இது அஞ்சு தலை பா.பா!!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆச்சர்யம் அதிசயம்.. நான் இப்போதான் பார்க்கிறேன். நன்றி சொல்லிடுங்க ஸ்டீபன் அந்த புகைப்படம் எடுத்தவருக்கும், மெயிலில் அனுப்பியவருக்கும்.

ஹுஸைனம்மா said...

உண்மையா இருக்க முடியாதுன்னு தோணுது.

கண்ணா.. said...

எனக்கும் போட்டோஷாப் வொர்க்குன்னுதான் தோணுது பாஸு

அக்பர் said...

ஏன் தல இப்படி படம் போட்டா நாங்களெல்லாம் எப்படி படிக்க வருவது.

ஸ்டார்ஜன்னுக்கு ஜுரம் வந்துடுச்சு.

sankar said...

its not க‌க்கு சுப்பிர‌ம‌ணிய‌ன். Its kukke Subramaniya temple.
http://www.eface.in/a-snake-found-near-kukke-subrahmanya-with-5-heads/

http://hindupad.com/holy-places-temples/5-headed-snake-appeared-at-kukke-subramanya-temple/

நாடோடி said...

@sankar said...
its not க‌க்கு சுப்பிர‌ம‌ணிய‌ன். Its kukke Subramaniya temple.
http://www.eface.in/a-snake-found-near-kukke-subrahmanya-with-5-heads/

http://hindupad.com/holy-places-temples/5-headed-snake-appeared-at-kukke-subramanya-temple/

உங்க‌ளுடைய‌ த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி... இப்போது மாற்றி விட்டேன். என்னுடைய‌ மெயிலில் வ‌ந்த‌ செய்தி அதுதான்... த‌வ‌றுக்கு வ‌ருந்துகிறேன்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த போட்டோசொப் விற்பன்னர் பாராட்டுக்குரியவர்.
இதை வீடியோவாக எவருமே எடுக்கமுடியவில்லையா? அயலில் கூட ஒரு வீடியோ கருவி கிடைக்கவில்லையா?
இப்படியான படங்களைப் பார்த்துதான் "நித்தியானந்தன்" போன்றோர் ;தங்கள் திருவிளையாடல்களை
போலிப் படம் எனத் துணிவுடன் கூறுகிறார்கள்.

Anonymous said...

sariya duppu yarukku seya thiriyathu ithu mathiri

ராஜ நடராஜன் said...

//எனக்கும் போட்டோஷாப் வொர்க்குன்னுதான் தோணுது பாஸு//

எனக்கும் கண்ணா!

M.S.E.R.K. said...

நம்ம ஆளுங்களுக்கு இப்படி ஏதாவது செய்துக்கொண்டு இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் போல. மாதா சிலை கண்களில் ரத்தம், பிள்ளையார் சிலை பால் குடிப்பது, மரத்தில் இருந்து பால் வடிவது, சப்பாத்தியில் இயேசு உருவம், சர்ச் மணிக்கூண்டில் இயேசு உருவம், கன்றுக்குட்டி கண்களில் எம்.ஜி.ஆர் உருவம், மேகத்தில் குழந்தை உருவம்,..... இப்படியாக லிஸ்ட் நீண்டுக்கொண்டேப் போகும்.
நன்றாகப் பாருங்கள், அதன் கழுத்தில் உள்ள கருப்பு வளையங்கள் மட்டும் மங்கலாக தெரிகிறது. எல்லாம் போட்டோ ஷாப் உபயம். இன்னும் கொஞ்சம் திறமையாக செய்து இருக்கலாம்.

செ.சரவணக்குமார் said...

எனக்கும்கூட இது ஃபோட்டோஷாப் வேலை என்றுதான் தோன்றுகிறது ஸ்டீபன்.

//அக்பர் said...
ஏன் தல இப்படி படம் போட்டா நாங்களெல்லாம் எப்படி படிக்க வருவது.
ஸ்டார்ஜன்னுக்கு ஜுரம் வந்துடுச்சு.//

ஃபோட்டோவுல பார்த்ததுக்கேவா ஜுரம் வந்துடிச்சி? ரைட்டு.

malar said...

அதுதான பார்த்தேன் நீங்களாவது படம் எடுபதாவது..(படம் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்க...)கிரபிக்ஸோ என்னவோ நீங்க சொன்ன மாதிரி ஒரு நிமிடம் கூட அந்த படத்தை பார்க்கமுடியவில்லை....அவ்வளவு தைரியசாலி....

முரளி said...

photoshop effect :)

see my post on the same subject

http://myownscribblings.blogspot.com/2010/04/blog-post_08.html

நாடோடி said...

@முரளி said...
photoshop effect :)

see my post on the same subject

http://myownscribblings.blogspot.com/2010/04/blog-post_08.html


ரெம்ப‌ ந‌ன்றி முர‌ளி... உங்க‌ளுடைய‌ வ‌லைத்த‌ள‌த்தை இப்போது தான் பார்க்கிறேன்... த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி.... என்னுடைய‌ மெயிலுக்கு வ‌ந்து இருந்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌தால் போட்டேன்....

Muhammad Ismail .H, PHD., said...

@ நாடோடி,

கண்டிப்பாக இது போட்டோ ஷாப் ஆண்டவர் துணையால் உருவாக்கப்பட்ட பாம்பு தான். இந்த பாம்பினை இவர்கள் பிடித்துக்கொண்டு வந்த இடம் பாங்காக் பாம்பு பண்ணை. நீங்கள் குறிப்பிட்ட குக்கே சுப்ரமணிய கோவில் அல்ல. மூன்று படங்களும் உள்ளதற்கான ஆதார சுட்டி இதோ...

http://www.tienchiu.com/travels/thailand/bangkok/

பிறகு குர்-ஆனை தள்ளி விட்டதால் ஒரு சிறுமி கங்காரு போல் உருமாறி விட்டாள் என ஒரு படத்தை மின்னஞ்சல் செய்து, அதை பார்த்தவர்களை "பீதி" க்குள்ளாக்கி உடனே "பேதி" போக வைத்த விஷயம் சில வருடங்களுக்கு முன்னர் நடந்தது.

அது போல மேகத்தில் தெரியும் இயேசு போன்ற படங்களும் இணையத்தில் உலா வந்தவைகள் தான். இதெல்லாம் God & Co வினரின் வியாபார தந்திரங்கள் !!!.

இது போன்றவைகள் மின்னஞ்சலில் வந்தால் சும்மா ஒரு லுக் விட்டு உடனே டெலீட்டனும். அதை விடுத்து அட்ரஸ் புக்கில் உள்ள அனைவருக்கும் பார்வேட் செய்வது, உள்ளங்கையில் அரிப்பெடுத்து அடுத்த கட்டமாக பதிவிற்கு ஒரு இடுகை தேத்துவது எல்லாம் "Cyber Bulling" or "இணையப்புரளி" என்றழைக்கப்படும் !!! :-).


@ ஜெய்லானி, அஹமது இர்ஷாத் & ஸ்டார்ஜன்,

தங்களின் அறிவின் விசாலத்தை அனைவருக்கும் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இதற்கே பீதியடைந்து பேதியால் என்ன செய்வது ! இறைவன் நாடினால் இனி மேல் தஜ்ஜாலை வேற நான் கிளப்பி விடப்போறேனே ?


@ SurveySan, மனவிழி’சத்ரியன், ஹுஸைனம்மா, கண்ணா, யோகன் பாரிஸ், ராஜ நடராஜன் & M.S.E.R.K,

மிக்க நன்றி. பதிவுலகத்தில் இன்னும் உண்மையையும் , பொய்மையும் பிரித்துணரும் ஆற்றலுடன் இருப்பதற்கு !!!.with care & love,

Muhammad Ismail .H, PHD.,

நாடோடி said...

@Muhammad Ismail .H, PHD., said...

உங்க‌ள் சுட்டியை பார்த்தேன்.... த‌க‌வ‌லுக்கு ரெம்ப‌ ந‌ன்றி.....

vanathy said...

நாடோடி அண்ணாச்சி, என்னை இப்படி பயமுறுத்தலாமா? பாம்பென்றால் எனக்கு படையும் நடுங்கும். அது படம் என்றாலும் பார்க்க மாட்டேன். உங்கள் வலைப்பூ பக்கம் வரவே பயமாக் கிடக்கு. நடுங்கிக் கொண்டே டைப் பண்றேன். பிறகு வாரன்.

Chitra said...

:-)))))

shamsudeen said...

just see the manhole which snake is standing,(fig 1 & 3) u will come to know the manhole postion has changed, from that u we can confrim that 5 head snake is dubakoor,

VAAL PAIYYAN said...

ARPUTHAMANA PHOTOS
SHARE PANNIYATHARKKU NANTRI visit
www.vaalpaiyyan.blogspot.com

DREAMER said...

படத்துலப் பாக்கவே பயங்கராயிருங்க..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

கக்கு - மாணிக்கம் said...

ஆஹா ...இது போடோ ஷாப் வேலைதான். சந்தேகமே வேண்டாம்.
அதில் உள்ள Cloning tool ஐ பயன் படுத்தி ஐந்து என்ன பத்து தலை கூட வரவழைக்கலாம்.
யாரோ விளையாட்டாக செய்த வேலைதான்.
படங்களை பெரிது பன்னி கவனித்தால் இந்த உண்மை புரியம்.
நல்ல கலாட்டா அவ்வளவுதான்.

ஜெய்லானியின் கமெண்ட்ஸ் படித்து வாய் விட்டு சிரித்தேன்
நன்றி.

Anonymous said...

hi hi itha naan namba matten

Related Posts with Thumbnails